ம.மோ.சிங் ஊழல் வழக்கு பற்றி “துக்ளக்” ரிப்போர்ட் – அதற்கும் பின்னால்…..!!!

.
solidarity march-1

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் முதன் முதலில் எப்படி
வெளியே வந்தது, வழக்கில் முன்னாள் பிரதமர்
திரு.மன்மோகன் சிங் எந்த அளவிற்கு – எப்படி,
சம்பந்தப்பட்டிருந்தார் என்பதைப்பற்றி சுலபமாக விளங்கும்படி
“துக்ளக்” வார இதழில் வசந்தன் பெருமாள் ஒரு கட்டுரை
எழுதி இருக்கிறார்.

நம்மில் பலருக்கு இந்த விஷயம் குறித்து பொதுவாகத்
தெரிந்திருந்தாலும், அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக
படித்ததாலும், நாளாகி விட்டதாலும் – விலாவாரியாக
நினைவில் இருக்காது.
விரைவில் வழக்கு சிபிஐ கோர்ட்டில்
விசாரணக்கு வருவதால் நம் நினைவை புதுப்பித்துக் கொள்ள
உதவியாக “விமரிசனம்” தள நண்பர்களுக்காக – அந்த கட்டுரையை
கீழே பதிப்பித்திருக்கிறேன்.

coal-1 001

coal-2 001

coal-3 001

இன்னுமொரு விஷயம் – கட்டுரை, ம.மோ.சிங்கின்
செயல்பாடுகளோடு முடிந்து விடுகிறது. ஆனால் – முக்கிய பாகம்
அதில் இல்லையே…! பின்னணியில் ஒளிந்துகொண்டல்லவா
இருக்கிறது….?

பொதுவாக – ம.மோ.சிங் பணம்-பயன் கருதி இத்தகைய
செயல்களில் ஈடுபடக்கூடியவர் அல்ல. அவரை ஆட்டி வைத்த
சக்திக்காகவே இதைச் செய்யத் துணிந்திருக்கிறார்
என்பது தானே உண்மை..?

அவரை ஆட்டி வைத்த சக்தி எது என்பதை, சிபிஐ
கோர்ட்டிலிருந்து சம்மன் வந்த மறுநாளே – காங்கிரஸ்
முன்னணியினரை தலைமையேற்று ஊர்வலமாக
அவரது இல்லம் வரை வந்து ஆதரவு கொடுத்த நிகழ்ச்சியை
பார்த்தால் நன்றாகவே தெரியும்.

ம.மோ.சிங் முதல் தடவையாக 2004-ல் பிரதமர் பதவியேற்ற
புதிதில் நடந்த ஊழல் விவகாரம் இது. அப்போது அவர்
முற்றிலும் “அன்னை”யின் கைப்பிள்ளையாகவே இருந்தார்.
பிரதமர் பதவி கிடைத்த புளகாங்கிதத்தில் என்ன செய்கிறோம்
என்றே தெரியாமல், “அன்னை” சொன்னதை எல்லாம்
செய்த காலம் அது….!

ம.மோ.சிங் “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” கதையாக
எதையாவது சொல்லி விடப்போகிறாரே என்கிற பயத்தில்,
அந்த சக்தி துடித்ததன் விளைவு தானே அந்த ஊர்வலம்…!

இந்த விசாரணைகள் எல்லாம் ஒழுங்காக நடந்து முடிந்து
உண்மைகள் எதுவும் வெளிவரும் என்கிற அநாவசியமான
நம்பிக்கைகள் எல்லாம் நமக்கு வேண்டாம். இருந்தாலும்,
என்ன நடந்திருக்கும் என்பதை நமக்கு நாமே உறுதிபடுத்திக்
கொள்ள இந்த விசாரணை உதவலாம்.

———————————————————————————-

மிக முக்கியமான ஒரு
பின் குறிப்பு –

நண்பர்களுக்கு –

இந்த “விமரிசனம்” வலைத்தளத்தின் மீது அளவுகடந்த
ஈடுபாடு கொண்டு, இதன் தரத்தை மேலும் மேலும் உயர்த்தவும்,
இதை பயனுள்ள ஒரு சமூக வலைத்தளமாக
பரவலாக, விரிவாக – அதிக மக்களிடையே கொண்டு செல்ல
வேண்டுமென்றும் ஆர்வத்துடன் செயல்படும் நண்பர்களுக்கு
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வலைத்தளத்திற்கு வருகை தரும்
அனைத்து நண்பர்களுக்குமாகச் சேர்த்து ஒரு வேண்டுகோள் –

“சமூக நலம்” தான் இந்த வலைத்தளத்தின் முக்கிய குறிக்கோள்.
யார் வேண்டுமானாலும் இங்கு நடைபெறும் விவாதங்களில்
பங்கேற்கலாம். தங்கள் உணர்வுகளை, கருத்துக்களை –
நாகரிகமான முறையில் பகிர்ந்து கொள்ளலாம்.

நம் அனைவரின் ஒன்று சேர்ந்த உழைப்பிற்கும்
உரிய பலன் கிடைப்பது –
இந்த எழுத்துக்கள், கருத்துக்கள் – எந்த அளவிற்கு
அதிக மக்களிடையே போய்ச்சேருகிறது என்பதை
பொறுத்து தான் இருக்கிறது.

எனவே, இன்று முதல் –
அனைவருமே – தங்கள் தங்கள் facebook, twitter, google +
கணக்குகளில் இந்த இடுகையையும்,
இதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு பதிவையும் –
பதிவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கண்ட கணக்குகளில் இணைப்பதற்கான links
இடுகைக்கு கீழேயே இருக்கிறது.

தனியே வலைத்தளம் வைத்திருப்பவர்கள் இதை –
re-blog செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அதற்காக
தனியே அனுமதி எதையும் கேட்க வேண்டிய
அவசியம் இல்லை.

நண்பர்கள் – ஒருவர் தவறாமல் அனைவரும் –
முதலில் இதை செய்து முடித்து விட்டு- அதன் பின்னர்
பின்னூட்டத்திற்கு போகும்படி உரிமையுடன் வேண்டுகிறேன்.

நன்றி.
வாழ்த்துக்களுடன்,

காவிரிமைந்தன்
22/03/2015

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ம.மோ.சிங் ஊழல் வழக்கு பற்றி “துக்ளக்” ரிப்போர்ட் – அதற்கும் பின்னால்…..!!!

 1. today.and.me சொல்கிறார்:

  // முக்கிய பாகம் அதில் இல்லையே…! //
  அதைச் சொல்ல ‘விமரிசனம்’ இருக்கிறது என்கிற அலட்சியமாயிருக்கும்.
  🙂

 2. selvarajan singaram சொல்கிறார்:

  இந்த விசாரணைகள் எல்லாம் ஒழுங்காக நடந்து முடிந்து
  உண்மைகள் எதுவும் வெளிவரும் என்கிற அநாவசியமான
  நம்பிக்கைகள் எல்லாம் நமக்கு வேண்டாம்…. இந்த தலைமுறையில் கங்கையை
  சுத்தபடுத்தி விடுவிர்களா ? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டதை
  போலவா ..!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.