கொண்டாடப்பட வேண்டிய இந்திய உளவாளி ……!!!

rajabakse-latest

பரபரப்பான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
ராஜபக்சே தோற்பதற்கான பின்னணியில் இருந்தவர்
ஒரு இந்திய உளவாளியாம் ( இந்திய உளவு நிறுவனமான
‘ரா’ வைச் சேர்ந்த, கொழும்பில் பணிபுரிந்து வந்த அதிகாரி ).

வேடிக்கை என்னவென்றால், இந்திய அரசுக்கே தெரியாமல்
அவர் இந்தப் பணியைச் செய்திருக்கிறார்…!!!

(இந்திய அரசு ராஜபக்சே வெற்றிபெற வேண்டும் என்று
விரும்பியது தெரிந்ததே …! )

இதன் பின்னணியில் வெளியாகி இருக்கும் தகவல்கள் –

ராஜபக்சேவுக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா,
எதிர்க்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கே, இப்போது
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி சிறிசேனா
ஆகியோரின் கூட்டணி உருவாக இந்த அதிகாரி தான்
முக்கிய காரணமாக இருந்தாராம்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக இருந்த ரனில்
விக்ரமசிங்கே- யிடம் தகுந்த முறையில் எடுத்துக் கூறி,
ஒருமித்த வேட்பாளராக ராஜபக்சே கட்சியின் சிறிசேனாவை
நிறுத்தினால் தான் வெற்றி கிட்டும் என்பதை ஏற்றுக்கொள்ளச்
செய்து – பலமுறை அவர்களை தனித்தனியே சந்தித்து
இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்று தற்போது
வெளிவந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன.

இந்த விஷயத்தை முன்னதாகவே தன் உளவுத்துறை மூலம்
தெரிந்து கொண்ட ராஜபக்சே டிசம்பர் மாதமே
– அதாவது தேர்தலுக்கு முன்னரே – இந்திய அரசிடம்,
இந்த ஒற்றரை இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு
கேட்டுக்கொண்டாராம். வழக்கம்போல், வெளியுறவுத்துறை
நிதானமாகச் செயல்பட்டிருக்கிறது. விளைவு – தேர்தல்கள்
முடிந்து சிறிசேனா வெற்றி பெற்ற பின், அந்த உளவாளி
சாவகாசமாக இடமாற்றம் செய்யபட்டிருக்கிறார்…!!!

(சாதாரணமாக உளவுத்துறை அதிகாரிகள்,
வெளியுறவுத்துறை அதிகாரிகள் என்று அறிவிக்கப்பட்டு,
சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தூதரக பாஸ்போர்ட்/விசாவில்
அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.)

இந்த செய்தி வெளிவந்தவுடன், இன்று மாலை
வெளியுறவுத்துறை – அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது
சர்வ சாதாரணமானது. இந்த அதிகாரி 3 வருடங்கள்
ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால், தற்போது இடமாற்றம்
செய்யப்பட்டிருக்கிறார் என்று –

அவசர அவசரமாக விடுமுறை தினமான இன்று மாலை
( ஞாயிறு )அறிவித்திருக்கிறது…!

ஆனால், பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை
எல்லாம் வெறும் வதந்தி என்று சொல்லி விட்டது…!!!
( இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
எந்த அரசாங்கம் தான் இந்த மாதிரி விஷயங்களை
எல்லாம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் …!)

இந்திய அரசாங்கத்துக்கும் தெரியாமல் –
இலங்கைக்கும், இலங்கைத்தமிழர்களுக்கும்,
ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கும்,
ஏன் -இந்தியாவுக்கும் கூடத்தான் –
நல்லது செய்த இந்த அதிகாரி –
நம்மால் கொண்டாடப்பட வேண்டியவர் …!!

ஆனால் அவர் யார்,
அவர் ஊரென்ன,
பேரென்ன என்பது தான் இப்போதைக்குத் தெரியவில்லை…!
பின்னர் என்றாவது தெரியாமலா போய் விடும் ……!!

அவர் யாராக இருந்தாலும் சரி –
உளவாளியே … நீவிர் நீடூழி வாழ்க….நலமுடன் வாழ்க …

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to கொண்டாடப்பட வேண்டிய இந்திய உளவாளி ……!!!

 1. lala சொல்கிறார்:

  இந்த கட்டுரையில் வெளிப்பட்டிருப்பது தங்களது அறியாமையா ? அல்லது அப்பாவித்தனமா ?

  எந்த சிங்கள தலைவர் பதவிக்கு வந்தாலும் அந்த தலைவரோடு  கூடிகுலாவுவதற்கு  இந்தய அரசு   தயாராகவே இருக்கும் .
  ஆனால் கடந்த தேர்தலின்போது மகிந்த வுக்கு எதிராக சந்திரிகா மூலம்  மைத்தியை வளைத்து ராஜபக் சவுக்கு  எதிராக களம் இறக்கியதில்  மேற்குலகநாடுகளுக்கும் அந்தநாடுகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு பங்கிருக்கிறது.

  காரணம் மகிந்தவின் அதிகப்படியான சீன உறவு .
  மகிந்த திருப்பதிக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி அளித்ததும் , மோடி மகிந்த வெல்வதற்கு  வாழ்த்துப்பா தெரிவித்ததும் , சல்மான் கானை அனுப்பி தேர்தல் பிரச்சாரம் எனும் காமடியை அரங்கேற்றியதும் இந்தியா தன் மீது சந்தேகம் வராமலிருப்பதற்காக ஆடிய நாடகங்களாகும்.

  • Ramachandran R. சொல்கிறார்:

   லாலா,

   அறியாமையா, அப்பாவித்தனமா என்று எங்கிருந்தோ
   திடீரென்று வந்து நீங்கள் கேட்கும் அளவில் இருப்பவர் அல்ல
   அய்யா காவிரிமைந்தன் அவர்கள்.

   தொடர்ந்து இந்த வலைத்தளத்தைப் படித்து வந்திருந்தால்
   அவரது அனுபவமும், இலங்கை விஷயத்தில் அவரது
   நிலைப்பாடும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மைத்ரிபால சிறிசேன தமிழர்களுக்கு வெளிப்படையாக உதவி செய்ய மாட்டார், அப்படிச் செய்தால் அவர் பதவியில் நீடித்திருக்க
   முடியாது என்பதெல்லாம் ஏற்கெனவே இங்கே சொல்லப்பட்டிருப்பதை
   எல்லாம் நீங்கள் படிக்கவில்லையென்று தெரிகிறது.

   பதிலுக்கு வேறு யார் வந்தாலும் சரி, ராஜபக்சே தொலைய வேண்டும் என்பது தான் நமது தற்போதைய நிலை. உமக்கு அது ஏற்புடையதில்லை
   என்றால், அதைச் சொல்லி விட்டுப் போங்கள்.
   இந்திய அரசுக்கு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.அது நடுநிலையாக இருப்பதாகவே சொல்லி இருக்கலாம்.
   ஆனால், இந்தியப் பிரதமர் வெளிப்படையாகவே ராஜபக்சேக்கு
   தேர்தலில் வெற்றி கிடைக்க வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசு ராஜபக்சே மீண்டும் வரவே விரும்பியது;
   அதற்கு சுப்ரமணியன் சுவாமியும் முக்கிய காரணம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் லாலா,

   நீங்கள் சொல்வது போல், இந்திய அரசின் விருப்பப்படியே
   இது நடைபெற்றது என்று வைத்துக் கொண்டாலும் கூட,
   ( நமக்குப் பிடித்த ) தனக்கு கொடுக்கப்பட்ட இந்தப் பணியை
   செவ்வனே செய்து முடித்தமைக்காகவாவது –

   அந்த உளவுத்துறை அதிகாரி பாராட்டுக்கு உரியவர் தானே …?
   எனவே அதற்காகவாவது அவரைப் பாராட்டுவீர்களா …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    அன்பின் கா.மை.,
    தற்போதைய மத்திய அரசு இப்படியெல்லாம் சுத்திவளைத்து இலங்கையில் செய்யவேண்டிய அவசியம் லாலா கூறுவதுபோல வெறும் சீன உறவைக் கட்டுப்படுத்தும் செயல்மட்டும்தானா? அல்லது தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் செயலா?

    இரண்டாவது என்றால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க இவ்வளவு தூரம் சிந்தித்து செயல்படுகிறார்கள் என்றால் வேறு நன்மைகளும் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாமா?

    அல்லது இந்த நிகழ்வை வெறுமனே சுவாமியின் சாகசங்கள் பட்டியலில் சேர்ந்துவிடவேண்டுமா?
    சுவாமிவேறு நேற்றைக்கே பிரதமருக்கு ஒரு ஆர்டர் ட்வீட்டியிருக்கிறார்,
    “Namo should order a high level probe into the Sri Lankan charge that Indian Raw and HC colluded with US to get Rajapaksha defeated.”

    🙂 🙂

    இன்றைக்குத் தத்துவம் வேறு,
    “A task in Kaliyug is to distinguish between Rajtantra and Rajshadyantra. Kingdoms topple on this. Shakuni did not know this but Krishna did.”
    சுவாமி குறிப்பிடும் கிருஷ்ணா, சுவாமியா? நமோவா?

 2. LVISS சொல்கிறார்:

  Doesnt quite add up- Rajapakshe was cosying upto China which made India uncomfortable –So why would India want Rajapakshe to win- —

 3. today.and.me சொல்கிறார்:

  நண்பர் லாலா,

  // தங்களது அறியாமையா ? அல்லது அப்பாவித்தனமா ? //
  இருக்கலாம். அறியாமையோ அப்பாவித்தனமோ. இந்தக் கட்டுரை குறித்த தங்கள் கருத்தில் தங்களுடைய அறிவுடைமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா ? இருந்தால் குறிப்பிடுங்களேன், அனைவரும் அறிந்துகொள்ள.

  // எந்த சிங்கள தலைவர் பதவிக்கு வந்தாலும் அந்த தலைவரோடு கூடிகுலாவுவதற்கு இந்தய அரசு தயாராகவே இருக்கும் .//
  உண்மைதான். ஆனால் சிங்கள தலைவர் என்று இல்லை, யார் தலைவராக பதவியேற்றாலும் இந்த அரசு தயாராகவே இருக்கும், இருந்தாகவேண்டும். அது மைத்ரிபால அவர்கள் வெற்றிபெற்றவுடனேயே வாழ்த்துத் தெரிவித்தபோதே உறுதியாயிற்று.

  // இந்தியாவுக்கு பங்கிருக்கிறது.// நீங்கள் மோடி அபிமானி என்று தெரிகிறது. எது எங்கே நடந்தாலும் ‘நானும் ரெவிடி தான்’ கணக்கில் எங்களால்தான் எல்லாம் (‘5மீனவர் விடுதலை’ உட்பட) என்ற மனோபாவம் புரிகிறது.

  //காரணம் மகிந்தவின் அதிகப்படியான சீன உறவு .//
  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வர்த்தக பொருளாதார தொடர்புகள் எதுவுமே கிடையாதா? இந்திய சீன உறவைக் குறித்து கொஞ்சம் விளக்குங்களேன்.

  // இந்தியா தன் மீது சந்தேகம் வராமலிருப்பதற்காக ஆடிய நாடகங்களாகும்// நாடகத்தின் ஒரு காட்சியாக தனது அரவிந் குப்தா தலைமையிலான டெக்னிக்கல் டீமை அனுப்பியதை மறந்துவிட்டீர்களா?:-) ஒருவேளை அரவிந் தனது தொழில் திறமையைக் காட்டி வென்றிருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்? 😦
  இந்த நாடகத்தில் மகிந்தவின் ஜிகிரி தோஸ்த் சுவாமி மற்றும் ராம் அவர்களின் பங்கு என்னவோ?

  எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களின் ஓட்டுக்கள்மூலமாகவோ, பாதிக்கப்பட்ட இலங்கையினரின் ஓட்டுக்கள் மூலமாகவோதான் மகிந்த தோற்கடிக்கப்பட்டார் என்பதை ஜீரணித்துக்கொள்ளவே இயலாத தமிழர் அல்லது மனிதர் என்கிற வகையில் தங்களுக்குப் பாராட்டுக்கள்.

 4. Ezhil சொல்கிறார்:

  இந்த விஷயம் நமோவுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. டிசம்பர் மாசத்தில் அஜித் டொவல் இலங்கையில் 3 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார். ரணில் சந்திரிகா முதலாய எதிர் கட்சி தலைவர்களை சந்தித்திருக்கிறார். எனினும் ரணில் தான் எதிர் அணியின் வேட்பாளர் என இறுதி வரை ராஜபக்சே குடும்பத்தினர் நம்பி இருந்தனர். ஒரு மில்லியன் ரூபா செலவில் ரணிலுக்கு சேறு பூசும் போஸ்டர்கள் கூட அடித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும் ராஜபக்சே கனவில் கூட நினைத்திராத மைதிரியை வேடப்பாளராக்கியதும் அவருக்கு எல்லா விதத்தில் ஆதரவை பெற்று கொடுத்ததும் ஒரு புற சக்தி ஆதரவு இல்லாமல் முடிந்திருக்க சாத்தியமில்லை. இதில் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்தே செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். இந்தியாவை மட்டும் நம்பி எதிரணி தலைவர்கள் ஒன்று கூடியிருக்க மாட்டார்கள். மேலும் ராஜபக்சே அமைதியாக விடியற்காலையில் வெளியேற அமெரிக்க இந்திய தூதுவர்கள் கொடுத்த அழுத்தமே காரணம் என்றும் கூறப்படுகிறது.

  அப்போ சு சுவாமி… Your guess is as good as mine! 😉

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்கள் todayandme / ezhil,
   (மற்ற நண்பர்களுக்கும் கூடத்தான் ..)

   நம் முன் எழும்பும் சில கேள்விகள் –

   – சீன ஆதிக்கத்தைக் குறைக்கும் எண்ணத்தோடு,
   நமது உளவுப்படை அதிகாரிகள் தானாகவே இதில்
   ஈடுபட்டார்களா …? (வாய்ப்பு குறைவு)

   – அமெரிக்க உளவுப்படையின் தூண்டுதலில்,
   இந்திய உளவுப்படை அதிகாரி இதில் ஈடுபட்டாரா ?

   – நமோ உத்திரவின் பேரில் இந்திய உளவுப்படை
   இந்த ஆபரேஷனில் இறங்கியதா…?

   -சு.சுவாமிக்கு தெரியாமல், நமோ இலங்கையில்
   இந்த ஆபரேஷனை அரங்கேற்றி இருக்க முடியுமா …?

   – சு.சுவாமிக்கு இந்த ஆபரேஷன் பற்றி தெரிந்திருக்க
   வாய்ப்பில்லை என்பது தேர்தலுக்குப் பிந்திய அவரது
   ரீ-ஆக்ஷன்களிலிருந்து தெரிய வருகிறது.

   – ஒருவேளை நமோ இதை சு.சுவாமிக்கு தெரியாமல்
   நடத்தியிருந்து, அது சு.சுவாமிக்கு இப்போது
   தெரிந்திருந்தால், மதுவருந்திய மந்தி போல் அவர்
   குதித்திருப்பார் …. அத்தகைய சலனங்கள் எதையும் காணும்…!

   – last but not the least – தேர்தல் முடிவுகள் வந்த பிறகு,
   நமோ அரசு, இலங்கையில் அரசு மாறியதற்கான credit
   தனக்கு கிடைக்குமாறு செய்ய – வேண்டுமென்றே இப்படி
   ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்குமா …?
   (இந்த வதந்தி நேற்று மாலை தான் இந்திய மீடியாவில்
   சீரியஸாக கிளம்பியது …)

   – இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்க
   வேண்டுமானால் –
   ஒன்று – நமது உளவுப்படைத் தலைவர் அஜித் தோவல்
   ரிடையர் ஆகி, புத்தகம் எழுதும் வரை காத்திருக்க வேண்டும்.

   அல்லது சு.சுவாமி இதில் துப்பறிந்து – கடுப்பு தாங்காமல்,
   உண்மையை வெளிக்கொட்ட வேண்டும்….!!

   எனவே, அது வரை ………
   காத்திருப்போம் -வெவ்வேறு யோசனைகளுடன்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • எழில் சொல்கிறார்:

    //தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, நமோ அரசு, இலங்கையில் அரசு மாறியதற்கான credit தனக்கு கிடைக்குமாறு செய்ய – வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்குமா …?//

    KM ji, understandably, we would never know the answers to the questions you have raised except for the above mentioned one. I got news from Colombo on the 9th itself, there was involvement of foreign hands in toppling Rajapakse regime and it is a reliable source. But I seriously believe India was not alone. This operation would have been carried not just to topple Rajapakse but to tilt the supremacy over Indian ocean. However, the news would have been leaked to media to gain political millage locally.

    • Sharron சொல்கிறார்:

     yes you are right.I agree with you,

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நன்றி எழில்,

     எனக்குக் கிடைக்கும் மற்ற தகவல்களும்
     அதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 5. K.Ganapathi Subramanian சொல்கிறார்:

  Dear Kaviri Mindhan Sir,
  I am a regular reader of your blog .
  On 7th Of January when I was in Delhi I read an article in Hindustan Times as per which in the coming together of opposition parties in Srilanka , India had a big role . I was pleasantly surprised to read this article because the north Indian Author ( I forgot the name) was fairly correct in his understanding of tamil’s plight in Srilanka and had articulated that NaMo government is indeed seriously concerned about improving their situation and also keen to restrict their getting more and more closer to China and hence the step to bring in Mithri as common opposition candidate.( I tried , but could not get a link to this article)
  This article was before the SL elections were held .Having seen Modi’s functioning in the past 7 months, I do believe that such steps would have been taken by him, because many tactical deeds / steps he takes are held close to his chest.

  And to believe that RAW agent acted without knowledge of Indian government is simply naïve.

  I very well understand your knowledge, capacity , experience and caliber and probably you wrote that because you are not so much satisfied with the approach and actions being taken by NaMo government and so you wanted to give credit to the agent than to NaMo.

  I am a NaMo Fan, of course, but not a diehard fan. I am observing his actions with open mind so far and feel some more time should be given by him.

  When you and Mr.Cho can give 3.5 years and still ready to give longer rope to Jayalalitha, I sincerely believe that NaMo can be given a rope for atleast 18-24 months.
  Sir, above said are just my views on this matter and I respect you a lot . My humble salutes to you for your tireless efforts , for actively collecting and correlating data on various economic and SL tamils issue at this age and presenting it for our enlightenment.

  If you consider my comments are fit to be published in your blog, please do so.

  Best regards

  K.Ganapathi Subramanian

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Ganapathi Subramanian,

   You are always welcome to join us and
   offer your comments in this blog.
   You must have noticed – people have
   full freedom to express their feelings on any of
   the topics coming up in this Blog .
   In fact I wish this site should develop as a platform
   for healthy discussion of common issues / problem.
   Differences of opinion does not matter here.
   You can see good number of friends are already
   taking keen part in discussions.

   With all best wishes,
   Kavirimainthan

 6. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களின் வயிறு குளிர்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் அந்த உளவாளித் தோழருக்கு உரித்தாகட்டும்! அதில் என்னுடையதும் ஒன்றாகட்டும்!

  இந்தச் செய்தியை அறியத் தந்த காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

 7. lala சொல்கிறார்:

  எனது பின்னூட்டத்துக்கு கருத்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
  மோடி அனுதாபி என்றும் , ராஜபக்ச வீட்டுக்கு போனதால் வயிறெரிபவன் என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்.

  ராஜபக்சவின் கடந்த 10 வருட கால ஆட்சியில் தமிழ் மக்கள் சொல்லோணா துன்பத்தை அனுபவித்து விட்டார்கள் . லட்சகணக்கில் குடி கொண்டிருக்கும் ராணுவம் , வகை தொகையில்லாத நில அபகரிப்பு , தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை ராணுவ்மே அபகரித்து கொள்வது போன்ற கொடுமைகளுக்கு புதிய ஆட்சி மாற்றம் ஒரு தற்காலிக ஆறுதலை தர்லாம் என்பதாலேயே தமிழ் மக்கள் மைத்திரிபாலவுக்கு பெருவாரியாக வாக்களித்தார்கள் . அந்த வகையில் எனக்கு அது ஏற்புடையதே.

  ஆனால் கா.மை கட்டுரை அதைப்பற்றி பேசவில்லை . இந்திய அரசின் தெரிவு ராஜபக்சவாக இருந்தபோதும் அதையெல்லாம் மீறி கொழும்பில் இருந்த ரா அதிகாரி ஒருவர் மைத்திரிக்கு ஆதராவாக செயற்பாட்டதாக அம்புலி மாமா கதை விட்டதையே விமர்சித்திருந்தேன்.

  உண்மையில் ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்கு மேற்குலக நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் முடிவெடுத்துவிட்டிருந்தது.
  மேலும் ஆதாரம் வேண்டுமென்றால் இந்திய அரசின் தாளத்திற்கு டான்ஸ் ஆடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் நடக்க இருக்கும் ஒரு வாரம் முன்னதாகவே சிறிசேனவுக்கு தமது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்திருந்தனர் . இந்தியாவின் உண்மையான தெரிவு ராஜபக்சவாக இருந்திருந்தால் கூட்டமைப்பினர் ஒரு போதும் சிறிசேனவுக்கு தமது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்திருக்க போவதில்லை . அது இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தும் என்பது அவர்களுக்கு தெரியும் . தேர்தலை பகிஷ்கரிக்க கோரியிருப்பதன மூலம் ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வருவதற்கு மறைமுகமாக உதவியிருப்பார்கள் .

  ராஜபகச ஆட்சிக்காலத்தில் சீனாவிற்கு ஒபன் லைசென்ஸ் வழங்கப்படது . ஒப்பந்தங்கள் அனைத்தும் டெண்டர் மூலம் விடப்படாமல் நேரடியாக சீனாவுக்கே தாரைவார்க்கப்பட்டது . இந்தியாவுக்கும் மிக சிறிய அளவிலான ஒப்பந்தகளே வழங்கப்பட்டன . அவை கூட நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.உதாரணம் சம்பூர் அனல் மின்நிலையம் . இவ்வளவு கேவலங்கள் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டபோதும் . இந்திய அரசு மவுனமாக இருந்தது .
  காரணம் கடந்த கால காங்கிரஸ் அரசு 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலையில் கூட்டு களவாணியாக இருந்தது . இதர்கு இலங்கை அரசிடம் ஆதாரங்களும் இருந்தது..ஆனால் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை இலங்கையில் தோல்வியடைந்து விட்டதாக ஒப்பாரி வைத்தபோது , ராஜபக்ச அரசுக்குநாம்நெருக்கடி கொடுத்தால் அவர் மேலும் சீனாவைநெருங்கி செல்வதற்கு வழி வகுத்ததாகிவிடுமென சப்பை கட்டினர் . அது போதாதென்று ஐனாவில் ராஜபக்ச அரசுக்கு எதிராக தீர்மானம் மேற்குலக நாடுகளால் கொண்டுவரப்பட்டபோது நேரடியாகவும் மறைமுகமாகவும் ராஜபக்சவின் இனவேரி அரசை காப்பாற்ற முனைந்தது அனைவருக்கு தெரிந்த வரலாறு.

  ஆனால் மோடி பதவிக்கு வந்தபோதும் இலங்கை அரசுடன்நட்பு பாராட்டியது . ஒரு சில சில்லறை விடயங்களை ராஜ்பக்சவிடம் சாதித்து கொள்வதற்கு சு.சாமியை பயன்படுத்தியது . ஆனால் அவரது சீனநட்புறவை எதுவும் செய்ய முடியவில்லை . கடைசியாக மூன்றுஇ மாதங்களிற்கு முன்பு சீனநீர்மூழ்கி கப்பல் இலங்கை கடலில்நிறுத்தி வைப்பதற்கு அனுமதி வழங்கினார்.
  அந்தநேரத்தில் தேர்தல் வந்தது ,, இந்தியா மேற்குலகநாடுகளுடன் சேர்ந்து தமக்கு தோதான இன்னுமொரு தலைவரை சந்திரிகா ஊடாக தேர்தலில் நிறுத்தியது .

  ## இந்திய அரசு ராஜபக்சே மீண்டும் வரவே விரும்பியது;
  அதற்கு சுப்ரமணியன் சுவாமியும் முக்கிய காரணம்.## ராமசந்திரன்

  நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் மோடி அரசால் ராஜபக்சவிடம் சில சில்லறை அசைன்மன்டுகளை சாதிப்பதற்கு சு.ச்வாமி பயன்படுத்தப்ப்டடார். உதாரணம் மீனவர் விடுதலை விவகாரம் . ஆனால் வெளியுறவு துற கொளைகையோ அல்லது உளவுத்துறையையோ கட்ட்ப்படுத்தும் அதிகாரம் சு.சாமியிடம் இல்லை.

  ## புத்திசாலித்தனத்துக்கும் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா ? இருந்தால் குறிப்பிடுங்களேன், அனைவரும் அறிந்துகொள்ள.##

  இந்தய அரசின் . உளவித்துறையின் நிகழ்ச்சிநிரலையும் , அறிவுறுத்தைலையும் மீறி கொழும்பிலுள்ள ரா அதிகாரி ஒருவர் சிறிசேன பதவிக்கு வருவதற்கு உழைத்துள்ளார் என கா.மை அந்த்ன் அதிகாரியை சூப்பர் டூப்பர் கதாநாயகனாக்கி புகழ்ந்துள்ளார் . ஆனால் அதற்கு அதார்ங்கள் எதையும் தாங்கள் கேட் கவில்லை.

  ##எது எங்கே நடந்தாலும் ‘நானும் ரெவிடி தான்’ கணக்கில் எங்களால்தான் எல்லாம் (‘5மீனவர் விடுதலை’ உட்பட) என்ற மனோபாவம் புரிகிறது.##

  இது மீனவர் விடுதலையை போல மோடி மட்டும் தீர்மானிக்கிற விடயமல்ல .இந்திய வெளியுறவுத்துறையும் , உளவுத்துறையும் தீர்மானிக்கிற விடயம்.

  ## இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வர்த்தக பொருளாதார தொடர்புகள் எதுவுமே கிடையாதா? இந்திய சீன உறவைக் குறித்து கொஞ்சம் விளக்குங்களேன். ##

  சீனாவை விட பகை நாடாக கருதப்படும் , சீனாவை விட அதிக போர்களில் ஈடுப்பட்ட பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கலாச்சார , மொழி , விவாக , வர்த்தக போக்குவரத்து உறவுகள் இருக்கின்றன.என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

  ## அரவிந் குப்தா தலைமையிலான டெக்னிக்கல் டீமை அனுப்பியதை மறந்துவிட்டீர்களா?:##

  ஆம் நாடகத்தின் ஒரு காட்சியை மறந்து விட்டேன் .நினவு படுத்தியதற்கு நன்றி. அந்த திருட்டு வேலை செய்ய இந்தியாவால் அனுப்பட்டா குழு பற்றிய செய்தி எவ்வளவு கச்சிதமாக ஊடகங்களில் கசிய விடப்பட்டது .?

  தேர்தலுக்கு சிலநாட் களுக்கு முன் இந்த ரகசியம் பரகசியமாகுமளவிற்கா இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் சொங்கிகளாக இருக்கிறார்கள் ?

  அப்படியானால் அரவிந்த் தனது தொழில் திறமையை ஏன் காட்டாது போனார் ?
  கடைசிநேரத்தில் இந்திய உளவுத்துறையிடமிருந்து வந்த உத்தரவுக்கமையவா ?

 8. M. Syed சொல்கிறார்:

  நல்லா முட்டுக்கொடுக்கிராகப்பா நமோவிர்க்கு. குப்பிற விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டவில்லை !!!!

  M. Syed
  Dubai

  • lala சொல்கிறார்:

   அயல் நாடுகளுடனான வெளியுறவு கொள்கை போன்ற முடிவுகள் பிரதமரினால் எடுக்கப்படுவதல்ல . அது வெளியுறவுத்துறை அதிகாரிகளினாலும் , உளவுத்துறை அதிகாரிகளினாலும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த முடிவு பிதமருக்கு தெரிவிக்கப்படும்.

   எனவே நமோ குப்புற விழ்வதற்கும் அதற்கு முட்டுகொடுப்பதற்குமான அவசியம் எதுவும் இங்கு இல்லை ..

   • M. Syed சொல்கிறார்:

    அப்போ எதற்கு சார் சார்க் மாநாட்டில் வலியபோய் வாழ்த்து சொல்லணும். அதுவும் இந்தியா மரபுகள் எல்லாம் மீறி. தயவு செய்து இது நமோவின் தந்திரம் என்று சொல்லிவிடாதீர்கள் லாலா. அப்போ பிரதமர் மற்றும் மந்திரிசபை எடுக்கம் முடிவு அல்ல. அதிகாரி மற்றும் உளவுத்துறை எடுக்கும் முடிவுதான் என்றால் பிரதமர் மற்றும் மந்திரிசபை எதற்கு லாலா. என்னமோ போங்க பாவமா இருக்கு !!!

    M. Syed
    துபாய்

    • lala சொல்கிறார்:

     கட்டுரையின் முதல் பின்னுட்டத்திலேயே இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன்.படித்து பாருங்கள்

    • lala சொல்கிறார்:

     அயல்நாட்டு விவகாரங்களில் அதன் இறைமையில் உளவுநிறுவனங்கள் தலையிடுவது போன்ற விவகாரங்களில் பாராளுமன்றத்தில் , மந்திரிசபயில் பகிரங்கமாக கூடி விவாதித்து முடிவு எடுப்பதில்லை.

 9. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  தேர்தல் முடிவுகள் வந்த பிறகு,இலங்கையில் அரசு மாறியதற்கான காரணம்
  தங்களுக்கு கிடைக்குமாறு செய்ய மோடியின் விளம்பர தூதுவர்கள் வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கலாம் என்பது கூட உண்மையாக இருக்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.