மந்திரிக்கு தெரியாதா இது எப்பேற்பட்ட மோசடித் திட்டமென்று …?

.

.

தமிழ்நாட்டில் தான் பிறந்தார்,
இங்கு தான் வளர்ந்தார், படித்தார், தொழில் செய்தார்,
40 ஆண்டுகளாக அரசியலும்……பண்ணி வருகிறார்…!

தமிழ் மக்களால் தான் பாராளுமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் பிரதிநிதியாகத்தான் இப்போது டெல்லியில்
அமைச்சராகி பதவியில் நீடித்துக் கொண்டிருக்கிறார்…

தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் மிகப்பெரிய
மோசடித் திட்டம் பற்றி இவருக்குத் தெரியாதாம்….
நன்மையா – தீமையா என்று இனிமேல் தான்
ஆராய வேண்டுமாம்…!

முதலில் – புதன்கிழமை – 07/01/2015 அன்று –
சென்னையில் நிருபர்களிடம் சொல்கிறார் –
( tamil24news.com/news – dated – 2015/01/07 )

“-காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு குழாய்கள்
பதிப்பதால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது”.

3 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை,
-10, ஜனவரி 2015 அன்று – தஞ்சையில் சொல்கிறார் –
(http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=135926)

“-பல்வேறு இடங்களில் மீத்தேன் வாயு எடுக்கப்பட்டு
வருகிறது. எனவே உணர்ச்சிவசப்பட்டு இந்தத்
திட்டத்தை எதிர்க்கக்கூடாது.
இந்தத் திட்டத்தால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு
நன்மை கிடைக்குமா அல்லது தீமை கிடைக்குமா
என்று ஆராய வேண்டும் “.

அவரை வாழவைப்பது இந்த தமிழ் மண் தானே …?
அவருக்கு உலை வைக்க அரிசி தரும்
தஞ்சை மண்ணுக்கே உலை வைக்க
அவர் துணை போகலாமா…?

கட்சித் தலைமை மீது கொண்டிருக்கும் பிடிப்பா … அல்லது
பதவியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்
என்கிற பதை பதைப்பா ….? எது பேச வைக்கிறது
இப்படி எல்லாம் ….?

“உடனே நிறுத்துங்கள் இந்த நாசகாரத் திட்டத்தை” – என்று
மத்திய அரசிடம் அவரே, தானாகவே, துடித்து, பதைபதைத்து
சொல்லி இருக்க வேண்டாமா …?

நன்மையா – தீமையா என்று கேட்ட அமைச்சருக்காகவே
இந்த விவகாரம் குறித்து எனக்குத் தெரிந்த, நான் சேகரித்த
தகவல்களை எல்லாம் விவரமாக கீழே தருகிறேன்.

இனியாவது அமைச்சர் மத்திய அரசுடன் பேசி
இந்த திட்டத்தை கைவிட ஏற்பாடு செய்வாரா ?

(இந்த வலைப்பதிவின் ஒரு பிரதி
அமைச்சருக்கு அனுப்பப்படுகிறது…)

மீத்தேன் வாயுத் திட்டம் –

மீத்தேன் வாயு என்பது ஒரு வகை எரிவாயு.
இது மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது.
இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது.
சாணத்தில் கிடைக்கும் வாயு கூட மீத்தேன்தான்.
பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து
மீத்தேன் கிடைக்கிறது.

பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது.
அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்… ஆகிய மாவட்டங்களின்
நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும்,
அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும்
சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம்,
ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி
கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.)
என்கிற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அடுத்த 100ஆண்டுகளுக்கானது …..!!!

(அதாவது இன்றைய, மற்றும் அடுத்தடுத்த
மூன்று தலைமுறைகளை
பூண்டோடு அழிக்கப் போதுமானது …)

இதை எடுப்பதானால், எத்தகைய பிரச்சினைகள்
எல்லாம் உண்டாகும்…..?

ஒரே வரியில் சொல்வதானால், வளம் கொழிக்கும் தஞ்சை,
நாகை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்கள் –
தமிழகம் முழுவதற்கும் சோறு போடும் மாவட்டங்கள் –
அடுத்த சில ஆண்டுகளில் –
ஒரு வறண்ட நீண்ட நெடிய பாலைவனமாக மாறும்….!!!

லட்சக்கணக்கான மக்கள் வேலை இழப்பர்…
குடும்பத்தோடு – இடம் பெயர்ந்து அகதிகளாக அலைவர்…

விவரங்களுக்குள் போகும் முன் அதிகாரபூர்வமான
சில வரைபடங்கள் உங்கள் பார்வைக்கு –

india-tamilnadu (1)

mannargudi-block

( தொடர்கிறது – பகுதி -2-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மந்திரிக்கு தெரியாதா இது எப்பேற்பட்ட மோசடித் திட்டமென்று …?

 1. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். முதலில் இந்த திட்டத்திற்கு கையெழுத்து போட்டு தொடங்கி வைத்த புண்ணியவானை தஞ்சை மாவட்ட மக்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது பண்ண முடியுமா? என்று பார்க்கச் சொல்ல வேண்டும். புரியும் என்று நினைக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஆமாம் ஜோதிஜி.

   டெல்டா மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
   தமிழ்நாடு அரசு தற்காலிகமாகத் தடை போட்டு
   வைத்திருப்பதால் விஷயம் கொஞ்சம் மெதுவாகப்
   போகிறது.
   ஆனால் இந்தக் கதையை முற்றிலுமாக முடித்து
   வைக்காத வரையில் மக்களுக்கு நிம்மதி இல்லை.
   அமைச்சர் பேசுகிற போக்கைப் பார்த்தால் –
   இந்த அரசும் திட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் போல்
   இருக்கிறது…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    // அமைச்சர் பேசுகிற போக்கைப் பார்த்தால் –
    இந்த அரசும் திட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் போல்
    இருக்கிறது…!!! //

    தலைசொல்லாமல் வால் ஆடமுடியுமா?

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  ஏறக்குறைய ஒரு வருடம் முன்பு உங்களது பின்னுட்டத்தில் இது குறித்து எழுத குறிப்பிட்டிருந்தேன். அப்போது, ஐயா நம்மாழ்வார் அவர்கள் முதல் போராளியாக போராட்ட களத்தில் இருந்தார்கள். நிறைய எண்ணங்களை மனதில் தாங்கி இருந்தார்கள், மண், இனம் என அனைத்தும் பாழாகி விடுமே என்று ஒவ்வொரு கணமும் சிந்தித்தார்கள். ஒரு மாத கால போராட்டம், போராட்ட களத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

  இந்த மந்திரி பக்கத்து மாநிலத்தில் பாதிப்பு என்றால் துடித்திருப்பார். தமிழன் தானே, தமிழ்நாடு தானே…நமக்கென்ன கவலை….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கன்யாகுமரி – கேரளாவுடன் போயிருக்க வேண்டும்
   என்று சொன்னவர் தானே ..!

   அவர் பேசுவது இந்த மாநிலத்து ஆசாமி பேசுவது
   போலவே இல்லை பாருங்கள்.

   இனி தான் நன்மையா-தீமையா என்று இவர்கள்
   ஆராய்ச்சி செய்ய வேண்டுமாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   // போராட்ட களத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.//
   போராடுபவர் போய்விட்டார் அல்லவா? இருப்பவர்களை போராட விடாமல் செய்ய ஏதாவது போடுவார்கள்.

   அவர் நமது மாநிலத்தில் இருந்து எம்பி ஆகப் போகவில்லை, கன்னியாகுமரியிலிருந்துதான் போயிருக்கிறார். என்ன? கன்னியாகுமரி தமிழ்நாட்டில் இருக்கிறதா? அவர் கேரளாவில் என்றல்லவா சொல்கிறார்.

 3. Siva சொல்கிறார்:

  We must stop this project because we can live without methane gas, but not without rice. If the farmers are willing to accept this project ( becuase they think that it is profitable than agriculture), we have to get the full strategies on how they plan to take gas without affecting the agriculture. We really need an expert group to read the plan.
  It’s high time for Tamil nadu leaders unite together and work for farmers. I know the agriculture is becoming a least preferred job among farmers, but it is going to be the important job after 15-20 years because we need sufficient food source by tha time. Industries can give pleasure in life, but agriculture is the one will give life to human life. We cannot import foods for our large population as other country does for small population. Again, we are not rich with a lot of earth-bound resources, so we have to depend on Mother Earth for agriculture.
  KM sir, do you know any information that we can submit an e-petition to UN organization, Indian president, Indian PM and other organization to explain the positive and negatives of this plan.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சிவா,

   இந்த போக்கை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க
   மாட்டார்கள். விவசாயிகள் யாரும் இதற்குத் தயாரில்லை.

   புதிய மத்திய அரசு இன்னும் தன் நிலையைத் தெரிவிக்காததாலும் –
   தமிழ்நாடு அரசு தற்காலிகத் தடை விதித்திருப்பதாலும் –
   விஷயம் கொஞ்சம் சூடு தணிந்திருக்கிறது.

   மீத்தேன் எடுக்கும் முயற்சிகள் கைவிடப்படவில்லை என்றால் –
   மத்திய அரசுக்கு எதிராக பெரும் அளவில் எதிர்ப்புகள் கிளம்பும்.

   இப்போது இந்த இடுகையை எழுதுவதற்கான அடிப்படை –
   மந்திரி ஏனோ-தானோ என்று பேசியது தான்.
   டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில்
   அவர் பேசி இருக்க வேண்டும் – முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    // மந்திரி ஏனோ-தானோ என்று பேசியது தான்.
    டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில்
    அவர் பேசி இருக்க வேண்டும் – முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும். //

    தேர்தலுக்குமுன் பேசியவர்கள் இப்போது பேசாமல் இருப்பதும்,
    தேர்தலுக்குமுன் பேசாதவர்கள் இப்போது பேசுவதும்
    தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.
    இரண்டின் பின்னணியிலுமே மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  களத்தில் இருக்கும் சில நண்பர்களின் பதிவுகள்.

  “இளைஞர்கள் நாம் கைகோர்ப்போம்”
  கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நம் “நாணல் நண்பர்கள்” மற்றும் “தமிழ் மாணவர்கள் இயக்கம்” இணைந்து நிகழ்த்திய *மீத்தேன் திட்டமும், நில கையகப்படுத்தும் அவசர சட்டமும்* குறித்த கருத்தரங்கில் தோழர் மீ.த.பாண்டியன், சிவரகோட்டை ராமலிங்கம் அய்யா மற்றும் தோழர் வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர் நிகழ்வை (என் நெஞ்சுக்கு நெருக்கமான மிக உறுதியான போராளி) தோழர் தமிழ்தாசன் துவக்கிவைத்தார் பின்னர் மிகச் சீராக நிகழ்வின் இறுதிவரை தோழர்.பூபதி ஒருங்கிணைத்தார், நிகழ்வின் இறுதியில் “மே 17” இயக்கத்தினர் வெளியிட்டிருந்த *மீத்தேன்* ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் அரங்கமே உறைந்து
  போயிருந்தது.. இம்முறை நாணல் புதராக அல்லாமல் காடாக மாறியிருந்தது ஆம் அரங்கு முழுக்க இளைஞர்கள்களால் , கல்லூரி மாணவ மாணவிகளால், பெண்களால் நிரம்பியிருந்தது.
  தோழர் தமிழ்தாசன் தலைமையுரையாற்றினார், மிகச் சரியான இத்தருணத்தில் *மீத்தேன் திட்டமும், நில கையகப்படுத்தும் அவசர சட்டமும்* பற்றிய. இக் கருத்தரங்கிற்கான அவசியம் ஏன்? நோக்கம் என்ன? என்று விளக்கியவர், -> காவேரி, மீத்தேன், நியூட்ரினோ என்றால் மட்டும் அது விவசாயிகளுக்கான பிரச்சனை? நாளை விவசாயிகளே இல்லையென்றால் அது யாருக்கான பிரச்சனை? என்ற கனத்த கேள்வியோடு நிகழ்வை துவக்கிவைத்தார்.. .
  தோழர் மீ.த.பாண்டியன் அவர்கள் “நில கையகப்படுத்தும் அவசர சட்டம்” குறித்தும் இன்றைய அரசியல் நிலைபாடு மற்றும் சூழலியல் குறித்தும் மிக ஆழமான கருத்துக்களை எளிமையாக எடுத்துரைத்தார்.
  தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பிலிருந்து தோழர் வரதராஜன் கலந்துகொண்டு மீத்தேன்திட்டத்தின் கொடுரங்கள் மற்றும் டெல்டா மக்களின் உறுதியான போரட்ட எழுச்சி நிலை பற்றியும் மக்களுக்கெதிரான அரசாழ்பவர்களின் சூழ்ச்சிகளை குறித்தும் விளக்கினார்.
  நிகழ்வில் மிக முக்கியமாக “சூழலியல் போராளி” விவசாயி *சிவரகோட்டை ராமலிங்கம்* அய்யா தன் பாமரத் தமிழில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் சூறையாடப்பட்ட இயற்கை வளங்களின் மதிப்பு மற்றும் அதனால் மக்களின் வாழ்வாதரங்களில் ஏற்பட்ட கேடுகள் , சூழலியலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த. ஆதங்கத்தையும் , தன் போராட்ட கள அனுபவங்களையும் விவசாயிகளிடமிருந்து அரசியல் பிழைப்புவாத அரக்கர்களால் கொளளையடிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அரசாங்க பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து சூறையாடிய அதிகார வர்க்கத்தை வறுத்தெடுத்தார், பன்னாட்டு நிறுவனங்களின் பயங்கரவாதத்தை பட்டியலிட்ட அந்த பாமரத் தமிழனின் விழிகள் . சத்தியத்தை தாங்கியிருந்தது அவரது உ கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நம் “நாணல் நண்பர்கள்” மற்றும் “தமிழ் மாணவர்கள் இயக்கம்” இணைந்து நிகழ்த்திய *மீத்தேன் திட்டமும், நில கையகப்படுத்தும் அவசர சட்டமும்* குறித்த கருத்தரங்கில் தோழர் மீ.த.பாண்டியன், சிவரகோட்டை ராமலிங்கம் அய்யா மற்றும் தோழர் வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர் நிகழ்வை (என் நெஞ்சுக்கு நெருக்கமான மிக உறுதியான போராளி) தோழர் தமிழ்தாசன் துவக்கிவைத்தார் பின்னர் மிகச் சீராக நிகழ்வின் இறுதிவரை தோழர்.பூபதி ஒருங்கிணைத்தார், நிகழ்வின் இறுதியில் “மே 17” இயக்கத்தினர் வெளியிட்டிருந்த *மீத்தேன்* ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் அரங்கமே உறைந்து
  போயிருந்தது.. இம்முறை நாணல் புதராக அல்லாமல் காடாக மாறியிருந்தது ஆம் அரங்கு முழுக்க இளைஞர்கள்களால் , கல்லூரி மாணவ மாணவிகளால், பெண்களால் நிரம்பியிருந்தது.
  தோழர் தமிழ்தாசன் தலைமையுரையாற்றினார், மிகச் சரியான இத்தருணத்தில் *மீத்தேன் திட்டமும், நில கையகப்படுத்தும் அவசர சட்டமும்* பற்றிய. இக் கருத்தரங்கிற்கான அவசியம் ஏன்? நோக்கம் என்ன? என்று விளக்கியவர், -> காவேரி, மீத்தேன், நியூட்ரினோ என்றால் மட்டும் அது விவசாயிகளுக்கான பிரச்சனை? நாளை விவசாயிகளே இல்லையென்றால் அது யாருக்கான பிரச்சனை? என்ற கனத்த கேள்வியோடு நிகழ்வை துவக்கிவைத்தார்.. .
  தோழர் மீ.த.பாண்டியன் அவர்கள் “நில கையகப்படுத்தும் அவசர சட்டம்” குறித்தும் இன்றைய அரசியல் நிலைபாடு மற்றும் சூழலியல் குறித்தும் மிக ஆழமான கருத்துக்களை எளிமையாக எடுத்துரைத்தார்.
  தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பிலிருந்து தோழர் வரதராஜன் கலந்துகொண்டு மீத்தேன்திட்டத்தின் கொடுரங்கள் மற்றும் டெல்டா மக்களின் உறுதியான போரட்ட எழுச்சி நிலை பற்றியும் மக்களுக்கெதிரான அரசாழ்பவர்களின் சூழ்ச்சிகளை குறித்தும் விளக்கினார்.
  நிகழ்வில் மிக முக்கியமாக “சூழலியல் போராளி” விவசாயி *சிவரகோட்டை ராமலிங்கம்* அய்யா தன் பாமரத் தமிழில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் சூறையாடப்பட்ட இயற்கை வளங்களின் மதிப்பு மற்றும் அதனால் மக்களின் வாழ்வாதரங்களில் ஏற்பட்ட கேடுகள் , சூழலியலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த. ஆதங்கத்தையும் , தன் போராட்ட கள அனுபவங்களையும் விவசாயிகளிடமிருந்து அரசியல் பிழைப்புவாத அரக்கர்களால் கொளளையடிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அரசாங்க பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து சூறையாடிய அதிகார வர்க்கத்தை வறுத்தெடுத்தார், பன்னாட்டு நிறுவனங்களின் பயங்கரவாதத்தை பட்டியலிட்ட அந்த பாமரத் தமிழனின் விழிகள் சத்தியத்தை தாங்கியிருந்தது.. அவரது உரையின் போது மதுரையின் சங்ககால நிலவியல் அமைப்பு தொடங்கி ஒவ்வொரு ஏரி, கண்மாய், குளங்களுக்கான வரலாற்று காரணங்களுடன் விவரிக்கிறார் அதுமட்டுமின்றி அதனை தற்போது யார்யாரெல்லாம் எவ்வாறு கையகப்படுத்தியுள்ளனர் அதற்காக தான் நடத்திய போராட்டம் மற்றும் வழக்கு விவரங்களை விரல் நுனியில் வைத்துள்ளார். விவசாயத்திற்கு உகந்ததில்லை என்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ராட்சத தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தும் நிலங்களில் நிலங்களை ஒட்டியும் சமீபத்தில் பயிறிடப்பட்ட தானியம், பயறு, நெல் போன்றவற்றை ஆவணப்படுத்திய அட்டை மற்றும் ஆவணங்கள் நிறைந்த தன் கைப்பையோடு வளம் வருகிறார் இந்த சத்தியவாண் .
  எதற்கும் எவனுக்கும் அஞ்சாத இவரது தீரம் இயற்கையின் மீதான தனது காதல் அவரோடு என்னை சரணடைய செய்தது.. உயர்திரு.சகாயம் அவர்கள் இவரது உறுதியான போரட்டங்களுக்கிடையே இவருக்கிருகும் உயிர் அச்சுருத்தல் காரணமாக துப்பாக்கி ஏந்திய காவலரை பாதுகாப்பதிகாரியிகாரியை நியமித்தார். தற்போது “ஆனந்த விகடனின்” தற்போது 2014 ஆண்டுக்கான சிறந்த பத்து மனிதர்களில் ஒருவராக கௌரவிக்கப் பட்டார்.
  இளைஞர்கள் மற்றும் சூழலியல் ஆர்வளர்களல் பாதுகாக்கப்பட்டு பின்பற்ற பட வேண்டியவர் “சிவரகோட்டை ராமலிங்கம்
  அய்யா. எனவே மதுரையில் இவரது முயற்சியால் மீட்கப்பட்டு காக்கப்பட்டு வளர்தெடுக்பட்ட ஏரி , கண்மாய் , காடு அதனால் ஏற்பட்ட பன்மய உயிர்சூழளை காணவும் அய்யாவின் கரங்களை வழுபடுத்தி போராட்ட களங்களை விரிவுபடுத்தவும் இளைஞர்கள் நாம் கைகோர்ப்போம்.. தொடர்புக்கு : 8608266088
  நிகழ்வின் இறுதியில் நன்றியுரை நிகழ்த்த எதிர்பாரத விதமாக வெற்றிமாறன் என என் பெயர் வாசிக்கப்பட்டது.. மீத்தேன் ஆவணப் படத்தின் தாக்கத்தில் இருந்தவன் அதே கனத்த மனதோடு நிகழ்வில் கலந்துகொண்ட சான்றோர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்… நன்றி…..

  • Siva சொல்கிறார்:

   Nambikkai natchatthirangal irrukkiraargal! Good to see the real world action-oriented people!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் புது வசந்தம் ( உங்களை அழைக்க ஏதுவாக ஒரு பெயர் கொடுங்களேன் …),

   நீங்கள் அறிமுகம் செய்து வைத்த நண்பர்கள் மற்றும்
   செய்திகளுக்காக நன்றி. உணர்ச்சி மிக்க தமிழர்கள் நிறைய பேர்
   இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒருங்கிணைத்து
   நடத்திச் செல்லத்தான் சரியான தலைமை இல்லை. ஓட்டு, மற்றும்
   பதவிகளை எதிர்பார்த்து அரசியல் செய்பவர்கள் இதற்கு
   லாயக்கு இல்லை….அவர்கள் எப்போது வேண்டுமானாலும்
   திசை மாறுவாகள்.

   ‘மீத்தேன்” ஆவணப்படம் மற்றும் சிவரக் கோட்டை ராமலிங்கம் அய்யா
   அவர்களின் உரை ஆகியவற்றை இங்கு பதிவிட வாய்ப்பு, வசதி
   இருக்கிறதா …? ( எனக்கு அனுப்பி வைத்தால், நான் அவற்றை
   இந்த தளத்தில் பதிவிடுகிறேன்…)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.