டாக்டர் சு.சுவாமியின் நியாயமான கேள்விகள் ….!!!

.

இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி, பிரஸ் க்ளப் சந்திப்பை
ஒட்டி செய்தியாளர்களிடையே பேசிய டாக்டர் சுப்ரமணியன்
சுவாமி இரண்டு முக்கிய விஷயங்களில் –
பாஜக அரசைக் குறை கூறும் விதத்தில் சில கேள்விகளை
எழுப்பி இருக்கிறார் –

கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விஷயத்தில்,
பாஜக அரசு – தான் கூறும் ஆலோசனைகளை அலட்சியம்
செய்கிறது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
கருப்புப் பணத்தை கொண்டு வரும் விஷயத்தில் கடந்த
ஒன்பது மாதங்களில் எவ்வளவோ சாதித்திருக்கலாம்.

தான் கூறும் யோசனைகளை பாஜக அரசு ஏற்றுச் செயல்
படாததும் தாமதத்திற்கு ஒரு காரணம் என்று கூறும் சு.சுவாமி,

கருப்புப் பண விஷயத்தில் தீவிரமாகச் செயல்பட வேண்டும்
என்று கூறும் தான் பாஜகவில் மைனாரிடியாக
இருப்பதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களில்
மெஜாரிடியினர் – இந்த விஷயத்தில் மென்மையாகவும்,
மெதுவாகவும் செல்வதையே விரும்புகிறார்கள் என்றும்
கூறி இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதத்திலேயே, பிரதமர் மோடிக்கு
தான் இது பற்றி ஒரு கடிதம் எழுதி இருப்பதாகவும்,
அதில் ஆறு வித யோசனைகளை கூறி இருப்பதாகவும்
கூறுகிறார்.

சுமார் 1.2 லட்சம் கோடி அளவிற்கு இருக்கக்கூடிய –
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை
இந்தியாவின் நாட்டுடைமையாக்கி ஒரு அவசர சட்டம்
இயற்ற வேண்டுமென்றும் –
ஐ.நா.சபையின் ( United Nations Convention on Corruption )
தீர்மானத்தின் கீழ், சம்பந்தப்பட்ட நாடுகள் – அத்தகைய
பணத்தை உடனடியாக இந்தியாவிற்கு மாற்றும்படி செய்ய
உத்திரவிடவும் முடியும் என்றும் கூறுகிறார்.

மோடிஜிக்கு கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர வேண்டிய
கடமை இருக்கிறது. ஆனால், இதைச் செய்ய மத்திய
அமைச்சரவையில் இன்னும் இரண்டு-மூன்று, வலுவான
அமைச்சர்கள் தேவை.( ? )

அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாவது அவர் இதைச் செய்து
முடித்து விடுவாரென்று நம்புகிறேன் (!)
என்று கூறி இருக்கிறார்.

அடுத்தது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிளப்பியிருக்கும்
கேள்வி –

swamy on i.t.-1-short

” நிலக்கரி சுரங்கங்களில் ஒரு பகுதியை ஏலம் விட்டதில்
மத்திய அரசுக்கு புதிதாக 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்
கிடைத்திருக்கிறது.
அதைத்தவிர, அடுத்ததாக 2 ஜி அலைக்கற்றை வேறு
ஏலம் விடப்பட உள்ளது. அதிலும் மத்திய அரசுக்கு
கணிசமான வருவாய் வரும்.
அப்படி இருக்கும் போது இன்னும் ஏன் வருமான வரி
தொடர வேண்டும் ? ”

——-

நல்ல கேள்விகள் தான்.
டாக்டர் சு.சுவாமி யாரோ தெருவில் போகிற ஆசாமி அல்ல…
எதிர்க்கட்சித் தலைவரும் அல்ல.

பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர்.
முக்கியமான கொள்கைகளை நிர்ணயிக்கும்
இடத்தில் இருப்பவர்.

மத்திய அரசு- ஒன்று, அவரது ஆலோசனைகளை
ஏற்றுச் செயல்பட வேண்டும். அல்லது அவரது ஆலோசனைகள்
எந்தவிதத்தில் ஏற்கத் தக்கவை அல்ல என்பதை
விளக்க வேண்டும்.

இது பாஜகவின் உள்கட்சி விவகாரமாக இருந்தால் –
நம்மால் இதில் நுழைய முடியாது. ஆனால் செய்தியாளர்
கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசப்பட்ட பிறகு, இதற்கான
விளக்கங்களை பாஜக அரசு கொடுப்பது தானே முறை ….?

ஒரு சீனியர் பாஜக தலைவரை – மதிப்போடும்,
கௌரவத்தோடும் நடத்த வேண்டிய பொறுப்பு பாஜக
தலைமைக்கு இல்லையா என்ன …???!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to டாக்டர் சு.சுவாமியின் நியாயமான கேள்விகள் ….!!!

 1. M. Syed சொல்கிறார்:

  /// ஒரு சீனியர் பாஜக தலைவரை – மதிப்போடும்,
  கௌரவத்தோடும் நடத்த வேண்டிய பொறுப்பு பாஜக
  தலைமைக்கு இல்லையா என்ன …???!!! ////

  இதை படித்ததும் சிரிப்புதான் வந்தது. அதான் பார்த்தோமே மூத்த தலிவர் அத்வானிஜி, ஜஸ்வந்த் சிங்ஜி போன்றவர்களுக்கு கொடுத்த மரியாதை மற்றும் மதிப்பையும் போங்க சார் காமெடி பண்ணாதீர்கள்.

  M. செய்யது
  துபாய்

  • Rangarajan Rajagopalan சொல்கிறார்:

   thiru துபாய் எம். செய்யது,

   கே.எம். சார் “நக்கல்” தான் பண்ணுகிறார்….புரியவில்லையா ?
   பாஜகவில் சு.சு.வின் நிலை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா
   என்பது தான் அதன் மையம்.

 2. today.and.me சொல்கிறார்:

  இன்னொரு வகையில் பார்த்தால், பாஜகவிலும் அவர் யாரையோ எதற்கோ ப்ளாக்மெயில் பண்ண யோசித்திருப்பதைப் போலத் தோன்றுகிறது. அவர் கேட்பதைக் (ஏதாவது ஒரு மினிஸ்டர் ! / அல்லது கவர்னர்..?) கொடுத்துவிட்டால் அவர் ஏன் இதுபோல் எல்லாம் கேள்விகேட்கப் போகிறார்?

  எந்தப் பூசாரியை வேண்டுமானாலும் பகைத்துக்கொள்ளலாம், சுவாமியை ??? Never.

  பாஜக தலைமை கொஞ்சம் அலர்ட் ஆக இருக்கவேண்டிய நேரம் ஆரம்பம்.
  இப்போதுதான் புகைய ஆரம்பித்திருக்கிறது. அதை வெறும் ஃபாக் ஆக மாற்றுவதோ, ஃபையர் ஆக மாற்றுவதோ பாஜக தலைமையின் கையில்.

  Ball is on their court and Swamy is on the other side NOW.

 3. S.Selvarajan சொல்கிறார்:

  “ராஜா நரேந்திர மோடியும் – ராஜகுரு சுப்ரமணியன் சுவாமியும்” —-நான் என்ன சொன்னாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார் : —
  என்று தம்பட்டம் அடித்த சு.சாமியின் தற்போதைய நிலைமை ….? ” ஓட்டு போட்ட மக்களுக்கு கோட்டு போட்டு காட்டிய மோடி — அதே கோட்டை ஏலம் என்கிற நாடகம் மூலம் ஓட்டை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள முயலும் கில்லாடி” ! அவரிடம் இவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் !! ராஜபக்சே தேர்தல் விவகாரத்தில் முதலில் வாழ்த்து தெரிவித்துவிட்டு பின் தோற்றவுடன் அப்படியே உல்ட்டா அடித்தவர் ” நமோ ” சிங்கம் என்று தான் நினைத்தோம் — ஆனால் நரியாக இருப்பவரை எப்படி நம்புவது — பராபரமே என்று சு.சாமி இனி புலம்புவாரா ? காலம் பதில் சொல்லும் ….. !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   ” நாடகமே உலகம் – நாளை நடப்பதை யார் அறிவார்…!!!”

   சு.சுவாமி கவர்னர் பதவியோடு திருப்தி அடைபவர் அல்ல.
   அவர் குறி “அருண் ஜெட்லியின் நாற்காலி…!!!”

   “அல்வா” கிண்டும் இடத்தில் தான் இருக்க வேண்டுமென்று
   எதிர்பார்க்கிறார்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப செல்வராஜன்,
   ‘கோட்’ டே துருப்புச் சீட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது. கோட்டு விளைந்த இடம், வந்த இடம் / விதம், வளர்ந்த இடம், தற்போது போய் இருந்திருக்கவேண்டிய இடம், தற்போது இருக்கும் இடம் எல்லாமே பிரதமர் பதவிக்கு அம்புகளை விடவேண்டிய நிலையில் தான் உள்ளது.

   ஆனால் கேள்வி கேட்கமுடியாத நிலையில் (full majority) ஓட்டுப்போட்ட மக்கள் அவர்களை வைத்துள்ளதாலும்,

   அப்படி மக்கள் வைப்பதற்கு தானும் ஒரு காரணம் என்ற முறையில், தனக்குத் தருவதாக வாக்களிப்பட்ட ….. ஐ தரவில்லை என்ற காரணத்தாலும்,

   கேட்கவேண்டிய நிலையில் சுவாமி இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்.

   Survival of the Fittest…!

   • S.Selvarajan சொல்கிறார்:

    தோழரே ! உங்களின் எண்ணப்படி —ஒரு வேளை ” அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் ” களை முடித்த பின் கேட்டால் கிடைக்குமோ … என்னவோ … !!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் செல்வராஜன்,

     அந்த “அசைன்மெண்ட்” இப்போதைக்கு முடிவதாகத்
     தெரியவில்லை. ஏகப்பட்ட இழுத்தடிப்புகள்…..

     இவருக்கும் அதெல்லாம் முடியும் வரை காத்திருக்கப்
     பொறுமை இல்லை…..

     பட்ஜெட் வெளியான பிறகு வெளிப்படையான மோதல்கள்
     எதாவது எதிர்பார்க்கலாம்…

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ‘கோட்’ சம்பந்தமாக யாராவது public interest litigation
    போட்டால், நிறைய விவகாரங்கள் வெளிவர
    வாய்ப்பு இருக்கிறது…….

    யாராவது செய்வார்களா …?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  போன முறை வாஜ்பாய் ஆட்சியை ஜெ குடைந்தெடுத்தார்.
  இம்முறை அந்த பொறுப்பை சுசா பெற்றுக்கொண்டுள்ளார் போல!
  ஆக மொத்தத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் மெஜாரிட்டி கொடுத்தாலும் கட்சிக்குள் அப்படியில்லை.

 5. today.and.me சொல்கிறார்:

  //இதைச் செய்ய மத்திய அமைச்சரவையில் இன்னும் இரண்டு-மூன்று, வலுவான
  அமைச்சர்கள் தேவை.( ? )//
  இவருக்கு துணையாக இன்னும் இருவரை அமைச்சரவைக்குள் சேர்க்க ஆசைப்படுகிறாரா? அந்த இருவர் யாரோ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   திருமதி சந்திரலேகா – விரைவில் கவர்னராக நியமிக்கப்பட
   உள்ளார்…..எனவே அவர் இதில் இல்லை….!

   அடுத்தபடியாக பாஜக வில் இவருக்குள்ள மிகப்பெரிய
   ஜால்ரா – திருவாளர் ஹெச்.ராஜா தான். ஆனால் அவர்
   எம்.பி. அல்ல. ஆவதும் இயலாது…..

   ஒருவேளை மூன்று கேட்டால், ஒன்றாவது கிடைக்கும்
   என்பது அணுகுமுறையின் அடிப்படையாக இருக்கலாம்….

   வாஜ்பாய் அவர்கள் பட்ட அவஸ்தையைப் பார்த்த பிறகும்,
   மோடிஜி, சு.சுவாமியை பக்கத்தில் சேர்த்துக் கொண்டார்….
   வருவதை அனுபவிக்க வேண்டியது தான்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. D. Chandramouli சொல்கிறார்:

  From the time Modi government took over, I haven’t come across any response either from the Government or from the BJP to Subramanian Swamy’s various opinions in the media. Apparently, they don’t want to offend him either. Swamy has proved himself to be an expert on unearthing the scandals and fighting them out in the court, and it is perhaps too soon for him to take on the BJP government. He is one who can’t be ignored by the powers that be.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   திரு சந்திரமௌலி,

   நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

   டாக்டர் சு.சுவாமியை ஏமாற்றினால், அவர் சும்மா
   விட மாட்டார்…….நல்லது செய்ய முடிகிறதோ- இல்லையோ,
   கவிழ்ப்பதில் ஆள் கில்லாடி….

   சு.சுவாமி – பாஜக விற்கு எதிராக கிளம்பும் நாள் –
   இப்போதைக்கு இன்னும் கொஞ்சம் தள்ளிப் போடப்படலாம்.
   ஆனால் – வராது என்று சொல்ல முடியாது…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.