புதிய கெஜ்ரிவால் –

new cm kejriwal

“நான் மிகச் சிறியவன். தனிப்பட எதையும் செய்ய எனக்கு
சக்தி இல்லை என்பதை நான் உணர்வேன்.”

“எனக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நான் ஒரு கருவி மட்டுமே – என் மூலமாக இறைவன்
எதையோ நிகழ்த்த விரும்புகிறார் என்று தோன்றுகிறது.
என்னை இந்தப் பணிக்குத் தகுதியானவனாக இருக்கச் செய்
இறைவா என்று வேண்டிக்கொள்கிறேன்…”

“இந்த வெற்றியின் காரணமாக –
எனக்கு கிடைத்திருக்கும் இந்த பதவியின் காரணமாக –
எனக்கு கிடைத்திருக்கும் மக்களின் பேராதரவு காரணமாக –

“என் தலையில் எள்ளளவும் கனம் கூடாமல் பார்த்துக் கொள் –
எந்த நேரத்திலும் எனக்கு மண்டைக்கனம் வராமல் பார்த்துக்கொள் –
மேலே இருக்கும் என்னை ஆள்பவனே …!!!”

அர்விந்த் கெஜ்ரிவாலின் புதிய பக்குவம் –
நமக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக இருக்கிறது.

— அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சராக
பதவி ஏற்றதும், டெல்லி ராம்லீலா மைதானத்தில்
ஆற்றிய உரையின் சாராம்சம் இது –

——–

” விஐபி கலாச்சாரம், விசேஷ சலுகைகள் -உடனடியாக
முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

8 மாதங்களுக்கு முன்னர், பாராளுமன்ற தேர்தலின்போது,
பிஜேபி-க்கு மகத்தான ஆதரவைக் கொடுத்த இதே டெல்லி
மக்கள் இன்று அவர்களை தொலைவில் வைத்து விட்டு,
எனக்கு ஆதரவு கொடுத்திருப்பது ஏன் என்பது எனக்கு
நன்றாகவே புரிகிறது.

மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன் –
எனக்கும், என் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த வெற்றி
எந்த விதத்திலும் மிதப்பையோ, மண்டைக்கனத்தையோ
கொடுத்து விடக்கூடாது.
மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்திருப்பது, அவர்களின் அன்றாடப்
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தான் என்பது எனக்கு
நன்றாகவே புரிகிறது.

இன்னும் 5 ஆண்டுகள், டெல்லியை விட்டு, வேறெங்கும்
செல்லாமல், இங்கேயே கவனம் செலுத்துவோம்.

இந்தியாவில் – ஊழல் இல்லாத முதல் மாநிலமாக
டெல்லியை உருவாக்குவோம்.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள், போலீஸ்காரர்கள் யாராவது
லஞ்சம் கேட்டால், உங்கள் பாக்கெட்டில் செல்போனை
“ஆன்” செய்து வைத்துக் கொண்டு பேசுங்கள்.
ஒலிப்பதிவை – எனக்கு – நான் தரவிருக்கும் எண்ணுக்கு
அனுப்புங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

இந்த மண் – அனைவருக்கும் சொந்தமானது.
இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்த, ஜெயின
மதங்களைச் சேர்ந்த அனைவரும் இங்கு நிம்மதியாக
வாழக்கூடிய சூழ்நிலை வரவேண்டும். அதை உருவாக்க
நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்.

ஏழையோ, தொழிலாளியோ, வியாபாரியோ பணக்காரரோ,
எல்லாருமே – நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை
உருவாக்கப்பட வேண்டும்.

பிரதமர் பெரிய பதவியில் இருக்கிறார். இந்த நாடு
முழுவதையும் சேர்த்து நிர்வாகம் செய்வதற்காக அவர்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பணிச்சுமை அதிகம்.
எனவே – டெல்லியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை
மக்கள் எங்களிடம் அளித்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டு
அனைவருடன் ஒத்துழைப்போம்.

பாஜக வினரிடமும், காங்கிரஸ்காரர்களிடமும் –
கலந்து ஆலோசிப்போம். டெல்லியின் அமைதியும், வளர்ச்சியும்
தான் நமக்கு முக்கியம். நமக்கு ‘ஈகோ’ – தேவையில்லாதது.
என்றும் வரக்கூடாதது.

————————

வாழ்த்துக்கள் அர்விந்த் கெஜ்ரிவால் – உங்களது மனநிலை
இதே பக்குவத்தில் தொடர்ந்து நீடிக்க இறைவன் உங்களுக்கு
துணை புரியட்டும்.

இந்த மனோநிலையும், பக்குவமும் – மத்தியில் ஆட்சி
செய்பவர்களுக்கும் வர வேண்டும் என்று நாமும் இறைவனை
வேண்டுவோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to புதிய கெஜ்ரிவால் –

 1. இரா.பழனிக்குமார், திண்டுக்கல். சொல்கிறார்:

  “”பிரதமர் பெரிய பதவியில் இருக்கிறார். இந்த நாடு
  முழுவதையும் சேர்த்து நிர்வாகம் செய்வதற்காக அவர்
  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பணிச்சுமை அதிகம்.
  எனவே – டெல்லியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை
  மக்கள் எங்களிடம் அளித்திருக்கிறார்கள்”-………நல்ல்ல கதையா இருக்கே?இப்படி ஒவ்வொரு மாநில முதல்வரும் முடிவெடுத்துட்டா அப்புறம் பிரதமருக்கு என்னதான் வேலை இருக்குமாம்?

  • today.and.me சொல்கிறார்:

   Is he doing any work relating to india’s pride, common indians’ development or states’ below-poverty people’s welfare NOW? Infact, He has no time to sit in PM chair in India. Really such a busy PM roaming around the world, doing the same as long as his health co-operates. In fact State CMs are elected to govern states, PM for all over the India.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  ஓர் இனிய நல்ல தொடக்கம், வாழ்த்துகள்.

 3. visujjm சொல்கிறார்:

  மங்காத்தா விளையாட்டு இனிதே ஆரம்பம்…

  படித்த, பண்புள்ளம் கொண்ட, துடிப்பு மிக்க, அடக்கம் மிகுந்த கணிவன்பான துவக்கம்…

  பத்தோடு பதினைந்து என்றில்லாது இருக்க இறைவன் துணைபுரியட்டும்…….

  வீரப்ப மொய்லி, ஷீலா தீட்சித் மற்றும் நாட்டாமை அண்ணணிண் பாதுகாப்பான் அம்போனி யாவரும் உடல் நலத்துடனிருக்க ……….

 4. drkgp சொல்கிறார்:

  Many come with similar intention but change track soon either due to
  the inherent nature of power or association of dissimilar personalities.
  We wish him continuity of the same status of mind for fulfilling the
  aspirations of the people .

 5. drkgp சொல்கிறார்:

  Dear KM,
  Kindly go through the statement of PM Modi at Pawar’s family fiefdom about
  his monthly consultations. It leaves no doubt about the honesty and upholding
  of principles by our leaders. IT’S PURE HYPOCRISY TO THE CORE.

 6. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  பண்பட்ட வார்த்தைகளுக்கு சொந்தக்காரரை நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம் … இந்த மண் – அனைவருக்கும் சொந்தமானது.
  இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்த, ஜெயின
  மதங்களைச் சேர்ந்த அனைவரும் இங்கு நிம்மதியாக
  வாழக்கூடிய சூழ்நிலை வரவேண்டும். அதை உருவாக்க
  நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்.

 7. venkat சொல்கிறார்:

  I read somewhere that for the first time Delhi assembly will have all MLAs with NO MAJOR criminal record. Very positive sign. If AK67( as the media calls him now ) can eliminate the VIP culture in Delhi that would send a very big message to rest of the country!!!

 8. D. Chandramouli சொல்கிறார்:

  This is an excellent start by Arvind Kejriwal. In the same spirit, let us hope that the Central Govt would extend full cooperation to Delhi for solving the problems of the common man. AK clearly realized his past mistakes and is prepared to concentrate only on Delhi for full five years, rather than spreading his wings to other states. Let us wish that AAP would become a catalyst for good governance in the country.

 9. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ஏதேது, இந்த மனிதர் இந்தியப் பிரதமர் ஆகிவிட்டால் நாடு உருப்பட்டுவிடும் போலிருக்கிறதே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.