குஜராத்திலிருந்து கிளம்பிய ஒரு மிஸ்டர் 420 …….!!!

.

சிபிஐ டைரெக்டராக இருந்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை
நிர்வகித்துக் கொண்டிருந்த பெருந்தகை ரஞ்சித் சின்ஹா
அவர்களை நினைவிருக்கிறதா….?
( இல்லையென்றால் அதிசயம் ஒன்றுமில்லை –
இருந்தால் தானே அதிசயம்….!!! )

அந்த ரஞ்சித் சின்ஹா என்கிற பெருமகன் –
சிபிஐ விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த சில
முக்கியமான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டிருந்த
சிலரை தன் வீட்டிலேயே சந்தித்து, வழக்குகள்
குற்றவாளிகளுக்கு சாதகமாக திசை திரும்ப உதவினார் என்று,

வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள்
ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்…….

துவக்கத்தில் துள்ளிக்குதித்து, பேயாட்டம் ஆடிய சின்ஹா –
கடைசியில் ஆதாரங்களுடன் விஷயம் நிரூபிக்கப்பட்டவுடன்
அடங்கிப்போனார். இறுதியில், அவர் பதவியிலிருந்து
ஓய்வு பெற சில நாட்களே மீதி இருந்த காரணத்தால் –
கோர்ட் – அவரை அனைத்து வழக்குகளிலிருந்தும்
விலகி நிற்க உத்திரவிட்டிருந்தது.
(மற்றபடி, அவர் மீது இருந்த முறைகேடுகள் பற்றிய
புகார்கள் குறித்து, மத்திய அரசு நடவடிக்கை
எடுத்திருந்திருக்க வேண்டும்….. ஆனால்,
அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை…! )

மே 2, 2013 முதல் ஆகஸ்டு 16, 2014 வரையுள்ள காலத்திற்கான –
சுமார் 300 பக்கங்கள் அடங்கிய – சின்ஹா அவர்களின்
இல்லத்திற்கு வந்து சென்ற பெருந்தகைகளின் பட்டியலை
பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தான் சொல்வது
உண்மை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தார்.

இந்த கால கட்டத்தில் சின்ஹாவின் வீட்டிற்கு வந்து
சென்றவர்களில் முக்கியமான சிலரின் பட்டியலைப் பாருங்களேன்.
இவர்கள் அனைவருமே … சும்மா டீ சாப்பிட்டுவிட்டு –
சின்ஹாவுடன் கதைபேசிவிட்டுப் போகத்தான் வந்தார்கள்
என்று நினைக்கிறீர்களா ….?

visitors of ranjit sinha

இந்த பட்டியலில் நமக்கு வேண்டிய,
இந்த கதையின் நாயகனின்
பெயரும் இருக்கிறது –

இந்திய மெடிகல் கவுன்சிலின் முன்னாள் தலைவர்
( former chief of Medical Council of India )
திருவாளர் கேத்தன் தேசாய் என்கிற குஜராத் சிங்கம் –
மிஸ்டர் 420……
இந்த கேத்தன் தேசாய் அவர்களின் மீது
ஏகப்பட்ட வழக்குகள் ( கிட்டத்தட்ட 17…!) முன்பு சிபிஐ வசம்
புலன் விசாரணக்கு வந்திருந்தன. அதில் 15 வழக்குகளிலிருந்து
அய்யா தப்பித்து விட்டார்….!!! ( நெருக்கமான நட்பு-உறவு ..!)
கடைசி 2 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும்போது
ரஞ்சித் சின்ஹா ரிடையராகி விட்டார்…..

அதனாலென்ன … அவருக்கு உதவ வேறு ஆட்களா இல்லை….?

இது கொஞ்சம் நிதானமாக, விவரமாக – பேச வேண்டிய
விஷயம்…. நாளை அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to குஜராத்திலிருந்து கிளம்பிய ஒரு மிஸ்டர் 420 …….!!!

  1. ssk சொல்கிறார்:

    கேத்தன் தேசாய் பற்றி யார் எழுதுவார் என்று இருந்தேன் ? மறந்து விடவில்லை இந்த மாதிரி அற்பர்களை என்று வந்து விட்டீர்கள். வாழ்வு , வசதி இருந்தும் இவர்கள் ஏன் இப்படி ?

  2. S.Selvarajan சொல்கிறார்:

    தனது படுக்கையில் 1500 கோடிக்கு மேல் பண கட்டுகளை அடுக்கி { புதையலை பூதம் காப்பது போல் } வைத்துக்கொண்டு தூங்கிய — 420 இவர் தானே …. !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.