ஆஸ்திரேலியாவிலும் குஜராத் அடானி கொடுத்த லஞ்சம் எனப்படும் நன்கொடை …….

adani coal

ஆஸ்திரேலியா விலும் என்றால் என்ன அர்த்தம் சார் என்று
கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ஆஸ்திரேலிய தேர்தல் கமிஷன் கடந்த 2013-14-ஆம் ஆண்டில்
ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் ( ! )
பற்றிய விவரங்களை நேற்றைக்கு வெளியிட்டுள்ளது.

இதில் நமக்கென்ன செய்தி என்கிறீர்களா ..?

நம்ம ஊர் – குஜராத் புகழ் – தொழிலதிபர் அடானி அவர்கள்
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம்
வாங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா …? (அண்மையில்,
மோடிஜியின் ஆஸ்திரேலிய விஜயத்தின் போது ஒப்பந்தம்
கையெழுத்தானது நினைவிருக்கலாம்….! – ஒரு பில்லியன்
அமெரிக்க டாலர் அளவிற்கு state bank of india -கடனுதவி …!! )

அவர், ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலம் வரையில்
ஆளும் கட்சியாக இருந்த லிபரல் கட்சிக்கு 50,000 ஆஸ்திரேலியன்
டாலர் நன்கொடையாகக் கொடுத்த விவரம் இதில் உள்ளது.
(அதிகமில்லை – சுமார் 2.5 கோடி இந்திய ரூபாய் தான்..)

என்ன சார் அவ்வளவு தானா என்கிறீர்களா ?
நம்ம ஊரில் நிலம், வீடு, வாகனம் போன்றவைகளை
வாங்க /விற்க பேரங்கள் பேசி முடித்ததும்,
இடம் கைமாறும் முன்னர் – டோக்கன் அட்வான்ஸ் என்று
ஒன்று கொடுப்பார்களே – அது மாதிரி இருக்கலாம் …!!!

இந்த நிலக்கரிச் சுரங்க விவகாரங்கள் இன்னும் பல
நிலைகளைக் கடந்து, பல சலுகைகளை குயின்ஸ்லாந்து
அரசிடமிருந்து பெற வேண்டி இருக்கிறது…
ஒவ்வொரு ஸ்டேஜிலும், அப்போது அதிகாரத்தில்
இருப்பவர்களை கவனிக்க வேண்டுமே …!

ஆனால், ஒரு விவகாரமான விஷயம் என்னவென்றால் –
அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளின்படி –
இதுவரை எதிர்க்கட்சியாக இருந்த லேபர் கட்சி ஆட்சியைப்
பிடிக்கிறது. லிபரல் கட்சி எதிர்க்கட்சியாகி விட்டது….!

அய்யோ – ஆட்சி மாறி விட்டதே … அடானி என்ன செய்வார்
என்று வருத்தப்படுகிறீர்களா …?

குஜராத்திக்காரர் சோடை போவாரா …?
எதற்கும் இருக்கட்டும் என்று புத்திசாலித்தனமாக
அப்போதே, எதிர்க்கட்சியாக இருந்த
லேபர் கட்சிக்கும் ஒரு 11,000 ஆஸ்திரேலிய டாலரை –
( நன்கொடையாகத்தான் …) கொடுத்து வைத்திருந்தார்.
இப்போது அது கைகொடுக்கும் என்கிறார்கள்….!!!

ஒரு கொசுறு செய்தி – இந்தியாவிலும், குஜராத்தை
15 வருடங்களாக ஆண்டுகொண்டிருக்கும் பாஜக விற்கு
4.33 கோடியும், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்
கட்சிக்கு 3.15 கோடியும் அடானி (கடந்த 8 ஆண்டுகளில்)
கொடுத்திருக்கிறார் என்கிறது மற்றொரு செய்தி….!!!

பிழைக்கத் தெரிந்தவர்கள் ….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆஸ்திரேலியாவிலும் குஜராத் அடானி கொடுத்த லஞ்சம் எனப்படும் நன்கொடை …….

 1. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  நாதஸ்வர கச்சேரி சன்மானங்கள் நாதஸ்வரம் & தவில் வாசிப்பவர்கள் கனிசமான அளவில் ஒரளவு சமமாகவும் ஒத்து ஊதுபவர் குறைந்த அளவில் பெறுவார்கள் தொழில் அதிபர்கள் ஆள்பவர்களுக்கு நாதஸ்வரம் & தவில் பங்கும் பின்னர் ஆளக்கூடியவர்களுக்கு ஒத்து பங்கும் கொடுத்து சிறப்பிகிறர்கள்

 2. ரிஷி சொல்கிறார்:

  “ராமன் ஆண்டாலும்…ராவணன் ஆண்டாலும்… எனக்கொரு கவலையில்ல..” என அதானி பாடத்தெரிந்தவரும் கூட.

  ஆனா பாருங்க… பிசினஸ்ல ஹெட்ஜிங் கரெக்டா பண்றார்!!

  நல்லாருங்கப்பா சாமிகளா……

 3. S.Selvarajan சொல்கிறார்:

  கொடுத்ததெல்லாம் கொடுத்தார் — அவர் தனக்காக கொடுத்தார் — ஆளும் கட்சி – எதிர் கட்சி இரண்டுக்கும் கொடுத்தார் — ஒரு ஊருக்கா கொடுத்தார் — இல்லை இந்தியா — ஆஸ்திரேலியா இரண்டுக்குமே — கொடுத்தார் ….! சாதாரண ஆளா அவர் ? குஜராத் புகழ் தொழிலதிபர் — மோடியின் நண்பர் அல்லவா !!

 4. வானரம். சொல்கிறார்:

  அடப்பாவிகளா! இந்தியாவ பாரின் கண்ட்ரி மாதிரி மாத்துவாங்கன்னு பார்த்தா , இவங்க பாரின் கண்டரிய இந்தியா மாதிரி ஆகிட்டாங்களே .

  நம்மூர்ல பி ஜே பி , காங்கரஸ்னா, ஆஸ்திரேலியாவுல லிபரல் கட்சி , லேபர் கட்சி போல .

  இதே போல வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தொழில் தொடங்க வந்தவங்களும் ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி
  ரெண்டு பேருக்கும் கொடுத்திருப்பாங்களோ ?

 5. today.and.me சொல்கிறார்:

  https://vimarisanam.wordpress.com/2014/11/17/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/
  //ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )
  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.//
  That is
  //அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் –
  As of October 2014, $1,000,000,000 =
  61,532,000,000 Indian Rupees.//

  https://vimarisanam.wordpress.com/2014/11/20/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/

  //குஜராத்தில் இயங்கி வரும் அதானியின் இந்திய கம்பெனியான
  Adani Enterprises -க்கு ஏற்கெனவே, 70,000 கோடி ரூபாய்
  வங்கிக் கடன் இருக்கிறதாம். இந்த வங்கிக் கடனை திருப்ப
  இயலாததால், ஆண்டுதோறும், வட்டிச்சுமை ஏறிக்கொண்டே
  போகிறது என்கிறார்கள் நிதி நிலை வல்லுநர்கள்.//

  இப்பொழுது தெரிந்துள்ள [50,000 Aus $ + 11,000 Aus $ ] + [Gujarat state government 4.33 crore + Congres central government 3.15 crore] இந்த பரிவர்த்தனை விவரங்கள் எல்லாம் ஏற்கெனவே வங்கியில் வராக்கடன் கணக்கில் போய்ச்சேர்ந்து மக்கள்தலையில் விடிந்துவிட்டது. அப்போது கொடுத்த அன்பளிப்பும் நம்முடைய பாக்கெட்டிலிருந்து எடுத்ததுதான். இனிமேல் சுருட்டப்போவதும் நம்முடைய பாக்கெட்டிலிருந்து எடுக்கப்போவதுதான்.

  நீ எங்கே இருந்து வேண்டுமென்றாலும் சுருட்டிக்கொள் , எனக்கு வேண்டியது சரியாய் வந்துசேரவேண்டும் என்று …………….. வேலை செய்வதில் காங்கிரசும் பாஜகவும் பினாமி ப்ரதர்ஸ்தான்.

  இதையெல்லாம் பார்த்து அட்லீஸ்ட் குரைத்தாவது மக்களை எழுப்பியிருக்கவேண்டிய Watch Dog of Democracy – the Media அவர்கள் வீட்டுக்காவலுக்கு மக்கள் அவர்களைப்பார்த்து அலர்ட் ஆகிவிடாமல் இருக்க , அவர்களைப் பார்த்து பயப்படவேண்டும் என்று கோரைப்பற்களைக் காட்டி மக்களைப் பார்த்தே குரைத்துக்கொண்டிருக்கிறது.

  அறிக்கையில் வெளியில் தெரியும்படி சொல்லப்பட்ட தொகைகளே இவ்வளவு என்றால் சொல்லாத தொகைகள் எவ்வளவோ?

  வாழ்க இந்திய மக்களாட்சி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.