‘சன் டிவி ஆபிஸ்’ – எங்கேங்க இருக்கு …..? அய்யோ – அப்பாவி என்னை சிபிஐ மாட்டிவிட பாக்குது….!!!


2007 -ல் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர்
(ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தான்) ஒரு புகார் கொடுக்கிறார்.
சட்டவிரோதமாக அமைச்சரின் வீட்டிலிருந்து சன் டிவி
அலுவலகத்திற்கு இணைப்பு கொடுக்கப்பட்டு மிகப்பெரிய
மோசடி மூன்று வருடங்களாக தொடர்ந்து நடந்து
கொண்டிருக்கிறது என்று.

சிபிஐ- யின் ஒரு தற்காலிக ரிப்போர்ட்படி (தேதி – செப்டம்பர் 10, 2007 )
அமைச்சரின் வீட்டில் 323 வழித்தடங்களுடனான உயர்வேக கேபிள்
தொடர்பு கொண்ட ஒரு ரகசிய தொலைபேசி எக்ஸ்சேஞ்ச்
இயங்கி வருவதும் – அவை பிஎஸ்என்எல் ஜெனரல் மேனேஜர்
பெயரில் இயங்கி வருவதும் உண்மை தானென்று அது கூறுகிறது.

அங்கிருந்து சுமார் 4 கி.மீ.தொலைவிலுள்ள சன் டிவி
அலுவலகத்துடன் அது ரகசியமாக இணைக்கப்பட்டிருப்பதும்
தெரிய வருகிறது.

ஒரு சாம்பிள் ஸ்டடி செய்ததில், மார்ச் 2007-ல் மட்டும்
ஒரு தொலைபேசியில் (எண் -24371515 ) மட்டுமே
48,72,027 யுனிட் அளவிற்கு தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன
என்பது தெரிய வந்திருக்கிறது.

அப்படியானால், 323 தடங்களுக்கு எவ்வளவு என்று
தோராயமாக மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

இதன் விளைவாக சுமார் 440 கோடி ரூபாய் அளவிற்கு
BSNL -க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது
2007-ல் தயாரிக்கப்பட்ட சிபிஐ-யின் தற்காலிக ரிப்போர்ட்
தந்த தகவல்….!!!

வேடிக்கை என்னவென்றால் இந்த ரிப்போர்ட்டுடன்,
இந்த செய்தி கிணற்றில் போட்ட கல் ஆகி விட்டது.

பொறுத்து, பொறுத்து, பொறுத்து …..

இறுதியில் தாங்க முடியாமல் அந்த ஆடிட்டர்
( ஆமாம் ஆர்.எஸ்.எஸ். சதியாளர் தான் …!!!)
ஜூன் 2011-ல் இதைப்பற்றி தொடர்ந்து
பல கட்டுரைகளை ஒரு நாளிதழில் எழுதுகிறார்.

அதற்கும் ரீ-ஆக் ஷன் இல்லை.
கடைசீயாக, அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் பெடிஷன்
போடுகிறார் – இது விஷயத்தில் ஒரு நேர்மையான
விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென்று.

அதன் பேரில் சுப்ரீம் கோர்ட் அந்த ஆடிட்டரால் கொடுக்கப்பட்ட
ரிப்போர்ட்டின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சிபிஐ -க்கு
உத்திரவு பிறப்பிக்கிறது.

அதன் பிறகு, 2013-ல் சிபிஐ மேல் நடவடிக்கைகளைத்
துவக்குகிறது.

தம்பி, அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்போது குறை
கூறுவது இதைத்தான் ….

press meeting

இந்த நாட்டில் எப்பேற்பட்ட அநியாயம் நடைபெறுகிறது –
பாருங்கள். 2007-ல் கொடுக்கப்பட்ட புகாருக்கு இவ்வளவு
சீக்கிரமாக நடவடிக்கை எடுக்கிறார்களாம்…!

3 ஊழியர்களை நேற்றிரவு கைது செய்து கொண்டு
போயிருக்கிறார்கள். இன்று மதியம் தான் கோர்ட்டில் ஆஜர்
படுத்துவார்கள். இடைப்பட்ட காலத்தில், அவர்களை யாரும்
சந்தித்திருக்க வாய்ப்பில்லை – தொலைபேசியை பயன்படுத்தவும்
அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் – இவருக்கு தகவல் கிடைத்து விட்டது…..
போலீசார் அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள்,
மூன்றாந்தர முறைகளை ( ? ) கையாள்கிறார்கள்……
இவருக்கு இந்த தகவல் எப்படிக் கிடைத்ததோ ?

இந்த நாட்டில் – நீதி, நியாயம் எல்லாம் செத்துப் போய் விட்டது.
மனித உரிமை கமிஷனுக்கு புகார் போகப்போகிறது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார் போகப்போகிறது.
எதிர்க்கட்சிகள் கொந்தளித்து எழப்போகின்றன –

என்றெல்லாம் – தலைவரின் வீட்டு வாசலில் வைத்து
செய்தியாளர்களிடம் சொல்லப்படுகிறது.

வேடிக்கை என்னவென்றால் –
தலைவரின் வீட்டு வாசலில் கூட்டம் நடந்தாலும்,
தலைவர் இது பற்றி வாயே திறக்கவில்லை.

தம்பியும் திரும்ப திரும்ப ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்,
மற்றும் சிபிஐ பற்றி குறைகூறுகிறார், கொந்தளிக்கிறாரே தவிர,
தப்பித் தவறிக்கூட மத்திய அரசை குறை கூறவில்லை….!!!!!!!!!!!!!!!!!!!!!

“தெனாலி” படத்தில் நாயகன் கூறுவாரே “பயம்” என்று –
முதல் தடவையாக அதை இவர் முகத்தில் பார்க்க முடிகிறது.
அடுத்த கைது தானாக இருக்குமோ என்கிற பயம் ..!!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

5 Responses to ‘சன் டிவி ஆபிஸ்’ – எங்கேங்க இருக்கு …..? அய்யோ – அப்பாவி என்னை சிபிஐ மாட்டிவிட பாக்குது….!!!

 1. drkgp சொல்கிறார்:

  Does anybody have anymore sympathy left for the last regime which took
  such swift action on the atrocious activities of its political partner !!!
  We should wholeheartedly appreciate the RSS PLOTTER for his perseverance
  and in depth complaint !!
  Whenever political thieves are caught in our nation, immediately caste, religion,
  RSS, political vendetta etc etc are spewn out which even an imbecile won’t listen.

 2. S.Selvarajan சொல்கிறார்:

  ‘சன் டிவி ஆபிஸ்’ – எங்கேங்க இருக்கு …..? அய்யோ – அப்பாவி என்னை சிபிஐ மாட்டிவிட பாக்குது….!!! இதில் இன்னும் இரண்டே இரண்டு சொற்கள் ….சேர்த்துக்கொள்வார்கள் … கைதாகின்றபோது …. ஐயோ ! கொல்றாங்கோ …. கொல்றாங்கோ …. !!

 3. johan paris சொல்கிறார்:

  இவர்கள் “உள்ளே” போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  அத்துடன் குறைந்தது 10 வருட சிறை,சொத்துப் பறிமுதல், வாழ்நாளில் அரசியலில் ஈடுபடத் தடை.
  இனிமேல் எவருக்குமே ஊழல் செய்யப் பயம் வரவேண்டும்.
  செய்யுமா? இந்த அரசு!

 4. Sadasivam சொல்கிறார்:

  “தெனாலி” படத்தில் நாயகன் கூறுவாரே “பயம்” என்று –
  முதல் தடவையாக அதை இவர் முகத்தில் பார்க்க முடிகிறது. True.

 5. natchander சொல்கிறார்:

  I STILL BELEIVE DAYA WOULD ESCAPE THOUGH IT IS NOT MY INTENTION INDIA STILL FAVOURS CORRUPT POLITICIAN

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.