தயாநிதி எக்ஸ்சேஞ்ச் – ஆ.ராசா தோண்டிய முதல் குழி …. வெளிவரும் பல புதிய தகவல்கள்….!!!

thayanithi-1

திருட்டு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் தொடர்பாக பல புதிய
தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

2007-ல் அண்ணன் அழகிரியுடன் மாறன் சகோதரர்களுக்கு ஏற்பட்ட
பிரச்சினையால், மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டதும் – அதைத் தொடர்ந்து, தயாநிதி திமுக அரசுக்கு எதிராக பேட்டி
கொடுத்ததால், கலைஞரின் கோபத்தை சந்திக்க நேரிட்டது.

அதைத் தொடர்ந்து கலைஞர் உத்திரவின்படி, மத்திய அமைச்சர்
பதவியை இழக்க நேர்ந்தது.

தயாநிதியின் இடத்தில், புதிய தொலை தொடர்பு அமைச்சராக –
கலைஞர் – ஆ.ராசாவை பதவியில் அமர்த்த ஏற்பாடு செய்தார்.

தன் இடத்தில் ராசா அமர்வதைப் பொறுக்க முடியாத
தயாநிதி, அப்போது அரசல் புரசலாகத் துவங்கிய –
ராசா தொடர்புடைய 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ‘சன் டிவி’
உதவியோடு பூதாகாரமாக, விஸ்வரூபம் எடுக்க தன்னால்
ஆனது அனைத்தையும் செய்திருக்கிறார்.

ராசா பொறுத்துக் கொள்வாரா …? பதிலுக்கு இலாகாவில் –
தயாநிதி கையாண்டிருந்த பைல்களை தோண்டி இருக்கிறார்…!

அப்போது தான் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்
சங்கம் கிளப்பியிருந்த –
தயாநிதி வீட்டில் அமைந்திருந்த “ரகசிய எக்ஸ்சேஞ்ச்”
சம்பந்தப்பட்ட புகார் அவர் கைக்கு கிடைத்திருக்கிறது.

அந்த விவகாரத்தை பெரிய அளவில் வெளிக்கொண்டு வர
முயற்சி செய்திருக்கிறார். இலாக ரீதியாக விசாரணை நடத்தி,
அப்போதைய தொலை தொடர்புத் துறை செயலாளராக
இருந்த டி.எஸ்.மாத்தூர் மூலம் சிபிஐ விசாரணைக்கு
உத்திரவிட்டிருக்கிறார்.

சிபிஐ- இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர்
இந்த விஷயத்தை ஆராய்ந்து, 2007, செப்டம்பர் 10-ந்தேதி
தொலை தொடர்புத் துறைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், ஊழல் நடந்திருப்பதற்கான புகாருக்கு அடிப்படை
முகாந்திரம் இருப்பதாகவும், ஒரு இணைப்பு மூலமாகவே
ஒரு மாதத்தில் 48 லட்சம் யுனிட் கால்கள் பயன்படுத்தப்
பட்டிருக்கின்றன. எனவே 323 இணைப்புகள் மூலமாக
5 மாதங்களில் சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்
என்று சிபிஐ ரிப்போர்ட் கூறி இருக்கிறது.

ஆனால், ராசா இதை மேலே கொண்டு செல்வதற்குள்ளாக,
கலைஞர் குடும்பத்தில் “கண்கள் பனித்து… இதயம் இனித்து’
பிரிந்த உறவுகள் ஐக்கியமாகி விட்டன. எனவே, இந்த விவகாரம்
ஆழ்ந்த உறக்கத்திற்குள் போய் விட்டது.

ஆனால், ராசா விட்டதை, தொலை தொடர்பு ஊழியர் சங்கங்களும்,
பின்னர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களும் மேற்கொண்டு
செலுத்தி இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் – தயாநிதி-க்கு முதலில் குழி தோண்டிய பெருமை
திமுகவைச் சேர்ந்த அவரது பங்காளி ஆ.ராசா அவர்களுக்கே
போய்ச் சேர வேண்டும்… !!!

இந்த ரகசிய எக்ஸ்சேஞ்ச் தொடர்பான பல விஷயங்களை
வெளிக்கொண்டு வந்து, ஆரம்பம் முதலே தொடர்ந்து
போராடிக்கொண்டிருக்கும் பி.எஸ்.என்.எல்.தொழிற்சங்கத்தலைவர்
திரு. சி.கே.மதிவாணன்.

பல தகவல்கள் இவர் மூலம் தான் வெளிவந்தன – இன்னமும்
வந்து கொண்டிருக்கின்றன.

தயாநிதி வழக்கில் இவரும் ஒரு முக்கிய அரசு தரப்பிலான
சாட்சியாக இருக்கிறார்.

323 இணைப்புகள் குறித்து அவர் சொல்கிறார் –

323 இணைப்புகள் என்றவுடன் அவை தனித்தனியாக இருந்திருக்கும்
என்றும் பெரிய அலுஅலகம் போல் செயல்பட்டிருக்கும் என்றும்
நினைத்துக் கொள்ளக்கூடாது. தயாநிதி வீட்டில், சிம்பிளாக
ஒரு பெட்டி வைத்திருந்தார்கள். அந்தப் பெட்டியில் 323 இணைப்பு-
களுக்கான சர்க்யூட்டுகள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றும்
தனித்தனியாக செயல்படும் தன்மை கொண்டவை. அதாவது,
ஒவ்வொரு சர்க்யூட் மூலமாகவும், டேட்டா பரிமாற்றம், வீடியோ
பதவிறக்கம், வீடியோ பைல்கள் அனுப்புதல் ஆகிய பணிகளை
விரைவாகவும், அதிவேகமாகவும் தரமாகவும் செய்ய முடியும்.

இந்த தொழில்நுட்பம் தான் ஐ.எஸ்.டி.என். என்பது. பிராட்பாண்ட்
இல்லாத 2006 காலகட்டத்தில் அதுதான் நவீன தொழில்நுட்பம்.
அப்போது, தூர்தர்ஷனுக்கு கூட அந்த தொழில்நுட்பம்
வழங்கப்பட்டிருக்கவில்லை….!!!

இதை இப்போதும் நிரூபிக்க முடியும்…
இரு முனைகளிலும், இணைப்பை துண்டித்து விட்டாலும் கூட –
பூமிக்கடியே போடப்பட்ட கேபிள் இன்னமும் டம்மி கேபிளாக
அப்படியே தான் இருக்கிறது.
அதை ‘கேபிள் பால்ட் லொகேடர்’
( cable fault locator ) கருவியின் மூலம் சுலபமாக அந்த
கேவிள் செல்லும் பாதையையும், தன்மையையும் கண்டறிய
முடியும். தவிர, சாட்டிலைட் மூலமாகவும் இதைக் கண்டறியும்
தொழில் நுட்பம் உண்டு.

தயாநிதி மாறன், இது சம்பந்தமாகப் பேசும்போது
ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களுக்கு சவால் விட்டிருக்கிறார்.
முதலில், ஒரே ஒரு கனெக்க்ஷனை வைத்துக்கொண்டு எப்படி
323 இணைப்புகளை இயக்க முடியும் என்பதை குருமூர்த்தி
அவர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் அவர்
இதைச்செய்து காட்டினால், தான் அவருடன் விவாதத்திற்கு
வரத்தயார் என்றும் கூறி இருக்கிறார்.

தயாநிதி அவர்களின் ஆசையை பூர்த்தி செய்வதற்காகத்தான்,
சிபிஐ, தயாநிதியின் உதவியாளர் கௌதமன் மற்றும்
சன் டிவி ஊழியர்கள் இருவரின் கஸ்டடியையும் கேட்டிருக்கிறது.
அவர்கள் சிபிஐ கஸ்டடிக்குள் வந்து விட்டால் –

அவர்களைக் கொண்டே அந்த “இணைப்பு வைபவத்தை”
சிபிஐ செய்து பார்த்து விடும் வாய்ப்பு விரைவிலேயே கிட்டி விடும்.

அதன் பின்னராவது …..

——————————————————————-
பகுதி-2 (இது தனி – இடுகை தொடர்புடையதல்ல …!! )
( பின்னர் சேர்க்கப்பட்டது ) –

கீழேயுள்ள இரண்டு வீடியோக்களும்,
இந்த தளத்திற்கு வருகை தரும்
ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டியவை.

நண்பர் todayandme யின் விருப்பப்படியும் –
இன்னொரு முறை குடியரசுத்திருநாளை
கொண்டாடுவோமா நண்பர்களே ….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தயாநிதி எக்ஸ்சேஞ்ச் – ஆ.ராசா தோண்டிய முதல் குழி …. வெளிவரும் பல புதிய தகவல்கள்….!!!

 1. S.Selvarajan சொல்கிறார்:

  சேற்றில் மலர்ந்துள்ள ” செந்தாமரைகள் ” — குப்பையில் வாழும் ” கோமேதகங்கள் ” —- உண்மையான நாட்டு பற்று ! வேடிக்கை பார்க்க வந்து … விரட்டி அடிக்க பட்டு …. விந்தைகள் புரிந்த [ சாலையில் சென்ற அனைவரையும் ] நாட்டு பண்ணுக்கு வணங்க செய்த வறுமையிலும் பெருமை சேர்த்த வருங்கால ” வறுமையின் நிற சிவப்பு சிற்ப்பிகள் !! வாழ்க …. !!! பல கோடிகள் செலவு செய்து சுய விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள் — இந்த குறும்படத்தை பட்டி – தொட்டிகளில் காட்ட நடவடிக்கை எடுத்தால் நம் நாட்டின் பற்று அனைவரிடமும் மேலோங்கும் — செய்வார்களா சுயநலவாதிகள் ? இதை காட்சியாக்கிய அனைவருக்கும் கோடான கோடி சல்யுட்டுகள் !!!!!

 2. selvarajan singaram சொல்கிறார்:

  சேற்றில் மலர்ந்துள்ள ” செந்தாமரைகள் ” — குப்பையில் வாழும் ” கோமேதகங்கள் “

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  மேலே உள்ள 2 வீடியோக்கள் பற்றி –

  முதலாவதை ஏற்கெனவே சிலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.
  எனவே எந்தவித புதிய அதிர்வுகளும் இல்லாமல் சேர்த்தேன்.

  இரண்டாவதை இப்போது தான் முதல் தடவையாகப் பார்த்தேன்.
  அற்புதம்…!!! அதிர்ந்து போய் விட்டேன்.
  இதை அனைவரும் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன்.
  தனியாகப் போட்டால் நாட்டுப்பண் தானே என்று
  தவிர்த்து விட்டுப் போய் விடுவார்கள் …!!

  எனவே தான் ஒரு பரபரப்பான இடுகையின் கீழ் அதைச் சேர்த்தேன்.
  இப்போது நிறைய நண்பர்கள் பார்க்கிறார்கள்.
  மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி நண்பர் todayandme க்குத் தான்
  போய்ச்சேர வேண்டும்.

  முதலில் எழுதும்போது, இடுகைக்கும் இதற்கும் தொடர்பில்லை
  என்று எழுதி விட்டேன். இப்போது யோசித்துப் பார்த்தால்
  முழுக்க முழுக்க தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது.

  வாய் பேசாத, கைகால்கள் விளங்காத குழந்தைகளுக்கும்,
  குப்பை பொறுக்கும் சிறுவர்களுக்கும் இருக்கும் நாட்டுப்பற்று கூட
  இந்த பணத் திமிங்கிலங்களுக்கு இல்லையே…!

  எத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதித்த பின்னும் மீண்டும் மீண்டும்
  நாட்டைச் சுரண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்களே …

  இவர்களை எல்லாம் யார் வந்து திருத்தப் போகிறார்கள்
  அல்லது
  தண்டிக்கப் போகிறார்கள்….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.