” டெல்லி ” மோடிஜியின் ” வாட்டர்லூ ” ஆகுமா …?

aap-1

 

 

2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுக்காலங்கள் –
காங்கிரஸ் கூட்டணி மத்தியில் அரசோச்சி வந்தது.

இந்த கால கட்டங்களில்,
முக்கியமாக – கடைசி மூன்று ஆண்டுகளில் – வெளிப்பட்ட
அடுக்கடுக்கான ஊழல்கள், அவற்றை கட்டுப்படுத்தத் திறனற்ற
மன்மோகன் சிங்கின் அரசின் செயல்பாடற்ற தன்மை –

திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வாத்ரா
ஆகியோர் மீதான குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுக்கள் –

இவையெல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு மத்திய அரசின்
மீது மட்டற்ற வெறுப்பை உண்டு பண்ணி இருந்தன.

அப்போது – மோடிஜியின் –
மிகைப்படுத்தப்பட்ட குஜராத் சாதனைகள்,
ஆயிரம் பேருக்கு மேல் கூடிய மீடியா குழு மிகத்தீவிரமாக
திட்டமிட்டு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திச் செய்த
பிரச்சாரங்கள்,

ஆர்.எஸ்.எஸ். என்னும் கட்டுக்கோப்பான அமைப்பின்
விரிவான தொண்டர் படை – இவை அனைத்தும்
சேர்ந்து நரேந்திர மோடி என்னும் மனிதரின் இமேஜை –
மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச்சென்றன.

மோடிஜிக்கு இருந்த வசீகரமான, ஆவேசமான,
பேச்சுத்திறன் மக்களிடையே அவர் மீது
மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கின.

இவை அனைத்தின் கூட்டு விளைவே – 2014 மே மாதம் நிகழ்ந்த
பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றி.

அடுத்தடுத்து நடந்த மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட்,
ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்கள் –
கட்சியில் மோடியின் கரங்கள் வலுப்பெற பெரும் அளவில்
உதவின.

ஆனால் – வெற்றி பெற்ற பிறகு நிகழ்ந்தவை எதுவுமே
மோடிஜிக்கு பெருமை சேர்ப்பனவாக அமையவில்லை.
கட்சியில் அத்வானி உட்பட மூத்த தலைவர்கள் அனைவரும்
ஒதுக்கி ஓரம் கட்டப்பட்டனர். மோடியின் நம்பிக்கைக்குகந்த
அமித் ஷா பாஜகவின் அகில இந்திய தலைவராக உள்ளே
நுழைக்கப்பட்டார். கட்சி, ஆட்சி – இரண்டுமே, திருவாளர்
நரேந்திர தாமோதர் தாஸ் மோடிஜியின் கட்டுப்பாட்டுக்குள்
வந்தன.

ஊழலில் திளைத்த பல மாநில பிரமுகர்கள் மத்திய அரசினுள்
அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பிற கட்சிகளில்
இருந்து, சர்வ சகஜமாக கட்சிமாறிகள், சுயநலமிகள் –
மோடிஜிக்கு வேண்டப்பட்டவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக
கேபினட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மத்திய அமைச்சரவையில் 30 சதவீதம் அளவிற்கு ஊழல்,
குற்ற வழக்கு பின்னணி உடையவர்கள் சேர்த்துக்
கொள்ளப்பட்டனர். ( இன்னமும் அரெஸ்ட் வாரண்ட் நிலுவையில்
உள்ள ஒரு மத்திய அமைச்சரும் உண்டு.)

பதவியேற்று 8 மாதங்கள் ஆகியும் – உருப்படியான மக்கள் நல
திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணை விலை குறைந்ததை
தனது சாதனையாக பீற்றிக் கொண்டார்கள். அதிலும் பாதியை
எக்சைஸ் வரி போட்டு மத்திய அரசு பிடுங்கிக் கொண்டது.
ஆதார் எண் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்பட்டு மக்கள்
அலைக்கழிக்கப் படுகின்றனர்.

பெரும் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும்,
பணக்காரர்களும் – அரசுடனும், ஆளும் கட்சியுடனும்
நெருங்கிப் பழகுகின்றனர். அவர்களுக்கு சாதகமாக மத்திய அரசும்
நடந்து கொள்கிறது.

வெளிப்படையாகவே மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபடுகிறது.
மத்திய அரசுடன் உடன்படாத மாநில அரசுகள் கடுமையான
விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கின்றன.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், வலுக்கட்டாயமாக
கட்சி திணிக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்நிறுத்தி செயல்பட
வேண்டிய அரசும், ஆர்.எஸ்.எஸ் – பின்னணியுடைய கட்சியின்
சில தலைவர்களும் – பொறுப்பற்ற முறையில் பிற மதத்தினரை விமரிசிப்பதும், கூட்டம் கூட்டமாக மதமாற்ற முயற்சிகளில்
ஈடுபடுவதும், சிறுபான்மையினரை அச்சமூட்டும் விதத்தில்
நடந்து கொள்வதும் –

பாஜக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதற்கான
முக்கிய காரணங்கள்…..

பிரதமரின் மிதமிஞ்சிய “சுயமோகம்” உலக அளவில்
கிண்டலைக் கிளப்பியுள்ளது. நடை, உடை, பாவனை –
எல்லாமே –
ஒரு சர்வாதிகாரியை பிரதிபலிப்பதாக இருக்கின்றன.

மக்களின் பெருத்த ஆதரவோடு – சில மாதங்களுக்கு
முன் தான் பதவிக்கு வந்த இவர்கள் இப்படி நடந்து
கொள்வதற்கான அடிப்படைக் காரணமென்ன என்று
யோசித்தால் –
ஒரே ஒரு காரணம் தான் புலப்படுகிறது….!

பாஜக தனிப்பட மெஜாரிடியோடு மத்தியில் ஆட்சிக்கு வரும்
என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிக பட்சம் 200 சீட்டுகள்
பெற்று, கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சிக்கு வரும்
என்பது தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஓட்டளித்த மக்கள் கூட அப்படித்தான் நினைத்திருந்தார்கள்.

அப்படி நிகழ்ந்திருந்தால் – இந்த மிதமிஞ்சிய ஆட்டமும்,
கர்வமும், நினைத்தை எல்லாம் பேசும் / செய்யும் தைரியமும்
இவர்களுக்கு வந்திருக்காது. கூட்டணிக் கட்சிகள் என்கிற
கடிவாளம் இவர்களை இறுக்கிப் பிடித்திருக்கும்.

அத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லாதது – அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,
எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற
ஒரு அசட்டு தைரியத்தை, நாட்டுக்கு ஆபத்தான தைரியத்தை –
அவர்களுக்கு கொடுத்திருக்கிறது.

இவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலன்றி,
இந்த நிலைமை சற்றும் மாற வழி இல்லை.

வருகின்ற 7-ந்தேதி டெல்லி சட்டமன்றத்திற்கு
நடைபெறவுள்ள தேர்தல்கள் –
அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கின்றன.

அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைப் பற்றிய
நமது அபிப்பிராயங்கள் எதுவாக இருந்தாலும் சரி –
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற உதவி,
பாஜகவிற்கு தோல்வியைப் பரிசளித்தால் –

டெல்லி மக்கள் இந்த நாட்டிற்கு செய்யும் –
மிகப் பெரிய “சேவை”யாக அது அமையும்….!!!

செய்வார்களா …..?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to ” டெல்லி ” மோடிஜியின் ” வாட்டர்லூ ” ஆகுமா …?

 1. drkgpgp சொல்கிறார்:

  செய்வார்கள்

 2. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  டெல்லி மக்கள் இந்த நாட்டிற்கு
  மிகப் பெரிய சேவையை செய்வார்கள் என்று நம்புவோம்…

 3. subramanian சொல்கிறார்:

  BJP WILL BE DEFEATED IN DELHI ELECTIONS. THEY CAN RULE THE COUNTRY BUT
  THE CAPITAL WILL BE RULED BY AAM AADMI PARTY. THEIR DEEDS AND
  MIS-RULE WILL BRING CONGRESS BACK TO POWER.

 4. S.Selvarajan சொல்கிறார்:

  டெல்லி மக்கள் செய்யவில்லை என்றால் ” சுயமோகம் ” இன்னும் பன்மடங்கு அதிகமாகுமோ ?அணிகின்ற கோட்–சூட் மதிப்பும் உயருமோ ? எல்லாம் அவன் செயல் !

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  நிச்சயமாக பிஜெபிக்கு கடிவாளம் போடப்பட வேண்டும்.டெல்லி அதனை சாதிக்கும்

 6. R.Chandrasekaran சொல்கிறார்:

  Dear KM sir,

  நான் தில்லி மக்கள் அதை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

 7. Sesh சொல்கிறார்:

  50 / 50 chances….aap paambaa……..kayeera….

 8. LVISS சொல்கிறார்:

  A coalition govt is feared and this is what is going to happen –A situation similar to what is happening in Kashmir is going to be witnessed –In Delhi itis going to be much more difficult because parties have criticised each other to the maximum extent -A coalition govt at best is an arrangement to share power and avoid facing another election — People did not vote for a coalition govt at the centre because thay have seen that coalition governments cannot function without hitches and pulls and pressures from the coalition parties —

 9. Ramachandran. R. சொல்கிறார்:

  திரு LVISS,

  இது 2014 மே மாதக் கதை….
  செய்தித் தாள்கள் சொல்வதும், ட்விட்டரில் கதைப்பதும் –
  நிறைய பார்த்ததன் விளைவு தான் நாம் எல்லாருமே முதலில் ஏமாந்தது.

  – தமிழ்நாட்டில், அனைத்து பிள்ளைகளுக்குமே 12 வது வகுப்பு வரை
  இலவசக்கல்வி என்பதோடு,
  வருடத்திற்கு 3 சீருடை, 2 ஜோடி செருப்பு, புத்தகம், நோட்டு, இலவச பஸ் பாஸ், மதிய உணவு, போக-வர 10ம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள்,
  12 வது வகிப்பில் மடிக்கணினி – வரை இலவசமாகக் கொடுக்கிறாகளே….

  மோடி அவர்கள் 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்த மாநிலத்தில் அரசு டிரைவர்கள், பியூன்களின் பிள்ளைகள்
  படிக்கக் கூட, இவர் தனிப்பட்ட பணத்தில் தான் உதவி செய்ய வேண்டுமா ….?
  கல்வி வசதி அவ்வளவு மோசமா …?

  அய்யாவைப் பற்றி இனி எந்த மீடியா குக் கப் வந்தாலும்
  நம்ப மாட்டோம். அதான் குளோஸ் அப் -லெயே பார்த்து விட்டோமே –
  13.5 லட்ச நரேந்திர தாமோதர் தாஸ் மோடிஜியின் சூட்’டை.

  சாரி திரு. LVISS. நீங்கள் இங்கு கதைப்பது வேஸ்ட்.

 10. today.and.me சொல்கிறார்:

  //மோடி அவர்கள் 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்த மாநிலத்தில் அரசு டிரைவர்கள், பியூன்களின் பிள்ளைகள் படிக்கக் கூட, இவர் தனிப்பட்ட பணத்தில் தான் உதவி செய்ய வேண்டுமா ….? கல்வி வசதி அவ்வளவு மோசமா …?//
  the question will be right is “Is Modi wealthy that of?”

 11. today.and.me சொல்கிறார்:

  //இது 2014 மே மாதக் கதை….//
  Apart from May story, in september, the story is below linked.

  Gujarat has many slum areas, but it has overcoated by Modi…..!!
  If modi wears cooling glasses in rain, fanatics wear modi glasses in vein.

  Sept. 17, 2014, News souce: PTI
  http://www.rediff.com/news/report/curtains-over-slums-speed-breakers-removed-ahmedabad-spruces-up-for-xi/20140917.htm

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   // …. If modi wears cooling glasses in rain,
   fanatics wear modi glasses in vein….//

   இது தான் நிதரிசனம் … உண்மை…!!

   பிச்சு உதறிய உங்கள் பின்னூட்ட “PUNCH”-க்கு
   என் BIG SALUTE…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 12. SUBBU சொல்கிறார்:

  WE DONOT BOTHER WHO WINS IN DELHI . BUT WE WANT MODI AND HIS
  BJP CLOWNS SHOULD BE DEFEATED AT ANY COST FOR THEIR BETRAYAL AND
  ANTI LABOUR POLICIES . THEY HAVE DONE NOTHING TO THIS COUNTRY AND
  ITS PEOPLE . ONLY PREACHING BUT NO PRACTICE. VAJPAYEEJI IS FAR FAR BETTER
  THAN THIS TRICKSTER MODI.

  • Siva சொல்கிறார்:

   I have commented this message a long back in some other post of KM sir. Modi has been promoted mostly by NRI bjp supporters to wipe the mud on him (Gujarat riot 2002). In order to justify the injustice act of them and to correct thier mistakes, these people simply glossed (masked) every thing what happened in Gujarat at that time. As most countries banned him, NRI BJP supporters used the ‘development’ as tactics to cover up the issues. In fact, gujaratis are large proportion of NRI who do business in many countries. They have also poured lot on this campaign.

   Initially, they did everything to save modi, but latter they felt that it is opportune time to promote him further, after seeing poor performance of congress. This helped him to get the PM seat. Kaakkai utkaara, panam palam vilunthathu pola, ellam nadanthu vittathu. Now, he is trying to break all the ban/prohibition imposed on him by touring countries. Some time, it looks like he is running Indian government for NRI only, not for Indians.

   I do not know exactly how farmers in Gujarat are doing now? But I can see one thing that modi promoted solar energy business in Gujarat. Other than this project, I do not know what other growth has happened in Gujarat. If any body send me reports prepared by unbiased neutral person, I will appreciate it. Then I can accept that modi will do some useful thing for development. Until then, I will be skeptical/suspicious on his growth model.
   The reader LVISS, please do not post useless link on this blog! It is really a waste of time!

 13. palaniappan சொல்கிறார்:

  டெல்லி மக்கள் இந்த நாட்டிற்கு
  மிகப் பெரிய சேவையை செய்வார்கள் என்று நம்புவோம்…

 14. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  போட்டீர்களே போடு!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.