அதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …?

.

.

சில நாட்களுக்கு முன்னர், டெல்லி தேர்தல் கூட்டத்தில்
பேசும்போது, கச்சா எண்ணை (பெட்ரோல், டீசல் ) விலைகள்
குறைந்ததற்கு தன்னுடைய அதிருஷ்டமே காரணம் என்று –
திருவாளர் மோடிஜி கூறினார்.

எனக்கென்னவோ – மோடிஜியின் அதிருஷ்டத்தை –
இந்த நாட்டின் சாதாரண பொதுமக்களை விட, அவரைச் சுற்றி
நெருக்கமாக பழகி வரும் அவரது நண்பர்களும், பெரும்
தொழிலதிபர்களும் தான் அதிகமாக அனுபவிக்கிறார்கள் என்று
தோன்றுகிறது.

ஏனெனில் – நாட்டு மக்கள் கடந்த 8 மாதங்களில், புதிதாக
எந்த பயனையும் மத்திய அரசிலிருந்து பெறவில்லை
என்பதோடு, ஏற்கெனவே இருக்கும் பலவற்றையும்
வரிசையாக இழந்து கொண்டே இருக்கிறார்கள்….!

ஆனால் – அவரது நெருங்கிய நண்பர்களான தொழிலதிபர்கள் –
வரிசையாக புதிது புதிதாக தொழில் வாய்ப்புகளையும்
கடன் வசதிகளையும் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்….

1) மூன்று நாட்களுக்கு முன்னதாக –

Adani-signs-MoU-L

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ராஜஸ்தான் மாநில
அரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
10 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம்
அமைப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

” Rajasthan Renewable Energy Corporation (RREC)
Managing Director B K Dosi and Adani’s power business
CEO Vineet S Jain signed the memorandum of understanding
in the presence of the Rajasthan Chief Minister Vasundhara
Raje and Adani Enterprises MD Rajesh Adani……”

அடுத்த 10 வருடங்களில் அடானி நிறுவனம் 40,000 கோடி
ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து 10 ஆயிரம் மெகாவாட்
சூரிய மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை நிறுவும்.”

இதற்கு தேவையான அளவு நிலத்தை கையகப்படுத்திக்
கொடுக்கும் பொறுப்பை ராஜஸ்தான் அரசு ஏற்றுள்ளது…!

பிரதமர் மோடிஜியின் – clean and green energy – திட்டத்திற்கு
இணங்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது
என்று திரு அடானி கூறி இருக்கிறார்.

2) இதற்கு முன்னால், கடந்த மாதம்-
இதே அடானி நிறுவனம், SunEdisonlnc என்கிற அமெரிக்க
நிறுவனத்துடன் கூட்டாகச்சேர்ந்து சுமார் 4 கோடி அமெரிக்க
டாலர் மதிப்பிலான முதலீட்டுடன் இந்தியாவின் மிகப்பெரிய
solar photo-voltaic making plant ஒன்றை குஜராத்தில்
Mundra என்னுமிடத்தில் துவங்க, குஜராத் அரசுடன்
ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.

3) பிப்ரவரி 12-ந்தேதியன்று ( நேற்று ),
Chairman of Reliance Power – திரு அனில் அம்பானி,
ஜெய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராஜஸ்தான் முதலமைச்சர்
திருமதி வசுந்தரா ராஜே அவர்களுடன் உடன்பாடு ஒன்றில்
கையெழுத்திட்டார்.

reliance power - a.ambani

இதன்படி, அடுத்த 10 வருடங்களில், ரிலையன்ஸ் பவர்
கம்பெனி, ராஜஸ்தானில் 6000 மெகாவாட் உற்பத்தி
செய்யக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நிறுவி

செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நான் இது போல் எதையாவது எழுதினால்,
“தனிப்பட்ட தாக்குதல்” என்று மோடிஜியின் ஆதரவாளர்கள்
சிலர் என்னைக் குறை சொல்கிறார்கள்.

எனவே, செய்தியைச் சொல்வதோடு நான் நின்று கொள்கிறேன்.

விடை காணும் பொறுப்பை –
நண்பர்களிடமே விட்டு விடுகிறேன்…..

மேற்கண்ட செய்திகளின்படி, அதிருஷ்டக்காரர் யார் …?

மோடிji யா,
அடானிji யா அல்லது
அம்பானிji யா …?

( அதிருஷ்டக்காரர் வரிசையில் இந்த நாட்டு மக்களுக்கு
வாய்ப்பு இருக்காது என்பதால், அவர்களை விட்டு விட்டேன்…!)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

40 Responses to அதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …?

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  சந்தேகம் வேண்டாம் திரு.அடானி அவர்களும் திரு. அம்பானி அவர்களும் தான் அதிஷ்டகாரர்கள் அய்யா.ஆம் ஆத்மிக்கு இங்கு இடமில்லை.

 2. S.Selvarajan சொல்கிறார்:

  மூவருமே அதிர்ஷ்டசாலிகள்தான் …? மக்கள் தான் துரதிஷ்டசாலிகள் …. ! கோயில் கட்டி சிலை வைக்கும் அளவுக்கு உயர்ந்த மோடி ஒரு அதிர்ஷ்டக்காரர் ….. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் முதலாளித்துவத்தை விடாமல் காத்துக்கொள்ளும் மற்ற இருவரும் அதிர்ஷ்டசாலிகள் ….. அப்புறம் எதற்கு யார் அதிர்ஷ்டசாலிகள் என்கிற கேள்வி ?

 3. today.and.me சொல்கிறார்:

  அடடா..! அம்பா..!! நமோ ..!!! நம

 4. karan சொல்கிறார்:

  மாநில அரசோ ,மத்திய அரசோ தனது நிதி மூலம் அதிகம் திட்டங்களை நிறைவேற்ற முடியாது ,அதற்கு மனிதவளம் ,திட்டமிடல் ,செயல்படுத்துதல் ,என பல வழிகளில் தடைகள் வரும் ,அரசு மூலம் நடக்கும் பல திட்டங்களில் ஊழல்பெருகி பாதிவழியில் நின்றுபோனது உண்டு , தனியார்துறை மூலம் நடக்கும்போது ஊழல் குறையும் சரியான நேரத்தில் திட்டங்கள் பயன்பட்டுக்குவரும், மேலும் மேல் திட்டங்கள் மூலம் வரும் மொத்த மின்சாரம் அதனியோ ,அம்பானியோ ,மோடியோ எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் பயன்படுத்த போவது இல்லை,பொது மக்கள் பயன்பட்டுக்குதான் வரும் ,தனியார்துறை முதலாளிக்கு அதில் லாபம் கிடைக்கும் ,அதனால்தான் அவர்கள் தொழில்கள் தொடங்க வருகிறார்கள் , அரசுக்கு வேலை பளு குறையும் ,சரியான நேரத்தில்மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் , குஜராத் அதிக மின் உற்பத்தி செய்து மிகைமின் மாநிலமாக உள்ளது ,அடுத்த மாநிலங்களுக்கு மின்சாரம் விலைக்கு விற்று அரசுக்கு அதன் மூலம் வருமானம் வருகிறது ,ராஜஸ்தான் அதற்கான முன் முயற்சி எடுத்துகொண்டுள்ளது , அந்த மாநில மக்களுக்கு மின்சாரம் 24 தொடர்ந்து கிடைக்கும் போது சரிய ,தவற என தெரியும் ,தற்சமயம் தமிழ் நாட்டின் நிலை என்ன என்று பார்க்கலாம் ,எத்தனை மணிநேரம் மின்சாரம் ,எத்தனை சிறு ,குறு ,பெரும் தொழில்கள் மின் பற்றாகுறையால் மூடப்பட்டுள்ளது ,எத்தனை பேர் வேலை இழந்து உள்ளார்கள் ,எத்தனை தொழில்முனையோர் அடுத்த மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளார்கள் ,என பல பிரச்சனைகள் உள்ளது ,தமிழ்நாட்டை போல் மக்களுக்கு குஜராத் ,ராஜஸ்தான் மாநிலங்கள் ஒன்றும் செய்யாமல் பணம், மது கொடுத்து ஓட்டு வாங்கி சும்மா இருக்கவேண்டும் ,அதுதான் நல்ல அரசாங்கம் போல ,

  • Ramachandran. R. சொல்கிறார்:

   கரன் –

   நீங்கள் விஷயத்தை திசை திருப்புகிறீர்கள்.
   இந்தக் கதைகளுக்கும், இடுகைப் பொருளூக்கும்
   ஒரு சிறிதும் தொடர்பில்லை.

   இந்தியாவில் அடானியை விட்டால், அம்பானியை விட்டால்
   வேறு ஆளே கிடையாதா ? ஏன் அத்தனை ப்ராஜக்டுகளும்
   அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் ? மோடிக்கு
   வேண்டப்பட்டவர்கள் என்பதையும், இரண்டு மாநிலத்திலும்,
   (ராஜஸ்தான், குஜராத்) மத்தியிலும் பாஜக அரசு ஆட்சி
   செலுத்துகிறது என்பதையும் தவிர வேறு நியாயமான காரணங்கள்
   ஏதேனும் உண்டா ?

   நீங்கள் ஏன் முதல் இடுகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
   பதில் சொல்லாமல் அடுத்ததிற்கு ஜம்ப் செய்கிறீர்கள் ?
   முதலில் அங்கே கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்து விட்டு
   பிறகு இங்கே வாருங்கல்.

 5. karan சொல்கிறார்:

  https://chennaiyinnews.wordpress.com/2015/02/05/will-tapping-renewable-energy-solve-tamil-nadus-power-problems/WILL TAPPING RENEWABLE ENERGY SOLVE TAMIL NADU’S POWER PROBLEMS ?
  By Vipal Durge

  • Siva சொல்கிறார்:

   Karan, I agree with your idea that non-renewable energy is the most probably good source of energy for us. Nobody in this blog will refute this. I too wrote a couple of week back in this blog to support for solar energy. If someone wants to establish it in TN , no one is going to oppose it. But the problem is who is going to it in a honest way here!
   Kombanis and badanis are not only the business people in this country. Most of the people do not like giving too much support for them.
   You have good idea and feeling for long-lasting solution but you have short-sighted approach in this. You are just blindly supporting namodi and big business crocodiles of India.
   Tell me any good projects of kombanis and badanis that support middle class people. A business should support every one in the society! If you expect a growth only for elite and educated groups, we are not going to allow it happen in here. If govt plan is against the welfare of majority section, it is going to be opposed and will be drowned by mass!
   Again, no one here is against DEVELOPMENT, but curious to see how it happens.
   Again, don’t say that namodi is the person born to do development in this country. I have asked this question many times that sow me the unbiased evidence for equal growth of Gujarat under namodi leadership? If you show me a clear evidence, I will come behind you to support your arguement.

   Most of the propaganda advertisement and machinery have masked the eyes of mass society including yourself. Remove the curtain and look for the unbiased truth….you will then realize the reality!

   • karan சொல்கிறார்:

    ambani ,or adani or modi not a matter ,we need people done by proper planing ,execution ,end product ,After golbalizam ,we are depending private sector only ,govt can not do all the things ,First we belive our private industriatist, 90% of them good people ,10% have bad ,But our indian media people allways doing wrong propaganda @ private sector ,somebody do something good we must support them ,otherwise we are going to trouble ,

    • Siva சொல்கிறார்:

     You are beating around the bush (meaning you are misleading us!). We are trying to discuss about how to inculcate a good business model that is better for equal growth of all society in our country. But you look like a blind supporter of private businesses. I do not think it is going to be good model in India.

     We do not oppose private business, as I wrote many times in this blog. But we support the honest and ethical businesses that do not focus only on looting people money. We support a successful business with profit for the owner, but at the same time, it should be more helpful for society/people.

     Do not expect only a well paid job (for you or ur kind) from private business, but expect a better service without looting money from the people.

     I do not know where you live at present. But I will suggest you to look for international model and how regulation of businesses works in developed countries.

     I disagree with you very strongly that we should depend on privates for anything. It will create problem in countries like India.

     As others pointed out you seem to be evasive in ur arguement! From blind support to namidi, you came down to private business support. If you continue in this blog, you will be exposed more. Focus on one point and discuss it thoroughly!
     1) First show me some evidence for namodi achievement in gujarat?
     2) show me ethical business model of kombanis and badanis?
     3) give me the list of 90% good industrialist?
     4) what will happen if those 10% of the bad industrialist take over the control of indian businesses?
     5) can you give me one single private industrialist or industry with home made innovative ideas that cater/serve the indian society?

     If you can answer me honestly for these questions, please be here. Otherwise, as I told in previous post, kindly get out from this blog.
     Please don’t waste the time of other people who are at least not blindly supporting the bad thing!

 6. visujjm சொல்கிறார்:

  துபாயில் சுற்றுலா மேம்பட தீவு செயற்கையா உருவாக்குவாங்கோ அது தனியாருக்கு விடவேண்டியது தானே…! ஆனா நாம கடற்கரையை (நீளமான கடல் எல்லை நமக்குண்டு அவ்வளவே) கத்தாடி மின்சார பயன்பாட்டுக்கு கூட இன்னும் யோசிச்சு திட்டமிட்டு அதானிக்கா அம்பானிக்கா என்று கேட்டு தனியார் தனியார் தயிர் வடை ஊசி போனாலும் சாப்பிடுவோம் … அரசாங்கம் நிர்வாகம் துடிப்போடு தனியார் தயிர் வடை …

  • Ramachandran. R. சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   இந்த நபர் இதை பிஜேபியின் பிரச்சார மேடையாகவும்,
   நரெந்திர மோடி புகழ் பாடும் இடமாகவும் மாற்றி விட
   முயற்சி செய்கிறார். நீங்கள் இதையெல்லாம் அனுமதிக்க
   வேண்டுமா ? தயவு செய்து இவர் இதை பிரச்சார மேடையாக்க
   அனுமதிக்காதீர்கள். நன்றி.

   • karan சொல்கிறார்:

    நான் பிஜேபியும் இல்லை ,மோடி க்கு ஜாடியும் இல்லை,மின்சாரம் பற்றி யும் அடுத்த மாநிலங்கள் எவ்வாறு முன் நடவடிக்கை எடுக்கிறது என்பதயும் அனைவரும் அறிய வேண்டும் ,அதானி , அம்பானி மட்டும் அல்ல டாட்டா ,மஹிந்திரா ,என அனைத்து தொழில் முனைவர்க்கும் முன் உரிமை கொடுத்துகொண்டுதான் உள்ளார்கள் .

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் கரன்,

    இங்கு எழுதப்படும் கருத்துக்களுக்கு மாற்றாக விவாதம்
    செய்ய விரும்பினால், உங்கள் கருத்துக்களை மட்டும்
    எடுத்துச் சொல்லி விவாதியுங்கள்.
    தேவைப்பட்டால், reference – link -ஐ மட்டும் கொடுங்கள்.
    விரும்புபவர்கள் அந்த தளங்களுக்குச் சென்று
    படித்துக் கொள்வார்கள்.

    இப்படி நீள நீளமாக மற்ற தளங்களில்
    வரும் கட்டுரைகளை அப்படியே இங்கே எடுத்து மறுபிரசுரம்
    செய்வது, இங்கே படிக்க வருபவர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல். இது விவாதம் செய்யும் முறையும் அல்ல.

    இன்னுமொரு விஷயம் – கண்மூடித்தனமான மோடி பக்தர்கள்
    குப்பைகளைக் கொட்டும் இடம் இதுவல்ல. இத்தகைய
    கதைகளை நம்பி ஏமாந்து போய்த்தான் அவரை தேர்ந்தெடுத்து விட்டோம் என்பதை 13.5 லட்ச ரூபாய் கோட்டு காட்டிக்
    கொடுத்து விட்ட பிறகும் இதை எல்லாம் யார் நம்புவார்கள் …?

    மற்ற நண்பர்கள் எப்படி விவாதிக்கிறார்களோ, அதே போல்
    நீங்களும், கருத்துக்கு பதில் கருத்தை கூறி விவாதியுங்கள்.
    ஒவ்வொன்றையும் அப்படியே பாதியில் விட்டு விட்டு
    அடுத்த விஷயத்திற்கு வருவது, எடுத்துக் கொண்ட பொருளை
    முழுவதுமாக விவாதிக்க உங்களால் இயலவில்லை என்பதையே
    காட்டுகிறது.

    முந்தைய இடுகையின் பின்னூட்டங்களில் – நண்பர்கள்
    todayandme, கண்பத் மற்றும் காவிரிமைந்தன் ஆகியோர்
    எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலில் விளக்கம் அளித்துவிட்டு,
    பிறகு புதிய பிரச்சினைகளுக்கு வாருங்கள்.

    உங்கள் பின்னூட்டங்களில், நீங்கள் மறு-பதிப்பு செய்துள்ள
    நீண்ட விஷயங்களை நீக்கி விட்டு,
    reference – link -ஐ மட்டும் கொடுத்திருக்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     நன்றி கா.மை.ஜி,
     நான் எழுதி உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்பியதைச் செய்திருக்கிறீர்கள்.

    • karan சொல்கிறார்:

     குஜராத் ,ராஜஸ்தான் அரசுகள் அடானி ,அம்பானி யுடன் போட்ட மின்சாரம் உற்பத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்தமானது எந்தமுறையில் தவறானது என நீங்கள் கூறினால் நல்லது , முன்பு இவர்கள் உடன் போட்ட திட்டங்கள் சரியாக நிறைவேற்ற வில்லையா,அல்லது தொழில் அனுபவம் இவர்களுக்கு இல்லையா ,காங்கிரஸ் அரசு இருந்தபோதும் இவர்கள் தொழில்கள் செய்துகொண்டுதான் இருந்தார்கள் ,உலகம் மொத்தமும் தாரளமாயம் வந்த உடன் நாம் தனியார்துறை நம்பித்தான் ஆகவேன்டும் ,கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும் தனியார் முதலாளிகள் தொழில் ஆரம்பித்து அமோகமாக தாங்களும் ,நாட்டையும் முன்னேற்றி கொண்டுஉள்ளார்கள் ,அரசாங்கம் அனைத்தையும் செய்துகொண்டு, திட்டங்கள் சரியாக முடிக்கமுடியாமல் இருப்பதை விட ,தனியார் கள் எவ்வளளோ மேல் ,ஊழல் ,இல்லாமல் அரசு கவனித்துகொண்டு தனியார்துறை மூலம் திட்டங்கள் நிறைவேறினால் நல்லதே

     • Siva சொல்கிறார்:

      One vital question to you. What happens/what is the progress in oil-field at krishna kodavari basin area given to kombanis? What is the current situation? Do you think that they are doing honest and ethical business there?

      If you do not know anything about this issue, please go and read more how much they did unethical business there. Go and see the ONGC complain that kombanis illegally extract gas there. The useless indian govt is doing nothing!

      This is the outcome you will expect from private businesses.

     • LVISS சொல்கிறார்:

      Mr Karan, Happy to see some one seeing things in proper perspective—

 7. ranjani135 சொல்கிறார்:

  இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள். ப்ளீஸ்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கட்கு,

   அறிமுகத்திற்கும், உங்கள் கருத்தினை தெரிவித்ததற்கும்
   மிக்க நன்றி. அரசியல் தவிர்த்த, சமூக நலன் சார்ந்த
   பிற விஷயங்களையும் நிறைய எழுத வேண்டுமென்று தான்
   நினைக்கிறேன். ஆனால் –

   நான் வாசிப்பதில் நிறைய விருப்பமுள்ளவன்.
   படிப்பில் இறங்கினால் – எழுத முடிவதில்லை.
   நேரம் போதவில்லை…! (இந்த வயதில் நேரம் போதவில்லை
   என்று சொல்வது வியப்பாக இருக்கலாம் – ஆனால்
   என் விஷயத்தில் அது தான் உண்மை…)
   இயன்ற வரையில் மற்ற விஷயங்களும் எழுத
   நிச்சயம் முயல்வேன்….

   (ஒரு விஷயம் – நானும் உங்களூர் தான்…!!!)

   நீங்கள் நன்றாக, இயல்பாக எழுதுகிறீர்கள்.
   உங்களுக்கென நிறைய வாசகர்களை
   சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்….வாழ்த்துக்கள்.
   மீண்டும் நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ranjani135 சொல்கிறார்:

    வாங்க காவிரிமைந்தன் ஸார்!
    உங்களது வருகையும், கருத்துரையும் எனக்கு எத்தகைய சந்தோஷத்தைத் தருகிறது என்று சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு வாரமாக நான் பட்ட முதுகுவலி எல்லாம் அப்படியே மாயமாக மறைந்துவிட்டது, உங்கள் பின்னூட்டம் பார்த்ததும்.
    உங்கள் தளத்தில் வரும் அரசியல் விமரிசனங்களை நான் படிப்பதுடன் நிற்காமல் எனது கணவருக்கும் படித்துக் காட்டுவேன். அவருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். நான் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பதிவு உங்களது மென்மையான பக்கத்தைக் காண்பிக்கிறது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    எனது மின்னஞ்சலுக்கு உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா? தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் எங்கள் ஊர் என்று தெரிந்த பின் உங்களுடன் பேச வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது.

    வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி.

 8. S.Selvarajan சொல்கிறார்:

  குஜராத் மின் மிகை மாநிலமாக இருக்கிறது ? மோடி அதை உருவாக்கினார் என்பதெல்லாம் சரி ….. ஆனால் நுகர்வோருக்கு [மக்களுக்கு ] வீடுகளுக்கான மின்சாரம் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் —- தமிழ் நாட்டில் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் என்பதை கணக்கு போட்டு பார்த்தால் — தமிழகத்தைவிட குஜராத்தில் அதிக விலை கொடுத்துதான் மக்கள் பெறுகிறார்கள் என்பது புலனாகும் —- இங்கே [ தமிழ் நாட்டில் ] யார் … யாருக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு கணக்கு போட்டால் —- தமிழகம் எவ்வளோவோ மேல் என்பது பல நண்பர்களுக்கு புரியும் ! கா.மை. கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பலர் ஏதோ கருத்து கூறுவது வேடிக்கையானது !!

  • visujjm சொல்கிறார்:

   கருத்து கூறுவது வேடிக்கைகாக அன்று சிந்தித்து நாட்டின் வளர்ச்சிப்பாதை நோக்கி இளைய சமுதாயம் ஒன்றாக செயல்பட …

  • LVISS சொல்கிறார்:

   Mr Modi does not believe in freebies –In spite of charging for power he has been elected thrice — In spite of freebies parties have lost elections here –

   • Siva சொல்கிறார்:

    He may not believe in freebies, but all his past deeds have helped him to win three time. Is that correct?

    Although the economic growth has been estimated as better in that state, the human development index rate is not good. Is that correct?

    • LVISS சொல்கிறார்:

     Good deeds ,that is(remember the small boy whom he took under his care and took him to his parents in another country as a grown up man and a graduate) –Just to recall -.When he took over as the CM (he had no previous experience as administrator at that time) Gujarat had a massive earthquake and If I am not wrong there was the Godhra riots — Any first time CM would have found it difficult to manage –Gujarat was brought back to what it is today by him not in a day –The power sector which was running in heavy loss ,is now earning profits —

 9. venkat சொல்கிறார்:

  I see a point in Karan’s argument. I support him 100% here. Businessmen enter into any venture with only one motive – that is to make money and increase the value for stock holders. There is not much room for ethics or socialism here. As long as they do business without violating the law ( getting favors from government to expand the business, IMHO, is not violation of law ) we should be happy. we should only look at two important contributions from them.. Don’t expect businessmen to run charity.
  1. creation of jobs and
  2. paying taxes.
  Think about like this.. what percentage of jobs created since 1947 is from government Vs private sectors? and what how the percentage changes since the liberalization began in 1990.

  Government should favor private players for it helps the people of the country due to above mentioned benefits. if Boeing wants to deal business in India, they lobby thru presidential office. Similarly with GVK faced trouble in Maldives, Indian government used its muscle.

  I see an argument placed here, that is asking isn’t there any private players in the country other than two who got preferential treatment. Let me answer this via another question… do you know if any other corporates were denied the opportunity favoring the said two? whoever comes forward to invest money and take risk will be welcomed and shown red carpet!! what is your concern here?

  Another argument I see on this blog… what has been achieved in the last 8 months that helps common man. why don’t the blogger use his “sources” ( I see several mentions saying as per my sources…. ) to check if the governance has improved or not. I see the following changes at macro level. It will take some time before it percolates to common man level. if you have any evidence that this has not happened please let me know..

  1. Sentiment among business community ( domestic and international ) has improved dramatically, that they are now willing to open their purse ( meaning willing to invest, which is the starting point for any revival cycle )

  2. Sentiment among foreign government on India has improved a lot as they are now dealing with a decisive, forward looking prime minister. This is very important for any Indian company to do business in foreign country. Just to give an example, when I had to travel to China recently on short notice, a call from commerce secretary office to Chinese consulate ensure my visa on the same day.

  3. Ministers are expected to show their progress card every fortnight ( there is a review happening even if the PM is travelling abroad ). This means decisions are made quickly and actions are taken promptly.

  4. Hurdles towards power generation has been removed at a neck breaking pace by starting the re-auction process

  5. e-Auction has been introduced in all departments which brings 100% transparency into the whole process.

  6. Instead of the iron hand approach from Centre, states are given more role in implementing central schemes. This is a big departure from the previous 50+ years of policy setting and implementation mind set.

  I can go on and on. I see that many followers here have great regards to the blogger and hence they are blindly ‘yeah’ sayers. Sadly, the blogger has taken a stand to criticize the PM and hence the crowd follows…

  • Siva சொல்கிறார்:

   Venkat, I am replying to your comments to just refute the fact that we are not blind supporter of this blog writer. Even, as per your say, if we are blind follower of this blog writer, NOTHING benefit will come to us or this blog writer. Hence, we do not need to be YesMan for whatever he says!

   Lastly, as your first statement itself clearly suggests that you are parasitic species only concerned for your benefit. Your motive is ONLY make money (whatever means!), so it is waste to argue with your statements.

   But I too know many ways to make money…. But my ethical and consciousness thinkings prevent me from doing so!

   Your ideology is nothing but MAKE money, do not concern for anything! We differ from this ideology.

  • LVISS சொல்கிறார்:

   You are absolutely right sir The benefit of small but definitive steps that the central govt is taking in governance may take one or two years to sink in -Nothing is being done for short time gains- But our people want everything done in a few days —

  • LVISS சொல்கிறார்:

   Mr Venkat now that you mentioned about your trip to China I will narrate my experience– I applied for extension of my passport validity -I appeared on the appointed date 9th Sep at passport office -Believe me, when I reached home I received a sms message in the afternoon on the same day that my Passport is being printed The very same night I received another message that my passport has been despatched via courier -I received an e mail also about the despatch of my passport with number of courier reference ) -I received the passport on the third day 11 th Sep–I thought it would take a few weeks -What is more the staff in the passport office most of them youngsters were extremely courteous —

  • today.and.me சொல்கிறார்:

   //whoever comes forward to invest money and take risk will be welcomed and shown red carpet!! what is your concern here?//
   அது எப்படி ஐயா அவர்கள் மட்டுமே முன்வருகிறார்கள், அவர்கள் முதலீடு செய்கிற மணி எல்லாம் அவர்களுடையதுதானா? வங்கியில் கடன் வாங்குவதில்லையா?அதைத் திருப்பிச்செலுத்தாமல் மக்கள் தலையில் கட்டுவதில்லையா?

   //Ministers are expected to show their progress card every fortnight ( there is a review happening even if the PM is travelling abroad ). This means decisions are made quickly and actions are taken promptly.//ஒரு மாதத்திற்குமுன்பு நடந்த சிறுபான்மையினர் கூட்டத்தில் நடத்திய பெரும்பான்மையினர் நடத்திய களேபரத்திற்கு, தேர்தலில் தோற்றபின்பு, டெல்லிமுதல்வராக கெஜ்ரிவால் அமர்ந்தபின்பு, காவல்துறை ஐஜியைக் கூப்பிட்டு அ……வ………..ச……..ர….. ஆலோசனை நடத்தினார் பிரதமர். 🙂 முடிவுகளும் செயல்களும் மிகவும் க்விக்காகத்தான் எடுக்கப்படுகின்றன. இதை நம்புவதற்கு எல்லாரும் கேணையர்கள் அல்ல.

   //I can go on and on. I see that many followers here have great regards to the blogger and hence they are blindly ‘yeah’ sayers. Sadly, the blogger has taken a stand to criticize the PM and hence the crowd follows…//
   ப்ளாக்கர் மேல் உங்களுக்கு ஏன் இந்த வயிற்றெரிச்சல். அதிகமான ஃபாலோயர் இருப்பதினாலா? நீங்கள் ஒரு ப்ளாக்கைத் தொடங்கி நிறைய ஃபாலோயர்ஸை வழிநடத்தலாமே? என்ன? அதற்கு ஒரு கஷ்டம் இருக்கிறது. உண்மையை எழுதவேண்டும். நடுநிலைமையோடு எழுதவேண்டும். மாற்றுக்கருத்தைச் சொல்பவர்களை, நாகரிகமாகச் சொல்பவர்களை மதிக்கத்தெரியவேண்டும். இது எல்லாம் உங்களால் உங்களைப்போன்ற மோடி பக்தர்களால் முடியுமா என்று தெரியவில்லை. முயன்று பாருங்கள். விளம்பர வடிவில் நல்ல கலெக்சன் கிடைக்கலாம்.

   ஆமாம், இங்கே வருகிற பின்னூட்டமிடுகிற எல்லாருமே, கொஞ்சம்கூட மூளையை உபயோகிக்காமல், சிந்திக்கும்திறனும் இல்லாமல் கண்ணைமூடிக்கொண்டு குழிக்குள் விழுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு மோடிக்குள் விழுகிறமாதிரியா? அப்படி எதிர்பார்க்காதீர்கள். எல்லாரும் உங்களைப் போலவே இருப்பதில்லை.

   கடைசியாக ஒரே ஒரு அறிவுரை. தமிழில் பின்னுட்டம் இட்டீர்களால், நண்பர்கள் பின்னிவிடுவார்கள்.

   ஆங்கிலத்தில் இட்டால் கொஞ்சம்பேர்தான் பதில்சொல்லுவார்கள். அதனால் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து இல்லை என்று பொருள் இல்லை.

   இந்தியிலோ சமஸ்கிருதத்திலோ பின்னூட்டமிட்டீர்களானால், உங்களுக்குப் பதிலே இருக்காது. நீங்கள் சொன்னதே சரி என்றும் ஆகிவிடும். 🙂 🙂

   பி.கு. கரன் , LVISS மற்றும் வெங்கட் போன்றோர் மோடிஜியின் பக்தர் இல்லை என்று சொல்லிக்கொண்டே அவரை இவ்வளவு ஆதரிக்கமுடியுமானால், ஆம் என்று சொல்லிக்கொண்டு எவ்வளவு ஆதரிப்பார்கள்?

 10. ltinvestment சொல்கிறார்:

  10000 MW is equivalent to approximately 50000 acres of land ( 1MW needs 5 acres). Rajasthan govt is going to give away that much land in a govt guided value ( not market value) which is Jackpot for Adanis. That too Most probably Loan from SBI. If Rajasthan govt is not paying money for Energy export, Loan interest will not paid to SBI. So Adani never gets into trouble.
  Use Tax payers money via Bank and secure the Big Land. Simple Day Robbery.

  Ethics and Integrity most important for Business dharma. But now a days, it is last one in the list. Wise man advised that you can increase your selling price but the weight of the product should be 100% right. But private companies are least cared on it ( fortunately not all; thanks to some good business people also)

 11. LVISS சொல்கிறார்:

  The “rivals”particularly Congress say the prices have come down just because he is lucky adding “Do you want a lucky person or some one who is unlucky”– This is what Mr Modi has reportedly said as per newspaper report –(He said this in Hindi )–So it is others who said he is lucky –

 12. venkat சொல்கிறார்:

  I am sharing things that I hear/learn from my “sources”. That’s it.

  Was speaking to someone from AP ( new AP that doesn’t include Telangana ). Ever since that state was adopted by centre as 24*7 electricity state, the state has not seen power cut even for a minute. This is not based on major cities like vijaywada. This person is from Rajmunndri and small town like neduthavul, which were facing power cut for as high as 4 hours a day.

  For the first time we are seeing what an active central government do and how they can make a difference. There may be room for improvement here and there.. but by far this government and Modi is doing a fantastic job of taking this country forward.

  you can sit all day long critiquing!!! good luck.

  • Siva சொல்கிறார்:

   there is no second opinion in the fact that it is an expectation and wish for every one to see a good governance from central and state governments in India. Considering your information from secret sources, we hope that some better thing will happen ultimately to our country. If we do not see a progress in governance, but see a luxurious life style and stupid comments from political party and religious outfit, it will be strongly criticized. People will show the exit door very fast and clearly. That’s what we want to teach the mass people. It is not our aim to personally criticize a party or its leader. The constructive and healthy criticism will be there for all leaders and parties.
   We have to come out from the leadership worship behaviour. As a civilized and democratic society, we should not shy away/keep silent to criticize the leader we elected. If we talk more, they will do less mistake. That’s what we are trying to establish the habit on our people. Ultimately, if a leader keeps maintaining his promise, he will be immortal. Hope, we will see such a leadership from them.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.