டெல்லியில் மோடிஜிக்கு செல்வாக்கில்லையா …? பாஜகவே ஒப்புக் கொள்கிறதா …?

.

.

நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் டெல்லி சட்டமன்ற தேர்தல்
அகில இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையக்
கூடுமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது…!

கடந்த பாராளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடி என்கிற
ஒரே மந்திரத்தை வைத்துக் கொண்டு பாஜக போட்டியிட்டது.
பத்து வருடங்களாக நடந்த காங்கிரஸ் கூட்டணி
ஆட்சியும், புற்றீசல் போல் கிளம்பி வந்த ஊழல் விவகாரங்களும்
நாடு முழுவதும் மக்களுக்கு வெறுப்பையும், கடுங்கோபத்தையும்
உண்டு பண்ணி இருந்தன.

அந்த நேரத்தில் நரேந்திர மோடி
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,
தன் பேச்சுத்திறமையால் ‘இந்தி மாநிலங்களில்’ மக்கள் மனதில்
தன்னைப்பற்றிய ஒரு பெரும் நம்பிக்கையை உருவாக்கினார்.
அதன் விளைவாக, பாஜகவே எதிர்பாராத அளவிற்கு அதற்கு
தனிப்பெரும் பெரும்பான்மை கிடைத்தது. அதன் விளைவாக,
‘மோடி’ என்பது அவர்களுக்கு ஒரு brand name ஆனது.

அடுத்து வரிசையாக வந்த ஹரியானா, மஹாராஷ்டிரா,
ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நிகழ்ந்த
சட்டமன்ற தேர்தல்களில் “மோடி” அவர்களின் பெயரைச்
சொல்லியே, அவரது பிரச்சாரத்தை மட்டும் நம்பியே –

மக்கள் மத்தியில் ‘மோடி’ என்கிற இமேஜுக்கு இருந்த
செல்வாக்கினாலேயே ஜெயித்தார்கள். இந்த மாநிலங்கள்
எதிலும் அவர்கள் மாநிலத்தலைவர்கள் யாரையும்
முன்நிறுத்தவில்லை. ஜெயித்தால் இவர் தான் எங்கள்
முதலமைச்சர் என்று யாரையும் சுட்டிக்காட்டவில்லை.
கார்பரேஷன் கவுன்சிலர் தேர்தலில் கூட “மோடியின் ஆட்சி”
என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள். ஆனாலும்
வரிசையாக ஜெயித்துக் கொண்டே போனார்கள்.

தலைநகர் டெல்லியில் இழுத்துக் கொண்டே போன
சட்டமன்ற தேர்தல்கள் இப்போது அறிவிக்கப்பட்டு விட்டன.

ஆம் ஆத்மி கட்சியின் – 49 நாள் முதலமைச்சராக இருந்த
அர்விந்த் கெஜ்ரிவால் செல்வாக்கிழந்து போய் விட்டார்
என்கிற நினைப்பில் இப்போதும் “மோடி” பிராண்டை
முன்வைத்து தான் முதலில் பாஜக தேர்தல் பணிகளைத்
துவக்கியது.
அவர்களது 200 எம்.பி.க்களுக்கும் டெல்லியின்
70 சட்டமன்ற தொகுதிகள் தேர்தல் தேர்தல் பணிக்காக
பிரித்தளிக்கப்பட்டன. தீவிர பிரச்சாரத்திற்கு, தலைசிறந்த
பேச்சாளர்கள் களமிறக்கப்பட்டனர். பாஜகவின் அதே –
குஜராத் மீடியா டீம் செயலில் இறங்கியது. அனைவருக்கும்
முன்னதாக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக
ஜனவரி 10ந்தேதி – மிகப்பெரிய பொருட்செலவில்
டெல்லியில் ஒரு பாஜக பேரணியும்,
ராம்லீலா மைதானத்தில் – “மோடிஜி”யின் ஆவேச உரையும்
ஏற்பாடு செய்யப்பட்டன.

ஆனால் –

இதற்கு கிடைத்த Response பாஜக தலைமைக்கு திகிலை
உண்டாக்கியது. நகரின் பல்வேறு இடங்களிலிருந்தும்
சுமார் 200 இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்தும் கூட-
மோடிஜி வரும் வரையில் மைதானத்தில் நிறைய
காலி இருக்கைகள் இருந்தன.
( இதை நேரடி ஒளிபரப்பில்
காட்டிய ஒரு தொலைக்காட்சி – பின்னர் சில சங்கடங்களுக்கு
உள்ளாக நேர்ந்தது ) மோடிஜியின் உரை மக்களிடையே
எடுபடாமல் போனது. மோடிஜியின் உரைக்கு முன்னர்
அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முழுவதும் ஒரு கேள்வியை
எழுப்பி இருந்தார். “மோடிஜி தன் உரையில் – டெல்லிக்கு
மாநில அந்தஸ்து கொடுப்பது பற்றிய அறிவிப்பை
வெளியிடுவாரா ?” என்று கேட்டு…!!!

மோடிஜி தன் உரையில் அர்விந்த் கெஜ்ரிவாலை ஒரு
நக்சலைட் என்று வர்ணித்தாரே தவிர டெல்லிக்கான
திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை.

“அர்விந்த் கெஜ்ரிவால்” என்கிற பெயர் டெல்லி மக்களிடையே
சாம்பல் பூத்த நெருப்பாகவே இருந்து வந்திருக்கிறது.
இந்த நிகழ்வுகளுக்கும் பின், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவே,
கெஜ்ரிவாலுக்கான மக்களின் ஆதரவு பெரிய அளவில்
வெளித்தெரிய ஆரம்பித்து விட்டது.

ArvindKejriwal -delhi

சுதாரித்துக் கொண்ட பாஜக தலைமை – கெஜ்ரிவாலுக்கு
எதிராக கிரண் பேடியை பாஜகவில் களமிறக்கி விட்டது.
முதலில் சி.எம். கேண்டிடேட்டை அறிவிக்க மாட்டோம் என்று
சொன்ன பாஜக தலைமை வேறு வழி இல்லாமல்
கிரண் பேடியை பாஜக முதல்வர் வேட்பாளர் என்று
அறிவிக்க நேர்ந்தது.

இதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் வெகு விறுவிறுப்பாக
உள்ளன. அர்விந்த் கெஜ்ரிவால் எழுப்பும் பல கேள்விகள்
நியாயமாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருக்கின்றன.

-மோடியின் பெயரைச் சொல்லியே இத்தனை மாநில தேர்தல்களில்
போட்டியிட்ட பாஜக – முதல்தடவையாக டெல்லி தேர்தலைக்கண்டு
பயப்படுகிறது. தோற்றால் மோடிஜிக்கு அசிங்கமாகி விடும் என்று
கிரண் பேடியை இறக்கி விட்டிருக்கிறது.

– கடந்த 7 மாதங்களாக பாஜகவின் நேரடி ஆட்சியில்
இருந்த டெல்லிக்கு என்ன நன்மை செய்யப்பட்டது …?

– மாநில அந்தஸ்து கொடுப்பது பற்றி எதிர்க்கட்சியாக
இருந்தபோது போராடிய பாஜக, இப்போது தானே அதிகாரத்தில்
உள்ளபோது -மறுப்பது ஏன் …?

– ‘பாரசூட் முதல்வராக கிரண் பேடியை களமிறக்கியது ஏன் …?
டெல்லி பாஜகவில் பொருத்தமான தலைவர்கள் யாருமே
இல்லையா ..?

– மின் கட்டணத்தை 30 % குறைப்பதாக கடந்த தேர்தலின்போதே
வாக்குறுதி கொடுத்த பாஜக, கடந்த 7 மாதங்கள் ஆட்சியில்
இருந்தபோது அதை நிறைவேற்றத்தவறியது ஏன் …?

– பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே என்று மக்கள்
போராடிக்கொண்டிருக்கும்போது, பாஜக தலைவர்கள்
பெண்கள் ஆளுக்கு 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்
என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் என்ன
குழந்தைகளை பெற்றுத்தள்ளும் இயந்திரங்களா …?
பெண்களைப்பற்றிய பாஜகவின் வளர்ச்சித்திட்டம் இது தானா ..?

– “வளர்ச்சி” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக
இப்போது மதமாற்றங்களில் மட்டுமே ஈடுபாடு காட்டி வருகிறது.

– நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வருவோம் என்று
சொல்லி பதவிக்கு வந்தவர்கள் இப்போது “நாதுராம் கோட்சே”க்கு
சிலை வைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்….

– இப்படி நிறைய வாதங்களை முன்வைக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

நேற்றைய தினம் அர்விந்த் கெஜ்ரிவால் நடத்திய Road show
சாமான்ய மக்களிடையே அவருக்கு பெருகி வரும் ஆதரவை
வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தல்களுக்குப் பிறகு –
எக்கச்சக்கமான தலைக்கனத்துடன் உலவி வந்த பாஜக
தலைவர்கள் முதல் தடவையாக பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

முடிவு எப்படி இருக்குமோ என்று முதல் தடவையாக
பாஜக இப்போது தான் – கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது….!!!

மோடிஜி’யின் செல்வாக்கு எல்லா இடங்களிலும்
செல்லுபடியாகாதோ என்று முதல் தடவையாக
சந்தேகம் வந்திருக்கிறது …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to டெல்லியில் மோடிஜிக்கு செல்வாக்கில்லையா …? பாஜகவே ஒப்புக் கொள்கிறதா …?

 1. S.Selvarajan சொல்கிறார்:

  யாருக்கும் எந்த வருத்தமும் ஏற்பட கூடாது என்பதால் … ” நோ கமெண்ட் “

 2. bandhu சொல்கிறார்:

  மோடி ஆட்சியின் ஹனிமூன் முடிந்தது! இனி வெறும் பேச்சு எந்த பலனையும் தராது!

 3. LVISS சொல்கிறார்:

  THE REPUBLIC DAY CELEBRATIONS ARE ROUND THE CORNER — THE P M HAS TO MEET THE DEFENCE MINISTER OF RUSSIA AND MR OBAMA IS COMING SHORTLY –THERE MAY BE OTHER PRESSING ENGAGEMENTS TOO — MR MODI WILL BE THE LAST PERSON TO SHY AWAY FROM CHALLENGES — EVEN IF HE WANTS TO CAMPAIGN HE WILL BE ABLE TO DO SO ONLY IN THE LATER PART OF THE CAMPAIGN–IN ANY CASE THE BJP SEEMS TO HAVE DISCOVERED KIRAN BEDI AT THE RIGHT TIME TO LEAD THE CAMPAIGN IN THE ABSENCE OF MR MODI —

 4. D. Chandramouli சொல்கிறார்:

  Excellent analysis! If Kiran Bedi becomes the CM, she will automatically have the full support of the Central Govt and she could get things moving in Delhi. As regards Arvind, he has proved to be more of a fighter than an administrator and in fact, even as CM, he didn’t shed his image. It might be advantageous for the people of Delhi if Bedi is elected as CM and Arvind as Leader of the opposition.

 5. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  பேசுவதுதான் பிரதமராக இருப்பதற்கான தகுதி என்றால் நம் சுகி.சிவம், சாலமன் பாப்பையா, இறையன்பு எல்லாம் மோடியை விடப் பன்மடங்கு தகுதி மிக்கவர்கள் அந்தப் பதவியை வகிக்க!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.