தோற்றார் – “ஓட்டு” போட்ட மக்களுக்கு “கோட்டு” போட்டு காட்டிய மோடிஜி…!!!

.
delhi exit poll results-1

3 நாட்களுக்கு முன் இந்த வலைத்தளத்தில் நாம் எழுப்பிய
” டெல்லி ” மோடிஜியின் ” வாட்டர்லூ ” ஆகுமா …? –
என்கிற கேள்விக்கு டெல்லி மக்கள் பதிலளித்து விட்டனர்.

—————–
அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைப் பற்றிய
நமது அபிப்பிராயங்கள் எதுவாக இருந்தாலும் சரி –
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற உதவி,
பாஜகவிற்கு தோல்வியைப் பரிசளித்தால் –

டெல்லி மக்கள் இந்த நாட்டிற்கு செய்யும் –
மிகப் பெரிய “சேவை”யாக அது அமையும்….!!!

செய்வார்களா …..?
———————-

என்று கேட்டிருந்தோம். செய்து காட்டி விட்டனர்
டெல்லி மக்கள்.

அதிகாரபூர்வமான முடிவுகள் தெரிய இன்னும் 3 நாட்கள்
ஆகுமென்றாலும், அத்தனை ‘எக்சிட் போல்’களும்
ஒரே முடிவைத்தான் தெரிவிக்கின்றன.

டெல்லி மக்களுக்கும், அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில்
அமையப்போகும் புதிய டெல்லி மாநில அரசுக்கும் நமது
வாழ்த்துக்கள்.

மக்கள் பெருவாரியாக ‘ஓட்டு’ போட்டு தம்மை தேர்ந்தெடுத்தது
13.5 லட்ச ரூபாய் ‘கோட்டு’ போட்டுக் கொண்டு ஒபாமாவுடன்
“ஷோ” காட்ட அல்ல –

– “உருப்படியான மக்கள் நலத்திட்டங்களை உருவாக்கி
நிறைவேற்றவே”
என்பதை இந்த முடிவுகளாவது திருவாளர்
நரேந்திர தாமோதர் தாஸ் மோடி
அவர்களுக்குப்
புரிய வைத்தால் சரி…

பாஜக அரசு தன்னை திருத்திக் கொள்ள –
திருந்தி விட்டோம் என்று மக்களுக்கு நிரூபிக்க –

மிகப்பெரிய வாய்ப்பு உடனடியாக “ரெயில்வே பட்ஜெட்”
மற்றும் “மத்திய பட்ஜெட்” உருவத்தில் வருகிறது.

மக்களின் கோபத்தை புரிந்து கொள்கிறார்களா
அல்லது இன்னமும் அடானி- அம்பானி பின்னால் தான்
போகப் போகிறார்களா – பார்ப்போம்…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to தோற்றார் – “ஓட்டு” போட்ட மக்களுக்கு “கோட்டு” போட்டு காட்டிய மோடிஜி…!!!

 1. M. Syed சொல்கிறார்:

  நல்லது நடந்தா சரி. 52 இஞ்சின் பலம் 3 நாளில் தெரிந்துவிடும்.

  M. செய்யது
  துபாய்

 2. S.Selvarajan சொல்கிறார்:

  இந்த கருத்து கணிப்பு என்பதே எல்லோரையும் குழப்பத்தான் ! பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கருத்து கணிப்பை பற்றி எல்லா தொலைகாட்சி சேனல்களிலும் போட்டுக்கொண்டே இருந்தார்கள் — மோடி அலை — அந்த அலை — இந்த அலை என்று — ஆளும் அ.தி.மு.க இவ்வளவு சீட்கள்தான் பெரும் என்றெல்லாம் காதில் பூ சுற்றினார்கள் !! ஆனால் மக்கள் வைத்தார்கள் பாருங்கள் ” பெரிய ஆப்பு ” — கருத்துகணிப்பு என்று வாய் கிழிய விவாதம் நடத்திய டி.வி.காரர்கள் வடிவேலு பாணியில் அனைத்தையும் ” மூடிக்கொண்டு ” கப்சிப் ஆனது ரொம்ப கேவலம் !!! அதனால் மகா ஜனங்களே முடிவு வரும்வரை எதையும் நம்பாதிர்கள் ?

  • srinivasanmurugesan சொல்கிறார்:

   இப்படி முடிவு வந்தால் பிஜேபி க்கு தக்க பாடமாக அமையும். ஆனாலும் அதிகாரப்பூர்வமாக முடிவு தெரியும் வரை பொறுத்திருக்கலாமே.

 3. today.and.me சொல்கிறார்:

  ஜெயித்தால் எங்களால், தோற்றால் நாங்கள் பொறுப்பு அல்ல. அமித் புதுவிளக்கம்.

  // he said during the interview was that Delhi is a state election, and not a referendum on Prime Minister Narendra Modi.//
  in
  http://www.rediff.com/news/report/delhi-polls-delhi-polls-not-a-referendum-on-modi-says-amit-shah/20150205.htm
  ————-
  http://ramaniecuvellore.blogspot.in/2015/02/blog-post_6.html
  =============
  திருந்தவே திருந்தாத ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

 4. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  மக்கள் கோபம் புரிந்தாலும் அவர்கள் அடானி, அம்பானி பின்னால்தான் போவார்கள். இது பா.ஜ.க-வுக்கு மட்டுமில்லை, காங்கிரசு, தி.மு.க, அ.தி.மு.க எனப் பதவி இன்பத்தைத் துய்த்த எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். இப்பொழுது புதிதாக ஆம் ஆத்மி தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது; அவர்கள் வென்றால் உண்மையிலேயே பெரிய மகிழ்ச்சிதான்; கொண்டாடப்பட வேண்டியது அது! நாட்டில் பெரும்பாலோர், கெச்ரிவாலைக் குற்றம் சொல்கிறார்கள் பக்கம் பக்கமாக! அந்த அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதில் ஒன்றே ஒன்றுதான்; இந்தக் குற்றச்சாட்டுக்கள் அத்தனையும்… அத்தனையும்… அத்தனையும்… புரியாமை, அறியாமை, திறமையின்மை போன்ற ‘பிழைகள்’ எனச் சொல்லக்கூடிய வகைப்பாட்டுக்குள்தான் வருகின்றனவே தவிர, ஊழல், மக்களைக் காப்பாற்றத் தவறுதல், தன் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அடுத்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு வால் பிடித்தல், மக்களை – மண்ணைக் காப்பாற்றத் தவறுதல் போன்ற ‘பெரும் குற்றங்களுக்குள்’ வரவில்லை.

 5. Siva சொல்கிறார்:

  Delhi people are more intelligent people. They have changed the pace of current central government! It’s a great deal!

 6. today.and.me சொல்கிறார்:

  “It’s very scary, the kind of support people of Delhi have given us. I would like to tell all workers/MLAs not to be arrogant.” – Arvind Kejriwal

  TOI – 11:44 AM
  AAP sweeps Delhi, BJP decimated, Congress draws a blank
  ———–
  // 3 நாட்களுக்கு முன் இந்த வலைத்தளத்தில் நாம் எழுப்பிய
  ” டெல்லி ” மோடிஜியின் ” வாட்டர்லூ ” ஆகுமா …? – என்கிற கேள்விக்கு டெல்லி மக்கள் பதிலளித்து விட்டனர்.//

  வாட்டர்லூ ஆகிவிட்டது.
  so, 🙂
  வாட்டர்லூ = நியூடெல்லி
  மோடிஜி=நெப்போலியன் (??!!)
  ———–
  ஆனால் பாருங்கள், மோடி என்கிற பெயருக்கும் அரவிந்த் என்கிற பெயருக்கும் எப்போதும் ஒரு காந்தராசி இழையோடிக்கொண்டே இருக்கிறது. ஒரு வடதுருவம் இல்லையென்றால் தென்துருவம்.
  🙂
  ———–

 7. today.and.me சொல்கிறார்:

  தோசையைத் திருப்பிப்போட்டார் நரசிம்மராவ் (இவர் வேற நரசிம்மராவ்) 🙂
  http://timesofindia.indiatimes.com/elections/delhi-elections-2015/top-stories/Delhi-elections-2015-results-Polls-a-referendum-on-Kejriwal-BJP-says/articleshow/46183087.cms

  BJP spokesperson GVL Narsimha Rao said local issues dominated the elections.
  “I do not see in this way,” he said when asked whether the elections were a referendum on Modi’s performance.
  “In this election it was a referendum on Arvind Kejriwal.
  ————-
  அதனாலென்ன, மீண்டும் தோசையைத் திருப்பிப்போட்டார் கிரேன்பேடி. 🙂 🙂
  Live: I didn’t lose, BJP lost, Kiran Bedi says
  http://timesofindia.indiatimes.com/Delhi-election-result-continuous-coverage/liveblog/46181622.cms

  “If the party wins it will be a collective victory, if it loses it is individual, I will take full responsibility. Even during my policing days if their was a failure, responsibility was mine,” she said.
  http://www.thehindu.com/elections/delhi2015/kiran-bedi-says-she-will-take-responsibility-for-defeat/article6877768.ece?homepage=true
  —————–
  தோசையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.
  எனக்கு நேற்றே தெரியும், இந்ததோசை கருகிப்போயிடும்னு. 🙂 🙂 🙂
  please check date and time.
  // Spoke to @ArvindKejriwal & congratulated him on the win. Assured him Centre’s complete support in the development of Delhi.
  Retweets 11,024 Favorites 8,856
  8:51 PM – 9 Feb 2015 ///

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   இந்த தொலைக்காட்சிகள் இருப்பது நமக்கு
   மனிதர்களை புரிந்து கொள்ள பெரும் உதவியாக
   இருக்கிறது.

   அவர்கள் முகத்தைப் பார்க்காமல், வெறும் அறிக்கையை
   மட்டும் மறுநாள் செய்தித்தாள்களில் படித்தால் –
   பல நிஜங்கள் நமக்குத் தெரியாமலே போய்விடும்.

   இப்போது, வாய் என்ன சொன்னாலும், எவ்வளவு தான்
   முயன்றாலும், அவர்கள் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை
   பார்த்தால், அவர்கள் உள்ளத்தில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்
   என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது……

   “அரசன் அன்று கொல்வான் – தெய்வம் நின்று கொல்லும்”
   என்று சொல்வார்கள். இப்போதெல்லாம் தண்டனை
   கொடுக்க – அரசனோ, தெய்வமோ அவசியப்படுவதில்லை.
   சாதாரண மக்களாலும் கொடுக்க முடிகிறது…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    காமைஜி,
    தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் கூட நன்றாகத்தான் நடித்துவிடுகிறார்கள். அந்த நடிப்பின் சாயம் வெளுப்பதென்னவோ, புகழ்-அதிகார-பதவி மழைபெய்து அதிலும் அவர்கள் நனைந்தபின்தான்.

    ——————————————
    தக்கார் தகவில ரென்ப தவரவ
    ரெச்சத்தாற் காணப் படும்.

    மு.வரதராசனார் உரை
    நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
    ——————————————

    //அரசன் அன்று கொல்வான் – தெய்வம் நின்று கொல்லும்”
    என்று சொல்வார்கள். இப்போதெல்லாம் தண்டனை
    கொடுக்க – அரசனோ, தெய்வமோ அவசியப்படுவதில்லை.
    சாதாரண மக்களாலும் கொடுக்க முடிகிறது//

    இப்போதும்கூட இதைத் தண்டனை என்று என்னால் எண்ணமுடியவில்லை. அவர்கள் திருந்துவதற்கு மக்கள் அடித்த முதல் மணி இது. இரண்டாம் மணி மூன்றாம் மணிக்கு முன்னதாக, 80%அடித்தட்டு நடுத்தர மக்கள் நலன் 60% விவசாயமக்கள்நலன் 80% இளைஞர்கள் நலன் 70% மகளிர் நலன் இவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்சிசெய்தார்களானால் ஏதோ இன்னும் ஒரு ஐந்து வருடம் ஓட்டலாம். இல்லை, 20% கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவும் மதவாதிகளுக்காகவும்தான் ஆட்சிசெய்வோம் என்று இருப்பார்களானால், இவர்களைத் தூக்கி பதவியில் அமர்த்தியவர்களும், அதற்குத்துணைபோனவர்களும் இருப்பார்கள், இவர்கள் இருக்கமாட்டார்கள் பதவியில்.

   • today.and.me சொல்கிறார்:

    கா.மை.ஜி
    தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன், இன்று தான் ஓட்டு எண்ணிக்கை, அதன்பிறகுதான் வெற்றியும் தோல்வியும் தெரியவரும். ஆனால் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு நேற்றைய தேதியிலேயே “spoke to………. congratulated …..” என்று இருக்கிறதே. அது எப்படி அவர்களுக்கு முன்னதாகவே ரிசல்ட் தெரியக்கூடும். அப்படித் தெரியக்கூடுமானால் தேர்தல் கமிஷன் என்னத்திற்கு. இது குறித்து தியரியாக ஏதாவது தெரியுமானால் கொஞ்சம் விளக்குங்களேன். (மற்ற நண்பர்களும் ஏதேனும்விவரம்தெரிந்தால் பதில்சொல்லி விளக்குங்களேன். நான் கொஞ்சம் ட்யூப்லைட் ரகம்)

    ஏன் இதைக்கேட்கிறேன் என்றால், முன்னர் இலங்கை அதிபர் தேர்தல்முடிவுகள் ஊடகங்களில் அறிவிக்கப்படுமுன்னேயே பிரதமர்அவர்கள் புதிய இலங்கை அதிபருக்கு வாழ்த்து ட்வீட்டியிருந்தார். “அது தூதரகம், வெளியுறவு அமைச்சகம் மூலம் இருக்கும். என்ன இருந்தாலும் பிரதமர் இல்லையா? அவருக்கு நாடுகளுக்கு இடையேயான தகவல்கள் முதலில் தெரியவரும்” என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன். இப்போது நிகழ்ந்துள்ளது ஒன்றும் புரியவில்லை.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் டுடே அண்ட் மீ,

     இங்கே ஒரு வேடிக்கையை பாருங்கள்.

     namo twitter 1A

     namo twitter 2A

     d/blog 6/photos/namo twitter 1Ad/blog 6/photos/namo twitter 1Ad/blog 6/photos/namo twitter 2A

     namo twitter 2A

     ஒரே ட்விட்டர் இரண்டு வித்தியாசமான நேரங்களில் .....!!!

     நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தின் கீழே இருக்கும்
     போட்டோ ஷாட் டில் - ஒரு தேதி - நேரம்.

     நமோ வின் ட்விட்டர் பக்கத்தில் இன்னொரு தேதி -நேரம்.

     என்ன மாயம் என்று கொஞ்சம் யோசிக்கத்தான்
     வேண்டியிருக்கிறது....!!!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      KMJI,
      main page shows a (later) time
      https://twitter.com/narendramodi

      If the message double clicked,that goes to a particular message page (i.e. child page)
      that shows different time

      8:51 PM – 9 Feb 2015

      இந்தக் கம்ப்யூட்டர் இண்டர்நெட் இன்ட்ராநெட் விவரங்கள் தெரிந்த நண்பர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா? தயவுசெய்து விளக்குங்களேன்.

     • Siva சொல்கிறார்:

      As per my guess, it is highly likely that his account has been working from USA. Someone close to modi heart in USA might be operating his Twitter account. It is clear that modi does not have any expertise in computer and he cannot be upto date with events online. I initially thought someone in India is managing his Twitter Facebook or any other social online accounts. It is now clear that someone in USA could be doing this!

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Siva /todayandme,

      Great …!! The near 13 hours gap between the two similar messages
      made me also to think in the same way. However, as I am zero
      in computer knowledge,
      I did not want to comment anything
      just based on the strength of my imagination alone.

      SO THIS GOES THIS WAY…..!!!???

      with all best wishes,
      Kavirimainthan

 8. drkgp சொல்கிறார்:

  Dear K M,

  What a shot by AAP, BJP clobbered beyond Delhi and gone out of shape !

 9. visujjm சொல்கிறார்:

  குதிரையின் கடிவாளம் அகப்பட்டது போன்ற உணர்வு ஒரு புறம் மறுபுறம் சிங்கத்தின் குகையாயினும் அசுத்தத்துக்கு துடைப்பம் மிக முக்கியம் ……

  வாழ்க ஜனசக்தி…

  வருக லோக்பால்…

  சிறை செல்க பலான கோபால்ல்ல்ல்ல்ல்ல்ஸ் பெருச்சாளிகள்…

  குடிசையில்லா தலைநகராக டில்லி (படித்து தெளிந்த அதிமேதாவி கெஜ்ரிவால் நினைத்தால் இப்பணி துச்சம் தான் …) விரைவில் மாறினால் அதுவே மிகப்பெரிய ஜனநாயக திருப்புமுனை வெற்றிதான் கா.மை ஜி….

  ஜெய்ஹிந்த்…

 10. today.and.me சொல்கிறார்:

  Thank you siva, your guess gives me some outline.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.