கேட்டாரே மந்திரி – “சொகுசு கப்பலுக்கு நானென்ன கடலில் நீந்தியா போக முடியும் …?

.

கீழே புகைப்படத்தில் இருக்கும், சொகுசு கப்பலைப் பாருங்கள்…
எஸ்ஸார் க்ரூப் என்னும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது.

sunrays-essar cruise

இந்த சொகுசுக் கப்பல் ( luxury yacht ) பிரெஞ்சு கடலில்
waters of the French Riviera – நடுக்கடலில் – நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தது….

எதற்காக ….?

இந்நாள் மத்திய மந்திரி ஒருவர் –
அந்நாளில் – 2013 ஆம் ஆண்டு, ஜூலை 7
முதல் ஜூலை 9 வரையிலான நாட்களில் 8 பேர் அடங்கிய
தன் முழு குடும்பத்துடன் (புருஷன், பெண்டாட்டி, 2 பிள்ளைகள்,
ஒரு பெண் மற்றும் 3 வேண்டப்பட்டவர்கள்…)
இரண்டு நாட்களில் நடுக்கடலில் ஜாலியாக உல்லாச விடுமுறை
கொண்டாடுவதற்காக….!

இவர்கள் பிரெஞ்ச் கடற்கரையில் உள்ள ( Nice airport )
விமான நிலையத்திலிருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
சொகுசுக்கப்பலுக்கு அந்த எஸ்ஸார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரிலேயே போகும்போதும், திரும்ப வரும்போதும் பயணம் செய்தனர்….!!!

ஏன் அந்த கம்பெனியின் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம்
செய்தீர்கள்
என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு –
அந்த மந்திரி பதில் கேள்வி கேட்கிறார் ” நடுக்கடலில் இருந்த
அந்த கப்பலுக்கு நானென்ன நீந்தியா போக முடியும் …? “

மந்திரி இதற்காக பணம் எதாவது கொடுத்தாரா ?
( கொடுத்தால் -அப்புறம் அவர் மந்திரியாக இருப்பதற்கே
லாயக்கில்லை என்று அர்த்தமாகி விடுமே….. எனவே
…… கொடுக்கவில்லை !!!)

ஆனால் “அது அவர்களின் சொந்த விமானம்.
நான் அவர்களது விருந்தினராக அங்கு சென்றேன்..
டிக்கெட்டு வாங்கி பயணம் செய்யக்கூடிய விமானமாக
இருந்திருந்தால், நானே பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி
இருப்பேன்” என்கிறார் மந்திரி.

தன் செயலை இன்னும் நியாயப்படுத்த அய்யா மேலும் கூறுகிறார் –
” 2013- ஜூலையில் நான் மந்திரியாக இல்லை,
பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை…
எனவே எந்த பதவியையும் பயன்படுத்தி நான் இந்த சலுகைகளை
அனுபவித்ததாக எவனும் குற்றம் சாட்ட முடியாது…!!!

( அடுத்த பகுதியில் தொடர்கிறேன்….)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கேட்டாரே மந்திரி – “சொகுசு கப்பலுக்கு நானென்ன கடலில் நீந்தியா போக முடியும் …?

 1. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  இவரைப்பற்றி எழுத நிறைய விசயங்கள் உள்ளது. இவரை டம்மியாக்கி மோடி பிரதமர் பதவி வரைக்கும் வந்ததே ஒரு மகத்தான சாதனை.

 2. S.Selvarajan. சொல்கிறார்:

  இந்த ” சொகுசு கப்பலை ” பார்த்து நம்மால் // ஜொள்ளு // தான் விட முடிகிறது .! அதெற்கெல்லாம் ஒரு அரசியல்வாதி — ஊழல்வாதி — பெரு முதலாளிகள் என்கிற முதலைகள் போன்ற மச்சம் உள்ளவர்களால் மட்டுமே முடியும் …. !! படத்தை பார்த்து கனவுலகில் மிதக்கலாம் — வேறு என்ன செய்யமுடியும் நம்மால் ? ஒருவேளை நீச்சல் தெரிந்து இருந்தால் ” நீந்தி ” சென்றிருப்பாரோ என்னவோ ? மந்திரியாக இருந்து போனால்தான் குற்றம் என்கின்ற வாதம் … சூப்பர் …. !!!!

 3. ssk சொல்கிறார்:

  ESSAR steel கம்பெனி இன்று இல்லை. அதில் முதலீடு செய்த அனைத்து மக்களுக்கும் சிறப்பாக போட்டார்கள் நாமம். எத்தனை ஆயிரம் கோடியோ ?

 4. ltinvestment சொல்கிறார்:

  “i am not holding any office there. so whats wrong with that” – told by minister.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.