ஆம் ஆத்மி மீது மோடியின் தாக்குதலும் – அதற்கு வந்த பதில்களும்….!!!

.

இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள
ஒரு செய்தியையும், அதற்கு வாசகர்கள் சிலர் கொடுத்துள்ள
response ஐயும், நமது விமரிசனம் தள நண்பர்கள் அவசியம்
படிக்க வேண்டும் என்பதற்காக, தனிப்பதிவாக தந்துள்ளேன்.
( நன்றி – நண்பர் todayandme ) – மக்களின் மனநிலை
எவ்வாறு உள்ளது என்பதை மோடிஜி பக்தர்கள் உணற
இது ஓரளவு உதவும் என்று நினைக்கிறேன்.

—————–

( http://www.dinamalar.com/news_detail.asp?id=1184870 )

ஆம் ஆத்மிக்கு வாக்குறுதியை நிறைவேற்றிய வேண்டிய
கட்டாயம்: பிரதமர் மோடி தாக்கு –

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
பேசிய பிரதமர் மோடி, சமீபகாலமாக, பல்வேறு அரசியல்
கட்சிகள், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம்
அளிப்போம்; மின் கட்டணத்தை குறைப்போம்’ என, தேர்தல்களில்

வாக்குறுதிகள் அளிக்கின்றன. டில்லி சட்டசபைத் தேர்தலில் கூட,
ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற வாக்குறுதியை அளித்துள்ளது.
தற்போது, அந்த கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், மின்
கட்டணத்தை குறைக்கப் போவதாக கூறும் அரசியல் கட்சிகள் உள்ள மாநிலங்கள் எல்லாமே, மின்சார தேவைக்காக பிற மாநிலங்களை சார்ந்திருக்கின்றன என்பது தான். நிலைமை இப்படி இருக்கும்போது,

இவர்களால் எப்படி மின் கட்டணத்தை குறைக்க முடியும்? என
கூறினார்.

முதலில் வாக்குறுதியை நிறைவேற்றுங்க:

பார்லி., விவகார துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி
கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக
பதவியேற்றதுமே, டில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து
தரவேண்டும் என்கிறார். இதுதொடர்பாக பிரதமரிடமும், மத்திய
உள்துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி உள்ளதாக பேட்டி
அளிக்கிறார். பதவியேற்ற அடுத்த நிமிடமே, இந்தகோரிக்கையை
எழுப்புவது சரியல்ல. டில்லிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்
தருவதை தவிர, ஏராளமான வாக்குறுதிகளை அவர்அளித்துள்ளார்.
அந்த வாக்குறுதிகளை எல்லாம் அவர் முதலில் நிறைவேற்ற
வேண்டும்.

——————————————————————————–

இந்த செய்திக்கு தினமலர் வாசகர்கள்
அளித்துள்ள பதில்கள் ( instant responses ) –

————————

இப்போதைக்கு நீங்க பேசாம இருந்தாதான் சரியா இருக்கும்.
ஆமாம் நீங்க ஏன் பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என
எதிர் கட்சி அழைத்தாலும் பேசாமல் இருந்து கொண்டு

கேள்வி கேட்க முடியாத இடத்தில இருந்துக்கிட்டு யாருக்கு டீ
ஆத்துறீங்க ?

———–

எங்களை வாக்குறுதி பற்றி யாரும் கேட்க கூடாது நாங்கதான்
கேட்போம்.

————

முதல்ல உங்க வாக்குறுதியை காப்பாந்துங்க?
———–

நீங்கஎன்ன செய்றீங்க சொல்லுரீகலா ?
சுஷ்மா அண்ட் நீங்க நல்லுரவுன்னு சொல்லின்னு
உலகம் சுத்துரீக .
கிடைத்த வெற்றிய காப்பாத்துவீங்க்களா ,
வேலையத்த மாமியார் போல குத்தம் சொல்றது ரொம்பவே ஈசிங்க
நீங்களும்தான் லகஷம் வாக்குறுதி தந்தீங்க வாயிலே இருக்கு
வார்த்தை செயலில் ஒன்னையும் காணம்.

——-

கேஜ்ரிவால் சொன்ன வாக்குறுதிய நிறைவேத்த முடியுமா,
இதெல்லாம் நடக்கற காரியாமா ன்னு மோடி சொல்லும்
போதே அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கு என்பதை
அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும்
..அய்யா
பாரத பிரதமரே நாட்டை எப்பிடி வளர்ச்சி அடைய
வக்கிறது ன்னு மட்டும் யோசிங்க..நாடு இருக்குற நிலமையில இந்த மாதிரி வெட்டி பேச்சு தேவை இல்ல..

உங்க வேலைய நீங்க பாருங்க அவரு வேலைய அவரு
பாத்துபாறு..முடிஞ்சா உதவி பண்ணுங்க விருப்பம் இல்லாட்டி
ஒதுங்கி நில்லுங்க..உதவி பண்ணாட்டியும் பரவா இல்ல
உபத்திரவாதம் பண்ணாதிங்க.
.அது உங்களுக்கும் கெட்ட பேரு…
———-

மோடி என்ன சொல்றாருன்னா தேர்தல்ல கருப்பு பணத்த
கொண்டு வருவோம் ன்னு சொன்னோம்.. நாங்க சொன்ன
மாதிரி கருப்பு பணத்த கொண்டு வந்து எல்லாருடைய வங்கி
கணக்குல 15 லட்சம் போட்டுட்டோம்.

அதே மாதிரி ஆம் ஆத்மி கட்சி சொன்ன சொல்ல காப்பாத்துமா ன்னு கேட்குறாரு.. இதுல மோடி கேட்குறதும்
நியாயம் தானே…

————-

டெல்லி சட்டமன்ற தேர்தலில் சென்ற முறை 31 இடங்களை
கைப்பற்றி இருந்த நிலையில் பா ஜ க இப்போது வெறும்
மூன்று இடங்களை மட்டும் பெற்றுள்ளது. மத்தியில்
பா ஜ க வின் சுமார் 10 மாத ஆட்சி பெரும் அதிருப்தியை
மக்களிடம் பெற்றுள்ளது. செயல் இழந்த அரசு என
வெளிப்படையாக பலர் பேச துவங்கி உள்ளனர்.

காங்கிரெஸ் அரசு விட்டு சென்ற பல திட்டங்களை முனைப்போடு
பாஜக செயல்படுத்த துவங்கி உள்ளது
அதன் இயலாமையை காட்டுகிறது.

இதற்க்கு எரிவாயு நேரடி மானியம் திட்டம் ஒரு உதாரணம்.
கருப்பு பண விவகாரத்தில் தொடர்ந்து சொதப்பல்.
இன்று பாராளுமன்ற தேர்தல் வருமேயானால்
பா ஜ க 100 இடங்களை கூட பெற முடியாது என்பது
எதார்த்தம்.
பா ஜ க மற்ற கட்சிகளை குறை கூறுவதை
உடன் நிறுத்துவது நல்லது, மொத்தத்தில் பா ஜ க கட்சியால்
மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

————–

.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஆம் ஆத்மி மீது மோடியின் தாக்குதலும் – அதற்கு வந்த பதில்களும்….!!!

 1. Ganpat சொல்கிறார்:

  பொதுவாக, “பேசாமல்” ஏமாத்தினவர்களை விட, “பேசி” ஏமாத்தினவர்கள் மீது, ஏமாந்தவர்களுக்கு கோபம் அதிகம் வரும். இதை சம்பந்தப்பட்டவர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது.

 2. LVISS சொல்கிறார்:

  Some years back the govt said that on each citizen’s head there is a debt of Rs 1.point something (I dont remember the exact amount) That did not mean that every body should send the amount to govt to clear the debt –It is just to give an idea of about the debt to the people that this was said– Similarly IF all the black money is brought to the country and IF it is divided among the accounts it will be about Rs 15 lacs — This is something like the debt and that is how I saw it when I read the speech– I did not think for a moment that black money even if it is brought back a part of it should be given to me And if at all it is given to the people it should be by way of some benefits not cash —
  The Delhi govt is not a full fledged party govt I am afraid the BJP has limited role in its government –Just recall what happened when Tamil nadu was once put under Governor’s rule —

 3. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  Dear Friend LVISS.

  We all know that Rs 15lac thing is polictical idiom and Delhi state Govt is an enlarged Corporation.. Why then for this enlarged Coporation election, BJP gave FULL page advt in all the news papers in Delhi..

  Why it was billed that Modi will take care of all this issues of Delhi if BJP is voted to power..

  Why 120 MPS, and many more functionaries from across the country worked in Delhi Elections..

  WHY.. WHY .. the so called Congress-BSP-Dalit-Muslim votes transferred to AAP and not BJP…

  Why BJP vote share decrased by 1% in this elections from May 2014 even though we clearly know BJP is ruling at the centre and having a amiable state govt will help DElhi Citizens…

  Welcome to the NEW INDIA LVISS.. We will not wait till 2019 to give the feedback about the government… We will remind you in every forthcoming elections where BJP is considered as a FORCE…

  In tamilnadu, We will vote for DMK/ADMK/PMK/CPI/CPM but Congress & BJP have to hitch a ride with major parties in TN to get some seats in TN Assembly …Understand that sir…Discount the Srirangam Bye Elections… See you in TN @ 2016…

  • LVISS சொல்கிறார்:

   The party could employ all120Mps (this is an exaggeration like many other things ) because all were in Delhi and could spare time – Is there anything wrong in doing that –
   Why did BJP all seven seats in Lok Sabha election and lose now -Why? why? People may come up with their own theories to spend time but no one can know for sure —
   But nobody said anything when BJP was winning state after state that too where they had no stakes before —
   The BJP hopefully will be there till 2019 You may file daily or even hourly reports but the govt chugs along in its own way regardless — The fate of the govt will be decided on what happens during its 4th and 5th year — From the look of it there is no chance of a mid term poll So we will have to wait –

 4. M. Syed சொல்கிறார்:

  அய்யா K.M. அருமையான பதிவு

  கமண்டுடன் எழுதியவகளின் பெயர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தொடரட்டும் தங்களது சிறப்பான பணி.

  //// எதற்கும் ஐந்தாண்டு பொறுப்பது அவசியம் /// by. Sutha

  இப்படியும் ஒரு கமண்டு. விட்டால் பத்து வருஷம் கேட்பார்கள் போலே

  என்ன கொடுமை சரவணா !!!!

  M. Syed
  துபாய்

  குறிப்பு :-
  K.M. அவர்களே சிறு சந்தேகம் தங்கள் இங்கிலிசில் பதிவு ஒன்றும் போடவில்லையே? அதிக கமண்டுகள் இங்கிலிசில் வருகின்றனவே!!!

  • today.and.me சொல்கிறார்:

   //The fate of the govt will be decided on what happens during its 4th and 5th year — From the look of it there is no chance of a mid term poll So we will have to wait -//
   இங்கு யாரும் கேட்கவில்லையே என வருந்தவேண்டாம். கொஞ்சம் மேலே பாருங்கள். LVISS கேட்டுவிட்டார்.

   //தங்கள் இங்கிலிசில் பதிவு ஒன்றும் போடவில்லையே? அதிக கமண்டுகள் இங்கிலிசில் வருகின்றனவே!!!//
   பாஜக ஆதரவு நண்பர்கள் பெரும்பாலும் (ஆங்கிலம்/இந்தி/சமஸ்கிருதம்) படித்தவர்கள், தமில் எனக்கு பேசத்தான் தெரியும் வாசிக்கமட்டும்தான் தெரியும், யுநோ டமில் எலுதவே வறாத், தமிழ் டைப்பிங் தெரியாது என்பது போன்ற போர்வைகளில் இருக்கும் தமிழர்கள். போகட்டும். அவர்களுக்கு உடனடியாக அவர்கள் மொழியில் பதில்சொல்ல சில நண்பர்கள் இருக்கிறார்கள். (நன்றி மற்றும் பாராட்டுகள் சிவா. LVISS & Srini-க்கு உங்களது பின்னூட்டங்கள் சில மணித்துணிகளிலே வந்து விழுந்ததை முந்தைய பதிவில் நான் கவனித்துக்கொண்டிருந்தேன். பாராட்டியே ஆகவேண்டிய ஒன்று நினைத்தேன். துபாய் செய்யது அதற்கு வாய்ப்பளித்துவிட்டார். )

   • LVISS சொல்கிறார்:

    Mr K M has not taken exception to comments in English —I am against the govt thrusting Hindi or Sanskrit down our throat– I am not with BJP on this –Though my mother tongue is not Tamil I was born and brought up here – My second language from school to college was Tamil and you will find only Tamil magazines in my house -I dont know Sanskrit either —
    I hope the co bloggers will excuse my genuine difficulty in typing in Tamil –Since I am not a typist my typing in English is also so and so and just passable –

    • today.and.me சொல்கிறார்:

     Thank you LVISS.
     For some background about you to understand your comments better.

     I welcome your comments in english or any language. Comments in english is not an offence, right.

     I remember your earlier comment has //Oosiyum illai gadapparayum illai endha vagaiyilum nattirkku thevayillatha vivadha porul -( I do not know how to type in Tamil) //

     My aim is, the comment, what ever it may be, while detailing the blogpost, should reach every common man, whether he does not know english / hindi / sanskrit. thats it.

     Somebody may know to read and understand english, but unable to write. Someother know only Tamil. They also should know what the comments are trying to expose.

     For theirs sake friends like Ganpat, Siva, ….replied and helped a lot, unable to translate each and everything posted here.

     So, I wholeheartedly felt to say thanks and appreciations, when the opportunity came by Mr.Syed, I used. Simple.

     And I wonder the way you are managing and replying so long in english without tamil typing knowledge, yet born and brought up here in TN.

     Kudos LVISS. Keep on commenting. welcome (though in english-no worries.)

     • LVISS சொல்கிறார்:

      Not only me, all my siblings were born here studied here and all their children studied here and most of our cousins etc families are in the same city—Yes, I forgot to add I was in college when anti hindi agitation was at its peak and we watch only Tamil serials and programmes -This typing capability somehow eludes me no end —

    • Siva சொல்கிறார்:

     Dear LVISS,
     No problem. You can write in whatever language (commonly followed by many people). It is not the matter of which language we use, but it is matter of our thinking and contents we write. I appreciate your efforts in writing here. Only healthy arguement will bring a positive change in our thinking! You are doing that!

     For other friends, I agree that writing in Tamil will reach many people. It is also important for us to elevate our level in English or other common language. So that we can argue/ discuss/fight with any one, who is supporting bad ideas. So, I think that it will not be a bad to comment in English. One important thing is not to ignore ur mother tongue whatever it is!

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  வாதம் வேறு – விதண்டாவாதம் வேறு.

  இந்த பின்னூட்டங்களில், சில நண்பர்களின் அளவுகடந்த,
  கண்களைக் கட்டிய, மோடிஜி பக்தி, அவர்களது சிந்திக்கும்
  திறனில் பழுதேற்படுத்தி விட்டதை கண்கூடாகப்
  பார்க்க முடிகிறது….

  சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும்,
  மாற்றுக் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும் விவாதங்கள்
  பயன்படும்.

  ஆனால், ஒரு நபரின் மீதான அளவிற்கு மிஞ்சிய பக்தி, வெறி,
  அபிமானம் – சுதந்திரமாக யோசனை செய்யும் திறனை
  தற்காலிகமாக முடக்கி விடுகிறது. எனவே இங்கு வாதங்கள் –
  விதண்டாவாதங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன.
  இரண்டு நாட்கள் வெறுமனேயிருந்து,
  வேகம் அடங்கிய பிறகு, கொஞ்சம் நிதானமாக யோசித்தால், அவர்களுக்கே
  இந்த அபத்தம் புரியும் என்று நினைக்கிறேன்.

  நானும், இன்னும் இங்கு பின்னூட்டம் எழுதி இருக்கும்
  பல நண்பர்களும், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில்,
  மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், மோடிஜியை பாராட்டி, வரவேற்று
  எழுதியவர்கள் தான்.

  இன்று எங்கள் நிலையில் மாற்றம் ஏன்
  என்பதை தகுந்த ஆதாரங்களுடன்,
  விளக்கமாக எடுத்துச் சொல்லிய பிறகும் –
  பிடிவாதமாக மீண்டும் மீண்டும் தாங்கள் சொல்வதையே
  சொல்லிக் கொண்டிருந்தால் – இதை கண்களைக் கட்டிய
  அபிமானம் அல்லது சுய ஈகோ என்று தான் சொல்ல
  வேண்டும். அத்தகைய நிலையில் மேற்கொண்டு விவாதிப்பதால்
  எந்த பயனும் விளையப்போவதில்லை.

  எனவே – போதும், இத்துடன் இந்த தலைப்பிலான
  பின்னூட்டங்களை நிறுத்தி விடலாம் என்று நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.