தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசைக்கு இந்த தகவல் அவசர அவசரமாக பரிந்துரை செய்யப்படுகிறது …..

.

.

மோசடி வழக்கில் முன் ஜாமீன் பெற்ற பாஜக வேட்பாளரின்
வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதே பாஜக விற்கு கிடைத்த
மிகப்பெரிய வெற்றி
என்று கூறியுள்ள தமிழக பாஜக
தலைவருக்கு –

இப்போது தான் டெல்லியில் வெளியாகியுள்ள
கீழ்க்கண்ட செய்தி அவசர அவசரமாக
பரிந்துறை செய்யப்படுகிறது …..

சற்று முன்பு வெளியான டெல்லி செய்தி –

—————-
” டெல்லி தேர்தலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை
காரணமாக, டெல்லியில் வெற்றியை உறுதி செய்ய –
பாஜக தலமை புதிய அதிரடி முடிவொன்றை
இன்று எடுத்திருக்கிறது.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும், தொகுதி ஒன்றுக்கு
ஒரு மத்திய மந்திரி மற்றும் ஒரு எம்.பி. என்று மொத்தம்
70 மத்திய மந்திரிகளும், 70 எம்.பி.க்களும் நியமிக்கப்பட்டு
இருக்கிறார்கள். தேர்தல் முடியும் வரை அவர்கள் –
அவரவருக்கு கொடுக்கபட்டுள்ள தொகுதியிலேயே தங்கியிருந்து
பாஜக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்று
உத்திரவிடப்பட்டிருக்கிறது.”

தோற்கும் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பதவியில் நீடிக்க
உத்திரவாதம் கிடையாது என்று அவர்களிடம் தனித்து
சொல்லப்பட்டிருக்கிறதாம்….!!!

————

நம்மைப் பொறுத்த வரையில் – தமிழக பாஜக தலைவர்
தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரென்றே நம்புவோம்…!!!

—————————————————————-

மேலேயுள்ள இடுகைக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன்.
எல்லாரும் ரசிப்பீர்கள் என்று தோன்றியது…சேர்த்து விட்டேன்.
அம்புட்டுதேன் …..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசைக்கு இந்த தகவல் அவசர அவசரமாக பரிந்துரை செய்யப்படுகிறது …..

 1. ரிஷி சொல்கிறார்:

  தமிழக பாஜ தலைவருக்குத்தான் பதவி எதுவுமில்லையே. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத்தான் எந்தத் தொகுதி கொடுத்திருக்காங்கன்னு தெரியலை. அவருக்குத்தான் அடியில நெருப்பு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என்ன ரிஷி – நீங்கள் போய் இப்படிச் சொல்லலாமா …?
   இன்றைய தினத்தில் “தமிழக பாஜக தலைவர்” என்கிற பதவி
   எப்பேற்பட்ட பதவி ….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. today.and.me சொல்கிறார்:

  சொந்த மண்ணிலேயே – மொழி தெரிந்த இடத்திலேயே – ஓட்டூப்போடுபவர்களை நன்கு அறிந்த இடத்திலேயே – அரைகுறையாக அல்ல 100 சதவீத முழுப் பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட தேர்தல் வேலைகளையே – சொதப்பி ஒரே ஒரு சீட் (39க்கு 1ன்னா, எத்தனை பர்சண்டேஜ்? 2.564 ஆ..! 35/100தானே ஜஸ்ட் பாஸ்) வாங்குன ஆட்களை நம்பி ………..!

  அடுத்த மாநிலத்தில் – மொழி தெரியாத இடத்தில் – ஓட்டுப் போடுபவர்களை நேருக்கு நேர் அறியாத இடத்தில் – அரைகுறைப் பொறுப்புக்குக் கூட ஆகாதவர்களை நம்பி வேலை கொடுத்தால், பாஜகவின் நிலைமை ஐயகோ.

  இதிலும் இன்னும் ஒரு விசேஷம், அப்போது பாஜக சொல்வதையெல்லாம் செய்யும் என்ற நம்பிக்கையும், காங்கிரசின்மீதும் அவநம்பிக்கையும் பெருகியிருந்தது.

  இப்போது இரண்டுமே உல்டா. சொன்னதைச் செய்யவே மாட்டார்கள், அவர்களைச் செய்யவிடாததையெல்லாம் இப்போது விவகாரமாக அதிரடியாகச் செய்வார்கள் என்று அநேகமாக மூளை உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

  எனவே தமிழகத்தைச் சேர்ந்த பாஜக யாருமே தமிழ்நாட்டின் ஓட்டுவங்கிக்கு மட்டுமே (ஒருவேளை பயன்படலாம்) என்று தலைமை கணக்குப் போட்டிருக்கும்.

  இதையெல்லாம் மீறி, பொறுப்புக் கொடுத்தால் அட்டர் பிளாப்தான். அப்புறம் இவர்கள் பொறுப்பும் போய், தமிழக பாஜக என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். இப்போது தமிழக்காவும், பொன்னார் அவர்களும் மட்டும்தானே தபாஜகவில் இருக்கிறார்கள். இலகவையும் வானதியையும் கூட சமீபத்தியத்திய செய்திகளில் காணோம். இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சுவாமிகூட ஒரு அறிக்கையும் பாஜக சார்பாக விட்டதாகத் தெரியவில்லை.

  தபாஜக பொறுப்பாளர்கள் பதவிகளை இப்படியே, இருக்கிறபடியே தலைமை மெய்ட்டைன் பண்ணும் என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழகத்தில் பா ஜ கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் இவர்களுக்குப் பொறுப்புக் கொடுப்பதோ கொடுக்கநினைப்பதோ ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா’ போலத்தான்.

 3. S.Selvarajan சொல்கிறார்:

  ” Well trained MODI’S CROW ” இந்த காகத்தை போலவே ஒரு வாக்கையும் விடாமல் பொறுக்கி எடுத்து ஓட்டு பெட்டியில் விழ வைக்க டெல்லி தேர்தலுக்கு 70– மந்திரிகளும் — 70– எம்.பி. க்களும் போதுமா ? மற்ற மாநில தமிழிசை போன்ற காகங்கள் தேவையில்லையா ?

 4. இளந்திரையன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அய்யா அவர்களின் கவனத்திற்கு,

  தபாஜக “அக்கா”வின் சவால் செய்தி கீழே –

  ( http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=136973 )

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்: திருப்பதியில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, தமிழிசை சவுந்தரராஜன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

  ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிகார வர்க்கத்தின் பலத்தை எதிர்க்கொள்ள வேண்டுதல் செய்தோம். ஆளும் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பொய் காரணங்களை கூறி பாஜக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய மேற்கொண்ட முயற்சியில் நாங்கள் முதல் வெற்றி பெற்றுள்ளோம். பாஜகவின் வளர்ச்சியை பார்த்துதான், காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாமல், பாஜக வேட்பாளரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

  ஸ்ரீரங்கத்தில் எங்கள் கட்சியின் மாநில தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

  இதே அக்கா ரிசல்ட் வந்தவுடன் என்ன சொல்வார் ?

  39 மந்திரிகளும் ஒரு மாதம் இங்கேயே டேரா போட்டனர். அரசு இயந்திரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது
  முழு அளவில் அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. ஒரு இடைத்தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவிட்டனர்.
  ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் வரை கொடுத்தனர்.

  அத்தனையையும் மீறி மோடி மீது உள்ள அன்பால் மக்கள் பாஜகவிர்கு ஓட்டு போட்டனர். நாங்கள் வாங்கிய
  8000 ஓட்டு 80,000 ஓட்டுக்கு சமம். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
  2016 தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தே தீரும்.

  ஸ்ரீரங்கத்தில் ஜெயிக்க, அங்குள்ள ரங்கநாதரை வேண்டுவதை
  விட்டு விட்டு திருப்பதி போய் வெங்கடாசலபதி
  பெருமாளைக் கும்பிடும், அக்காவின் தன்னம்பிக்கை தானென்ன ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.