வாழ்த்துக்கள் மோடிஜி – ராஜபக்சேயை துரத்துவதில் வெற்றி பெற்றமைக்கு….!!!

 

modiji

 

 

நேற்று முன்தினம் எழுதிய இடுகையிலிருந்து
சில மாறுதல்கள் / முன்னேற்றங்கள்…

நான் சேகரிக்க முடிந்த சில நுட்பமான தகவல்களிலிருந்தும்,
எனக்குத் தெரிந்த சில டெல்லி நண்பர்களிடமிருந்தும்,
அதிகாரபூர்வமாக யாராலும் உறுதி செய்ய முடியாத –
ஆனால் அனேகமாக நிச்சயமான உண்மை என்று தெரிய வருவது –

முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா,
முன்னாள் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கா,
ராஜபக்சேயின் அமைச்சரவையில் முக்கிய இடம் பெற்றிருந்த
மைத்ரிபால சிறிசேன ஆகிய மூன்று சக்திகளையும் –

தொடர்ந்த பல சந்திப்புகள் மூலம், மிக சாமர்த்தியமாக
காய்களை நகர்த்தி ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்த
பெருமை இந்திய உளவுத்துறையையும்,

அதனை மிக ரகசியமாகத் திட்டமிட்டு செயல்படுத்திய
பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சாரும் …!!!

காரணம் – சீனாவின் ஆதிக்கத்தை இந்து மகா சமுத்திரத்தில்
கட்டுப்படுத்துவது, தனக்கு இணக்கமாக இருக்கக்கூடிய
ஒரு அரசை, இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கும்
இலங்கையில் – கொண்டு வருவது போன்றவைகளாக
இருந்தாலும் –

லட்சக்கணக்கான தமிழர்களுக்கு மாபாதகங்கள் இழைத்த
கொலைகாரன் ராஜபக்சேயை அதிகாரத்திலிருந்து அகற்ற
உரிய முயற்சிகளை மேற்கொண்டு –

அதில் வெற்றியும் பெற்றமைக்காக –
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு –
நம் உளமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

33 Responses to வாழ்த்துக்கள் மோடிஜி – ராஜபக்சேயை துரத்துவதில் வெற்றி பெற்றமைக்கு….!!!

 1. S.Selvarajan சொல்கிறார்:

  கொண்டாடப்பட வேண்டிய இந்திய உளவாளி ……!!! முந்தைய இடுக்கை யின் தலைப்பு ! வாழ்த்துக்கள் மோடிஜி – ராஜபக்சேயை துரத்துவதில் வெற்றி பெற்றமைக்கு….!!! இன்றைய இடுக்கை யின் தலைப்பு …. மோடிஜியின் இரட்டை விரல் முத்திரையும் …. இடுக்கை யும் எதையோ ….. கூறுவது போல உள்ளது ? எதை ….. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   எந்தவித அச்சமும் வேண்டாம் ….
   நான் என்றும், எந்த கட்சிக்காரனாகவும், ஆக மாட்டேன்..!!!

   உளவுத்துறை அதிகாரி தன்னிச்சையாகச் செயல்பட்டது போல்
   முதலில் தோற்றம் உருவானது ( early news – “He lost his job
   because of this” ). பிரதமர் மோடியின் உத்திரவின்
   பேரில் தான் உளவுத்துறை இந்தச் செயலில் ஈடுபட்டது
   என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

   எனவே – செயலுக்கும், விளைவுக்கும் யார் காரணமோ –
   அவரைக் குறிப்பிடுகிறது இன்றைய இடுகை..

   பாராட்டுக்குரிய செயல்கள் நிகழ்த்தப்படும்போது –
   அதைப் பாராட்டுவதில் தயக்கம் கூடாது…
   ஈகோவும் குறுக்கிடக் கூடாது – என்பது என் கருத்து.
   எனவே மோடிஜிக்கு பாராட்டுக்கள்.

   நாளையே குறைகூறி எழுதவேண்டிய அவசியமும் ஏற்படலாம்.
   அப்போது, அதற்கும் தயங்க மாட்டேன்.

   ——–
   அடுத்து – இரண்டு விரல்களைக் காட்டுவது –
   வெற்றி என்பதைக் குறிப்பது. (ஆங்கிலத்தில் ‘V’ for Victory).
   இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டிஷ் பிரதமராக
   இருந்த சர்ச்சில் அவர்கள் மூலம் இந்த சின்னம்
   பிரபலமாகியது.

   ( செல்வராஜன் – வருந்துகிறேன் – இவ்வளவு நாட்களாக
   என் பதிவுகளைப் படித்து வருகிறீர்கள் –
   நான் எதை எழுதினாலும் வெளிப்படையாகவே
   எழுதுபவன். பிறகு எப்படி இந்த மாதிரி சந்தேகங்கள்
   எல்லாம் உங்களுக்கு ஏற்படுகிறது ….? )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • S.Selvarajan சொல்கிறார்:

    அன்பு கா.மை. அவர்களுக்கு ! எனக்கு [எங்களுக்கு ] தாங்கள் எந்த கட்சியையும் சாராதவர் என்பது நன்றாக தெரியும் …. நான் தங்களை என்றும் சந்தேகப்பட கூடியவன் அல்ல ….. மற்றவர்களுக்கு எந்த சந்தேகமும் வரகூடாது என்பதற்க்காத்தான் … ” எதை ? ” என்ற வினாவினை எழுப்பியது …. தங்களின் தெளிவான விளக்கம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் … புரிய வேண்டும் என்கின்ற அவாவினால் ….. !! மேலும் திரு ஸ்ரீநிவாசன் முருகேசன் போன்று மற்றவர்கள் எண்ண வாய்ப்பு ஏற்படும் அல்லவா ? அதனால்தான் ….. !!! [திரு ஸ்ரீநிவாசன் முருகேசன் அவர்களின் எண்ணத்திலும் தப்பு ஏதும் இல்லை ] காலம் மாறுதல்களுக்கு உட்பட்டது !

   • Siva சொல்கிறார்:

    KM sir, i regret to say that you are euphoric in the last post. I felt suspicious when you wrote that RAW spy acted independently to change the election outcome in colombu. Because no individual under indian government paycheck will work for the betterment of srilankan Tamils. It’s obviously known fact. May be some govt servants from Tamil Nadu can think about doing good thing for srilankan Tamils, but mostly thier hands will be tied if at all they are assigned for that duty.

 2. srinivasanmurugesan சொல்கிறார்:

  “மோடிஜியின் இரட்டை விரல் முத்திரையும்….. இடுகையும் எதையோ….. கூறுவது போல உள்ளது?எதை….?”அம்மா அவர்களுடனான கூட்டணியாக இருக்குமோ…..?அப்படி இருந்தால் தமிழகத்திற்கு நல்லது.

 3. lala சொல்கிறார்:

  சந்திரிகா மூலமாக மைத்திரி , ரணில் போன்றவர்களை ஒருநேற் கோட்டில் இணைக்கும் வேலையை செய்தது அமரிக்காவும் மேற்குலக நாடுகளுமே .இந்திய அரசு அதற்கு துணை நின்றது .

  • BC சொல்கிறார்:

   தங்கட மோடியும் ராவும் ஏற்பாடு செய்த ஆட்சி அல்லவோ இலங்கையில் நடக்கிறது என்று நினைத்து சந்தோசபட விரும்புகிறார்கள் விடுங்கோ.

   • lala சொல்கிறார்:

    என்ன செய்வது ? இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்களின் இலங்கை பிரச்சனை தொடர்பான புரிதல் இவ்வாறுதான் இருக்கிறது .
    இதில் வலைப்பதிவர்களின் புரிதலைப்பற்றி கேட் கவே வேண்டாம்

 4. arulnithyaj சொல்கிறார்:

  sir oru china kelvi, appuram etharku raajapaksheyvukku modi vaazththu sonnaar?

  • நந்தவனத்தான் சொல்கிறார்:

   ராஜதந்திரம் என்பது தமிழ் சினிமா அல்ல, வீரவசனம் பேசுவதற்கு. அரசியலில் சிரித்தபடியேதான் ஆப்பு வைக்கப்படும். இந்திய முயற்சிகள் தோற்று ராசபட்சே மீண்டும் அதிபராக வந்தால் அவரை எப்படி சமாளிப்பது? அதற்காகத்தான் அந்த சீன்!

   அமெரிக்க ராசதந்திரியான கிஸ்ஸிங்கள் ஒருதடவை சொன்னார்… “அமெரிக்காவிற்கு நண்பனும் கிடையாது, எதிரியும் இல்லை – அமெரிக்க நலன் காப்பது என்பது மட்டுமே உண்டு”. மோடியை பயங்கரவாதி என விசா மறுத்து சீன் காட்டிய அமெரிக்கா அவர் இந்திய பிரதமரானதும் சனாதிபதியின் சூப்பர் காரான பீஸ்டில் மோடியை வைத்து டூர் அடித்தது. மோடியும் சீன் போடாமல் அமெரிக்காவிற்கு ஒத்துப்போனார். இங்கு தனிப்பட்ட ஈகோவிற்கு இடமில்லை – அமெரிக்க மற்றும் இந்திய நலன் மட்டுமே முக்கியம். இதே போலத்தான் ராசபட்சே விவகாரமும் – இந்திய நலன் மட்டுமே முக்கியம்…ராசபட்சேவை வாழ்த்துவதும் ஆப்பு வைப்பதும் இதற்கே. மற்றபடி ஒபாமா, ராசபட்சே, மோடி இவர்களிடையே பர்சனலாக சண்டையோ நட்போ இல்லை. அவர்களின் நாட்டு நலன் மற்றும் சொந்த நலனை பொறுத்தே அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும்.

   • arulnithyaj சொல்கிறார்:

    ஐயா நீங்கள் இந்த பதில் தான் கூறுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனால் எனக்கு தெரிந்து ஸ்ரீலங்கன் தேர்தலுக்கு எந்த இந்திய பிரதமரும் வாழ்த்து சொன்னதில்லைன்னு நினைக்கிறன் ..சரியா? ஐயா

 5. நந்தவனத்தான் சொல்கிறார்:

  சனவரி 14, அன்று ஒரு பதிவில் நான் போட்ட நீண்ட பின்னூட்டம். இப்பதிவுக்கு தொடர்புடையது என்பது மீண்டும் எடிட் செய்து இங்கே இடுகிறேன்.

  ராசபட்சேவை தண்டித்தவர் மோடிதான். மோடி ராசபட்சேவுக்கு வாழ்த்து சொன்ன போது “முகநக நட்பது நட்பல்ல” என தெரியாமலே பொங்கி எழுந்தார் வைகோ. அவர் பாரசீக கிரேக்க அரசியல் என அடித்துவிடுவார், ஆனால் லோக்கல் அரசியலில் கூட சொதப்பிவிடுவார்.

  மோடி ராசபட்சேவுக்கு ஆப்பு வைக்க முக்கிய காரணம் ராசபட்சே – சீன நெருக்கம்தான்.புலிகளை ஒழித்ததும், ராசபட்சே இந்தியா இனி தன்னை மிரட்ட விடயமில்லை, ஆனால் தம்மிடம் சீனத்துருப்பு சீட்டு இருப்பதாக எண்ண ஆரம்பித்தார். சீன அரசும் ராசபட்சே இலங்கையின் நிரந்த ஜனாதிபதி என நம்பி அவருக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் ஈழ தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இந்திய அரசு, ராசபட்சே-சீன கூட்டுறவால் வெறுப்படைந்து சிங்கள எதிர் கட்சியினர் & ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்த ஆரம்பித்திருந்தது. சீன நீர்முழ்கிகளை இந்திய எச்சரிக்கை மீறி தொடர்ந்து இலங்கைக்குள் அனுமதித்த போது மோடியின் பொறுமை முற்றிலும் காணமல் போல் ஆப்பு ரெடியாகிவிட்டது. இதற்கு சாட்சி – ஈழமக்கள் பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்த முதல்வர் விக்னேஸ்வரன் இந்துதுவா தலைவர்களை நவம்பரில் சந்தித்தார், விஸ்வ இந்து பரிஷத் நடத்திய தில்லியில் உலக இந்து காங்கிரஸ் மகாநாட்டில் பேசினார் – ஆனால் வைகோ சீமானை சென்னை வந்த போது கண்டுக்கவே இல்லை – இதிலிருந்து யார் உண்மையான ஈழத்தமிழர் நண்பன் என அறியலாம்.. இந்த புலியாதரவாளரல்லாத ஈழதமிழர் – இந்திய உறவு கமுக்கமாக நடந்தது, நடக்கும். ஏனெனில் இந்திய அரசு ஈழத்தமிழர்களுடன் நட்புடன் இருக்கிறோம் என சிங்களவரிடம் காட்டி அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க விரும்பாது. இதை உணராமல் ராசபட்சே தனது மகன் நமல் நடிகர் சல்மான்கான் மற்றும் பிற இந்திய நண்பர்கள் மூலம் மோடியை சரிகட்டிவிடுவார்,மோடியால் பிரச்சனை ஏதுமில்லை என நம்பியபடி சீனாவோடு காதல் புரிந்துவந்தார்.,

  இதுபற்றி கட்டுரைகள் இணைத்தில் வந்திருக்கின்றன. சிங்களவரான உபுல் ஃபெர்னான்டோவின் ஒரு கட்டுரையின் பகுதிகள் …

  …when he (Mahinda Rajapaksa) traveled to Lord Venkateswara Temple, India, Mahinda may not have felt that the correct Temple to worship was the Temple at South Block, New Delhi. Be that as it may, Mahinda’s destiny was not changed by Maithripala who had hoppers and left him, but by the Chinese submarine ‘Great Wall 329′….

  Mahinda was defeated on 8 January. Mahinda’s defeat is viewed by India as a defeat of China and a victory for India. Mahinda lost due to the strength of the minorities. It has also enhanced the scope for India to gain an upper hand over Sri Lanka, after the LTTE was crushed. The Chinese “String of Pearls” are scattered across the ocean. Rajapaksas’ may be feeling that they pinched the “Sleeping Giant’ (India). This is a good lesson for decades to come, not only for Sri Lanka, but also for other leaders in South Asia.

 6. ltinvestment சொல்கிறார்:

  It is like” Tryant ” English TV Serial.

 7. இரா.பழனிக் குமார்,திண்டுக்கல் சொல்கிறார்:

  ஜெயிக்க வாழ்த்து சொன்ன மோடி தோற்க சதி செய்தார் என்றால் ‘பாரத ரத்னா ‘ கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சு.சாமீ எவ்வளவு சதி செய்திருப்பார்…? ஐயய்யோ…தலை சுத்துதே..

  • lala சொல்கிறார்:

   சற்று பொறுத்திருங்கள் . ஒரு வேளை வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரணி வெற்றி பெற்று மைத்திரியின்நிலை உறுதியானால் . மைத்திரிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சு.சுவாமி கோரிக்கை வைப்பார்.

   நக்குகிற *****ய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன …..

 8. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  சுத்த ஹம்பக்!
  அதாவது, மூன்றாவது முறை தேர்த்தலில் நிற்க ஆதரித்து, வாழ்த்து தெரிவிப்பாராம்!
  தன்னை வடிவமைத்த அதே கம்பெனியை கொண்டு இவருக்கு தேர்த்தலில் வியூகம் அமைத்து கொடுப்பாராம்…
  சல்மான் கானைக்கொண்டு பிரச்சாரமும் அமோகமாக நடக்குமாம்….
  ஆனால் தேர்த்தலில் முடிவு வேறு மாதிரி வந்தால் மட்டும்,
  “ரா”, “மிக ரகசியமாகத் திட்டமிட்டு” என்றெல்லாம் கதை விடுவாராம்.
  காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இதுவும்.
  இல்லையில்லை…
  எரியிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்பதுபோல
  இப்போதுதான் தெரிந்ததா சீனா செய்வதும்… etc., etc. எல்லாம்?

 9. Siva சொல்கிறார்:

  To all: whether the present indian government played a role or not in changing leadership in colombo, but India will not do any good thing for srilankan Tamils. It is waste of time to discuss anything about India’s role in welfare of Sri lankan Tamils. India’s role in Sri lanka will be always based on its benefit only. It will not allow Sri lankan tamils to get thier freedom and rights. But the unfortunate fact is that srilankan Tamils cannot escape from the pressures of India. Only possible solution is that a honest Tamil leader, who is able to change the balance in thinking of world leaders, can bring freedom to these people. Neither Indian congress nor other party government in Delhi is going to allow for any freedom at any time in future. Even if you teach the basic and current advanced problems of srilankan Tamils to north Indians (both civil people and political party), they will never support the real welfare of srilankan Tamils. It is 100% true for another centuries.

  Painfully, Tamil Nadu political parties have used the volatile situation of srilankan Tamils for thier benefit so far. Indian political parties are following the same route now. It is ridiculous and painful to accept. It is nothing but a drama for the current situation. Unless you change the basic understanding of the problem, nothing good will happen.

  My sincere advice to all supporters and well wishers of srilankan Tamil’s cause is to start working smartly, honestly, openly and intelligently. Do not go with stupid sentiments. Do not look for any bad or circuit way. Already a lot of damage has been done for the good cause. Please Be-United for the cause and try to improve the current situation better for free living of these unfortunate Tamils.

  Even, I have supported strongly in previous comments for change in leadership at Colombo because I do not expect that they will do benefit to srilankan Tamils. But I have supported based on the hope that Tamils will leave camps and go to thier lands/homes to live freely. If all Tamils are resettled in thier own lands( thottam) and homes, it will be a great achievement at this time. If they can start thier life and work freely, it will be a great moment. It will also break the begging condition in camps.
  Hope good will prevail for srilankan Tamils.

 10. Ezhil சொல்கிறார்:

  I have commented in previous post and saying it again now, it was not India’s plan alone but India was the executioner of the plan. இந்திய வெளியுறவு, புலனாய்வு, ராணுவ மற்றும் ரகசிய சேவைகளில் நம் கண்ணுக்கு தெரியாத, வெளிச்சத்துக்கு வராத அசகாய சூரர்கள் இருக்கிறார்கள். அவர்களால் இதை போல் பல மடங்கு பெரிய செயல்களை செய்யமுடியும். ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு குறிப்பிட்ட தலைவரின் ஆட்சியின் கீழ் அவ்வாறான செயல்கள் நடை பெறும் போது செயல்களின் பலன் (நல்லதோ / கெட்டதோ) அதன் தலைவர்களை தான் போய் சேரும். அதற்கு காரணம் அந்த தலைவர் தான்..

  இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
  ததனை அவன்கண் விடல்

  … என்று தீர்மானிக்கிறார். இது மோடி செய்யவில்லை என்று முழங்குபவர்கள், இதை சற்று புரிந்து கொள்வது நல்லது.

  இலங்கை தேர்தல் முடிந்தவுடன், தனது செயலகம் கூட முற்றாக தயாராகாத நிலையில் மங்கள சமரவீர ஓடோடி வந்து இந்தியாவில் நாட்கணக்கில் தங்கி இருப்பதை வேறு என்னென்று விளக்குவீர்கள். மைத்திரியின் முதல் வெளி நாட்டு பயணமும் இந்தியா தான்.

  • lala சொல்கிறார்:

   சிங்கள தலவர்கள் அப்படித்தான் ஒடோடி வந்து கைகொடுத்து உறவாடுவார்கள் . ஆனால்நேரம் வரும்போது இந்தியாவுக்கு ஆப்படித்து விடுவார்கள் .சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இதுதான்நடைபெற்று வருகிறது .

   சேனநாயக்கா -நேரு , பண்டாரனாயக்கா -நேரு , திருமதி பண்டாரனாயக்கா – சாஸ்திரி , ஜேஆர் – இந்திரா , ஜேஆர்- ராஜிவ் , பிரேமதாசா – ராஜீவ் ,, சந்திரிக்கா – இந்தியா , மன்மோகன் – மகிந்த , காலத்தில்நடந்த வரலாறுகளை புரட்டி பாருங்கள் புரியும் .

   அன்றிலிருந்து இந்தியா இலங் கையை கையாள்வதில் தோல்வியுற்றிருக்கிறது , அதேவேளை இலங்கை இந்தியாவை வெற்றிகரமாக கையாண்டு வந்திருக்கிறதெனும் உண்மை தெரியவரும்.

   • Ezhil சொல்கிறார்:

    //ஆனால் நேரம் வரும்போது இந்தியாவுக்கு ஆப்படித்து விடுவார்கள்//

    உண்மையில் தற்போது ஆப்படிக்கப்பட்டது இலங்கையின் முந்தைய ஆட்சி. நீங்கள் கூறும் அந்த ‘நேரம்’ இனி வராமால் பார்த்து கொள்ளவது இந்திய ஆட்சி அமைப்புகளின் திறமை. எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்.

    மேலும் நீங்கள் கூறும் வரலாறு பொத்தம் பொதுவாய் போகிற போக்கில் கூறி விட்டு போவது போல் இருக்கிறது. உண்மையில் ஜெயவர்தனே, பிரேமதாச, ராஜபக்சே போன்றோர் இந்திய வெறுப்பாளர்கள். எனவே அவர்கள் ஆட்சியில் அதை ஒட்டியே இலங்கையின் போக்கு இருந்தது. குறிப்பாக ராஜீவ், சோனியா ஆட்சிகளில் இலங்கையுடன் ஆன உறவு தொலைநோக்கு பார்வை இன்றியே இருந்ததமை அதற்கு இன்னொரு காரணம். ஆனால் சிறிமா, சந்திரிகா, ரணில் ஆட்சிகளில் இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவே இருந்தது. பல முக்கிய பேச்சுவார்த்தைகள் இந்திய ஆசியுடன் அவர்கள் காலங்களிலேயே நடந்ததது. அப்படி இல்லை என்று நீங்கள் நம்பினால் அதற்க்கான ஆதாரங்களை முடிந்தால் தெரிவியுங்கள். தொடர்ந்து பேசலாம். 🙂

    • lala சொல்கிறார்:

     சுதந்திரத்துக்கு பின் கடந்த 70 வருட காலத்தில் இலங்கையில் நடந்த எந்த தேர்தல்களிலும் இந்தியாவினால் தலையீடு செய்ய முடியா நிலையே இருந்தது. அப்படிதலியீடு செய்திருந்தாலும் அது வெற்றியளித்திருந்திருக்க வில்லை.
     உதாரணம் 1989 நடந்த ஜனாதிபதி தேர்தல் அங்கு வட கிழக்கில் இந்திய ராணுவம் , இந்திய புலனாய்வாளர்கள் இருந்தும் கூட இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாச வெற்றி பெற சிறிமா தோல்வியடைந்தார்..

     70 வருடங்கள் கழித்து இப்போதுதான் 2015 இல் இந்தியா நினைத்தது ஒரளவு நடந்திருக்கிறது . அதுவும் மேற்குலகின் ஆதரவின்றி ஒருபோதும் நடந்திருக்க முடியாது.
     இந்த வெற்றி கூட முழுமையானதல்ல .வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிரணி கூட்டணியினரிடம் இந்த ஒற்றுமையை பார்க்க முடியாது. நிறைய கூத்துகளை பார்க்கலாம்.

     • Ezhil சொல்கிறார்:

      மன்னிக்கவும், இங்கு நாம் இலங்கை தலைவர்களின் இந்திய சார்பு நிலையையும், நீங்கள் கூறும் இலங்கை தலைவர்கள் இந்தியாவுக்கு ஆப்பு அடித்தல் பற்றியும் விவாதித்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் தலையீடு குறித்து அல்ல. I reckon the above is off the course.

     • lala சொல்கிறார்:

      ## நீங்கள் கூறும் இலங்கை தலைவர்கள் இந்தியாவுக்கு ஆப்பு அடித்தல் பற்றியும் விவாதித்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் தலையீடு குறித்து அல்ல. I reckon the above is off the course.##

      தங்களது முன்னைய பதிலில் அயல் நாடொன்றில் தேர்தலின்போது இந்தியா அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு தேர்தலில் ஆப்படித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள் . இந்தியா அந்த தேர்தலில் தலையிடாமல் எப்படி அந்த ஆட்சிக்கு ஆப்படித்திருக்க முடியும் ?
      அதனால்தான் இலங்கையில்நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இந்திய விரும்பியிருந்த போதும் கூட ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையிருந்ததை குறிப்பிட்டேன்.அதற்கு தகுந்த உதாரணமும் கொடுத்திருந்தேன் . அதிலுள்ள உண்மையை ஏற்க முடியாமல் ஆப்படித்தல் ,இந்திய சார்பு , என்பதிலிருந்து இந்திய தலையீடென்பது வேறுபடுகிறது (??? ) எனக்கூறி நழுவி ஒடுகிறீர்கள் ..

    • lala சொல்கிறார்:

     ## உண்மையில் தற்போது ஆப்படிக்கப்பட்டது இலங்கையின் முந்தைய ஆட்சி ##
     இந்தியாவை பொறுத்தவரை இலங்கையில் முந்தைய ஆட்சி பினதைய ஆட்சி என்று கிடையாது. எந்த ஆட்சி வந்தாலும் குலாவவே விரும்புவார்கள் .
     ஒரே ஒரு விதி விலக்கு ஜே.ஆர். .அதுவும் கூட இந்திய லங்கை ஒப்பந்தத்தின் பின் தலை கீழானது.

     ## சிறிமா, சந்திரிகா, ரணில் ஆட்சிகளில் இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவே இருந்தது ##
     தாங்கள் சிங்கள தலைவர்களை புரிந்து கொண்ட விதம் அவ்வளவுதான் .
     முதலில் சிறிமாவை பார்ப்போம் . சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 10 லட்சம் மலையக தமிழர்களை நாடு கடத்தினார் . மிகுதி பேர் பிரஜா உரிமையின்றி இலங்கையிலேயே இருந்தார்கள் . இது ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெரிய வெற்றி.
     பின்பு இந்திரா ஆட்சிக்கு வந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த இருவரும் குடும்ப நண்பர்கள் . மேலும் அப்போதெல்லாம் இவர்களை தவிர வேறு பெண் பிரதமர்கள் உலகில் கிடையாது. எனவே இருவரும் ச்ந்தித்து கொள்ளும்போது மிகநெருக்கமாகவும் பிரியமாகவும் இருப்பார்கள்
     அவர்கள் சந்தித்து கொள்ளும் படங்களில் அவர்களது உடல் மொழியைப்ப்பார்த்து இதனை புரிந்து கொள்ளலாம்..இந்த நட்பை வைத்தே பல காரியங்களை சிறிமா சாதித்துக்கொண்டார் . குறிப்பாக கச்ச தீவின் உரிமையைப்பெற்றது. இந்திரா ஆட்சியில் இருக்கும் வரை சிறிமா இலங்கையில் ஆட்சியில் இருந்தார் . சிறிமாநட்பு எனும் பெயரில் சிங்களவர்களின் நலனை பேணிக்கொண்டார் . மாறாக இஙகு பாதிக்கப்பட்டது தமிழ்நாட்டின் நலனும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனும்தான்.எனவே யார் சிறந்த ராஜ தந்திரி ? சிறிமாவா , சாஸ்திரியா , இந்திராவா எனும் கேள்வி வந்தால் சந்தேகமில்லாமல் சிறிமா என்பதுதான் பதில்.
     அடுத்து சந்திரிகா , ரணில் , இவர்களது காலத்தில் புலிகளது போராட்டம் இவர்களுக்கு முன்னால் உள்ள பெரிய சவாலாக இருந்தது . இலங்கை முழுமையும் சிங்கள பவித்த நாடக மாற்ற வேண்டுமெனும் சிங்கள பேரினவாதத்தின் கனவுக்கு புலிகள் பெரும் முட்டுக்கடையாக இருந்தார்கள் .நாட்டின் 1/3 பங்கு அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது . எனவே புலிகளை அழித்து தமிழர்க்கென்று பிரதேசம் எதுவும் இல்லாமல் செய்ய வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஆதர்வு அவசியம் . எனவே சிங்களவர்களின் நலனுக்காக இந்தியாவோடு நட்பாக இருந்தார்கள் .
     புலிகளுடனான போருக்கு ஆய்த புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொண்டார்கள் வெளினாடுகளில் புலிகளை தடை செய்வதற்கு இந்தியாவின் உதவியை நாடி அதில் வெற்றியும் பெற்றார்கள் .
     ஆனால் அவர்கள் காலத்தில், புலிகளை களத்தில் தோற்கடிப்பதில் வெற்றி பெற முடியவில்லை.
     பின்பு மகிந்த வந்தார் .புலிகளை தோற்கடிக்கும் வரை இந்தியாவை நன் கு பயன்படுத்திக்கொண்டார் . தோற்கடித்த பின் தனது புத்தியை காட்ட்டினார்.
     தமிழர்களை லட்சக்கணக்கில் படுகொலை செய்ததில் காங்கிரஸ் .அரசுக்கு சரிக்கு சரி பங்குண்டு .இதனை மகிந்த சரியாக பயன்படுத்தி கொண்டார் . போரில் இந்தியாவின் பங்கு பற்றி ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொண்டார்.சீனாவுக்கும் சீனர்களுக்கும் ஒபென் லைசென்ஸ் வழங்காத குறையாக எல்லா ஒப்பந்தங்களும் தாரை வார்க்கப்பட்டது.
     தமிழர் படுகொலையில் கூட்டு கள்வாணியாக செயற்பட்ட மன்மோகன் அரசு கையை பிசைந்து வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது.
     இந்தியாவே இறுதிப்போரை நடத்தியதாக மகிந்த இலங்கை நாடாளுமன்றில பகிரங்கமாக அறிவித்தார்.அத்ற்கு இந்திய அரசு பதில் ஏதும் பேசாமல் வாய் மூடி மவுனாமக இருந்தது..

   • Yogi சொல்கிறார்:

    Sir,
    You are correct,
    Indian foreign office can send their iFS guys to Colombo for training.
    Especially when SLFP was ruling they played so perfectly until chandrikas tenure.
    One example is indo Pakistan war in 1971.
    Rgs
    Yogi

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இன்றைய தினம் இலங்கையிலேயே வசிக்கும் தமிழர்கள்
  ராஜபக்சேவுக்கு எதிராக ஓட்டு போட்டு சிறிசேன பதவிக்கு வர
  வழி வகுத்ததை –
  வெளிநாடுகளில் வசிக்கும் புலன் பெயர்ந்த
  ஈழத்தமிழர்கள் விரும்பவில்லை…..

  ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜபக்சேவை அகற்றி விட்டால்,
  ஈழத்துக்கான போராட்டம் நீர்த்துப் போகும் என்று அவர்கள்
  கருதுகிறார்கள்…..சரி.

  ஆனால் – என்றோ ஒரு நாள் ஈழம் பிறக்கும்,
  என்றோ ஒரு நாள் ராஜபக்சே கூண்டில் நிறுத்தப்படுவான் –
  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து ராஜபக்சே ஆட்சியில்
  அடிமையாக நீடித்திருங்கள் என்று அவர்களை
  வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம் ….?

  நடைமுறையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் தானே
  வேதனையை அனுபவிக்கிறார்கள்…? தங்கள் துன்பச்சூழல்
  ஒருசிறிதேனும் மாறக்கூடும் என்னும் நம்பிக்கையில்
  அவர்கள் எடுத்த முடிவை குறை கூற யாருக்கும்
  உரிமை இல்லை என்பதே என் கருத்து….

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Ezhil சொல்கிறார்:

   ஐயா, புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர், இது சிங்கள நாட்டுக்கான தேர்தல் ஆகவே நாம் பங்கு பற்றாமல் இருப்பதே நல்லது என கூறி வந்தது உண்மை. அப்படி தமிழர்கள் பங்கு பற்றாமல் இருந்திருந்தால் ராஜபசே மீண்டும் வருவது உறதி செய்யப்பட்டிருக்கும்.

   ஆனால் இலங்கையில் வசிக்கும் தமிழர்களும், முஸ்லீம்களும் கடந்த அரசின் அராஜகங்களால் வெறுத்து போய் இருந்தார்கள் என்பது தான் நிதர்சனம். குறிப்பாக ராஜபசே அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம்களான டக்லஸ், கருணா, ரவுப் ஹகீம் போன்றோர் தங்கள் பதவிகளை காப்பதிலும், ராஜபச்கேவுக்கு சாமரம் வீசுவதிலுமே காலத்தை போக்கினர். விக்னேஸ்வரனின் அரசு இயங்குவதற்கு போதுமான நிதி ஆதாரங்களை அரசு வழங்காமல் அலைகழித்தது. வடக்கில் கவர்னர் தான் கடவுள் போல் நடந்து கொண்டார். இந்த நிலையை விக்னேஸ்வரன் பல முறை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார். இந்தியா வந்த போது கூட தெரிவித்திருந்தார்.

   தேர்தல் நெருங்கும் போது தமிழர் கூட்டணிக்கு, புலம் பெயர்ந்த ஒரு சில தமிழர் அமைப்புகளால் தேர்தலை புறக்கணிக்க அழுத்தம் வந்ததாக கூற படுகிறது, ஆனால் ஈழத்தில் உள்ள தமிழர் யார் சொல்லையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதை தமிழர் கூட்டணி புரிந்து கொண்டதால் மக்கள் விருப்பத்தையே தங்கள் கருத்தாக கூறி தப்பித்து கொண்டார்கள். ரவுப் ஹக்கீமும் எங்கே தான் தனிமை பட்டு விடுவோமோ என்று கடைசி நேரத்தில் ராஜபக்சே அரசை விட்டு வெளியே வந்தார். இப்படி இருக்கையில் சிலர் மோடி சொல்படியே தமிழர் கூட்டணி மைதிரிக்கு வாக்களிக்க சொன்னது என்று அடித்து விடுவது வளமிக்க கற்பனை.

  • Yogi சொல்கிறார்:

   Sir,
   Agreed,
   These diaspora have to do some thing practical by helping the refugees really.
   If they are conducting meetings in the western countries they will become a tamas ha clique in the minds of affected Sri Lankan Tamils.
   Yogi

 12. lala சொல்கிறார்:

  ## புலம் பெயர்ந்த ஒரு சில தமிழர் அமைப்புகளால் தேர்தலை புறக்கணிக்க அழுத்தம் வந்ததாக கூற படுகிறது, ##

  புலம் பெயர் அமைப்புகளால் கூட்டமைப்புக்கு பெரியளவில் அழுத்தம் கொடுத்திருந்திருக்க முடியாது. டெல்லி கொடுக்கும் அழுத்தங்களுக்கு முன்னால் அது ஒரு பொருட்டல்ல.
  மேலும் புலம் பெயர் அமைப்புகளும் , தமிழர்களும் கூட்டமைப்புக்கு நிதி அளித்து வருவது உண்மைதான் .

  ஆனால் வழங்கும் நிதியோடு ஒப்பிடும்போது அது கால் தூசு.

  மேலும் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் ராஜபக்ச அரசு எவ்வளவு விரைவாக அகற்றப்பட முடியுமோ அவ்வளவு விரைவாக அகற்றப்படவே விரும்பினார்கள் .இன்னுமொரு 5 வருடங்களுக்கு அவரது ஆட்சியை பு.பெ. தமிழர்களாலேயே ஜீரணிக்க முடியாமல் இருந்ததுன் .

  இதனால் ஐநாவில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணகள் மூலம் தமிழர்க்கு நியாயமான தீர்வு கிடைப்பது மேலும் சில காலம் தாமதமாகும் என தெரிந்த போதும் கூட

 13. சக்தி சொல்கிறார்:

  அனைவரின் கருத்துக்களையும் படித்தேன். காமை உட்பட எல்லாருடைய கருத்துகளிலும் உண்மையும், உண்மையற்றவையும் இருந்தன. அவை பற்றி ஆராய அல்லது கருத்துச் சொல்ல வரவில்லை. ராஜபக்சேயின் தோல்வியை நாம் வேறொரு கோணத்தில் அணுகலாம்.

  அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் இனக் கலவரங்களாலும் போரினாலும் அனுபவித்த கொடுமைகள் இழப்புகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட கொடுமைகள் சித்திரவதைகள் அனைவருக்கும் தெரிந்ததே. தன் அண்ணாவைத் தேடிய 12 வயதுச் சிறுமி சித்திரவதைக்கு உள்ளானாள்.தாயோ புலி சாயம் பூசி பூசா சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டாள்.

  ஏழை அழுத கண்ணீர் இவை. இன்றும் தொடருகிறது.

  இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து சென்ற கோவில் அர்ச்சகர்கள் குழு ஒரு வாரமாக அலரி மாளிகையில் பூசைகளை நடத்தினார்கள். தான் வணங்கும் புத்தரை நம்பாத ராஜபக்சே திருப்பதிக்குப் படை எடுத்தார். சோதிடர்களின் வாக்குகள் வழிகாட்டல்கள் எவையும் அவருக்கு உதவவில்லை.

  இதைவிட இன்னொன்றையும் நாம் எண்ணிப் பார்க்கலாம். தனது வெற்றி நிச்சயம் என்று நம்பிய ராஜபக்சே 2010 இல் ஆட்சிக் காலம் முடியு முன்னரே தேர்தலை நடத்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் விரும்பி இருந்தால் மேலும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்து ஆட்சிக் காலத்தை முடித்துக் கொண்டு தேர்தலை நடத்தி இருக்கலாம். அப்படிச் செய்யாது முன் கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்தார்.

  சட்டத்தையும் உயர் நீதிமன்றையும் அலரி மாளிகைக்கு வர வைத்து மூன்றாவது முறையாக போட்டி இட்டார். வெற்றி நிச்சயம் என்று நம்பியதால் அவர் மகன் நாமல் நள்ளிரவு வெற்றியைக் கொண்டாடி நண்பர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடினார். ஆனால் ஒரு சில மணித்துளிகளில் நிலைமை மாறியது.

  காலிமுகக் கடற்கரையில் நிலை கொண்டிருந்த கோத்தபாயவின் ஆயுதக் கப்பல், ஓரிரு மணிகளில் பொலீசாரையும்,கோத்தபாயாவின் கைக்குளிருந்த இராணுவத்தையும் தங்கள் பக்கம் கொண்டு வர முடியாத இக்கட்டான நிலை, எல்லாமே ராஜபக்சேக்கு எதிராகி விட்டது. வெற்றி மமதையில் இருந்த அவர்களால் குறுகிய நேரத்தில் எதையும் சாதிக்க முடியாத நிலையில் இராணுவப் புரட்சியைக் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

  மறு நாள் தனது பிறந்த இடத்திற்கு சென்று தமிழர்களால் தோற்றேன் என்று இனவாதத்தை வைத்தும் கலவரத்தை தூண்ட முடியவில்லை. மைத்திரி முந்திக் கொண்டு ஆட்சியை பொறுப்பேற்று விட்டார்.

  தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு,இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தலை நடத்தி இருந்தால் ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். தனக்கு சாதகமாக இல்லாத நிலை ஏற்படும் என்று தெரிந்தால், நன்றாக சிந்தித்து இராணுவ உதவியுடன் தேர்தலை நடத்தாது ஆட்சியை தக்க வைத்து இராணுவ ஆட்சியை ஏற்படுத்தி இருந்திருக்க முடியும்.

  ஆனால் ஏதோ ஒரு சக்தியோ அல்லது தமிழர்களின் கண்ணீரோ எல்லாமே அவருக்கு எதிராக செயல்படத் தொடங்கி விட்டதை அவரால் உணர முடியவில்லை.வெற்றி மமதை, இராணுவம் படைகள் தன் பக்கம் என்று நம்பியது, சோதிடர்களின் கூற்று, பூசைகள் இப்படி அனைத்தும் அவருக்கு எதிராக செயல்படத் தொடங்கி விட்டன.

  அந்தச் சக்தி மோடி வடிவில் என்றாலும் சரி,அமெரிக்க வெளி நாட்டுச் சக்திகள் என்றாலும் சரி எதுவோ ஒன்று அவரை சிந்திக்க விடாது வீழ்த்தி விட்டது.

  ஆக தன்வினை சுட்டு விட்டது. தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொண்டார்.

 14. Yogi சொல்கிறார்:

  Yes.,
  Same fate brought down two governments across park straights.
  Rgs
  Yogi

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.