சோழியை உருட்டுகிறார் சு.சுவாமி – ரஜினி மீது திடீர் அக்கரை….!!!

rajini-1

 

மஹாபாரதத்தின் சகுனி பாத்திரத்திற்கு சற்றும் குறையாத
சுப்ரமணியன் சுவாமி திடீரென்று ரஜினிக்காக சோழியை
உருட்ட ஆரம்பித்திருக்கிறார்.

ரஜினி குறித்த அவரது லேடஸ்ட் ட்வீட் கீழே –

swamy on rajini....edited

பாஜக வில் உள்ள ரஜினி ரசிகர்கள் ( !!! ??? ) ரஜினி “திவால்”
ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்.

ரஜினி திவால் ஆகும் நிலையிலும் இல்லை –
பாஜக வில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு
ரஜினி ஆதரவாளர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை.

இது நம்மை விட –
டாக்டர் சு. சுவாமிக்கு நன்றாகவே தெரியும்….
இருந்தும் இப்படி ஒரு ட்வீட்……!!!

சோழியை உருட்டி இருக்கிறார் – சுப்ரமணியன் சுவாமி….!!!
எதை எதிர்பார்த்து என்பது
இனிமேல் தான் தெரிய வேண்டும்.

சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது
ரஜினியை பாஜக விற்குள் கொண்டு வந்து விட முயற்சிகள்
நடக்கின்றன….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சோழியை உருட்டுகிறார் சு.சுவாமி – ரஜினி மீது திடீர் அக்கரை….!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  இவரு உருட்டி ஒருத்தர் அவுட், அடுத்து இவரு….

 2. R.Chandrasekaran சொல்கிறார்:

  I think Mr. Rajini is very clever! So he will fall in pit

 3. today.and.me சொல்கிறார்:

  இந்திய(தமிழ்)மீனவர்களுக்கு – இல்லாத கடத்தல் வழக்கு மூலம்,
  இலங்கையில் – நடைமுறையில் இல்லாத மரணதண்டனையைக் கொடுத்து,
  விசாரணையும் இல்லாமல் விதிவிலக்கும் இல்லாமல் (பெருந்தன்மையுடன்,,,!),
  இந்தி நடிகரின் தங்கை மணவிழாப் பரிசாக – ஐவரையும் விடுவித்து,
  இரகசியமாக டில்லிக்குக் கொண்டுசென்று – நமோநம என்று கும்பிடவைத்துக்
  கும்மியடித்தவர்கள் வேறு என்ன செய்வார்கள்? எல்லாம் தமிழன் தலையெழுத்து.

  ரஜினிபேரிலும் அவர் குடும்பத்தார் பேரிலும் உள்ள வங்கிக்கணக்குகளிலெல்லாம் ஏதாவது (இதுவரை இல்லாத) கேஸைப் போடுவார்கள், ஜப்தி பண்ணுவேன் என்று மிரட்டுவார்கள்- இவர் கும்பிடும்வரை.

  சென்றமாதம் திருமதி ரஜினியின் சொத்து ஜப்தி என்று நாளிதழ்களில் வந்ததே, அந்த கேஸைப் போட்டவருக்கும் பாஜகவுக்கும் அல்லது சுவாமிக்கும் என்ன தொடர்பு என்று கொஞ்சம் ஆராயவேண்டும்.

  இன்னமும் கூட தாங்கள் தமிழக மக்களுக்காக உழைத்து அதன்மூலம் தமிழக மக்களின் நம்பிக்கையையும் ஓட்டுக்களையும் பெறமுடியும் என்று பாஜக அல்லது அதன் ரெப்ரசண்டேட்டிவ் சுவாமி நம்பவில்லை. இதை 1. பாஜக உழைக்கத் தயங்குகிறது அல்லது தமிழகத்திற்காக எப்போதுமே உழைக்காது என்று எடுத்துக்கொள்வதா? 2. சினிமாபிரபலத்தை முன்னிறுத்தினாலே போதும் தமிழர்கள் ஓட்டுப்போட்டுவிடுவார்கள் என்று எடுத்துக்கொள்வதா? 3. திமுகவும் அதிமுகவும் மற்ற கட்சிகளுக்கும் ரஜினிக்குக் கொடுக்கமுடியாத கொடுமையான பிரஷரை எங்களால் கொடுக்கமுடியும் என்று ரஜினிக்கும் மற்ற கட்சிகளுக்கும் சொல்லாமல் சொல்லுவதாக எடுத்துக்கொள்வதா?

  ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு நன்மையா ? இல்லை
  ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நன்மையா ? இல்லை
  ரஜினி அரசியலுக்கு வந்தால் கர்நாடகத்துக்கு நன்மையா ? இல்லை
  ரஜினி அரசியலுக்கு வந்தால் இந்தியாவுக்கு நன்மையா ? இல்லை
  பின்பு ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் அவரை உள்ளே இழுத்துவிட.

  பாவம். அவர்பாட்டுக்கு லிங்கா உண்டு கோச்சடையான் உண்டு தன் டிஜிட்டல் படவேலைகள் உண்டு என்று இருக்கிறார்.

  எல்லாருக்கும் தெரிந்தவரை அவர் ஒரு நல்ல நடிகர். அவ்வளவேதான். அந்தப் பெயரையும் கெடுக்க நடக்கும் ஏற்பாடுகள் இவை.

  பி.கு, தமிழக பாஜகவில் நடிப்பதற்கென யாரும் இல்லையா? யாரையாவது கதாநாயகன்/கதாநாயகியாகப் போட்டு இரண்டு படத்தை அவசரமாக சுட்டு வருகிற மாநிலஇடைத்தேர்தலுக்கு இலவசமாக வீட்டுக்கொரு சிடி கொடுத்துவிட்டால் தமிழர்கள் எல்லாரும் ஓட்டை அங்கே அள்ளிவிடமாட்டார்களா என்ன?

  சுவாமியின் அடுத்த அசைன்மெண்ட் ஆரம்பம்.

  ம்… எல்லாம் தமிழ்நாட்டின் தலையெழுத்து.

 4. S.Selvarajan சொல்கிறார்:

  கா.மை. வெளியிட்ட ஒரு பத்திரிக்கையில் வெளி வந்த பாரதிராஜாவின் பேட்டியை — நண்பர்கள் மீண்டும் வாசித்தால் நல்லது ! இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை — எவர் ஈசியாக மாட்டுவார்களோ — பல விதங்களில் வீக்காக இருக்கின்றார்களோ — அவர்களை ” சாம– பேத — தண்டம் ” முறையில் மிரட்டி வழிக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என்பதுதான் — நிதர்சனம் !! ரஜினி ஒன்றும் பதவி ஆசை அற்ற முனிவர் அல்ல — என்பதாக கூட இருக்கலாம் ? சு.சாமி ராஜபக்சே தோற்ற அதிர்ச்சியில் இருந்து மீள இது போன்ற நடவடிக்கைகளில் தான் — ஈடுபட்டாக வேண்டிய கட்டாயமோ ? என்னவோ ? போக–போக– தெரியும் ?

 5. S.Selvarajan சொல்கிறார்:

  1945-ம் ஆண்டில் விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்படும் நேதாஜி சுபாஷை சோவியத் சர்வாதிகாரி ஸ்டாலின்தான் கொன்றார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று நடந்த மெர்சண்ட் சேம்பர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், சுபாஷ் சந்திர போஸ் விபத்தில் பலியானதாக கூறப்படுவது உண்மை அல்ல. உண்மையில் அவர் சீனாவின் மன்சூரியா பகுதிக்கு தப்பிச் சென்றார். அப்போது அந்த பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அறிந்த சர்வாதிகாரி ஸ்டாலின் அவரை சைபீரியாவிலுள்ள சிறையில் அடைத்து வைத்து 1953-ம் ஆண்டு வாக்கில் தூக்கிலிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றிருக்கிறான். இது அப்போதைய இந்திய பிரதமர் ஜவர்ஹலால் நேருவுக்கும் தெரியும்.இது தொடர்பான உண்மைகள் எதிர்காலத்தில் வெளியாகும் என்று பேசினார் ! 11–01–2015 தினமணி செய்தி ……. எனது கருத்து :–
  காங்கிரசின் ஆட்சி காலத்தில் இதை சொல்ல துணிவில்லாத கோழை — இப்போது எதை சொன்னாலும் கேட்க ஆளில்லை என்கிற திமிர்த்தனம் — பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு என்கிற நினைப்பு — ! இவரது உளறல்களை இனியும் பா.ஜ.க. ரசிப்பது …. அவர்களுக்கே கேடாக முடியும் !! எப்படியெல்லாம் சுப்ரமணிசாமியின் ” புத்தி ” வேலை செய்கிறது பாருங்கள் ! ரஜினி மேட்டரை விட இது — சூப்பர் !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.