ஆசைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள் …

olai paai, palagai thalaiyanai, bootha kannaadi - kanchi munivar( படுத்திருப்பது ஓலைப்பாயில்,
மரப்பலகை தான் தலையணை,
சிறிய எழுத்துக்களைப் படிக்க பக்கத்தில் பூதக்கண்ணாடி-
நம்மால் கனவில் கூட காண முடியாத ஒரு எளிமை …

——
13.5 லட்சம் சூட்’டைப் பார்த்தால் – எனக்கு கோபம்
வந்தால் – அது தவறா …? )

kanchi sage

காஞ்சி மாமுனிவர் ஒருமுறை சொன்னர் –
” மனுஷனாய் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல்
அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே…
எதற்காக?

தனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான்…!
வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை.

ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை.
அதனால் வருகிற சுகம் தீர்ந்துபோகிறது.
இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான்.
அவற்றைப் பெறவே அலைகிறான்.

இவனுக்குள்ளேயே ” இயல்பான உள் ஆனந்தம்”
என்கிற ஒன்று
மகா சமுத்திரம் மாதிரி நிறைந்திருப்பதை அவனால்
உணற முடிவதில்லை.

பதவி, பணம், கௌரவம், பப்ளிசிட்டி என்று
வெளியிலிருந்து தான் நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக
எண்ணிக்கொண்டு ஓயாமல் அதற்காக பிரயத்தனம் செய்வது,
எப்படி இருக்கிறது என்றால் –
அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல்
ஒரு சொட்டு ஜலத்துக்காகத் தவிக்கிற மாதிரிதான்”

சத்தியமான வார்த்தை …!

ஆனால் என்னைப் பொருத்த வரையில் –
ஆசைகள் அற்ற பின்பும் அலைச்சல் தொடர்கிறதே…ஏன்..?

—————————————————————

page-1
page-2
page-3
page-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

37 Responses to ஆசைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள் …

 1. Ganesan சொல்கிறார்:

  All the best.

 2. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம். சார்,

  வாழ்த்துக்கள். நீங்கள் நூறாண்டுக்கு மேல் வாழ்ந்து,
  உங்கள் வாழ்விலேயே மாறுதல்கள் நிகழ்வதைக்
  காண வேண்டும். நன்றி.

  • Udhaya Kumar சொல்கிறார்:

   கே.எம். சார்,

   வாழ்த்துக்கள். நீங்கள் நூறாண்டுக்கு மேல் வாழ்ந்து,
   உங்கள் வாழ்விலேயே மாறுதல்கள் நிகழ்வதைக்
   காண வேண்டும். நன்றி

 3. Sridhar சொல்கிறார்:

  Dear Sir,

  I salute your Perseverance and the seed you have sown for the future.

  Seeking your blessings.
  Sridhar

 4. Srini சொல்கிறார்:

  Respected KM Sir,
  Hearty Congratulations for reaching 10-Lakh hits for this blog. I pray to GOD to give you Good health, positive energy and a peaceful life for many many more years. We all need your guidance and blessings for ever. GOD bless you and your family.
  Sincere Pranams,
  Srini

 5. drkgpgp சொல்கிறார்:

  ஆசையேஅலைபோல நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே…..
  Dear K M. ,
  Are we moneymaking machines?
  If not why do people accumulate so much beyond the needs of
  many more generations to come?
  Is it a genetical fault?
  Or is it due to the environmental effect , trying to emulate a relative, friend,
  coworker or neighbor ?
  It is the paucity of good people or leaders. to emulate.
  It would be a tremendous effort if you can create a change of heart at least
  In a handful of people.

  On behalf of everybody in this blog,, I wish you a grand success in your
  endeavor and also wish you a very long life to achieve it.

 6. இரா.சிவக்குமார் சொல்கிறார்:

  அன்பிற்குரிய அய்யா,

  வணக்கம்!

  மிக மகத்தான பணிகளையே தாங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்!
  இருபத்தைந்து வயதுள்ள துடிப்பான இளைஞன் நாட்டுப்பற்றுடன் என்ன
  செய்வானோ, அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள்.

  நீங்கள் நல்ல வண்ணம் வாழ வேண்டும்… உங்களோடு நாங்களும் தொடர்ந்து
  பங்கேற்க வேண்டும்…

  வணங்குகிறேன்!

  இரா.சிவக்குமார்
  மதுரை

 7. Ganpat சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  என்ன இருந்தாலும் உங்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராது.. 🙂
  உங்கள் நல்ல ஆசையை,தன்னலம் அற்ற ஆசையை, நிறைவேற்றி வைக்ககூடிய சக்தி யாரிடம் உள்ளதோ,அவரின் ஒரு அரிய புகைப்படத்தை முகப்பாக போட்டு அவரின் ஆசியையே பெற்று விட்டீர்களே ! உங்கள் வேண்டுகோள் நிச்சயமாக நிறைவேறும்.ஒரு நல்ல மனிதருடன் நட்பாக இருப்பதில் எங்களுக்கும் பெருமையே!
  நன்றி வணக்கம்.

 8. S.Selvarajan சொல்கிறார்:

  திரு.கா.மை. அவர்களுக்கு ! திடிரென்று தங்களின் இந்த பதிவுக்கு என்ன காரணம் என்று எங்களுக்கு புரியவில்லை ! எங்கே செல்லும் இந்த பாதை — யாரோ … யாரோ … அறிவார் !! மனித நேய பாதையில் செல்லும் உங்களின் பாதையை நாங்கள் மறந்து போக மாட்டோம் ….. என்பது மட்டும் உறுதி …..!!! மன சஞ்சலமின்றி தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் —-வாழ்வீர்கள் என்கின்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம் .

 9. Ganpat சொல்கிறார்:

  ஒன்று சொல்ல விட்டு போய் விட்டது..
  13.5 லட்சம் சூட் ஏற்படுத்திய சூட்டை,
  10 லட்சம் ஹிட் நன்றாக தணித்து
  குளிர்வித்து விட்டது.
  வாழ்க

 10. Siva சொல்கிறார்:

  KM sir,
  We hope one day the inequality situation will change soon. As soon as the people realize the effect of inequaluty, a revolution will happen throughout the word to bring economic and social equality. In fact, it is going to be the main focus of many countries in the feature!
  Good luck to you for your writing and thanks for your effort and time on good blogging!
  With regards
  Siva

 11. Saravanakumar சொல்கிறார்:

  உங்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது சார்.. உங்களின் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். தினமும் படித்து வந்தாலும் இன்று தான் பின்னூட்டம் இடுகிறேன்… உங்களை வாழ்த்துக்கும் அளவிற்க்கு வயாதோ அனுபவமோ இல்லாத காரணத்தால் இறைவனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்..

 12. today.and.me சொல்கிறார்:

  அன்பின் கா.மை,

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைகள், ஆசைகள்.
  ஆசைகளைத் துறந்தவர்களுக்கும் பற்று உண்டு.
  ஒருவருக்கு புத்தகம், படிப்பு, ஞானம், அறிவு
  இன்னொருவருக்கு நிம்மதி, சுகம், பரமானந்தம்
  மற்றொருவருக்கு பதவி, அதிகாரம், புகழ்….

  ஒருவருக்குக் கொஞ்சமே கொஞ்சம்,
  இன்னொருவருக்கு மத்திம அளவில்,
  மற்றொருவரின் அளவுக்கு எல்லையே இல்லை.

  இருந்துவிட்டுப்போகட்டும். பற்று எதன்மீதாவதோ, எந்த அளவிலாவதோ இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால் ‘அந்த ஆசைப்பட்டதை’ அடைவதற்கு எத்தனைபேரை பலியாக்குகிறார் என்பதில்தான் அவர் மகானாவதும், பக்தனாவதும், மனிதனாவதும், மிருகமாவதும்.

  ஒருவரை மாதிரி மற்றொருவர் இருக்கமுடியாது. இருக்கவேமுடியாது.

  எங்கோ 1% அல்லது 0.1% வேறுபடத்தான் செய்கிறது.
  அந்த fraction அவரவர் தனிக்குணம்.

  தான் ஆசைப்பட்டது தனக்குப் பயன்படுமா? தன் குடும்பத்துக்குப் பயன்படுமா? தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன்படுமா? என் ஊருக்குப் பயன்படுமா? நாட்டுக்குப் பயன்படுமா? மனிதனின் ஓட்டத்தை நிர்ணயிப்பதில் பயனும் ஒரு காரணிதான். இந்த ஓட்டமும் பயனும் இலக்கும் நல்லதாக இருந்தால் ஓடுகிற மனிதனுக்கு வேண்டிய பலம், ஆயுள், ஆரோக்கியம், அறிவு, புத்தி இன்னபிற எல்லாவற்றையும் இயற்கையோ இறையோ அளிக்கும். அளிக்கத்தான் செய்யும்.

  மகாமுனிவர், முற்றும் துறந்தவர். ஆனாலும் அறிவின்மீது தாகம். அவர் அப்படி எளிமையாக இருந்தது, மற்றவர்களும் அப்படி இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவதற்காக அல்ல. அவர் வாழ்ந்தமுறையினால் இன்ஸ்பையர் ஆகி நாமும் அவரைப்போல வாழ முயல்கிறோம்.

  அவர் நாட்டை ஆள, அதிகாரம் செலுத்த, புகழைப் பெற ஆசைப்பட்டாரா? இல்லையே. நமக்கு comfortable dress அவருக்கு comfortable இல்லை.

  உங்களுக்கு comfort ஆன dress பிரதமருக்கு ஆகும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம். என்ன!, அவர் ‘எனக்கு காதி ஜிப்பாதான் comfort, என்னிடம் மூன்று செட் ட்ரெஸ்தான் இருக்கிறது, மூன்றுமணிநேரம் தான் உறங்குகிறேன்’ என்றெல்லாம் சொல்லியிருக்கக்கூடாது. வாய்தவறி அவர் உண்மையைச் சொல்லியிருந்தால் சாமியாகி இருப்பார். இப்படி ஆசாமியாக இருக்கமாட்டார். 🙂 🙂
  அப்படி சொல்லாவிட்டால், மக்களே ! ஓட்டுப்போடுவீர்களா?

  பத்துலட்சம் ஹிட்ஸ் உங்களுக்கு ஒன்றுமேயில்லை. ஆனால் ஹிட்ஸையும் ட்ராபிக்கையும் குறித்துக் கவலைப்படுபவர்களும் இங்கு வருகிறார்கள், போகிறார்கள்.

  விட்டுத்தள்ளுங்கள். விசயத்தை கொஞ்சமாவது தலைக்குள் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள் என்பதில் சந்தோஷம்.

  ————
  ஆமாம், இத்தனை நாளா நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு, இப்போ என்ன திடீர்ன்னு மெல்ட் ஆகி இப்படி ஒரு பதிவு.
  அதுவும் கையாலேயே எழுதி…….
  பி.கு.: யாராவது உங்களை ‘ரொம்பத்தான் ஆசைப்படுறே’ என்று சூடேற்றிவிட்டார்களா?
  ————

  BY THE WAY, இந்த 4 பக்கத்துக்குள்ள ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை, அடித்தல் திருத்தல் இல்லை, முக்கியமானதெல்லாம் அண்டர்லைன்ட், வேண்டிய இடத்தில் கமா, புள்ளி, கொட்டேஷன், ஹைபன், கேள்விக்குறி, ஆச்சரியக்குறி..
  ரசிகமணி டி.கே.சி. அவர்கள் அறிமுகப்படுத்திய கடிதஇலக்கியம் முரசொலிக்கும் முகவுக்கும் மட்டும்தான் பயன்படுகிறதோ என எனக்கு பலநாள் சந்தேகம். அது இன்று தீர்ந்தது.

  பலர் படித்துக் கற்றுக்கொள்ளவேண்டிய ‘கடித இலக்கியம்’ இன்றும் நடைமுறையில்.

  மீண்டு(ம்) எழுத வேண்டுகிறேன்.

 13. M. Syed சொல்கிறார்:

  திரு.K.M அவர்களுக்கு

  நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  M.Syed
  Dubai

 14. avudaiappannvudaiappan சொல்கிறார்:

  pray long and happy life

 15. srinivasanmurugesan சொல்கிறார்:

  வாழ்த்துகள் அய்யா

 16. selvam சொல்கிறார்:

  God Bless You
  Have a good bealth and pleaseful moments continue.
  we can together to make the change.

 17. Vijayakumar சொல்கிறார்:

  God Bless you K.M Ji.

 18. D. Chandramouli சொல்கிறார்:

  Dear KM
  I salute you for your passion in what you are attempting to do through your insightful writings. May you be blessed with good health and long life.

 19. visujjm சொல்கிறார்:

  அடக்கம் பணிவு பண்பு ~ தாங்கள் (இரு கைகூப்பி வணங்கி சொல்கிறேன் எஃகு நரம்பு கொண்ட நரசிம்மரே)
  நிச்சயம் நமது இல்லம் கோடி பதிவர்களை தாண்டி 2020 ஆண்டில் அடிஎடுத்து வைக்கும். இறைவன் அருள் தங்களுக்கு நான் கூறாமலேயே ஏராளம்…

  நிச்சயம் பண்போடு வாழ்வோர் வீழ்வதில்லை நண்பரே…

  வாழ்வாங்கு வாழ சீர் படுத்தும் தங்கள் எழுத்து யாவருக்கும் ஊன்றுகோல் முக்காலமும்…

  ஓம் நமசிவாய…

  ஜெய்ஹிந்த்…

 20. ramanans சொல்கிறார்:

  அன்புள்ள காவிரி மைந்தன்.

  வாழ்த்துக்கள். வயதை ஒரு பொருட்டாகக் கொண்டு மனத் தளர்வுறாமல் நல்ல பல விஷயங்களை தேடித் தேடி அளிக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள்.

  நீங்கள் சொல்லியிருக்கும் இந்தத் தேடல் குறித்து நானும் அடிக்கடிச் சிந்திப்பதுண்டு.

  எல்லாரும் எல்லாமும் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்ததுண்டு. அதிகாரத்தில் உள்ளவர்கள் கோடிகளில் குளிக்க, நூற்றிற்கும், இருநூறிற்கும், ரேஷன் பொருட்களுக்கும் கூட்டத்தில் மிதியுண்டு, வசை வாங்கி மனம் நொந்து வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கண்டு மனம் வருந்தியதுண்டு.

  இன்றும் இந்த வருத்தம் போகவில்லை.

  ”பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்” என்று வள்ளுவர் போலச் சபிப்பதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியு?

  அதிகாரம் என்பது மகா போதை. புகழாசை என்பது சாமான்யனையும் சக்கரவர்த்தியாக ஆகத் துடிக்க வைக்கும் எனும் போது.. சக்கரவர்த்திகளை…

  காந்தி போன்ற ஊருக்கு உழைத்த மெழுகுவர்த்திகள் வாழ்ந்த தேசத்தில் தான் இத்தகைய ஏழேழ் தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்து வைக்கும் இன்றைய சக்கரவர்த்திகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏழைகளைப் பற்றிக் கொஞ்சமும் அக்கறையில்லை. கவலையுமில்லை.

  இறைவனாகப் பார்த்து இவர்கள் மனதை மாற்றினால்தான் உண்டு.

  முன்பெல்லாம் பழி பாவத்திற்கு அஞ்சி கொஞ்சமாவது மனசாட்சியோடு நடந்து கொண்டார்கள்.

  ”கடவுளே இல்லை; எல்லாம் கல். ஆரியர்களின் சதிதான் கடவுள் என்ற கருத்துருவாக்கம். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் (யார் கூட வேண்டுமானாலும்) வாழலாம் பாவம், புண்ணியம் என்பதெல்லாம் பொய்.” என்றெல்லாம் கூறும் ”விஷக்கிருமிகள்” பரவிய பின்பு என்ன செய்வது?

  அவர்கள் மனநிலையை மாற்றி, எல்லோர் மனதிலும் எங்கோ ஓர் ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் ”மனிதம்” உயிர் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியப் பிரார்த்திப்போம்.

  ஓம்.

 21. கலிகாலம் சொல்கிறார்:

  ஐயா காவிரிமைந்தன் அவர்களே,
  முதலில் உங்கள் முயற்சியை சரியான நோக்கத்துடனும் தெளிவான கண்ணோட்டத்துடனும் கொண்டு செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. அதை நீங்கள் சிறப்பாக செய்து பின்னூட்டங்களையும் பரந்த மனப்பாங்குடன் எதிர்கொள்வது மேலும் சிறப்பு. இந்த குணங்கள் தான் உங்களது, ஏன் இந்த வலைத்தளத்தின் அஸ்திவாரமும் கூட.

  கடவுள் மேல் பற்று கொண்டு அவரின் அடியார்களாக இருந்த இவரைப்போன்ற குருமார்கள் மத்தியில் தன்னையே கடவுள் என்று சொல்லி அவரைப்போல வேஷம் போட்டு மனிதர்களின் எண்ணங்களை தூண்டி அவர்களை திசை திருப்பும் கமர்ஷியல் காஸ்ட்லி சாமியார்கள் என்னும் அரக்கர்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். கலிகாலம் எனும் இந்த கொடிய காலம் மனிதனுள் இன்னும் பல அற்ப சந்தோஷங்களை நெஞ்சில் சுமக்க வைத்து அவர்களை மிருகங்களை விட மஹா கேவலமாக தெருவில் சுற்ற விட்டு, அவர்கள் எதை நோக்கி பயணம் செய்ய வேண்டுமோ அதற்கு எதிர்திசையில் பயணிக்க சொல்கிறது. இதை உணராத அறியாமையில் வாழும் எவ்வளவோ கோடி மக்கள் ஒரு பக்கம் பண-வறுமையில் வாடுகிறார்கள் மறுபுறம் மன-வறுமையில் வாடுகிறார்கள்.

  காலம் கூடி வரும். நமது அந்த நாள் தூரம் இல்லை, திரும்பி சரியான பாதையில் ஓடும் நாள் நெருங்கும். நம்புவோம், முயற்சிகளை தொடர்வோம்.

 22. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  கே.எம். சார்,

  வாழ்த்துக்கள்…

  70 vayathu ilaignanukku…

 23. Thiyagarajan சொல்கிறார்:

  Congratulation sir.

 24. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வாழ்த்துக்களைத் தெரிவித்த
  நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

  நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துக்கள் –
  நான் மேலும் தொடர்ந்து –
  உற்சாகமாக உழைக்க உதவும் டானிக்.

  நன்றியுடனும்,
  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 25. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!

  ஐயா! எழுபது வயதில் தாங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இயங்கி வருவதே அரும்பெரும் செயல்! உடல் உரமிக்க இளைஞர்களுக்கே வாரத்துக்கு ஒரு பதிவு போடுவதற்குள் வாய் வற்றி விடுகிறது. ஆனால் தாங்களோ, இந்த வயதிலும், சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பதிவு வெளியிட்டு விடுகிறீர்கள். அதுவும், பதிவு ஒவ்வொன்றும் தலையாய சமூகத் தொண்டர் ஒருவரின் உள்ளக்குரலாக உரத்து ஒலிப்பதைப் பார்க்கிறோம். இது சாதாரண விதயம் இல்லை!

  சமூக அக்கறையுள்ள மூத்த பெரும் அரசியலாளர் ஒருவர் எப்படி நாள்தோறும் நாட்டு நடப்பை உற்றுக் கவனித்து அதற்கேற்ப எதிர்வினைகள் புரிவாரோ, அப்படித்தான் தாங்கள் திகழ்கிறீர்கள். அரசியலில் நடக்கும் சின்னஞ்சிறு மாற்றங்களைக் கூட உள்வாங்கி, அவற்றால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்ன, கடந்த காலத்தில் இது தொடர்பாக நடந்த வரலாறு என்ன என்றெல்லாம் ஆராய்ந்து, தெளிவாக, தீர்க்கமாக உடனுக்குடன் தாங்கள் எழுதும் நடுநிலை வழுவாப் பதிவுகள், எதிர்காலத்துக்கான கருத்து-வரலாற்றுக் கருவூலங்கள் என்றால் அது துளியும் மிகையாகாது. நீங்கள் மட்டும் இந்தச் சேவையை இப்படி வலைப்பூ மூலமாக இல்லாமல், ஏதாவது இதழ் வாயிலாகச் செய்திருந்தால் இந்நேரம் உங்கள் எழுத்து கண்டிப்பாக அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, சில மாற்றங்களையாவது நிகழ்த்தியிருக்கும் என நான் அடித்துக் கூறுவேன். என்ன செய்வது, அத்தகைய நன்மையெல்லாம் தமிழனுக்கு நடந்துவிட்டால் அப்புறம் கடவுள் எதற்காக இருக்கிறது?

  ஆனால், நீங்கள் கூறுவது போல ‘இன்றில்லாவிட்டாலும் நாளையாவது தங்கள் எழுத்துக்கள் இந்தச் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும்’ என்பதே என் நம்பிக்கையும். சக மனிதன் அழும்பொழுது நாம் மட்டும் எப்படிச் சிரித்து மகிழ்ந்து களித்து வாழ்வது என்கிற குற்றவுணர்ச்சியுள்ளவர்கள் ஒரு சிலர்தான் சமூகத்தில். அப்படிப்பட்டவர்களில் தாங்களும் ஒருவர் என்பது தங்களுடைய இன்றைய பதிவில் நன்றாகவே தெரிகிறது. இப்பேர்ப்பட்ட தங்களை வாழ்த்த வயதோ தகுதியோ எனக்குப் போதாது, கையெடுத்து வணங்குகிறேன்!

  தொடர்ந்து தாங்கள் இயங்க வேண்டும்! உங்கள் எழுத்துக்களால் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்ணாரக் கண்டு மகிழ வேண்டும்!

  நன்றி! வணக்கம்!

  • Ganpat சொல்கிறார்:

   மிக அருமையான பின்னூட்டம்.வாழ்த்துக்கள் நண்பர் ஞானபிரகாசன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஞானப்பிரகாசன்,

   உங்களுக்கு என் மீதுள்ள அன்பால், என்னை மிக உயரத்திற்கு
   கொண்டு சென்று விட்டீர்கள். நான் அந்த அளவிற்கு எல்லாம்
   தகுதியுடையவன் அல்ல. ஏதோ – என்னால் இயன்றதை,
   எனக்குத் தெரிந்ததை – செய்து கொண்டிருக்கிறேன் – அவ்வளவே.

   உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    இல்லை ஐயா! தங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருபவன் எனும் முறையில், அவை என் உள்ளத்தில் தங்களைப் பற்றித் தோற்றுவித்ததைத்தான் – என் மனதில் பட்டதைத்தான் – கூறினேன். தங்களுக்குப் பிடித்தவரான பாரதியாரின் சொற்களிலேயே கூற வேண்டுமானால், “இது உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை”. பதிலளித்தமைக்கு நன்றி! 🙂

 26. பாலமுருகன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் அய்யா

 27. gopalasamy சொல்கிறார்:

  We pray God for your good health and long life. A very few blogs are there only without having caste/religion/political affinity. We may differ sometimes with your views; but nobody can suspect your intention. You are doing a service to your society. We are proud of being your readers.

 28. புது வசந்தம் சொல்கிறார்:

  வாழ்த்துகள் ஐயா, சில அலுவல்கள் காரணமாக (பதிவு போடலாம்) உங்களது பக்கங்கள் படிக்கவில்லை. எளிமைக்கு உதரணமான மகான் எங்கே ? இவர்கள் எங்கே ? எல்லாம் பதவிக்கான வெளிவேஷம் மட்டுமே ? மறுமுறை ஒரு வாய்ப்பு நமக்கு உண்டு ? அவர்களுக்கு உண்டா என்பது மக்கள் கையில்.

 29. palaniappan சொல்கிறார்:

  congrulation sir

 30. rathnavelnatarajan சொல்கிறார்:

  வணக்கம். வாழ்த்துகள்.

 31. Parvatham சொல்கிறார்:

  Same thoughts.Same questions,sir.
  Endru Thanium Indha Veatkai.
  Thank you for the blog.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.