மோடிஜி, அமித் ஷா குறித்து ராஜ் தாக்கரே இன்று வரைந்துள்ள கார்ட்டூன்…..!!!

.

.

டெல்லி தேர்தலில் மோடிஜியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்
சந்தித்த தோல்வியை, அமெரிக்காவின் இரட்டை கோபுர
தாக்குதலுடன் ஒப்பிட்டு, MNS தலைவர் ராஜ் தாக்கரே
இன்று வரைந்துள்ள கார்ட்டூன் இது.

இதை வரைய எனக்கு இரண்டரை மணிநேரம் ஆனது
என்கிறார் ராஜ் தாக்கரே.

2012-ல் மோடிஜியை மிகத் தீவிரமாக ஆதரித்த ராஜ் தாக்கரே
இன்று இப்படி மாறியதற்கு அவர் கூறும் காரணம் –

” தன் கோட்’டில் தன் பெயரையே பொறித்துக் கொள்ளும்
அளவிற்கு அகந்தையும், கர்வமும் உள்ளவராக அவர்
மாறிப்போனதை என்னால் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை !! “

(கார்ட்டூனில் – தாக்குதலை நிகழ்த்தி விட்டு,
பைலட் விமானத்துடன் பத்திரமாக மீண்டு விட்டதையும்
சுட்டிக் காட்டுகிறார்…!)

raj thakre cartoon

பின் குறிப்பு – இப்போது தான் இதைப்பார்த்தேன்.
உடனே பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
… கொண்டு விட்டேன்.
ராஜ் தாக்கரே யின் ரசிகன் நான்…..!!!
அவர் வித்தியாசமான ஒரு அரசியல்வாதி….
அவரைப் பற்றி தனியாக ஒரு பதிவே போட வேண்டிய
அளவிற்கு நிறைய விஷயம் இருக்கிறது. மிகவும்
சுவாரஸ்யமான மனிதர் அவர்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to மோடிஜி, அமித் ஷா குறித்து ராஜ் தாக்கரே இன்று வரைந்துள்ள கார்ட்டூன்…..!!!

 1. karan சொல்கிறார்:

  மோடிக்கு எதிரானவர்கள் அனைவர்க்கும் நீங்கள் ரசிகர்தான் ,இன்னும் கொஞ்ச நாள்ல தவோத் இப்ராஹிம் க்கு கூட ரசிகர் யவிர்கள்,ஏன் என்றால்மோடி மேல் உங்களுக்கு மிக மிஞ்சிய காழ்புணர்ச்சி உள்ளது, உங்களை விட அதிகம் விமர்சனம் செய்தவர்கள் அனைவரையும் கடந்துதான் பிரதமர் ஆகிஉள்ளார் ,மோடிக்கு எதிராய் எதை எழுதினாலும் பாராட்டுகள் கொடுக்கும் கூட்டம் ஓன்று உங்களுக்கு உள்ளது,என நினைத்து அடுத்து மோடியின் பனியன் ,கண்ணாடி,பேனா,சூ , எந்த நாட்டில் வாங்கினார், எத்தனை லட்சம் என கூகிள்லில் தேடி இந்திய மக்களுக்கு தெரிவித்தால் மிகவும் நல்லது

  • bandhu சொல்கிறார்:

   கண்மூடித்தனமான எதிர்ப்போ ஆதரவோ யாருக்குமே இங்கு கிடையாது. அவர் உருப்படியாக சொன்னபடி செய்துகொண்டிருந்தால் யார் எதிர்க்கப் போகிறார்கள்? 11 லட்சம் சூட் ஆடம்பரமா இல்லையா? அதானிக்கு ஆஸ்த்ரேலியாவில் தொழில் தொடங்க 1 பில்லியன் டாலர் கடன் கொடுத்தது நம் நாட்டை எந்த விதத்தில் உயர்த்தும்? அணு தொழில் நுட்பம் வழங்கும் அமெர்க்க கம்பெனிக்கு அந்த தொழில் நுட்பத்தினால் விபத்து நடந்தால் பொறுப்பில்லை என்பது யார்க்கு நல்லது?

   இது போன்ற பெரிய தோல்வி மோடியை ஆகாயத்திலிருந்து தரைக்கு கொண்டுவந்தால் நல்லது தானே!

   எல்லா வற்றையும் கண்மூடித்தனாக எதிர்ப்பது இல்லையேல் ஆதரிப்பது என்பது தான் பலரும் செய்வது. நண்பர் கா.மை. அதை செய்வதில்லை. அது தான் மற்ற ஊடங்களுக்கும் இவர் வலைப் பதிவகத்துக்கும் வித்யாசம்!

  • புது வசந்தம் சொல்கிறார்:

   நண்பரே, தொடர்ந்து விமரிசனம் படிக்கவும். கையும் தட்டுவோம், தலையிலும் குட்டுவோம்.

   • karan சொல்கிறார்:

    விமர்சனம் அல்ல இது ,தனி மனித தாக்குதல்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் கரன்,

     நீங்கள் இந்த வலைத்தளத்தை எப்போது முதல் படிக்கிறீர்கள்…?
     தொடர் வாசகராக இருந்திருந்தால், உங்களுக்கு இந்த எண்ணம்
     வந்திருக்காது.

     தயவுசெய்து, சிறிது நேரம் ஒதுக்கி, பாராளுமன்ற தேர்தல்
     சமயத்தில், அதற்கு சற்று முன்னரும், பின்னரும் எழுதி
     இருப்பதை பார்த்தீர்களானால், இதே வலைத்தளத்தில்
     திருவாளர் நரேந்திர மோடியை பாராட்டியும், வரவேற்றும்
     எழுதி இருப்பதைக் காணலாம்.

     கட்சிக்காரர்கள் வேறு – சாதாரண பொது மக்கள் வேறு.
     கட்சிக்காரர்கள் கண்களை மூடிக்கொண்டு தங்கள் தலைவரை,
     அவர் தவறும்போது கூட ஆதரிக்கிறார்கள்.

     இந்த வலைத்தளத்தைப் பொருத்த வரை, நாம் எந்த கட்சிக்கும்
     அடிமை கிடையாது. யாருக்கு ஓட்டு போடுவது என்பதை
     தேர்தல் சமயத்தில் முடிவு செய்து கொள்ளலாம்.
     மற்ற நேரங்களில், நல்லது நடந்தால் பாராட்டுவோம் –
     தவறு நேரும்போது எடுத்துச் சொல்லுவோம். இங்கு யாருக்கும்
     மோடிஜி மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும்
     கிடையாது.

     பாராட்டோ, வசவோ – எல்லாவற்றிற்கும் – அவர் செயல்களே
     காரணம். உங்கள் பின்னூட்டத்தை இப்போது தான் நான்
     பார்த்தேன். அதற்கு முன்னரே, இங்கு எவ்வளவு நண்பர்கள்
     விளக்கம் அளித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா …?

     இந்த வலைத்தளத்தின் சிறப்பை பாதுகாப்பதில் என்னை விட,
     இந்த வாசக நண்பர்களுக்கு பொறுப்பு அதிகம் இருப்பதை
     இது உங்களுக்கு உணர்த்தவில்லையா …?

     நீங்கள் எந்த ஊரில், நாட்டில் இருக்கிறீர்கள்…?
     பொது மக்களிடம் பேசிப்பழகுவதில்லையா …?
     மோடிஜியின் அண்மைய நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களை
     (பாஜக அன்பர்களைத் தவிர ) உங்களால் எங்காவது
     காண முடிகிறதா …?

     கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்தீர்களானால்,
     நீங்கள் தான் ஒருதலைப்பட்சமாக இருப்பது புரியும்.
     ஒருவேளை நீங்கள் பா.ஜ.கட்சிக்காரராக இருந்தால்,
     நான் இங்கு எழுதியது அனைத்தும் வேஸ்ட்….
     அப்படி இல்லையெனில் –
     நீங்களே உண்மையை உணர்வீர்கள்…

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கரன்,

      உங்களுக்கு மறுமொழி எழுதிவிட்டு அந்தப் பக்கம் செய்தி
      பார்க்கப் போனேன். 82 வயது கம்யூனிஸ்ட் தலைவர்
      நல்லகண்ணு அவர்கள் பேசியதைப் பார்க்கிறேன்.
      தமிழகத்தில், தோழர் ஜீவானந்தத்திற்குப் பிறகு,
      தலைவர் கக்கனுக்குப் பிறகு மிக மிக எளிமையாக
      வாழும் தலைவர் நல்லகண்ணு அவர்கள் என்பதை
      நீங்களும் கூட ஏற்பீர்கள்….

      இவர் சொல்வதையும் தனி மனித தாக்குதல் என்பீர்களா…?

      யோசியுங்கள்…..

      ——————
      ( http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=137774 )

      வெள்ளிக்கிழமை, 13, பிப்ரவரி 2015 (10:38 IST)

      எளிமையை பற்றி பேசிய மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள
      ஆடை அணிந்ததால் பாஜக தோற்றது: நல்லக்கண்ணு

      இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாடு செஞ்சியில் நடந்தது. மாநாட்டின் முடிவில் நடந்த
      பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த
      தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டார்.
      அப்போது பேசிய அவர்,

      மத்தியில் ஆளும் அரசு முதலாளிகளுக்கு உதவும் ஆட்சி.
      தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
      சாதி, மத கலவரங்களை தூண்டிவிடுகிறது. ஏழைகளுக்கு
      ரேஷன் பொருட்களை முறையாக தரவில்லை. கியாஸ்
      மானியத்தை ரத்து செய்துவிட்டது.

      பாரதிய ஜனதா அரசு பல்லாயிரக்கணக்கான ஏழை–எளிய
      மக்களின் அன்றாட வாழ்வாதாரமான மகாத்மா காந்தி
      ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்திவிட்டது.
      இதன் மூலம் 40 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியதாக
      கூறும் மத்திய அரசு, 2 முதலாளிகளுக்கு ரூ. 1 லட்சம்
      கோடியை சலுகையாக வழங்கி உள்ளது.

      மகாத்மா காந்தி கோட்டு–சூட்டு அணிந்து மதுரை வந்தபோது விவசாயிகள் வேட்டி, துண்டு அணிந்திருந்தததை பார்த்துவிட்டு அவரும் வேட்டி–துண்டு அணிய ஆரம்பித்தார்.
      ஆனால் டீக்கடை தொழிலாளி என சொல்லிக்கொள்ளும்
      பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டெல்லி வந்தபோது
      ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் பெயர் பொறித்த
      கோட்டு சூட்டு அணிந்திருந்தார். இவர்கள் தான் எளிமையை
      பற்றி பேசுகின்றனர். இதனால்தான் மோடிக்கு தோல்வியை தர
      டெல்லி மக்கள் முடிவெடுத்து பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தேர்தலில் நல்ல பாடம் தந்துள்ளனர்

      —————————

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 2. D. Chandramouli சொல்கிறார்:

  I felt the same way as MNS Chief as regards Modi’s expensive coat. It repulsed me.

 3. Ganpat சொல்கிறார்:

  karan..மோடி தன் பெயரை நெய்த சூட் அணிந்தது சரி என்றால் நம் தேசப்பிதா மனநலம் பாதிக்கப்பட்டவர்.அல்லது நம் தேசப்பிதா மேலாடை கூட இன்றி வாழ்ந்தது சரியென்றால் மோடி மனநலம் பாதிக்கப்பட்டவர்.இவற்றில் எது உங்கள் தேர்வு?

  • karan சொல்கிறார்:

   http://www.hindustantimes.com/india-news/modi-dons-pinstripe-suit-embroidered-with-his-name/article1-1310904.aspx
   காந்திஜி ஆடை அணிந்து சென்றது அன்றய இந்தியவின் வறுமையின் நிலைபாடு ,இன்று இந்திய ஒன்றம் மிக மோசமான வறுமையில் இல்லை ,ஒரு நல்ல விஷயத்தில் பங்கு எடுக்கும்போது அணியும் ஆடை நல்லதாக இருந்தால்தான் ஒரு மரியாதை கிடைக்கும் ,நம் முன்னோர்கள் கூறியபடி ஆள் பாதி ,ஆடை பாதி என பிரதமர் நல்ல இருந்தால்தான் மற்ற நாட்டினர் மதிப்பார்கள், ஐக்கிய நாட்டு சபையில் நிரந்தர உறுப்பினர் யாக முயற்சி செய்யும்போது கண்டிப்பாக நாட்டு தலைவனின் தோற்றமும் நல்லமுறையில் இருப்பதும் ஒரு நாட்டின் அடையாளம்,அந்த ஆடை மொத்த மதிப்பு 15000 ரூபாய் எனயும் ,இந்தியாவில் தான் வடிவமைப்பு செய்துஉள்ளார்கள் ,நமது கள்ள மீடியா கூறியது போல் 19 லட்சம் ,வெளி நாட்டு வடிவமைப்பு என கூறியது பொய் ,ஆடை வடிவமைத்தவர் குஜராத் தில்தான் வடிவமைத்தது என உண்மை வந்தஉடன் மீடியாகள் வாய் மூடிகொண்டன,விமர்சனம் நல்லதே ,யாரையும் விமர்சனம் செய்ய இந்தியவில் உரிமை உண்டு ,ஒரு மனிதனை விமர்சனம் செய்யும்போது நல்லது ,கெட்டது என இரு பக்கமும் பார்க்கவேண்டும் ,மோடி மட்டும்தான் இந்தியாவில் மோசம் என ஒரு தனி மனிதனை அத்தனை இந்திய மீடியாகளும் வேட்டையாடுகின்றன ,காலம் பதில் சொல்லும் ,உண்மை ஒரு நாள் வெளியில் வரும்

   • Ganpat சொல்கிறார்:

    அந்த கோட்டின் மதிப்பை பற்றி நான் விவாதிக்கவில்லை.ஆனால் ஒரு 65 வயது நிரம்பிய, நாட்டின் தலைவர், தன் பெயரையே பலமுறை எழுதி அதை அணிந்துள்ள மனோபாவத்தைப்பற்றித்தான் என் கவலை எல்லாம்.ஜெயா வீட்டில் நூற்றுக்கணக்கான ஜோடி காலணி இருந்தாற்போல..

   • Siva சொல்கிறார்:

    Karan, what are you telling? Are you telling true fact or biased media fact? Where is the evidence for your claim that the jacket was designed in India? The link you posted did not clarify anything new! Either you read unbiased news and discuss some useful things in this blog OR kindly get out of this place! We do not want a blinded supporter of any party or any leader here to discuss the current politics. One should have ability to strongly criticize his leader when he makes mistake, as he gets accolade for his good deeds!

 4. natchander சொல்கிறார்:

  ganpat ji pl do not mention about jeyas innumerable footwears k.m ji would never take lightly of your remark…but soon would begin abusing dr.swamy….

  • Ganpat சொல்கிறார்:

   உண்மை..ஜெயா தண்டிக்கப்படவேண்டும்..கருணா தண்டிக்கப்படவேண்டும் சோனியா மாறன் மற்ற ஊழல் சாகரங்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்..ஆனால் சு,சுவாமி போன்றவர்கள் தங்கள் இச்சைக்கேற்ப அதை செய்யக்கூடாது.என்னுடன் ஒத்துழைத்தால் உன்னை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்பது குற்றத்தை விட கொடிய black mail வகை ஆகும்.அதை நிச்சயமாக இந்த தள நண்பர்கள் எதிர்ப்போம்.

 5. M. Syed சொல்கிறார்:

  அருமையான பதிவு. நமோ மீதுள்ள கழ்ப்புனசினால்தான் K.M. இப்படி எழுதுகிறார் என்று நண்பர் கரன் அவர்கள் கூறுகிறார். அது தவறு தேர்தலுக்கு முன்பு இதே K.M. அவர்கள் நமோவை பாராட்டியும் புகழ்க்ந்தும் எழுதியுள்ளார். அப்போதே நான் பின்னூடம் எழுதியுள்ளேன்.
  நமோ என்னும் பலுனை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகின்றன. நமோ வந்தால் மக்களுக்கு நன்மையில்லை. கான்கிரசை விட மோசமாகத்தான் இருக்கும் என்று. இந்திய மக்கள் நமோவை இந்தியாவை காக்க வந்த தேவ தூதுவனாக நினைத்து வாக்களித்தார்கள் இப்போது ஏமாந்து வருந்துகிறார்கள். இது மட்டும் அல்ல இனியும் உள்ளது. நம் மக்களுக்கு.

  M.Syed,
  துபாய்

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு அருமையான பாடல்….
  கண் போன போக்கிலே ….

  பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
  புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
  முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
  முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
  முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

  கண் போன போக்கிலே …

  திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
  வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
  இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  கண் போன போக்கிலே ….

 7. Ganpat சொல்கிறார்:

  காவிரிமைந்தன் மற்றும் அவர் நண்பர்களுக்கு நாடு முன்னேறவேண்டும் ஊழல் அழியவேண்டும் ஏழை எளியோர் வாழ்வு மேம்படவேண்டும் என்ற ஆசையை தவிர்த்து வேறு எந்த நோக்கமும் இல்லை.அது யாரால் நிறைவேறினாலும் அவரை நாக்கால் வாழ்த்துவோம்.மேலும் இங்கு எமக்கு நிகழ்காலம் ஒன்றே முக்கியம்.நாளை யார் எப்படி இருப்பார் என்பதை எல்லாம் இங்கு ஊகித்து அதற்கேற்றால் போல எங்கள் நோக்கங்களை மாற்றி கொள்ள இயலாது.மோடி கடந்த பத்து மாத கால ஆட்சியில் செய்த எதுவும் திருப்திகரமாக இல்லை என்பதே நிதர்சனம்.அதை தான் இங்கு விமரிசனம் செய்கிறோம்.

 8. today.and.me சொல்கிறார்:

  நண்பர் கரண்,

  //மோடி மேல் உங்களுக்கு மிக மிஞ்சிய காழ்புணர்ச்சி உள்ளது//
  கா.மை.க்கும் மோடிஜிக்கம் வாய்க்கால் தகராறா, வரப்பு தகராறா அல்லது வேறு என்ன காழ்ப்புணர்ச்சி என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?

  //உங்களை விட அதிகம் விமர்சனம் செய்தவர்கள் அனைவரையும் கடந்துதான் பிரதமர் ஆகி உள்ளார்//
  அனைவரையும் கடந்து தான் என்பதைவிட அனைவரையும் வாய்ச்சொல்லில் ஏமாற்றித்தான் என்று சொல்லியிருக்கவேண்டும்.

  //எதை எழுதினாலும்// எதைவேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் எழுதுகிற தளம் அல்ல இது, நமோவின் ப(க்)தர்களைத் தவிர

  //மோடியின் பனியன் ,கண்ணாடி,பேனா,சூ , எந்த நாட்டில் வாங்கினார், எத்தனை லட்சம் என கூகிள்லில் தேடி இந்திய மக்களுக்கு தெரிவித்தால் மிகவும் நல்லது// லட்சங்களில் தான் accessories அவரால் அணியப்படுகின்றன என்றால் அவை மக்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டியவைதான். அவையெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் சம்பளம் ஐயா. அவர் டீக்கடையில் டீ ஆற்றி வாங்கிய கூலிக்காசு அல்ல.

  கொஞ்சநாள் முன்பு முன்னாள் ஜனாதிபதி பிரதிபாபாட்டீல் அவர்கள் குடியரசுத்தலைவருக்கு அன்பளிப்பாக வந்த பொருட்களை தனக்கென எடுத்துச்சென்றுவிட்டார்கள் என்று பிரச்சினையைக் கிளப்பி சட்டப்படி அவை அரசுக்குச் சொந்தம் என மீண்டும் அரசு கஜானாவுக்குக் கொண்டுவரப்பட்டதை மறந்துவிட்டீர்களா? மோடியின் கோட்டு அன்பளிப்பு என்றால் அவர் அதை என்ன செய்திருக்கவேண்டும்? இல்லையென்றால் அதை எப்படி வாங்கினார் என்பதை அவர்சார்பாக நீங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

  //விமர்சனம் அல்ல இது , தனி மனித தாக்குதல்//
  எவ்வாறு இப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்பதை கொஞ்சம் சான்றுகளுடன் விளக்கினீர்களால் தேவலை. அல்லது நீங்கள் தனி மனித தாக்குதல் நிகழ்த்துகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

  //காந்திஜி ஆடை அணிந்து சென்றது அன்றய இந்தியவின் வறுமையின் நிலைபாடு ,இன்று இந்திய ஒன்றம் மிக மோசமான வறுமையில் இல்லை//
  காந்தியையும் இந்தியாவில் இன்று வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் (தோராயமாக 363,000,000 மக்களையும் உங்களைவிட உங்கள் கருத்துக்களைவிட வேறுயாரும் இவ்வளவு கேவலமாக மதித்துவிடமுடியாது.

  http://www.rediff.com/business/slide-show/slide-show-1-union-budget-363000000-people-in-india-below-the-poverty-line/20140707.htm

  சொல்வதற்கு மிகவும் வருந்துகிறேன் நண்பரே, எவ்வளவுதூரம் சுயநலமே உருவாய் உங்கள் தலைவரைப்போலவே இருக்கிறீர்கள்.

  //நம் முன்னோர்கள் கூறியபடி ஆள் பாதி ,ஆடை பாதி என பிரதமர் நல்ல இருந்தால்தான் மற்ற நாட்டினர் மதிப்பார்கள்//
  உங்கள் கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும் இதற்குமுன்பு இந்தமாதிரியான கோட்டை அணியாத எந்தத் தலைவரையும் அல்லது எந்த மனிதரையும் ஒபாமா அல்லது மற்ற நாட்டினர் மதிக்கவில்லை என்று சொல்லவருகிறீர்களா?

  //அந்த ஆடை மொத்த மதிப்பு 15000 ரூபாய் எனயும் ,இந்தியாவில் தான் வடிவமைப்பு செய்துஉள்ளார்கள் ,நமது கள்ள மீடியா கூறியது போல் 19 லட்சம் ,வெளி நாட்டு வடிவமைப்பு என கூறியது பொய் ,ஆடை வடிவமைத்தவர் குஜராத் தில்தான் வடிவமைத்தது என உண்மை வந்தஉடன் மீடியாகள் வாய் மூடிகொண்டன,//
  இதைச் சொன்ன நல்லமீடியா எது? ஆடை வடிவமைத்தவர் யார்? உங்கள் தானைத்தலைவனுக்காக நீங்கள் பதில்கூறுங்களேன். சான்றுகளைப் பார்த்துவிட்டு அவை உண்மையா இல்லையா என்று நாங்கள் வாயை மூடிக்கொள்கிறோம். ஏன்? இந்தப் பிரச்சினையைக் குறித்து உங்கள் தலைவரே வாயைமூடிக்கொண்டுதானே இருக்கிறார். (இந்தப் பிரச்சினைக்கு மட்டுமல்ல, எந்தப் பிரச்சினைக்கும் என்பது இன்னும் விசேஷம் 🙂 🙂 )

  //ஒரு மனிதனை விமர்சனம் செய்யும்போது நல்லது ,கெட்டது என இரு பக்கமும் பார்க்கவேண்டும்//
  இருட்டில் அல்ல, நல்ல வெளிச்சத்தில் ஒரு முறை கண்ணாடிக்கு முன் நின்றுகொண்டு, நீங்கள் சொல்லியிருக்கும் இதே வார்த்தையை மீண்டும் ஒருமுறை சொல்லிப்பாருங்கள். உங்கள் வலதுகையை இதயத்தின் மீது வைத்துக்கொண்டு.

  அது, நீங்கள் கா.மையைப் பற்றி விமரிசனம் செய்தாலும் சரி, மோடியைப் பற்றி விமரிசனம் செய்தாலும் சரி.

  //ஒரு தனி மனிதனை அத்தனை இந்திய மீடியாகளும் வேட்டையாடுகின்றன//
  இந்திய மீடியாக்களே அவர் சட்டைப்பையில்தான் என்பதை மறவாதீர்கள். முதலில் ஆரம்பித்தவர்கள் அயல்நாட்டு மீடியாக்கள்தான். பிரச்சினையை சரியானமுறையில் புரிந்துகொள்ள முயலுங்கள்.
  மேலும் வேட்டையாடுகின்றன என்று நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அவர் மனிதர் அல்ல மிருகம் என்கிறீர்களா?

  ……………………………

  நண்பர் natchander.
  //k.m ji would never take lightly of your remark//விமரிசனத்தைப் பற்றியும் கா.மையைப் பற்றியும் நீங்கள் புரிந்துகொண்டது இவ்வளவுதானா? மாற்றுக்கருத்துக்களுக்கும் இங்கே இடமுண்டு என்பது உங்களுக்குத் தெரியாததா?
  ……………………………

  நண்பர்கள் அனைவருக்கும்,

  மிகவும் தாமதமாய் வந்துவிட்டேன். அனைவரும் சொல்லவேண்டியதைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  புதிதாய் ஒன்றும் சொல்லவில்லை நான்.
  என் கருத்தைப் பதியவேண்டும் என்பதற்காகப் பதிந்திருக்கிறேன்.

  என்கருத்தைப் படித்தெல்லாம் கண்களை மூடி நமோ நம போடுபவர்கள், கண்களைத் திறப்பார்கள் என்று இன்றைக்கு எண்ணவில்லை.

  ஒருவேளை இன்றில்லாவிட்டாலும் நாளை மாறலாமல்லவா?
  நம்பிக்கைதானே வாழ்க்கை.

  THANKS FOR THE QUALITY CONTROL.

 9. today.and.me சொல்கிறார்:

  http://www.hindustantimes.com/business-news/poverty-line-redrawn-3-in-10-indians-are-poor/article1-1237561.aspx
  Poverty line redrawn, 3 in 10 Indians are poor: report
  —————
  http://www.business-standard.com/article/economy-policy/half-of-india-was-below-poverty-line-in-2010-adb-114090500044_1.html
  Half of India was below poverty line in 2010: ADB
  ————
  குஜராத்தில் முதல்வராக இருந்தபோது குடிசைகளை, அவற்றில் வாழ்பவர்களை சீனஅதிபர் பார்த்துவிடக்கூடாதே என்று திரைபோட்டு மறைத்தவர்தானே தலைவர். அவரைப்போலத்தான் அவரது தொண்டர்களும் இருப்பார்கள்.

  கழுத்தைக் குனிந்து (தனக்கும்) கீழே பார்க்க இயலாத கழுத்துநோவு உள்ளவர்களுக்காக மேற்கண்ட சுட்டிகளை இணைத்துள்ளேன். பார்க்கவும். இல்லையில்லை, இவர்களும் பணக்காரர்கள் தான், வளமையில் உள்ளவர்கள் தான் என்று இன்னமும் விதண்டாவாதம் செய்வார்களேயானால், சொல்பவர்களின் வறுமையை நிலையை எண்ணி மனம் வருந்துகிறேன்.
  ————:-(
  (இந்தியாவை குறிப்பாகத் தமிழகத்தை ஒதுக்கும் மனோபாவம் கொண்ட மோடியின் பேச்சுத்திறமையும் நடிப்புத்திறமையும் எவ்வளவு திறமையான நடிகர்களையும் மிஞ்சிவிடும் என்பது இப்போது தெரிகிறது. மத்தியஅரசால் தீண்டத்தகாத தமிழகத்தில் இந்த நிலையிலும் எத்தனை தமிழர்கள் பரமவிசிறிகள்.)

 10. visujjm சொல்கிறார்:

  எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே…! *:)

  சிறப்பான சிந்தனைக்கு வாரக்கடைசி கார சார சாம பேத விவாதங்கள் ஆரோக்கியமானது….. வாழ்க விவாதங்கள்…

  அரசியல் அல்லது நிர்வாகம் இரண்டுக்கும் இடை சொருகலாக ஒரு வினா …

  ஏழை , பணக்காரன் யார் அதிகம் நமது நாட்டில்…?

  ஏழைக்கு ஓர் அரசல் புரசலான பார்வை ; பணத்துக்கு ஓர் ராஜபார்வை …

  ஒரே வழிதான் உள்ளது விமரிசனம் காவிரிமைந்தன் அவர்கள் அவர் சக்திக்கு விவேகானந்தர் தேடிய 100 இளைஞருள் ஒருவராக தாமே செயல்படுகின்றார்… மீதி 99 இளைஞர்கள் என்று தன் திறனறிந்து செயல்படுகின்றார்களோ அன்று விவேகானந்தரை எதிர்நோக்காது அந்த 100 ல் நானும் ஒருவன் எனத் துணிந்து இறங்கும் வேளை வெகு விரைவில் ….. ~ 2008 நாட்டாமை அண்ணணிண் பொருளாதாரபலம் தையல் போட்டாகி விட்டது இருந்தும் பிழைப்புக்கு ஜனத்தொகை உள்ள நுகர்வுகலாச்சாரம் பெருக்க பொருளாதார சக்தி நிலைநாட்ட … நாட்டாமை அண்ணண் வந்தான் என்பது யாரறிவார்…..?

  பராக் பராக் என்று வியாபாரம் வேறு ; மறை நீர் குறித்த விழிப்புணர் இப்போதுதான் புரிந்துணரப்படுகின்றது நமது நாட்டில்…… !
  ஏற்றுமதி … எத்தனை கனமில்லியன் லிட்டர் மறைநீர் ஒவ்வொரு பொருளின் ஊடாக ; மறு புறம் குழாயடி குடுமிப்பிடி சண்டை… இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்தது சிறு வயதில் படித்ததின் விளக்கம் பல இப்போதுதான் சிறிது சிறிதாக புரிகின்றது…..
  சற்றே எரிகின்றது…

  வம்புக்கோ அல்லது வலிமைக்கோ கேட்க வில்லை உண்மைக்காக கேட்கின்றேன் இதுவரை எந்த நாட்டையும் இந்தியா அடிமை படுத்தாத தேசம்… இங்கு சூறையாடியது … கொள்ளையாடியது… மிச்ச வளங்கள் ஏராளம் அதுவேனும் பாதுகாக்கபடுகின்றதா…?

  இன்றில்லாவிடின் நாளையேனும் இளைஞர்களின் திறனறிந்து செயல் படும் என நம்புவோம் இல்லை திறனுள்ள இளைஞர்கள் களப்பணி துவங்குவார்கள்…..

  U S ~ > India வந்தாங்க

  China ~ > pak வரப் போராங்க

  Russia ~ > சீனா போகப்போராங்களாம்… என்னனு சொல்ல அடிச்சு பாப்போமானு கேக்குற கணக்கு வழக்கு …

  ஜி தங்கள் ஜால்ராத்தனமில்லா விவாத தூண்ட(டி)ல் வாழ்க…!

 11. sella சொல்கிறார்:

  cartoon in nice; I dont think AK hit from the back. I strongly believe he hit in front just before their greedy eyes

 12. today.and.me சொல்கிறார்:

  ////காந்திஜி ஆடை அணிந்து சென்றது அன்றய இந்தியவின் வறுமையின் நிலைபாடு ,இன்று இந்திய ஒன்றம் மிக மோசமான வறுமையில் இல்லை///

  இன்றைய இந்தியாவின் வறுமை நிலைப்பாடு……… தற்போதைய பாஜக எம்பியே இன்றைய செய்தியில் (26 பிப்ரவரி 2015) அதிகரித்து இருக்கிறது என்று கூறுகிறார். இதையாவது ஒத்துக்கொள்வார்களா? அல்லது வெங்கைய நாயுடுவும் ச்ச்சும்மா சொல்கிறார் என்று சொல்லி, இந்தியா வளமையில் உள்ளதாக வாதாடுவார்களா?

  குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 6.55 கோடியாக அதிகரித்துவிட்டது
  http://www.dinamani.com/india/2015/02/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/article2686906.ece

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.