நரேந்திர மோடி – பனகாரியாவை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்….?

பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கை நட்சத்திரமாக –
அவரது கனவுகளுக்கு நிஜ உருவம் கொடுக்கப்போகிற
ஒரு விசேஷ மனிதராக டெல்லியில் வந்திறங்கப் போகிறார்
அர்விந்த் பனகாரியா என்கிற – தற்போது அமெரிக்காவின்
கொலம்பியா யுனிவர்சிடியில் பொருளாதாரப் பேராசிரியராக
பணி புரிந்து கொண்டிருக்கும் – இந்த அமெரிக்க-இந்தியர்.

arvind panagaria-3

நான்கு நாட்களுக்கு முன்னர் இந்திய அரசால்,
‘நிதி ஆயோக்’-ன் முதல் உப-தலவராக ( Vice Chairman of the
National Institution for Transformation of India …!!! )
நியமனம் செய்யப்படும் முன்னர், இந்த நாட்டின் சாதாரண
பொது மக்கள் கேட்டறியாத பெயர் இது.

இவரை ஏன் பிடித்தது நரேந்திர மோடிஜிக்கு….?
இந்திய அரசின் எதிர்கால கொள்கைகளையும், வளர்ச்சியையும்
தீர்மானிக்கப்போகிற –

மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்து
கொண்ட இந்த அதிமுக்கியமான பதவிக்கு பனகாரியா
தேர்ந்தெடுக்கப்படக் காரணம் என்ன …?

முதலில் அர்விந்த் பனகாரியாவின் பின்னணியைத்
தெரிந்து கொள்ள வேண்டும் –
திடீரென்று அமெரிக்காவிலிருந்து வந்து குதித்து விடவில்லை
அர்விந்த் பனகாரியா…
சாதாரண குஜராத் முதலமைச்சர் என்கிற பதவியிலிருந்து
உன்னதமான இந்தியப் பிரதமர் என்கிற பதவிக்கு
நரேந்திர மோடிஜி வந்து சேர பல வகைகளில் பனகாரியாவும்
பெரிய அளவில் உழைத்திருக்கிறார்…. !!!

பல சந்தர்ப்பங்களில், பல முக்கியமான அரங்கங்களில்,
நரேந்திர மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியை
பெரிய அளவில் ஆதரித்து, பாராட்டி பேசி, எழுதி இருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் -நரேந்திர மோடிஜி பெயரை
பிரதமர் பதவிக்கு பாஜக முன்மொழிய வேண்டும் என்று
பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்-
அதாவது 28/10/2013 அன்றே அமெரிக்காவில்
இருந்து கொண்டே – business standard இதழில்
பனகாரியா எழுதியதிலிருந்து சில வார்த்தைகள் –

——————————————-
– critics argue that state-level experience is irrelevant to
governing a nation. But this is incorrect for two reasons.

First, Gujarat is not a banana republic: it is approximately
equivalent to the United Kingdom in population and area.
Second, a chief minister brings with him valuable
grassroots knowledge that modern-day national leaders
often lack. The success of Prime Minister Narasimha Rao
was in no small measure due to his on-the-ground knowledge
acquired as chief minister of Andhra Pradesh.

Closer to my present home, the most recent US presidents
who have been successful – including Ronald Reagan,
Bill Clinton and George W Bush
– have been state governors with no prior experience at the
national level. Ironically, it is Barack Obama, a former
US senator with no experience as state governor,
who has overseen some of the worst logjams in the
United States Congress.
———————————————

அர்விந்த் பனகாரியா – நரேந்திர மோடிஜியின் மிகப்பெரிய
ஆதரவாளர் என்பதோடு நல்ல கல்வி, அனுபவப்
பின்னணிகளையும் பெற்றுள்ளவர்.

இந்தியாவில் பிறந்தவர். பல்கலை வரையில் ராஜஸ்தானில்
படிப்பு. பின்னர் அமெரிக்காவில் மேல்படிப்பு.
பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
தற்போது கொலம்பியா யுனிவர்சிடியில்
பொருளாதாரப் பேராசிரியராக பணி புரிந்து கொண்டிருக்கும்
இவர் இதற்கு முன்னால் செய்த பணிகள் /பெற்ற அனுபவங்கள்
நிறையவே –

Asian Development Bank.
World Bank,
International Monetary Fund,
World Trade Organization, and
the United Nations Conference on
Trade and Development (UNCTAD) –

– ஆகிய நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில்
பணியாற்றி இருக்கிறார் பனகாரியா…..

திருமதி வசுந்தரா ராஜே, இதற்கு முந்திய தடவை
ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்தபோது, அவரது
பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பொருளாதார தத்துவங்கள், ஆராய்ச்சிகள் குறித்து
நிறைய புத்தகங்களை தனியாகவும், பிறரோடு சேர்ந்தும்
வெளியிட்டிருக்கிறார்.

தனது ஆதரவாளரும், தன்னுடன் சுலபமாக
ஒத்துழைக்கக்கூடியவருமான ஒருவரைத் தான் நரேந்திர மோடி
‘நிதி ஆயோக்’-ன் முதல் உப-தலவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அந்த நபர் தகுந்த கல்விப் பின்னணியையும்,
நல்ல அனுபவங்களையும் கொண்டிருப்பவர் என்பதால் –
இந்த தேர்வு மற்றும் நியமனத்தில் தவறேதும் சொல்வதற்கில்லை.

ஆனால் –

ஒரு விஷயம் எக்கச்சக்கமாக பயமுறுத்துகிறது….
என்ன அது …?

அர்விந்த் பனகாரியா – ஒரு பொருளாதார நிபுணர் என்கிற
முறையில் – ஏற்கெனவே தனது பொருளாதாரச்
சிந்தனைகளை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பேசியும் இருக்கிறார் – எழுதியும் இருக்கிறார்.

அவை என்ன, எத்தகையவை ….?

——————

சந்தைப் பொருளாதாரமே சிறந்தது….
மக்கள் நலனை விட, பொருளாதார வளர்ச்சி முக்கியமானது….
பொருளாதாரம் வளர்ச்சி பெறும்போது,
மக்கள் தானாகவே வளம் பெற்று விடுவார்கள்…..

கிராம மக்களுக்கு குறைந்த பட்சம் ஆண்டுக்கு 100 நாள்
வேலை கொடுக்கும் -மஹாத்மா காந்தி ஊரக வேலை
வாய்ப்புத் திட்டம் பயனற்றது…. கைவிடப்பட வேண்டியது….

ரேஷன் கடைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
உணவு மற்றும் அவசியப் பொருட்களை (ரேஷன் பொருட்கள்)
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மானிய விலையில்
கொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்….

அதற்கு பதிலாக ரொக்கமாக பண உதவி செய்யலாம்
( Direct -benefit of – Cash -Transfer ). மக்கள் தங்களுக்கு
வேண்டிய உணவுப்பொருட்களை, நேரடியாக சந்தையில்
வாங்கிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
(LPG சிலிண்டருக்கு இப்போது அறிமுகப்படுத்தி இருப்பது போல் –
அனைத்து ரேஷன் பொருட்களுக்கும் …!!! )

மருத்துவ வசதி, பொது சுகாதாரம் மற்றும் கல்வி –
இவற்றில் அரசாங்கம் ஈடுபடுவதை கைவிட்டு விட்டு –
தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டுமானால் –
வெளிநாட்டு மூலதனங்களை கொண்டு வர வேண்டுமானால் –

தொழிலாளர் சட்டங்கள் எளிமையாக மாற்றப்பட வேண்டும்…
தொழிலாளர்களுக்கான பிராவிடண்ட் பண்ட், பென்ஷன்,
கிராஜுடி, இன்சுரன்ஸ் – போன்றவை கட்டாயமாக்கப்படுவது
கைவிடப்பட வேண்டும்…

– யாரை வேண்டுமானாலும் பணிக்கு அமர்த்திக் கொள்ளவோ,
எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கவோ –
தொழில், வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் தனியாருக்கு –
முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் …

பொதுத்துறை வங்கிகளின் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்
விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அரசின் பங்குகள்
படிப்படியாகக் குறைத்துக் கொள்ளப்பட்டு, நாளடைவில்
வங்கிகள் அனைத்தும் முற்றிலுமாக –
தனியார் வசம் விடப்பட வேண்டும்….

———————–

நாடு வளம் பெற வேண்டும்…
பொருளாதார வளர்ச்சி அவசியம் தேவை …
உற்பத்தி பெருக வேண்டும்…
வர்த்தகமும், தொழில் துறையும் சிறக்க வேண்டும் –
என்பனவை தான் நம் எல்லாருடைய கனவும், ஆசையும்.

ஆனால் – அதற்காக அரசு மேற்கொள்ளப்போகும்
நடவடிக்கைகள் மேற்படி கொள்கைகளின் அடிப்படையில் தான்
இருக்கும் என்றால் –

ரேஷன் கடைகள் இல்லாத ஏழைகளின் வாழ்க்கை…?
60 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும்
இந்த நாட்டில் ரேஷன் கடைகளை ஒழிப்பது
எப்பேற்பட்ட கொடுமை ..?

அரசு மருத்துவமனைகள் இல்லாத ஊர்கள் ….?
அரசு பள்ளி, கல்லூரிகள் இல்லாத நிலை ….?
அரசு போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை….?
வேலை நிரந்தரம் இல்லாத,

பணியில் பாதுகாப்பு இல்லாத ஊழியர்களின் நிலை…?
பணியாளர்களுக்கு – பிராவிடண்ட் பண்ட், பென்ஷன்,
கிராஜுடி, இன்சுரன்ஸ் போன்ற பாதுகாப்பு இல்லாத நிலை -?

அய்யோ – நினைக்கவே பயமாக இருக்கிறதே…

கம்யூனிசம் தோற்று விட்டது என்று கூறி
இந்தியாவை ஒரே இரவில் ஒட்டு மொத்த
முதலாளித்துவ நாடாக
மாற்றி விட முடியுமா என்ன ?

உணவுப் பொருட்களுக்கான மானியத்தை பணமாகக்
கொடுத்தால், மார்க்கெட்டில் விற்கும் விலையில்
மக்கள் அதே அளவிற்கு உணவுப் பொருட்களை
வாங்க முடியுமா ?

தமிழ் நாட்டில் ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும்
20 கிலோ அரிசிக்கு மத்திய அரசு எவ்வளவு ரூபாய்
மானியமாக கொடுக்கும் ?
அதை வைத்துக் கொண்டு எத்தனை கிலோ அரிசி
வாங்க முடியும் ?

கல்வியும், சுகாதாரமும் ஏற்கெனவே பெரும்பாலும்
தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டன.
ஒட்டு மொத்தமாக அரசு மருத்துவ மனைகளையும்,
அரசு பள்ளிகளையும் மூடி விட்டால் ….?

ஏற்கெனவே சிறப்பு பொருளாதார மண்டலங்களில்
ஏகப்பட்ட சலுகைகளுடன் தொழில் துவங்கும்
மல்டிநேஷனல் கம்பெனிகள் ஐந்து வருடம், பத்து வருடம்
– சலுகைகள் கிடைக்கும் வரை தொழில் நடத்தி விட்டு,
சலுகைகள் நின்றவுடன் சொல்லாமல் கொள்ளாமல்
கம்பெனியை மூடி விட்டு ஓடும்போது அவர்களுக்கு
எந்தவித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்றால் …..?

தலைவலி என்று டாக்டரிடம் போனால்,
தலையை எடுத்து விட்டால் சரியாகி விடும் என்பது
போல இல்லை இது ….?

லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகம் –
நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் –
விரைவான முடிவுகள் –
வசதியான, அதிகப்படியான போக்குவரத்து வசதிகள் –
விவசாயிகள், நெசவாளிகள், உழைப்பாளிகள் என்று
அனைத்து தரப்பினருக்கும் தொழில் பாதுகாப்பு –
நிறைந்த மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் –
அனைவருக்கும் இலவசமான, உயர்தர கல்வி –
நாடு முழுவதும் நல்ல குடிநீர், பாசன வசதிகள் –
நாடு முழுவதும் தங்கு தடையில்லாத மின்சாரம் –

என்று – முந்தைய அரசுகள் கொடுக்காததை
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும்
என்று நம்பித்தான் மக்கள்
நமோவை பதவியில் அமர்த்தினார்கள்….

cm - modi

அர்விந்த் பனகாரியா என்கிற அமெரிக்க-இந்திய
பொருளாதார நிபுணர் இறக்குமதியாகி
நம் துன்பத்தைத் துடைப்பார் என்கிற எதிர்பார்ப்பில் அல்ல…!!!

அவர்கள் நம்பிக்கை நாசமாகும் வகையில் –
இருப்பதையும் இழக்க வேண்டிய சூழ்நிலை
இந்நாட்டு மக்களுக்கு உருவாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டியது
திருவாளர் நரேந்திர மோடி அவர்களின் அடிப்படைக் கடமை…

அது எந்த ‘இஸம்” ஆக இருந்தாலும் சரி ….!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to நரேந்திர மோடி – பனகாரியாவை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்….?

 1. Syedabthayar721 சொல்கிறார்:

  அப்போ நமக்கு ஆப்பு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்று சொல்லுங்கள். தலைவிதி. என்ன கொடுமை சரவணா இது ????

  M. செய்யது
  துபாய்

 2. S.Selvarajan சொல்கிறார்:

  மக்களுக்கு மானிய விலையில்
  கொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்….

  அதற்கு பதிலாக ரொக்கமாக பண உதவி செய்யலாம்
  ( Direct -benefit of – Cash -Transfer ). மக்கள் தங்களுக்கு
  வேண்டிய உணவுப்பொருட்களை, நேரடியாக சந்தையில்
  வாங்கிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் ! ” .எல்லோரும் பிரடை எடுங்கள் … வெண்ணையை தடவுங்கள் ….. ஒரு கடி கடியுங்கள் …. பசி பறந்து போச்சா ….. கொடுத்த காசுக்கு வயிறார சாப்பிட்டு விட்டீர்கள் …. அப்புறம் என்ன …. மோடியின் ஆட்சியில் …. ஒரே சுபீஷம்தான் ” ?

 3. Mohan Dahodia சொல்கிறார்:

  How can an American Citizen become an Indian minster? It is illegal.

 4. srinivasanmurugesan சொல்கிறார்:

  முடிவில் இது நக்சலைட் போன்ற வன்முறை இயக்கங்களுக்குத்தான் உதவியாக அமையும்.திரு.மோடி ஆரம்பத்திலேயே கவனமாக இருப்பது நாட்டிற்கு நல்லது.தவறின் அடுத்த தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்.

 5. today.and.me சொல்கிறார்:

  அரவிந்த் குப்தாவைத் தொடர்ந்து அரவிந்த் பனகாரியா..

 6. today.and.me சொல்கிறார்:

  “Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.” Abraham Lincoln
  OR
  SHALL PERISH… RIGHT?

  இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் என்ற நம்பிக்கைதானே வாழ்க்கை.

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள். நல்ல பதிவு. இந்த அரசு பண முதலைகளுக்கும், பெரு வணிக நிறுவனங்களுக்கும் தான்…கறுப்பு பணம் வருவதில் சிக்கல் என்று இன்று அமித் ஷா சொல்லி விட்டார். எல்லாம் மாறி விடும் ஒரு கூட்டம் நம்பியது, இன்னமும் நம்புகிறது…எது அவர்களுக்கு சாதகமோ அதெல்லாம் மட்டுமே மாறும்…

 8. Siva சொல்கிறார்:

  I clearly want to record this statement here that India, Indian politicians, Indian people, Indian media and Indian corporates are becoming a dustbin or garbage can or trash can for dumping the western-model of businesses, which largely favor richest in the society and create a huge inequality in the society. It’s an unfortunate part of evolutionary processes that we are forced to follow someone’s path and bear the burden.
  I request readers of this blog to look for Thomas Piketty’s great work on ‘capital in 21st century’. A lot of you tube videos and other writings are available online. If you guys need, I can buy digital copy of his book to the readers. It’s a great book dealing with how capital/free market policy creates inequality in society.
  I am not against free market policy, but we lack knowledge and regulations how to implement it in balanced way. I am not a communistic ideologist, but I support the ideology (whatever you call it or name it) that brings equal growth for all in society. Subban, kuppan, periappan, mattrum ellorum vazha vendum, avarkal kudumbamum valara vendum.
  The current policy to be followed by present politicians will end up in huge social problems. Even western economist and think-tanks are advocating a balanced policy that will bring some improvement in current social set up!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சிவா,

   நன்றாக யோசிக்கிறீர்கள்…வாழ்த்துக்கள்.

   சிந்திக்கத் தூண்டும் விதத்தில் –
   சிந்தனைகளைக் கிளறும் விதத்தில் –
   நம் விவாதங்கள் அமைய வேண்டும் என்பது தான்
   நான் எழுதும் பெரும்பாலான இடுகைகளின் அடிப்படை நோக்கம்.

   நான் எதையும் யார் மீதும் திணிப்பதில்லை.
   ஒரு விவாதத்தை – சில அடிப்படை உண்மைகளையும்,
   அவற்றின் மீதான என் கருத்துக்களையும் கூறி துவக்கி வைக்கிறேன்.
   பின்னூட்டங்களின் மூலம் –
   மாறுபட்ட – பயனுள்ள – சிந்தனைகளை வரவேற்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • KS சொல்கிறார்:

   Your criticism is understandable as any new attempt is quite likely to invoke apprehensions first. But come to think of it – do we want to continue with the status quo? We have seen enough with the present model which ensures that we are kept where we are with only marginal improvements. We have to do something drastic that sets us off on a rapid growth path. For that, wishing alone will not help. Nor is it the case growth and development are like a gift packet that someone will bring to us for us to sit and enjoy! Each one of us to work hard and improve ourselves in order that the same is reflected as the country’s growth. The Govt’s role is only that of a facilitator or a referee that regulates the play between various participants in the economy and to ensure fairness in its conduct. For doing the function we need honest people with sincerity in their purpose at the helm so the job is done efficiently without leakages resulting in people getting the fullest possible benefits from the economy. Any nation and its economy can become prosperous only by achieving efficiency in all their activities. It is no longer possible to want to have a lethargic approach to life and working and still hope that all growth will fall on us. Therefore, each one of us has to hone our knowledge and skills continuously in order to be competitive and lift the bar high every time.

   In this context, when we view foreign investments, they are after all business people and their money will seek and go to places where they get the highest return. No one – including the Missionaries of Charities – is charitable in the world. Therefore, unless we can offer them our value proposal, we are not going to be attractive to them. Those business people look for basically profits, regulatory stability and ease in doing business. They want to employ people who can deliver. Nothing wrong with it? They want to be able to get rid of ‘bad apples’ – in order that the general morale of the workforce is maintained. Fair enough. Then only they will be able to run their businesses efficiently. Here the role of Govt becomes critical. We are a nation home to a billion of lives and not all can be said to be above the bar on an efficiency assessment. This is true for any other country as well. So the ones which are considered below par (or bar) are also lives belonging to the country for which the Govt is responsible. If the Govt provides a social security program where such below par people would assistance for sustenance and also alternative opportunities until they are rehabilitated, shouldn’t it be a fair happy system?

   This process has the merit of not only pushing us to our maximum for efficiency but offers guarantee of Govt support in the event of failure to achieve as well. By this process, we invite value creation within the country, chance to develop and train our skills and create more people who will have enough money to be categorized as ‘consumers’ to prop up our markets further thereby providing a cascading effect to the growth of our economy. Besides, we will be building organized families whose children will go to good schools and become greater human beings than their forefathers who never had the opportunity to know the outside world. This process has the potential to spiral and gain huge momentum that we can’t imagine now. Who knows – we may put China,Korea and Singapore behind us because of our innate qualities and genetic uniqueness!

   The caveat however is that the Govt has to play its role carefully with astute attention always to the economic dynamics and be fair to ensure that our nation’s interests are never compromised. The Govt may get additional revenues as businesses start paying taxes which money has to be efficiently applied to the economic benefits of the society. Monitoring of fairness and support to the below par alone should be the prime focus of the Govt apart from police and military. The current bane is that more than half of our taxes go to pay salaries of Govt staff and VIP security and perks. If Govt can get rid of inefficiencies in itself first, it should be easily possible to fund the program of supporting the below par people. The mantras must be

   1. provide businesses the right atmosphere and an efficient infrastructure to conduct their activities with ease.
   2. Collect taxes and use the money to support the less fortunate by direct assistance.
   3. Be a regulator and / or an arbiter to resolve issues expeditiously.

   The above is the only way to spur the economy and inject value into it and uplift the lives of our people. Previously, there were two lacunae when other Govts attempted to do something similar to this. They were

   1. highly corrupt with none of their leaders interested in the welfare of people
   2. culturally and religiously motivated and so trying to destroy the basic fabric of our country in return for the meager benefits they were holding out.

   But today, we see in the Govt a refreshingly different leadership that appears to be sincere until now and a group that is quite conscious of the country’s heritage and would only try to restore the old values and glory of the nation.

   So friends , let us have our hopes high and reserve our critical comments until such time we see red.

   • Siva சொல்கிறார்:

    Reply to KS, thanks for your long comments, but your arguement at the beginning is flawed. It is not the present govt is taking initiative, as a new attempt, to attract foreign investment. It has been there in table for long time, at least since post-1991 economic liberalization. The foreign investors have been very picky/selective/expecting huge return from their investment in India. They too understand the Indian mentality for obeying rules/regulations and exploit the situation. Can you remember how many oh them went back after the economic crisis in this decade! Yes, there will be risk in business, but you cannot shut the door abruptly.
    I agree with you that growth and prosperity will come through only efficient hard work, but who is not willing to do that?
    Have your seen many small businesses and laboreres effort to get thier success? They all through in India work hard. These middle class families struggling hard with thier best effort to become economically sound. Most of the Indian families are doing this. Yes, there might be some lazy people who may not work efficiently, but ultimately suffer at end. I don’t care about this kind of stupid lazy people. I care only for the vast majority of the middle class families (like mine) in the country. I do not care for the elite/rich people, who inherits wealth or amass (collect) wealth without much field/hard work, but through manipulating the share market. I am biggest opponent of share market business. Indian share market busineses are just an extension of bad part of westernized economy policy.
    I don’t have problem in employing the ‘deliverable’ person. In fact, non-deliverable person cannot find place at first. Even if he finds, he cannot survive there. I do not understand why you brought this issue? I find some disturbing in your comments that emphasize the difference in skills ( by using word such as efficiency, deliver, bad apples). Any skills are learned in life. I advocate for making the environment for learning the skills by any person from any where in all the states of India. But you support private businesses that expect more profit. I am supporter of private and public businesses of useful for growth of owners as well as employers. In fact, I am not against the private businesses, but expecting more equalized growth for employee and employers.
    Also, I do not support the private business involved in stealing natural resources like ores, gas, coal or other earth-bound materials. Because it belongs to every body. The profit should go to all. It is possible only by government.
    I do not think that govt spends more for govt staff and vip security only as you mentioned. I do not like VIP culture, but you cannot cut the govt employer expenses. It is world-wide phenomenon that each country has thier state govt employee with benefits. Let me know any state (country) without govt sponsored employee.
    You seem to be strong supporter of privates. I don’t understand whether you advocate that govt should build infrastructure and give it to private businesses. If it is the case, I consider you as a pro-rich. In fact, private businesses have to establish the infrastructure and get the profit out of it. That’s what I know many private businesses do run industry in our places or any where else.
    Your thinking is nothing but the western style business, which is under re-evaluation for social equality. If you are not aware, you can read what Thomas Piketty’s says.
    In the final, I am not against private businesses, but I hope for a business of healthy/equal growth for both sides. I am not communistic ideologist, but support for inclusive approach that benefit subban/kuppan/kombanis/badanis/educated/uneducated/poor/rich/rural/city/tribals/new comers/immigrants/native people. Because, after all, they all are human beings. We have to give and get a support for all humans in the earth. Because, we are able to think and talk for others and ourselves. We can beat the survival of fittest theory, which is applicable to wild animals only, not for human beings.

 9. Siva சொல்கிறார்:

  From Union ministers to low level politicians have been using the LPG subsidies until today! It is ridiculous that even kitchens of Indian president, prime minister, kombanis, badanis and other richest people will get subsidized lpg gas.

 10. Siva சொல்கிறார்:

  But they don’t want middle class people to continue to have subsidized gas. I agree that subsidy will have negative impact on growth, but scrapping it will have more burden on middle class.

 11. ltinvestment சொல்கிறார்:

  Kadavul than kaptra vendum

 12. shiva சொல்கிறார்:

  I regret I am unable to respond in Tamil (due to my inadequate computer knowledge).
  I could go thro this article only today. I thought it’s an important topic and so, I am compelled to respond.
  Your article is almost supporting the socialistic pattern of governance. Since you are well informed, you are probably aware that most of the present problems in the country, especially w.r.t poverty is on a.c of this flawed model – permit raj, joint looting by politicians and businessmen.
  Socialism / communism is a very attractive option for crusaders – it’s a “bodhai” / “nasha” and it is very attractive to support the downtrodden and speak against capitalism. While the downtrodden definitely needs support to bring them up, socialism makes them beggars and continue to keep them as beggars as can be seen from the plight of the poor in this country.
  When a person begs, socialism wants to give him fish, little caring to note that it would be impossible to continue to give him fish forever. The better option would be to make him learn fishing and be on his own, without needing any props.
  Free market gives that opportunity. It’s a slow process, but with dedicated and well-meaning government its definitely possible. As you’ve indicated that according to Mr Panagariya, when economy picks up the standard of living picks up and the downtrodden also get benefitted.
  If you do not accept the above, I’d request you to consider 2 examples – one each on Asia and Europe.
  When Germany was divided, E.Germany followed socialism, while W. Germany followed free market. There were so many who tried (and succeeded) in moving from E.Germany while there was hardly anybody wanting to move from West to East (and there was no restriction to move also).
  If socialism was so good and ensures all sections of people are taken care of, why was this the case?
  In Asia, S.Korea followed market economy and N.Korea, socialism.
  S.Korea is a very successful economy now – see the no of enterprises with operations across many countries – making products acclaimed internationally – Hyundai, Samsung, LG to name a few. Can you name a single enterprise (even Govt operated) from N.Korea.
  Govt run operations tend to be inefficient and this is not the case in India alone.
  The fear that opening the economy would expose us to the danger of multi-nationals taking over and fleecing the public is misplaced.
  Take the case of communication – having a telephone connection was a luxury – there was waiting list for getting a telephone. What is the situation today? People from all walks of life – covering the entire spectrum – urban / rural, male / female, poor / rich / middle class – everybody has a phone and the call rates are the cheapest.
  There used to be waiting list for Vespa scooters! – now there are so many options available.
  These are just 2 examples.
  The same effect is expected in almost all other sectors, when economy opens up.

  • Siva சொல்கிறார்:

   Nether Kavirimainthan nor me support/suggest/propose a socialism model. We have clearly told that you can call it any ‘ism’ but it should be inclusive for all with equal opportunity for equal growth. Some of your reasoning are very poor to accept ur arguement.

   • Siva சொல்கிறார்:

    We are not against free market, but free market should not create a chism of inequality. Specifically, indian businesses do not have ethics and proper regulations. Can you tell one indian business that is equally accepted by Indian mass and does serve equally to everyone in society?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.