“விமரிசனம்” வலைத்தளம் …

bharathi-2traffic_rank_6099

 

 

 

 

 

 

 

“விமரிசனம்” வலைத்தளம், தமிழ்மணம் ரேங்கில்
முதலிடம் பெற்றிருக்கிறது. இதில் என்னுடைய
சாதனை என்று எதுவுமில்லை.
இந்த விமரிசனம் தளத்தால் பெரிதாக எதனையும்
சாதித்து விட முடியுமென்றும் நான் நம்பவில்லை.

அதிகம் வெளிச்சத்திற்கு வராத சில உண்மைகளை
இந்த தளம் வெளிக்கொண்டு வந்து விவாதிக்கும் …

பொது வாழ்வில் – அசல் எது, போலி எது என்று உணர
ஓரளவு இந்த தளம் உதவக்கூடும்…. அவ்வளவே.

அரசியல்வாதிகளின் ஒப்பனையற்ற அசல் ரூபத்தை
தெரிந்து கொள்ள – அடையாளம் கண்டுகொள்ள –
ஓரளவு இந்த தளம் உதவலாம்.

மற்றபடி-
இந்த தேசத்தின்,
தமிழ் நாட்டின்,
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் –

பொது நலனில் – அக்கரையுடைய நண்பர்கள்
தங்களுக்குள் வெளிப்படையாக கருத்துப் பரிமாற்றம்
செய்து கொள்ள இந்த தளம் உதவும்.

இன்றில்லா விட்டாலும் –
நாளையாவது மாறுமல்லவா …?

என்கிற சிந்தனையோடு,
நண்பர்கள் கொடுக்கும் ஊக்கத்தால் –
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
எவ்வளவு நாள் ஓட முடியுமென்று தெரியாது….

முடிந்ததைத் தொடர்ந்து செய்ய –
எனக்கு சக்தி கொடு இறைவா ..
கூடவே இருங்கள் நண்பர்களே – என்று வேண்டிக்கொள்கிறேன்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
17/03/2015

 

 

 

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

“விமரிசனம்” வலைத்தளம் … க்கு 25 பதில்கள்

  1. today.and.me சொல்கிறார்:

    அன்பின் கா.மை.,
    கடந்த நான்கு ஆண்டுகளாகவே விமரிசனத்துக்கு வந்துபோய்க்கொண்டு இருக்கிறேன். பொதுவாக எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதில்லை. பின்னூட்டம் இட்டே ஆகவேண்டும் என்று தோன்றினாலோ அல்லது எனது கருத்தை ஒரு பதியவேண்டும் எண்ணினாலோ மட்டும்தான் பின்னூட்டம் இடுகிறேன்.

    தங்கள் பாரபட்சமற்ற உண்மையான எழுத்துகளுக்கு நன்றி.

    என்னைப் பின்னூட்டம் இடத்தூண்டும்படி பின்னூட்டமிடும் நண்பர்களுக்கும், பல விவரங்களை இணைத்து அறிவுப்பூர்வமாகவும் ஆதாரங்களுடனும் ஆழ்ந்து யோசிக்கவைக்கவும் செய்யும் நண்பர்களுக்கும் நன்றி.

    கா.மைஜி! மேலும் ஒரு வேண்டுகோள்:

    தற்காலிகமான இந்த // தமிழ்மணம் ‘ட்ராபிக் ரேங்க்-1’ // ஐ,
    உடனடியாக,
    தமிழ்மணம் ட்ராபிக் ரேங்க் வேறுதளத்திற்குக் கொடுக்கப்படுமுன்
    – ‘விமரிசனம்’ தளத்தின் ரேங்க்ஐப் பற்றியும் ட்ராபிக்கைப் பற்றியும் மிகவும் கவலைப்படும்! (உண்மையைச் சொன்னால் வயிறெரியும்..!?!?) ஓரிரு நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்யக் கோருகிறேன்.

    ———————–
    .//எவ்வளவு நாள் ஓட முடியுமென்று தெரியாது…. முடிந்ததைத் தொடர்ந்து செய்ய – எனக்கு சக்தி கொடு இறைவா //
    ஷ். ஷ்… இப்பவே கண்ணக் கட்டுதே…
    .———————–
    கூடவே இருங்கள் நண்பர்களே – என்று வேண்டிக்கொள்கிறேன்.
    // …….றோம்.
    ———————–

    • Ramachandran. R. சொல்கிறார்:

      கே.எம்.சார்,

      வாழ்த்துக்கள்.

      டுடேஅண்ட்மீ அவர்கள் சொல்வது போல் ரேங்க் வரும்,போகும். இந்த வலைத்தளத்தின் தரம் அதை வைத்து நிர்ணயிக்கப்படுவது ஆகாது.

      // இந்த தேசத்தின்,
      தமிழ் நாட்டின்,
      உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் –

      பொது நலனில் – அக்கரையுடைய நண்பர்கள்
      தங்களுக்குள் வெளிப்படையாக கருத்துப் பரிமாற்றம்
      செய்து கொள்ள இந்த தளம் உதவும்.//

      என்று சொல்லி இருக்கிறீர்களே அது தான் இந்த விமரிசனம் வலைத்தளத்தின் சிறப்பு.
      இங்கு வந்து போகும் அனைவரும் இதை எங்களது
      சொந்த வலைத்தளமாக நினைத்து மனதில் தோன்றுவதை எல்லாம் மனம் விட்டு எழுத முடிவதால் உண்மையிலேயே இது எங்களின்
      வலைத்தளம் தான். நாங்கள் என்றும் உங்களுடன் இருப்போம்.
      இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுப்பார். தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சார்.
      நன்றி.

  2. Killergee சொல்கிறார்:

    மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே…
    கில்லர்ஜி

  3. srinivasanmurugesan சொல்கிறார்:

    வாழ்த்துகள் அய்யா!!!

  4. pkandaswamy சொல்கிறார்:

    பாராட்டுகள். இன்றைய உலகில் ஒருவன் இருக்கும் இடத்தில் இருப்பதற்கே ஓடிக்கொண்டு இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அப்படி நீங்கள் இந்த ரேங்கை தக்க வைத்துக் கொள்ள ஏகப்பட்ட சிரமங்கள் மேற்கொள்ள வேண்டும்.

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    மகிழ்ச்சி சார்.
    வாழ்த்துகள்.

  6. sp senthilkumar சொல்கிறார்:

    விமர்சனம் தளத்திற்கு வாழ்த்துக்கள்.

  7. drkgp சொல்கிறார்:

    It is great to placed in the front among so many of them.
    Congrats and wish a very long journey .

  8. புது வசந்தம் சொல்கிறார்:

    தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்.

  9. ராம் சொல்கிறார்:

    தன்னலத்தை தவிர்த்ததால் தான் இந்நிலையை அடைய முடியும் என்று அழகாக உணர்த்திக் கொண்டிருக்கிறது தங்களின் இடுகைகள். மெருகேற்றிக் கொண்டிருக்கிறது பின்னூட்டங்கள். பன்முகத்தன்மை கொண்ட வலைத்தளங்களில் இதுவும் ஓன்று. ‘ஓடிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை படிக்கும் போது “நிலையில்லாத ஒன்றுக்காக பெருமைப்பட்டு நின்று விட கூடாது” என்றுதான் தோன்றியது. உறுதுணையாக என்றும் இருப்போம். கருத்தை படிப்போம், பகிர்வோம்.

  10. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    வாழ்த்துகள். மக்கள் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றார்கள் என்று அர்த்தம். தொடருங்க.

  11. S.Selvarajan சொல்கிறார்:

    ” சலிப்பும் — ஓய்வும் — தற்கொலைக்கு சமம் ” என்று கூறிய பெரியாரின் உருவில் — இந்த வயதிலும் சமூக சிந்தனையோடு ஓடிக்கொண்டு இருக்கும் தங்களின் சாதனையை ” ஒரு ரேங்க் ” குள் அடக்க விரும்பாத பல நண்பர்களில் நானும் ஒருவனாக தங்களின் ” பணி ” தொடர் ஓட்டமாக இருக்க விழையும் —- அன்பன் …. ! வாழ்த்துக்கள் …. திரு .கா.மை. !! என்றும் இடுக்கையை படிக்க விரும்பும் —- செல்வராஜன் .எஸ் .

  12. MuThuKuMaR.S சொல்கிறார்:

    வாழ்த்துக்கள் நண்பரே. . .

    தொடரட்டும் உங்கள் பணி. .

  13. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா! நீங்கள் தொடர்ந்து இந்தச் சேவையைப் பல்லாண்டுகளுக்குச் செய்வீர்கள்; நாங்களும் என்றும் உங்களுடன் இருப்போம்!

  14. M. Syed சொல்கிறார்:

    நல்வாழ்த்துகள் அய்யா.
    என்றும் தொடரட்டும் தங்கள் பணி. .

    M. Syed
    Dubai

  15. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும்
    என் மனமார்ந்த நன்றிகள்.
    நான் ஏற்கெனவே சொன்னது போல் –
    இந்த வாழ்த்துக்களுக்கு காரணம் நானல்ல –
    நீங்கள் தான்….

    இந்த நிகழ்வை உங்களோடு பகிர்ந்து
    கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
    பகிர்ந்து கொண்டாடியாகி விட்டது…
    சரி – இந்த நிமிடத்தோடு, இதை
    மறந்து விடுவோம்…

    ( எதை நீ கொண்டு வந்தாய் –
    உன்னுடையது என்று சொல்வதற்கு ….?

    நேற்று வேறொருவருக்கு சொந்தமாக இருந்தது –
    இன்று உன்னிடம் இருக்கிறது ….
    நாளை வேறொருவரிடம் போகப்போகிறது ….

    எது நடந்ததோ – அது நன்றாகவே நடந்தது…
    எது நடக்கப் போகிறதோ –
    அதுவும் நன்றாகவே நடக்கும் …..!!!!!!! )

    சு.சுவாமி காத்திருக்கிறார் …..
    தொடர்ந்து நம் பணியைப் பார்ப்போமா……!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  16. Ganpat சொல்கிறார்:

    முதன் முறையாக எண்ணிக்கையும் தரமும் இணைவதை பார்த்து வியக்கிறேன் ..வாழ்த்துக்கள்.

  17. Siva சொல்கிறார்:

    It’s nice to see that many Tamil-speaking online readers have been wstching this blog! We all will try to make some positive changes in our thinking on current socio-political situations in Tamil Nadu and India

  18. ராம் சொல்கிறார்:

    கொஞ்சம் புரியும் படி சொல்லுங்கள். ஏற்கனவே கருத்துகள் அம்புகளாய் பாயும் இடத்தில் புதிய வில் எதற்கு?

  19. Sharron சொல்கிறார்:

    Good to see u come to this position.It shows your dedication for the country,for the people & also the work you are doing.Wish you all the best for the coming year too.More over u got very good followers who put decent comments here in this blog. Keep it up.

  20. D. Chandramouli சொல்கிறார்:

    Hearty congrats and best wishes. I have been reading your blog every day for more than one year now and appreciate your thought-provoking articles for betterment of the society and the nation.

  21. ramanans சொல்கிறார்:

    வணக்கம்.

    வாழ்த்துக்கள்

    நம்பர் 1, நம்பர் 2 இவற்றில் எல்லாம் அக்கறை கொள்ளாதவர் நீங்கள் என்றாலும் இப்படி வாசகர்களின் ஆதரவு மற்றும் வரவேற்பின் மூலம் முதலிடம் வந்திருப்பது நிறைவளிக்கும் செயல்தான். அதற்காக சோர்வு தரும் சில பின்னூட்டங்கள் கண்டு மனம் தளராது உழைக்கும் உங்கள் செயலும் ஒரு கர்ம யோகினுடையதைப் போன்றதுதான். ஏனென்றால் கர்ம யோகிக்கு விருப்பு, வெறுப்பு இருக்காது. அவர் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர் “கருமமே கண்ணாயினார்” தான். நீங்களும் அவ்வாறே என்பது தங்கள் பதிவுகளின் மூலம் எங்கள் புரிதல். மீண்டும் வாழ்த்துக்கள். தங்கள் அயராத பணிகளுக்கு என் வணக்கங்கள்.

    வாழ்க.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை என் நன்றிகள்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      தங்கள் வாழ்த்துக்களுக்கு
      மிக்க நன்றி திரு.ரமணன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      2015-03-18 13:58 GMT+05:30 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் :

      >

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.