“தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் …தமிழக எம்.பி.க்களுக்கு … ???

“தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு
வாழ்த்துக்கள் …

thanthi -hariharan-1

அண்மையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய,
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே- யுடனான பேட்டி
பெரிய அளவில் புகழ் பெற்று விட்டது.

இலங்கையில் யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும்,
அவர்கள் சிங்கள வெறியர்களாகவே இருப்பார்கள் என்பதையும்,
அவர்கள் எப்போதும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல்,
தமிழக தமிழர்களுக்கும் எதிராகவே செயல்படுவார்கள்
என்பதையும் அற்புதமாக வெளிப்படுத்தியது அந்த பேட்டி.

அறுபதைத் தாண்டிய, அரசியலில் பழம் தின்று கொட்டையும்
போட்ட அனுபவஸ்தர் ரனில் விக்ரமசிங்கேயின் வாயைக்கிளறி,
தமிழர்களுக்கெதிரான அவரது அப்பட்டமான வயிற்றெரிச்சலை
வெளிக்கொண்டு வந்து காட்டியது அந்த பேட்டி.,

பேட்டி எடுத்தவர் ஹரிஹரன் என்கிற 30-35 வயதைத்தாண்டாத
தமிழ் இளைஞர். அற்புதமான முன்-தயாரிப்புடன் (home work )
பேட்டிக்குச் சென்று, சிரித்த முகத்துடன், அஞ்சாமல்
பிரச்சினைக்குரிய கேள்விகளைக் கேட்டு, பதிலையும் வாங்கிய
அந்த திறமைசாலி இளைஞர் தமிழ் மக்கள் அனைவரின்
பாராட்டுதல்களுக்கும் உரியவர். இத்தகைய இளைஞர்கள்
ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

வாழ்த்துக்கள் – ஹரிஹரன்….!!!
இதுபோல் இன்னும் சிறப்பாக பல பேட்டிகள் நடத்துங்கள் –
உங்களைப் போன்ற ஆர்வமுள்ள, திறமைசாலியான இளைஞர்கள்
தான் இன்றைய தமிழகத்தின் தேவை.

இது விஷயம் – நேற்று மதியம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு
வந்தது. நோட்டீஸ் கொடுத்திருந்தது ஒரு வட இந்திய எம்.பி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் பேசினர்.
ஆனால் என்ன பயன் …?

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் – ரனில் விக்ரமசிங்கே யிடம்
தான் நேரடியாகவே, அப்படி பேசியிருக்கக்கூடாது என்று சொல்லி
விட்டு வந்ததையே பெரிய சாதனையாக விளக்கி –
தொடர்ந்து “புரியாத” இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் என்ன சொல்கிறார் என்பதே விளங்கவில்லை போலும் –
தமிழக எம்.பி.க்களிடமிருந்து ரீ-ஆக்ஷனே இல்லை.

முக்கியமாக “கச்சத்தீவு” பற்றி ஒரே வார்த்தையில் –
விஷயம் சுப்ரீம் கோர்ட் முன் நிலுவையில் இருப்பதால்,
தான் இங்கு விவாதிக்க முடியாது என்று கூறி விட்டு
போய்க்கொண்டே இருந்தார்.

அருமையான ஒரு சந்தர்ப்பத்தை தமிழக எம்.பி.க்கள்
தவற விட்டு விட்டனர்.

கச்சத்தீவு பற்றி விவாதிக்க முடியாது – சரி.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
எத்தகைய நிலையை முன்வைக்கப்போகிறது …,?
முந்தைய காங்கிரஸ் அரசு எடுத்த அதே நிலையைத்தானா?
அல்லது
பாஜக தலைவர் வாஜ்பாய் அப்போதே,
பாராளுமன்றத்தில் கூறிய “கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது”
என்கிற நிலையையா என்று உடனேயே கேட்டிருக்க வேண்டும்…

தவறி விட்டார்கள்….!
என்ன செய்வது – இவர்களை குட்டவா முடியும் …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to “தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் …தமிழக எம்.பி.க்களுக்கு … ???

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  வாழ்த்துகள் ஹரிஹரன், இன்றைய தினத் தந்தி செய்தியில்,
  http://www.dailythanthi.com/News/India/2015/03/10025733/Prime-Minister-Narendra-Modi-todays-visit-to-3-countries.vpf
  இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் ‘‘தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசமாட்டார்’’ என்று தகவல்

  • today.and.me சொல்கிறார்:

   நண்பரே (புது வசந்தம்)

   புகைப்படத்தை எப்படி பின்னூட்டத்தில் இணைத்தீர்கள் என்று கொஞ்சம் எனக்கு கூறினால் உதவியாக இருக்கும்.

   புகைப்படத்தில் இருவரின் போஸ்-மே மிகவும் அருமை. எந்தச் சந்தர்ப்பத்தில் இது இப்படி அமைந்தது என்றும் எழுதியிருந்தீர்களானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 🙂

   • புது வசந்தம் சொல்கிறார்:

    இன்றைய தினத்தந்தியில் பிரசுரமாகியுள்ளது. காஷ்மீர் சம்பந்தமான விவாதம் என்று உள்ளது. எனக்கு அந்த படம் வேறு ஏதோ உணர்த்துவதாக இருந்தது, ஆகையால் பகிர்ந்தேன்.
    http://www.dinathanthiepaper.in/
    பக்கம் 10,இதில் புகைப்படத்தை தேர்வு (click) செய்தபின்னர், புகைப்படம் மட்டும் தனியாக வரும், அதன் மேல் right mouse click செய்யவும். முயற்சியுங்கள், வாழ்த்துகள். மேலும் விவரம் தேவையெனில் மின்அஞ்சல் முகவரி தரவும்.

 2. S.Selvarajan சொல்கிறார்:

  கேரளத்தில் மீனவர் இறந்தால் அதை பூதாகர பிரச்னையாக மத்திய அரசு அணுகுகிறது. ஆனால், அதே அக்கறையை தமிழக மீனவர்கள் விவகாரத்தில் காட்டத் தவறுவது ஏன்? கச்சத்தீவை திரும்பப் பெறும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று .நவநீதகிருஷ்ணன் (அதிமுக):எம்.பி. பேசியுள்ளார் … ! இதே போல் அனைத்து எம்.பி.களும் —பா.ஜ.க. எம்.பி தருண் விஜய் உட்பட பேசியது இன்றைய தினமணி செய்தி …!! முதலில் மாநிலங்களவை திங்கள்கிழமை காலையில் தொடங்கியதும் இப்பிரச்னையை எழுப்ப தமிழக உறுப்பினர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் அனுமதியளிக்கவில்லை.பின்னர் தான் அனுமதி கொடுக்க பட்டது என்பதையும் எம்.பி.க்கள் தங்களால் எயன்ர அளவு பேசியுள்ளார்கள் என்பதையும் செய்திகள் மூலம் அறிய முடியும்போது — ” கொட்டுவது தேவை இல்லாதது ” ….!!! அதிகாரம் கையில் உள்ள மோடி அரசாங்கமும் —- இன்று இலங்கை பயணம்செல்லும் பிரதமரும் — என்ன கிழிக்க போகிறார்கள் என்று பார்ப்போம் ? அதேபோல் உச்ச நீதிமன்றத்தில்மத்திய அரசு கட்ச தீவு பற்றி கூறியதும் —- இனி கூறபோவதும் எப்படி என்றும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் ?

 3. today.and.me சொல்கிறார்:

  பேட்டியைப் பார்க்காதவர்களுக்காக:

 4. jothiganesan சொல்கிறார்:

  கடந்த ஆயிரம் ஆண்டு இலங்கை சரித்திரத்தில் தமிழர்களாக இருந்து சிங்களர்களாக அவர்கள் மாறினாலும் கடைசி வரைக்கும் இனவாத சிங்களனாகத்தான் அவர்கள் எப்போதும் இருக்கின்றார்கள். நாம் தான் (அங்கே) நான்கு வித தமிழர்களாக வாழ்த்து கொண்டிருக்கின்றோம்.

  • Siva சொல்கிறார்:

   Dear Jothiji,
   I agree with ur arguement in this matter, as I do in your blog writings.

   When all CEYLON Tamils unite themselves and work together, then only they can see a light in the end of tunnel. Otherwise, they have to live in dark and make discomfort for other Tamils in sentimentally.
   Tamils are 20 lakh people (may be not exact) in ceylon. They have only one problem ( self determination of thier birth right). But they had/have more than 200 groups for fighting toward a single cause! You cannot see this irony No where in world history!

 5. மணிச்சிரல் சொல்கிறார்:

  இலங்கையின் பிரதமர் கூறியதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. இந்திய கடற்பரப்பில் மீன்கள் இல்லை. அதனால் அவர்கள் சர்வதேச எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கிறார்கள். ஒப்பந்தத்தின் படி கச்சதீவினூள் மீன் பிடிக்கலாம், ஆனால் “Bottom_trawling” பண்ண கூடாது. வளங்களை கவனத்தில் கொண்டு தான் கூறுகிறார் என்றால், நமது அரசாங்கமும் இதில் தலையிட வேண்டும்.

  வளங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு நாடும் அதை தடுக்கலாம். உபயம்:- http://en.wikipedia.org/wiki/Bottom_trawling#Current_restrictions. மீறுபவர்கள் அந்நாட்டின் கடற்படையினாரால் தண்டிக்க படலாம்.
  வாழ்வாதாரங்கள் இல்லையென்றால், எப்படி ஒரு உயிரினத்தால் வாழ முடியும். வாழ்வாதாரங்களை சிறிது சிறிதாக அழிக்கும் எந்த ஒரு செயலையும், அரசாங்கம் தொலைநோக்கு பார்வை கொண்டு தடுக்க முடியும்.

  நாம் தடுக்க தவறிவிட்டோம். அதன் விளைவாக அவர்கள் முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.
  நாம், நாளையென்ற சிந்தனையின்றி, லாபம் என்ற நிபந்தனைக்கு தள்ளபட்டதால் தான், இன்று அவர்களின் இடத்திற்கு செல்ல வேண்டியதாயிற்றோ? என்ற கேள்வியும் எழுகிறது.

  யாருடைய நோக்கத்தையும் கருத்தில் கொண்டோ அல்லது சார்பாகவோ இதை எழுத வில்லை.
  புன்னகையுடன் ஒரு கேள்வியும் அதைத் தொடரும் தீர்மானமும் மட்டுமே இதை பற்றி கொஞ்சம் எழுத தூண்டியது.

 6. yogeswaran சொல்கிறார்:

  Dear Manichiral,

  hats off.

  our tamils are emotional people.

  they will finish all the fish using any type of technology.

  once the fish in nothern seas are fifished they may go even south of sri lanka.

  its not the fisher men.

  they are working for big business men.

  yogi

 7. drkgp சொல்கிறார்:

  Mr Manichiral, the same sentiments were echoed in this blog by another
  follower and was even mentioned that many of these boats were owned by
  powerful men on our side. However issuing death treats by a ruling PM
  Is unacceptable.

 8. drkgp சொல்கிறார்:

  Mr Jothiganesan, you are talking about the mental divide
  among Lankan Tamils. If it is a political one, we can expect
  convergence at least in some distant future.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.