சுப்ரமணியன் சுவாமியை அடக்கி வைப்பது – நாட்டுக்கும், பாஜக வுக்கும் நல்லது…..

மதுவருந்திய மந்திக்கு தேளும் கொட்டியது போல் -ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து -கடைசியில் மனிதனையும் கடிக்க வந்தது போல் –

வர வர திருவாளர் சுப்ரமணியன் சுவாமியின் பேச்சுக்கும், எழுத்துக்கும் எல்லையே இல்லாமல் போகிறது…..
தேவையே இல்லாமல்,
சமூக அமைதியைக் குலைத்து,
மத உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் நடந்துகொள்ளும் அவரது அண்மைய பேச்சுக்கள், ட்விட்டர்கள் இவை –

swamy twitter on mosque-2

 

மதம், இனம், மொழி – இவை மூன்றுமே மனிதரின்
உணர்வுகளை சட்டென்று தூண்டுபவை. இவற்றைக் குறித்து  பேசும்போது, சாதாரண மக்களே ஜாக்கிரதை உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிறபோது,

மத்தியில் ஆளும் பாஜக வில் முக்கிய பொறுப்பு வகிக்கும்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்கிற பெரிய மனிதருக்கு
எந்த அளவிற்கு பொறுமையும், பொறுப்புணர்வும்
இருக்க வேண்டும்… ?

முதலில் அஸ்ஸாமில் பேசும்போது, இஸ்லாமியர்களை
எரிச்சலூட்டும் வகையிலும்,

While speaking in Guwahati on Friday, Swamy had
reportedly said, “A mosque is not a religious place.
It is just a building and it can be demolished any time.

அதற்கு எதிர்ப்பு கிளம்பும்போது, கிறிஸ்தவர்களையும்
சேர்த்து அவமதிப்பது போலவும் –

swamy twitter on church

பேசும் /எழுதும் இவரை – மத்திய அரசை ஆளும் பொறுப்பில் இருக்கின்ற பாஜக – கட்டுப்படுத்தி வைப்பது

அந்த கட்சிக்கும் நல்லது –
இந்த நாட்டிற்கும் நல்லது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to சுப்ரமணியன் சுவாமியை அடக்கி வைப்பது – நாட்டுக்கும், பாஜக வுக்கும் நல்லது…..

 1. today.and.me சொல்கிறார்:

  கா.மைஜி,

  இவர் எந்தவகையிலாவது எந்த மாநிலத்திலாவது மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டு, உள்துறை அமைச்சம் சரியில்லை எனக்கு உள்துறை மந்திரியைக் கொடு நான் சரியாய் நிர்வாகம் செய்கிறேன் என்று கேட்பதற்காகக் கொக்கிபோடுகிறார் போலத்தெரிகிறது. மறைமுகமாக மோடியை பிளாக்மெயில் செய்கிறார்ப்போல எண்ணுகிறேன்.

  //பேசும் /எழுதும் இவரை – மத்திய அரசை ஆளும் பொறுப்பில் இருக்கின்ற பாஜக – கட்டுப்படுத்தி வைப்பது அந்த கட்சிக்கும் நல்லது – இந்த நாட்டிற்கும் நல்லது.//
  அது அவரோட சொந்தக்கருத்து என்று ஏதாவது லெட்டர்பேட் பாஜக தலை சொல்லும் பாருங்கள், அதுவும் இன்னும் சில நாட்கள் கழித்து.

  மக்களே நீங்கள் பொங்கி அவர் ஆசையில் பால் வார்த்துவிடாதீர்கள்.
  முடிந்தால் அவர் இந்தமாதிரிப் பொங்கும்போது தண்ணீரை மேலே தெளித்துவிடுங்கள். புஸ்ஸென்று ஆகிவிடுவார்.
  🙂

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //மத்தியில் ஆளும் பாஜக வில் முக்கிய பொறுப்பு வகிக்கும்
  டாக்டர் சுப்ரமணியன் சுவாமி//
  அப்படியா,
  இது எப்போதிலிருந்து?

  அதான் சரியா சொல்லிட்டீங்களே ஐயா //மதுவருந்திய மந்திக்கு தேளும் கொட்டியது போல்// என்று.

 3. M.Syed சொல்கிறார்:

  \\\\ மதுவருந்திய மந்திக்கு தேளும் கொட்டியது போல் -ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து -கடைசியில் மனிதனையும் கடிக்க வந்தது போல் – ////

  சரியான உதாரணம் தான். கோமாளியின் பேச்சை யாரும் பெரிதாக எடுப்பதில்லை ஐய்யா !

  M.Syed
  Dubai

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்லவேளை மந்திக்கு தமிழ் தெரியாது.

 5. S.Selvarajan சொல்கிறார்:

  இவர் எந்த கருத்தை சொன்னாலும் , இவரை பற்றி எந்த மாதிரியான செய்திகள் வந்தாலும் , மோடியோ — ப.ஜ.க. அரசோ எதுவுமே செய்ய போவதில்லை என்பதுதான் — உண்மையிலும் — உண்மை .! ஏனென்றால் அவரிடம் இவர்களுக்கு ஏதோ ஒருவித மாயையான ” பயம் ” இருப்பதால் தானோ — என்னவோ ..? பேசும் /எழுதும் இவரை – மத்திய அரசை ஆளும் பொறுப்பில் இருக்கின்ற பாஜக – கட்டுப்படுத்தி வைப்பது

  அந்த கட்சிக்கும் நல்லது –
  இந்த நாட்டிற்கும் நல்லது.—- என்று நீங்கள் கூறுவது அவர்களின் செவிகளுக்கு எட்டாது ..!! கண்போன போக்கில் — கால்கள் போய்கொண்டு இருக்கின்றவர்களுக்கு — சொல்லி என்ன லாபம் ….!!!

 6. D. Chandramouli சொல்கிறார்:

  There are quite a few loose cannons in BJP and RSS. BJP doesn’t need to have an opposition party. Some of their own members are out to ensure the downfall of the party. For the Congress, it took ten long years to dig their own grave. For BJP, the task might be easier. Common observers like us can see the writing on the wall for the party. How come the managers of the well-structured BJP cannot rein in the different drummers? It’s a pity that BJP is frittering away the goodwill of the people who voted them into power.

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  அப்படிச் செய்ய மாட்டார்கள் காவிரிமைந்தன் ஐயா! காரணம், பா.ச.க-வினரின் மனதில் இருப்பதைத்தான் இவர் பேசுகிறார். பிரதமர், கட்சித் தலைவர் போன்ற உயர்ந்த பொறுப்புக்களில் இருக்கிற தங்களால் பேச முடியாத இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்துக்களைப் பேசுவதற்கென்றே பா.ச.க-வில் சிலர் கூலிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அண்மையில் கூட கிறித்துவ தேவாலயம் ஒன்று இடிக்கப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் கிறித்துவர்களே இல்லை என்றும், எனவே சமயமாற்றம் செய்யும் நோக்கத்துடன்தான் வேண்டுமென்றே அங்கே அந்த தேவாலயம் எழுப்பப்பட்டதாகவும், அதனால்தான் அந்தப் பகுதி மக்களே அதை இடித்துவிட்டார்கள் என்றும் பா.ச.க புள்ளி ஒருவர் பேசியிருக்கிறார். அந்தப் பெரிய மனிதர் அத்தோடு நிறுத்தவில்லை; தொடர்ந்து இத்தகைய சமயமாற்றச் செயல்களில் ஈடுபட்டால் 80-களில் உருவானது போன்ற சமயக்கலவரம் ஒன்று உருவாகும் என்றும் மிரட்டியிருக்கிறார்.

  இவ்வளவு பச்சையாகச் சமயவெறியுரையாற்றுபவர்களையே கண்டு கொள்ளாத இந்த அரசு, மேற்படி வேலைகளுக்காக, தங்களுக்கு மிகவும் வேண்டியவரான சுப்பிரமணியன் சுவாமி போன்ற ஒருவரைப் பகைத்துக் கொள்ளுமா என்ன?

  • today.and.me சொல்கிறார்:

   நண்பர் ஞானப்பிரகாசன்,
   நீங்கள் முதல்பத்தியில் குறிப்பிட்டுள்ளதற்கு என்ன ஆதாரம்?

   யார் அந்த பாசக புள்ளி என்றும் சொல்லவில்லை, எந்தப் பகுதி என்றும் சொல்லவில்லை, அவர் மிரட்டியதற்கு ஆதாரமும் தரவில்லை. இது சரியில்லை. வீண் வதந்திகளை இங்கு தயவுசெய்து குறிப்பிடாதீர்கள்.

   • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    ஐயா டுடே அண்டு மீ அவர்களே!

    வதந்தி பரப்பும் அளவுக்குப் பொறுப்பில்லாதவனோ, யார் ஒருவர் மீதும் பழி போடும் மனப்போக்குடையவனோ இல்லை நான். நேற்று செய்தி அறிக்கையில் கேட்டதைத்தான் இங்கு கூறினேன். என்னைப் போலவே பலரும் இதை அறிந்திருப்பீர்கள் என்று நினைத்துத்தான் கூறினேன்.

    முதல் பத்தியில் குறிப்பிட்டிருக்கும் கருத்து, மீண்டும் மீண்டும் பா.சக-வினர் சிலர் தொடர்ந்து கீழ்த்தரமான சமயவெறிக் கருத்துக்களைப் பேசி வருவதன் அடிப்படையில் கூறப்பட்டது. “இந்தியா இந்துக்களின் நாடு” என்று கூறியது, “இந்துக்கள் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியது, ஆட்சிக்கு வந்த முதல் நாளே இருக்கிற பிரச்சினைகளையெல்லாம் விட்டுவிட்டு காசுமீரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க முனைந்தது போன்றவற்றை விமரிசிக்கும் விதத்தில்தான் அப்படிக் கூறினேன். அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறீர்களா?

    • today.and.me சொல்கிறார்:

     நண்பர் ஞானப்பிரகாசன்,

     நீங்கள் கூறியது உண்மையாகவே இருக்கலாம், நான் நேற்றைய செய்தி அறிக்கையைக் கேட்கவில்லை. ஆனால் எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது ஆதாரம் இணைக்கப்படாத எதுவுமே மொட்டையாகத்தான் தெரிகிறது.

     மேலும் இன்னும் நாலுமாதம் கழித்துப் பார்த்தால் எந்த நேற்றைய செய்தி என்பது கேட்டிருப்பவர்களுக்குக்கூட நினைவிலேயே இல்லாமலும் போகலாம். தயவுசெய்து இங்கிருந்து இந்தத் தரவைப் பெற்றேன் என்று கூறினீர்களானால் மேலதிக விவரங்களை அங்கே சென்று படித்துக்கொள்ளலாமே. அதன் நம்பகத்தன்மையை ஆராயலாமே.

     மேலும்
     //“இந்தியா இந்துக்களின் நாடு” என்று கூறியது, “இந்துக்கள் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியது, ஆட்சிக்கு வந்த முதல் நாளே இருக்கிற பிரச்சினைகளையெல்லாம் விட்டுவிட்டு காசுமீரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க முனைந்தது // போன்றவை எல்லாம் உண்மைதான் ஒத்துக்கொள்கிறேன். இவற்றுக்கான தரவுகள் ஆங்காங்கே கிடைக்கின்றன.

     பாஜக என்பதற்காக எதைவேண்டுமானாலும் ஆதாரமின்றி சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் எழுதியிருக்கிறேன். நான் தெரிந்துகொள்வதற்காக மீண்டும் கேட்கிறேன், அது எந்தச் செய்தி அறிக்கை? printed or online News / audio / vidio இணைப்பைத் தாருங்கள்.

     • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

      //பாஜக என்பதற்காக எதைவேண்டுமானாலும் ஆதாரமின்றி சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் எழுதியிருக்கிறேன்// – நான் அப்படி எழுதுபவன் இல்லை ஐயா! என் நினைவாற்றல் குறைவு காரணமாகக் கொஞ்சம் முன்னே பின்னே எழுதுவேனே தவிர, இல்லாதது எதையும் கூற மாட்டேன். பதிவு எழுதும்பொழுதுதான் நாம் கூறும் கருத்துக்களுக்கும் தகவல்களுக்கும் சான்று பகர வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், பொதுவெளியில் எங்கே, எப்பொழுது, எதைச் சொன்னாலும் சான்றுடன் கூறுவது நல்லது என்கிறீர்கள் நீங்கள். முயல்கிறேன் அதற்கும்! 🙂

      பி.கு: நீங்கள் இரண்டாம் முறை சான்று கேட்கும் வரை நான் வைத்துக் கொள்ளவில்லை. உங்களுக்குப் பதில் அளித்தவுடனேயே தேடலைத் தொடங்கிவிட்டேன். ஆனால், அதை இங்கே பகிர்ந்த பிறகுதான் தெரிய வந்தது, அதற்கு முன்பே நீங்கள் மீண்டும் ஒருமுறை சான்று கேட்டிருக்கிறீர்கள் என்பது.

   • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    நான் மேலே கூறிய செய்திக்கான சான்று இதோ! -> http://www.dailythanthi.com/News/India/2015/03/17082749/VHP-defends-attack-on-Haryana-church-calls-1857-communal.vpf

    குறிப்பாக, நண்பர் டுடே அண்டு மீ அவர்களின் பார்வைக்கு! 🙂

    • today.and.me சொல்கிறார்:

     நன்றி நண்பரே,
     எனக்காக என்று மட்டும் இல்லை, விமரிசனம் தளத்தின், தரத்தின் நம்பத்தன்மை எப்போதும் நம்மால் காக்கப்படுவதற்காகவும்தான்.

 8. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,

  மன்னிக்கவும், இடுகைக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டம். என்றாலும் நண்ப. ஞானப்பிரகாசன் அவர்கள் தமது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள பட்டியலின் ஒரு itemஆன //இந்துக்கள் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்//க்கு
  இன்று இன்னொரு பாஜக தலைவர் இரண்டுதான் பெற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று அவர்கள் தலையின் எதிரான (கட்சித்தலைக்கு எதிரான / அதிகாரத் தலைக்கு ஆதரவான…….ச்சை ஒரே குழப்பம்…) கருத்தையும்,

  அதேநேரத்தில் காந்தி,ராட்டை, தியாகிகள், தேசியக்கொடி மரியாதை பற்றியும் உளறிக்கொட்டியிருப்பதை நண்பர்கள் அறிய இணைக்கிறேன்.

  இவர் சென்றமுறை சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டவுடன், பாஜக வின் தேசிய செயற்குழுவிற்குள் கட்சித்தலைவர் அமித்ஷாவால் இழுக்கப்பட்டவர்.

  http://zeenews.india.com/news/india/vhp-leader-sadhvi-prachi-stokes-fresh-controversy-says-mahatma-gandhi-was-a-british-agent_1563396.html

  ————-.

 9. siva சொல்கிறார்:

  He is telling this one for almost 4 years in various forums.
  His proof is, Mosque where Mohamad Nabi studied/prayed Namas been demolished by Saudhi government for laying road. Masque is not a religious place is not just his own comment, looks like Saudhi government has told this words while they demolished Mosques to build public infrastructure(and they quote their holy book for this). Surprising fact!

  • ராம் சொல்கிறார்:

   ஆதாரத்துடன் அணுகுங்கள் திரு. சிவா. ஞானத்திற்கு கிடைத்த மறுமொழியை பார்த்தல் நலம். எப்போதும் எதிரில் இருப்பதாக நினைக்க வேண்டாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.