தயாநிதி – ரகசிய எக்ஸ்சேஞ்ச் – அழிப்புக்கு பிறகும் தப்பியிருக்கும் ஆவணங்கள்……!!!

.

suntv cable

நேற்றைய பேட்டியில் தம்பி, தனக்கு எதிராக சிபிஐ நடவடிக்கையில்
ஈடுபட, ஆடிட்டர் குருமூர்த்தியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான்
காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு விவரமாக திரு எஸ்.குருமூர்த்தி அவர்கள் பதில் சொல்லி
இருக்கிறார். அதற்குள் போவதற்கு முன்னால் இன்னும் சில
மேல் விவரங்கள்……

இந்த விஷயம் முதன்முதலில் எப்படி வெளிவந்தது….?

முதன் முதலில் பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கம் தான் இந்த
விவரங்களை வெளிக்கொண்டு வந்தது. தொழிற்சங்கத்தை சேர்ந்த
ஒருவரின் வாக்குமூலத்தின் ஒரு பகுதி கீழே –

———–

“மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தை சென்னை
வட்ட பிஎஸ்என்எல். நிறுவனம் 2007ம் ஆண்டு மிகவும் ரகசியமான
முறையில் அமைத்துக் கொடுத்தது. இதுதொடர்பான கோப்புகளை
நான் தற்செயலாக கண்டு திடுக்கிட்டேன். மொத்தம் 323
இணைப்புகளை ரகசியமான முறையில் கொடுத்திருந்தனர்.

மிகவும்நவீனமான எக்ஸ்சேஞ்ச் அது. ஒரு ஜோடி ஆப்டிகல் பைபர்
மூலம் அதை இணைத்திருந்தனர். மிகப் பெரிய
அளவிலான டேட்டாக்களை அதி வேகமாக அனுப்பும்
நவீனமுறையிலான இணைப்பும் கூட…..

இந்த இணைப்புகள், ஐ.எஸ்.டி.என்.,
(Integrated Switching Digital Network) அதாவது பெரிய
அளவிலான படக்காட்சிகள் மற்றும் தகவல்களை பெறவும்,
அனுப்பவும் பயன்படுத்தக்கூடியவை. “

————

முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின்,
323 இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக,
2007-ல் முதல் தடவையாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.

இந்த இணைப்புகளை வழங்கியபோது, வேலுச்சாமி என்பவர்,
சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளராக இருந்தார்.
பின்னர் ஓய்வு பெற்றுவிட்டார்.
இவரிடம், பி.எஸ்.என்.எல்.,
நிர்வாகம், முதலில் இணைப்பு குறித்து விசாரணை நடத்தியது.
பின்னர் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியபோது,
விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்களை,
சென்னை தொலைபேசி அதிகாரிகள், பின்னர் சி.பி.ஐ.,
அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் சில
ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.

ரெய்டு நடந்த பின், தயாநிதிக்கு ஆதரவாக -அவருக்கு மிகவும்
வேண்டியவரான, ஏற்கெனவே ரிடையராகியிருந்த திரு.வேலுச்சாமி
இந்த இணைப்பு குறித்த தகவல்களை –
சென்னை தொலைபேசி அலுவலகத்திற்கே சென்று, அழிக்கவும்,
திருத்தவும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது.
இதற்கு, சென்னை தொலைபேசி அலுவலகத்தின் சில முக்கிய
அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆவணங்களை அழிக்கும் முயற்சியை அறிந்து கொண்ட,
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் அதற்கு
கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

ஆவணங்களை திருத்தும் முயற்சிக்கு, சென்னை தொலைபேசி
அதிகாரிகள் துணை போகக் கூடாது என்பதை வலியுறுத்தி,
சம்மேளனத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்.,
ஊழியர்கள், தலைமை பொதுமேலாளர் அறையை 20/10/2011
அன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

—————–

முன்பு சன் டிவி நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர்
அவர்களால் வெளியே அனுப்பப்பட்ட சக்சேனா
இதுகுறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளார் –

” சிபிஐ விசாரணையின்போது எங்களைக் காப்பாற்றிக் கொள்ள
உண்மையைக் கூறினோம். போட் கிளப்பில் தயாநிதி மாறன்
வீட்டுக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல். இணைப்புகளின்
ஒரு பகுதி பட்டினப்பாக்கம் சன் டி.வி. அலுவலகத்துக்கும்,
மற்றொரு பகுதி நுங்கம்பாக்கம் ஆண்டர்சன் சாலையில் வசித்த
அப்போதைய சி.ஓ.ஓ. சரத்குமார் வீட்டுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபர் கேபிள்
அமைக்கப்பட்டிருந்தது. இதில் சரத்குமார் சன் டி.வி. நிறுவனத்தை
விட்டு வெளியேறிதும், அந்த இணைப்புகள் கல்லூரி சாலையில்
வசித்த எனது வீட்டுக்கு மாற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட கண்ணன், ரவி ஆகிய
இருவரும்தான் இணைப்புகளை வழங்குவது, தொழில்நுட்ப
பிரச்னைகளை கையாளுவது போன்றவற்றை செய்தனர்.
இதை நாங்கள் எங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளோம்.

————-

என்ன தான் ஆவணங்களை அழிக்க முயற்சிகள் நடந்திருந்தாலும்,
பூமிக்குள் 7 கி.மீ. தொலைவிற்கு பதிக்கப்பட்டிருந்த
கேபிள் வரிசை முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
அவற்றை பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிதாக வாங்கி இருந்தால்,
அவற்றிற்கான ஆவணங்கள், அல்லது தங்கள் ஸ்டாக்கிலிருந்தே
எடுத்திருந்தால், அதற்கான ஆவணங்கள்,

குழிதோண்டி பதிப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்ட
ஊழியர்கள், அல்லது காண்ட்ராக்டில் பணி கொடுக்கப்பட்டிருந்தால் -அதற்கான விவரங்கள் – என்று எப்படியும் சில ஆவணங்கள்
நிச்சயமாக இன்னும் இருக்கவே செய்யும்.

இதைத் தோண்டி எடுத்து கைப்பற்றுவது சிபிஐ-க்கு
ஒரு பெரிய விஷயமே இல்லை.

———————————-

இனி, நேற்று தயாநிதி மாறன் செய்தியாளர் சந்திப்பில்
கூறியவற்றிற்கு – திரு குருமூர்த்தி அவர்கள் கொடுத்துள்ள
விளக்கங்களிலிருந்து சில பகுதிகள் –

s.gurumurthy

” எனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று தயாநிதிமாறன்
சொன்னதை பற்றி நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால், 2007-ம்
ஆண்டு தான் இந்த விசாரணை தொடங்கியது. (அப்போது
பதவியில் இருந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு )

குற்றச்சாட்டை சி.பி.ஐ. தான் அப்போது பதிவு செய்தது…
323 ஐ.எஸ்.டி. இணைப்புகள் தயாநிதிமாறன் வீட்டில் –
பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் பெயரில்
பதுக்கப்பட்டு இருந்தது.

அதாவது, கம்ப்யூட்டரில் இல்லாத,
சில பேருக்கு மாத்திரம் தெரிந்த மாதிரி –
இந்த 323 இணைப்புகள் பதுக்கப்பட்டு,
அதில் இருந்து பாதாள குழி தோண்டி கேபிள் மூலம்
சன் டி.வி.யில் இணைத்தார்கள்.

இதுபற்றி விசாரித்த சி.பி.ஐ., இது உண்மை –
இது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அனுமதி
தேவை என்று 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார்கள்.

அப்போது தயாநிதிமாறன் தி.மு.க.வில் இல்லை.
அவர் 2007-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க.வை விட்டு விலகினார்.
அதன்பிறகு, 2008-ம் ஆண்டு திரும்பவும் தி.மு.க.வில் இணைந்தார்.
(கண்கள் பனித்தன…..)
இணைந்த பிறகு இந்த வழக்கு மட்டும் நடக்காமல்
பார்த்துக் கொண்டார்கள். அதனால்தான் இவ்வளவு நாள் தாமதம்.

அது 2011-ம் ஆண்டு வெளியில் கொண்டுவரப்பட்டது.
அதாவது நான் இதை வெளியில் கொண்டுவரவில்லை.
சி.பி.ஐ. கண்டுபிடித்ததை வெளியில் கொண்டு வந்தேன்.

இந்த புலன்விசாரணையை நான் செய்யவில்லை.
சி.பி.ஐ. செய்தார்கள். அவர்கள் செய்த விசாரணை பதுக்கி
வைக்கப்பட்டிருந்தது, மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதை தாமதமாக்கினார்கள். கிட்டத்தட்ட அதை
மறைப்பதற்கான எல்லா முயற்சிகளும் நடந்தபோது
அதை நான் வெளியில் கொண்டுவந்தேன்.

வெளியில் கொண்டுவந்தபோது தயாநிதிமாறன் இப்போது என்ன
கூறுகிறாரோ, அப்போதும் அதைத்தான் கூறினார்.
என்னிடம் ஒரேயொரு இணைப்புதான் இருந்தது என்கிறார்.

அப்போது தயாநிதிமாறன் செய்த தவறு என்னவென்றால்,
இந்த 300 இணைப்பு எப்படி இருந்தது என்றால்,
24371500 – 24371799 என்று மொத்தமாக இருந்தது.

அதில் இவர் அமைச்சராக இருந்து, பின்னர்,
ராஜினாமா செய்த பிறகு எனக்கு இதில் 2 இணைப்பு மட்டும்
கொடுங்கள் என்றார்.

அப்போது இந்த நம்பர் எங்கே இருக்கிறது என்றே
தெரியவில்லை, தேடுகிறார்கள். பி.எஸ்.என்.எல். குறிப்பில்
எழுதுகிறார்கள். அதாவது, நாங்கள் தேடிப்பார்த்தோம்,
கடைசியில் அது எங்கு கிடைத்தது என்றால், மாம்பலம்
தொலைதொடர்பு அலுவலகத்தில் போய் பார்த்து,
கடைசியில் அது தயாநிதிமாறன் வீட்டில் இருந்தது
என்று சொன்னார்கள்.

இந்த 2 இணைப்பையும் அவரது வீட்டிற்கு கொடுக்க வேண்டும்
என்றால், இந்த 300 இணைப்புகளையும் நீக்க வேண்டும் என்று
எழுதினார்கள்.

323 இணைப்புகள் அவரது வீட்டில் இருந்ததா இல்லையா?.
இவர் சொல்கிறார், என்னிடம் ஒரு இணைப்புதான் இருந்தது,
குருமூர்த்தி அவதூறாக எழுதியிருந்தார். அவர் மீது 10 கோடி
ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று சொன்னார்.
உடனே நான் ஒரு கட்டுரை எழுதினேன். ‘‘வரவேற்கிறேன் மாறன். என்னிடம் உண்மை எல்லாம் இருக்கிறது. என்மீது மானநஷ்ட வழக்கு போடுங்கள்” என்றேன்.
இதுவரை ஏன் போடவில்லை?.

மானம் உள்ளவர்கள் தானே
மானநஷ்ட வழக்கு போட முடியும்…?

இன்றைக்கு சொன்ன பொய்யைத்தான் அன்றைக்கும் அவர்
சொன்னார். என் மீது வழக்கு போடுங்கள் என்று சொன்னபோது
ஏன் நிறுத்தினார்?. ஏன் தெரியுமா…?
அவரால் இந்த பொய்யை சொல்ல முடிகிறது. மீடியாவில்
யாரும் இதை படிக்கவில்லை. படித்து அவரை கேட்டிருந்தால்,
“ஏன் சார்.. நீங்கள் 2011-ம் ஆண்டே அவர் மீது மானநஷ்ட வழக்கு
போடுவேன் என்று சொன்னீர்கள். அவரும் மானநஷ்ட வழக்கு
போடுங்கள் என்று சவால்விட்டார். நீங்கள் ஏன் போடவில்லை?”
– என்று கேட்டால் அவரால் –
இன்று இந்த பொய்யை சொல்ல முடியுமா?
அவர் கூறுவது எல்லாம் அப்பட்டமான பொய்….

இதை நான் 2011-ம் ஆண்டு வெளிப்படுத்தியபோது சி.பி.ஐ.
எதுவும் நடவடிக்கை எடுக்காததால், 2013-ம் ஆண்டு நான்
சுப்ரீம் கோர்ட்டு போனேன். 2014-ம் ஆண்டு ஜனவரியில் சி.பி.ஐ.
சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் எப்.ஐ.ஆர். போடுகிறோம் என்று
உத்தரவாதம் கொடுத்தார்கள்.

அப்போது யார் பவரில் இருந்தது….?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் இருந்தது…. !!!

அந்த சி.பி.ஐ. தான் இந்த எப்.ஐ.ஆர்.-ஐ பதிவு பண்ணினார்கள்.
அதன் பிறகு நடவடிக்கை தொடர்வதற்கு காரணம் –
சுப்ரீம் கோர்ட்டில் இவர்கள் உத்தரவாதம் கொடுத்ததால்
தானே தவிர, இந்த (பாஜக) அரசாங்கம் எதுவும் செய்ததாக
நான் சொல்ல மாட்டேன்…!!

—————————

இந்த விவரங்களை எல்லாம் பார்த்த பிறகு –
நேற்று தம்பி தயாநிதி செய்தியாளர் கூட்டத்தில்
பேசியதையும் நினைத்துப் பார்த்தால் –

என்ன தோன்றுகிறது…?

பதட்டத்தில் – தம்பி அவசரப்பட்டு விட்டார்…
இன்னும் கொஞ்சம் நிதானமாக யோசித்துப்
பேசி இருந்தால் –

கொஞ்சமாவது – நம்புகிறமாதிரி பேசி இருக்கலாம் …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to தயாநிதி – ரகசிய எக்ஸ்சேஞ்ச் – அழிப்புக்கு பிறகும் தப்பியிருக்கும் ஆவணங்கள்……!!!

 1. N.S.M. Shahul Hameed சொல்கிறார்:

  ரஜினி: நா ஒரு தடவ சொன்னா, அது நூறு தடவ சொன்ன மாதிரி! ஹா ஹா ஹா!
  மாRUN: நான் ஒரு லைன் போட்டா அது 323 லைன் போட்ட மாதிரி!
  அய்யய்யோ! அய்யய்யோ!
  குருமூர்த்தி: நான் ஒரு கம்ப்ளைண்ட் பன்னினா, அது ஊரே கம்ப்ளைண்ட் பன்ன மாதிரி! grin emoticon

 2. palanichamy சொல்கிறார்:

  இந்த குற்றசாட்டுமுன்புஇருந்ததுதான்.K+D-KD[K/கலாநிதி,+D/தயாநிதி]

 3. gopalasamy சொல்கிறார்:

  Long time before, when i was talking with a friend, who was working in Tata Telecom in a higher position, he told, that Reliance did this favor to Sun TV and that Tata refused to do that. This is just hearsay like talk only.

 4. seshan சொல்கிறார்:

  if every thing goes correctly ….this judgement may be the fist nail for DMK coffin….
  (looks red hand capture)

 5. SUBBU சொல்கிறார்:

  THESE PEOPLE IF THEY GET FREE SANDAL PASTE THE WILL APPLY IT EVERYWHERE
  IN THEIR BODY. WHOSE MONEY THEY SPEND? TV BROADCASTING AT THE COST
  OF TAX PAYER’S MONEY.. 2G MONEY WERE STASHED IN EVERY CORNER OF THE WORLD.
  THEY WANT TO COMEBACK TO POWER TO LOOT MORE.

 6. Ganpat சொல்கிறார்:

  The Algorithm for Indian Corruption.
  இன்னும் பத்து வருஷம் கழித்து ,
  சிபிஐ விசாரித்துக்கொண்டிருக்கும்
  மாறன், தன் அரண்மனை போன்ற இல்லத்திலிருந்து,
  விளக்கம் அளித்துகொண்டிருப்பார்.
  காவிரிமைந்தன் தெளிவான பதிவுகள் போட்டுக்கொண்டிருப்பார்.
  கண்பத் கீழ்கண்ட பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பார்.
  “இன்னும் பத்து வருஷம் கழித்து ,
  சிபிஐ விசாரித்துக்கொண்டிருக்கும்
  மாறன், தன் அரண்மனை போன்ற இல்லத்திலிருந்து,
  விளக்கம் அளித்துகொண்டிருப்பார்.
  காவிரிமைந்தன் தெளிவான பதிவுகள் போட்டுக்கொண்டிருப்பார்.
  கண்பத் கீழ்கண்ட பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பார்.”
  😉 🙂 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உங்கள் பின்னூட்டத்தில் ஒரு சிறு திருத்தம் கொண்டு வரலாமா …?

   ” இன்னும் பத்து வருஷம் கழித்தும் ,
   சிபிஐ விசாரித்துக்கொண்டிருக்கும்.
   மாறன், தன் அரண்மனை போன்ற இல்லத்திலிருந்து,
   விளக்கம் அளித்துகொண்டிருப்பார்.”


   காவிரிமைந்தன் – போய்ச் சேர்ந்திருப்பார்….!!!
   இந்த வலைத்தளத்தின் செயல்பாடு நின்று போயிருக்கும் …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Ganpat சொல்கிறார்:

  அய்யா! முதல் முறை நீங்கள் எங்கள் மனம் நோகும்படி பதில் கொடுத்துள்ளீர்கள்..நீங்கள் நூறாண்டுகள் சௌக்கியமாக வாழ்ந்து எங்களை வழி நடத்த இறைவனை வேண்டுகிறேன்.

 8. Paiya சொல்கிறார்:

  We all pray for your long life since you only write facts which all news channels fails to do .

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்கள் – கண்பத், ஷரான், பையா,

  நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு மிக்க நன்றி.

  இருப்பதும், போவதும் – நம் கையில் இல்லை;
  எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட விஷயம்
  என்று நான் நம்புகிறேன்…

  இருந்தாலும், என் வயதையும் –
  தற்போதைய உடல்நிலையையும் –
  கருத்தில் கொண்டு ஒரு கணிப்பாகத்தான் –
  அந்த கருத்தைத் தெரிவித்தேன்.

  Active- ஆக இருக்கும் வரை தான் மனிதர்
  வாழ்வதில் அர்த்தம் இருக்கிறது – இல்லையா..?

  செயல் திறனோடு இருக்கின்ற வரை மட்டுமே –
  இவ்வுலகில் இருக்க அருள் செய் இறைவா
  என்று வேண்டிக்கொள்கிறேன்.

  மீண்டும் உங்களுக்கு நன்றியுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   அன்பின் கா.மை.

   தமிழைக் கொலைசெய்து
   தமிழர்களை வயிற்றலடித்து
   தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதையே
   என்றும் கொள்கையாகக் கொண்டவர்கள் எல்லோரும்
   எழுபது, எண்பது, தொண்ணூறு, செஞ்சுரி
   என்று இருந்துகொண்டிருக்கும்போது….

   தமிழ் வாழவேண்டும்
   தமிழர் வயிறு குளிரவேண்டும்
   தமிழ்நாடு தப்பிக்கவேண்டும்
   என்பதை கொள்கையாகக் கொண்டவர்கள்
   எ…………..வ்……….வ…………ள………..வு நாள் இருக்கலாம்.

   (உங்களை மட்டும் சொல்லவில்லை; பொதுவாகச் சொல்லுகிறேன்)
   அவர்கள் எல்லோரும் இருக்கவேண்டும் என்று எண்ணுங்கள்.

   Active ஆக இருக்கவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்.

   🙂 🙂
   ஆக்டிவ்வோ பாஸிவ்வோ வாய்ஸ் இருக்கும் இல்லையா!

   ————–
   நாலுநாள் கம்ப்யூட்டர் மக்கர் செய்ததில் இண்டர்நெட்டுக்குள் வரமுடியவில்லை. அதற்குள் என்னென்ன அழும்பு செய்திருக்கிறீர்கள் நீங்களும் கண்பத்ஜியும். 🙂 🙂 இந்தப் பின்னூட்டங்களைத் தான் சொல்கிறேன்.

   • Sharron சொல்கிறார்:

    good encouragement.I always love to read your comments.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் todayandme.

    “ஆக்டிவ்வோ பாஸிவ்வோ வாய்ஸ் இருக்கும் இல்லையா!”

    “பஞ்ச்” பிரணமாதம் நண்பரே….!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    மிக அருமையாக நாங்கள் எண்ணியதை வார்த்தைகளில் வடித்தற்கு மிக்க நன்றி நண்பர் today.and.me அவர்களே !

 10. yarlpavanan சொல்கிறார்:

  எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

 11. avudaiappan சொல்கிறார்:

  pray longlive

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.