K.D.பிரதர்ஸ் – கண்டம் விட்டு கண்டம் பாயும் பணம் ….?

.

குறைந்தது 10 தடவையாவது இந்த விஷயம் குறித்து நாம்
இதே வலைத்தளத்தில் விவாதித்திருக்கிறோம்.

எதாவது மாறுதல், எந்த விதத்திலாவது முன்னேற்றம் உண்டா …?

சில மாதங்களுக்கு முன்னர், எஸ்சிவி ஆபரேட்டிங் ஏஜென்சியை,
சன் நெட் வொர்க் லைசென்சை ரத்து செய்வதாக,
ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
15 நாள் நோட்டீஸ் கூட கொடுக்காமல், தன்னிச்சையாக
ரத்து செய்து விட்டார்கள் என்று கூறி நீதிமன்றத்திற்கு
போனார்கள். விளைவு – மத்திய அரசின் உத்திரவு செல்லாதென்று
அறிவிக்கப்பட்டது.
இந்த சிறிய சட்ட நுணுக்கத்தைக் கூட அறியாதவர்களா
அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள்….?

அல்லது இப்படி ஒரு முடிவைப் பெற வேண்டுமென்றே,
அப்படி ஒரு உத்திரவு போடப்பட்டதோ ….? யார் கண்டார்கள் …!!!
அதோடு அந்த கிணற்றில் கல் …..!!!

பிஎஸ்என்எல் – தொடர்பை, அமைச்சர் என்கிற முறையில் பெற்று,
பின்னர் சன் குழுமத்திற்கு சாதகமாக பயன்படுத்தி சுமார்
400 கோடி அளவிற்கு மோசடி செய்யப்பட்டது என்று ஒரு வழக்கு.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக விசாரணை செய்ய்ய்ய்ய்ய்ய்து கொண்டே
இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தர் தலையிட்டும் கூட –
இவர்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை …
அதோடு இந்தக் கிணற்றிலும் கல் …!!!

கே.டி.களின் கோடிகள் இன்றைய ஆளும் கட்சிக்குள்ளும்
பாய்ந்து விட்டதோ என்கிற ஐயம் ஏற்படுகிறது.
இல்லையெனில்,
இந்த மாதிரி ‘silly mistakes’ , ‘carelessness’, indifference – ஏன் …?

ஏர்டெல்-மேக்சிஸ் விவகாரம் –
அதுவும் இழுழுழுழுழுழுழுத்த்கொண்டே
போகிறது.

நாலைந்து நாட்களுக்கு முன்னரே – இவற்றைப் பற்றி எல்லாம்
இன்னுமொரு தடவை எழுத வேண்டுமென்று
தோன்றியது. ஆனால் சலிப்பாக இருக்கிறது. ஒரே விஷயத்தை
மீண்டும் மீண்டும் எத்தனை தடவை எழுதுவது….?
எதாவது முன்னேற்றம், திருப்பம் இருந்தால் எழுதலாம் –
விவாதிக்கலாம்.

அலுத்துப்போய் விட்டு விட்டபோது, நேற்று நண்பர் ஒருவர்
ஈமெயிலில் தினமணி நாளிதழில் ‘மதி’ கார்ட்டூனில் வந்திருந்ததை
அனுப்பி இருந்தார். ஏன் சார் நீங்கள் இதைப்பற்றி எழுதவில்லை
என்று அவர் கேட்காமல் கேட்பதைப் போலிருந்தது….

எனவே மீண்டும் இந்த இடுகை…..
வெளிநாட்டிலுள்ள ஆளை இழுத்து வருவது கடினம்.
கைது செய்வது கடினம்.
நமது சட்ட நடவடிக்கைகளுக்குள் கொண்டு வருவது கடினம்.
ஒரு பேச்சுக்கு – சரியென்று ஒத்துக் கொள்வோம்.

ஆனால் 4 மாதங்கள் ஆகியும், வெறுமனே ஒரு கடிதத்தை –
சம்மனை – கொடுக்கவே முடியவில்லை என்று
நீதிமன்றத்திலேயே வந்து
பொறுப்பில் உள்ளவர்கள் கூறுகின்றார்கள் என்றால் –
அதற்கு என்ன அர்த்தம் …?

அந்தக் காலத்தில் கூறுவதுண்டு –
” பணம் பாதாளம் வரை பாயும் ” என்று.
இப்போது இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்ல
வேண்டும் போலிருக்கிறது….

“பணம் கண்டம் விட்டு கண்டம்,
நாடு விட்டு நாடு கூடப் பாயும்”

—————-

தினமணி நாளிதழில், வெளிவந்த “மதி கார்ட்டூன்” கீழே –

mathi cartoon-1

mathi cartoon-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to K.D.பிரதர்ஸ் – கண்டம் விட்டு கண்டம் பாயும் பணம் ….?

 1. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  இந்த சிறிய சட்ட நுணுக்கத்தைக் கூட அறியாதவர்களா
  அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள்….? நீங்கள்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் என்று சொல்லி விட்டீர்களே.

 2. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  இன்று உங்கள் தளத்தில் விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்பதற்காக அரை மணி நேரம் போராடி கடவுச் சொல் பெற்று இதை எழுதுகிறேன். எல்லா வேர்ட்ப்ரஸ் தளத்திலும் இப்படித்தான் படாய் படுத்துகின்றது. நீங்கள் ப்ளாக்கர் பக்கம் வந்து இருந்தால் இன்னும் பல மடங்கு உங்கள் கடின உழைப்பு பல லட்ச மக்களுக்கு போய் இருக்கும்

  • today.and.me சொல்கிறார்:

   வருக வருக நண்பர் ஜோதிஜி,

   வேர்ட்ப்ரஸ் / ப்ளாக்கர் எல்லாம் பழகிய வீடு மாதிரித்தான். விஸ்டோஸ் பழகியவர்களுக்கு ஆப்பிள் முடியாததுபோல. ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான்.

   //விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்பதற்காக//
   மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

 3. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  கடந்த ஒரு மாதத்தில் நீங்க எழுதிய ஒவ்வொரு பதிவையும் படித்தவன் என்ற முறையில் நிச்சயம் வலைபதிவில் நீங்கள் தான் சூப்பர் ஸ்டாராக எனக்கு தெரியுறீங்க. எது குறித்தும் அச்சமில்லை. நினைத்த விசயங்களை அப்படியே எழுதும் உங்களை வேறு என்ன சொல்லி அழைப்பது?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக ஜோதிஜி,

   இந்த தளத்திற்கு பின்னூட்டம் இடுவதில் இவ்வளவு
   பிரச்சினை இருப்பது எனக்குத் தெரியாது.
   ( நான் கணிணி அறிவில் பூஜ்யம் …!!!
   சிரமத்தை குறைக்க என் பக்கத்திலிருந்து நான் எதாவது
   செய்ய வேண்டுமா ? என்னால் இயலுமா …? )

   எப்படியோ, துவக்கத்தில், யாரையோ துணைக்கு
   வைத்துக் கொண்டு, வொர்டு ப்ரஸ் தளத்தை
   துவக்கி விட்டேன். தட்டச்சு பழகி விட்டேன் என்பதால்
   அப்படியே ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

   இனிமேல் புதிதாக ப்ளாக்கர் பக்கம் வருவது
   என்னால் முடியுமென்று தோன்றவில்லை.

   ————–
   என் மீதுள்ள பற்றின் காரணமாக
   சூப்பர் ஸ்டார் அளவிற்கெல்லாம் கொண்டு போகிறீர்கள்..
   இதை நான் தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன் –
   இந்த நிமிடத்துடன் நினைவிலும் வைத்துக் கொள்ள மாட்டேன்.

   ————–

   என் மனதில் தோன்றுவதை எல்லாம்
   எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் உண்மை.
   நான் எந்த அரசியல்வாதிக்கும் போட்டி இல்லை…
   இந்த வயதில் என்னை யார் வந்து உதைக்கப் போகிறார்கள் …!!
   அப்படியும் மீறி உதைத்தால் …. விமோசனம் கிடைத்தது என்று
   கைலாசமோ / வைகுண்டமோ பார்க்கப் போய்க்கொண்டே
   இருக்க வேண்டியது தான்…!!!

   ————-

   தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துக்களும்
   இந்த தளத்திற்கு அவசியம் தேவை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    கா.மை.ஜி,
    //நான் எந்த அரசியல்வாதிக்கும் போட்டி இல்லை…//
    தற்போதைய அரசியல்வாதிகளுக்குரிய பேஸிக் க்வாலிபிகேஷனையே நீங்கள் தாண்டவில்லையே ? 🙂 🙂
    பின்னை ஏன் போட்டி வரைக்கும் போய்விட்டீர்கள்.

 4. visujjm சொல்கிறார்:

  இன்றைய தினமணி கட்டுரை தங்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் என்பதை படு ஜோராக காட்டி விட்டதய்யா… பாமரன் முதல் தினக்கூலி வாங்குபவனும் அவசியம் படிக்க வேண்டும் இன்றைய கட்டுரை மிக முக்கியத்துவம் மிகுந்தது, அப்போதுதான் மாற்றம் வரும் ஐயா அதுவே நிலையான வளர்ச்சி 1000 சிங்கப்பூர் 100000ஜப்பானுக்கு நம் தேசம் நிகர்…

  ஊழலினால் ஆயபயன் என்கொல்…
  By என். முருகன்
  First Published : 05 March 2015 01:48 AM IST

  1992-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஹர்ஷத் மேத்தா பங்கு பரிவர்த்தனை ஊழலில் அடித்த கொள்ளை ரூ.5,000 கோடி.

  1994-ஆம் ஆண்டில் சர்க்கரை இறக்குமதியில் நடந்த ஊழல் தொகை ரூ.650 கோடி. 1994-இல் மத்திய அமைச்சர் சுக்ராம் நடத்திய தொலை தொடர்புத் துறை ஊழலில் ரூ.1,500 கோடி,

  1995-ஆம் ஆண்டில் வேண்டியவர்களுக்கும், பினாமி பங்குதாரர்களுக்கும் பிரிஃபரென்ஷியல் பங்கு பரிவர்த்தனை ஊழல் ரூ.5,000 கோடி.

  யூகோஸ்லாவியா நாட்டின் “தினார்’ எனும் பணத்தை “ஹவாலா’ முறையில் கள்ளத்தனமாக கடத்தி வந்த ஊழலில் ரூ.400 கோடி. மேகாலயாவில் வனத்தை அழித்து மரங்களை கடத்திய ஊழலில் ரூ.300 கோடி.

  1996-இல் உர இறக்குமதியில் நடந்த ஊழலில் ரூ.1,300 கோடி, யூரியா உரத்தை கடத்திய ஊழலில் ரூ.133 கோடி, பிகார் மாநிலத்தில் மாட்டுத் தீவன ஊழலில் ரூ.1,200 கோடி.

  எஸ்.என்.சி. லவாலின் எனும் மின்சார உற்பத்தி நிலையம் உருவாக்கியதில் நிகழ்ந்த ஊழலில் ரூ.374 கோடி.

  பிகார் மாநிலத்தில் நிலம் தொடர்பான ஊழலில் ரூ.400 கோடி, சி.ஆர். பன்சாலி பங்குச் சந்தை ஊழலில் ரூ.1,200 கோடி.

  1998-இல் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தியதில் நடந்த ஊழலில் ரூ.8,000 கோடி.

  2001-இல் கேத்தன் பரேக்கின் பங்கு ஊழல் ரூ.4,800 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்கு ஊழல் ரூ.595 கோடி, யு.டி.ஐ. பங்கு வர்த்தக ஊழல் ரூ.1,250 கோடி.

  2002-இல் சஞ்சய் அகர்வாலின் பங்கு வர்த்தக ஊழல் ரூ.600 கோடி.

  2003-இல் தெல்கியின் முத்திரைத்தாள் ஊழல் ரூ.172 கோடிகள்.

  2005-இல் பங்கு வெளியீட்டின் கணினி முறை ஊழல் ரூ.146 கோடி, பிகாரின் வெள்ள நிவாரணப் பணியில் நடைபெற்ற ஊழல் ரூ.17 கோடி, ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் விவகார ஊழல் ரூ.18,978 கோடி.

  2006-இல் பஞ்சாப் மாநில நகர் மைய வர்த்தக நிலைய ஊழல் ரூ.1,500 கோடி, தாஜ் புறவழி தொழில் மைய ஊழல் ரூ.175 கோடி.

  2008-இல் புணே நகரின் கோடீஸ்வரர் ஹசன் அலி செய்த வரி ஏய்ப்பு ஊழல் ரூ.50,000 கோடி, சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் ரூ.10,000 கோடி, ராணுவத்தில் குடிமைப் பொருள்களில் ஊழல் ரூ.5,000 கோடி.

  2ஜி அலைக்கற்றை ஊழல் ரூ.60,000 கோடி, செüராஷ்ட்ரா ஸ்டேட் வங்கி ஊழல் ரூ.95 கோடி, ஸ்விஸ் வங்கிகளில் முடங்கியுள்ள ஊழல் பணம் ரூ.71,00,000 கோடி.

  2009-இல் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவக் கருவிகள் வாங்கியதில் ஊழல் ரூ.130 கோடி, அரிசி ஏற்றுமதியில் ஊழல் ரூ.2,500 கோடி.

  ஒடிசா மாநிலத்தில் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் ரூ.7,000 கோடி, மதுகோடாவின் சுரங்க ஊழல் ரூ.4,000 கோடி.

  இதுபோன்ற மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்ட ஆதாரங்களுடனான ஊழல்கள் போக, நிறைய ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டும், விசாரணையில் நிரூபிக்க முடியாமல் போன வகையிலும் உள்ளது நம்மில் பலருக்கும் தெரியும்.

  மேற்குறிப்பிட்ட ஊழல்களின் மொத்த இழப்புத் தொகையான பொதுப் பணம் 73 லட்சம் கோடி ரூபாயைக் கொண்டு நம் நாட்டில் என்னவெல்லாம் செய்திருக்க முடியும் என்பதை பார்ப்போம்.

  1. நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மூன்று சுகாதார மையங்களான மருத்துமனைகளை உருவாக்கியிருக்கலாம்.

  அதாவது, இந்த பணத்தில் மொத்தம் 2 கோடியே 40 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்களை (பி.எச்.சி.) உருவாக்க முடியும். ஒரு மையத்தை உருவாக்க ஆகும் செலவு ரூ.30 லட்சம்.

  2. கேந்திரிய வித்யாலயா எனும் கல்வி நிலையங்கள் 24 லட்சத்து 10 ஆயிரம் உருவாக்கலாம். ஒரு பள்ளியின் உருவாக்கச் செலவு ரூ.3 கோடியே 2 லட்சம்.

  3. வீடில்லாத மக்களுக்கு ஒரு வீடு ரூ.5 லட்சம் என்ற மதிப்பீட்டில், 14 கோடியே 60 லட்சம் இலவச வீடுகளை ஏழை மக்களுக்குக் கட்டித் தந்திருக்க முடியும்.

  4. நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் 2,703 உருவாக்கியிருக்க முடியும்.

  600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு மின்சார உற்பத்தி நிலையத்தை உருவாக்க ஆகும் செலவு ரூ.2,700 கோடி என்பது கணக்கீடு.

  5. 12 லட்சம் நுண்கதிர் சி.எல்.எஃப். பல்புகளை வாங்கி இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் இருளை நீக்கி ஒளியை உருவாக்கியிருக்க முடியும்.

  6. 14 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் இருவழி நெடுஞ்சாலைகளை அமைத்து நாடெங்கிலும் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைத்திருக்க முடியும்.

  7. அடுத்த 121 ஆண்டுகளில் நம் நாட்டின் 50 பெரிய நதிகளை சுத்தப்படுத்தும் செலவுகளை சமாளிக்க முடியும். ஒரு பெரிய நதியின் முழு நீளத்தையும் ஒருமுறை சுத்தம் செய்ய ரூ.1,200 கோடி தேவை.

  8. எல்லோராலும் புகழப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற 90 திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றலாம். ஒரு திட்டத்திற்கு ஆகும் செலவு ரூ.81,111 கோடி.

  9. ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்த விவசாயக் கடன் ரத்து போல் 121 முறை கடன்களை ரத்து செய்திருக்க முடியும். அதன் மொத்த செலவு ரூ.60,000 கோடிதான்.

  10. வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 40 கோடி இந்தியர்களுக்கு தலா 1 கோடியே 82 லட்சம் ரூபாயை இனாமாக வழங்க முடியும். அல்லது எல்லா மக்களுக்கும் தலா ரூ.56 ஆயிரத்தை இனாமாக அளித்திருக்க முடியும்.

  11. 60 கோடியே 80 லட்சம் இந்தியர்களுக்கு டாடா நானோ எனும் சிறிய ரக காரை இலவசமாக வழங்கலாம்.

  அல்லது இதில் நான்கு மடங்கு, 243 கோடியே 20 லட்சம் மடிக்கணினிகளை வாங்கி இனாமாக இந்தியர்களுக்கு வழங்க முடியும்.

  மேலே விவரித்த புள்ளிவிவரம், நம் நாட்டின் கேவலமான அரசியல், நிர்வாகம் மற்றும் ஊழல் எண்ணத்துடன் ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாமல் வாழும் மக்கள், மக்களின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களைப் பற்றிய உண்மையைப் பறைசாற்றுகிறது.

  நமது நாட்டின் கெüரவம் பாதிக்கப்பட்டு, காந்தி, காமராஜர் போன்றோர் வாழ்ந்த நாடுதானா இது என வேற்று நாட்டவர்கள் நினைக்கும்படியும், ஏழ்மையில் உழலும் சக மக்களைப் பற்றி நினைக்காத பெருவாரி மக்களைக் கொண்டது இந்தியா என எண்ணும் நிலைமையும் உள்ளது.

  இதுவரை நடந்தது போகட்டும். இனிமேலாவது இவற்றையெல்லாம் சரி செய்ய முடியுமா என்ற கேள்வி மனதில் எழுகிறது. ஆனால், அந்தக் கேள்விக்கு முடியாது என்ற பதிலே கிடைக்கும் என்பது திண்ணம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   விசு,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   இனிமேல் எழுதும்போது, நீங்கள் சொல்ல விரும்பும்
   லிங்க் (link) ஐ மட்டும் கொடுத்தால் போதுமானது.
   முழு கட்டுரையையும் இங்கே தர வேண்டாம்.
   அதைப் படிக்க விரும்புபவர்கள் அந்த தளத்திற்கே
   சென்று படித்துக் கொள்வார்கள்.
   நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  நான் வாசித்த உங்கள் சில பதிவுகளுக்காக என் விமர்சனம்

  சூனா சாமி புத்திசாலி தான். ஆனால் அது எதற்கு பயன்படுகின்றது? எதற்கு பயன்பட்டு இருக்கின்றது என்பது தான் இங்கே பிரச்சனை. காத்திருத்து நிச்சயம் மோடிக்கு இவர் மூலம் பெரிய ஆப்பு காத்திருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.

  புத்திசாலி என்றழைக்கப்படுவர்களில் சில பிரிவுகள் உண்டு. ஆனால் நமக்கு அமைந்த அமைச்சர்கள் பெரும்பாலனோர் இன்ட்லிஜென்ட் கிரிமினல்ஸ்.

  அருண் ஜெட்லி குறித்து தெரிந்து கொள்ள http://deviyar-illam.blogspot.com/2012/11/9.html#comment-form

 6. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  பழைய நிதி மந்திரி குறித்து நீங்களே பலமுறை எழுதியிருக்கீங்க. அவரும் அவர் குடும்பமும் எந்த அளவுக்கு தமிழ்நாட்டுக்கு உழைத்துள்ளார்கள் என்பதற்கு http://deviyar-illam.blogspot.com/2012/11/8.html#comment-form

 7. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  மாறன் சகோதரர்கள் http://deviyar-illam.blogspot.com/2011/06/blog-post_15.html

  நீங்க எழுதியிருப்பது போல இதையே கடந்த சில வருடங்களாக நினைத்து யோசித்து எழுதி மனஉளைச்சல் ஆனது தான் மிச்சம்.

  பா.ஜ.க இங்கே கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக சுற்றிலும் உள்ள ஒவ்வொன்றாக காலி செய்தாக வேண்டும் என்கிற ரீதியில் காய் நகர்ந்தால் நீங்கள் எதிர்பார்ப்பது இங்கே நடக்கும்.

 8. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  கடவுச்சொல் பயத்தில் தொடர்பு இல்லாத பலவற்றை இங்கே எழுதி வைத்துள்ளேன். பார்க்கலாம் இனி தொடர்ந்து விமர்சனம் அளிக்க முடியுமா? என்று.

  உங்கள் பணி இதே போல சூறாவளியாக தொட வாழ்த்துகள்.

 9. drkgp சொல்கிறார்:

  Mr Murugan, it is mental incarceration to recollect all
  those criminal deeds perpetrated by our esteemed fellow
  citizens. Since a very well planned road has been laid
  out for their followers to escape with their loot, it may
  be impossible in the foreseeable future to find a
  meaningful solution to this bane our nation.

 10. drkgp சொல்கிறார்:

  Correction : the. Last line my comment should be:
  meaningful solution to this bane of our nation.

 11. ssk சொல்கிறார்:

  கடவுளை கும்பிடுவதே எனக்கு நல்ல நிலைமை கொடு என்று.(மற்ற தகுதியானவன் எப்படி போனால் என்ன ).
  ஆக குறுக்கு வழியே தேவை. அப்படி பட்ட சிந்தனைகள் நிறைந்த இங்கு எல்லாம் இப்படி நடப்பதில் வியப்பு இல்லை. எதிலும் போட்டி , எதிலும் நியாயமற்ற போட்டி. பல பதவிகள் (அரசு மற்றும் தனியார்) தகுதியான நபருக்கு கிடைக்கிறதா ? சரியான தொடர்புகள் உடையவர்களுக்கே கிடைக்கிறது, மனித நேயம் வரும் போது போட்டிகள் குறைந்து நியாய உணர்வு வரும்.

 12. சக்தி சொல்கிறார்:

  ஐயா, இணையம்-Blog- பற்றிய உங்கள் தெரிவு சரியானதே கவலை வேண்டாம்.மாற வேண்டிய அவசியமும் கிடையாது.

  ஆரம்பத்தில் blogger blog நடத்துவதும் பதிவும் சுலபமாக இருந்தாலும் கூட, அந்தப் பதிவுகள் எதுவும் உங்களுக்குச் சொந்தமானது அல்ல. அவற்றை நீக்க மாற்ற , பயன்படுத்த, உரிமை கொண்டாட, கூகிளுக்கு வலைப்பக்கம் உருவாக்கும் போதே எழுத்து மூலம் அனுமதி கொடுத்து விடுகிறீர்கள். அதாவது பெயருக்கு மட்டுமே நீங்கள் வலைப்பதிவின் உரிமையாளர்.

  ஆனால் wordpress blog அப்படியல்ல. வலைப்பதிவை தொடங்கியது முதல் அனைத்து உரிமைகளும் உங்களுக்குச் சொந்தமாகிறது. நீங்கள் எழுதும் எவற்றையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதாவது அந்த வலைப்பதிவின்-blog- முழு உரிமாயாளர் நீங்கள் மட்டுமே.

 13. Narasimhan S. சொல்கிறார்:

  யார் எப்படி மாரடித்து கொன்டாலும் கேடிகள் நிம்மதியாக இருப்பார்கள் . மலேசிய முதலீட்டாளர் அந்நாட்டு முன்னாள் பிரதமரின் ஆசியுடன் அவரது நிழ்லில் இருந்தவர், இருப்பவர். அவராவது இந்தியா வருவதாவது சம்மனை வாங்குவதாவது.. இதே மாதிரி எல்லா வெளி நாட்டு தொடர்புகளும் ஏதாவது ஒரு பாதுகாப்பில் இருப்பார். எல்லாம் முடிந்தாலும் ஒரு வெளி நாட்டில் அடைக்கலம் கிடைக்கும். இங்கு உள்ள பெருந்தலைகள் அவ்வப்போது அருகில் உள்ள நாட்டிற்கு பயணம் செய்வதை கணித்தால் போறும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.