டாக்டர் சு.சுவாமி கோர்ட்டிலேயே சொல்லும் பொய்கள் ….!!!

su.swamy-2

பார்ப்பதற்கு ‘பளிச்’சென்று இருந்தாலும், நேர்த்தியாக உடை
அணிந்து கௌரவமான மனிதர் போல் தோற்றமளித்தாலும் –
உள்ளம் பூராவும் – பொய், பொறாமை, வயிற்றெரிச்சல்,
பகைமை, பதவியாசை ஆகியவற்றால் நிறைந்த மனிதர்
அவர்.
எப்போதுமே, தன்னையே முன்நிலைப்படுத்தி –
அடுத்தவரை எப்படி நாசமாக்குவது என்றே யோசித்துக் கொண்டிருப்பவர்….!!!

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு பொய்யர் என்று
நான் பலமுறை, மிகுந்த ஆதாரங்களுடன், இதே தளத்தில்
எழுதி இருக்கிறேன்.

ஆனாலும் – இன்னமும் –
என் நெருங்கிய நண்பர்கள் சிலரும் கூட –
அவரை – மிகச்சிறந்த தேச பக்தர், அரிச்சந்திரனின் தம்பி,
என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று முன் தினம் பங்களூரு கோர்ட்டில் நடந்ததை
வைத்துப்பார்க்கும்போது அவரைப்பற்றிய கருத்து மீண்டும்
ஒருமுறை உறுதிப்படுகிறது.

முதலில் கோர்ட்டில் நடந்த நிகழ்வுகளிலிருந்து சில பகுதிகளை
கீழே தந்திருக்கிறேன் ( நக்கீரன் செய்தியில் வந்தபடி ….ஆதாரம் –

http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=137356 )

—————————————–

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான
சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு மீதான
விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில்,
நேற்று, 21வது நாளாக நடந்தது. காலை, 10.30 மணிக்கு,
நீதிபதி குமாரசாமி, தனது இருக்கையில் வந்தமர்ந்தார். அப்போது,
பா.ஜ., பிரமுகர், சுப்ரமணியசாமி எழுந்து, “இவ்வழக்கில்,
என்னையும், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்
என்று, மனு செய்துள்ளேன். எனது வாதத்தை, உங்கள் முன்பு வைக்கிறேன்,” என்றார்.

நீதிபதி: உங்கள் வாதத்தை துவக்கலாம்.

சுப்ரமணியசாமி: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா,
1991 முதல், 1996 வரை, தமிழக முதல்வராக பதவி வகித்தார்.
அப்போது, தனது பதவியை பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்த விவரம் எனக்கு தெரியவந்தது.
இது குறித்து, விசாரித்து, ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

நான், மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும். ஜனதா கட்சி தலைவராகவும் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால்,
இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், வழக்கின் போக்கை, உற்று கவனித்து வந்தேன்.
இவ்வழக்கில், என்னை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்து, எனது
வாதத்தை கேட்க வேண்டும். வழக்கை தொடர்ந்தவன் என்ற
முறையில், நான் வாதிட உரிமை உள்ளது. எனக்கு தெரிந்த
விவரங்களை சொல்ல, என்னை அனுமதிக்க வேண்டும்.
பொது சேவையாக எண்ணி, வாதிட வந்துள்ளேன்.
முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வர் அந்துலே வழக்கில், அவர் மீது,
ஊழல் புகார் கொடுத்தவரை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக்
கொண்டு, வாதிட, நீதிமன்றம் அனுமதிளித்தது போல், எனக்கும்
அனுமதி அளிக்க வேண்டும்.

நீதிபதி: வழக்கு துவங்கி, 20 ஆண்டுகளுக்கு பின்,
மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கிறீர்கள்.
இவ்வளவு நாள், ஆர்வம் காட்டாதது ஏன்?

சுப்ரமணியசாமி: அரசியல் பணியில் ஈடுபட்டிருந்ததால்,
அவகாசம் கிடைக்கவில்லை.

ஜெ., வக்கீல் குமார்:
சுப்ரமணியசாமி வழக்கு தொடர்ந்தவுடன்,
விசாரித்து நீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என்று, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், அப்போதைய போலீஸ் ஐ.ஜி.,
லத்திகா சரணுக்கு உத்தரவிட்டது.

இவ்வழக்கை விசாரித்து கொண்டிருக்கும்போதே, ஐ.ஜி.பி.,
பெருமாள், வழக்கை விசாரணைக்கு எடுத்து, அவசரமாக
எஃப்.ஐ.ஆர்., போட்டார். இவ்வழக்கில், ஊழல் தடுப்பு போலீசார்
விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சுப்ரமணியசாமிக்கு, எந்த தொடர்பும் இல்லை.
அந்துலே வழக்கில், புகார் கொடுத்த நபர், ஆதாரங்களை,
போலீசிடம் கொடுத்து, எஃப்.ஐ.ஆர்., போட வைத்தார்.
இதனால், அந்த நபர், மூன்றாவது பார்ட்டியாக சேர்க்கப்பட்டார்.

ஆனால், இவ்வழக்கில், போலீஸிடமோ, நீதிமன்றத்திலோ
சுப்ரமணியசாமி, எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.
ஜெயலலிதா மீது சந்தேகத்தின் பேரில், உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்.

இதேபோன்று, 1997ல், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்,
வழக்கில் தன்னையும் மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக்
கொள்ள வேண்டும் என்று, சுப்ரமணியசாமி மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ராமன், அவரிடம், ‘நீங்களும்,
அரசு வக்கீலும் வாதிடும் போது, வெவ்வேறு கருத்தை
தெரிவித்தால், எதை எடுத்துக் கொள்ள முடியும்’ என்று கூறி,
சாமி மனுவை, தள்ளுபடி செய்தார்.

இவ்வழக்கில், அரசு வக்கீல், தனது கடமையை, செய்து வருகிறார்.
எனவே, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்து வாதிட அனுமதிக்க
கூடாது. எந்த வழக்கிலும் அனுமதித்ததில்லை.

…….. …….

நீதிபதி: தீர்ப்பை, நாளை (இன்று) அறிவிக்கிறேன்.

——————————————————————————

மேலே சொல்லிய நிகழ்வுகளில் எங்கெங்கெல்லாம் பொய்
வலம் வருகிறது -என்று மீண்டும் ஒரு ரவுண்டு பார்ப்போமா ….?

——————–
” நான், மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும். ஜனதா கட்சி தலைவராகவும் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால்,
இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. ”

வடிகட்டிய பொய் –

இவர் மந்திரியாக இருந்தது எப்போது……?
1990-91 -ஆம் ஆண்டுகளில்….
வழக்கு துவங்கியது 1996-ல்.
ஆக வழக்கு துவங்கிய பிறகு இவர் மந்திரியாக ……
இல்லவே இல்லை…!

இவர் எம்.பி.யாக இருந்தது எப்போது …?
ராஜ்ய சபா – 1974–1976 மற்றும் 1988–1994
லோக் சபா – 1977–1979 மற்றும் 1998–1999
ஆக வழக்கு துவங்கி கடந்த 20 ஆண்டுகளில், இவர்
எம்.பி.யாக இருந்தது 1996-98 – இடைப்பட்ட
3 ஆண்டுகள் மட்டுமே.

————-

நீதிபதி: வழக்கு துவங்கி, 20 ஆண்டுகளுக்கு பின்,
மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கிறீர்கள்.
இவ்வளவு நாள், ஆர்வம் காட்டாதது ஏன்?

சுப்ரமணியசாமி: அரசியல் பணியில் ஈடுபட்டிருந்ததால்,
அவகாசம் கிடைக்கவில்லை.

இது – இன்னொரு ஜமக்காளத்தில் வடிகட்டிய
அப்பட்டமான பொய்யும், உண்மையை சட்டத்தின் முன்
மறைத்தலும் கூட…..

தான் ஏற்கெனவே –
இதேபோன்று, 1997ல், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்,
வழக்கில் தன்னையும் மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக்
கொள்ள வேண்டும் என்று, மனு போட்டு –

இதை விசாரித்த நீதிபதி ராமன், அவரிடம், ‘நீங்களும்,
அரசு வக்கீலும் வாதிடும் போது, வெவ்வேறு கருத்தை
தெரிவித்தால், எதை எடுத்துக் கொள்ள முடியும்’ என்று கூறி,
சாமி மனுவை, தள்ளுபடி செய்தார்

– என்கிற உண்மையை தனது வாதத்தில் சு.சு. சுத்தமாக
மறைத்து விட்டார்.

ஏற்கெனவே ஒரு உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட
வழக்கை அந்த உண்மையை முற்றிலும் மறைத்து,
மீண்டும் இன்னொரு உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருப்பதும் –

அதுவும் புது வழக்கின் நீதிபதி குறிப்பாக –

“வழக்கு துவங்கி, 20 ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது
பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கிறீர்கள்.
இவ்வளவு நாள், ஆர்வம் காட்டாதது ஏன்?” –
என்று கேட்கும்போது,

” நான், மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும்.
ஜனதா கட்சி தலைவராகவும் அரசியல் பணிகளில்
ஈடுபட்டிருந்ததால், இவ்வழக்கு விசாரணையில் கலந்து
கொள்ளவில்லை.” –

என்று பாதிப் பொய் சொல்லி சமாளிப்பதையும்
எதில் சேர்த்துக் கொள்ளலாம்…?

இந்த யோக்கியரின் (!!!) உண்மைத் தன்மையை
இதுவரை புரிந்து கொள்ளாத நண்பர்கள் இனியாவது
புரிந்து கொள்வார்களா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to டாக்டர் சு.சுவாமி கோர்ட்டிலேயே சொல்லும் பொய்கள் ….!!!

 1. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  சு.சாமி அதிரடி மனிதர் என்பது தெரிந்த தகவல்.சாதரணமாக தன நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வக்கில்கள் கூறும் தகவல்கள் பொய்யாகத்தான் இருக்கும்.எதிர வக்கீலும் தன கட்சிக்காரருக்கு பாதிக்கத பொய்களை கண்டுகொள்ளமாட்டார். குன்ஹா தீர்ப்பு. அவர் முன்பு வாதிக்கபட்டதன் அடிப்படை. அதன் மேல் நடக்கும் விசாரணை ( உள்ளம் பூராவும் – பொய், பொறாமை, வயிற்றெரிச்சல், பகைமை, பதவியாசை ஆகியவற்றால் நிறைந்தும் . எப்போதுமே, தன்னையே முன்நிலைப்படுத்தி – அடுத்தவரை எப்படி நாசமாக்குவது என்றே யோசித்துக் கொண்டிருக்கும்) சு.சாமி இப்போது கூறிய பொய்கள் ( தன்னை பற்றி ) எந்த அளவு வழக்கின் போக்கு சம்பந்தபடுகிறது ?

 2. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம். சார்,

  “ஆமா – பொய்யர் தான், கில்லர் தான், வில்லன் தான், ஐ கோர்ட் ஜட்ஜ்
  கிட்டயே பொய் சொல்லி
  சமாளிக்கணும்னா என்னா படா கில்லாடியா இருக்கணும் எங்க ஆளு ”
  என்று சொல்லி பரவசப்படும் இந்த மாதிரி ஆசாமிகள் இருக்கும் வரை
  சு.சு. பிழைப்பிற்கு
  எந்த கஷ்டமும் இல்லை.

  நீங்க எவ்வளவு வால்யூம் “சாமிகளின் – சாகசங்கள்” எழுதினாலும்
  இந்த மாதிரி விசுவாசிகளை
  மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது. கிடக்கு விடுங்க.
  நம்ம ஜோலிய பாத்துக்கினு போய்ட்டே இருப்போம்.
  நன்றி சார்.

 3. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் ஐயா! தங்கள் நண்பர்கள் சு.சு பற்றி உணர்ந்து கொள்வது இருக்கட்டும். இப்படி நீதிமன்றத்தில் தவறான, பொய்யான தகவலைக் கொடுக்கலாமா? இது சட்டப்படி குற்றமில்லையா? ஒருவேளை, வழக்கு தொடர்பான தகவலைப் பொய்யாகக் கொடுத்தால்தான் உள்ளே தள்ளுவார்களோ? இப்படிப்பட்ட பொய்களுக்கெல்லாம் நடவடிக்கை ஏதும் கிடையாதோ? படப்பிடிப்பானையே உள்ளே கொண்டு வரக்கூடாத அளவுக்குப் புனிதம் காக்கும் நீதிமன்றம் இப்படிப்பட்ட சிறு சிறு பொய்களைக் கண்டுகொள்ளாமல் விடலாமா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஞானப்பிரகாசன்,

   நமக்கு பெரிய தவறாகத் தோன்றும்
   இதெல்லாம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு.
   அவரவர் தகுதி, செல்வாக்குக்குத் தகுந்த
   அளவிற்கு விளையாடலாம்..!

   நீதிபதி நினைத்திருந்தால் அந்த ஒரு காரணத்திற்காகவே,
   சு.சுவாமியின் மனுவை நிராகரித்திருக்கலாம்.
   அவர் அந்த முடிவிற்கு வராததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

   வழக்கு முடியும்போது தான் – இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று
   நமக்குத் தெரிய வரும்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. S.Selvarajan சொல்கிறார்:

  திரு.கா.மை ! எல்லாவற்றையும் நீங்களே கூறிவிட்ட பின் — சு.சாமி பற்றி கூற ஒன்றும் இல்லை — இருந்தாலும் பலருக்கும் [ ஆட்சியில் இருப்பவர்கள் — ஆட்சியில் இல்லாதவர்கள் —- பண முதலைகள் —அரசு உத்தியோகஸ்தர்கள் — மற்றும் பலர் ] அவரிடத்தில் ஒரு மறைமுகமான ” பயம் ” இருக்கத்தான் செய்கிறது ? எங்கே தங்களை எதிலாவது மாட்டி விட்டு விடுவாரோ என்று அஞ்சுவதால் — அவரின் ஆட்டம் அதிகமாக உள்ளது என்பதுதான் — நிதர்சனம் !!

 5. today.and.me சொல்கிறார்:

  மூவரில் யார் மிகத் திறமைசாலி?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எந்தவித சந்தேகமும் இல்லை.
   அந்த நான்காவது நபர் தான் மிகத் திறமைசாலி …!!!!

   (பொருத்தமான காமெடி வீடியோவை இங்கு கொண்டு வந்து
   பொருத்திய அந்த மனிதரைத்தான் சொல்கிறேன்….!!! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    காமை ஜி,

    சுசு வைப் பற்றி படிக்கும்போதே காரம் தலைக்கேறிவிடுகிறது.

    அதனால்தான் கொஞ்சம் தணித்துக்கொள்ளலாம் என்று தண்ணிகுடிப்பதுபோல கொஞ்சூண்டு வெல்லம் சாப்பிடுவதுபோல.

    மற்றபடி இது காமெடியான மேட்டர் இல்லை.

 6. Siva சொல்கிறார்:

  To all: There is good proverb in Tamil that “it will be better if you do not throw a stone on mud slurry, because it will splash on your face. Like wise it will be better if you do not waste ur time in discussing about this komaali.

 7. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  I am not lobbying for Swamy, & not his விசுவாசி . My feelings almost equal to KM sir. For Samy`s tweets I opposed him.He compared Rajapakshe`s defeat with Churchil`s defeat after winning War.I retorted Churchil`s was against other country where as other one against their Citizens. Also , sarcastically requested him to contest at Srirangam Election to uplift his Party in his home state. Our conscience will admit how far TN administration current status is. My humble prayer to Almighty for early settlement in either way & not affected like this of Swamy. We may notice in the proceedings of the case, the questions raised by judiciary swings in both the way. In that manner S.Swamy met query & responded falsely. Only who have potential by time management & funds can drag him legally. As of now நம்ம ஜோலி just lament

 8. lala சொல்கிறார்:

  சுவாமி பற்றி கா.மை கூறிய கருத்துக்கள் உண்மையானவை.
  ஆனால் ஒவ்வொரு அரசியல் மற்றும் வழக்குகள் விடயத்தில் வெவ்வேறு விதமான நிலைப்பாடுகளை எடுத்து செயலாற்றி வருகிறார் .
  ஜெயா . சசிகலா ஊழல் தொடர்பான விபரங்களை 90 களின் ஆரம்பத்தில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததிலிருந்து இன்று அவர் தண்டனை பெற்று வீட்டுக்குள் முடங்கியிருக்கும் வரை அதில்நாட்டம் காட்டி வருகிறார் .
  ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை கா.மை இன்நிலைப்பாடு அனைவரும் அறிந்தது.ஊழல் ராணிகள் ஊழலே செய்யவில்லை என்பது போலவும் , அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகமானது எனவும் ஏற்கனவே கருத்துக்களை அள்ளி தெளிட்ர்க்திருக்கிறார் . எனவே இந்த விடயத்தில் மூக்கை சற்று அதிகமாகவே நீட்டி வரும் சுவாமியை தோலுரித்து காட்டுகிறேன் எனக்கிளம்பியுள்ளார்.

  இதில் முதலாவதாக , 20 வருடங்களுக்கு பின் ஏன் 3 ஆவது தரப்பாக சேர்த்துக்கொள்ள கேட் கிறீரகள் எனும் நீதிபதியின் கேள்விக்கு சுவாமி தான் அரசியல் பணியில் பிஸியாக இருந்ததாக கூறியதாகவும் ஆனால் அவர் வழக்கு ஆரம்பிக்கும்போது மந்திரியாக இல்லை என கண்டு பிடித்து கூறியுள்ளார் .
  சுவாமி தான் அந்த கால கட்டங்களில் அரசியல் பணிகளில் பிஸியாக இருந்ததாகத்தான் கூறியுள்ளாரே தவிர மத்திய மந்திரியாக இருந்ததால் வழக்கு விசாரணையில் கலந்து கொள்ள முடியவில்லை எனக்கூறியுள்ளார் .

  90 களில் ஜெயா முதல்வராக இருந்தபோது சந்தீரகலா எனும் ஐ .எ.ஸ் பெண் அதிகாரியின் மேல்கொண்ட தனிப்பட்ட குரோதத்தினாலும் , காழ்ப்புணர்வினாலும் கூலிப்படையை அனுப்பி அசிட் திராவகத்தை அவர்து முகத்தில் வீச செய்து அராஜகம் புரிந்தார் . சுவாமி சந்திரகலாவை இணைத்துக்கொண்டு ஜனதா கட்சியை ஆரம்பித்து திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்தார் .
  சுவாமி தாக்கல் செய்த இந்த வழக்கு 96 ஆம் ஆண்டில் நீதி மன்றால் எடுத்துக்கொள்ளப்பட்டது . ஆனால் அந்தநாதளில் ஜெயா முதல்வர் பதவியை இழந்து கொட்டம் அடங்கினார் .
  98 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலின் போது தன் மீது ஊழல் வழக்கு தாக்கல் செய்த சுவாமியோடு தானே வலியச்சென்று கூட்டணி வைத்துக்கொண்டார் . ம்துரை மத்திய தொகுதியையும் அவருக்கு தாரை வார்த்துக்கொடுத்து எம்பியாக்கினார். அப்போது கூடநிருபர்கள் ஜெயா மீதான ஊழல் வழக்கின் நிலை இனி என்னாவாகும் என கேட்டபோது ” உங்களுக்கே தெரியும் வழக்குநீதி மன்றில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது , கூட்டணி வேறு , வழக்கு வேறு என கறாராக சொல்லியிருந்தார்.

  • today.and.me சொல்கிறார்:

   //ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை கா.மை இன்நிலைப்பாடு அனைவரும் அறிந்தது.//
   கா.மைஇன் நிலைப்பாடு என்று நீங்கள் புரிந்துகொண்டது என்ன என்று விளக்கமாகவே சொல்லியிருக்கலாம். காமையைப் பற்றியும் இதுவிடயத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் ஒவ்வொருக்கும் ஒரு கருத்து அதுவும் தனித்தனிக் கருத்து உண்டு.

   //ஊழல் ராணிகள் ஊழலே செய்யவில்லை என்பது போலவும் , அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகமானது எனவும் ஏற்கனவே கருத்துக்களை அள்ளி தெளிட்ர்க்திருக்கிறார் .//
   இதுகுறித்த பதிவுகளுக்கு முந்தைய எதையுமே நீங்கள் படிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.

   //எனவே இந்த விடயத்தில் மூக்கை சற்று அதிகமாகவே நீட்டி வரும் சுவாமியை தோலுரித்து காட்டுகிறேன் எனக்கிளம்பியுள்ளார்.//
   அதற்கும் முன்பாகவே தோலுரித்துக் காட்டியபோதெல்லாம் நீங்கள் பதிவுகளைப் படிக்கவில்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்.

   • lala சொல்கிறார்:

    ## கா.மைஇன் நிலைப்பாடு என்று நீங்கள் புரிந்துகொண்டது என்ன என்று விளக்கமாகவே சொல்லியிருக்கலாம் ##

    ஊழல் குற்றவாளிகளின் தீர்ப்பு வெளிவந்த பின் , இந்த வழக்கு சம்பந்தமாக கா.மை வின் பதிவுகளை படித்து பாருங்கள் தெரியும்

    ##அதற்கும் முன்பாகவே தோலுரித்துக் காட்டியபோதெல்லாம் நீங்கள் பதிவுகளைப் படிக்கவில்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். ##

    எனது பிரதான கவனம் இந்த ஊழல் வழக்கின் மீதே இருக்கிறது .
    வழக்கு தொடுத்த சுவாமி எனும் தனிநபர் மீதல்ல .
    எனவே அவரை தோலுரித்த இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத பதிவுகள் இங்கு அவசியமற்றவை

    • today.and.me சொல்கிறார்:

     // நீங்கள் புரிந்துகொண்டது//
     //தீர்ப்பு வெளிவந்த பின் , ,,,,,,,,,,,,,,படித்து பாருங்கள் தெரியும்//

     கடந்த காலத்தில் நீங்கள் புரிந்துகொண்டது என்ன என்று கேட்டால், எதிர்காலத்தில் தீர்ப்பு வந்தபின் பாருங்கள் தெரியும் என்று பதில்சொல்கிறீர்களே? கா.மை. கூறியதுபோலவே நீங்கள் அன்பழகன் மற்றும் அவரது தலைவர் போலவேதான் பதில்கூறியிருக்கிறீர்கள். படிப்பது ஒன்று, இடிப்பது ஒன்று.

     மேலும், “தீர்ப்பு வந்தபின் கா.மை. எழுதுவதுதான் உங்கள் கருத்தும் அல்லது நீங்கள் கா.மையைப் பற்றிப் புரிந்துகொண்டதும்” என்று கொண்டால், இப்பொழுதே அவர் கூறியதை நீங்கள் ஒப்புக்கொண்டாற்போன்றுதானே. பின் ஏன் வாதமும், விவாதமும்?

     ================

     //எனது பிரதான கவனம் இந்த ஊழல் வழக்கின் மீதே இருக்கிறது .
     வழக்கு தொடுத்த சுவாமி எனும் தனிநபர் மீதல்ல .எனவே அவரை தோலுரித்த இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத பதிவுகள் //

     சுவாமி அவர்களைப்பற்றி ஏற்கெனவே பலமுறை விளக்கி வந்த பதிவுகளையெல்லாம் படிக்காமல்,

     //எனவே இந்த விடயத்தில் மூக்கை சற்று அதிகமாகவே நீட்டி வரும் சுவாமியை தோலுரித்து காட்டுகிறேன் எனக்கிளம்பியுள்ளார்.//

     என்று கருத்துத் தெரிவிப்பது நீங்கள் கா.மை. பற்றிக் கொண்டுள்ள அபிப்ராயத்தைக் காட்டுகிறது. ஆனால், இந்தக் கருத்தே, எவ்வளவு எளிதாக ஓரிரு பதிவுகளைக் கொண்டுமட்டுமே ஒருவரை எடைபோடுகிறீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவு குறுகிய சிந்தனையுள்ளவராக இருக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா? போகட்டும். அது உங்கள் குணம். அதை நீங்கள் யாருக்காக மாற்றிக்கொள்ளவேண்டும்.

     ================

     //இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத பதிவுகள் இங்கு அவசியமற்றவை//
     இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத ஆனால் சுவாமியைப் பற்றிய கா.மையின் பதிவுகளைப் படிக்காமலேயே, கா.மை.யைப் பற்றி ஒரு அபிப்பிராயத்துக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்? அதை எழுதவும் செய்கிறீர்கள்?

     ================

     ஒரு பின்னூட்டத்திற்குள்ளேயே இரு கருத்துக்கள்.
     இரண்டுமே முரண்நகை வேறு.
     🙂

     • lala சொல்கிறார்:

      மன்னிக்கவும் நான் கடந்த செப்டெம்பர் 2014 இல் ஜெயாவையும் அவரது பரிவாரங்களையும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்த பின் கா.மை பதிவிட்ட பதிவுகளை படித்து பார்த்தால் புரியும் என்றுதான் குறிப்பிட்டேன்.
      இனி வரப்போகும் மார்ச் மாத நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிடவில்லை .

      குறிப்ப்பாக குற்றவாளிகளின் தீர்ப்பு வந்த பின் கா.மை பதிவிட்ட ஒக்ரோபர் 1 ,2 ,3 , 15 திகதி பதிவுகளை பார்த்தாலே ஊழல் குற்றவாளிகளுக்கான அவரது வக்காலத்து புரிந்து விடும்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் லாலா,

   இத்தனை நாட்களாக நீங்கள் எங்கிருந்தீர்கள் ….?
   இவ்வளவு நாட்களாக, எவ்வளவோ விஷயங்கள் குறித்து,
   எத்தனையோ பதிவுகள் இங்கே போட்டிருக்கிறோமே…

   – நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றனவே – அப்போதெல்லாம் நீங்கள் எங்கிருந்தீர்கள்…..??

   உங்களுக்கு காவிரிமைந்தன் மீது தனிப்பட்ட முறையில்
   ஏன் இவ்வளவு காட்டம் …?

   உங்கள் கோபம் சு.சுவாமி பற்றி எழுதியதற்கானதாகத்
   தெரியவில்லையே ….
   அப்படி இருந்தால் “சாமிகளின் சாகசங்கள்” பற்றி
   தொடர்ந்து 12-பகுதிகள் எழுதியபோது நீங்கள் நிச்சயம்
   முன்னால் வந்திருப்பீர்களே …!

   எனவே உங்கள் கோபம் சு.சுவாமி குறித்து
   எழுதியதற்காகவும் அல்ல…..

   ஓ…. இந்த வழக்கில் இன்னொரு பார்ட்டியான
   92 வயது அன்பழகன் மற்றும் அவரது
   தலைவர் கலைஞர் பக்கமா நீங்கள் ….?

   நான் ஜெ. பற்றி, அவரது வழக்கு பற்றி, தண்டனைகள் பற்றி –
   எல்லாமே – என் மனதில் தோன்றியதை அப்படியே
   வெளிப்படையாக அந்தந்த சமயத்தில் எழுதி இருக்கிறேன்.
   விமரிசிக்க வேண்டிய நேரத்தில் விமரிசித்தும் இருக்கிறேன்.
   ஜெ. அவர்களை ஆதரித்து எழுத வேண்டுமென்று
   தோன்றியபோது – அதையும் செய்திருக்கிறேன்.
   தேவைப்பட்டால், எதிர்காலத்திலும் எழுதுவேன்.
   உங்களுக்காக நான் என் கருத்தை மாற்றிக்கொள்ள
   முடியுமா என்ன ?

   நான் நினைப்பதை, எனக்குத் தோன்றுவதை –
   இங்கு எழுதுகிறேன். எதையும், யார் மீதும் திணிப்பதில்லை.
   மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
   என்று – நான் நான் எதிர்பார்க்கவுமில்லை.
   அவரவர் கருத்துக்கள் அவரவருக்கு.

   என்னைப்பற்றி நீங்கள் தனிப்பட எதுவும்
   எழுதுவதற்கு பதில் – இந்த வலைத்தளத்தில்
   எழுப்பப்படும் விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை
   நாகரிகமான முறையில் ( ! ) தெரிவித்து
   விவாதத்தில் பங்கு கொண்டால் மகிழ்வேன். நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. lala சொல்கிறார்:

  நான் யார் பக்கமும் இல்லை . சுவாமி 2 ஜி ஒளிக்கற்றை ஊழல் வழக்கிலும் அக்கறை காட்டி வருவதை உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன் . சுவாமியின் செயற்பாடுகள் மர்மம் நிறைந்ததும் சர்ச்சைக்குரியதுமென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் .
  ஆனால் ஊழல் பேர்வழிகளை தண்டிக்க எடுக்கும் முயர்சிகள் வரவேற்கப்பட வேண்டியதே .

  நிச்சயமாக உங்களது கருத்துக்களுக்கு நீங்கள் பூரண உரிமையுள்ளவர் . அதேநேரம் உங்கள் கருத்துக்களில் முரண்பாடுகள் வரும்போது சுட்டிக்காட்டுகிறேன் . அவ்வளவுதான் . மேலும் இந்த வழக்கில் அக்கறை கொள்ளும் ஒருவரை , அவர் சொன்னவற்றை திரித்து சொல்லி இவர் நேர்மை அற்றவர் எனக்கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று .
  இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு நேர்மையாளர்கள் சான்றிதழ் அளிக்க தாங்கள் தயாரா ?
  அவர் பொதுவாகவேநேர்மையற்றவ்ர் என்று சொல்கிறீர்களா ?
  அல்லது இந்த வழக்கில்நேர்மையற்று செயல்படுகிறார் என் கிறிர்களா ?
  பொதுவாகவோ அல்லது இந்த வழக்கிலோ சுவாமி நேர்மையற்றவர் என்றால் . தண்டனை பெற்ற குற்ற்வாளிகள் குறித்த தங்களது அபிப்பிராயம் என்ன ?

  20 வருடங்களாக இந்த வழக்கில் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்ற நீதிபதியின் கேள்விக்கு அப்போது அரசியல் பணிகளில் ஈடுபட்டதால் வழக்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்று பொதுவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார் .மத்திய மந்திரியாக இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை எனக்கூறவில்லை .
  ஆனால் தாங்களொ அவர் மத்திய மந்திர்யாக இருந்ததால் ஈடுபாடு காட்டவில்லை என்று கூறியதாக திரித்ததோடு மட்டுமல்லாமல் அவர் மத்திய மந்திரியாக 4 வருடங்கள் மட்டுமே பதவி வகித்ததாகவும் மிகுதி வருடஙகளில் வீட்டில் சும்மாதானே உட் கார்ந்திருந்தார் எனபது போலவும் செப்பி , சுவாமி எப்படியெல்லாம் பொய்யுரைக்கிறார் பாரீர் என வெளுத்து கட்டியிருக்கிறீர்கள் .

  சரி சுவாமியை விடுவோம் . தண்டனை பெற்ற குற்ற வாளிகளும் அவர்களது எண்ணற்ற சட்டத்தரணிகளும் பொய்யே சொல்லாமல் .நேர்மையாகத்தான் கடந்த 20 வருடங்களாக வாதாடி வருகிறார்கள் என சொல்ல முடியுமா ?

  ஊழல் ராணிகளும் அவர்களது வக்கீல் பரி வாரங்களும் வாய்தா மேல் வாய்தா வாங்கி 20 வருடங்களாக வழக்கை இழுத்தடித்ததுதான் நேர்மையான செயலா ?
  இத்தைகயவரகளுக்கு ஆதரவாகத்தான் , இந்த வழக்கை தொடுத்த சுவாமியின் நேர்மையின்மையை தோலுரித்து காட்ட புறப்பட்டீர்களா ??

 10. natchander சொல்கிறார்:

  kmjis description about dr swamy is in very bad taste…. kmji should have avoided those descriptions

 11. Ramachandran. R. சொல்கிறார்:

  If you don’t like, then Please do one thing;
  Dig a Deep Well and Jump into that.

  • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

   செம்மையாகச் சொன்னீர் இராமச்சந்திரன்! பிறந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து அதில் வருகிற ஈனக்காசில் பிழைக்கிற, தான் செய்த கொலைக்கான பழியை இன்னொருவரின் தலையில் சுமத்தி அதன் காரணமாய்த் தன் கண் முன்னே ஓர் இனமே படுகொலை செய்யப்படுவதைப் பார்த்தும் உண்மை பற்றி வாய் திறக்காமல் மென்மேலும் அந்த இனப்படுகொலை தொடர்ந்து நடந்து அப்பாவி மக்கள் சாக வழி வகுக்கிற சு.சு போன்ற உயர்ந்த உள்ளங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமானால் காவிரிமைந்தன் போன்றவர்கள் செத்துத்தான் ஆக வேண்டும். நீர் காட்டும் வழி அருமை இராமச்சந்திரன்! ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், காவிரிமைந்தன் கொஞ்சம் முதுமையானவர்; இதற்கு முன் கிணற்றில் குதித்துப் பழக்கமும் இல்லை போலும். எனவே, நீர் முதலில் அதைச் செய்து காட்ட முடியுமா? போங்கடா டேய்!

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப இ.பு.ஞானப்பிரகாசன்.

    தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

    இராமச்சந்திரன் அவருக்குமேலே கமெண்ட் போட்டுள்ள நட்சந்தர் அவர்களைத் திட்ட நினைத்து சரியாகக் குறிப்பிடவில்லை. அல்லது அவருக்கு உடனடியாகப் பதிலளிக்கவேண்டும் என்ற பதட்டத்தில் சரியாகக் குறிப்பிடவில்லை.

    பின்னூட்டமிடும் நண்பர்களே! யாருக்கு பதிலளிக்கிறீர்கள் என்று விளித்து> முழுமையாக பதிலளித்தீர்களானால் உங்கள் பதில் அனைவருக்கும் சரியாகவும் முழுமையாகவும் சென்றுசேரும்.

   • Ramachandran. R. சொல்கிறார்:

    அய்யா திரு இ.பு.ஞானப்பிரகாசன் ,

    மன்னிக்கவும். நான் சொன்னதை நீங்கள் முற்றிலும்
    தவறாகப் புரிந்து
    கொண்டு விட்டீர்கள்.
    காவிரிமைந்தன் அய்யா என்னுடைய குரு போன்றவர்.
    அவரை நான் மிகவும் மதிப்பவன். போற்றுபவன்.
    இதற்கு முன் எத்தனை பின்னூட்டங்கள் எழுதி இருக்கிறென்
    நீங்கள் பார்த்ததில்லையா ?

    நான் சொன்னது, natchander என்கிற அந்த ‘நட்டு’ கழண்ட
    ஆசாமிக்குத் தான். அவரது பின்னூட்டத்திற்கு கீழ் தானே
    அதை எழுதினேன். இப்போது சொல்லுங்கள்;
    அந்த மறை கழன்றவருக்கு நான் எழுதியது சரிதானே ?
    நன்றி.

    • today.and.me சொல்கிறார்:

     Ramachandran. R,

     Your previous comment is not displaying below to ‘natchander’.

     Your comment directly under the blog entry.So it was misunderstood by Mr.Gnanaprakasan.

     🙂 🙂

    • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

     நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும் இராமச்சந்திரன் ஐயா!

     ஆனால், எனக்கென்னவோ உள்ளுக்குள் ஓர் உறுத்தல். ஒருவேளை இந்தக் கருத்து, அதற்கு முன்பாக உள்ள நட்சந்தரின் கருத்துக்கான பதிலாக இருக்குமோ என்று. ஏனெனில், இணையத்துக்கு வந்த புதிதில் நான் பலமுறை இப்படி, மறுமொழிப் பொத்தான் அமுக்காமல் நேடியாகக் கருத்திடும் தவற்றைச் செய்திருக்கிறேன். ஒருவேளை இவரும் அப்படிச் செய்திருப்பாரோ என்று உங்களைப் பற்றி நினைத்தேன். ஆனால், என்ன செய்ய? மேற்கண்ட அந்தக் கருத்தை வெளியிட்ட பிறகுதான் அப்படியெல்லாம் தோன்றியது. நண்பர் டுடே அண்டு மீ சரியாகக் கண்டுபிடித்து விட்டார். அவருக்கு நம் நன்றி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.