அடானியின் சுரங்கத்திற்கு 6200 கோடி “லோன்” – விழித்துக்கொண்டது வங்கி ….

.

.

இந்த தளத்தில் – மோடிஜி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்
மேற்கொண்டிருந்தபோது நவம்பர் 17, 2014 –
அன்று வந்த இடுகையிலிருந்து ஒரு பகுதி –

——————-

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான
ஒரு தகவல் …. Posted on நவம்பர் 17, 2014

https://vimarisanam.wordpress.com/2014/11/17/%E0%AE%86%E0%AE
%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE
%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF
%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE
%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D
%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/

……… இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர்
பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட
கௌதம் அதானியை நம்பி State Bank of India கடன் கொடுப்பது
அறிவுடைமையா …?

இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???

Kingfisher விஜய் மால்யாவிற்கு கொடுத்தது போல் –
இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு
தத்தம் செய்தால்,

நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக
அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும்
யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???

முட்டாள் இந்தியன் தலையிலா ….?

——————————

அதற்கு அடுத்த நாள் – நவம்பர் 18, 2014 அன்று வெளிவந்த
இன்னொரு இடுகையிலிருந்து ஒரு பகுதி –

ஆஸ்திரேலிய சுரங்கம் – அதானிக்கு மோடிஜி தரும்
Return Gift – ஆ ….!!! மிகவும் தவறல்லவா …???
Posted on நவம்பர் 18, 2014

https://vimarisanam.wordpress.com/2014/11/18/%E0%AE%86%E0%AE
%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE
%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF
%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE
%85%E0%AE%A4%E0%AE%BE/

முழு, தனிப்பட்ட மெஜாரிடியுடன் இருக்கும் இந்த அரசு
எடுத்திருக்கும் முடிவை யார் தட்டிக் கேட்க முடியும் ….?

மக்களும், மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் –
முனைந்தால் இந்த முடிவைத் தடுக்க முடியலாம்…..
விழித்துக் கொள்வார்களா …..?

————————————————————————

– என்று கேட்டிருந்தோம்.

மக்கள் மறைமுகமாக டெல்லி தேர்தலிலும், காஷ்மீரிலும்
கேட்கத் துவங்கியதன் விளைவோ என்னவோ –
இப்போது வித்தியாசமான செய்தி ஒன்று வந்திருக்கிறது.

குஜராத் தொழிலதிபரும், மோடிஜிக்கு மிகவும்
வேண்டப்பட்டவருமான கௌதம் அடானிக்கு – ஆஸ்திரேலியாவில்
நிலக்கரி சுரங்கம் வாங்க –

ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக கொள்கையளவில்
ஒப்புக்கொண்டு, ஆஸ்திரேலியா வரை சென்று மெமோரண்டத்தில்
கையெழுத்தும் போட்டு விட்டு வந்த State Bank of India – சேர்மன்-

இப்போது தன் முடிவிலிருந்து பின்வாங்குவதாக
செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தேச கடன் கைவிடப்படும்
என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

(ஆனால், சம்பந்தப்பட்ட நபர் இதை வெறும் “வதந்தி”
என்றே இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்….)

“ஹிந்து” நாளிதழின் முதல் பக்க செய்தியை கீழே தந்திருக்கிறேன் –

hindu front page news

மேலே செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து காரணங்களும் –
முதலில் மெமொரண்டம் கையெழுத்து போடும்போதும்
இருந்தவை தான்.

இத்தனையையும் மீறித்தான் அப்போது
ஆஸ்திரேலியா வரை பறந்து சென்று கையெழுத்து போட்டார்
வங்கித்தலைவர்.

இப்போது அதே காரணங்களைக் காட்டித்தான் –
கடனை நிராகரிக்கிறார்கள்….

இப்போது கடனை நிராகரிப்பதன் உண்மையான
காரணம் என்ன …? யாரும் சொல்ல மாட்டார்கள் …
நாமாகவே புரிந்து கொள்ள வேண்டியது தான்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அடானியின் சுரங்கத்திற்கு 6200 கோடி “லோன்” – விழித்துக்கொண்டது வங்கி ….

 1. seshan சொல்கிறார்:

  யாரு Sir????????

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் சேஷன்,

  சத்தமே இல்லாமல், அழுத்தமாக நின்று
  இதனைச் சாதித்திருக்கிறார் திரு ரகுராம் ராஜன்,
  (ரிசர்வ் வங்கி கவர்னர்) …!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. சக்தி சொல்கிறார்:

  இதையும் படிக்கலாமே…….
  SBI to take final call on $1 bn loan to Adani in 3 mths ………………..
  //State Bank of India has said the final decision on the controversial $1 billion (Rs 6,200 crore at 1 dollar = 62 rupees) loan agreement with Adani Group for its Australian mining project would be taken by the lender’s executive committee in 2-3 months.(before end of March)
  (SBI  had last month signed a pact with Adani Group on the sidelines of Prime Minister Narendra Modi’s visit to Australia.)
  “The executive committee after due deliberations will decide about the disbursement to Adani,” SBI chairperson Arundhati Bhattacharya told PTI.
  “At present, all the aspects are being studied. Appraisal is being done. It will take about two-three months to study the project and thereafter taken to the committee for final approval,” she added.//
  …………..
  From World Wildlife Fund to Greenpeace to the Rainforest Action Network to the Institute for Energy Economics and Financial Analysis (IEEFA) and the Australian Marine Conservation Society,
  Many of them came together at the World Parks Conference in Sydney’s Olympic Park on the evening of November 17, at the same time as Prime Minister Narendra Modi was addressing a massive gathering of non-resident Indians at a stadium just a stone’s throw away. The day had begun badly for the group gathered under the common banner “Fight for the Reef”.

  இதைத் தொடர்ந்து………….

  Adani received Federal Government conditional approval for the mine in July 2014.
  இதற்கிடையில்………..திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
  Deakin University Professor of Law Samantha Hepburn describes the court action as ‘fascinating’.
  “The challenge is really focussing on a judicial review and it’s arguing that the Minister was obliged to consider economic and social matters as is provided for under section 136 of the Environment Protection and Biodiversity Conservation Act.”
  The real focus of the Federal Court is going to be on the principles of sustainable development.”
  “This has the potential to be a landmark decision and the Federal Court will be examining the role of the national environmental legislation in terms of, ultimately, climate change and global warming,” said Professor Hepburn.
  ஆனால் இன்று…………..

  When contacted SBI Chairperson Arundhati Bhattacharya told PTI: “Its all gossip. There is no fact (in news reports).”
  A senior bank official, however, said that the loan proposal has not progressed from both ends as “neither the company has come back to the bank nor the proposal has reached the credit committee of the bank so far”.
  The Adani spokesperson did not respond to repeated calls.
  ஆஹா? என்ன நடக்கிறது?
  அதே சமயம்………..
  Opposition had questioned “the propriety of SBI giving the loan to Adani …at a time when some five foreign banks have denied credit to the group for the project”.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.