( பகுதி-2 ) – மகா “கனம்” பொருந்திய ……

.

hyd. house....

??????????????????

suit-1

கருப்பு நிற சூட் … இடையிடையே தங்க வண்ணத்தில்
(வெளிர் மஞ்சள்..?) கோடு போன்ற இழைகள். தூரத்திலிருந்து
பார்த்தால் சாதாரண சூட் போல் தான் தோற்றமளிக்கிறது.
ஆனால் அருகில் வந்து பார்ப்பவர்களுக்கு, அவை
கோடுகள் அல்ல -ஆங்கில எழுத்துக்கள், அதுவும் ஒரு
பெயரைச் சொல்லும் ஆங்கில எழுத்துக்கள் என்பது
தெரிகிறது. அந்த எழுத்துக்கள் சொல்வது –

N A R E N D R A D A M O D A R D A S M O D I

n.d.das modi coat

(தந்தையின் பெயரையும் உள்ளடக்கிய மோடிஜியின் பெயர் ..!)
அந்த நிகழ்ச்சியை விவரமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த
செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் –
கோட்டிலுள்ள வரியை பெரிது படுத்தி பார்த்திருக்கிறார்கள்.
உடல் முழுவதும் ( கோட்டு மற்றும் பேண்ட் ) தன் பெயரையே
அச்சடித்துள்ள துணியை அணிந்து கொண்டு தான் ந.தா.மோடி
அமெரிக்க அதிபருடன் விருந்துக்கு வந்திருக்கிறார் என்பது,
பரபரவென்று, சமூக வலைத்தளங்களின் மூலம் உலகம் முழுதும்
ஒரு மணி நேரத்திற்குள் பரவி விட்டது.

லண்டன் மற்றும் நியூயார்க், வாஷிங்டன் பத்திரிகைகள்
இதை விலாவாரியாக விமரிசித்து தனி இடுகைகள் போட்டன.
அவர்கள் தந்துள்ள தகவல்களின்படி –

லண்டன் பத்திரிகை – இங்கிலாந்தில் உள்ள ஷெர்ரி, ஹாலந்து
ஆகிய இரு நிறுவனங்கள்தான் அந்த கோட்- சூட் தயாரிப்புக்கான
துணி இழைகளை கொடுத்து இருக்கலாம் என்று எழுதின.
லண்டன் ஸ்டாண்டர்டு இதழ், அந்த ‘சூட்’டின் விலை குறைந்தது
பத்து லட்சம் ரூபாய் இருக்குமென்று எழுதியது.

ஆனால் ‘டெலகிராப்’ சொல்கிறது….

“நிச்சயமாகத் தெரியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு கிடைத்த
தகவலின்படி இந்த சூட்’டின் விலை 15,000 பவுண்ட்டுக்கு குறையாமல்
இருக்கும்.( அதாவது சுமார் 13.5 லட்சம் ரூபாய் …!!!)

இந்த துணி அவருக்கு இத்தாலியில் இருந்து அன்பளிப்பாகக்
கிடைத்தது -( திருமதி சோனியாவிற்கு இதில் தொடர்பு உண்டா
என்று அந்த செய்தியாளரே கேள்வி எழுப்பியுள்ளார்..)
அஹமதாபாத் (குஜராத்) நகரைச் சேர்ந்த ஜேட் ப்ளூ ( Jade Blue )
நிறுவனம் இதைத் தயாரித்தது. (தைத்தது).
இந்த உடையைத் தைக்க ஆர்டர் கொடுத்தது யாரென்பது
இன்னும் அறியப்படவில்லை…!!!

—–
“We were told that the fabric was a gift from Italy,
but we don’t know which company produced it and
who gifted it to him.
It was stitched by my brother, Bipin Chauhan,”
said Jitendra Chauhan,
the proprietor of Jade Blue.”

——

(அரசு நடத்தை விதிமுறைகளின்படி, அரசுப் பதவிகளில் இருப்போர்,
பொது மக்களிடமிருந்து தங்களுக்கு பரிசுகள் வரும்போது,
5000 ரூபாய்க்கு மேல் விலைமதிப்புடையதாக இருந்தால், அவை
அரசு கஜானாவில் அல்லது அதற்கான பொருட்காட்சிசாலையில்
ஒப்படைக்கப்பட வேண்டும். ஒரு வேளை அவர் அதை
தன்னிடமே வைத்துக் கொள்ள விரும்பினால் – அதன் மதிப்பிற்கு
ஈடான பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்த வேண்டும். )

ஒருவேளை இந்த சூட் ஒரு பரிசுப்பொருளாக இருந்தால் –
அதற்கான விலையை அவர் அரசு கஜானாவிற்கு செலுத்தியிருக்க
வேண்டும். அப்படி இல்லை, அவரே காசு கொடுத்து வாங்கினார்
என்றால், ஒரு சூட்’டிற்கு 13.5 லட்சம் ரூபாய் அளவிற்கு
செலவழிக்கும் மனோபாவம் அவருக்கு இருக்கிறது என்று அர்த்தம்..

தேர்தலுக்கு முன் கூட்டங்களில் பேசும்போது, மக்களிடம்
அவர் கூறிய வார்த்தைகள் ” நான் இந்த நாட்டின் ” பிரதம மந்திரி ”
என்ற பதவிக்கு என்னை தேர்ந்தெடுங்கள் என்று கேட்கவில்லை

இந்த நாட்டின் ” பிரதம சேவகன் ” என்கிற பொறுப்பில் அமர்ந்து
உங்களுக்கு சேவை செய்ய அனுமதியுங்கள்
என்று தான் கேட்கிறேன்.”

13.5 லட்சம் ரூபாய் சூட் போடும் ‘பிரதம சேவகன்’ –
பெருமைப்பட வேண்டிய விஷயம்….!!!

வெளிநாட்டு பத்திரிகைகள் இன்னும் சில
விஷயங்களைக் கூட விவாதிக்கின்றன –

இந்த டிசைனையும்,
அதற்கான ஆடையையும் தேர்ந்தெடுத்தது யார்…?

அதற்கான விலையைக் கொடுத்தது யார் …?

இந்த ‘சூட்’ தைக்கப்படும் முன்னர், துணியைத் தேர்ந்தெடுக்க
ஒரு முறையும், அளவு கொடுக்க ஒரு முறையும், fitness trial
பார்க்க ஒரு முறையும் – ஆக குறைந்த பட்சம் 3 முறையாவது
அவர் நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும்.
ஒபாமாவுடன் பேசும்போது தான் ஒரு நாளைக்கு 3 மணிநேரம்
மட்டுமே உறங்குவதாகக் கூறி இருக்கிறார். அதற்காக –
விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் அரசு வேலை தான்
செய்கிறாரென்று அர்த்தமில்லையே… இது போல் அவரது
ரசனைக்கு தகுந்தாற்போல் எவ்வளவோ பணிகள் …

அவர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 லிருந்து 7 தடவை
வரை உடை மாற்றுகிறார்…..

Obama-Modi2 (1)

வித்தியாசமான, வண்ண வண்ண ஆடைகளில் மிகவும்
ஆர்வம் கொண்டிருக்கிறார். தான் உடை அணியும் நேர்த்தியை
உலகம் பூராவும் உள்ள மக்கள் பார்த்து பிரமிக்க வேண்டுமென்கிற
ஆசை அவருக்கு இருக்கிறது….

பலர் social media க்களில் இதைப்பற்றி எல்லாம் விமரிசனம்
செய்வதும், கிண்டல், கேலி, செய்வதும் அவருக்கு தெரியாமலா
போகும்… இருந்தாலும், இவற்றை எல்லாம் பார்த்து
தன் போக்கை மாற்றிக் கொள்ளும் வழக்கம் அவருக்கு கிடையாது….

ஒரே ஒரு கேள்வியை இன்னும் யாரும் கேட்கவில்லை –
(என்று தான் நினைக்கிறேன் …)

‘make in india” என்று உலகம் பூராவும் விளம்பரம் செய்து விட்டு,
பிரதமரின் உடைக்கான துணியை வெளிநாட்டிலிருந்தா( இத்தாலி…)
வரவழைக்க வேண்டும்….!!!

வேறு யாராவது இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் கூட
மக்களுக்கு இவ்வளவு வருத்தம் இருக்காது –

“அரை நிர்வாண பக்கிரி” என்று சர்ச்சிலால் வர்ணிக்கப்பட்ட –
நல்ல குளிர்காலத்தில் லண்டன் விஜயம் மேற்கொண்டபோது கூட-
வெறும் வேட்டியுடன் (மேலே சட்டை கூட இல்லாமல் ) போன,
மகாத்மா காந்தி அவர்களைப் போற்றுவதாகக் கூறும் –
அதே குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் –

வாழ்நாள் முழுவதும் எளிமையின் சின்னமாகத் திகழ்ந்த
அதே குஜராத்தைச் சேர்ந்த “சர்தார் வல்லபாய் படேல்”
அவர்களின் சீடர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் –

இப்படி எல்லாம் விளம்பர மோகம் பிடித்து அலைவது தான்
வேதனையாக இருக்கிறது.

ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன் –
மறுநாள் (26/01/2015) குடியரசு தின நிகழ்ச்சிகளில்
அமெரிக்க ஜனாதிபதியுடன் சேர்ந்து அமர்ந்திருந்தபோது –
அவரது body language – மற்றும்,
பனி கொட்டிக் கொண்டிருக்கும் போதும் –
மழை தூறிக்கொண்டிருக்கும்போதும் –
தொடர்ந்து கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தது …..!!!

mazhai peiyumbodhu cooling glass

இடுகையைத் துவங்கிய இடத்திற்கே திரும்பவும் வருகிறேன்.
narcissis என்றால் என்ன பொருள் …?
தமிழில் சொன்னால் கொஞ்சம் அதீதமாகத் தெரியும்…
( நண்பர் todayandme ஏற்கெனவே பின்னூட்டத்தில்
கோடி காட்டி விட்டார்…)

விக்கீபீடியா என்ன சொல்கிறது என்பதை மட்டும் கீழே தருகிறேன்.

wiki –

Narcissistic personality disorder (NPD) is
a Cluster B personality disorder[1] in which
a person is excessively preoccupied with
personal adequacy, power, prestige and vanity,
mentally unable to see the destructive damage
they are causing to themselves and to others in the process.

கடைசியாக நம்ம ஊர் பத்திரிகை “டைம்ஸ் ஆப் இந்தியா”
சொல்கிறது –

——–
Can we now say with some degree of certainty that
our prime minister has a narcissistic personality?
Yes, indeed, if the monogrammed striped bandh gala
suit with his full name Narendra Damodardas Modi
in gold is any indication.

———-
The narcissistic leader has difficulty accepting criticism
and he may be overly optimistic concerning his
possibility of success while underrating the adversary.
Modi displays these characteristics.

Photographs of Modi embracing Barack Obama,
gratuitous laughing, giggling or making
unnecessary hand gestures or even wearing
designer shades on a perfectly cold,
foggy and rainy Republic Day were meant to tell the
people of India on the kind of relationship
that he enjoyed with the world’s most powerful man.

—————

இறுதியாக ஒரு சந்தேகம் –

கடந்த வருடம் மே மாதத்திற்கு முன் –
தொடர்ச்சியாக, 4 -5 மாதங்களுக்கு
பாராளுமன்ற தேர்தலுக்கான பேரணிகளில் –

ஊர் ஊராக, மாநிலம் மாநிலமாகச் சென்று,
பெருந்திரளான மக்களைத் திரட்டி,
அற்புதமான சொற்பொழிவுகளை நிகழ்த்தி,
மக்களைக் கவர்ந்து –

அவர்களிடையே இந்த நாட்டை உய்விக்க
இன்னொரு சர்தார் படேல் தோன்றி விட்டார்
என்கிற நம்பிக்கையை ஊட்டி –
ஒளிமயமான எதிர்காலத்தை இவராவது காட்டுவார்
என்று நம் அனைவருக்கும் நம்பிக்கையளித்த
நரேந்திர மோடி என்கிற நபர் இவர் தானா ?

எப்படி நிகழ்ந்தது இது …?
நாம் தான் ஏமாந்து விட்டோமா ( தேர்தலுக்கு முன்..) ?
அல்லது
அவர் தான் ஏமாற்றி விட்டாரா ( தேர்தலுக்குப் பின்…)…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

33 Responses to ( பகுதி-2 ) – மகா “கனம்” பொருந்திய ……

 1. M.Syed சொல்கிறார்:

  /// எப்படி நிகழ்ந்தது இது …?
  நாம் தான் ஏமாந்து விட்டோமா ( தேர்தலுக்கு முன்..) ?
  அல்லது
  அவர் தான் ஏமாற்றி விட்டாரா ( தேர்தலுக்குப் பின்…)…? \\\\\

  அவர் நன்றாக ஏமாற்றினார். நம் நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக ஏமாறினோம்.

  நன்றி
  M.செய்யது
  Dubai

 2. S.Selvarajan சொல்கிறார்:

  இந்தியா ” ஒரு ஏழைகள் நாடு ” …. ? ஒட்டு போட்ட உடையில் தைக்க இடமில்லை … 70% மக்களுக்கு … ஆனால் பிரதமரின் கோட்டில் தங்க நிறத்தில் கோடுகள் —- அதில் பெயர் ! சூப்பர் !! சிறு வயதில் ” டீ கடையில் வேலைபார்த்த ” ஒருவர் உயர்ந்த பதவிக்கு வந்தபின் — அன்று நிறைவேறாத பல ஆசைகளின் விளைவு தான் இந்த மாதிரி நடந்து கொள்ள தோன்றுகிறதோ … என்னவோ அதன் பெயர்தான் இதுவாக : –Narcissistic personality disorder (NPD) is
  a Cluster B personality disorder[1] in which
  a person is excessively preoccupied with
  personal adequacy, power, prestige and vanity,
  mentally unable to see the destructive damage
  they are causing to themselves and to others in the process….. இருக்குமோ ? ஆட்சிக்கு வந்த 100– நாட்களில் … 100 — குர்தாக்கள் அணிந்தவர் என்கிற பழைய அவருடைய சாதனையை — அவரே முறியடிகிறாரோ —– !!!! 13.5 லட்சம் ரூபாய் சூட் போடும் ‘பிரதம சேவகன்’ –
  பெருமைப்பட வேண்டிய விஷயம்….!!! இந்தியா வளர்ச்சி பாதையில் ….?

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   மோடிஜீ டோண்ட் ஒரி!
   நீங்க என்ன ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்திலா எழுதி இருக்கீங்க?
   அதுவும் உங்க பேரைத்தானே எழுதினீங்க!
   மத்ராஸிகளுக்கு ஹிந்திதான் ஆகாதுன்னா இப்போ இங்லீஷ்லேயும் பிரச்சனை பண்றாங்களே!
   ஆல்ரெடி நீங்க 3D-லே ஒரே நேரத்தில் உலகம்பூறா இருக்கிறவர். எது ஒரிஜினல் மோடீன்னு ஒபாமா குழம்பக்கூடாதுன்னு, நீங்க செஞ்சத புரிஞ்சிக்காதவங்களுக்கு, எப்படி சொன்னாலும் மண்டையில் ஏறாதே. விட்டு தள்ளுங்கள்.

 3. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  எந்த செய்தித்தாளிலோ,
  அரசியல் வார இதழ்களிலோ இந்த அளவுக்கு
  ஆழமான ஒரு மதிப்பீடு இதுவரை வரவில்லை.
  இவ்வளவு உச்ச பதவியில்
  இருக்கும் ஒருவருக்கு ஏன் இவ்வளவு கேவலமான
  ஆசைகள் ? மழை பெய்துக் கொண்டிருக்கும்போது
  கூலிங்க் கிளாஸ் போட்டுக்கொண்டிருக்கிறாரெ.
  மிக நியாயமான உங்கள்
  வாதங்களை மறுப்பதற்கு பிஜேபிகாரர்களே யோசிப்பார்கள்.
  உங்கள் வலைத்தளம் எங்களுக்கு ஒரு அரசியல் கல்லூரி போல.
  நன்றிகள் பலப்பல.

 4. sella சொல்கிறார்:

  “Before” and “After” are only for us. They are always the same; focused and hungry for power and pride.

 5. sella சொல்கிறார்:

  One thing I am noting is that now your salutation changed from ‘Modiji’ to ‘Modi’. I was not surprised as it was forced rather than planned. Still, we hope for the change to good cause

 6. R.Chandrasekaran சொல்கிறார்:

  எந்த சந்தேகமும் இல்லை, தேர்தலுக்கு முன் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்

 7. LVISS சொல்கிறார்:

  Before becoming PM he has been the CM of Gujarat for 3 terms -There has not been a single charge of corruption against him or his ministers – Are we to believe that having been the CM for so long he would not be aware of rules governing gifts -He may not say anything about the suit -Some day some one else may throw a light on it as to its price and who paid for it –Until then let us judge him for the work he does for the country –

  • Ramachandran. R. சொல்கிறார்:

   Mr.LVISS,

   Why should we wait for ” someday, some one”
   to come and tell us stories like “how bal narendra modi fought with the crocodile ?”
   You seem to be an ardent admirer of Mr.Modi.
   what is your explanation for the questions raised in the Blog ?

   //until then let us judge him for the work //

   of which work – ?
   keeping 30 % of his cabinet filled with corrupt persons ?
   keeping a minister in his cabinet who has an arrest warrant pending ?
   allowing a party MP who wants ladies of this country
   to be child producing machines ?

   Don’t be a Blind slave to any leader / party Sir.
   Please Try to Think and analyse independently and impartially.
   You can’t find a Blog anywhere in the net like this
   which makes very fair analysis and allows free discussions.

   • LVISS சொல்கிறார்:

    Thank you, Ramachandran Sir In a country which has seen non governance for some years , we are seeing things moving –Mr Modi was thoroughly misunderstood in Srilanka issue and his friendship with Rajapakshe which was purely political –Mr Modi will remain the most misunderstood and criticised politician in India — I did not know much about him when he was the CM of Gujarat — I began to know more about him when I learnt about the changes he brought about in the administration in Delhi in a short span of time — Again , let us judge him by the work he does for the country —
    Like many I am a dialy reader of this blog —

    • today.and.me சொல்கிறார்:

     Dear LVISS
     //I learnt about the changes he brought about in the administration in Delhi in a short span of time//
     Could you please annotate?
     Your answers will surely help not only to Arvind Kejriwal but to all here.

     • LVISS சொல்கிறார்:

      The following articles which I came acrossin websites will give an idea –(The Govt took charge in May if my memory serves me right )
      Hindustan Times -Article updated 15-6-2014 Working culture among beauracrats improves under Modi PMO
      Business Line Article Dt 10.9.14 -Central Ministers can clear projects upto Rs 1000 crore (Earlier limit was Rs 300 crores-)

    • today.and.me சொல்கிறார்:

     //let us judge him by the work he does for the country//
     Cann’t we judge the first and foremost person of the country by the worked he does for himself?

     Then what was the purpose, he told ‘Vivekanandar, Gandhi, Patel, etc are my rolemodels’ ?

  • today.and.me சொல்கிறார்:

   //Some day some one else may throw a light on it as to its price and who paid for it –Until then let us judge him for the work he does for the country//

   பசி வயிற்றைக்கிள்ள
   கொஞ்சம் குருணை அரிசியிட்டு
   குடிக்க கஞ்சியாவது தாருங்கள் என
   இவரை அழைத்தால்
   கொஞ்சம் பொறுத்திரு
   குங்குமப்பூ இட்டு
   குலாப் ஜாமுனே கொடுக்கிறேன் என்கிறார்…
   முந்தய சமையல்காரர் ஒன்றும் செய்யவில்லை என்றாவது தெரிந்தது
   இவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை.
   பொறுத்திருப்போம்; அது புதிதல்லவே நமக்கு!.
   அறுபது ஆண்டுகள் அனுபவம் ஆச்சே அதில் நமக்கு.!

   Courtesy: Ganpat
   https://vimarisanam.wordpress.com/2014/12/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4/#comments

 8. drkgpDrkgp சொல்கிறார்:

  Dear K M ,

  This is your sharpest comment yet on the man whom we all thought
  would bring simplicity and elegance to the high office. The quantum
  of disappointment felt by us in this blog is alarming. Is it a magic
  that so many were made to believe ?

 9. today.and.me சொல்கிறார்:

  NaMo turned to ‘N A R E N D R A D A M O D A R D A S M O D I’ by himself.
  So, let us think, is this due to numerology?

  For cooling glasses, He may have ‘Delhi eyes’ like madras eyes.
  Don’t say NPD.
  🙂 🙂

  //எப்படி நிகழ்ந்தது இது …?
  நாம் தான் ஏமாந்து விட்டோமா ( தேர்தலுக்கு முன்..) ?
  அல்லது
  அவர் தான் ஏமாற்றி விட்டாரா ( தேர்தலுக்குப் பின்…)…?//

  We, Tamils & Indians
  whether educated or illiterate,
  whether seniors or juniors,
  whether ladies or gents,
  whether economically well of or below-powertylined

  வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிற வெள்ளந்தியாய் இருக்கிறோம்.

  பாண் க்ரீமும் கலர் டிரஸ்ம் போட்டு சினிமாவில நடிச்சாலும் நம்பி வோட்டு போடுறோம்

  பவுடரும் பைஜாமாவும் போட்டு கூடவே கும்பிடும் போட்டு மேடையில நடிச்சாலும் நம்பி வோட்டு போடுறோம்

  நல்லவங்கள் ஆ இருந்தா பரவாயில்ல. ரொம்ப நல்லவங்கல்லா இருந்தா இப்படிதான் பொலம்ப வைப்பாங்க.

  போங்க. போய் புள்ளகுட்டிகள படிக்கவைக்கிற வேலைய பாருங்க.

 10. Sharron சொல்கிறார்:

  I have a friend over here . He is a Gujarathi.He told me before election itself about him.He strongly said, Don’t expect anything good from Modi. He will not do.He is just like other politicians only.I think my friend is right.

 11. எழில் சொல்கிறார்:

  இதற்கு முன் உலக தலைவர்களில் யாராவது இப்படி ஒரு சூட் அணிந்திருக்கிறார்களா என்று தேடினால் எகிப்தின் சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்து பின் மக்களால் தூக்கி வீசப்பட்ட ஹுஸ்னி முபாரக் அணிந்திருக்கிறார்.

  Are we going to see some simirarity here? 🙂

  http://www.firstpost.com/living/inspired-by-hosni-mubarak-modi-meets-obama-wearing-a-suit-with-his-name-on-it-2064471.html

 12. வானரம். சொல்கிறார்:

  சோனியா ‘காந்தி’, அமித் ஷா , நிதின் கட்காரி எல்லோரும் குடியரசு தின நிகழ்ச்சிகளை ஒரே வரிசையில் அமர்ந்து
  பார்க்கும் போட்டோவ பார்த்ததும் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் .

  கழக தலைவர்கள் கிட்ட இல்லாத அரசியல் நாகரீகம் இவங்க கிட்ட இருக்குதேன்னு சந்தோஷப்படுவதா ?
  இல்ல இவங்க எல்லாரும் சேர்ந்து நம்மள ஏமாத்துறத பார்த்து வருத்தப்படுவதானு தெரியலையே சாமி .

 13. Ganpat சொல்கிறார்:

  கா.மை ,today.and.me உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

  கா.மை ஜி,நம் வலைத்தளம் நாளுக்கு நாள் பொலிவு அதிகரித்துக்கொண்டு வருகிறது.உங்கள் கடும் உழைப்பு தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது.வாழ்த்துக்கள்.மேலும் நீங்கள் ஒவ்வொரு பிரச்னையும் எழுதும் விதம் நடு நிலையோடு ஒரு சாதாரண மனிதனும் எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைகிறது.வரும் பின்னூட்டங்கள் (குறிப்பாக today.and.me) அதற்கு அணி சேர்க்கிறது.

  ஆங்கிலத்தில் “From frying pan to the fire” என்று ஒரு சொலவடை உண்டு.அது இந்தியர்களுக்கு இப்பொழுது சாலப்பொருந்தும்.என்ன நடக்கிறது இங்கே?ஏதோ சமையல் வாயு உதவீட்டு தொகைதான் நாட்டின் பொருளாதாரத்தையே பின்னோக்கி தள்ளுவதைப்போல அதை அழிக்க வேகமாக செயல் படும் அரசு, கருப்பு பணம், ஊழல் மந்திரிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் பற்றி எதுவும் செய்வதாக தெரியவில்லை.

  இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமெரிக்க அதிபரின் வருகை .அதையொட்டி உருவாக்கப்பட்ட அமர்க்களம்.ஷங்கர் படம் தோற்றது.இதையும் மக்கள் சட்டை செய்வதாக தெரியவில்லை.பார்த்தார் பிரதமர் ..தன சட்டையையே கோதாவில் இறக்கினார்.பக்தர்கள் ஹரே ராம் என்று எழுதப்பட்ட சால்வைகளை அணிந்துகொள்வதைப்போல மோடி தன பெயரை எழுதிய சட்டையை அணிந்து சரித்திரம் படைத்தார்.

  இந்திய மக்களில் பெரும்பானோர் இடுப்பில் அணியும் துணயோடு சரி என்ற வறுமையை கண்ணுற்ற மகாத்மா தன் மேலாடையை விடுத்து ஏழைகளோடு ஏழையாய் வாழ்ந்து காட்டினார்.அதே குஜராத்தில் பிறந்த மோடி தன பெயரை சட்டை முழுவதும் எழுதி தன மனோபாவத்தை காட்டுகிறார்.
  “இதில் என்ன தவறு?” என்று கேட்கும் மோடி பக்தர்களை ஒன்று கேட்கிறேன்.இதே போல சோனியாவோ,ராகுலோ அல்லது மன்மோகனோ செய்திருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்.? மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லுங்கள்.

  ஆனாலும் எனக்கு அதிக வருத்தம் இல்லை.நாம் ஏதோ காந்தியையும் காமராஜரையும் அகற்றி விட்டு மோடியை கொண்டுவரவில்லை.காங்.அடித்த கூத்து தாங்காமல் ஒரு மாற்று தேடியபோது இவர்தான் பளிச்சென்று தென்பட்டார்.எனவே தேர்ந்தெடுத்தோம்.(அவர் இன்னமும் பளிச்சென்றுதான் இருக்கிறார் என்பது வேறு விஷயம்)அதுவும் தவறான முடிவு போலத்தான் தோன்றுகிறது.
  மற்றபடி நாம் எஜமானர்கள்.எந்த பிரதம மந்திரியும் நம் சமையல்காரர்களே.நமக்கே தெரியாமல் எந்த ஒரு உணவும் எந்த சமையற்காரரும் ரகசியமாக சமைக்கவேண்டிய அவசியம் இல்லை.

  இன்னும் ஒரு குட்டு உள்ளது அதன் பெயர் பட்ஜெட்அதுவும் இந்த மாத கடைசியில் உடைந்து போகும்.பார்க்கலாம்.

  • today.and.me சொல்கிறார்:

   //மற்றபடி நாம் எஜமானர்கள்.எந்த பிரதம மந்திரியும் நம் சமையல்காரர்களே.//

   கண்பத் ஜி,
   உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் இன்னொரு சந்தேகம் வந்துவிட்டது.

   சமையல்காரர் :
   சமைக்காமல் விட்டுவிட்டு பட்டினியாலேயே இந்த எசமானன் சாகட்டும் என்றுவிட்டால் என்ன செய்வது?

   அப்போதைக்குத்தெரியாததுபோலவும், மெதுவாக உடம்புக்குள் சென்று வேலைசெய்வதுபோலவும் எதையாவது கலந்து கொடுத்துவிட்டால் என்னசெய்வது?

   எதையாவது ஸ்ரைட்டாக ஏறுக்குமாறு ஐட்டங்களாகக் கொடுத்துவிட்டால், அன்றைய எசமானர்கள்போல நாம் பூனை, மாடு, காக்காய்களுக்கு வைத்து டெஸ்ட்பண்ணி பின்பு சாப்பிடும் வசதி இல்லையே? என்ன செய்வது…

   மற்றபடி, அவர்கள் எதைக்கொடுத்தாலும் நம்பி சாப்பிடும் நிலையிலாவது, தங்கள் நடிப்பை மெய்ட்டைன் பண்ணுவார்கள் என்று நம்புவோமாக.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உங்கள் நல் வார்த்தைகளுக்கு நன்றி.

   சில சமயங்களில் நான் கொஞ்சம் கோபப்பட்டு,
   உணர்ச்சி வசப்பட்டு எழுதுகிறேன் –
   எனவே கொஞ்சம் வேகம் இருக்கக்கூடும்..

   ஆனால், நீங்கள் உணர்ச்சி வசப்படாமல்,
   அனேகமாக, மிகச்சரியாகவே எழுதுகிறீர்கள்..

   நான் உங்கள் “விமரிசன”த்தை ஏற்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 14. Tyagarajan சொல்கிறார்:

  சுயமோகன்

 15. visujjm சொல்கிறார்:

  அனைத்தும் அர்ப்பணிப்போடு விற்பனை செய்ய ஆவண வேலைகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றது… இந்தியா ஒளிர்கிறது என்ற பதம் மாறி இந்தியா மிளிர்கிறது என்ற பதம் அதிவிரைவில்…

  சீனா அதிபர் – குஜராத் வருகையின் போது – குடிசைகள் திரைசீலைகளால் மூடப்பட்டதாம்… ஆதாரம் புதிய தலைமுறை~புதுப் புது அர்த்தங்கள்~கடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் கூறியதை காதில் கேட்டதாக ஞாபகம்…

  போபாலின் மீதி ~ ¶¶¶ தமிழகத்தின் தற்போதைய “கோபால்” மீத்தேன் …

  மிளிரவும் ஒளிரவும் ஏழைக்கும் வாய்ப்பு உண்டோ…?

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் visujjm,

   ஆதாரத்தை இப்படிக்கொடுத்துவிடுங்கள். அப்பொழுதுதான் மோடிபக்தர்களுக்கு கொஞ்சம் மூச்சுவிட முடியும், இல்லையென்றால் எப்படி அப்படி சொல்லலாம் என்று கொதித்துவிடுவார்கள்.
   புதியதலைமுறை ஆதாரம்,வி.சி. சொன்னதாக கேட்டதாக என்பதெல்லாம் ஒப்புக்கொள்ளப்படமாட்டாது.
   🙂 🙂

   Sept. 17, 2014, News souce: PTI
   http://www.rediff.com/news/report/curtains-over-slums-speed-breakers-removed-ahmedabad-spruces-up-for-xi/20140917.htm

 16. நாரதன் சொல்கிறார்:

  மோடிக்கு ஒட்டு போட்டது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக தான்..

 17. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி
  // ‘make in india” என்று உலகம் பூராவும் விளம்பரம் செய்து விட்டு,
  பிரதமரின் உடைக்கான துணியை வெளிநாட்டிலிருந்தா( இத்தாலி…)
  வரவழைக்க வேண்டும்….!!! //

  சென்னையில் பிரபலமான பட்டுப்புடவைக் கடையில் திருமணப்பட்டு எடுக்கும்போது பெண் மாப்பிள்ளையின் பெயர்களை காஞ்சிப்பட்டு முந்தானையில் அல்லது கரையில் நெய்து தருகிறார்கள், PERSONALISED, DESIGNERWEDDING COLLECTIONS, ON SPECIAL ORDER.

  காதி கிராப்ட் அல்லது கதர் துணிகளில் எழுத்துக்களை நெய்யும் வசதி இருக்கிறது.

  நெய்யவேண்டாம், அச்சாக வேண்டுமானால், இக்கட், மதுபனி, பட்டோலா ……….. என்று வாயில் நுழையாத பெயர்களெல்லாம் இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் ட்ரெடிஷனல் டெக்ஸ்டைல் பிரிண்ட்டிங் வகைகள். அப்படியெல்லாம் செய்திருந்தால் இந்தியாவின், இந்திய நுண்கலைகளின் மீது உலக அரங்கின் வெளிச்சம் பட்டிருக்கும். ஆனால் இப்போது மோடி கோட்டின் மீது மட்டும் தான். இதை என்னவென்று சொல்வது? அற்பனுக்கு வாழ்வு வந்தால் ….. என்று சொல்லக்கூடாது. அவர் அற்பன் அல்லர், ஆயிரம் கோடி மக்களின் பிரதமர்.
  ம்ம். வேறு என்னதான் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

  பிரதமர் ஆணையிட்டால் The National Handloom Development Corporation தனிப்பட்ட டிசைன்களை ‘make in india’ செய்யாதா?
  …………………………………
  http://www.fibre2fashion.com/industry-article/market-research-industry-reports/textile-printing-in-india-traditional-approach/textile-printing-in-india-traditional-approach1.asp
  லிஸ்ட்-ல் முதலில் வருவதே குஜராத்தான்.

  The main centers of traditional printing in India are as follows:
  Bhuj, Jamnagar and Ahmedabad in Gujarat.
  Udaipur, Jodhpur, Ajmer, Kota, Bagru, Sanganer and Barmer in Rajsthan.
  Indore, Bagh, Ratlam, Gwalior, Mandsore, Neemach and Ujjain in Madhya Pradesh.
  Varansi, Lucknow, Farukhabad, Kasipur, Kannuaj, Kanpur, Mathura, Mirzapur and Fatehpur in Uttar Pradesh.
  Nasik, Nagpur, Khandesh and Mumbai in Maharasthra.
  Bangalore, Manglore and some parts of north in Karnataka.
  Vijaywada, Chirala, Machalipattanam and Srikalahasti in Andhra Pradesh.
  Kumbarnam, Tanjore, Tuni, Kodalikaruppur and Chennai in Tamil Nadu.
  Sreerampur, Murshidabad and Kolkata in west Bengal.
  Bastar in chattisgarh.
  …………………………………
  பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து.

  இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
  சீரல் லவர்கண் படின்.

  என்று குறள்களை மாற்றிமாற்றிப் போட்டு நம்மை நாமே தேற்றிக்கொள்ளவேண்டும்.
  …………………………………
  பி.கு.
  பின்வரும் பொன்மொழி:
  இதில் வரும் வெங்காயத்துக்கும் பாஜக அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
  பாஜகவுக்கும் சமஸ்கிருதத்திற்காகவும்தான், இந்தத் துக்கடா. 🙂 🙂

  कर्पूरधूलिरचितालवालः कस्तूरिकापंकनिमग्ननालः, गंगाजलैः
  सिक्तसमूलवालः स्वीयं गुणं मुञ्चति किं पलाण्डुः
  If an onion plant is grown in camphor bed, musk is used as a soil for it, or it is watered with Ganga-jala (the holiest of the waters), will it give up its characteristic pungent odour? The central idea is that a person’s basic character remains the same, no matter what efforts you take to change him.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   O My God…!!!

   அசத்துகிறீர்கள் நண்பரே (today.and.me ).
   உங்கள் ஆர்வமும், உழைப்பும், எழுத்தும் – என்னை
   பிரமிக்க வைக்கின்றன.

   மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 18. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இரண்டு பதிவுகளும் படித்தேன். அந்த உடை நார் நாராகக் கிழிந்துவிட்டது போங்கள்!

  எனக்கு இன்னோர் ஐயம்! அந்த ஆடையில் இருக்கும் எழுத்துக்கள் இந்திய ரூபாய்த் தாளின் நீரோட்டக் கம்பியில் பயன்படுத்தப்படும் அதே எழுத்துருவில் இருக்கின்றனவே, இதற்கென்ன பொருள்?… ஒருவேளை அவ்வளவு சிறிதாக அச்சிடுவதற்கு அந்த எழுத்துரு மட்டும்தான் இருக்கிறதா, அல்லது வேறு ஏதும் காரணமுண்டா?…

  இந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்களில் அணு உலை தொடர்பான உடன்படிக்கைகள் பற்றி விவாதிக்கவே நிறைய இருக்கிறது என்று கடந்த பதிவில் கூறியிருக்கிறீர்கள். அதற்காகத் திகிலோடு காத்திருக்கிறேன். நன்றி! வணக்கம்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.