யதார்த்தமான பெண்ணியவாதிகள் யார் …..?

cute baby girl-1

– அரசியல் சற்றும் கலக்காத,
மனிதநேயம் குறித்த,
சமுதாய நலன் சம்பந்தப்பட்ட,
ஒரு இடுகை இன்று….

சில நாட்களுக்கு முன்னர் நான் படித்த ஒரு இடுகை –
ப்ரியா தம்பி அவர்கள் எழுதியது – பெண்ணியம் குறித்த
புரிதலை உணர்த்தும் ஒரு இடுகை. பெண்களின் உணர்வுகள்
பற்றி ஒரு பெண்ணால் எழுதப்பட்ட இதை,
இந்த வலைத்தளத்து வாசகர்கள் அனைவரும் படிக்க வேண்டும்
என்று விரும்பினேன்.

ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த
அந்த இடுகையிலிருந்து நமக்குத் தேவையான பகுதி
மட்டும் கீழே –
(இதே தலைப்பில், இதன் தொடர்ச்சியாக நானும் சில
விஷயங்களைக் கூற விரும்புகிறேன். இடுகை நீண்டு விடும்
என்பதால், நாளை அந்தப் பகுதிக்கு வருகிறேன்…)

image - beginning

Image (2)sized

Image (3)-sized

Image (4)sized

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to யதார்த்தமான பெண்ணியவாதிகள் யார் …..?

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம். சார்,

  அரசியலுக்கு ப்ரேக் -ஆ …?
  இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.
  நீங்கள் “எங்கே” போனாலும் நாங்கள் விடமாட்டோம்..
  “கவிதை” எழுதப் போனாலும் கூடவே வருவோம்.
  வழக்கம்போல் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
  நன்றி சார்.

 2. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இந்தத் தொடர் முழுவதையுமே படித்திருக்கிறேன். பிய்த்து உதறியிருக்கிறார் ப்ரியா தம்பி அவர்கள். இது வரை ஆனந்த விகடன் எத்தனையோ பெரிய பெரிய எழுத்தாளர்களின், ஆளுமைகளின் படைப்புகளையெல்லாம் தொடராக வெளியிட்டிருக்கிறது. ஆனால், பெண்ணின் பார்வையில் தாய்மை, பாலியல், பூப்பெய்தல், ஆணாதிக்கம் போன்ற தலையாய விதயங்கள் பற்றிய இந்தத் தொடர் தமிழ் வரலாற்றிலேயே மிகவும் முதன்மையான பதிவாகத் திகழ்கிறது.

  பெண்ணியம் பற்றிய தங்கள் மேலான கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 3. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் ஐயா! இலங்கையின் புதிய அதிபர் முதன்முறையாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே பல முதன்மையான ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்நாள் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்துள்ளார்கள். ஆனால், இது நாள் வரை இருந்த அளவுக்கு இந்தப் பேச்சுவார்த்தையின்பொழுது தமிழர் பிரச்சினைகள் எதுவும் பேசப்பட்டதாகவே தெரியவில்லை. காங்கிரசு அரசில் கூட, உள்ளுக்குள் அவர்கள் என்ன பேசியிருந்தாலும் ஊடகங்களுக்குச் செய்தி தரும்பொழுது, இந்தியப் பிரதமர் தமிழர்கள் நலன் குறித்துப் பேசியதாகவும் வலியுறுத்தியதாகவும் பெயருக்காவது அறிவிக்கப்படும். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து அப்படி எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ் மீனவர் பிரச்சினையைப் பற்றி மட்டும், அதற்கு ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காணப்படும் என்று இரண்டு ஆட்சியாளர்களும் கூறியுள்ளனர். அதிலும் இலங்கை அதிபர் சிறிசேன இது பற்றி மேலும் கொஞ்சம் விளக்கமாக, இரு தரப்பு மீனவர்களும் கலந்து பேசி இதில் ஒரு சுமுகத் தீர்வை எட்டினால் அதை முன்னெடுத்துச் செல்ல இரு நாடுகளும் ஆயத்தமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இது அதே… அதே… அதே பழைய பல்லவிதான். தாக்குதல் நடத்துவது இலங்கை இராணுவம். ஆனால், பேச்சுவார்த்தையை இலங்கை மீனவர்களோடு நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த விவகாரத்தின் முழுப் பழியும் தமிழ் மீனவர்கள் அல்லது இரு நாட்டு மீனவர்கள் தாண்டி வேறு யார் மீதும் படரவிடாமல் தற்காக்கும் நோக்கமே இதில் புலனாகிறது.

  தவிர, வரும் மார்ச் 25 அன்று நடைபெறவிருக்கும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த இலங்கைப் போர்க்குற்ற விசாரணை அறிக்கை, இலங்கை-இந்திய அதிபர்களின் சந்திப்புக்கு அடுத்த நாளே ஆறு மாதங்களுக்கு ஒத்திப் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த அறிக்கை வெளியீட்டைத் தாமதப்படுத்தும்படி தொடர்ந்து இலங்கை வலியுறுத்தி வந்ததும், ஐ.நா அதை மறுத்து வந்ததும் நாமறிந்ததே. இந்நிலையில், இரு நாட்டு ஆட்சியாளர்களின் சந்திப்புக்கு அடுத்த நாளே இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஐ.நா ஏற்றுக் கொண்டிருப்பது இலங்கை அதிபரின் இந்திய வருகை பற்றிய காரணத்தையும், இந்தியப் பிரதமரின் நிலைப்பாட்டையும் வலுவாகக் கேள்விக்குள்ளாக்குகிறது.

  இதைப் பற்றியெல்லாம் தாங்கள் எழுத வேண்டும் என மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, இலங்கை இராணுவம்தான் தங்களைத் தாக்குகிறது எனத் தெரிந்தும், தொடர்பேயில்லாமல் இலங்கை மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லும் இலங்கை-இந்திய அரசுகளின் ஆணையை நம் மீனவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள், ஏற்றுக்கொண்டு எப்படி பேச்சுவார்த்தைக்கு ஒவ்வொரு முறையும் போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் தாங்கள் எழுதி எங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்!

  நன்றி! வணக்கம்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன்,

   எனக்குப் புரிந்த வரையில், வட மாகாண முதல்வர்,
   மற்றும் TNA -தலைவர்கள் இணைந்து
   முன்யோசனைகளுடன் சில காய்களை நகர்த்தி
   வருவதாகத் தெரிகிறது.
   இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை,
   சில விஷயங்களை வெளிப்படையாகச் செய்யவோ,
   சொல்லவோ முடியாத நிலை இருப்பதாகவும் தெரிகிறது.

   எனவே, அவர்களாகச் சொல்கின்ற வரையில் நாமும்
   அமைதி காப்பதே சரி என்று நினைக்கிறேன்.

   இந்த விஷயத்தில், என்னை விட நண்பர் எழில் அவர்களால்
   சரியாகச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

   நண்பர் எழில்,
   எங்கே உங்களை பின்னூட்டங்களில்
   காண முடிவதில்லையே…. தொடர்ந்து படித்துக்
   கொண்டிருக்கிறீர்களா …?

   இது விஷயத்தில் நீங்கள் எதாவது கூற முடியுமா …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    //அவர்களாகச் சொல்கின்ற வரையில் நாமும்
    அமைதி காப்பதே சரி என்று நினைக்கிறேன்// – ஓ! அப்படியா ஐயா! ஆகட்டும்; காத்திருப்போம். எப்படியோ, நல்லது நடந்தால் சரி.

 4. Parvatham சொல்கிறார்:

  BrIlliant and bold presentation by Priya Thambi in Vikatan a few months back.
  Thank you for placing it in your blog as a change for your readers.

 5. Siva சொல்கிறார்:

  ஆதி காலம் முதல் இன்று வரை, நாம் பெண்களின் ஆற்றலையும் திறமைகளையும் குறைத்தே மதிப்பிட்டு வந்துள்ளோம். ஆண்கள் பெண்களை அடிமையாக நடத்துகிறார்களோ இல்லையோ, அவர்களின் வலிமையை குறைத்தே மதிப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். திரு தமிழருவி மணியன் அவர்களின் இந்த உரை இதனை தெளிவாக விளக்குகின்றன!

  • Siva சொல்கிறார்:

   I want to make a big correction in the above comment that i posted earlier. There are evidences in Thirumurukaatruppadai and other kaappiam (epics) that ancient Tamil society has followed Women-prime (Matriarchal society) tradition. However, this tradition has been somehow corrupted in the middle due to others influence.

 6. today.and.me சொல்கிறார்:

  நண்ப சிவா,
  உண்மைதான். தமிழருவி மணியனின் பேச்சு தமிழருவியே தான்.

  //ஆதி காலம் முதல் இன்று வரை, நாம் பெண்களின் ஆற்றலையும் திறமைகளையும் குறைத்தே மதிப்பிட்டு வந்துள்ளோம்.//
  ஆதிகாலம் முதல் என்பதை விட இடையில் வந்த மாற்றம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனென்றால் ஆதியில் ஆற்றலுடன் கூடிய அனைத்துமே பெண்பாற்பெயர்களுடன் இணைந்திருந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. உதாரணமாக, அணங்குடை முருகன் கோட்டம், மழையணங்கு, அணங்குடை பகழி, அணங்குடை முரசு, அணங்குடை கட்டில், அணங்கரும் பறந்தலை, அணங்குடை நெடுநிலை……

  நண்பர்கள் மேலும் படிக்க.

  சங்ககாலமும் பெருங்கற்காலப் பண்பாடும் :
  தாய்த் தெய்வ வழிபாடு (8 பத்திகள்)
  வலைத்தமிழ்.காம்.
  sanga-kalam-katkaalam-panpadum_13819.html

  பெண்தெய்வ வழிபாட்டின் தோற்றம்.
  தினகரன் (இலங்கைப் பதிப்பு), 2010, ஜூலை 1 ,
  கட்டுரை எண் n=f1007011

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   டுடேஅண்ட்மீ,

   ந ன் றி நண்பரே. மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.