மோடிஜி சர்க்காரின் ” ஜன கண மன ” ……!!!

modiji on budget tweet-2

மோடிஜி சர்க்காரின் ” ஜன கண மன ” ……!!!

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மோடிஜி சர்க்காரின்
இரண்டு பட்ஜெட்டுகளும் ‘ரிலீஸ்’ ஆகி விட்டன…

எப்படி இருக்கிறது…?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எதிர்ப்பார்ப்பு….
அனைவரின், அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது
யாருக்கும் இயலாத காரியம். ஆனால், குறைந்த பட்ச
எதிர்பார்ப்புகளையாவது….?

“ஓ மஹா பிரபு” என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு
விட்டு, தனது உரையை ஆரம்பித்த ரெயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு,
மக்களின், தொழில் தரப்பினரின்,
உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்புகளை – ஓரளவு நிறைவேற்ற
முயற்சித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் –
அதிக வசதிகள், அதிகரித்த இருக்கைகள், ரெயில்வே
நிலையங்களை இன்னும் பயனுள்ள வகையில் மாற்றி
அமைத்தல், பயனில்லாமல் கிடக்கும் ரெயில்வே நிலங்களை
தனியார் பயன்படுத்திக்கொள்ள திட்டங்கள், தனியார்
பங்களிப்புடன் கூடிய வளர்ச்சித் திட்டங்கள் என்று
பல திட்டங்களை முன்வைத்திருக்கிறார்….

புதிய ரெயில்களை அறிவிக்கவில்லை. அதற்கு முன்னர் –
முதலில் முக்கியமான வழிகளில் இரட்டை வழித்தடங்களை
அமைப்பது அவசரத்தேவை. ரெயில் பெட்டிகளுக்கும் (கோச்),
ரெயில் எஞ்சின்களுக்கும் மிகப்பெரிய தேவை ( டிமாண்ட் )
இருக்கிறது.

பெரிய அளவில் முதலீடு செய்ய, தனியாருடன் கூட்டு சேர்ந்து
புதிய ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளும்,
புதிய எஞ்சின் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் நிறுவப்படுவது
மிக மிக அவசியம்… அவசரம்… இது அதிக அளவில்
வேலை வாய்ப்பையும் உண்டு பண்ணும்.
கொள்கை அளவில் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
சுரேஷ் பிரபு ஒரு யதார்த்தவாதி. எனவே அவரது திட்டங்களை
விரைவாக முன்கொண்டு செல்வார் என்று நம்பி வாழ்த்துவோம்.

மத்திய பொது பட்ஜெட் –

அருண் ஜெட்லி கெட்டிக்காரர் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், அவரது கெட்டிக்காரத்தனம் எதற்கு, யாருக்கு
பயன்படுகிறது என்பதில் தான் விஷயமே அடங்கி இருக்கிறது.

முழுக்க முழுக்க – தொழில் அதிபர்களுக்காகவும்
பெரும் வர்த்தகர்களுக்காகவுமே உருவாக்கப்பட்ட பட்ஜெட்
என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் (concessions ) ,
ஆதரவுகள் (incentives ) – அனைத்தும் அதை நோக்கியே
உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கார்பொரேட் வரி 30 லிருந்து 25 % ஆக குறைப்பு –
சொத்து வரி – அடியோடு நீக்கம் –
( 100 கோடிக்கும் மேல் வருட வருமானம் இருப்பவர்களுக்கு
2 % சர்சார்ஜ் என்பது ஒரு ஏமாற்று வேலை…. )
நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறப்படும் நிறுவனங்களை
உடனடியாக மூடுவதற்கு பல வசதிகளை ஏற்படுத்திக்
கொடுத்திருப்பது …
வாராக்கடன்களை ஒழித்துக்கட்ட சுலபமான முறைகள் …

சாதாரண மக்களுக்கு உதவி என்கிற போர்வையில் –
அந்நிய முதலீட்டை கொண்டு வரும் இன்சூரன்ஸ்
நிறுவனங்களுக்காக – 12 ரூபாய் விபத்து காப்பீடு திட்டம்…
330 ரூபாயில் ஆயுள் இன்சூரன்ஸ் காப்பீடு திட்டம் …
சிறிய தொழில் அதிபர்களுக்காக தனியாக “முத்ரா வங்கி” –

வரத்தக நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும்
உதவியாக இருப்பது என்பது மோடிஜி அரசாங்கத்தின்
கொள்கை என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு விட்டது
என்றே சொல்லலாம்……

இருக்கட்டும் …
ஆனால், மத்திய அரசு முழுக்க முழுக்க வலதுசாரி அரசாக
மாறுவது சாமான்ய மக்களுக்கு பெரும் கேடாக அமைகிறதே…!

கல்விக்கான ஒதுக்கீடு,
சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு ஆகியவை ஏமாற்றம் அளிக்கின்றன.

வெளிநாடுகளில் பதுங்கிய கருப்புப் பணத்தை கொண்டு
வருவதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க – கடுமையான
கருப்புப் பண தடுப்பு மசோதா குறித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது முற்றிலும் தனியான விஷயம்.
உண்மையாகவே இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது தான்
தீர்வு என்று நினைத்திருந்தால், அதற்கு 10 மாதங்கள்
காத்திருந்திருக்க வேண்டாமே … புதிய அரசு பதவியேற்ற
உடனேயே செய்திருக்கலாமே – யார் தடுத்தது …?
இது – விருப்பமின்மை அல்லது தோல்வியை
மறைக்க போடும் வேடம்…!

சில நல்ல திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன
என்பது உண்மையே. ஆனாலும் –

சாதாரண, நடுத்தர மக்களுக்கான திட்டங்கள், எதிர்காலத்தை
பற்றிய நம்பிக்கைகள் – எதையுமே தரத் தவறி விட்டது பட்ஜெட்.
இருப்பதையும் பறித்துக் கொள்வதில் தான் மத்திய அரசு
ஆவலாக இருப்பதாகத் தெரிகிறது. கிடைக்கிற சந்தர்ப்பங்களை
எல்லாம் பயன்படுத்திக் கொண்டு, மான்யங்கள் அனைத்தையும்
ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொள்ளவே முயல்கிறது.

சும்மா மனதில் தோன்றிய பெயரில் எல்லாம் திட்டங்களை
அறிவிக்கிறார்கள்….. கீழே சில மத்திய அரசு திட்டங்களின்
பெயர்களைத் தருகிறேன். அவை அனைத்தையும் பற்றிய
சரியான தகவல்களை தருபவர்களுக்கு பெரிய பரிசு
கொடுக்கலாம்.

பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீமா யோஜனா –
பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா –
அம்ருத் மஹோத்சவ் –
ஸ்வச்ச பாரத் அபியன் –
ஸ்வச்ச பாரத் செஸ் –
ஸ்வச்ச பாரத் கோஷ் –
பிரதான் மந்த்ரி வித்யா லக்ஷ்மி கார்யக்ரம் –
சுகன்யா சம்ரித்தி ஸ்கீம் –
தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌஸல் யோஜனா –
அடல் பென்ஷன் யோஜனா –
ஜன் தன் –
ஜன் கல்யாண் –

எப்படியோ –
கோட்டுப் போட்ட ஸ்ரீமான் நரேந்திர தாமோதர் தாஸ்
மோடிஜியை நம்பி ஓட்டுப் போட்டு,

தனி மெஜாரிடியை –
கொடுத்து விட்டது தேசம்.
அடுத்த நாலேகால் ஆண்டுகளுக்கு வருவதை அனுபவிக்க
வேண்டியது தான்.

“உரலுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டு –
உலக்கைக்கு பயந்தால் முடியுமா … !!!

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to மோடிஜி சர்க்காரின் ” ஜன கண மன ” ……!!!

 1. Killergee சொல்கிறார்:

  கடைசி வரிகள் ஸூப்பர் நண்பரே,,, இனியெனினும் மக் ”கல்” சிந்திக்கட்டும்.

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  பட்ஜெட் வெளியான ஒரு மணி நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வுன்னு அறிவிப்பு எதை உணர்த்துகிறது ஐயா?

  • today.and.me சொல்கிறார்:

   “பட்ஜெட்ல பெட்ரோல் / டீசல் விலையைப் பத்தி நாங்க ஒண்ணுமே சொல்லலையே…..” என்று கூறுவதாக எடுத்துக்கொள்ளவேண்டுமோ?

 3. gopalasamy சொல்கிறார்:

  Again Sonia should come and rule our country. Then only all problems will be solved.

  • Ganpat சொல்கிறார்:

   கவலையே வேண்டாம் gopalasamy ji..2019 லிருந்து இதுதான் நமக்கு அமையும்.இதற்கான திட்டங்கள் செயல்முறைகள் தயார்.BJP and Congress would become selfless and work for each other.

 4. taru சொல்கிறார்:

  Liked the comment from Arundati Roy on budget: “Those who made the budget should increase their security cover as leather shoes has been made cheaper”

 5. taru சொல்கிறார்:

  Not surprised. People defeated jaitley in loksaba. Corporates helped him to get into cabinet via backdoor. He has rewarded the right masters and avenged people

 6. taru சொல்கிறார்:

  Today is a prime example of how Indian media is sold out to corporate and government. Today is spectacular example of Indian media’s disgusting bias against the common. The length to which they to try to give a positive hue to budget is telling tale of the media controlled by ambani, adani, mahindra, and the like.
  None of the media questioned the hypocrisy of BJP’s pre-electoral promise and pro-middle class rhetoric, versus the pro-rich incentives filled budget.
  In his chai pae charcha, March 13, modiji said ” The life of the common man had become all about paying taxes since his birth to death, listing out numerous taxes levied on using road to house, service, electricity, water besides income tax.

  “Whatever a man earns through his hard work, he can finally keep only a small fraction of it and the rest goes out… There is a dire need to simplify the tax regime, to rationalise it,”

  He added that he would make all effort to provide an incentive of 5 to 10% to all those with monthly salary that honestly pay income tax, that will be funded by black money stashed abroad. Rajnath Singh, Nitin Gadkari, and Arun Jaitley who were along the BJP candidate supported Modi’s view.

  Now who got the incentive? Ofcourse Tata and Ambani with 25% corporate tax incentive. What happened to the Modi’s favorite common honest income tax paying man that is paying taxes from birth till death?
  Well… The BJP budget gifted the common man the additional burden of paying more service tax othat is increased to 14%.
  What a truly achche din!

  While the media’s shameless cacophony is out in the open, the common man is busy watching the cricket reckless and careless about how they are played by politics and media. And they truly deserve this!
  And they will not be ashamed. That sense is reserved for the moments of cricket losses and their favorite hero’s divorces.

  • Siva சொல்கிறார்:

   Friend,
   The Indian media have lost its ETHICS a long back! Particularly, English media are worst. This is a cancer for Indian people! Most of the young generation’s mind and thinking abilities are poisoned slowly by these corrupted media!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நாம்
   பார்த்த தலைவர்களா இவர்கள்…..?
   அப்போது மோடிஜி பேரணி ஒவ்வொன்றிலும் பேசிய
   பேச்சுக்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள்….

   ஓட்டு வாங்கி பதவியைப் பிடித்ததும் முற்றிலும்
   மாறிப் போய் விட்டார்கள்….
   சொன்னது எல்லாம் மறந்து விட்டது ….

   மண்டை பூராவும் கிலோ கணக்கில் /மன்னிக்கவும்
   டன் கணக்கில் கனம்.
   கால்கள் தரையிலேயே இல்லை.
   எல்லாவற்றிலும் நமக்கு புத்தி சொல்லும் தகுதி
   அவர்களுக்கு இப்போது வந்து விட்டது.
   அவர்கள் எதைச் செய்தாலும், அதற்கேற்றாப்போல் எதாவது
   காரணம் சொல்லி நம் வாயை அடைப்பதில்
   சாமர்த்தியசாலிகள் ஆகி விட்டார்கள்.

   ம.மோ.சிங் காலத்தில் கூட்டணி கட்டாயம் இருப்பதால் –
   அரசாங்கம் திறமையாகச் செயல்படவில்லை –
   எனவே அடுத்த முறையாவது தனிக்கட்சிக்கு மெஜாரிடி
   கொடுத்தால், திறம்பட ஆட்சி செய்வார்கள் என்று
   ” சில மக்கள் ” கருதினார்கள். அதனாலேயே பாஜக
   தனி மெஜாரிடி பெற முடிந்தது.

   பாஜக வுக்கு தனி மெஜாரிடி கொடுத்தது தான்
   மிகப்பெரிய தவறு என்பது இப்போது நன்றாகவே புரிகிறது.
   கூட்டணி ஆட்சியாக இருந்திருந்தால், கொஞ்சமாவது
   கட்டுப்படுத்த முடிந்திருக்கும்… இப்போது –
   ” தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால் –
   தம்பி சண்டப்பிரசண்டன்” என்பது போல்
   தலைக்கனம் பிடித்து அலைகிறார்கள்…..!!!

   அவர்களை கட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலை ஒன்று
   உருவாக வேண்டும் – அல்லது- உருவாக்கப்பட வேண்டும்.
   இல்லையேல், அடுத்த 4 ஆண்டுக்குள் – நிச்சயமாக,
   ஆட்சி அம்பானிகள், அடானிகள் கைக்குப் போய்விடும்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    ஜி,
    //அப்போது மோடிஜி பேரணி ஒவ்வொன்றிலும் பேசிய
    பேச்சுக்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள்……//

    இப்போதும் இப்படித்தான். ரேடியோ உரைகள், சுதந்திர தின உரைகள், குடியரசுதின உரைகள், தொலைக்காட்சி உரைகள், மனதோடு பேசுகிறேன், மத சார்பின்மை பற்றிய உரைகள் எல்லாமே இப்படித்தான்.

    நாட்டு நடப்புக்கும், அவரது ஆட்சி இந்த நாட்டை நடப்பிக்கும் முறைக்கும், மக்கள் படும் அவதிக்கும், கார்ப்பரேட்களின் சந்தோஷத்திற்கும்
    எந்தவித சம்பந்தமுமே இல்லாமல்………..
    உப்புச் சப்பில்லாமல்……….
    ஆனால் காரம் மட்டும் சற்றுத்தூக்கலாக………
    வீர உரையாக இருக்கிறது.
    உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்னும் தமிழ்ப் பழமொழியை யாராவது அவருக்குச் சொன்னால் தேவலை.

    உணர்ச்சிப் பூர்வமாக நடிப்பதை எலக்ஷனுக்கு முன்பு பார்த்திருக்கிறீர்கள்.
    இப்போது……………
    வாங்கிய காசுக்கு மட்டும் நடித்தால் Acting. அதற்குமேலும் நடித்தால் Over-acting. அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள்.

    • today.and.me சொல்கிறார்:

     http://www.twitter.com/ Narendra Modi @narendramodi · Feb 27
     // FM @arunjaitley must be congratulated for this pro-poor, pro-growth, pro-middle class, pro-youth & paradigm shifting Budget. //

     வழக்கம்போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மொழியே தெரியாததுபோலவும் அல்லது தெரிந்துகொண்டே இப்படித்தான் இருக்கிறது என்று சாதிப்பதுபோலவும் ஒரு வீர உரை-அறிவிப்பு

     it sucks.
     :-(((

   • புது வசந்தம் சொல்கிறார்:

    “ஆசை வெட்கம் அறியாது”… மேடை பேச்சு பதவிக்காக. அப்போது பேசும் போது குழி தோண்டியது நமக்கு தெரியவில்லை. எழுந்து வருவோம்.
    Dr. KVS. Habeeb Mohamed, “மானுட வசந்தம்” என்ற நிகழ்ச்சியில் “மனிதனின் தவறுகளுக்கு என்ன காரணம் ?” என்ற கேள்விக்கு பதிலாக உரைத்தது நினைவில் உள்ளது “மனிதன் தற்போது எதற்காகவும் வெட்கப்படுவதில்லை” என்றார்.

 7. Ganpat சொல்கிறார்:

  இரண்டு பேராபத்துக்கள் நம்மை எதிர்நோக்கி இருக்கின்றன. தப்பிப்பது கடினம்.

  ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட பின்பற்றவேண்டிய சரியான முறை. எழை எளிய மக்களுக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி அவர்களுக்கு கல்வி,சுகாதாரம்,நீதி ஆகியவை தடையின்றி கிடைக்க ஆவன செய்து அதன் மூலம் அவர்கள் ஆதரவைப்பெற்று ஓட்டுக்களையும் பெற்று வெற்றி பெறுதல்.

  இந்த முறை 1970க்குப்பிறகு இந்திரா,கருணா போன்றோர்களால் மாற்றப்பட்டது.
  இந்த முறையில்.முழுக்க முழுக்க – தொழில் அதிபர்களுக்கும்
  பெரும் வர்த்தகர்களுக்கும் நிறைய நல்லது செய்யவேண்டும் இதற்கு அவர்களிடமிருந்து அதிக பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்ஏழை எளிய மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்பட கூடாது..தேர்தல் சமயத்தில் இம்மாதிரி கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை எளியவர்களுக்கு கொடுத்து ஓட்டுக்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.

  இனி மோடி அரசும் இந்த இரண்டாவது முறையைத்தான் பின்பற்றும் பேராபத்து உள்ளது.

  அதே போல இரண்டு கட்சி ஆட்சி! இதற்கு உதாரணம் நம் மாநிலம்.தி.மு.க /அ.தி மு க ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களை விரோதி போல வெளிகாட்டிக்கொண்டு மாறி மாறி ஆட்சி புரிந்து கொள்ளை அடிக்க வேண்டியது.இதில் மூன்றாவது கட்சி நுழை வது மிகவும் கடினம்
  மைய அரசிலும் இத்தகைய ஒரு நிலை பிஜேபி & காங் இடையில் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.இரு கட்சிகளும் அது பல வகையில் நல்லது.

  கடவுள் காப்பாற்றுவாராக !!

  இதற்கு சம்பந்தமுள்ள ஒரு விஷயம்.

  போன முறை சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபொழுது தனிநபரின் குறைந்த பட்ச வருமான வரி விலக்கை ரூ.ஐந்து லட்சமாக உயர்த்தியிருக்க வேண்டும் என்று மேடை மேடையாக ஏறி விமரிசனம் செய்தவர் இந்த ஜெய்ட்லி.இன்று அவர் அதை ஒரு ரூபா கூட உயர்த்தவில்லை..

  இதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயம்

  நான் ஒரு வலைத்தளத்தில் படித்த சமையற்குறிப்பை செய்து பார்க்க விரும்பி,தேவையான காய்கறிகளை குக்கரில் வைத்து வேக வைக்க ஆரம்பித்தேன். ஒரே நிமிடத்தில் …..
  “தீய்ந்த வாசனை வருது.அடுப்பை அணைங்க!”
  என்று சொல்லிக் கொண்டே,ஓடி வந்தாள் மனைவி.
  “ஐயோ அந்த குறிப்புப்படி குக்கரை ஐந்து நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கு?” என்றேன் நான்
  “போதும் நீங்களும் ஒங்க சமையல் அறிவும்!.எல்லாம் ஒழுங்கா இருந்தாதான் ஐந்து நிமிடம்! ஒரே நிமிஷத்தில் தீயற ஒன்னை அஞ்சு நிமிஷம் வச்சா அவ்வளவுதான் !”

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத் ஜி,

   சம்பந்தம் இல்லாத விஷயத்தை சம்பந்தப்படுத்திவிடலாமா?
   🙂
   அதனால்தான் முன்னாள் நிதியமைச்சர் சொன்னார், “இவருக்கு இருக்கிற பைனான்சியல் அறிவை ஒரு ஸ்டாம்ப்புக்குப் பின்னால் எழுதிவிடலாம்”.

   ஜெனரல் பட்ஜெட்டுக்குப் பிறகு ரொம்பத் தீயற வாசனை வருது….

 8. S.Selvarajan சொல்கிறார்:

  பெட்ரோல் — டீசல் மீதான கலால் வரியால் கஜானா நிரம்புகிறது —- மக்களுக்கு விலையை குறைக்கிற மாதிரி குறைத்து மீண்டும் ஏற்றிவிட்ட மோடி ஆட்சி வாழ்க — வாழ்கவே ? பட்ஜெட் வரும் முன்னே … விலையேற்றம் வரும் பின்னே … என்பதைப்போல இருக்கிறது இந்த சூப்பர் நாடகம் ! இந்த பட்ஜெட்டை பாராட்டும் எல்லோருக்கும் உணவு பொருட்கள் –பெட்ரோல்– டீசல் — சிமெண்ட் போன்ற அன்றாட உபயோக பொருள்களின் விலை உயர்வு எல்லாம் கண்ணுக்கு தெரியாது போல இருக்கு ? சூப்பர் ஜால்ராக்கள் !!
  வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வெளிநாட்டுச் சொத்துகளை முழுமையாக வெளியிடாமல் வரிக்கணக்குத் தாக்கல் செய்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்படும்…! செய்யப்படுமா ? செய்ய இவர்களால் முடியுமா ? அப்படி செய்தால் இருக்கின்ற அரசியல்வாதிகளும் — பெரு முதலாளிகளும் —எம்.பி.க்களில் முக்கால்வாசிக்கும் மேல் மாட்டுவார்கள் — என்பதே உண்மை !!! அதனால் இது வெறும் ” பாவ்லா ” தான் ….!!! திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது …. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது ? என்பதைப்போல கருப்புப்பணத்தை தடுக்க புதிய சட்டம் இவர் போட்டு தடுத்து விடுவார் என்று நம்புவோமாக ! 12 ரூபாய் காப்பீட்டு திட்டம் என்பது முன்பு ஜனதா காப்பீட்டுத் திட்டம் என்று ஒன்று இருந்ததே அதைப்போல தானே ! என்னமோ புதுசா கண்டு பிடித்த மாதிரி !! ஜன கண மன ….. ! என்று யாருக்கு பாட வேண்டும் …. ?

  • Sharron சொல்கிறார்:

   Crude oil price has gone up a bit.So the petrol price has increased.[ If the crude oil price comes down ,they don’t bother to bring the petrol price down OR they put the credit on MODI to cheat the people]
   I think JEYALALITHA is the only political criminal in India. Rest of the politicians are all ANGELS born to help the poor citizens.
   Very hard to change our politicians.They are all filthy, hopeless,self centred politicians.Poor citizens can’t expect anything good from them.All the parties in the state & centre are same.Politicians are all rich.So they are supporting only rich people.

 9. visujjm சொல்கிறார்:

  பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீமா யோஜனா –
  பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா –
  அம்ருத் மஹோத்சவ் –
  ஸ்வச்ச பாரத் அபியன் –
  ஸ்வச்ச பாரத் செஸ் –
  ஸ்வச்ச பாரத் கோஷ் –
  பிரதான் மந்த்ரி வித்யா லக்ஷ்மி கார்யக்ரம் –
  சுகன்யா சம்ரித்தி ஸ்கீம் –
  தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கௌஸல் யோஜனா –
  அடல் பென்ஷன் யோஜனா –
  ஜன் தன் –
  ஜன் கல்யாண் –

  கோட்டுப் போட்ட ஸ்ரீமான் நரேந்திர தாமோதர் தாஸ்
  மோடிஜியை நம்பி ஓட்டுப் போட்டு, 
  தனி மெஜாரிட்டிக்கு ~ Filthy India Photos, Chinese Netizen Reactions ~ chinaSMACK வலைத்தளம் ஒன்று போதும் அனைத்துக்கும் அதி அற்புதமான விளக்கங்கள்…

  ஜெய்ஹிந்த்

 10. today.and.me சொல்கிறார்:

  மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கை உரையைப் படிக்கத் தொடங்கிய 15-ஆவது நிமிடத்திலேயே ‘பயணிகள் கட்டண உயர்வு இல்லை’ என்பதை அறிவித்து, அனைவரது மன அழுத்தங்களையும் குறைத்துவிட்டார். அடுத்து, புதிய ரயில்கள் ஆய்வுகள் முடிந்தபிறகே அறிவிக்கப்படும் என்று அவர் சொல்லிவிட்டதால்

  //“ஓ மஹா பிரபு” //
  ஆய்வுகள் முடிந்தபிறகு இடைக்கால பட்ஜெட் என்று மக்கள் தலையில் துண்டுபோடாமல் இருக்க வேண்டுகிறோம்.

  ——————–
  //அவை அனைத்தையும் பற்றிய சரியான தகவல்களை தருபவர்களுக்கு பெரிய பரிசு கொடுக்கலாம்.//
  பரிசு வேண்டாமென்றாலும் பரவாயில்லை, யாராவது-உண்மையிலேயே விவரம் தெரிந்த-பாஜக அரசு மக்களுக்கு நன்மைதான் செய்கிறது என்று இன்னமும் நம்புகிறவர்கள்-கொஞ்சம் இத்திட்டங்களைப் பற்றி விளக்குங்களேன்.
  ——————–
  அடுத்த உயர்வு தொடர்கிறது.

  மானியமில்லாமலேயே கேஸ் சிலிண்டர் வாங்க காசிருக்குதுன்னா, கூட ஒரு ஐந்து ரூபாய் கொடுப்பதினால் என்ன குறைந்துவிடப்போகிறீர்கள்? ஆனால் பெட்ரோலியம் துறை-சிலிண்டர் விற்பவர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ஐந்துரூபாய் என்றால் மொத்தத்தில் எத்தனை கோடிரூபாய் கிடைக்கும்? யாராவது கணக்குப் பார்த்துச் சொல்லுங்கள். நான் கணக்கில் கொஞ்சம் வீக்.
  ……………..
  //தங்களது வீடுகளில் புலிகளையும், சிங்கங்களையும் செல்லப் பிராணிகளாக வளர்த்துக் கொள்ள சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய பிரதேச மாநில கால்நடை வளர்ப்பு, வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தும் துறைக்கான பெண் அமைச்சர் கசும் மெஹ்டேல் கோரிக்கை விடுத்துள்ளார்.//

  எப்படி? கூண்டுகளில் அடைத்து வளர்ப்பார்களா? அல்லது திறந்தவெளிகளில் சுதந்திரமாக அவற்றை மிருகவதைச் சட்டத்துக்கு உட்படாமல் (மனிதர்களுக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை என்று) வளர்ப்பார்களா?

  ஜல்லிக்கட்டுக்கு வாய்திறந்த மேனகா அம்மையார் இதற்கும் கொஞ்சம் திறந்தால் பரவாயில்லை.
  ……………….

 11. drkgp சொல்கிறார்:

  Ganpath’s narrative of our political scene is fine.

 12. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  தினமணி வைத்தியநாதனின் கருத்து வேறு விதமாக உள்ளதே ..
  http://www.dinamani.com/editorial/2015/03/02/
  http://www.dinamani.com/editorial/2015/03/03/

  • today.and.me சொல்கிறார்:

   கிரி ஜி,
   மீடியாக்களின் பசியை, ஆளும் மத்திய அரசாங்கம் சரிவர ஆற்றிவிடுவதால் அவர்கள் குரைக்க வேண்டிய அவசியமில்லை. ஓவர் சாப்பாட்டினால் செரிமானக் கோளாறு ஆனால்தான் உண்டு.

   மக்களுக்கு அவர்கள் எதையாவது எடுத்துச்சொல்லவேண்டிய தேவை என்னத்துக்கு?

   நீங்கள் குறிப்பிட்டுள்ள வைத்தியநாதனின் கருத்துக்குக் கீழே உள்ள மக்கள் கருத்தையும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பரே,

  அவர்கள் வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறார்கள்….
  அவர்களுக்கான தேவைகளும் நியாயங்களும் வேறு….!

  நாம் வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறோம்….
  நமக்கான தேவைகள் வேறு …
  கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 14. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  அண்மையில், எதற்காகவோ பா.ச.க பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் அறிமுகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள், இது வலசாரிக் கட்சி என. அந்தப் பக்கத்தில் கட்சி பற்றிய பெட்டிச் செய்தியிலும் கட்சியின் கொள்கை அதுதான் எனத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக, அவர்கள் அவர்களைப் போலத்தான் செயல்பட்டிருக்கிறார்கள்; நம்முடைய எதிர்பார்ப்புதான். தவறு. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்கிற விதத்தில்தான் பா.ச.க-வை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்காக இலுப்பைப்பூ இனிக்கத் தொடங்கிவிடுமா என்ன?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.