டாக்டர் தமிழக்கா, சின்ன மருத்துவர், உலக மீடியா உட்பட ஒரு ஆழமான சர்வே…..!!!

swach bharat kejriwal-1

arvind -celebrations

 
நம் கருத்துக்கள் – எப்போதும் இருக்கவே இருக்கின்றன.
உலக மீடியா என்ன சொல்கிறது… இந்திய மக்கள் என்ன
சொல்கிறார்கள்…நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்ன
சொல்கிறார்கள் …. கொஞ்சம் பார்ப்போமா…?

முதல் உரிமை – தமிழக அரசியல் தலைவர்களுக்கு –
(சில சமயம் சிரிப்பு வரலாம் …!!!)

வைகோ –
நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த
மரண அடி: மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில்,
பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி,
படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்

டாக்டர் தமிழிசை, தபாஜக தலைவர் –
இது மோடிக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பேடிக்கு (கிரண்பேடி)
ஏற்பட்ட தோல்வி. இந்த தோல்வியால், மோடியின் இமேஜ்
எந்த விதத்திலும் பாதிக்காது….~~~~~~!!!

சின்ன மருத்துவர் அய்யா அன்புமணி ராமதாசு –
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததை,
அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும்.
இன்று டெல்லியில் கேஜ்ரிவால் சுனாமி,
அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாமக சுனாமி” …~~~~!!!

அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி –
இது அறியாமை, தனிப்பட்ட தாக்குதல், எதிர்மறை
அரசியல் ஆகியவற்றிற்கு எதிராக நேர்மைக்கு கிடைத்த வெற்றி.
இந்த பெரும் வெற்றியால் நாங்கள் இறுமாப்பு கொள்ள
மாட்டோம் – கட்சித் தொண்டர்கள் யாரும் அகந்தை
கொள்ள கூடாது. அனைவருடனும் இணைந்து செயல்பட
வேண்டும்.

மம்தா பானர்ஜி –
மமதையும், அகங்காரமும் கொண்டு, மக்களிடையே
வெறுப்புணர்வையூட்டும், அரசியலில் பழிதீர்க்க நினைக்கும்,
கர்விகளுக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய தோல்வி.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே –
“(மோடி என்னும்) அலையை
மிகப் பெரிய (கெஜ்ரிவால் என்கிற )
டெல்லி சுனாமி
அடித்துக் கொண்டு போய் விட்டது….!!!

மக்கள் விரக்தியில் உள்ளனர். டெல்லியில் ஆட்சி நடத்தி
வருபவர்களுக்கு மக்கள் அளித்துள்ள எச்சரிக்கைதான்
ஆம் ஆத்மியின் வெற்றி.

அண்ணா ஹஜாரே –
சிலர் சொல்வது போல், ஆம் ஆத்மியின் வெற்றி –
கிரண் பேடி அடைந்த தோல்வியல்ல.
இது பிரதமர் நரேந்திர மோடி அடைந்த தோல்வி.

உலக அளவில் மீடியாக்கள் என்ன சொல்கின்றன …?

நியூ யார்க் டைம்ஸ் –
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள்ளாக
அது சந்திக்கும் இந்த மிகப்பெரிய தோல்வி – ஒரு சிறிய
அரசியல் பூகம்பம் போன்றது.( “smaller political earthquake”).

வாஷிங்டன் போஸ்ட் –
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அவருக்கு
முதல் தடவையாக ஏற்பட்டிருக்கும் –
ஒரு அதிர்ச்சி தரும் தோல்வி. (“stunning defeat”)

சி.என்.என். –
புது தில்லி, இந்த வாரம் – ஐசக் நியூட்டனின் தத்துவத்தை
நடைமுறை அரசியலில் சந்தித்துக் கொண்டிருக்கும் …
“மேலே போன எதுவும் – கீழே வந்து தானே ஆக வேண்டும் ?”

கார்டியன் –
மோடிக்கு கிடைத்த “மிகப்பெரிய அடி”.

அகில இந்திய அளவில் பொதுவாக – மக்கள் என்ன
சொல்கிறார்கள் …..?

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வோம் என்று
மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த மோடியின் அரசு –
அமைதியை குலைக்கும் வகையில் மதவாத வெறியை
தூண்டி விட்டு, நாட்டை பின்னோக்கி இழுத்து செல்வதை
மக்கள் வெறுத்தனர் ,மோடியின் ஆறு மாத ஆட்சிக்கு
மக்கள் கொடுத்த பெயில் மார்க் இது……

—-

டெல்லி மக்கள் தீர்ப்பு சொல்லும் செய்தி என்ன?
மோடியின் தூய்மையான பாரதம் டெல்லியில் இருந்து
நிஜமாகவே செயற்படத் தொடங்கியுள்ளது.

——
இனிமேலாவது பிஜேபி யினர் திமிர், ஆணவம் குறைத்து
மக்களுக்கு இருக்கும் 4 வருடத்தில் நன்மை செய்யவேண்டும்.
இல்லாவிட்டால் 2016 தேர்தலில் டெல்லி பாடம்
இந்தியா முழுதும் BJP க்கு புகட்டப்படும் ….

பி.ஜே.பி இல் அனைவருமே தலைவர் போல செயல் பட்டனர்.
தேவை இல்லாமபேசியது , சமத்துவம், சமய சார்பில்லாமை
போன்ற சொற்களை நீக்க வேண்டும், ஒவ்வொருவரும் நான்கு, ஐந்து
குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், தனக்கு ஒட்டு
போடாதவர்கள் பாக்கிஸ்தான்க்கு
போக வேண்டும் என்று பாராளுமன்ற உருப்பினர்கள் தேவை
இல்லாமல் பேசிய விளைவோ என்னமோ?
எப்போதும் தனது பேச்சில் பிறரை வசிய படுத்தும் பிரதமரும்
சரியான நேரத்தில் தவறாக மௌனமாய் இருந்து இவர்களை
கண்டிக்காத விளைவு இப்போது இப்படி வந்து உள்ளது…..

—–

நியாபகம் இருக்கா, ஒபாமாவை அமெரிக்காவிலிருந்து கூப்பிட்ட உங்க
ஆளு, உள்ளூரிலிருந்த ex – CM என்கிற முறையிலாவது குடியரசு
தினத்துக்கு கேஜ்ரி யை அழைக்க மறுத்த அந்த சின்ன புத்திக்கு
டெல்லி மக்களின் பதில் இது!

——

ஒரு கார்பரேஷன் கவுன்சிலர் தேர்தலில் கூட
ஜெயிக்க முடியாத இந்த ஹெச்.ராஜா, சுப்ரமணியன் சாமி
போன்றோர் ஆடிய ஆட்டம் என்ன. ?

——-
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.
கனிவு வரவேண்டும் மக்களை மதிக்கும்
மனித தன்மை வேண்டும் என்பதை மிக தெளிவாக தேர்தல் முடிவுகள்
காட்டுகின்றன .

——
சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.-இன்
செயல்பாடுகள். இது சிறுபான்மையினரிடத்திலும்
கடமை உணர்வு கொண்ட மதச்சார்பற்றவர்கள் மத்தியிலும்
பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியது.

—–
பாஜக தற்போது பணக்காரர்களுக்கான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான
கட்சி என்பதும் உறுதியாக நம்பப்படுகிறது. மத்தியதர வணிகர் மற்றும்
அரசு ஊழியருக்குமே
இந்த அரசு ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற அச்சம்
எழுந்துள்ளது.

——–
நவ-யுக பொருளாதார சீர்த்திருத்தங்களை அதன் வாஷிங்டன்
போதகர்களிடமிருந்து பெறுவதைத்
தவிர்ப்பது நலம்.

——-

பின் குறிப்பு –
மேற்கூறிய யாவையுமே பொது மீடியாக்களிடமிருந்து
திரட்டப்பெற்றவை.

நம் கருத்துக்கள் ……?
பின்னூட்டங்கள் அதற்காகத் தானே இருக்கின்றன….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

31 Responses to டாக்டர் தமிழக்கா, சின்ன மருத்துவர், உலக மீடியா உட்பட ஒரு ஆழமான சர்வே…..!!!

 1. Sundar சொல்கிறார்:

  இல்லாவிட்டால் 2016 தேர்தலில் டெல்லி பாடம்
  இந்தியா முழுதும் BJP க்கு புகட்டப்படும் ….

  Typing mistake ???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சுந்தர்,

   அதில் ‘Typing mistake’ இல்லை.
   அதை அப்படியே தான் எடுத்துப் போட்டிருக்கிறேன்.
   மத்தியில் ஆட்சியைப் பிடித்ததால்,
   இந்தியா முழுவதும் பாஜக வினர் ஆணவம், திமிர்
   மிகுந்து செயல்படுகிறார்கள் என்பது அதை எழுதியவரின்
   கருத்து.

   நானும் அதை ஆமோதிக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Parvatham சொல்கிறார்:

  These comments are exactly the same as of our blog. It can not be different.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (Parvatham ),

   நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை…
   உங்கள் ப்ளாக் எது …?
   அதில் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் …?
   It can not be different என்று எதைச் சொல்கிறீர்கள் …
   நீங்கள் எதாவது சொல்ல விரும்பினால் –
   தயவு செய்து புரியும்படி விளக்கமாக எழுதவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப பர்வதம்,
   மக்களும் பெருந்(?!)தலைவர்களும் சொல்லியிருக்கும் கருத்துக்கள்தான்
   விமரிசனம் தளத்தின் மற்றும் பின்னூட்டநண்பர்களின் கருத்துக்களும் எண்ணமும்
   என்று சொல்லவருகிறீர்களா?
   உங்கள் பின்னூட்டத்திலிருந்து நான் புரிந்துகொண்டது சரிதானா?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்பர் todayandme….!!!
    நான் இன்னும் கொஞ்சம் முயன்று புரிந்து கொள்ள
    முயற்சித்திருக்கலாம் தான் ….!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 3. indian சொல்கிறார்:

  I pray let the congress back on power soon, to save india, rather than this Hindusitic BJP.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  யோசித்து யோசித்து – ஒரு வழியாக கலைஞர்
  டெல்லி தேர்தல் பற்றி கருத்து சொல்லி விட்டார்…!
  மிகவும் ஜாக்கிரதையாக –
  பாஜக பற்றியோ, மோடிஜி பற்றியோ –
  தொடவே தொடாமல் – கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து மட்டும்…..

  அதுவும் “கண்டிஷனல்” வாழ்த்து ..!!! – கீழே –

  ———–
  தில்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவாலுக்கு, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
  இந்திய ஜனநாயக வரலாற்றில் இந்த வெற்றி
  குறிப்பிடத்தக்க ஒன்று. தில்லி மக்களின் எதிர்ப்பார்ப்பை
  நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
  —————

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   கா.மை.ஜி,
   பின்னே கலைஞர்ன்னா சும்மாவா? 🙂 நிகழ்காலத்தில் பாஜகவை முறைத்துக்கொள்ளமுடியாதே? கூட்டணி தேவைப்படலாம், அல்லது கனி ஊழல் வழக்கில் விடுதலைபெற அவர்களை நாடவேண்டிவரலாம். எல்லாம் safeside goal தான்.

 5. S.Selvarajan சொல்கிறார்:

  ரெடிமேட் வாழ்த்து கூறும் ஒரே தலைவர் ? இவர் கிரண் பேடி ஜெயித்து இருந்தாலும் இதே பல்லவியை பாடி இருப்பார் !

  • today.and.me சொல்கிறார்:

   பின்னே கலைஞர்ன்னா சும்மாவா? 🙂 எதிர்காலத்தில் தஆஆக-வுடன் கூட்டணி தேவைப்பட்டால் என்னசெய்வது? அல்லது ஊழல் வழக்கில் விடுதலைபெற ஆஆக தலைகளுள் ஒன்றான பூஷண் அவர்களை நாடவேண்டிவரலாம். எல்லாம் safeside goal தான்.

 6. KILLERGEE Devakottai சொல்கிறார்:

  இந்த மாற்றம் தேவையே… மக்களுக்கு மோடி மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது என்பதைக்காட்டுகிறது. இனியெனும் கொஞ்சம் யோசிக்க வழி வகுக்கும். இருப்பினும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் மக்களுக்கு கவலை கவலைதான், கஷ்டம் கஷ்டம்தான். பார்ப்போம்.

 7. raghavendran jayaraman சொல்கிறார்:

  Kaviri M sir, Eager to hear your perspective on “Rebasing” GDP figures by statistics office. Economist, BBC, Bloomberg every media has expressed that they are “Puzzled”
  See link: http://www.economist.com/news/business-and-finance/21642656-indias-economy-grew-faster-chinas-end-2014-catching-dragon
  Your insight should be interesting

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ராகவேந்திரன் ஜெயராமன்,

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

   நீங்கள் சொன்ன அதே விஷயத்தைப்பற்றி 2 நாட்களாக
   நானும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.
   என்னால் எந்தப் பக்கமும் போக முடியவில்லை.

   சென்ற மாதம் அருண் ஜெட்லி பேசும்போது, இன்னும்
   ஒன்றிரண்டு வருடங்களில் இந்தியா வளர்ச்சி விகிதத்தில்
   (ஜிடிபி) சீனாவை மிஞ்சி விடும் என்று சொன்னார். இப்போது
   பொருளாதார வளர்ச்சி வேகம் பிடித்திருப்பதால் –
   இருக்கலாம் என்று தான் தோன்றியது.

   ஆனால் இப்படி அடிப்படை ஒப்பீட்டு ஆண்டை மாற்றித்தான்
   அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

   கச்சா எண்ணை விலை குறைந்தது
   இந்திய பொருளாதாரத்திற்கு
   மிகப்பெரிய சாதகமான விஷயம் என்பது உண்மை.
   விரைவில் நமது வளர்ச்சி வேகம் பெறும் என்பதும் உண்மை.

   ஆனால், அடிப்படை ஆண்டை மாற்றியது –
   இதற்கு முன்னால் எப்போது மேற்கொள்ளப்பட்டது,
   அதற்கான வழிமுறைகள் உலக அளவில் ஏற்றுக்
   கொள்ளப்பட்டனவா என்பதை எல்லாம் நாம் தெரிந்து
   கொள்ள வேண்டும்.
   இப்போதைக்கு – I am also ‘puzzled’……!!!

   இதைப்பற்றி திரு.ப.சிதம்பரம் என்ன சொல்கிறார்
   என்றும் கவனிக்க வேண்டும்.

   இன்னும் கொஞ்சம் கவனிப்போம் … மற்ற விஷயங்களை
   தெரிந்து கொண்ட பிறகு விவாதிப்போமே…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. selvam சொல்கிறார்:

  I am waiting your news last two days about Delhi. Any way we will see the rest of the years.
  I salute and respect Delhi People voice

 9. today.and.me சொல்கிறார்:

  //வைகோ// பாம்பே பிரச்சாரத்துக்கு மாதிரி டெல்லிக்கு கூப்பிடவில்லையே. அதனால்தான் இப்படியா.

  //டாக்டர் தமிழிசை, தபாஜக தலைவர்// இதில் பலிகடாவாக ஆவதற்கு விரும்பித் தலையைக்கொடுத்த ஆட்டிற்கு என்ன தழையைக் கொடுத்தார்கள் பூசாரிகள்?.

  //சின்ன மருத்துவர் அய்யா அன்புமணி ராமதாசு // அப்போ, அடுத்த தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லையா? தனித்துப்போட்டியா? மருத்துவமனை ஊழல் கேஸ் எல்லாம் சரியாகிவிட்டதா? அல்லது மறந்துவிட்டதா?

  // அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி // இப்போ சொன்னதை எப்போதுமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

  //மம்தா பானர்ஜி// – good.

  // சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே// அலை வரும் போகும்……. வரும் போகும் சுனாமி எப்பொழுதாவது வரும், அழிவைத் தான் தரும். இன்னும் நல்ல உவமையை இவர் முயன்றிருக்கலாம்.

  //அண்ணா ஹஜாரே // என்னய்யா சொல்ல வருகிறீர்கள்?

  உலக அளவில் மீடியாக்கள் என்ன சொல்கின்றன …?

  //நியூ யார்க் டைம்ஸ் -// Like

  // வாஷிங்டன் போஸ்ட் // True

  // சி.என்.என். // மேலேயே சென்று சுற்றிக்கொண்டிருக்கும் சாட்டிலைட் என்று அவர்கள் நினைத்தார்கள், அது கடலில் விழுந்த புஸ் ராக்கெட் ஆகிவிட்டது.

  // கார்டியன் // மோடிக்கு என்பதைவிட மதவாதிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் என்று சொல்லியிருக்கலாம்.

  // அகில இந்திய அளவில் பொதுவாக – மக்கள் என்ன சொல்கிறார்கள் …..?
  பெயில் மார்க் கொடுப்போம் என்ற எச்சரிக்கை-பிலோ ஆவரேஜ் மார்க். அந்த 3சீட்டும் இல்லையென்றால் பெயில் கொடுத்ததாகவே எடுத்துக்கொள்ளலாம்.
  —-
  டெல்லி மக்கள் தீர்ப்பு சொல்லும் செய்தி என்ன?
  Like.
  ——
  // இனிமேலாவது பிஜேபி யினர் திமிர், ஆணவம் குறைத்து ……….குறைந்தால் நல்லது..// குறைந்தது மாதிரி எப்படியெல்லாம் நடித்தால் கண்டுபிடிக்கமுடியாதோ அப்படியெல்லாம் செய்ய மீண்டும் நன்றாக அரிதாரம் பூசினால் என்ன செய்வது?

  பிறரை மட்டுமே பேச்சில் வசியப்படுத்தும் பிரதமர் அவர்கள் பேச்சில் வசியப்பட்டு இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள் மக்களே.
  —–
  //நியாபகம் இருக்கா, ….// உண்மையில் இதை நான் மறந்தேபோய்விட்டேன்.
  ——
  சென்றவாரம் நடந்த கார்ப்பரேசன் கவுன்சிலர் இடைத்தேர்தல் (குஜராத்) ஒரு இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
  ——-
  basic need of requirement is மனிதனை முதலில் மனிதனாய்ப் பார்ப்பதுதான்.
  ——
  //சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.-இன் செயல்பாடுகள். // RSS ன் செயல்பாடுகள் மட்டும் இதில் காரணமில்லை, வாலின் நீளம் அதிகம்.
  —–
  //பாஜக தற்போது பணக்காரர்களுக்கான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்சி என்பதும் உறுதியாக நம்பப்படுகிறது. // true
  ——–
  நலம் என்று பாலிஸ்டாகச் சொன்னால் அவர்களுக்குப் புரியுமோ என்னவோ?
  ——-
  என் குறிப்பு –
  காங்கிரசுக்கு (பெரும்பாலான நேரங்களில் தலைமைக்கு) எதிரான எதிர்ப்புதான்
  1. மோடிக்கும் பாஜகவுக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுத்தந்தது
  2. அந்த காங்கிரஸைக் குறித்த எதிர்ப்புஉணர்வைத் தெரியவைக்க 10 வருடகாலம் மக்களுக்குத் தேவைப்பட்டது (அல்லது) பத்துவருட காலம் காங்கிரஸ் நல்ல மாதிரி நடித்துக்கொண்டிருந்தது.

  ஆனால்

  பாஜக குட்டி / சுட்டி / உதிரித் தலைகளின் போக்கிற்கும், தலைமையின் அமைதிக்கும் எதிரான எதிர்ப்புதான்
  1. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆஆக-வுக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுத்தந்துள்ளது
  2. இந்த பாஜகவைக் குறித்த எதிர்ப்பு உணர்வைத் தெரியவைக்க 10மாதகாலம் கூட மக்களுக்குத் தேவைப்படவில்லை 🙂 (அல்லது) இந்தக் குறுகிய காலத்திலேயே பாஜகவின் சாயம் வெளுத்துவிட்டது 😦 (அல்லது) மனித பரிணாமத்தில் பொய்மையை எளிதில் இனம்காண மனிதமூளை பழகத்தொடங்கிவிட்டது….!! 😀

  இறுதியாக, காங்கிரசுக்கு செக்வைத்து பாஜகவைத் தேர்ந்தெடுத்த மக்கள், பாஜகவுக்கு செக்வைத்து ஆஆகவைத் தேர்ந்தெடுத்த மக்கள், ஆஆகவையும் தூக்கியெறிய அதிக நாட்கள் பிடிக்காது என்பதை ஆஆக-தலைமை எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும். ஒரு தலைமை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு காங்கிரசையும் பாஜகவையும் விட வேறு சிறந்த உதாரணம் இருக்கவேமுடியாது.

 10. today.and.me சொல்கிறார்:

  1. பெண்களே, நீங்கள் எத்தனை ஆடைகளை ஒன்றுக்குமேல் ஒன்றாக அணிந்து கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் சொல்லுவார்கள், எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பாஜகவினர் சொல்லுவார்கள். நாங்கள் தான் உங்களை மனுஷிகளாய் பார்ப்போம் என்று ஆஆகவினர் ஓட்டுக்கேட்டபோதே,
  2. இந்துத்வாக்களின் கர்வாப்சி கேம்ப்க்கு பாஜகவினர் ஆதரவு அளித்தபோதே
  3. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பின்மைக்கு அதிகாரத்தில் இருந்தவர்கள் அனுமதி அளித்தபோதே
  பாஜகவின் தோல்வி எழுதப்பட்டுவிட்டது.

  ஓபாமாவுக்கு நன்றி. இந்தியாவிற்கு வர ஒத்துக்கொண்டதற்கும், வந்து மோடிஜியின் பகட்டுகுணத்தை இவ்வளவு சீக்கிரம் மக்கள் புரிந்துகொள்ள உதவியதற்கும்.
  ஒபாமா வருகையால் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

 11. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஒரு கார்பரேஷன் கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாத இந்த ஹெச்.ராஜா, சுப்ரமணியன் சாமி போன்றோர் ஆடிய ஆட்டம் என்ன. ? ஒபாமாவை அமெரிக்காவிலிருந்து கூப்பிட்டவர்கள் உள்ளூரிலிருந்த முன்னாள் முதல்வர் என்கிற முறையிலாவது குடியரசு தினத்துக்கு கேஜ்ரிவாலை அழைக்க மறுத்தது ஆகிய காரணங்களை மக்கள் மறக்கவில்லை என்பது உண்மைதான் ..

 12. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களே,
  குஜராத்திலேயே பாஜக கவுன்சிலர் தேர்தலில் தோல்விதான்.

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1181536

 13. கலிகாலம் சொல்கிறார்:

  மோடி சொல்வார்

  அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் ப்பா

  (கவுண்டமணி ஐயா வாசகம் தான்)

 14. Sharron சொல்கிறார்:

  Read today’s news-Vijaykanth got a call from Delhi.So here in Tamil Nadu BJP is going to hide behind Vijaykanth.

 15. johan paris சொல்கிறார்:

  சோ மற்றும் துக்ளக் குழுமம், குருமூர்த்தி இவர்கள் ஏதும் கூறவில்லையா?

 16. Ganpat சொல்கிறார்:

  ஒரு தரம் பட்டாச்சு! இனிமே யாரையும் ஜாக்கிரதையா தான் புகழணும்..கேஜ்ரிவாலுக்கு(ம்)ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுப்போம்..எதற்கும் டில்லியில் இன்னொரு புதிய கட்சி இப்போவே ஆரம்பிச்சு அதற்கு “சுவர் ஓரம்” சின்னம் (wall corner symbol) கொடுத்துடலாம்.so that AAP perform செய்யலேன்னா அடுத்த தேர்தலில் புது கட்சியை ஜெயிக்க வச்சு வெளக்கமாற்றை மக்கள் சுவர் ஓரம் வைத்து விட்டார்கள் என்று மகிழலாம்.(ச்சே நம்ம பொழப்பு எப்படி ஆயிடுத்து பாத்தீங்களா?) மற்றபடி கவாஸ்கர் சச்சின் ஆட்டத்தைப்பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்.(அதாங்க நம்ம கா.மை & today.and.me ஆட்டத்தை சொன்னேன் 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   நான் ஆட்டக்காரனே இல்லை…!!
   நீங்களும் today.and.me யும் ஆடும் ஆட்டத்தை
   பார்த்துக் கொண்டிருக்கும் பரம ரசிகன் நான்.
   (ஸ்மைலியை எப்படி போடுவது என்று கூட
   எனக்கு தெரியவில்லை ….!!!)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    காமைஜி,
    ஸ்மைலி போடத்தெரியவேண்டாம்,
    பௌலிங் போடத்தெரிஞ்சா போதும்.
    ஆட்டம் களைகட்டும்.
    🙂 🙂

   • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் ஐயா!

    ஒரு முக்காற்புள்ளி (colan) + ஓர் இடைக்கோடு (hyphen) + ஒரு மூடல் அடைப்புக்குறி (close bracket) = 🙂

    இவற்றுள் முக்காற்புள்ளிக்குப் பதிலாய் அரைப்புள்ளி போட்டால் கண்ணடிக்கும். 😉

    மூடும் அடைப்புக்குறிக்குப் பதிலாகத் திறக்கும் அடைப்புக்குறி பயன்படுத்தினால் = 😦

    திறக்கும் அடைப்புக்குறிக்குப் பதிலாக D இட்டால் = 😀

    Dக்குப் பதில் P பயன்படுத்தினால் = 😛

    Pக்குப் பதில் 0 பயன்படுத்தினால் = :-0

    0க்குப் பதில் * பயன்படுத்தினால் = :-* (முத்தம்)

    இன்னும் கூட நிறைய இருக்கும். ஆனால், எனக்குத் தெரிந்தவை இவ்வளவுதான்.

 17. today.and.me சொல்கிறார்:

  டைட்டிலை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன், திரு. வில்லியம் கில்பர்ட் கிரேஸ் அவர்களே.
  🙂 🙂
  மற்றபடி இங்கே ‘விமரிசனத்தில்’ மேட்ச் ஃபிக்ஸிங் எதுவும் செய்யவில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  ———
  கண்பத் ஜி,
  உண்மையில் இந்தப் பதிவுக்கு நீங்கள் என்ன எழுதப்போகிறீர்களோ என்று, உங்கள் காமெண்ட்டை எதிர்பார்த்துக்கொண்………டே இருந்தேன். சந்தடி சாக்கில் புதிய கட்சி ஒன்றுக்கு அடித்தளம் போட்டுவிட்டீர்கள்.
  ———

  • Ganpat சொல்கிறார்:

   நண்பரே! வேறு வழி? இந்த எழுபது ஆண்டு காலத்தில் எழுநூறு கட்சிகளை உருவாக்கியுள்ளோமே! இந்த ஒரு சாதனை போதாதா?
   அப்புறம் உங்க பதிவுகள்….கா.மை ஜி உருவாக்கும் வைரங்களை நீங்கள் அழகாக பாலிஷ் செய்து எங்களுக்கு தருகிறீர்கள்.உங்கள் இந்த முயற்சி கூடிய விரைவில் நம் நாட்டு ஏழை எளிய மக்களுக்கு நன்மைகள் பல செய்யும் ஒரு தலைவரை அடையாளம் காட்டும் வாய்ப்பை அளிக்க இறைவன் அருள வேண்டும்.

 18. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் ஐயா! தில்லி தேர்தல் நீங்கள் கூறியபடியே மோடியின் ‘வாட்டர்லூ’ ஆகிவிட்டதைக் கண்டு, இது பற்றி நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆனால், பதிவிட்ட உடனே வர முடியவில்லை. இப்பொழுது வந்து பார்த்தால்… எல்லார் கருத்தையும் கூறிய நீங்கள் உங்கள் கருத்தைக் கூறவேயில்லையே!! ஏமாற்றம்! இருந்தாலும், உங்கள் கருத்து என்ன என்பதுதான் எங்களுக்குத் தெரியுமே!

  ஆனால், மேற்கண்ட கருத்துத் தொகுப்பில் நீங்கள் ஒரு முதன்மையான கருத்தை விட்டுவிட்டீர்கள்.

  “எல்லா மாநில மக்களும் வாழும் பகுதி என்பதால், இதை நாட்டின் ஒட்டுமொத்த மக்களுடைய நிலைப்பாடாக பா.ஜ.க கருத வேண்டும்” என்று ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் கூறியிருந்தார். மிகவும் புதுமையான கோணத்திலான இந்தக் கருத்து ஓரளவு உண்மையும் கூட.

  எங்கள் கருத்தைக் கூறச் சொல்லியிருந்தீர்கள். என்னைப் பொறுத்த வரை, தமிழன் என்கிற முறையில் பார்க்கும்பொழுது, கெச்ரிவால் அவர்களின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றித் தமிழர்களுக்கும் நல்லதோர் அறிகுறி; நம்பிக்கைக் கீற்று என்றே கருதுகிறேன். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

  35 ஆண்டுக்கால ஈழப் பிரச்சினை முதல் நேற்று முளைத்த நியூட்ரினோ பிரச்சினை வரை தமிழர் பிரச்சினைகள் அனைத்திலும் இந்திய அரசுகள் கடைப்பிடிக்கும் நிலைப்பாடு ஒன்றுதான் – எதிர் நிலைப்பாடு! எனவே, இந்த இரண்டு கட்சிகளும் அல்லாத ஓர் ஆட்சி நடுவணரசில் அமைந்தால்தான் நமக்கு விடிவு காலம்.

  ஆம் ஆத்மியின் இந்த மாபெரும் வெற்றி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, நாட்டை ஆள்பவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முதன்மையான ஆற்றல்களில் ஒன்றாக இந்தக் கட்சியையும் உருவெடுக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை. அது பலித்தால், அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களுள் ஒன்றில் ஆம் ஆத்மி கண்டிப்பாக இந்திய ஆட்சித் தலைமையைப் பிடிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. அப்படி நடந்தால், தமிழ்ப் பகைவர்களான காங்கிரசாரோ, தேசிய இன உணர்வுகளைக் கால் தூசிக்கும் மதிக்காத சமயவியல் பா.ஜ.க-வோ அல்லாத ஓர் ஆட்சி இந்தியாவில் மலரும். அது தமிழர் பிரச்சினைகள் அனைத்துக்கும் மிகச் சிறந்த ஒரு விடிவாக அமையும் என எதிர்பார்க்கிறேன். இவை எல்லாவற்றுக்குமான முதல் நம்பிக்கைப் புள்ளியாகவே நான் ஆம் ஆத்மியின் இந்த தில்லி சட்டமன்ற வெற்றியைப் பார்க்கிறேன்.

  ஆனால், இவையெல்லாம் நடக்க வேண்டுமானால், தி.மு.க, மார்க்சிசப் பொதுவுடைமைக் கட்சி போன்ற ஈழ எதிர்ப்புக் கட்சிகளோ, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அரசியல் கேடிகளோ, அ.தி.மு.க-வோ அல்லாத உண்மையான தமிழ்க் கட்சிகள் இந்தக் கோணத்தைச் சிந்தித்துப் பார்த்து, இப்பொழுது முதலே ஆம் ஆத்மியுடனான தங்கள் அரசியல் உறவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். செய்வார்களா? அதை நினைக்கும்பொழுதுதான் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது; நம் தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமையின்மையை நினைத்து.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.