துக்ளக் ஆசிரியர் ‘சோ’ வே மோடிஜியை விமரிசனம் செய்ய ஆரம்பித்து விட்டார் ……!!!

2012 ஜனவரியில் “துக்ளக்” இதழின் ஆண்டு விழா
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

பாஜக மூத்த தலைவர் அத்வானியும், அப்போது குஜராத்
முதல்வராக இருந்த நரேந்திர மோடியும் கலந்து
கொண்டனர்.

cho-meeting-1

அங்கே தான், “சோ” தான், முதல் முதலாக பாஜக தனது
அடுத்த பிரதமராக மோடிஜியை அறிவிக்க வேண்டும்
என்று விஷயத்தைத் துவக்கி வைத்தார்.

மேடையில் அத்வானிஜியை வைத்துக்கொண்டே
இதைச் சொன்ன “சோ” அங்கேயே அத்வானியிடம் –
அவரே நரேந்திர மோடியை பிரதமராக்க
தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
என்று வேண்டுகோளும் விடுத்து அத்வானிஜியை
தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

அன்று துவங்கி – இன்று வரை, கடந்த
மூன்று ஆண்டுகளில் எப்போதுமே சோ மோடிஜியை
விமரிசனம் செய்ததே இல்லை. எந்த சூழ்நிலையிலும்
மோடிஜியை விட்டுக்கொடுக்காமலே பேசுவார் /எழுதுவார்.

பாஜக வையும் ஆர்.எஸ்.எஸ். ஸையும் கிண்டல் செய்தாலும்,
கடிந்து கொண்டாலும் கூட, மோடிஜியைத் தொடுவதில்லை.

இன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழில் முதல் முதலாக
ஒரு கார்ட்டூன் – நேரடியாக மோடிஜியை கிண்டல் செய்கிறது.

நீங்களும் பார்க்க அந்த கார்ட்டூன் கீழே –

thuglaq cartoon on modiji

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to துக்ளக் ஆசிரியர் ‘சோ’ வே மோடிஜியை விமரிசனம் செய்ய ஆரம்பித்து விட்டார் ……!!!

 1. today.and.me சொல்கிறார்:

  ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
  வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.

 2. Arun சொல்கிறார்:

  He has to show he is unbiased once in a while.

 3. S.Selvarajan சொல்கிறார்:

  எந்த வெளிநாட்டு பார்லிமெண்டில் பதில் சொல்றாரோ — இல்லையோ ! கண்டிப்பா டிவிட்டரில் பதில் கிடைக்கும் — என்று கார்ட்டூனில் போட்டு இருந்தால் இன்னும் ” ஜோராக ” இருந்து இருக்கும் !!

 4. Rangarajan Rajagopalan சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் இரண்டு-மூன்று மாதங்களுக்கும் மேலாக நரேந்திர மோடி
  அவர்களின் நிர்வாகத்தில் உள்ள பல குறைகளை சுட்டிக்காட்டி எழுதி வருகிறீர்கள்.
  ஆனால் சிலர் நீங்கள் ஒருதலைப்பட்சமாக வேண்டுமென்றே மோடிக்கு
  எதிராக எழுதுவதாக நினைத்து குறை கூறினார்கள். சோ அவர்களே
  குறை கூற ஆரம்பித்த பிறகு இப்போதாவது அவர்களுக்கு
  உண்மை நிலவரம் புரிய வேண்டும். நன்றி.

 5. yogeswaran சொல்கிறார்:

  K.M Sir,

  just because cho is putting a cartoon it doesn’t mean he is against the rule.

  (to save his face he has to do these tamashahs)

  when an election comes he will find 1001 reasons to support the same rule he criticized.

  the cho we see now a days is not the man we liked few decades go when he was really neutral.

  rgs

  yogi

 6. arulnithyaj சொல்கிறார்:

  Ji..innamumaa puriyavillai..cho modijiya vimarchanam en panraarnu theriyavillaiyaa? ellam JEYA vukku help pannalenu thaan..JEYA manasa kulira vachcha maathiri aachu thaan MODIJIyavey vimarchanam panrenum kaamichcha maathiri aachu..Nanum oru kaalaththil CHO vin parama visiri yaga irunthen..aanaa CHO mosamaga JATHI, MATHAtha thookki pidikkinravarnu therinchavudan vilahi vitten..(TASMAC MD yaaga en irunthaarnu kettu sollungaa)

 7. arulnithyaj சொல்கிறார்:

  Cho miga periya santharappavaathi enpathu marukka mudiyaatha unmai… CHO sonnathu:
  “கருப்புப் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றும்கூட, அதை வெளியிடாமல் இருந்ததற்குச் சில காரணங்களை அந்த அரசு கூறியது. அவை பொய்கள் என்று தீர்மானித்து, அந்த அடிப்படையில் அப்போது மத்திய அரசை விமர்சனம் செய்தவர்களில் நாமும் அடங்குகிறோம். இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”

  (துக்ளக், 12.11.2014)

  இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது. இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014 … Nantree vinavu (http://www.vinavu.com/2014/12/25/media-double-talk-on-anti-corruption-campaign/)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.