அதிசயம் – தினமலரில் மோடிஜிக்கு எதிரான செய்தி ….!!!

.

தினமலர் நாளிதழ் பாஜக வுக்கு ஆதரவான செய்தித்தாள்
என்பது அனைவரும் அறிந்ததே….
அதிசயமாக இதில் மோடிஜிக்கு எதிராக
ஒரு செய்தி வந்திருக்கிறது.

நம் ‘விமரிசனம்’ வலைத்தளத்தில் நேர்மையான முறையில்
விமரிசனம் செய்தாலே, அதில் மோடிஜிக்கு எதிராக எதாவது
இருந்தால் கொதித்தெழும் பாஜக ஆதரவாளர்கள்,
மோடிஜி சர்க்காரின் efficiency பற்றிய இந்த செய்திக்கு –
என்ன சொல்லப்போகிறார்கள் –
எந்த விதத்தில் ரீ-ஆக்ட் பண்ணுகிறார்கள் –
என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்….!

கீழே இருப்பது – தலைப்பு உட்பட – அப்படியே தினமலரில்
வந்திருக்கும் செய்தி…..

———————————————————————-

( http://www.dinamalar.com/news_detail.asp?id=1189700 )

dinamalar news page

மத்திய அரசில் முக்கிய பதவிகள் காலி

பதிவு செய்த நாள்
21பிப்
2015
22:50

நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்ந்ததும், பிரச்னைகள்
தீர்ந்துவிடும் அதிரடியாக செயல்படுவார் என, எதிர்பார்த்தனர்.
இந்த எதிர்பார்ப்பு பொய்யாகிவிடுமோ என, மோடி ஆதரவாளர்கள்
அஞ்சுகின்றனர்.

காரணம், முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய அரசின்,
பல முக்கிய பதவிகள் காலியாக உள்ளன.மோடி பதவியேற்ற கடந்த, எட்டு மாதங்களாக, இந்த முக்கிய பதவிகளில்,
யாருமே நியமிக்கப்படவில்லை. ‘பெல்’ போன்று,
247 அரசு சார்ந்த பொது நிறுவனங்கள் உள்ளன. இவற்றில்,
150க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை பொறுப்பில்
யாருமே இல்லை. காலியாக உள்ளன.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைத் தேர்வு செய்யும்
மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷனில், இரண்டு உறுப்பினர்கள்
பதவி காலியாக உள்ளன.மத்திய அரசின் அதிகாரிகளைக்
கண்காணிக்கும் அமைப்பு, மத்திய விஜிலென்ஸ் கமிஷன்.
அரசில் ஊழல் நடக்கிறதா என்று கவனிப்பதோடு,
சி.பி.ஐ., ஒழுங்காக ஊழல் வழக்குகளை விசாரிக்கிறதா என்றும்
கண்காணிப்பது, இந்த விஜிலென்ஸ்
கமிஷன் வேலை.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் தலைவர்
பதவியும் காலியாக உள்ளது. தலைமைத் தேர்தல் கமிஷனராக
இருந்த நம்ம ஊர் வி.எஸ்.சம்பத் ஓய்வு பெற்று,
ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. மூன்று தேர்தல்
கமிஷனர்களில், தற்போது, இரண்டு பேர் தான் உள்ளனர்.
ஏன் இப்படி என்று கேட்டால், சீனியர் அமைச்சர்களில் கூட பதில்
சொல்ல முடியவில்லை. எல்லாம், அவர் பார்த்துக் கொள்வார் என்று பிரதமரை கை காட்டுகின்றனர்.

காங்., நண்பர்களுக்கு உதவும் ஜெட்லி –

சென்ற ஆண்டு, லோக்சபா தேர்தல் நடைபெறும் போது,
நிதி அமைச்சகத்தில், ஓர் இளம் பெண்மணி, ஆலோசகராக
நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே, ஆலோசகர் இருக்கும் போது, இந்த பெண்மணி எதற்கு என, கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவருடைய பதவிக்காலம் முடிவடையும் சமயத்தில்,
மேலும் ஓர் ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
காரணம் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும்,
அந்த முன்னாள் காங்., அமைச்சரும் நெருங்கிய நண்பர்களாம்.
அந்த பெண்மணிக்கு பதவி நீட்டிக்க வேண்டும் என்று கேட்டதுமே,
உடனே சரி என்றாராம் ஜெட்லி.

செய்தி ஒலிபரப்பு இலாகாவும், ஜெட்லியிடம் உள்ளது.
முன்னாள் காங்., அமைச்சர் மணீஷ் திவாரிக்கு
வேண்டப்பட்டவர், இந்த அமைச்சகத்தின், ஒரு முக்கிய
பதவியில் உள்ளார். அவர் மீதும் ஜெட்லி கை வைக்கவில்லை.
இதாவது பரவாயில்லை. துார்தர்ஷனில் ஆலோசகர் என்ற பதவி
உள்ளது. 80 ஆயிரம் சம்பளம். இவர்கள் அலுவலகத்திற்கு வர
வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆட்சியில் உள்ள கட்சிக்கு
வேண்டியவர்களை, இந்த பதவியில் நியமிப்பது வழக்கம்.

130 பேரை காங்., ஆட்சியில் இருந்த போது நியமித்தது.
ஆட்சி மாறிய பிறகும், இவர்கள் பதவிகளில் தொடர்கின்றனர்.
இப்படி போய்க்கொண்டிருந்தால், நம்ம கட்சிக்காரர்கள்
தலையில் துணியைப் போட்டுக்கொள்ள வேண்டியது தான்
என்று வருத்தப்படுகின்றனர் பாஜ.,வினர்.

—————————————————————-

பின் குறிப்பு –

நாம் மோடிஜி கோட்’ பற்றிய உண்மைகளைச்
சொன்னபோது பொங்கி எழுந்த மோடிஜி ஆதரவாளர்கள் –

மோடிஜி சர்க்காரின் efficiency பற்றிய
இந்த செய்தியைப் பற்றியும்,
செய்தியைப்பிரசுரம் செய்த தினமலர் நாளிதழ் பற்றியும்,

நிச்சயம் பொங்கி எழுவார்கள் என்றே நம்புகிறேன்.

கருத்து கூற விரும்பும் மோடிஜி அபிமானிகள்,
கீழே – பின்னூட்டங்களில் தாராளமாக
தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

ஏனெனில், இதில் நம் பங்கு எதுவுமே இல்லை …
போற்றுவார் போற்றலும், புழுதி வாரித்தூற்றுவார்
தூற்றலும் –
– எல்லாம் போகட்டும் அந்த “தினமலர்” நாளிதழுக்கே…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to அதிசயம் – தினமலரில் மோடிஜிக்கு எதிரான செய்தி ….!!!

 1. seshan சொல்கிறார்:

  Last 2 months no payments received from……

 2. Ezhil சொல்கிறார்:

  ஜெய் சு சுவாமி!

 3. S.Selvarajan சொல்கிறார்:

  துக்ளக் மற்றும் ஆனந்த விகடனில் ” கார்ட்டூன்கள் “— தினமலரில் அதிசய செய்திகள் ..! ஏன் ? நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்ந்ததும், பிரச்னைகள்
  தீர்ந்துவிடும் அதிரடியாக செயல்படுவார் என, எதிர்பார்த்தனர்.
  இந்த எதிர்பார்ப்பு பொய்யாகிவிடுமோ என, மோடி ஆதரவாளர்கள்
  அஞ்சுகின்றனர்… ? மோடி ஆதரவாளர்கள் அஞ்சுகிறார்களோ இல்லையோ…. தினமலர் அதிகம் அஞ்சுகிறது …போல தெரிகிறது …. !!! மாய திரை விலகுகிறது ….. காற்று ஒரே திசையில் எப்போதும் — அடிக்குமா ?

 4. Siva சொல்கிறார்:

  This is all drama. I think that these biased media groups want to create an neutral image among majority leaders in TN.
  In another angle, these media groups might indirectly help Susa to get some post by enlisting the vacant post

 5. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  நீங்கள் கடைசி வரியை விட்டுவிட்டீர்கள். இப்படி முடிகிறது அந்தப் பாரா,..

  //பிரதமருக்கு, இந்த விவகாரம் தெரியுமா அல்லது அவரும் வாய் மூடிக்கொண்டிருக்கிறாரா என்று வருத்தப்படுகின்றனர் பாஜ.,வினர்.//

  விவகாரங்கள் எதுவுமே தெரியாவிட்டால் அவர் எப்படி பிரதமர் ? இதிலே படுபயங்கர ஸ்பீடில் ஆலோசனைகள், திட்டமிடல்கள், முடிவெடுப்புகள் நிகழ்வதாக செய்திகளும் பின்னூட்டங்களும் அவ்வப்போது வருகின்றன.

  //130 பேரை காங்., ஆட்சியில் இருந்த போது நியமித்தது. ஆட்சி மாறிய பிறகும், இவர்கள் பதவிகளில் தொடர்கின்றனர். இப்படி போய்க்கொண்டிருந்தால், நம்ம கட்சிக்காரர்கள் தலையில் துணியைப் போட்டுக்கொள்ள வேண்டியது தான் என்று வருத்தப்படுகின்றனர் பாஜ.,வினர்.//
  பாஜ கட்சியினர் தலையில் துணியைப் போட்டுக்கொள்ளுவதைப் பற்றித்தான் கவலை எல்லாம். இப்பொழுதாவது அவர்கள் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டைச் சொல்கிறார்களே என்று மகிழலாம்.
  ————-
  இந்த அழகில் “சாதாரண மனிதர்கள் பயன்பட பார்லி.,யை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்”.
  ————–

 6. venkat சொல்கிறார்:

  I read an interesting article the other day on how google produces search results to the mood of the googler!!! if you type “is green tea good for my health”, you will get listings only showing the positive effect of green tea. similarly, if you type ” is green tea bad for my health”, then the search results would be ulta!!! it is now clear to me on what the blogger is typing in google!!! it would not too long for any one to cut and paste articles that says the opposite…

  I don’t want to refute any of the contents mentioned in the cut and paste article. I will sign off from this blog for good with the following message…

  I started reading your blog say about 8 months ago. I liked it for its well articulated blogs and the insights provided by you. It went into my book mark. Off late it has become a platform for bashing subramanya swamy and namo. The quality of blogs further deteriorated ( to a point where there are more cut and past and some cheap stuff ( I am referring to the coat matter ) ) ever since criticizers like us popped up. In my humble opinion, the article took your blog quality to its lowest point as it was addressed to few criticizers like us. I think you have forgotten the reasons you started off this blog. Just to remind you, I have given the link.

  https://vimarisanam.wordpress.com/about/

  Please list all your articles posted in the last 3 months or so and analyze how many of them falls under the category you mentioned in the above link. I think you have been obsessed by the urge to score against few of us!

  I don’t want to be one of the persons responsible for dragging a nice blog to a nasty one. Keep writing on variety of topics, local politics, other state politics, social awareness subjects etc., we have other forums like face book etc., where we get a lot of cut and paste.

  Good luck. Like I said, I am signing off!!! will check back may be 6 months from now. If the quality has improved, I would be happier for you and your followers.

  • மணிச்சிரல் சொல்கிறார்:

   வெங்கட் அவர்களுக்கு,
   உரிமையில் சொல்ல விழைந்ததை, ஒருமையில் சொல்லிவிட்டது போல் ஒர் உணர்வு. எதிர்பார்ப்பை ஈடுசெய்ய இதழ்களை முகர்தல் நலம். காலத்தையும் கருத்தில் கொண்டு இதழை இதமாக அனுகவும். செய்திதாளன்று மறுநா வடிகட்டி வாசகர் கடிதமொன்று எனக்கூற. அனைவரும் அதில் அடக்கம். படைப்பவருக்கோ அதுதன் அடக்கம். எனக்கு புரிந்தவரை, பார்ப்பவரின் எண்ணத்தவறேயன்றி எண்ணத்தவரின் தவறேயன்று.
   படைப்பவருக்கு,
   தினம் மலருவதை மறந்து, தினமலரென்றீர்கள்.
   அனைவருக்கும்,
   குறையிருப்பின், மறக்கவும்.

  • Ramachandran. R. சொல்கிறார்:

   வெங்கட் என்னும் சுயபுத்தி இல்லாத நமோ அடிமைக்கு,

   இந்த தளத்தில் உங்களை எழுத அனுமதித்ததே கே.எம். சார் செய்த தவறு (கே.எம்.சார் மன்னிக்கவும்).
   சொந்தமாக சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு தான் இந்த தளம்.
   அடிமைகளுக்கு இங்கேஇடமில்லை. தாராளமாகப் போய்க்கொள்ளலாம்.

   பத்து வயதுப்பையன் மெரீனா பீச்சில் கிழிந்த சட்டையுடன் சுண்டல்
   விற்றுப் பிழைக்கிறான். டீ விற்றதாகக் கூறி மக்களை ஏமாற்றி
   பதவியைப் பிடித்த இந்த நாட்டின் பிரதமர் 13.5 லட்சம்
   ரூபாய்க்கு சூட் போடுகிறார்.
   தூ.. நினைக்கவே கேவலமாக இருக்கிறது. அந்த எழவுக்கு
   உங்களைப் போன்ற அடிமைகள்
   எல்லாம் வக்காலத்து வாங்குகிறீர்கள்.வெட்கமாக இல்லை உங்களுக்கு ?
   உங்களுக்கு சைனா போய் பிசினஸ் பண்ண நமோ அரசாங்கம்
   உதவி பண்ணினால், போய் அவர் காலைக் கழுவுங்கள்.
   சோப்புபோடுங்கள். இங்கே உங்களுக்கு என்ன வேலை ?
   உங்களைப் போல இருக்கும் இன்னும் ஒன்றிரண்டு நமோ ஜால்ராக்களுக்கும்
   சேர்த்து தான் சொல்கிறேன்.
   //இந்த நாட்டின் வளங்கள் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தம். எல்லாருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும். அடித்தட்டில் இருக்கும் மக்களை கைத்தூக்கி விட வேண்டியது
   அரசாங்கத்தின் பொறுப்பு//
   என்று கூறும் கே.எம்.சார் எங்கே ..
   முதலாளிகளுக்கு சாமரம் வீசும் நமோவுக்கு ஜால்ரா போட்டு பிழைக்கும் நீங்கள் எங்கே ? அவரைக் குறை கூற உங்களுக்கு எந்தவித தகுதியும் இல்லை.
   கெட்ட வார்த்தைகள் எல்லாம் எழுதத் தோன்றுகிறது.
   கே.எம்.சார் பின்னூட்டத்தை எடுத்து விடுவார் என்பதால்
   அடக்கமாக எழுதுகிறேன். நீங்கள் வரும் முன்னரும் இந்த
   தளம் இருந்தது. போன பின்பும் இருக்கும்.
   எப்படி எழுத வேண்டும் என்று நீங்கள் அட்வைஸ் பண்ண
   வேண்டிய அவசியமே இல்லை. ஜால்ராக்களுக்கு அட்வைஸ்
   பண்ண எந்த தகுதியும் இல்லை.

 7. Siva சொல்கிறார்:

  பூனை கண் மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா! So if you leave from reading this blog, nothing will happen!

  • Srini சொல்கிறார்:

   Dear Siva, i am sure you must be feeling better inside that you gave a stunning reply to venkat – hope your ego is gratified now. your reply to venkat applies to everyone reading this blog including you. we can even look at it this way… without reading this blog also, nothing will happen. you called me an idiot in one of your previous reply on a different post… come on…waiting for your archana. its the same arrogance that you guys accuse others is displayed by many here these days… God Bless you all.

   • Siva சொல்கிறார்:

    Dear sir, I regret to say that it is very sad to read your reply comment. I do not have even a very very smallest level of intention to hurt any one personally, except writing rebuttal for ONE issue. That is EQUAL GROWTH/WELFARE/HAPPINESS for all humans in this earth. So if I see any body advocating ideas against this principle, I will fight with any one. Even if GOD or Demon-like person or my father or brother OR my wife or child does this, I will not resist. I will fight for it. Not only posting comments. I have done it in action in the past.

    It happened me to read this blog for long time (years) without writing any comment until a point where I cannot resist the advocacies of unethical business practices and pseudo-capitalistic pseudo-free market techniques by readers. If you see my commenting period (timing) and topics and the contents, you will realize what I say!

    It is not my habit to say bad words to any one even in absent mind. But, some of the comments by you guys are insisting on pseudo-free market made me furious. So I opted for some strong words. I am a staunch follower of Thiruvalluvar! I do not want to use bad word, when I have a good words. But some time, I used it because your comments. The sad thing is that you guys are more experienced than me ( I guess), but still misleading the mass.

    I am very clear that there is no obligation for any one to listen any body. Every one will have their own ideology and thinking. But what makes good for all is going to win the race! So if any one say that practically and ideologically my current thinking is wrong, I am not going to worry for that. Because I know very well that my ideology is clear that I AM NOT belong to any ‘ism’ or any ‘political or religious party’. I am an UNIVERSAL man with ONE simple ideology is to make ALL people in the earth to live thier life happily and equally.

    By the way, I do not have any feeling that who reads or leaves this or other blogs in Tamil. But I am a broader watcher of daily happenings. So my job will continue without any remorse for any one.
    Finally, I am an ardent follower of of our Tamil culture. So, if in any way, I misbehaved with fellow readers or seniors, my sincere apologies to them.

 8. drkgp சொல்கிறார்:

  No harm in having different opinions on a particular topic.
  Mr Venkat , you can have your say still remaining on the blog.
  It will give other side or same side of your thoughts on the discussion .

 9. today.and.me சொல்கிறார்:

  நண்பர் வெங்கட் அவர்களுக்கு,

  //your blog quality to its lowest point as it was addressed to few criticizers like us//
  உண்மைதான் கட்சியைவிட தலைவரைவிட நாடு, நாட்டுமக்கள், தமிழ், தமிழர் – நலன் தான் முக்கியம் அதற்குத் தேவையானவற்றைச் சொல்லி-எழுதி . உங்களைப் போன்ற கட்சி/தலைவர்சார்பு மக்களை கொஞ்சம் படிப்பிக்கவேண்டும் என்ற எண்ணப்போக்கில், கொஞ்சம் lowest point-ல் தான் இந்த blog உள்ளது.
  —————————–
  //Off late it has become a platform for bashing subramanya swamy and namo//

  //ஏற்கெனவே பல முறை கூறி விட்டேன் – நான் எந்தக்கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த விஷயத்தையும் பற்றி எழுதுவதில் எனக்கு எந்த வித சங்கடமும் இல்லை.. // என்று கா.மை.கூறியும் நீங்கள் bloggerஐ சுவாமி மற்றும் மோடியின் எதிரியாகச் சித்தரிக்க விரும்புகிறீர்கள் என்றே சொல்லுவேன். அவர் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னாரே அதை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். அவரைக் கவர்ந்த சுவாமியைப் பற்றி (நீங்கள் கூறிய எட்டு மாதங்களுக்கு முன்பு) பல இடுகைகள் போட்டிருக்கிறார். அதையெல்லாம் படிக்கவில்லை. இவ்வளவு ஏன்? இதற்கு முந்தைய இடுகையில் சுவாமியின் நியாயமான கேள்விகளைக் குறிப்பிட்டிருந்தாரே, அதில் கூட நீங்கள் உங்கள் மனங்கவர்ந்த சுவாமியைப் பாராட்டி ஒரு பின்னூட்டம், “அட. ஆமாய்யா. எங்க ஆள் எப்பவுமே மக்களுக்கு நல்லது நினைக்கிறவர்தான். நீங்கதான் தப்பாப் புரிஞ்சிட்டிருக்கீங்க என்று அட்லீஸ்ட் ஒரு சுவாமிக்கு ஒரு பாராட்டு – on the other side, மாத்தி விமரிசிக்கிறவர்களுக்கு ஒரு குட்டு” கொடுக்க முடியாதவர் தானே நீங்கள்.

  குதிரையின் கண்களில் இருக்கும் சேணத்தைப் போல எட்டு மாதம் என்று அளவுகோல் இருக்கிறது. அதைக் கழற்றிவிட்டு கொஞ்சம் முன்னும் பின்னும் சென்று படித்துவிட்டு, பின்பு, முடிந்தால் ஆதாரங்களுடன் பின்னூட்டங்களில் மறுப்பு எழுதுங்கள்.

  கா.மை. எழுதியிருக்கும் கருத்துக்கோ பின்னூட்டங்களுக்கோ மாற்றுக் கருத்துக்கள் உங்களிடம் இருக்கிறது என்றால், அதை ஆதாரங்களுடன் கூறி விவாதிப்பதில் என்ன கஷ்டம். அந்த ஆதாரமே இல்லாவிட்டால், நீங்கள் என்ன செய்யமுடியும், பாவம்.

  அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு, நமோ நம என்று கும்பிடலாம். கடவுள் காப்பாற்றிவிடுவார்.
  —————————–
  // Off late it has become a platform for bashing subramanya swamy and namo//
  ஏன் அவர்கள் இருவரும் இந்திய அரசியலுக்கும், தமிழக/தமிழர்களின் அரசியலுக்கும் அப்பாற்பட்ட கடவுளர்களா? சோனியாஜியையும், ராகுலையும், பசியையும், இளங்கோவனையும், இன்னபிற காங்கிரசாரையும் மட்டுமே விமரிசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமா?

  காங்கிரசுக்கு எதிர்ப்பு இந்த பாஜக என்று இன்னமும் நம்பிக்கொண்டிருப்பீர்களானால், ஒன்று சொல்கிறேன், காங்கிரசே பாஜகவின் பினாமிதான் என்பது என் கருத்து.
  —————————–
  // I am referring to the coat matter//

  இதே நமோவை, இதே கோட்டுப் பிரச்சனையை, இதே சுவாமியே கோர்ட்டுக்கு ஏற்றுவார், அப்போது பாருங்கள் வேடிக்கையை.
  —————————–
  //I started reading your blog say about 8 months ago//

  ஆமாம், எட்டு மாதத்துக்கு முன்பிருந்து கா.மையும் பாஜகவையும் மோடிஜியையும் நம்பியவர்தான். காங்கிரஸ் வீட்டுக்குப் போகவேண்டுமென்றால் பாஜகவைக் கூப்பிடுங்கள் என்றவர்தான். அப்பொழுது அவர் எழுத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தது என்றால் இப்போது பிடிக்காதுதான். கா.மையைப் பொறுத்தவரை ஒரு கட்சிக்கோ ஒரு தலைவருக்கோ வால்பிடிக்கிறவர் இல்லை. அதனால் தான் இப்பொழுது தவறுகளைக் காணும்போது சுட்டிக்காட்ட முடிகிறது. அது எல்லோராலும் முடியாது. முக்கியமாக கட்சி / தனிமனித சார்பு உடையவர்களுக்கு. அத்தகைய நிலையுடைய unbiased persons-களுக்காகத்தான் இந்த இடம்.
  —————————–
  //I don’t want to be one of the persons responsible for dragging a nice blog to //
  // Like I said, I am signing off!!! //

  Bye, bye see you, என்று சொல்வேன் என எண்ணவேண்டாம். நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாமல் செல்வது. நீங்கள் signing off சொல்லியிருக்கவேண்டிய தேவையே இல்லை. Mood of googlars ல் தேடி உங்களுக்குத் தேவையானது எங்கே கிடைக்கிறதோ அங்கே சென்றிருந்திருக்கலாம். Blog ஹிட்ஸில் ஒன்றோ அல்லது பலவோ குறைந்திருந்தாலும் அதை உன்னிப்பாகக் கவனித்து குறைவோருக்குத் தகுந்தமாதிரி எழுதி ஹிட்ஸைக் கூட்டும் எண்ணம் உடையவர் அல்லர் இந்த blogger என்பதை உங்களால் இந்த எட்டுமாதங்களில் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் பின் எப்போது முடியும்?

  உங்களுடைய கம்ப்யூட்டர், உங்களுடைய இன்ட்டர்நெட், உங்களுடைய சுதந்திரம். படிக்கிறதற்குப் ப்ளாக்குகளும், பத்திரிகைகளுக்கும் பஞ்சமா என்ன? நான் போகிறேன், வரமாட்டேன், ஆறுமாதம் கழித்து வருகிறேன் என்பதெல்லாம் ஒருவகையில் எமோஷனல் ப்ளாக்மெயில் மாதிரித்தான். மற்றொரு வகையில் எழுதுபவரை உங்களை நோக்கி இழுக்கிறமாதிரித்தான். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் யார் யாரை நோக்கி இழுக்க முயல்கிறார்கள் என்று.
  —————————–
  //will check back may be 6 months from now. If the quality has improved, I would be happier for you and your followers.//

  இங்கே தரம் இப்படியேதான் இருக்கும்.

  // இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
  நல்லதைப் பாராட்ட வேண்டும்.
  கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
  (இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறுமல்லவா ? )
  அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
  ஆபாசமின்றி எழுத வேண்டும்.//

  இது உண்மை என்று நீங்கள் உணரும் அளவுக்கு நிச்சயமாக உங்களுக்கு பாஜகவும் அதன் சார்பு அமைப்புகளும் பாடம் கற்றுத்தரும்.

  இப்படிப்பட்ட எழுத்துக்கு followers ஆக இருப்பதில் பெருமைதான், மகிழ்ச்சிதான். நீங்கள் சென்று, வாருங்கள் மீண்டு(ம்) என வாழ்த்துகிறேன்.
  —————————–
  🙂 🙂
  உங்கள் தலைமை உங்களை இங்கே வரவைத்துவிடுவார்கள் என்று எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது நண்பரே.

 10. today.and.me சொல்கிறார்:

  //நம் ‘விமரிசனம்’ வலைத்தளத்தில் நேர்மையான முறையில் விமரிசனம் செய்தாலே, அதில் மோடிஜிக்கு எதிராக எதாவது இருந்தால் கொதித்தெழும் பாஜக ஆதரவாளர்கள், மோடிஜி சர்க்காரின் efficiency பற்றிய இந்த செய்திக்கு – என்ன சொல்லப்போகிறார்கள் – எந்த விதத்தில் ரீ-ஆக்ட் பண்ணுகிறார்கள் – என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்….!//

  ரீ-ஆக்ட் பண்ணிவிட்டார்கள் கா.மை.ஜி…..
  இங்கே இருந்தால்தானே ஆக்ஷன் -ரீஆக்ஷன் எல்லாம் எதிர்பார்ப்பீர்கள்.

  தலையைப் போலவே தான் இவர்களும், கேள்வி மட்டும் கேட்டு பதில் சொல்லவேண்டிய நிலையில் வைத்துவிட்டால் ……….
  சத்தமே இல்லாமல் எஸ்கேப் ஆவார்கள்.

  (இந்தக்கருத்தை நான் பா ஜ கட்சி மற்றும் தலைவர்களுக்காகக் கூறியிருக்கிறேன். மற்றபடி ஆதரவாளர்கள் வருந்தவேண்டாம்.)

 11. S.Selvarajan சொல்கிறார்:

  திரு.கா.மை. அவர்களுக்கு : — பின் குறிப்பு வேலை செய்கிறது போல தெரிகிறது ! பொங்கி எழுவார்கள் என்று பார்த்தால் ஒருவர் மட்டும் தான் பொங்கி இருக்கிறார் ? அவரும் ” நான் I am signing off!!! will check back may be 6 months from now.” என்று கூறி இருக்கிறார் .. !! எப்படி இருந்தாலும் அவரும் 6– மாதங்களுக்கு தங்களின் இடுக்கையை படிக்க போகிறார் என்பது உண்மை – — ஒரு கோட் விவகாரம் இந்த நாடே பார்த்து சிரித்தது — மேலும் தேனிலவு காலம் — 100– நாட்கள் — அதன் பிறகு தலை கீழாக இந்தியாவையே மாற்றுவோம் என்று கூறி காலம்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது — அதனால்தான் தினமலர் உட்பட அனைத்து பத்திரிக்கைகளும் ஒரு மேம்போக்கான எதிர்ப்பை காட்டுகின்றன என்பதை நண்பர்கள் புரிந்துக்கொண்டால் நல்லது … !!! என்ன இருந்தாலும் தாங்கள் அறிவு பூர்வமாக ” எல்லா புகழும் இறைவனுக்கே ” என்பதைப்போல முன்கூட்டியே — – எல்லாம் போகட்டும் அந்த “தினமலர்” நாளிதழுக்கே…!!! என்று முத்தாய்ப்பு வைத்தது பாராட்ட தக்கது …. காடாறு மாதம் முடிந்து மீண்டும் நண்பர் நாட்டுக்கு திரும்புவாரா ? விக்கிரமாதித்தன் போல … ! வேதாளம் போல அல்லாமல் ….!!

 12. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் today.and.me,

  நன்றி என்பதற்கும் மேலாக தமிழில்
  எந்த வார்த்தையை பயன்படுத்துவது
  என்று தெரியவில்லை.

  மிக்க நன்றி today.and.me….!!!

  ————————
  இந்த ‘விமரிசனம்’ வலைத்தளத்தை,
  அதன் தனிதன்மையை
  கட்டிக் காக்கும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
  மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

  ————————

  இந்த வலைத்தளத்தை பிடிக்காத நண்பர்களுக்கு –

  இந்த வலைத்தளம் இப்படித்தான் இருக்கும்.
  தனிப்பட்ட தலைவர் அல்லது கட்சியின் அனுதாபிகளுக்கு
  ( அடிமைகள் என்கிற வார்த்தையை
  நான் பயன்படுத்த விரும்பவில்லை )
  இந்த வலைத்தளம் மகிழ்வைக் கொடுக்காது.
  அவர்களை மகிழ்விக்கும் விதத்தில் செயல்பட
  எங்களால் முடியாது.

  இந்த விமரிசனம் வலைத்தளத்தில் வரும்
  விமரிசனங்களையோ,
  கருத்துக்களையோ,
  ஆணித்தரமான ஆதாரங்களுடன் தொடரும்
  பின்னூட்டங்களையோ –
  பொறுத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு
  நான் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்று தான் –

  ” இந்த தளம் உங்களுக்கானது அல்ல. எனவே,
  உங்களை நாங்கள் வரவேற்கவில்லை -”

  -அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 13. Ganpat சொல்கிறார்:

  இந்த வலைத்தளத்தில் நடந்தவைகள் நடப்பவைகள் மட்டுமே விமரிசிக்கப்படும்.
  “ஆறு மாதம் கழித்து அத்தைக்கு மீசை முளைக்கும்” என்ற ஆரூடங்கள் தேவையில்லை.இப்போதைக்கு அத்தை என்றே அழைப்போம் .மீசை முளைத்தால் நாங்களும் சித்தப்பா என்று அழைப்போம்.அச்சம் வேண்டாம்.கோட் விலையை விட அதன் மேல் நெய்யப்பட்ட சுய விளம்பரம் துணுக்குற வைக்கிறது.ஊழலை எதிர்த்து இன்னும் ஒரு ஆணி கூட புடுங்காதது கவலைப்பட வைக்கிறது.பூசனிக்காய் போன இடம் அறியாமல் கடுகிற்கு கணக்கு பார்ப்பது கடுப்படைய வைக்கிறது.குட்டி சாமிகளை மனம் போல பேச விட்டு குரு சாமி வேடிக்கை பார்ப்பது குமுற வைக்கிறது.சிறிய பிரச்சினைகளை தீர்க்காமல் பெரிய பிரச்சனைகளை உருவாக்குதல் பித்து பிடிக்க வைக்கிறது பார்ப்போமே இன்னும் இரண்டே நாட்கள்..

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத் ஜீ,
   நச்சென்று ஒரே அடி. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்டுல்ல.
   நான் அப்பீட்டு. நீங்கமட்டும்தான் இங்க ரிப்பீட்டு.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    கண்பத் மற்றும் டுடேஅண்ட்மீ,

    நீங்கள் இருவருமே இந்த வலைத்தளத்திற்கு
    கிடைத்த முத்துக்கள். ஒருவருக்கொருவர்
    எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல.
    நீங்கள் இந்த வலைத்தளத்திற்கு கிடைத்ததில்
    நான் பெருமிதம் கொள்கிறேன்…..

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • Ganpat சொல்கிறார்:

     மிக்க நன்றி கா.மை ஜி & today.and.me .
     உண்மை சற்று கசப்பானது..ஆனால் மிக அழகானது.
     இந்த தளத்தில் நாம் பேசுவது விவாதிப்பது அனைத்தும் உண்மையே என்று
     அனைவரும் தெளியும் நாள் அருகாமையில் தான் உள்ளது அன்று அனைவரும் இதன் அழகை ரசிப்பர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.