அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

.

ramakrishna paramahamsa-1

ramakrishna paramahamsa-2

swamy vivekananda-1

swamiji at chicago-1

வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர் யார் …?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினுசான பிரச்சினை….

தொடர்ந்து துன்பங்களைக் கண்டு
சரிந்து போயிருக்கும் சமயங்களில்
சரியான விளக்கங்கள் கொடுத்து நம்மை
யார் கைதூக்கி விடுகின்றனரோ,
நல்வழியில் நடக்க யார் உதவுகின்றனரோ
அவர்களே நல்ல வழிகாட்டிகள்.

அப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டிகள் தான்
ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர் விவேகானந்தரும்.
இத்தகைய ஒரு குருவையும், சீடரையும் உலக
சரித்திரம் இதுவரை கண்டதில்லை….!

இன்று ஜனவரி-12, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்.
வாழ்க்கையில் துன்பங்களைக் களைய அவர் காட்டும் வழியை
எனக்கும், உங்களுக்குமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்ள
விரும்புகிறேன்.

நமது பற்பல சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையிலான
அவர்கள் இருவருக்குமிடையேயான ஒரு உரைச்சுருக்கம் கீழே –

இந்த உரையாடல் நமக்காகவே நிகழ்த்தப்பட்டது.
நமது பல சந்தேகங்களுக்கும் –
இதில் தீர்வு ஒளிந்திருக்கிறது.
படியுங்கள். … மீண்டும் மீண்டும் படியுங்கள். பல வரிகள்
மிக மிக ஆழமான பரந்த பொருள் கொண்டவை.

————————————

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் – சுவாமி விவேகானந்தருக்கும்
இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் –

சுவாமி விவேகானந்தர் – நாம் ஏன் எப்போதும்
மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம் ?

ராமகிருஷ்ண பரமஹம்சர் – துன்பத்தையே நினைத்து
கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகி விட்டது.
அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

வி – நல்லவர்களுக்கு மட்டும் துன்பம் எப்போதும் ஏன் ?

ரா – உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது.
நெருப்பில் இடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது.
நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள். ஆனால் –
அவர்கள் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். அந்த
சோதனைகளின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களேயன்றி
கீழே செல்ல மாட்டார்கள்.( by experience, their life becomes
better, not bitter …)

வி – அப்போது, சோதனைகள் நன்மைக்கு
என்று சொல்கிறீர்களா ?

ரா – ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர்
வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை
கொடுத்து விட்டு, பிறகு தான்
பாடத்தை போதிக்கும்.

வி – கணக்கற்ற பிரச்சினைகளில் மூழ்கித் தவிப்பதால்,
நாங்கள் எங்கே போகிறோம் என்பதே தெரியவில்லை……

ரா – வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று
உனக்கு புரியாது. உனக்குள்ளே பார்… புரியும்.
கண்களால் பார்க்கத்தான் முடியும். ஆனால் –
உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும்…
(Eyes provide sight… Heart provides the way )

வி – சரியான பாதையில் போகும்போதும் தோல்வி
அடிக்கடி ஏற்படுகிறதே…?

ரா – செல்லும் பாதையில் வெற்றி என்பது
மற்றவர்களால் அளக்கப்படுவது. ஆனால் –
அதில் கிடைக்கும் திருப்தி
என்பது உன்னால் மட்டுமே உணரப்படுவது.

வி – கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி
உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்…?

ரா – எப்போதும் – இனி எப்படி போகப்போகிறோம் என்று
அச்சப்படுவதை விட, இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய்,
எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.
உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக் கொள்.
இழந்தவைகளை அல்ல.

வி – இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும்
விஷயம் எது ?

ரா – துன்பப்படும்போது –
“எனக்கு ஏன் ?”,
“என்னை மட்டும் ஏன் ?”
என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை
கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

வி – வாழ்க்கையில் மிகச்சிறந்தவைகளை
நான் அடைவது எப்படி ?

ரா – உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள்.
நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு.
இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை
பெற கடைபிடிக்க வேண்டிய நியதி.

வி – கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்
பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று
தோன்றுகிறது.

ரா – கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை..!
(There are no unanswered prayers …!)
அச்சத்தை விடு. நம்பிக்கை கொள்.
வாழ்க்கை என்பது தீர்வு காணப்பட வேண்டிய
ஒரு புதிர் தானே தவிர, பிரச்சினை அல்ல.
எப்படி வாழ வேண்டும் என்று மட்டும்
நாம் அறிந்துகொண்டால்,
வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறி விடும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

 1. Ramachandran R. சொல்கிறார்:

  “”உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள்.
  நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
  எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு.””

  கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை..!
  (There are no unanswered prayers …!)
  அச்சத்தை விடு. நம்பிக்கை கொள்.
  வாழ்க்கை என்பது தீர்வு காணப்பட வேண்டிய
  ஒரு புதிர் தானே தவிர, பிரச்சினை அல்ல.
  எப்படி வாழ வேண்டும் என்று மட்டும்
  நாம் அறிந்துகொண்டால்,
  வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறி விடும்.

  – எவ்வளவு எளிமையான உபதேசங்கள் !
  மிக்க நன்றி கே.எம். சார்.

 2. drkgp சொல்கிறார்:

  Daer K M,
  Is it for a change that you have wavered into an area sync with your
  wavelength !
  Wonderful lines to people with less self confidence.
  Wish you all a very Happy Pongal .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி Dr.KGP,

   இது – என் மனதுக்குப் பிடித்த, நெருங்கிய விஷயம்.

   மற்றபடி, பொதுவாக நான் வலைத்தளத்தில் எழுதுவதெல்லாம் –
   அவசியம் செய்ய வேண்டிய
   சமூகக் கடமையாக நான் நினைப்பவை..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Srini சொல்கிறார்:

  finally a breather from KM… thanks GOD.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என்ன ஸ்ரீநி இப்படிச் சொல்லி விட்டீர்கள் …!!

   இந்த 7 மாதங்களில் நீங்கள் மோடிஜியைப் பற்றியும், டாக்டர் சுவாமி,
   மற்றும் பாஜக வை பற்றியும் உங்கள் கருத்துக்களை
   ஓரளவாவது மாற்றிக் கொண்டிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்.

   நான் இத்தனை எழுதியதில் ஒரு 10 % கூடவா உங்களை
   convince பண்ணவில்லை …? !!!

   Anyway, atleast – இன்றைய இடுகையாவது உங்களுக்கு
   மகிழ்ச்சி அளித்தது குறித்து எனக்கு நிறைவு தான்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. appannaswamy சொல்கிறார்:

  Beloved Sir, in future, can u please avoid political related quotes and publish like this useful ones?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அப்பண்ணசுவாமி,

   எனக்கும் இது போன்ற விஷயங்களில் தான் ஈடுபாடு அதிகம்.
   ஆனாலும் –

   கட்சி சார்பின்றி, சுயநலம் கருதாமல் – அரசியல், சமுதாய விஷயங்களை
   அலசுபவர்களை வலைத்தளங்களில் அதிசயமாகத் தானே
   காண முடிகிறது…

   அத்தகைய, ஒளிவுமறைவற்ற – வெளிப்படையான –
   விவாதங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என்கிற எண்ணத்தில் தான்
   நான் அரசியல் விஷயங்களைப் பற்றி இங்கு எழுதி வருகிறேன்.
   இங்கு அனைவருமே, திறந்த மனதுடன் விவாதிக்க ஒரு வாய்ப்பு
   கிடைக்கிறதல்லவா …? ஜனநாயகம் சிறக்க இது ஒரு அவசியம்.

   எனவே அரசியல் குறித்து எழுதுவது தவிர்க்க முடியாதது
   என்றே நினைக்கிறேன்.

   ஆனாலும், அவ்வப்போது, சமயம் வாய்க்கும்போதெல்லாம் –
   ஆன்மிக விஷயங்களையும் நாம் பேசலாம்.
   சரி தானே நண்பரே….?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. selvam சொல்கிறார்:

  Thanks KM.

 6. D. Chandramouli சொல்கிறார்:

  These are marvelous lessons that should be etched in gold. The beauty of this is that we can relate to every one of the sayings and introspect within ourselves. The one that made me sit up is this: “துன்பப்படும்போது “எனக்கு ஏன் ?”, “என்னை மட்டும் ஏன் ?” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன். Isn’t it so? Ultimately, the ‘journey’ itself is the ‘destination’. KM, you have picked the essence of all teachings for sharing with us. A million thanks.

 7. visujjm சொல்கிறார்:

  http://manavektamission.org/

  Kanyakumari to Kashmir WALK TO HOPE…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.