மோடிஜிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன உறவு …..? ஈவிகேஎஸ் இளங்கோவனின் நியாயமான கேள்வி…!!!

puthumani pugu vizhaa - pengal mugathil yane magizhchiye illai ...

( புதுமனை புகுவிழா நடத்துகிறார்களாம்….!!!
அந்தப் பெண்களின் முகத்தில் அதற்கான மகிழ்ச்சியை காணோமே..? ….ஏதோ கட்டளையிடப்பட்டு கலந்து கொள்வது
போலல்லவா தெரிகிறது …)

———————-

இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள
அறிக்கையிலிருந்து சில பகுதிகள் கீழே –

————–

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி
இலங்கை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது குறித்து பல்வேறு
செய்திகள் வெளிவந்துள்ளன.

1987-ல் இந்திய–இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக
அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொழும்பு சென்றார்.
அப்போது அதிபர் ஜெயவர்த்தனாவோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்
மூலமாகத்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு
ஒரே தமிழ் தாயகப் பகுதி உருவாக்கப்பட்டது.

அப்படி உருவான பகுதியின் இடைக்கால நிர்வாக கவுன்சிலின்
முதல்வராக வரதராஜ பெருமாள் தேர்வு செய்யப்பட்டார்.
சிங்கள மொழிக்கு இணையாக தமிழும் ஆட்சிமொழி என்ற
தகுதி பெற்றது.

ஒப்பந்தப்படி, முதலில் ஒப்புக்காக ஆயுதங்களை ஒப்படைத்த
விடுதலைப் புலிகள் பொருந்தாதக் காரணங்களைக் கூறி
மீண்டும் ஆயுதமேந்தி இந்திய அமைதி காக்கும் படை மீது போர்
தொடுத்தனர். அதன் விளைவாக ஒப்பந்தத்தின் செயல்பாடுகள்
தடைப்பட்டது.

ஆனால், இந்திய பிரதமர் வலியுறுத்தலின் பேரில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதே ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்ட உரிமைகளை உறுதி செய்யும் வகையில் செய்யப்பட்டதுதான் 13-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம். அதுதான் இன்றைய இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்புக் கவசம்.

அதன் அடிப்படையில் தான் அதிகாரப் பகிர்வு நடைபெற
வேண்டும். ஆனால், அது நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த
அன்றைய பிரதமர் ராஜபட்ச அதை செயலுக்குக் கொண்டு வர எந்த
முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசு பலமுறை
வலியுறுத்தியும், அதை அசட்டையுடன் புறந்தள்ளியது
அவரது பேரினவாத ஆணவப் போக்கையே வெளிப்படுத்தியது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஆணவ அரசியல் நடத்திய
ராஜபட்சவும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக
இருப்பதற்கு பல கருத்தொற்றுமைகள் உள்ளன.
பெரும்பான்மையினரை, சிறுபான்மையினருக்கு எதிராக
அணி திரட்டி ஆதரவை பெருக்குவதுதான் இவர்களது செயல்முறை
திட்டம். இவர் மதத்தின் பேரால் செய்கிறார்.
அவர் இனத்தின் பேரால் செய்கிறார். இவர்கள் இருவரும் நேற்று உதவியாளர்கள் துணையில்லாமல் தனிமையில் சந்தித்து
நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள்.

அதுவும் இந்த சந்திப்பு இந்திய அதிகாரிகளின்
வற்புறுத்தலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது என செய்திகள் கூறுகின்றன.

இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு, ராஜபட்ச அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தமது தேர்தல் தோல்விக்கு ‘‘ரா’’ இந்திய
உளவுத்துறைதான் முழுக்காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக
இந்த அமைப்பு சதி செய்து, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகளை
ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றுள்ளது’’ என்று பகிரங்கமாகக்
குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜபட்ச கூறிய குற்றச்சாட்டு மூலம் இந்தியாவின் பாதுகாப்பையே கண்காணித்து உறுதி செய்கிற உளவுத்துறையையே களங்கப்படுத்தி, இழிவுபடுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து எவரும் கடுமையான முறையில் மறுக்கவோ, ஆட்சேபனையோ தெரிவிக்க வில்லை.

ராஜபட்சவுக்கு எதிர்த்துக் கருத்துக் கூறுவதில் இந்திய அரசுக்கு
என்ன தயக்கம். நரேந்திர மோடியும், ராஜபட்சவும் நெருக்கமான
நண்பர்கள் என்பது தான் காரணமா? இதை விட இந்தியாவிற்கு
தலைகுனிவும், அவமானமும் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

125 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் உளவுத்துறை
அமைப்பையே, அண்டையில் உள்ள 2 கோடி மக்கள் வாழ்கிற
இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபட்ச கொச்சைப்படுத்திப்
பேச எங்கேயிருந்து வந்தது துணிச்சல்? இதைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவரோடு தனிமையில் கூடிக் குலாவுவது ஏன்? அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே, ராஜபட்ச வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக் கூறியவர் தான் நரேந்திர மோடி.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்சவை தோற்கடித்தது அங்கே
வாழ்கிற 25 லட்சம் தமிழ் பேசுகிற மக்களின் வாக்குகள் தான்.
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உடமைகளை,
உரிமைகளை பறித்த ராஜபட்சவை, நரேந்திர மோடி ஆதரிப்பது ஏன்? அரவணைப்பது ஏன்?

முன்னாள் அதிபர் ராஜபட்ச, இந்தியாவின் எதிரி,
சீனாவின் நண்பர். இலங்கையில் வாழ்கிற தமிழர்களின் ஒட்டு மொத்த எதிரி.

அங்கே வாழ்கிற தமிழர்களுக்கு எதிராக கொடிய அரசியலை நடத்தி இலங்கை மக்களால் தேர்தலில் வீழ்த்தப்பட்டு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ராஜபட்ச, நரேந்திர மோடி தாங்கி பிடிப்பதன் ரகசியம் என்ன? இதைவிட தமிழர்களுக்கு செய்கிற துரோகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

( http://www.dinamani.com/latest_news/2015/03/15/%E0%AE

%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F

%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88-%E0%AE

%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE

%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE

%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F

%E0%AE%BF%E0%AE%AA/article2714712.ece )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to மோடிஜிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன உறவு …..? ஈவிகேஎஸ் இளங்கோவனின் நியாயமான கேள்வி…!!!

 1. malolan சொல்கிறார்:

  This question can be raised by any other party except Congress and DMK. They do not have moral ground to raise this

 2. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  மன்மோகன் ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் முதல் தவணையாக இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு வழங்கினார்கள். ஆனால் கட்டினார்களா? என்ன செய்தார்கள்? என்று கேட்கக்கூட நாதியில்லாமல் இருந்தது. இப்போது 46000 வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகின்றது. அடுத்த கட்டம் இதில் மீதம் உள்ள ஆயிரம் வீடுகள் தவிர அடுத்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்த முறை மோடி சென்றது முழுக்க முழுக்க இந்தியாவிற்கு சாதகமான வணிக ஒப்பந்தம் பொருட்டு தான் என்ற போதிலும் அவர் செய்துள்ள காரியங்கள் அனைத்தும் பாராட்டக்கூடியது. ஒரு பக்கம் ராஜபக்ஷே. மற்றொரு பக்கம் தமிழ் தலைவர்கள். இன்னோரு பக்கம் சந்திரிகா அடுத்த பக்கம் மைத்திரி.

  என் பக்கம் இல்லாவிட்டால் உன் எதிரிகளை நான் வளர்த்து விட தயாராக இருப்பேன் என்று மறைமுகமாக உணர்த்தி விட்டு வந்துள்ளார் என்றே தெரிகின்றது. காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஈழம் குறித்துப் பேச ஒரு சதவிகிதம் கூட அருகதை இல்லை என்பதே என் கருத்து.

  • karan சொல்கிறார்:

   நீங்கள் எழுதியதுதான் உண்மையான விமர்சனம் என்பது அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்ந்து நடுநிலையுடன் எழுதி உள்ள உங்களுக்கு பாராட்டுக்கள்

 3. Ganpat சொல்கிறார்:

  காங்கிரசும் திமுகவும் எந்த கேள்வியும் கேட்க உரிமை இல்லை.இரு கட்சிகளும் அழிய வேண்டியவை.

 4. சக்தி சொல்கிறார்:

  ஈழத் தமிழர்களின் அன்றைய வரலாற்றில் இருந்து இன்று வரை தொடர்ந்து வருகிறவன் என்ற முறையில்………………..

  மோடியின் இலங்கை விசயம் வணிக ஒப்பந்தம் தவிர எந்தவிதப் பலனும் இல்லை என அங்குள்ள தமிழர்களின் இன்றைய கருத்துகள் தெரிவிக்கின்றன. மேலே குறிப்பிட்ட 46 ஆயிரம் வீடுகளில் 40 நீக்கி விட்டுப் படிக்க வேண்டும். அடுத்து அந்த வீடுகளில் சில ஆயிரம் எந்தப் பாதிப்பையும் அடையாத தென் இலங்கை மக்களுகளைக் குடியேற்றிக் கொடுக்கப்பட்டதை வடக்கு முதல்வர் ஏற்கனவே ஆதாரத்துடன் தெரிவித்திருந்ததை கவனிக்க வேண்டும்.

  உண்மையை மறைத்து கருத்து இருக்கக் கூடாது. முன்னைய காங்கிரஸ் அரசில் தான் சில ஆயிரம் வீடுகள் உருவாகினவே தவிர இன்றைய பாஜக ஆட்சியிலல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மோடி ஆட்சியில் சில மீனவர்கள் உடனுக்குடன் விடுவிக்கப்பட்டார்களே தவிர வேறு எதுவும் உருப்படியாக நடக்கவில்லை. பாஜக தவிர வேறொருவர் மோடியின் விசயத்தைப் பாராட்டினார்கள் என்றால் அது நிச்சயமாக ஜோதிஜி மட்டுமே.
  பாராட்ட வேண்டியவர்கள் நாமல்ல, அங்குள்ள தமிழர்கள். வேண்டுமானால் வணிக ஒப்பந்தங்களுக்காகப் பாராட்டலாம்.

  மீனவர்களை சுடுவேன் என்ற இலங்கை பிரதமருடன் விருந்துண்டதைத் தவிர அதைக் கண்டிக்க துப்பற்ற மோடிஜியையும், வெளி நாட்டமைச்சரையும் பாராட்டும் பாஜக வினர் கொஞ்சம் உப்பையும் உணவுடன் சேர்க்க வேண்டும்.

  125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமர் சென்றதால் விடுவிக்கப்பட்ட நிலங்கள் 247 ஏக்கர் மட்டுமே என்றும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கட்டாயப்படுத்தி கூட்டி வந்து பொங்கிப் படம் பிடித்துக் கொண்டால் போதுமா? மொத்தமாக………..

  குப்பையைப் போட்டுவிட்டு பெருக்கிய மோடியின் கிளீன் இந்தியா போல், மேலே உள்ள படமும், படம் பிடித்து விளம்பரமாக்கி விட்டது தான் உண்மையாகும். மோடியின் இலங்கை விசயம் பயனற்ற வெற்றுக் காகிதமே.

  ஈவிகேஎஸ் இளங்கோவனின் அறிக்கை. அறிக்கையை அப்படியே போட்டது சரிதான். ஆனால் அதில் இருக்கும் ஒன்றாவது உண்மையா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  ஐயா சொல்லியது போல் கேள்வி மட்டுமே சரி இருக்கலாம். அதை சொல்வதற்கு அவருக்கு என்ன தகுதி உண்டு? ராஜபக்சேயை வளர்த்தவர்கள் அவர்கள்.இது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.

  அறிக்கையில் உள்ள பல பொய்களுக்கு விளக்கம் கூறிப் பதிவு இருந்திருக்குமானால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்தாகும்.

  • Siva சொல்கிறார்:

   I agree with your arguement!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சக்தி மற்றும் இதர நண்பர்களுக்கு,

   அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தது.
   என் நிலை உங்களுக்கு தெரிந்தது தானே ?
   சரி – முதலில் செய்தியை அப்படியே போட்டு விடுவோம் –

   திரும்ப வந்து நாம் எழுதுவோம் –
   அதற்குள் சில பின்னூட்டங்களும் வந்திருக்கும்
   என்றெண்ணி தான், தலைப்பையும், புகைப்படத்தையும் தவிர
   வேறெங்கும் எதுவும் கூறாமல், அறிக்கையை மட்டும்
   அப்படியே பிரசுரித்து விட்டுச் சென்றேன்.

   என் கருத்து –
   ( உங்களிடமிருந்து மாறுபட்டா இருக்கப் போகிறது …? )

   1) ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமல்ல,
   காங்கிரஸ், மற்றும் திமுக-வைச் சேர்ந்த எவருமே
   இலங்கைத் தமிழர் நலனைப் பற்றிப்
   பேசும் அடிப்படைத் தகுதியை சுத்தமாக
   இழந்து விட்டவர்கள். 100 சதவீதம் சுயநலவாதிகள்…!

   2) மோடிஜி இந்த நேரத்தில் – இலங்கைக்கு
   சென்றிருக்கவே கூடாது. அங்கு பாராளுமன்ற தேர்தல்
   முடிந்து, (அதிக அதிகாரங்களுடன் கூடிய ) – புதிய பிரதமராக
   யார் பொறுப்பேற்கிறார் என்பதை அறிந்த பிறகு தான்
   தன் பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.
   இப்போதைய பயணம், ஒரு வேளை மீண்டும் ராஜபக்சே
   பதவிக்கு வர நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ
   உதவியாகக் கூட அமையலாம்.

   3) இலங்கையில் ராஜ்பக்சே பதவியிழக்கவும்,
   எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவும், இந்தியா ஒரு முக்கிய
   காரணம் என்கிற செய்தி மறுக்கப்படாமல் அப்படியே
   உலவுவது – தன் பலத்தை உயர்த்திக்காட்டும் என்று
   மோடிஜி நினைப்பது போல் தோன்றுகிறது.
   இது சரியா தவறா என்பதை எதிர்காலம் தான் சொல்லும்…!

   4) மோடிஜியின் பயணம் முழுக்க முழுக்க
   வணிக நோக்குடையது. அந்தரத்தில் தொங்கிய சில
   business dealings ஐ உறுதிப்படுத்தவே பெரும்பாலும்
   இந்தப் பயணம் உதவியிருக்கிறது.

   5) இலங்கைத் தமிழர் முகங்களை திரும்பத் திரும்ப –
   மோடிஜியின் வீடியோ நிகழ்வுகளில் பார்த்தேன்.
   யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.
   எங்கோ, ஏதோ நடக்கிறது – இந்த நிகழ்வுகளுக்கும்
   தம் எதிர்காலத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை
   என்பது போலத்தான் இருந்தது அவர்களது உடல்மொழி.

   6) வடமாகாண முதல்வர் மட்டும் – பாஜகவுடன்
   ஒன்றிணைந்து செயல்படுவது புரிகிறது.

   எங்கு நோக்கினும் – சுயநலம் தான் தெரிகிறது.
   அவரவர் – அவரவர் நோக்கில் செயல்படுகிறார்கள்.

   விடிவு – இன்னும் தொலைவில் இருக்கிறது…!
   சீக்கிரம் நல்ல பொழுது விடிய வேண்டுவோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • lala சொல்கிறார்:

    ## வடமாகாண முதல்வர் மட்டும் – பாஜகவுடன்
    ஒன்றிணைந்து செயல்படுவது புரிகிறது. ##

    வட மாகாண முதல்வர் இந்தியா , மேற்குலகநாடுகள் மற்றும் ஐநா வின் நிகழ்ச்சி நிரலுக்குள் வாராத இன்னும் சொல்லப்போனால் மேற்படி தரப்புகளுக்கு நெருக்கடியை தரக்கூடிய ஈழத்தில் நடந்தது இநப்படுகொலையே என மாகாண சபையில் தீர்மானம்நிறை வேற்றியிருந்தார் .

    அத்தைகையவர் பா.ஜனதாவுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறாரா ?

    எப்படி ?

    பா.ஜனதாவும் ஈழத்தில் ( ?? )நடந்தது இனப்படுகொலைதான் என கூறுகிறார்களா ? அல்லது அங்கு நடைபெற்றது இனப்படுகொலைதான் என வட மாகணசபை தீர்மானம் நிறைவேற்றியதை ஏற்றுக்கொள்கிறார்களா ?

 5. thenali சொல்கிறார்:

  மேலே வெளியிட்டுள்ள புதுமனை புகுவிழா உட்பட எந்த நிகழ்விலும் யாருமே சிரிக்கவே இல்லை என்பது சரியான தகவலா? விழாவில் பைத்தியம் போல எல்லோரும் ஆரம்பம் முதல் முடிவு வரை சிரித்தபடி இருக்கனுமா? குறிப்பிட்ட குடும்பம் மோடியுடன் சிரித்து மகிழ்ந்த போது எடுத்த படம்

  http://www.rediff.com/news/report/pix-modi-showers-promise-of-achche-din-for-jaffna/20150314.htm

  கூடவே

 6. thenali சொல்கிறார்:

  உங்க ஆதங்கம் புரிகிறது, சார்! அம்மா மட்டும் பிரதமராக ஆகியிருந்தால் கொடூரமான சண்டியரும் அக்கிரம கொலைகாரருமான டிராபிக் ராமசாமியை தூக்குனது மாதிரி எல்லா சிங்களவரையும் பிடித்து ஏதாவது கேஸில் உள்ளே போட்டிருப்பார்கள் , ஆட்டோமேட்டிக்காக ஈழமும் கிடைத்திருக்கும். ஜஸ்ட் (3 சீட்டு) மிஸ்ஸு… அடுத்த எலக்சனில் நாம அம்மாவை பிரதமர் ஆக்குறோம், அவுங்க டோட்டல இலங்கையை ஈழம் ஆக்குறாங்க !!! ஓகே?

 7. சக்தி சொல்கிறார்:

  இங்கே ஏன் அம்மா பற்றிய விமர்சனம்-தெனாலி அவர்கள்- வந்தது என்பது தெரியவில்லை. காமை அவர்கள் அதிமுக விற்கு ஆதரவாக எந்த இடத்திலும் இந்தப்பதிவில் எழுதவில்லை. ஓரு பத்திரிகை ஊடகத்தில் வந்த செய்தியை மட்டும் போட்டு பின்னர் விளக்கத்தையும் போட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

  இந்திய ஊடகங்களால் வெளியிடப்பட்ட முழுக் காணொளியையும் பார்த்தால் அவர்கள் எப்போது ஏன் சிரித்தார்கள் என்பது தெரிந்திருக்கும் ஒரு முறை பார்க்கலாமே!. சிரிக்கும்படி சொல்லி படம் பிடிப்பது அரசியலில் இயல்பானது.

  டிராபிக் இராமசாமி திமுக ஆட்சியிலும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர முற்பட்டது போன்றவற்றுக்காக கைது செய்யப்பட்டார் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.இன்றைய கைதும் தவறானது என்றாலும் அன்றைய கைது மிக மோசமானதாக இருந்தது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

  அடுத்து வெளியான காணொளி மற்றும் படங்களைப் பாருங்கள்.

  //தன்னை இந்துத்துவ ஏக பிரதிநிதியாக காட்டிக்கொள்ளும் மோடி தெற்கில் இடம்பெற்ற பௌத்த துறவிகளுடனான சந்திப்பில் பாதணிகளை கழற்றி மரியாதை செலுத்தினார். ஆனால் யாழிலோ சாமி அறை என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அறையினுள் பாதணியுடன் புகுந்து கொண்டார்.
  (மேலே உள்ள படத்தில் காணலாம்.சிறு குழந்தையை சாட்சிக்கு அழைக்காதீர்கள்)
  அதே போன்றே அரச பிரமுகர்களிற்கு முன்னுரிமை அளித்த மோடி கூட்டமைப்பினரையும் படை அதிகாரிகளையும் ஓரே தராசில் வைத்து பின்தள்ளியிருந்தார். வெறும் வேடிக்கை பார்க்கும் நபர்களாக கூட்டமைப்பு பிரபலங்கள் அமர்ந்திருந்தன.

  இதேவேளை வடக்கு முதலமைச்சருடன் தனிப்பட்ட சந்திப்பினை மோடி நடத்திய வேளை பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

  எனினும் டெல்லி ஊடகங்களிற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் வடக்கு மற்றும் தெற்கு ஊடகங்களிற்கும் அதே போன்று தமிழக ஊடகங்களிற்கும் அனுமதி மறுக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுமிருந்தது. இதனால் ஊடகவியலாளர்களிடையே கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.//

  இது செய்திதான். இருந்தாலும் நமது விருப்பு வெறுகளுக்கு ஏற்ப செய்திகளை திரித்துக் கூறுவது நடு நிலை ஆகாது.

 8. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இந்திய அரசின் தேடப்படும் குற்றவாளி டக்லஸ் தேவானந்தாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

 9. today.and.me சொல்கிறார்:

  http://www.virakesari.lk/articles/2015/03/15/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20000-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF

  //.. தனது வேலைப்பளுக்கள் காரணமாக பிரதமர் மோடி விரிவாக தெரிந்து இருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம். எனவே வரலாற்றுரீதியாக நமது மக்கள் தொடர்பாக நாம் பிரதமருக்கு விரிவாக எடுத்து கூறினோம்… //
  இதுவரைக்கும் தெரியாதுன்னு சொல்லவேயில்லை.
  ———————————
  http://www.virakesari.lk/articles/2015/03/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  உண்மையில் //50ஆயிரம் வீடு¬களில் 27 ஆயிரம் வீடு¬களை//என்பது குஜராத்தில் கட்டப்பட்டவையா?

  //சுமார் 4ஆயிரம் வீடுகள் மத்திய ஊவாவில் அமைத்துக்கொடுக்கப்படும். இளவாலையில் 361 வீடுகள் அமைக்கப்படவுள்ளன இதில் 12 வீடுகளுக்கான உறுதிப் பத்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்..//
  கடைசியில பார்த்தா 12 வீடுகள்தானா? இதுக்கே இம்புட்டு பில்ட்ப்பா? அதுவும் காங்கிரஸ் ஆட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் சிக் காலத்தில் கட்டப்பட்டதற்கா?
  ———————————

  http://www.virakesari.lk/articles/2015/03/15/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF

  போனது பிஸிநெஸ் வளர்க்க. யாரிடம் எதைச் சொல்லி ஏமாற்றலாம் என அறிந்தவர். ராஜதந்திரம் கற்றுக்கொடுத்த குரு சுவாமியாயிற்றே. சோடைபோகுமா?

  ———————————

  இன்றைய TOI . Hindu இதழ்களில் அச்சில் வந்த புகைப்படத்தைப் பார்த்தால் வெறும் கிரௌண்ட்டில் ஒரு டேபிளைப் போட்டு ஒரு மாடல் ஹவுஸில் பால்காய்ச்சுவதுபோல் தான் தெரிந்தது. ஏன் என்பதுஇப்போதுதான் புரிகிறது. வெறும் 12 தானே. இருக்கட்டும் இருக்கட்டும்.

 10. lala சொல்கிறார்:

  ஊவா பிரதேசம் யுத்தம்நடைபெற்ற பகுதியுமல்ல , பாதிக்கப்ப்பட்ட பகுதியுமல்ல , அது முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வசிக்கு பிரதேசம் .

  இளவாலை 100 % தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பகுதி .ஊவாவுக்கு 4 ஆயிரம் வீடுகள் ( யுத்ததில் பாதிக்கப்படாத சிங்கள்வர்களுகு )

  தமிழர்களுக்கு ? 361 தானா ?

 11. yogeswaran சொல்கிறார்:

  Dear Sirs,

  our tamil naadu leaders are great when they are in opposition including EVKS.

  KM Sir,

  the non existant smile according to your article tells many stories.
  war affected tamils are alert.
  because they know for the past 35 years or so how their life became a football among politicians across palk straights.

  if you have any problem solve with your neighbour.

  dont go to big brothers.

  there is always a price.

  from srima shasthri pact we see this games.

  yogi

 12. Sharron சொல்கிறார்:

  The fact is Srilankan Tamils don’t belive our Indian Politicians.If you live outside India you can understand this.

  • BC சொல்கிறார்:

   வேறு ஒரு நாட்டு அரசியல்வாதிகளை சிறிலங்கன் தமிழர்கள் நம்புவதே தவறு சேர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.