மோடிஜிக்கும் தெரியாமலே ராஜபக்சேவை கவிழ்த்ததா “ரா” நிறுவனம் ….!!!

suhasini and rajapaksa

மோடிஜி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும்
இந்த வேளையில், டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் மகளும்,
இந்து ஆங்கில செய்தித்தாளில் பணிபுரிபவருமான,
திருமதி சுஹாசினி ஹைதர் – இலங்கையில், ராஜபக்சேவை
நேரில் பேட்டி கண்டு – ஒரு பரபரப்பான செய்தியை இன்று
வெளியிட்டிருக்கிறார்.

திருமதி சுஹாசினிக்கு அளித்த அந்த பிரத்தியேகப் பேட்டியில்,
ராஜபக்சே வெளிப்படையாகவே இந்திய உளவு நிறுவனம்
“ரா” – எதிர்க்கட்சியினரையும், தன்னிடம் அமைச்சராக இருந்த
மைதிரிபால சிறிசேன, சந்திரிகா, ரனில் விக்ரமசிங்கே
ஆகியோரையும் ரகசியமாக தனக்கெதிராக ஒன்றிணைத்து,
தன்னை வீழ்த்த திட்டமிட்டு செயல்பட்டது என்று குற்றம்
சாட்டி இருக்கிறார். இந்த கூட்டுச்சதியில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ.
மற்றும் பிரிட்டனின் உளவு நிறுவனம் எம்-16 ஆகியவற்றிற்கும்
பங்கு உண்டு என்றும் கூறி இருக்கிறார்.

“இதற்காகத்தான் நான் – கொழும்பில், இந்திய தூதரகத்தில்
இருந்த “ரா” உளவு நிறுவன அதிகாரியை வெளியேற்ற
வேண்டும் என்று திரும்பத்திரும்பக் கோரினேன். ஆனால் –
சதி முழு வடிவம் பெற்ற பிறகு தான் அவர் வெளியேறினார்.”
என்கிறார் ராஜபக்சே.

பிரதமர் மோடிக்கு இதில் பங்கு இருக்கிறது என்று
சந்தேகிக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு –

“இல்லை. மோடி அண்மையில் தானே பதவிக்கு வந்தார்.
இந்த சதித்திட்டம், 2 வருடங்களுக்கு முன்பாகவே துவங்கி
விட்டது” (அதாவது திரு.ம.மோ.சிங் + திருமதி சோனியா காந்தி
ஆட்சிக்காலத்தில் …!)- என்று கூறி இருக்கிறார் ராஜபக்சே.

அதாவது மோடிஜிக்கு தெரியாமலே இந்திய உளவு நிறுவனம்
செயல்பட்டிருக்கிறது என்கிறார் ராஜபக்சே …
நடக்கக்கூடிய காரியமா இது ….?

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின்
உளவுத்துறைகளும் ஒன்று சேர்ந்து இதில் இறங்கியதற்கு
காரணம் – ஈழத்தமிழர் படுகொலை, நியாயமான விசாரணைக்கு
ஒத்துழையாமை ஆகியவையாக இருக்குமோ என்று
யாரும் அவசரப்பட்டு எண்ணி விடாதீர்கள்….!

ராஜபக்சே சீனாவுடன் நெருங்கிப் பழகியதை –
இந்த 3 நாடுகளும், விரும்பவில்லை என்கிறார் அய்யா…!!!

———————-

பின் குறிப்பு – இந்தியப் பிரதமர் மோடிஜி, ராஜபக்சேயை
சந்திக்க வேண்டும் என்கிற தன் விருப்பத்தை தெரிவிக்க –
ராஜபக்சேயும் ஒப்புக்கொள்ள – நாளைய தினம் (14/03/2015)
இருவரும் கொழும்பில் சந்திக்கிறார்கள்….!!!

இலங்கை அரசியல் நிலவரத்தைப் பொருத்தவரை –
ராஜபக்சே இன்னும் சிங்கள வாக்காளர்களிடையே மிகுந்த
செல்வாக்குடன் இருப்பதாகவே செய்திகள் சொல்கின்றன.
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு,
மீண்டும் (முழு அதிகாரம் பெற்ற ) பிரதமராக ராஜபக்சே
பதவிக்கு வரக்கூடிய விசித்திரமும் நிகழ வாய்ப்பு
இருப்பதை மறுப்பதற்கில்லை என்று செய்தியாளர்கள்
சொல்கிறார்கள்….

sswamy and rajapaksa

மோடிஜி – ராஜபக்சே சந்திப்புக்கும் – இதற்கும் எதாவது
தொடர்பு இருக்கக்கூடுமோ …?
யார் கண்டது – ஒரு வேளை அந்த “சாமி” க்குத் தெரியலாம் ..!!!

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மோடிஜிக்கும் தெரியாமலே ராஜபக்சேவை கவிழ்த்ததா “ரா” நிறுவனம் ….!!! க்கு 2 பதில்கள்

  1. எழில் சொல்கிறார்:

    ஈழத்தமிழர் படுகொலை, நியாயமான விசாரணைக்கு
    ஒத்துழையாமை ஆகியவையாக இருக்குமோ என்று
    யாரும் அவசரப்பட்டு எண்ணி விடாதீர்கள்….!

    You’ve hit the nail on its head sir!

    அதே போல் இதுவரை நடந்த போர்குற்ற விசாரிப்பு, இன அழிப்பு, பொருளாதார தடை என மேற்கு உலக நாடுகள் பேசியதும் தமிழர் மீது கொண்ட கரிசனை என்று யாரும் தவறாக எண்ணி விடாதீர்கள். உலக அரங்கில் இவ்வளவாவது உண்மைகள் வெளியே வர காரணமான சீனன் திசை நோக்கி தான் நாம் கும்பிட வேண்டும்.

  2. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    ஆக மொத்தம், எந்த வகையிலும் தமிழர்களுக்கு நன்மை நடக்கப் போவதில்லை.😦

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.