சுவாமி சிங்கமும், மோடி சிங்கமும் மோதுமா ….?

.

இரண்டு சிங்கங்கள் என்று பெருமையாகத் தலைப்பிட்டு, தனது
வலைத்தளத்தில் 3-4 நாட்களுக்கு முன்னர் இந்த புகைப்படத்தை
பிரசுரித்திருந்தார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்த தினத்தை
முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியொன்றில், இன்னாள் பிரதமர்
நரேந்திர மோடிஜி, மற்ற தலைவர்களுடன், சுப்ரமணியன் சுவாமியும் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது ……

swamy -modiji.jpg-2

swamy -modiji

இங்கு சில விஷயங்களை முதலில் பதிவிட விரும்புகிறேன் –

மே, 2014-ல் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பாஜக வுக்கு சாதகமாக வெளிவந்தவுடனேயே, சுப்ரமணியன் சுவாமியும் மோடிஜியின் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
தான் அமைச்சர் ஆவோம் என்றே சுவாமியும் மிகவும் ஆவலுடன்
எதிர்பார்த்திருந்தார்.
( நிதி அல்லது உள்துறை -அவரது சாய்ஸ்….! )

ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை.
அதற்கான காரணம் – அவருக்கும் மோடிஜிக்கும் மட்டுமே தெரியும்…!

ஆனால், அப்போதிலிருந்தே, லேசாக, மத்திய அரசின்
செயல்பாடுகளை அவர் குறைகூற ஆரம்பித்து விட்டார்.
அவரது குறைகள் பெரும்பாலும், நிதி மற்றும் உள்துறை
அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்ததாகவே இருந்தது.
ஆனால், எந்த நேரத்திலும், மோடிஜியை நேரடியாக
குறைகூறுவதை அவர் தவிர்த்தே வந்திருக்கிறார்.

மே, 2014 தொடங்கி – தொடர்ச்சியாக சுப்ரமணியன் சுவாமி அவர்கள்
வெளிப்படையாகக் கூறிய, நம் தலைப்புடன் தொடர்பு கொண்ட –
சில கருத்துக்களை கீழே தொகுத்திருக்கிறேன்….

மே 20, 2014 அன்று அளித்த பத்திரிகைப் பேட்டியிலிருந்து –

“நாங்கள் பதவியேற்றதும், “tax terrorism” என்பதை ஒழித்துக்
கட்டுவோம். சேமிப்பு எங்கள் முதல் குறிக்கோளாக இருக்கும்.
அத்தனை வகை சேமிப்புகளுக்கும் ஊக்கம் கொடுப்போம்.
வருமான வரியை அடியோடு நீக்க வேண்டும் என்று நான்
பரிந்துரைத்திருக்கிறேன்.”

” எக்சைஸ் வரி விதிக்கப்படும் 2791 பொருட்களில்,
முதல் 22 பொருட்களிலிருந்தே சுமார் 90% வரி கிடைத்து விடுகிறது.
பின் மீதி 10 % க்காக இத்தனை பொருட்கள் மீதும் வரியைச்
சுமத்துவானேன்..?

“உற்பத்தியாளர்களிடம் நாங்கள் ஒரு விஷயத்தை முன் வைப்போம்.,
எக்சைஸ் வரியை நாங்கள் நீக்குவோம். ஆனால் அந்த பலன்
உபயோகிப்பாளர்களுக்கு சென்று அடைவதை நீங்கள் உறுதி
செய்ய வேண்டும். பொருட்களின் விலை குறைவதை உறுதிப்படுத்த வேண்டும்.”

“பெட்ரோல் மற்றும் கெரொசின் மீது தற்போது மிதமிஞ்சிய வரி
விதிக்கப்படுகிறது. லிட்டர் 75 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோலின்
அடக்க விலை 31 ரூபாய் தான். மீதி அனைத்துமே விதம் விதமான
வரிகள். இந்த வரிகளை நீக்கினால் போதும்.
பெட்ரோலுக்கும், கெரொசினுக்கும் மான்யம் ( subsidy ) கொடுக்க
வேண்டிய அவசியமே ஏற்படாது…!!!”

வரியைக் குறைத்தால், அரசின் வருமானம் குறைந்து விடாதா
என்கிற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது –

” 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும்போது நமக்கு கிடைக்கப் போகும்
தொகை எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியுமா …?
நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம் நமக்கு
கிடைக்கப்போகும் தொகை எவ்வளவு என்பது
உங்களுக்கு தெரியுமா ?

ஒரு வருடத்தில், நிலக்கரி சுரங்க ஏலம் மூலம் மட்டும் நமக்கு
கிடைக்கப்போகும் தொகை 11 லட்சம் கோடி ரூபாய் [$187 billion]..!”

————-

11/08/2014 – அன்று கோயம்புத்தூரில் PSG Institute of Management-ல் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது –

“இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டிய
அவசியம் இல்லை….

நிதியமைச்சர் அருண் ஜெட்லியை விட என்னால் சிறப்பாக
நிதியமைச்சகத்தை நிர்வகிக்க முடியும்…

மத்திய நிதியமைச்சர் பொறுப்பினை 15 நாட்களுக்கு என்னிடம்
ஒப்படைத்தால் – வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
120 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வந்து
200 கருப்புப் பண முதலைகளை சிறைக்கு அனுப்புவேன் ..! ”

“வருமான வரியை அடியோடு ஒழிக்க வேண்டும். லஞ்ச ஊழலை
ஒழிக்க அதுவே சிறந்த வழி.. வருமான வரியின் மூலம்
மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமானம்
வருகிறது. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால் –
அடுத்த 60 ஆண்டுகளுக்கு வருமான வரியே விதிக்கவேண்டிய
அவசியமே இருக்காது……”

—————————–

பிரதமர் மோடிஜிக்கு சுவாமி எழுதிய கடிதத்தை
நேற்று பார்த்தோம். அவற்றில் அநியாயமான அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத ஆலோசனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை வெளியிட்ட
பிறகு, அது பற்றி 2nd march தேதியிட்ட ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
தலையங்க பக்கத்தில் ஒரு முக்கியமான கட்டுரையை

வெளியிட்டிருக்கிறார் சு.சுவாமி.

அதிலிருந்து சில பகுதிகள் – ( இதை ஆங்கிலத்திலேயே
படிப்பது தான் சரியாக இருக்கும்….)

The Indian economy has declined because of the peculiar
Indian ‘invention’ of a perfidious financial derivative called
Participatory Notes – or PNs,
otherwise known as the crony/crooked facilitator for black money-based

portfolio investment. No other country would think of such a derivative.

The Budget does not treat PNs as a time bomb and to seek to
abolish this derivative, as the Tarapore Committee had wanted.
Actually, PNs have been even more legitimised by
enhancing their status to that of FDI inflow.

The Finance Minister ought to have abolished PNs in this Budget
to stabilise the economy.

———

Mr. Jaitley has not embedded piecemeal measures in the
larger picture of economic reform and budgetary restructure.

———–

Enthusing the middle class –

This can also be sustained by directly, and not indirectly,
enthusing the middle class — which today can be achieved
only by abolishing personal income tax.

————-

In this Budget, the middle class has little to cheer about.
The morning-after announcement of petrol and diesel price hikes
even while internationally, crude oil price continues to be in decline,
has only further discouraged the middle class.
India’s middle class urgently needs some good news.

—————

these goals have to be at the core of the economic agenda
underlying the making of the Budgets.
But for all that to happen, more vigorous, market-centric,
economic reforms are necessary and need to be at the centre stage of the nation’s attention in a Budget –

and not be overwhelmed by what corporate-driven, media hype expects of a budget.
———–

Looking ahead positively, the nation still has four more
annual Budgets to see, and which will hopefully set the stage
for India’s economic renaissance in the next decade.

——————–

இவ்வாறு – நரேந்திர மோடிஜியின் அரசுக்கு எதிரான
பல கருத்துக்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் – மெல்ல, மெல்ல
வெளியிட்டு வருகிறார் சுப்ரமணியன் சுவாமி…!!!

இவை எல்லாம் மோடிஜியின் பார்வைக்கு போகாமலா
இருக்கும் ..?

சுப்ரமணியன் சுவாமி சொல்லும் சில கருத்துக்கள் –
உண்மையிலேயே ஆழமானவை.
அர்த்தமுள்ளவை – சில, நடைமுறை சாத்தியமானவை தான்.
அவை சரியான முறையில் யோசித்து நிறைவேற்றப்பட்டால் –
மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியே
நிகழக்கூட வாய்ப்பு உண்டு.
ஆனாலும், ந.மோடிஜி அரசு வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன்..?
மோடிஜி அரசு யாரைக் காப்பாற்ற விரும்புகிறது …?

தான் சொல்லும் கருத்துக்களுக்கு கட்சியிலும் சரி,
ஆட்சியிலும் சரி எந்த வித மரியாதையோ, ஆதரவோ இல்லை
என்பது மட்டுமல்லாமல், பாஜக வில் தன்னை எவருமே
மதிக்கவில்லை என்பது சுப்ரமணியன் சுவாமிக்கு
புரியாமலா இருக்கும் ….

இருந்தும், ஓரளவிற்கு மேல் – சு.சுவாமி அவர்கள்
சுருதியைக் கூட்டாமல் அடக்கியே வாசிப்பது ஏன் ?

மோடிஜியைக் கண்டு அச்சமா ….?
அல்லது இதை எல்லாம் கண்டாவது தன்னை அமைச்சரவையில்
சேர்த்துக் கொள்வார்கள் என்று இன்னும் நம்புவதாலா ?

அரசாங்க கொள்கைகளை வெளிப்படையாக விமரிசித்தும்,
கருப்புப் பண விவகாரத்தில் அரசின் செயலற்ற நிலையை
குத்திக் காட்டி பேசியும், எழுதியும் வரும்
சுப்ரமணியன் சுவாமியை மோடிஜி இன்னமும் வாய்மூடி
மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது /
சகித்துக் கொண்டிருப்பது ஏன் ….?

சு.சுவாமியின் கடந்த கால சாதனைகளை ( ! )
எண்ணிப் பார்த்து –
சுவாமியை முறைத்துக் கொண்டால் –
தனக்கும் அவரால் உபத்திரவங்கள் வரலாம்
என்று எண்ணி பயந்தா…?

இரண்டு சிங்கங்களும் இப்போதைக்கு சிரித்துக் கொண்டே
கை குலுக்கிக் கொண்டாலும் –
என்று வேண்டுமானாலும்
மோதிக்கொள்ளும் நிலையில் இருக்கின்றன என்பது தானே
நிதரிசனமான உண்மை ….?
மோதல் வருமா அல்லது தழுவல் சாத்தியமா …?

தழுவல் என்று வந்தால் – சு.சுவாமி விரைவில்
மத்திய அமைச்சர் ஆகக்கூடும்….

ஆனால் – மோதல் என்று ஒன்று வந்தால் அதில் –
எந்த சிங்கம் ( !!! ) ஜெயிக்கும் ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to சுவாமி சிங்கமும், மோடி சிங்கமும் மோதுமா ….?

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  தழுவல் வந்தாலும் சரி…… மோதல் வந்தாலும் சரி…… நாட்டிற்கு நல்லது வந்தால் சரிதான்.தேவையற்ற வரிகளை நீக்குவதால் நிச்சயம் நாடு நேர்மையான வழியில் செல்லும்.

 2. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  அடிக்கடி நீங்கள் ஆச்சரியத்தில்
  ஆழ்த்துகிறீர்கள்.
  சு.சுவாமியின் அலங்கோலங்களைப்பற்றி 12 வால்யூம்
  ‘சாமியின் சாகசங்கள்’ எழுதிய நீங்கள்,
  இப்போது சுவாமியின் புத்தி சாதுரியத்தையும் பாராட்டி எழுதுகிறீர்களே
  இது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது ?

  ” நல்லதைப் பாராட்ட வேண்டும்.
  கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.”
  உங்களின் இந்த அற்புதமான அலசல் திறன் அசத்துகிறது.
  இந்த இடுகை அதற்கு பெஸ்ட் உதாரணம்.
  இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும்
  கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறென்.
  என் நண்பர்கள் நிறைய பேர்
  உங்களின் தொடர் வாசகர்கள். அவர்கள் அனைவரின் சார்பாகவும்
  உங்களுக்கு நன்றி.

 3. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  //மோதல் என்று ஒன்று வந்தால் அதில் – எந்த சிங்கம் ( !!! ) ஜெயிக்கும் ….?// – எனக்கு மோதியைப் பிடிக்காதுதான்; ஆனால், சுப்பிரமணிய சுவாமியை அதைவிடப் பிடிக்காது. அது போக, மோதி ஒன்றும் இராசீவ் இல்லை. எனவே, இந்த முறை ‘பிரதம’ சிங்கம்தான் வெல்லும் என நினைக்கிறேன்.

  ஒருவேளை அப்படி மோதல் என ஒன்று வந்தால், இராசீவ் கொலையை முழுமையான மறு விசாரணைக்குட்படுத்தி ஒரே கல்லில் மோதி இரண்டு மாங்காய் அடிக்கலாம். அப்படிச் செய்தால், இப்பொழுது குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையிலிருக்கும் எழுவரும் விடுதலை ஆவதன் மூலம் தமிழ்நாட்டில் பா.ச.க ஆட்சியைப் பிடிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். அதே நேரம், சுப்பிரமணிய சுவாமி உள்ளே போவதால் மோதியின் தலைவலியும் நீங்கும்.

 4. jksm raja சொல்கிறார்:

  No body understood namo properly. In cunningness and selfishness namo is more than 10 karuna plus 10 susa. Hence namo will win

 5. yogeswaran சொல்கிறார்:

  kaviri maidhan sir,

  again why question.

  why cannot all talented brains like namo,samy,arun join together to uplift india instead fighting each other.

  or does it means these are puppets in the hands of business tycoons.

  rgs

 6. Siva சொல்கிறார்:

  BJP will not give any post to Susa, but Susa will not sit idle. So we have to wait and see what will happen.

 7. ltinvestment சொல்கிறார்:

  Sooper Sir

 8. Ganpat சொல்கிறார்:

  கா.மை ஜி.
  உங்கள் பதிவுகளின் வேகமும்,வீச்சும் விஸ்தீரணமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து மட்ட்ரற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.உண்மையில் சொல்கிறேன்.ஒரு கடினமான பிரச்சினையை பாமரனக்கும் புரியும் படி பகுதிகளாக பிரித்து எழுதுவதில் உணகளுக்கு நிகர் வேறு யாருமில்லை.நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.நடப்பது ராமாயணம் என்றால் ஸ்ரீராமர் வெல்வார் என சொல்லி விடலாம்.மகாபாரதம் என்றால் பாண்டவர்கள் ஜெயிப்பார் என சொல்லி விடலாம்.ஆனால் இந்தியாவில் நடப்பது பாரதாயணம் ராவணனுக்கும் கௌரவர்களுக்கும் யுத்தம் நடக்கிறது.யார் வென்றாலும் கேடு நமக்குத்தான்.
  இன்று ஒரு செய்தி மீண்டும் ஒரு ரூபா நோட்டு அச்சடிக்கப்போகிறார்களாம்.எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை.இதை நிறுத்தி சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன.அப்போவே ஒரு ரூபா அடிக்க ரூ ஏழு ஆகிறது என்றார்கள்.அதை தொடர்ந்த ஆண்டுகளில் இரண்டு,ஐந்து,பத்து ரூபா அச்சடிப்பதையும் நிறுத்தியாகி விட்டது இப்போ மீண்டும் ஒரு ரூபா ஆரம்பிக்கிறார்கள்.இந்த நாடு உருப்பட வழியே இல்லை.

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத் ஜி,

   பாரதாயணம் – தமிழில் புது வார்த்தை தந்த வள்ளலே.

   நீவிர் சிரிப்பதற்காக கீழே ஒரு இணைப்பு.

   “என்ன ஒரே கள்ளாட்டமா இருக்கு. எல்லாக் கோட்டையும் அழிங்க.. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன். டேய், நீ போய் கோட்டப் போடுறா.”

   இது எப்புடி.

   திரும்பவும் சாப்பிடுறதுல இந்தியா கம்பெனியும் இந்திய மக்கள் பணம் என்கிற முதலீடும் நஷ்டமாயிருச்சுன்னா நான் பொறுப்பில்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் டுடேஅண்ட்மீ,

    அவ்வப்போது நீங்கள் காட்டும் “பிலிம்”
    பிரமாதமாக இருக்கிறது. சமயத்திற்கு பொருத்தமாக,
    இடத்திற்கு பொருத்தமாக ………… நல்ல ரசனை உங்களுக்கு !

    ஒரு காலத்தில், நிறைய திரைப்படங்கள்
    பார்த்துக் கொண்டிருந்தேன்…….
    இப்போதெல்லாம் முடிவதில்லை !

    இந்த மாதிரி நீங்கள் கொடுக்கும் ‘பிட்ஸ்’ தான்
    எனக்கு relief….!!!
    நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     ஜி,
     அரசியலின் நெடியில் மூச்சு முட்டும்போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளத்தான் இவை.

     எப்படியோ, பிட் பிலிம் ஓட்டுகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள்.

     ஆனாலும் உங்களுக்குக் கிடைக்கும் reliefக்காக எவ்வளவு வாங்கிக்கட்டிக்கொண்டாலும் தகும்.
     🙂 😦 🙂 😦

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்ஜி,

   நன்றி – என்று மட்டும் சொல்லி – விட்டு விடுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    அது கூட தேவையில்லை கா.மை.ஜி! கையில் எடுத்து முதுகில் அன்புடன் வருடினாலே போதும்,இந்த அணிலுக்கு! 🙂

 9. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,

  //தழுவல் என்று வந்தால் //
  இரண்டுமே சிங்கம் அல்ல, நரி என்று நிரூபணம் ஆகிவிடும்

  மோதல் என்று ஒன்று வந்தால் அதில் – முகத்தில் புன்னகையுடன், சத்தம் வராமல் தண்ணீரை ஊற்றிக்கொண்டே, ரம்பத்தால் மரத்தை அறுக்கும் திறமைகொண்டவர்தான் வெல்லமுடியும். அப்போதும் சிங்கம் போன்று நேருக்குநேர் எல்லாம் சண்டை இருக்காது.

  நான் முன்னர் கூறியுள்ளபடி,
  https://vimarisanam.wordpress.com/2014/11/04/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/
  //ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஏனென்றால் எல்லாவற்றிலும் எப்போதுமே ஒருவர் ஃபர்பெக்ட் ஆக (தப்புசெய்வதையும் அதை மறைப்பதையும் மற்றவர்கள் தப்பைத் தெரிந்துகொண்டு ப்ளாக்மெயில் செய்வதையும் பற்றிச் சொல்லுகிறேன்) இருக்கமுடியாது. தற்போதுள்ள மத்திய மற்றும் மாநில அரசியல் சூழ்நிலைகளை நோக்கும்போது இந்த வல்லவனுக்கு மற்றொரு வல்லவனை இறையோ அல்லது இயற்கையோ படைத்துவிட்டது என்றே என் மனம் நம்புகிறது. //

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை நண்பரே ( டுடேஅண்ட்மீ ),
   இவை இரண்டும் நரிகளே.
   இதில் யார் ஜெயித்தாலும் –
   நாட்டிற்கு நன்மை பயக்கப் போவதில்லை.
   (ஆனால், இன்னும் சில ரகசியங்கள் வெளியாகக் கூடும்…! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.