“ஜல்லிக்கட்டு” மேற்கத்திய கலாச்சாரம் தானே ….!!!???

jallikattu-2

jallikattu-3

 

 

ஜல்லிக்கட்டு தடை காரணமாக ஏற்கெனவே தென் தமிழகம்
கொதிப்பில் இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம்
போட்டிருக்கும் மனு இன்னும் விசாரணைக்கே வரவில்லை.
( நம்ம ஊர் ஜாதகத்தின்படி அடுத்த பொங்கலுக்கு முன்
வந்தாலே அதிசயம் தான்….)

மத்திய அரசு நினைத்தால், நொடியில் இதற்கு விடை காணலாம்.
எப்படி ? – கீழே செய்தியைப் பாருங்களேன் –

————-

விலங்குகளை, காட்சிப்படுத்த தடை விதிக்கும் அரசாணையில்,
சிங்கம், புலி, கரடி, குரங்கு ஆகியவற்றோடு, காளைகளையும்
சேர்த்து, மத்திய அரசு, 2011ல் ஒரு அரசாணை வெளியிட்டது.
இதை அடிப்படையாகக் கொண்டு, ஜல்லிக்கட்டு நடத்த,
உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு மே மாதம் தடை விதித்தது.

நீதிமன்ற தடையை மறு ஆய்வுக்கு உட்படுத்த, தமிழக அரசு,
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு
பேரவை ஆகியவை, தனித்தனி மனுக்களை, உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், விலங்குகளை
காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில் இருந்து, காளையை
நீக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு
உள்ளது.

இதற்காக, டில்லி சென்றுள்ள தமிழக அரசு அதிகாரிகள்,
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக செயலர்
கெம்பாண்டேவுடன், நேற்று ஆலோசனை நடத்தினர்.
‘பட்டியலில் இருந்து, காளையை விடுவித்தால், சுப்ரீம்கோர்ட்
உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்து,
மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த முடியும்’ என, தமிழக அரசு
வலியுறுத்தி உள்ளது… மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்
பாதுகாப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம், ஜல்லிக்கட்டு
பிரச்னை குறித்து கேட்ட போது, ‘விரைவில், இப்பிரச்னைக்கு
தீர்வு காணப்படும்’ என, பதிலளித்தார்.

—————————-

நேற்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் –

ஜல்லிக்கட்டு தடையை விலக்க தான் ஏற்பாடு
செய்து விட்டதாகவும், விரைவில் அனுமதி
கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்.

நேற்றிரவு தொலைக்காட்சியில் வெளிவந்த செய்தியில்,
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

தயக்கம் காட்டுவதால், பிரச்சினையில் எந்த முன்னேற்றமும்
இல்லை என்று கூறப்பட்டது.

இன்று ( 17/01/2015 ) பகல் உத்திர பிரதேசத்தில், லக்னோவில்
( ஒரு அரை இந்தியரை திருமணம் செய்துகொண்ட ) –
மத்திய அமைச்சர் மேனகா அளித்த பேட்டியில் கூறுகிறார் –

” ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய கலாச்சாரம்.
ஜல்லிக்கட்டில் மாடுகள் மட்டுமல்லாது மனிதர்களும்
கொல்லப்படுகிறார்கள்.

பாஜக ஒருபோதும் இதை
ஏற்றுக் கொள்ளாது.

ஜல்லிக்கட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பது
வரவேற்கதக்கது ”

—————–

திருமதி மேனகா விற்கும், இதை கையாளும் மத்திய
அமைச்சகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால், அவர் – பாஜக ஜல்லிக்கட்டை ஒரு போதும்
அனுமதிக்காது என்கிறார். அதாவது, தமிழ்நாடு குறித்த
ஒரு முக்கியமான விஷயத்தில் – பாஜக வின்
கொள்கை முடிவை அவர் லக்னோவில் இன்று அறிவிக்கிறார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரோ விரைவில்
இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் – என்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் – தான் ஏற்கெனவே
இதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டதாகக் கூறுகிறார்.

பாஜக வில் யார் கொள்கை முடிவுகளை எடுக்கிறார்கள்
என்றே புரியவில்லை. பாஜக வின் சார்பாக யார் யார்
பேச முடியும் என்பதும் புரியவில்லை.

நம்மைப் பொருத்த வரையில்,
தமிழகத்தைப் பொருத்த வரையில் –
தற்போதைக்கு all powerfull person (!) பாஜக தலைவர் –
திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் தானே ….?

அவர் தயவுசெய்து திருவாய் திறந்து செப்ப வேண்டும் –

“ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடா அல்லது
மேற்கத்திய கலாச்சாரமா …?
பாஜக ஜல்லிக்கட்டு நடக்க உதவுமா அல்லது
தொடர்ந்து தடை நீடிக்க செயல் படுமா ?”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to “ஜல்லிக்கட்டு” மேற்கத்திய கலாச்சாரம் தானே ….!!!???

 1. seshadri சொல்கிறார்:

  Dear Sir

  I am waiting for your view on this. you are the real sensible thinking person.
  we are keeping cows and bulls for milk and agri purpose in our form so many years.
  really bulls are not capable for running. it cannot be used for game shows. if they same time they used horses for this purpose all the people will get good hit by it leg and they cannot play like this.

  Pain is pain for everybody. without getting NOC – no objection certificate from “bulls” how we can play like this.

  supporters are saying this their old culture, in our old culture early marriage , sathi like lot items was listed but now we come across all the idiots why we cannot skip this bull punishing.

  if they really need enjoyment , they can run instead of them self (their family) others can follow/catch.

  we don’t have any objection. even we are not supporting rekla races.

  ஜல்லிக்கட்டிற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பது
  வரவேற்கதக்கது ”

  Seshan/dubai

  • இளந்திரையன் சொல்கிறார்:

   தோழர் துபாய் சேஷன்

   தமிழர் பண்பாடு என்றால் உங்களுக்கு அவ்வளவு நக்கலா ? துபாயிலிருந்து பேசினால் இப்படித்தான் பேசுவீர்கள்.
   இங்கே மதுரைப்பக்கம் வந்து மக்களைக் கொஞ்சம் பார்த்து விட்டு இதையே சொல்லுங்கள்; முடிகிறதா பார்க்கலாம்.
   பிஜேபி காரர்களுக்கு இப்போதெல்லாம் கால் தரையில் பதிவதே இல்லை. மோடிக்கு அடிக்கிற காற்றில் பறந்து கொண்டே
   இருக்கிறீர்கள். இந்த காற்று கொஞ்ச நாட்களில் நிற்கும். மக்கள் உங்களை துரத்துவார்கள். நீங்கள் ஓட வேண்டியிருக்கும்.
   உங்கள் கொள்கையில் நம்பிக்கை இருந்தால்
   உங்கள் டாக்டர் அக்காவை இதே வார்த்தைகளை சொல்லச் சொல்லுங்களேன். ஏன் தயங்குகிறார்கள் ?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் இளந்திரையன்,

    துடிப்பாகச் செயல்படுகிறீர்கள் – இளம் வயதோ …?
    கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லது அநுதாபியோ…?

    எப்படி இருந்தாலும் சரி. நாகரிகமாகவும்,
    கருத்துடனும் எழுதுங்கள். நிச்சயம் உங்கள் எழுத்து
    வரவேற்கப்படும்.

    -மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சேஷன்,

   தீவிர பாஜக அன்பர்களிடம் நான் விவாதம் செய்வதில்
   பயன் ஏதுமில்லை. நான் சொல்வதை அவர்கள்
   கருத்தில் கொள்ள மாட்டார்கள்.

   நீங்கள் திறந்த மனதுடன் படிப்பதாக
   இருந்தால் இரண்டொரு வார்த்தைகள் –

   உங்கள் அக்கறை காளைகள்/ பிராணிகள் மீது என்றால் –

   முதலில் – மீன், ஆடு, கோழி, மாமிசம்
   சாப்பிடுவதை நிறுத்துங்கள். உங்கள் மத்திய அரசிடம்
   சொல்லி இந்தியா முழுவதும் உணவிற்காக பிராணிகளை
   கொல்வது தடை செய்யப்படுகிறது என்று உத்திரவு
   போடச்சொல்லுங்கள் பார்ப்போம்.

   ஜல்லிக்கட்டிற்காக காளைகளை வதைக்கிறார்கள்
   என்று சொல்வது அபத்தம். அவற்றை ஆண்டு முழுவதும்
   விசேஷமாக உணவு கொடுத்து, பழக்கப்படுத்தி –
   அன்பாகவும், பெருமையாகவும் வளர்க்கிறார்கள்
   என்பது தான் உண்மை.

   அதனால் – மனிதர்களுக்கு ஆபத்து என்று சொல்வீர்களானால் –
   சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே அதற்கான வழிவகைகளை –
   30 வித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பார்வையாளர்கள்
   பத்திரமாக இருப்பார்கள். விரும்பி விளையாட்டில் பங்கேற்பவர்கள்
   மட்டுமே களத்தில் இருப்பார்கள்.

   வீர, சாகச விளையாட்டில் – ஆபத்து இருக்கத்தான் செய்யும்.
   ஏன் கார் ரேசில் இல்லையா ? அதற்குத் தயாராக இருப்பவர்கள்
   தான் விரும்பி போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.

   3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் இந்த பழக்கம்
   இருந்தது என்பதற்கான ஆதாரங்களை நண்பர் today.and.me
   கீழே கொடுத்திருக்கிறார். திருமதி மேனகா விற்கு
   இப்போது ஏற்பட்டிருக்கும் ‘மேற்கத்திய கலாச்சாரம்” பற்றிய
   உணர்வும், அறிவும் – அவரது இளம் வயதிலேயே –
   திருமணத்திற்கு முன்னதாகவே இருந்திருந்தால் அது அவருக்கு
   உதவியாக இருந்திருக்கும்.

   ———-

   மீத்தேன் வாயு குறித்து – now the ball is on Centre’s Court…
   தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்கவும், அறிவிக்கவும்
   வேண்டியது மத்திய அரசு தான்.

   அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை
   தமிழக மக்கள் முடிவு செய்வார்கள்….!!!
   அதே நிலையை தமிழக அரசும் மேற்கொள்ளும்.

   —————-

   இன்னொரு விஷயம் – நீங்கள் சொல்வது தான் பாஜக வின்
   நிலைப்பாடு என்றால் – அதை தைரியமாக, வெளிப்படையாக,
   அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டியது தானே …?
   ஏன் இந்த வழ வழா – கொழ கொழா ….???

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. seshadri சொல்கிறார்:

  இதற்காக, டில்லி சென்றுள்ள தமிழக அரசு அதிகாரிகள்,
  மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக செயலர்
  கெம்பாண்டேவுடன், நேற்று ஆலோசனை நடத்தினர்.

  for methane – pipe line problem they are not take any series action…….for the enjoyment purpose they are doing. good show…

  our TN govt is capable of Tasmac and like these unwanted items only……no useful project….

  • இளந்திரையன் சொல்கிறார்:

   தோழர் சேஷன்,

   சப்பக்கட்டு கட்டாமல் மீத்தேன் வாயு பற்றி
   உங்கள் மத்திய மந்தி(ரி) நிலை என்ன ? அதை முதலில்
   சொல்லுங்கள். தமிழ்நாடு அரசு தான் குழாய் போடுவதை
   தடை செய்து விட்டதே.

 3. today.and.me சொல்கிறார்:

  ‘இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
  மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
  மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
  கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
  வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
  நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை’
  (மலைபடுகடாம் 330-335)

  மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இம்
  முல்லையம் பூங்குழல் தான்
  (சிலப்பதிகாரம், ஆய்ச்சி. கொளு.3)

  கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை
  மறுமையும் புல்லாளே,ஆயமகள்
  (கலித்தொகை, முல்லை.103 63-64)

  “நாச்சங்காளை வடம் வெட்டிக் கனபாய்ச்சல் காட்டும் பரையெல்லாம்
  சிம்புமெருது வடந்தொட்டி ருந்துக் கொம்புபிடித்து விளையாடி”
  (கண்ணுடையம்மன் பள்ளு, 54)

  “மதயானை முதற்பிடிக்க வல்லாய் – இந்த
  மாட்டுக்கு மாட்டாமல் போன தென்ன சொல்வாய்
  (முக்கூடற்பள்ளு)

  உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
  புரிய புரிய புகுந்தனர் தொழூவு
  (கலித்தொகை,104-16,17)

  நோக்கஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக் கோட்டிடைக் கொண்டு
  குலைப்பதன் தோற்றம் காண்
  (கலித்தொகை)

  எழுந்தது துகள்
  எற்றது மார்பு
  கவிழ்ந்தன மருப்பு
  கலங்கினர் பலர்
  (கலித்தொகை)

  திருமதி மேனகா காந்தி அவர்களின் ‘சல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம்’ என்ற செய்தியை வெளியிட்ட தி இந்து-வே இன்னொரு செய்தியை கொஞ்சக்காலத்துக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதையும் இங்கே ஆதாரமாகக் கொடுக்கிறேன்.

  Bull chasing, an ancient Tamil tradition

  http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article1179359.ece

  A painting of bull chasing on a massive rock surface at Karikkiyur in the Nilgiris. These pictures, according to specialists in rock art, are dateable to 2,000 B.C. to 1,500 B.C. Karikkiyur is the biggest rock art site in south India, with the rock surface teeming with about 500 paintings.
  ————————
  மஞ்சுவிரட்டு/ஏறுதழுவுதலை அனுமதிக்கிறார்களோ தடுக்கிறார்களோ அது நீதிமன்றத்தின் வாயிலில் இருப்பதால் கருத்து ஒன்றும் சொல்லமாட்டேன்.

  ஆனால், எப்போதிருந்து மலைபடுகடாமும் சிலப்பதிகாரமும், கண்ணுடையம்மள் பள்ளுவும் முக்கூடற்பள்ளுவும் கலித்தொகையும் western culture ஆக மாறியது என்று தமிழுக்காக நேர்ந்துவிட்ட பாஜக எம்பியும் தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் அவர்களும், தமிழக ஏறுகளைக் குறித்து கவலைகொள்ளும் மேனகாகாந்தி அவர்களும் சிறிது விளக்கினால் தேவலை.

  தமிழ்நாடு, தமிழர்கள், தமிழ் இவற்றைக்குறித்து மத்திய பாஜக அரசின் நிலைப்பாடு கொள்கை எல்லாம் தமிழக பாஜகவினருக்குத் தெரியவே தெரியாது. பின் எங்கே திருவாய் திறந்து செப்ப?

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் todayandme,

  அருமை. பிரமாதம். simply superb.
  எவ்வளவு அழகழகான எடுத்துக்காட்டுகளை அள்ளி அள்ளி
  வீசி இருக்கிறீர்கள்….!!!

  படிக்கவே அவ்வளவு அழகாக இருக்கின்றது
  நீங்கள் கொடுத்துள்ள தமிழ்….! பொருள் தனி …

  உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

  எங்கேயோ லக்னோவில் உட்கார்ந்துகொண்டு
  அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்கள் எல்லாம்
  நமக்கு மந்திரிகள்….. என்ன செய்வது… நாம் செய்த பாவம்…!

  தமிழ்நாட்டைப் பற்றி இவர்கள் அறிந்தது இவ்வளவு தான்.
  நம் துரதிருஷ்டம் – இவர்கள் சொல்லி நாம் கேட்க
  வேண்டி இருக்கிறது.
  இந்த அம்மணியால் தான் நம் குழந்தைகள் எல்லாம்
  தெருநாய்க்கடியை நினைத்து தினம் தினம்
  பயந்து நடுங்குகின்றன. தெருவில் போகவே பயப்படுகின்றன.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. Seshan சொல்கிறார்:

  Dear friends

  1. I am not supporter of bjp . Simple agri based family person. Due to water problem , poor cultivation forced to land in gulf countries.

  2. Why we have to follow b.c period now. Simple question Bulls are capable of hard work not like 50 people jumping and powerful dosage of food for making more anger.

  3. If you dare you can face lion or tiger like Ancient Greek .

  4. Are you dare to meet like one to one . We can’t.

  5. Methane project should be avoid very danger to agri life.but iam fear about one more kodankular protest went on vain.

  SESHAN / dubai

  • Siva சொல்கிறார்:

   You are contradicting with yourself. First have a clear thought process within you. You ask for stopping the practice of b.c. period, but you are challenging to do the same old practice of lion fighting. There is a scientific debate whether lion existed in Europe during Greek period. Also, I do not know whether Ancient Greek men are powerful enough to fight with lion, but there is legendary that Tamil women had whisked away tigers with a simple muram. So it is clear that you are simply misinformed about everything on history.
   Although bull fight has been practiced in Tamil Nadu and other countries for centuries, it is the latest brahminical tactics/attempt to disparage the cultural values of Tamils. Nobody can simply yield to what you say that bull fight to be stopped. In my opinion, bull fighting is not as much burden to animals as compared to drought purpose ( meaning uzhavu, vandi izhuthal, etc.). In fact, Animals suffer a lot in drought jobs, but still we use it for our selfish purpose. The worst thing is stealing the milk from cows. You sacred (!) people feed the cow and steal the milk. Milk is really meant for its calf. Since cow produces more milk, we steal it. It’s more cruel than bull fight. If any family women does produce more milk than what her kids need, can you steal it? Animals are wild species, as humans are in thousands years back. We domesticated it for our self purpose. If you see only docile animals and those give more benefits to humans are domesticated. Others are not because we humans are selfish. That’s how they are domesticated. Otherwise they will be in wild. No one is going to kill the animals by trying to tame it in bull fighting. It is the way of enjoyment for people without harming too much. That’s how Tamil race has evolved. In fact, Tamils had no religion in 4000 years ago. Some of the practices are messed up by Religious outfits existed in olden days. In fact, old Hindu religion supports a mass killing of animals for gods sacrifice. It has happened recently in Nepal. It’s more cruesome than bull fight.
   In the world, only Tamil race is the human species has developed a practice to offer prayer and highly auspicious food to animals during pongal festivals. Tamils have a high regard for animals. If you show me any where in the globe, they celebrate a function for animals, then I will try to support you to stop bull fight.
   When I was a kid, every year, I take all our animals (cow, bull, goat and birds) to lake or river. We clean them very nicely. Apply colorful dots on body, color design in horns, beautiful maalai around the neck. The whole day we spend to make up the animal. In the evening, we do poojai to animals and offer a sweet pongal to them. Next day, we will take the animals to village temple, where they do again poojai and apply thiruneeru to the head of animals. Such a sacred practice we follow as a traditional culture. In my knowledge, I have never seen any practice to be followed any where in the world. As a part of this pongal celebration (one day for Suriyan who gives life in the earth; one day for animals who is part of farmers life and other day for enjoyment), we do not have problem in playing with bull that we grow with a lot of affection. No body else have right to comment on this.
   This drama is simply to subdue the cultural heritage of Tamils. Other than this purpose, nothing the benefit is behind in propaganda taken by someone else, who does not have any right to say on us.

 6. mathu சொல்கிறார்:

  இன்னாப்பா இது …
  டோமஸ்டிகேசன் ஆப் புல்ஸ் என்றால் என்ன?

  • Siva சொல்கிறார்:

   Hello, all animals (including human) are once lived in wild environment. As such, they have wild behaviors including humans. During the evolution process, a long long ago, human has realized the importance of some animals for his needs. So human has slowly brought some animals (it is debatable whether horse or sheep is a first domesticated animal) from wild and started to change thier wild behaviour (by taming) to live with him. This practice is called as domestication. That’s how we got some animals as our servants.

  • Siva சொல்கிறார்:

   Domestication of bulls means keeping/rearing/growing/breeding Bulls at your home. Veetil valarkkappadum mirugam!

 7. புது வசந்தம் சொல்கிறார்:

  நீங்கள் கேட்ட “‘மீத்தேன்” ஆவணப்படம் மற்றும் சிவரக் கோட்டை ராமலிங்கம் அய்யா அவர்களின் உரை” இரண்டையும் நண்பரிடம் கேட்டிருக்கிறேன். தந்து உதவுவார் என நம்புகிறேன்.


  நீங்கள், இந்த காணொளியை பார்த்திருக்கலாம். ஒருவேளை, உங்களுக்கு இது உதவும் என நம்புகிறேன். என்னை “அன்பு” என்று அழைக்கலாம்.

 8. இரா.பழனிக் குமார்,திண்டுக்கல் சொல்கிறார்:

  இந்த கிரிக்கெட் அப்படிங்கிறது சந்தேகமே இல்லாமல் மேற்கத்திய கலாச்சாரம்தான்.அதில் பந்து அடிபட்டு ஆட்டக் காரர்கள் அடிபட்டு சாகிறார்கள்.நடுவர்கள் சாகிறார்கள்.வருடத்தில் பாதி நாட்கள் இளைஞர்கள்,மாணவர்கள் அதை தொலைக்காட்சியில் பார்ப்பதிலே பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள்..
  அதை முதலில் தடை செய்து விட்டு ஜல்லிகட்டுக்கு வாங்க மேனகாம்மா, மற்றும் துபாய் பேர்வழிகள்.

 9. Ezhil சொல்கிறார்:

  மாடுகளை முற்றாக அழித்து விட்டால் தான் இரசாயன உரங்களையும், டிராக்டர் போன்ற இயந்திரங்களையும் விற்க முடியும். அப்படி இரசாயன உரம் போட்டால் தான் கான்சர் போன்ற கொடிய வியாதிகள் வரும். அப்படி வந்தால் தான் மருத்துகளையும், மருத்துவ உபகரங்களையும் விற்க முடியும். அதை விட மேலாக இன்னும் சில வருடங்களில் தமிழனுக்கு ஒரு கலாச்சாரம் இருந்தது என்பதையே கேள்வி குறியாக்கி விடலாம்…

 10. ராஜா சொல்கிறார்:

  தமிழர்களின் கலாச்சாரம் என்றாள் என்னவென்றே தெரியாத மேனகா காந்தி போன்ற அரைவேக்காடு மந்திகள் கருத்து சொல்லும் நிலைக்கு தமிழினம் வந்துவிடாதே என்று உள்ளம் குமுறுக்கிறது. மேலை நாட்டு கலாசாரம் என்று …. (அசிங்கமா வருது , முதல் பின்னூட்டம் என்பதால் கொஞ்சம் நாகரீகமா இருக்க வேண்டியதாக உள்ளது)

  “ஸ்பெயின் நாட்டில் காளைகளை சிறிய கூரிய அம்புகளால் அதன் கொண்டை பகுதியில் குத்தி குத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதை நினைவிழக்க செய்து கடைசியில் சாகடித்து அதன் பிறகு அதை வெட்டி சமைத்து விருந்து உண்பார்கள். ”

  அப்படியா , நாம் தமிழ்நாட்டில் காளைகளை நாம் செய்கிறோம், பசுவையும் காளையும் தெய்வமாக கும்பிடும் புனித மண் இது

  “ஜல்லிகட்டு” காளைகள் வளர்ப்போரிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் எப்படி அவைகளை பராமரிக்கிறார்கள் என்று தங்கள் பெற்ற குழந்தைகளை விட அதிக செல்லமாக பாசமாக வளர்ப்பார்கள்.

  ஒருமுறை இந்த மேனகாவை தமிழ்நாட்டுக்கு வந்து ஜல்லிக்கட்டையும் , அந்த காளைகள் வளர்ப்போரையும் நேரில் பார்க்க சொலுங்கள் அதன் பிறகு கருத்து சொல்லலாம்.

  ஏதோ வட இந்தியாவில் ரோட்டில் அனாதியாக திரியும் நாலு நாய்கள் , பூனைகளை எடுத்து வளர்த்துவிட்டால் என்னமோ .. தான் பிராணிகள் மேல் அதிக பாசம் இருப்பது போலவும் , மற்றவர்கள் எல்லாம் தினம் தினம் பிரியாணி சாப்பிடுவர்கள் என்றும் நினைக்கிறா போல

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.