( பகுதி-2 ) -மத்திய மந்திரியும் சொகுசு கப்பல் வாசமும் …..

cruise ship-1

cruise ship-2

cruise ship-3

.

( பகுதி-2 ) -மத்திய மந்திரியும் சொகுசு கப்பல் வாசமும் …..

” எஸ்ஸார் க்ருப் கம்பெனி செலவில் சுகவாசம்
அனுபவிக்கும்போது நான் தான் எந்தப் பதவியிலும் இல்லையே …
இதில் எந்த விதத்தில், என்னை சம்பந்தப்படுத்தி,
யார் கேள்வி கேட்க முடியும் ?”
என்று கேட்கும்
அதிபுத்திசாலி மந்திரியின் வாதத்தில் நியாயம் எந்த அளவிற்கு
இருக்க முடியும் என்று யோசிப்பதை விட –

மக்களை எந்த அளவிற்கு அவர் முட்டாள்களாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்,
அவரது மனோபாவம் என்ன செய்தி சொல்கிறது
என்பது தான் முக்கியம்….

அதாவது சட்டத்தை மீறினால் தானே குற்றம் …
தர்மத்தை விடுங்கள் – நடைமுறையை,
மனசாட்சியை மீறினால் ஒரு தவறும் இல்லையே
என்பது தான் அவரது எண்ணமாக இருப்பது தெரிகிறது.

எட்டுபேர் கொண்ட குடும்பத்துடன், ஓசியில், ஒரு கம்பெனி
தயவில் ஹெலிகாப்டர் சவாரி செய்வதும், சொகுசு கப்பலில்
இரண்டு நாட்கள் தங்கி விடுமுறை கொண்டாடுவதும்
எந்தவித தவறும் இல்லை என்பது அவர் அபிப்பிராயம்.

இது ஏன் என்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மந்திரி என்ன நினைத்திருப்பார் ? – ” இன்று அவர்கள்
செய்கிறார்கள், நாளைக்கு பதிலுக்கு நாம் ( அரசாங்கம்
மூலமாக ) “பதில் மரியாதை” செய்யப்போகிறோம் –
எல்லாம் ஒரு “பரஸ்பர கவனிப்பு” தானே …? ”
என்பது தான் அவரது எண்ண ஓட்டமாக இருந்திருக்க முடியும் …!!!

இந்த மந்திரியின் பின் சரித்திரத்தை ஒருக்கணம் நினைத்துப்
பார்த்தால் – இவரது செய்கைக்கான நியாயங்கள் புரிந்து விடும்.

என்ன இவர் பின்னணி – ?

சுமார் 15 வருடங்கள் மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக
இருந்திருக்கிறார். சில காலங்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்
தலைவராக இருந்திருக்கிறார். 1995 முதல் 1999 வரை
PWD மந்திரியாக இருந்திருக்கிறார்….
ரோடு போடுவதில் …(!) புகழ் பெற்றவர்….!!!

இவர் மீது ஊழல் புகார் எழுந்து – விசாரிக்கப்பட்டு,
ஒரு வழியாக ….. முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

பாஜக வின் மராட்டிய மாநிலத் தலைவராக இருந்திருக்கிறார்.
கட்சியின் அகில இந்திய தலைவராகவும் இருந்திருக்கிறார்.

2013-ல் இரண்டாம் முறையும் போட்டியிட முயற்சித்தபோது,
இவர் மீது “புர்தி” தொழில் நிறுவன செயல்பாடு குறித்து
புகார் எழுந்து, பதவியிலிருந்து “ஒதுங்க” வேண்டியிருந்தது.

தன் சொந்த கம்பெனிகளில் – தனது டிரைவர்களையும்,
சமையல்காரரையும், வீட்டு வேலைக்காரரையும்
டைரெக்டர்களாக்கி (பினாமிகள் ….) புகழ் பெற்றவர்.

மே, 2009-ல் இவர் வீட்டு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,
இவருக்குச் சொந்தமான காரில் ஒரு ஏழு வயதுப் பெண்ணின்
சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமியின் உடலில்
சில இடங்களில் காயங்கள் இருந்தன. சீரியசாக மேல்
நடவடிக்கையின்றி விஷயம் முடித்து வைக்கப்பட்டது.

இவருக்கு இள வயதில் இரண்டு மகன்கள் உண்டு….
இதன் மூலம் நிகழ்ந்த ஒரே ஒரு நல்ல (?) விளைவு –
சம்பவம் நடந்த இரண்டு மாதங்களில், இவரது டிரைவர்
இவரது ஏழு (7) கம்பெனிகளில் டைரெக்டராக அமர்த்தப்பட்டார்.

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டே,
இவர் சொந்தமாக பல வர்த்தக நிறுவனங்களையும்
துவக்கி, லாபகரமாக (!) நடத்தி வந்திருக்கிறார்.

மந்திரியாக, மற்றும் அரசு பொறுப்புகளை ஏற்கும்போதெல்லாம்,
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பெயருக்கு தன் உரிமைகளை
மாற்றி விடுவார். இப்போதும் அதே நிலை தான்…!!!

இவரை “கவனித்து” கொண்ட எஸ்ஸார் நிறுவனம் –
ஒரு மல்டிநேஷனல் நிறுவனம். பலவிதமான தொழில்களில்
ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளில் அதற்கு கிளைகள் இருக்கின்றன.
முதல் முதலாக – கட்டுமானத் தொழில், ரோடு போடுவது என்று
துவங்கிய நிறுவனம் Steel, Energy, Infrastructure, manufacturing,
Oil, metals and mining, shipping, business process outsourcing,
telecom, realty, retail and Services
என்று பல துறைகளிலும் தன் கால்களைப் பதித்தது.

மொத்தமாக, அது ஈடுபடாத தொழில் துறை இல்லை –
புதிதாக எந்த வாய்ப்பு கிடைத்தாலும், பயன்படுத்திக் கொள்ள
தயார் என்கிற நிலையில் உள்ள ஒரு நிறுவனம்….!!!

மந்திரிக்கு, இந்த நிறுவனத்தில் – எந்தவித “பங்கு”ம் இருக்காது
என்று நம்புவோம்…

முக்கியமான ஒரு விஷயம் – அண்மையில், மத்திய அரசின்
அமைச்சகங்களிலிருந்து ஆவணங்கள் களவாடப்பட்டது
தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில்,
எஸ்ஸார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரும் அடங்குவார்.

மத்திய அமைச்சரவைக் கூட்ட நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட
சில ஆவணங்கள் இந்த நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து
சிபிஐ யால் கைப்பற்றப்பட்டன….

இந்த மந்திரி மட்டுமல்லாமல், வேறு சில
அரசியல் “தலை”களையும்
இந்த நிறுவனம் “கவனித்து” வந்த செய்தியும்
வெளியாகி இருக்கிறது.

எல்லாம் சரி – இப்போது நமது முக்கிய கவலை என்ன …?

மத்திய தரை வழி மற்றும் நீர் வழி – கப்பல்
போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிப்பவர். மத்தியில்
பொறுப்பேற்ற பிறகு, கடந்த 8 மாதங்களுக்குள் இவர் ஆற்றிய
பணிகளில் முக்கியமானது –

இந்தியா முழுவதுமாக, 104 நீர் வழித்தடங்கள் போக்குவரத்துக்காக
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் 51 நீர் வழித்தடங்கள்
விரைவிலேயே சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக
ஒப்பந்தங்களுக்கு விடப்படவிருக்கின்றன.

மேற்படி கம்பெனியிடம் 30 + 7 நடுத்தர, சிறிய கப்பல்கள்
ஏற்கெனவே உள்ளன. குறுகிய கால அவகாசத்தில்
மேலும் எத்தனை வேண்டுமானாலும் வாங்க அதற்கு வசதி உண்டு.
எத்தகைய புதிய தொழில்களில் வேண்டுமானாலும் ஈடுபட
அந்த கம்பெனி சகல வசதிகளுடன் தயாராக இருக்கிறது….

என்ன தான் ஈ டெண்டர், ஈ ஆக்-ஷன் என்றெல்லாம்
கூறிக்கொண்டாலும், இவை அனைத்தும் நேர்மையான முறையில்
நடத்தப்படுவது, சம்பந்தப்பட்ட இலாக்காக்களை நிர்வகிக்கும்
அமைச்சரை பொறுத்தது தானே …?

கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பந்தப்பட்ட காண்டிராக்டுகள்,
திட்டங்கள், வேலைகளை – முடிவு செய்யும் பொறுப்பில்
இவர் இருக்கிறார்.

இன்னொரு ஆ.ராசா உருவாகிக் கொண்டிருக்கிறாரோ ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to ( பகுதி-2 ) -மத்திய மந்திரியும் சொகுசு கப்பல் வாசமும் …..

 1. Ganpat சொல்கிறார்:

  நம் (இந்தியர்களின்) விதியே,
  “ரசத்தில் ——- விழுந்துடுத்து .தெளிவா ஊத்து!”
  என்று ஆகி விட்டது.
  எப்படி இருந்த நாம் எப்படி ஆயிட்டோம்!
  😦

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத் ஜி,
   நிலைமை மிகவும் மோசம்தான்.

   //நல்லதைப் பாராட்ட வேண்டும்.
   கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
   (இன்றில்லா விட்டாலும் நாளையாவது
   மாறுமல்லவா ? )
   அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
   ஆபாசமின்றி எழுத வேண்டும்.//

   நிச்சயம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

   ஆனால் நீங்கள் இப்படி ஒரு உதாரணத்தைக் கூறுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை ஜி.

   இதுபோன்ற வார்த்தைகளை இங்கே எழுதிக் குவிக்க விரும்புபவர்களுக்கு இரு ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடும் என நான் அஞ்சுகிறேன்.

   • Ganpat சொல்கிறார்:

    நண்பரே ,நான் எந்த வார்த்தையும் குறிப்பிடவில்லை ஆனாலும் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து இம்மாதிரியான உதாரணங்களை இனி போடாமல் இருக்கிறேன்.

 2. Ramachandran. R. சொல்கிறார்:

  O my God – இந்த ஆசாமி இவ்வளவு பெரிய ஊழல் கேசா ?
  நீங்கள் சொல்வது போல் இது இன்னொரு ஆ.ராசா தான் !

  கண்பத் சார் சொல்வது போல் முன்பிருந்ததை விட
  மோசமான நிலைக்குத்தான் நாம் போய் விட்டோம்.

 3. sinnadurai-Trichy சொல்கிறார்:

  this central minister was defended to the hilt by Auditor Gurumoorthy when his benami accounts were brought to public notice. Nitinji is also an authentic representative of RSS leader Mohan Bagawat.. KM ji I would like to know more about his removal from BJP presidentship and his re-induction into Modi’s cabinet. Will you please throw some light on this?.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சின்னதுரை,

   கொள்கைப்பிடிப்பும், லட்சிய வெறியும் கொண்ட
   தீவிர தேசபக்தர்களையும், நாட்டில் பேரிடர்கள்
   நேரிடும்போதெல்லாம் எந்தவித தயக்கமுமின்றி
   முன்சென்று உதவக்கூடிய சமூக நல ஆர்வலர்களையும்
   கொண்டதாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் –
   முன்னொரு காலத்தில்…….

   சுயநலமும், மத, இன, மொழி வெறியும் முன் நிற்க,
   நாட்டையே தங்கள் வசப்படுத்த முயலும்
   புத்திசாலி criminals and crooks -களை உருவாக்கிக்
   கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் –
   இன்றைய கால கட்டத்தில்…

   நீங்கள் கேட்டிருக்கும் விஷயங்கள் குறித்து –
   நான் ஆதாரபூர்வமாக அறிந்தவை கொஞ்சம் தான்…!
   இன்னும் விஷயங்கள் கிடைக்கும்போது –
   அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Mr.X சொல்கிறார்:

  I’ve been reading your blog for last six month, have not seen single article against ADMK as if they are giving good governance. My opinion is ADMK is just like other parties out there doing all insane things and corruptions, I could search some of your pro ADMK article, with this you do not have any credibility to criticize other parties so either be neutral else announce yourself as pro ADMK. That makes sense to readers that you write all articles are with your predetermined view.

  thanks.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,( Mister “X” )

   சாதாரணமாக நான் “அநாமதேயங்களுக்கு”
   பதில் சொல்வதில்லை. இங்கு அனுமதிப்பதும் இல்லை.
   இருந்தாலும், இங்கு – உங்களுக்கும்,
   உங்கள் பின்னால் இருப்பவர்களுக்கும் –

   ஏற்கெனவேயே எனக்கு வந்து கொண்டிருக்கும்
   சில தனிப்பட்ட மிரட்டல்களுக்கும் சேர்த்து
   கொஞ்சம் விளக்கமாகவே
   இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.

   இந்த வலைத்தளத்தில் நான் எதை எழுத வேண்டும்,
   எதை எழுதக்கூடாது என்று சொல்வதற்கு உங்களைப் போன்ற
   எவருக்கும், எந்தவித உரிமையும் இல்லை.

   நான் சுதந்திரமானவன்.
   யாரையும், எதையும் – ஆதரித்தோ, எதிர்த்தோ எழுதுவது
   என் உரிமை. நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் எதையும்
   எழுத அந்த சட்டங்களே எனக்கு உரிமை அளிக்கின்றன.

   இந்த வலைத்தள நண்பர்களை,
   என்னை நேசிப்பவர்களை – உங்களைப்போல்
   கட்சிகளின், தனிப்பட கட்சித் தலைவர்களின் அடிமைகள்
   என்று நினைத்து விட்டீர்களா ?

   எனக்கு அதிமுகவை ஆதரிக்க வேண்டுமென்று தோன்றினால்,
   தாராளமாக – வெளிப்படையாகவே அதைச் செய்வேன்.
   ஏற்கெனவே செய்திருக்கவும் முடியும்.
   யார் அதைத் தடுக்க முடியும் ?

   என்னை விட புத்திசாலிகள் இந்த வலைத்தள நண்பர்கள்.
   எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுபவர்கள்.
   தவறான விஷயங்களை யாரும் இங்கு எழுத முடியாது.
   சமயங்களில் நானே அசந்தாலும் கூட, இதன் தரத்தை
   தாங்கி நிற்பவர்கள் அவர்கள் தான்.

   இந்த வலைத்தளத்தைப் பற்றி உங்களிடமிருந்து
   எனக்கு எந்தவித சர்டிபிகேட்டும் தேவை இல்லை.

   போங்கள் – யாருக்காக இதை எழுதினீர்களோ
   அவர்களிடமே போய் உங்கள் இயலாமையை
   தெரிவித்து விடுங்கள்.

   – வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Ramachandran. R. சொல்கிறார்:

   Mr.X,

   Do you think readers of this blog are set of fools to accept whatever is
   fed to them ?
   Only a distilled Idiot can come to such conclusion.

   Each and every Article in this blogsite are authentically written
   with all supporting information/news items. Every article is being
   discussed here threadbare in a very decent and
   straightforward way.

   We are the Pround-Readers of this blog and we undertake to protect it
   and K.M.sir from any of the intruders like you.

   May be – the articles and contents are not to your liking. We are helpless;
   You may find out some other site which fulfils your expectations.

   K.M.sir,

   Please Ignore people like X, Y, and Z.
   It is better either you do not allow or delete comments like of Mr.X.
   We are with you. Go ahead with all your energy.
   We pray God bless you.

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே (X)
   பதிவுக்கு சம்பந்தமாக ஏதேனும் கருத்துக்கள் (இருந்தால்) பின்னூட்டமிடுங்களேன். மற்றபடி பதிவர் எதைப்பற்றி எழுதவேண்டும் என்று உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை அவருடைய தனிப்பட்ட மின்னஞ்சலில் குறிப்பிடலாமே. ஆறுமாத காலங்கள் மட்டும் இடப்பட்ட பதிவுகளைப் பார்த்தே காமை ஒரு pro ADMK என்று நீங்கள் கருதமுடியுமானால், உங்களது ஒரு பின்னூட்டம் மட்டுமே போதுமே நீங்கள் ஒரு con ADMK என்று கருத….

   //My opinion is …………. // பதிவுக்கு சம்பந்தமில்லாதவற்றைப் பற்றி உங்களுடைய கருத்தை நீங்கள் தயவுசெய்து ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் எழுதுங்கள். மற்றவர்கள் சுவரில் வந்து உங்கள் கருத்தை அதுவும் பதிவுக்கு சம்பந்தமில்லாதவற்றை எழுதவேண்டாம்.

   //That makes sense to readers that you write all articles are with your predetermined view./// ஏன் இருக்கக்கூடாதா என்ன? நிகழ்வுகளைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு predetermined view இருக்கத்தான் செய்யும். கா.மை.க்கு இருக்கக்கூடாதா? ஏன் உங்களுக்கு என்று ஒரு predetermined view இருக்கிறது அல்லவா? பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்களை துவைத்துப் பிழிந்து அலசி ஆராய்ந்து காயவைத்து அயர்ன் பண்ணி நாங்கள் உடுத்திக்கொள்கிறோம். உங்களுக்கு என்ன வந்தது?

   ஓ….. துவைத்துப் பிழிந்து அலசி ஆராய்ந்து காயவைத்து அயர்ன் பண்ணி……… இந்த வேலைகள் எல்லாம் சோம்பேறிகளால் முடியாது. பதிவர் வாழைப்பழத்தை உரித்து கொடுத்தால்கூடப் போதாது, அதையும் வாயில் வைத்தால் விழுங்க மட்டும் செய்வார்கள். அதற்கும் யாராவது ஆள் தேடும் non-sense readersஇடம் சொல்லுங்கள் உங்கள் கருத்தை. இங்கே பின்னூட்டமிடும் ரீடர்கள் எல்லாரும் sensible தான் .

   நன்றி.

  • Siva சொல்கிறார்:

   Mr X (good name! Looks like Chinese name!),
   You got a valid point to ask the blog writer whether his writing is neutral or biased to one party. However, a just few month browsing in this blog has masked your thinking. That’s why you raised the doubt about the political neutrality of this blog writer. For your clarification, he is neutral and unbiased. He does not support any particular party.

   In fact, he and we are trying to make a culture in Tamil-reading society that people should think unbiased way and independent of any party or ‘ism’. So your doubt is meaningless.

   Join with us and try to improve our discussion in a honest and unbiased manner in the future topics. Let us work to develop a good culture among Tamil-reading society!

   • Siva சொல்கிறார்:

    Even if you belong to some party, do not hesitate to bring ur point of view. If it is good, you will be welcome. If it is biased and bad opinion, you will get a good lesson here!

 5. Sridhar சொல்கிறார்:

  Mr.X, you are welcome to write in your blog all the misdeeds of ADMK after doing research and keeping the papers ready.

  Your pro DMK face is out and you are trying to provoke and see if you can fan your aspirations.

  Mr.KM and his fans can see light and do not expect your fox cunningness to work here.

  Better luck in some other post.

  Sridhar

  • Mr.X சொல்கிறார்:

   Mr.Sridhar, I’m not the blogger nor have any hidden agenda. please grow up, if someone is asking for fair article on ADMK(in the absence) that does not mean that he is pro DMK or anyother party. all I’m looking for is make your stance clear on your political view that makes sense to the reader of this blog. I don’t think you guys only writing the blog only for blogger.

   thanks for your response.

   • today.and.me சொல்கிறார்:

    // I’m not the blogger nor have any hidden agenda.//
    May be. But your irrelevant response to the post by KM is not looking like that.

    // please grow up // Same to you.

   • sridhar சொல்கிறார்:

    Mr.x, thanks for wishing me to grow up and by god’s grace, I have the sanity to reject your wishes. I have been in blog since 2005 and have the little ability to see thru the intentions by the comments.
    If you are not a pro DMK person you would not have accused Mr. KM as pro ADMK.
    Better luck next time in teasing me with your insane words.

    Sridhar

 6. drkgp சொல்கிறார்:

  It is a well established case of misappropriation of funds during his previous avatar
  in Maharastran politics. It was a case of drivers , gardeners and cooks investing
  crores in Purti group companies owned by this minister’s family. Many eyebrows
  were raised when the respectable auditor Gurumoorthy defended those actions
  by this present minister. That was the time I decided to straighten my ideas about
  RSS. Can these people defend any atrocity perpetrated by somebody if he
  belongs to the organization ? RSS WAS really a gift to the society in the early days.

 7. today.and.me சொல்கிறார்:

  //இன்னொரு ஆ.ராசா உருவாகிக் கொண்டிருக்கிறாரோ ….?//

  ஒரு ராசாவையே நாடு தாங்கமுடியவில்லை. இதிலே
  ஆ…….. இன்னொரு ராசாவா?
  🙂 🙂
  மக்களெல்லாம் மாக்களாக இருக்கும்வரையில் மந்திரி எல்லாரும் ராசாதான்.

 8. Ganpat சொல்கிறார்:

  X ஒன்றை நினைத்துப்பாருங்கள்.
  மோடி மீது குற்றம் சொன்னால் சோனியா ஒழுங்கோ என்று கேட்பது.
  ஜெயா மீது குற்றம் சொன்னால் கருணா ஒழுங்கோ என்று கேட்பது.
  பயங்கரவாதிகளை தூக்கில் போடநினைத்தால் மரண தண்டனை கூடாது என்பது
  பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தண்டித்தால் அது மனிதாபிமானமற்ற செயல் என்பது
  இவ்வளவு ஏன்?
  தெருவில் ஒரு வெறி நாயை அகற்ற நினைத்தால் அதிலும் குற்றம் காண்பது.
  என்ன நடக்கிறது இங்கே?
  மேற்கண்ட அனைத்தையும் செய்வது இந்த நாட்டு நலனில் சிறிதும் அக்கறையின்றி ஏழை எளிய மக்கள் எக்கேடு கேட்டால் என்ன என்று வாழும் சுயநல வாதிகள்.இத்தளத்தில் அவர்களைத்தான் தோலுறுத்துக்கொண்டிருக்கிறார் காவிரி மைந்தன்.
  ஏதாவது கருத்துள்ள சிந்தனையை யார் வேண்டுமானாலும் இங்கு பகிரலாம்.
  மற்றவர்கள் சென்று விடலாம்.

  • Sharron சொல்கிறார்:

   Yes you are right.Only people with real passion for India & the ordinary people will welcome Mr.K.M.sir’s articles.Others [those who are tied up to a certain party] will try to find fault only.

 9. bandhu சொல்கிறார்:

  கா மை சார்.. நீண்ட நாட்களாய் என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம்.

  அரசியல்வாதிகள் என்பவர்கள் ஊழல் செய்யாமல் பதவியில் இருக்கும்போதும் இல்லாத போதும் வருமானம் ஈட்ட வழி என்ன? பதவியில் இருக்கும்போது சம்பளம் வரும். பரவாயில்லை. இல்லாத போது? வைகோ அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த இருபது வருடத்துக்கு மேலாக எந்த பதவியிலும் இல்லை. கட்சி நடத்துகிறார். அதற்க்கு ஒவ்வொரு கூட்டத்திற்கும் எவ்வளவு செலவாகும்! அதே போல போராட்டங்களுக்கும். இவற்றிற்கெல்லாம் எங்கிருந்து பணம் வரும்?

  நன்கொடை என்றால், யார், எதற்குக் கொடுக்கிறார்கள்? கொள்கை என்பது எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் கொள்கைக் காக நன்கொடை கொடுக்கிறார்கள் என்பதை யாருமே நம்பமுடியாது. அதனால் பின்னால் அவர்கள் மூலம் வரும் லாபத்திற்காக என்பது தான் உண்மை. இல்லையேல் சொந்த சொத்தை செலவழித்து கட்சி வளர்க்கும் ஏமாளிகளாக இந்த தலைவர்கள் இருக்க வேண்டும்! அது போல யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

  நேர்மையான பதவியில்லாத அரசியல்வாதி எப்படி பிழைப்பு நடத்துவார்? இதற்க்கு வழி இல்லை என்றால் நேர்மையான அரசியல்வாதி வேண்டும் என்று நம்மால் எப்படி ஆசைப்பட முடியும்? நேர்மையாக யாராவது இருந்து எல்லா தியாகத்தையும் செய்து கட்சியை வளர்த்தால் நான் அவருக்கு ஓட்டு போடுவேன் என்பது என்ன லாஜிக்?

  இந்த விஷயத்தில் கம்யுனிஸ்ட் கட்சி நடை முறையை முழுமையாக வரவேற்கிறேன். உண்டி குலுக்கி அதில் வரும் பணத்தில் கட்சி நடத்தும் வழியைப் பார்க்கிறார்கள் (நான் ஒரு அப்பாவி என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை!)

  எனக்கும் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வழி தெரியவில்லை. இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டால் இதை விவாதிக்கலாமே என்று எழுதுகிறேன்.

  • Siva சொல்கிறார்:

   Bandhu,
   You have a valid point. Most of the things in this earthly life/world are run by money. It’s hard to content with ethical means of money making. However, it is duty of every one to practice this habit. If we start from ourselves, our locality, our family, our town….like in that way if we proceed, one day we can make a change.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பந்து,( Bandhu )

   நீங்கள் கூறுவது உண்மை. உங்கள் அக்கரையை
   பாராட்டுகிறேன். நேர்மையான பொது வாழ்வை
   விரும்பும் பலருக்கும் இது ஒரு பிரச்சினை தான்.

   நான் நாளைய தினம் பதிப்பிப்பதற்காக என்று தற்போது
   ஒரு இடுகை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனையொட்டி,
   இதைப்பற்றி விவரமாக விவாதிப்போமே…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.