மோடிஜி + முப்டிஜி = ??????????? !!!!!!!!

 

 காஷ்மீரில் முதல் இந்து முதலமைச்சர் ….!!!

bajaka muthalamaichar-1

 பாஜக எப்படி காஷ்மீரில் கால் வைக்கிறது பார்ப்போமே …!

???????????????????????

 தொலைத்து விடுவோம் – தொலைத்து …!!!

ulley yeppadi varuvargal paarthu viduvome-3

 நமக்குள் ஒத்துப்போனால் போதும் –மக்கள் கிடக்கிறார்கள் ….அடிமைகள்…!!!

makkal kidakkirargal-4

 மோடிஜி – யாரோ துரியோதனன் இப்படித்தான் அணைப்பாராமே …!!!

makkalukkaaga yethuvum seivome-5

வேலை முடிஞ்சுது …

இனி உங்களுக்கு வேண்டியதை நீங்க எடுத்துக்குங்க….

எங்களுக்கு வேண்டியதை நாங்க பாத்துக்கறோம்…!!!

ambuduthen -6

தேர்தலுக்கு முன்னர் மூர்க்கமாக ஒன்றையொன்று
தாக்கிக் கொண்ட இரண்டு பிரதான கட்சிகள்,
தேர்தலுக்குப் பின்னர், மெஜாரிடி கிடைக்காத காரணத்தால்,
பதவியை கூறு போட்டுக்கொள்ள என்கிற ஒரே காரணத்திற்காக
மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைப்பதை
என்னவென்று கூறுவது…..?

ராஜதந்திரம் – என்று அவர்கள் கூறிக்கொள்வார்கள்…..!!!
“வெட்கங்கெட்ட சுயநலவாத கும்பல் ”
என்று தான் நாம் கூறுவோம்….!!!

மோடிஜி அவர்களும் முப்டி முகம்மது சயீது அவர்களும் ஒன்று சேர்ந்து ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது எதைக்குறிக்கிறது….?

பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர
வேறு எந்தவித பொது நோக்கமும் அவர்களிடையே
கிடையாது.

ஆனால், காஷ்மீர் மக்கள் இதை ஏற்பார்களா
என்று யாருக்காவது சந்தேகம் வருகிறதா …?

இதிலென்ன சந்தேகம். ஓட்டுப் போடும் மக்களில்
பெரும்பாலானோர் –
அரசியல்வாதிகளின்,
அரசியல் கட்சிகளின் – அடிமைகள்.
அடிமைகளுக்கு ஏது சொந்த புத்தி …?
அவர்களது தலைவர்கள் எப்போது, எப்படிப் பேசினாலும்
அந்த அடிமைகள் அதை, அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்….

தேர்தலுக்கு முன் அப்படிச் சொன்னீர்களே ….
இப்போது இப்படிச் சொல்கிறீர்களே ….
என்றெல்லாம் அடிமை மக்கள் என்றும் கேட்க மாட்டார்கள்……

தப்பித்தவறி மீடியாக்கள் எதாவது கேட்டால் …..?

கேட்டுத்தான் பார்க்கட்டுமே –
இருக்கவே இருக்கின்றன
ரெடிமேட் பதில்கள்…..

அரசியல் சட்டம் 370-வது பிரிவு குறித்து ….?

அது இருக்கிற இடத்திலேயே இருந்து விட்டுப் போகட்டுமே…
கூட்டணியில் இருக்கும் வரை எங்களுக்கு
370-வது பிரிவு மட்டுமல்ல –
அரசியல் சட்டமே நினைவிற்கு வராது….!!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு
அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டம் தொடர
வேண்டும் என்பது குறித்து …. ?

இந்த சட்டம் தொடரலாமா வேண்டாமா என்று
கூட்டணியில் இருக்கும் வரை யோசித்துக் கொண்டே
இருப்போம்….!!

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்
என்று முப்டி அவர்கள் வலியுறுத்துவது குறித்து …?

ஓ – இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன்
நட்புறவையே விரும்புகிறது.
ஏற்கெனவே வெளியுறவுத்துறை
செயலர் ஜெயசங்கரை
பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டோமே…!

ஹுரியத் பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை
நடத்த வேண்டும் என்று முப்டி வற்புறுத்துவது பற்றி …?

பாஜக வைப் பொறுத்த வரை அவர்கள் தேசியவாதிகள்.
நாங்கள் பாரதத்தை எங்கள் தேசம் என்று நினைக்கிறோம்.
அவர்கள் காஷ்மீரை மட்டும் அவர்கள் தேசமாக
நினைக்கிறார்கள். ஆக, அவர்களும் தேசியவாதிகளே…
தேசியவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில்
எங்களுக்கு எந்தவித சங்கடமும் இல்லை…!!

பாஜக வுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லையே … ?

அதனாலென்ன – முதலமைச்சரையே நாங்கள் தானே
தேர்ந்தெடுத்திருக்கிறோம்….!!!

முக்கிய இலாகாக்களை பெறுவது குறித்து …. ?

முப்டி சாஹபிடம் எல்லாம் பேசி விட்டோமே.
உள்துறை, நிதி, பொது நிர்வாகம், PWD , போன்ற
இலாகாக்கள் மட்டும் அவர்களிடம் இருக்கும். மீதி
முக்கியமான இலாகாக்களில் எதை வேண்டுமானாலும்
நாங்கள் எடுத்துக் கொள்ளலாம்….

பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்துள்ள இந்து அகதிகளுக்கு
குடியுரிமை கொடுப்பது பற்றி –

குடியுரிமைக்கு இப்போதென்ன அவசரம்…?
முதலில் தங்க இடம் கொடுப்போம். உணவு கொடுப்போம்.
அவர்கள் 5-6 ஆண்டுகள் இளைப்பாறட்டும்.
பிறகு முப்டி சாஹிப் என்ன சொல்கிறார் பார்ப்போமே…..

பின் குறிப்பு –

பாகிஸ்தானும், தீவிரவாதிகளும்
போனால் போகிறது என்று அனுமதித்ததால் தான்
ஜம்மு காஷ்மீரில் தேர்தலே நடத்த முடிந்தது
என்று கூறுபவர் தான் இன்று காஷ்மீரின் முதலமைச்சர்.

இதை முதல் ஆளாக முன்வந்து கண்டிக்க வேண்டிய
உள்துறை அமைச்சர், இது முப்டியின் தனிக் கருத்து
என்று சாவதானமாக வக்காலத்து வாங்குகிறார் –

நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமான,
இந்த சுயநலவாதிகளின் வினோத கூட்டணி –
அற்பாயுசில் நாசமாய்ப் போகட்டும்
என்று மனம் நிறைய வாழ்த்துவோம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to மோடிஜி + முப்டிஜி = ??????????? !!!!!!!!

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  பேஷ், பேஷ், ரொம்ப நல்லாஇருக்கு…

 2. today.and.me சொல்கிறார்:

  //நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமான,
  இந்த சுயநலவாதிகளின் வினோத கூட்டணி –
  அற்பாயுசில் நாசமாய்ப் போகட்டும்
  என்று மனம் நிறைய வாழ்த்துவோம்…!!!//

  तथास्तु
  so let it be
  آمين

 3. Ganpat சொல்கிறார்:

  அமைதி! அமைதி!!என்ன ஸார்! இப்போவே அத்தனை சக்தியையும் விரயம் செய்துட்டா, அப்றம் 2019இல் மோடி பிரதமர் ராகுல் துணை பிரதமர் என்று ஆகும் போது என்ன செய்வீங்க?

  • தெனாலி சொல்கிறார்:

   சக்தி விரயமானாலும் சோர்ந்து விடாமல் தமிழக எழுச்சி நாயகன் சேலம் சிவராஜ் சிவக்குமாரிடம் டீரீட்மென்ட் எடுத்து எழுச்சி மற்றும் சக்தியோடு வந்து போட்டுத் தாக்குவோம்,விட்டு விட மாட்டோம் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்!

 4. S.Selvarajan சொல்கிறார்:

  தங்களுக்கு மாபெரும் மோடி அலை வீசும் என்கிற எண்ணத்தில் தேர்தலில் கூட்டணி வைக்காமல் — தேர்தலுக்கு பின் நிலைமைக்கு தக்கவாறு கூட்டு மந்திரிசபையில் இணைந்து கட்டிபிடித்து கொள்வது என்பது பா.ஜ.க.வின் பிழைப்பாகி போய்விட்டது ! முன்பு மகாராஷ்ட்ராவில் — இப்போது காஷ்மீரில் ? பின் வாசலில் நுழைவது ஈசியாகி விட்டது அவர்களுக்கு !! மேலும் இந்தியா முழுக்க சாம்ராஜ்ய விரிவாக்கம் வேண்டும் என்பதால் பெருபாலான மாநிலங்களிலும் நாங்களும் மந்திரி சபையில் உள்ளோம் என்று காட்டி மக்களை அடிமைகளாக வைத்துக்கொள்ள ஒரு குறுக்கு வழி … !!! நமோ வேண்டுவது எல்லாம் எந்த தேர்தலிலும் ” ஒரு இழு-பறி நிலைமை ” இருந்தால் நல்லது — என்பதை தான் —- நீடிக்குமா இந்த நப்பாசை ?

 5. ரிஷி சொல்கிறார்:

  சரிதான் 🙂 🙂

 6. taru சொல்கிறார்:

  Kaviri,

  There is another perspective.
  I think modiji has put ‘India first’ and took this decision, so we can keep Pakistan away from influencing the locals more.
  We should appreciate

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே,

   நீங்கள் சொல்வது மாதிரிக் கூ……..ட இருக்கலாம்……..தான்.
   அது நேற்றுவரை.

   ஆனால் இன்றைக்கு, காஷ்மீரில் அமைதியான தேர்தல் நடைபெற பாகிஸ்தான் நாட்டு ராணுவமே காரணம்என்று கூறியிருக்கிறார் முப்திஜி.
   இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று பாஜக தலைவர் கூறியிருக்கிறாரே. இதை இதுமாதிரி எடுத்துக்கொண்டு-We should appreciate?

 7. Ganpat சொல்கிறார்:

  இது என்ன கலாட்டா? 🙂
  http://www.dinamalar.com/news_detail.asp?id=1196603

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்ஜி,

   விளம்பர மோகம்….
   அடக்க முடியவில்லை….
   அவ்வப்போது எதாவது ஒரு ரூபத்தில்
   வெளிப்பட்டுக் கொண்டே தானிருக்கும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   பல இடங்களிலுமிருந்து தீய்ந்த வாசனை வருவதால் அதை மற்றவர்கள் நுகர்ந்து, அது எங்கே இருந்து வருகிறது என்பதை அடையாளம் கண்டுவிடாமல் இருக்க,

   துவைக்காத சாக்ஸ் நாற்றத்தை மறைக்க, சாக்ஸை துவைப்பதை விட்டு விட்டு, ரூமுக்கே ”Room sprayer’ அடிப்பதில்லையா? அதுபோலத்தான்.

 8. gopalasamy சொல்கிறார்:

  Jammu region selected BJP. Kashmir region selected PDP. What is the solution? Kashmir should be divided into three. OR otherwise, Secular parties like PDP, NC, INC should form a goverment , based on secular principles. I think, Hindu BJP and secular PDP can not go together for long time.

 9. manavaijames சொல்கிறார்:

  அன்புள்ள அய்யா,

  தங்களது முயற்சிக்கு எனது பாராட்டும் வாழ்த்தும்…! மோடிஜி + முப்டிஜி காஷ்மீரில்… நன்றாக அலசியிருக்கிறீர்கள்!
  நன்றி.

 10. gopalasamy சொல்கிறார்:

  There is one article in VINAVU about Mufti and Modi. (konnuttenka bhai) . If you publish it, readers can enjoy it. Iam happy to see Sri KM ji and VINAVU can meet at one point.

  • today.and.me சொல்கிறார்:

   கோபால்சாமி ஜி,

   ‘வினவு’ தளம், பாஜக என்று இல்லை எல்லோரையுமே, வினாவுவார்கள், குட்டுவார்கள். குட்டுவது என்றால் சாதாகுட்டு எல்லாம் இல்லை, கொஞ்சம் ஓங்கி வலிக்கிறமாதிரித்தான் குட்டுவார்கள். பாராட்டு என்பது பெரும்பாலும் அங்கே இருக்காது. I kind of satirical way to direct political parities.

   இங்கே அப்படி இல்லை,
   //இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
   நல்லதைப் பாராட்ட வேண்டும்.
   கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
   (இன்றில்லா விட்டாலும் நாளையாவது
   மாறுமல்லவா ? )
   அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
   ஆபாசமின்றி எழுத வேண்டும்.//

   என்பதை இன்னும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை .
   வினவுதல் என்பது வேறு, விமரிசித்தல் என்பது வேறு.

   🙂

   //, readers can enjoy it.//
   இங்கே வருகிற பார்வையாளர்கள் பாஜக வை மட்டுமே எதிர்க்கிறவர்கள் என்று மீண்டும தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கண்ணில் படும் தவறுகளை எதிர்க்கவிரும்புபவர்கள் என்பதுதான் பொருந்தும்.

   வினவு-வும் விமரிசனமும் cannot meet at any point என்பது என் கருத்து.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் டுடேஅண்ட்மீ,

    நண்பர் கோபால்சாமியும் சரி, வேறு சில நண்பர்களும் சரி –
    நீண்ட காலமாக இந்த வலைத்தளத்திற்கு வருகை தந்து,
    அவ்வப்போது பாராட்டி, பின்னூட்டங்களும் போட்டுக்கொண்டு
    இருந்தவர்கள் தான்.

    ஆனால், இப்போது மோடிஜி பாசம் அவர்கள் கண்களை
    மறைக்கிறது. கடந்த 2-3 மாதங்களாக, நாம் மோடிஜியை /பாஜக வை
    குறை கூற ஆரம்பித்ததும், அவர்களுக்கு இந்த வலைத்தளம்
    வேறு மாதிரி தோன்றுகிறது….

    வினவு தளம் போல் இன்னும் சில தளங்களும்
    இருக்கின்றன. அவர்கள், குறிப்பிட்ட அரசியல் கொள்கைகளை
    சார்ந்து இயங்குபவர்கள். கோபால்சாமி அவர்கள் அங்கு போய்
    விவாதம் செய்ய முடியுமா …?

    இந்த ‘விமரிசனம்’ தளம் ஒரு திறந்த விவாத மேடை.
    இங்கு எழுதப்படுவதை யாரும் ஆதரித்தோ, மறுத்தோ –
    தகுந்த காரணங்களுடன், ஆதாரங்களுடன் எழுதலாம்.
    நான் மேலே சொன்னது போல் கோபால்சாமி நண்பர்களின்
    கண்களை மோடிஜி பாசம் மறைக்கிறது….

    இதற்கு மேல் நாமென்ன சொல்வது …..?

    நாம் எப்போதும் போல் –

    ” நல்லதைப் பாராட்ட வேண்டும்.
    கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
    (இன்றில்லா விட்டாலும் நாளையாவது
    மாறுமல்லவா ? )
    அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
    ஆபாசமின்றி எழுத வேண்டும்.”

    -என்று இயன்ற வரை பயணித்துக் கொண்டே இருப்போம்.

    மாறியது நாமல்ல …. அவர்கள் தான் – என்பதை
    நண்பர் கோபால்சாமியும், மற்றவர்களும் என்றாவது ஒரு நாள்
    உணர்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…!!!

    – வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 11. gopalasamy சொல்கிறார்:

  Any elected government can work within a small set of frame. This is my understanding about functioning of the governments in demcracy like india. So, i did not change anyway.
  I accept one thing. A decent arguement is not possible in so many blogs. So many people will be ready to humiliate, terrorize and attach intentions. My respect to Sri KMji will always be there.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.