( பகுதி-2 -குஜராத்திலிருந்து கிளம்பிய …..) ஒரு அயோக்கியனுக்கு அத்தனை மரியாதைகளும் இங்கே கிடைக்கிறதே எப்படி …. ?

.

” இது பழைய விவகாரம் தானே சார். இப்போ என்ன திடீர்னு
இதை எடுத்துக்கிட்டீங்க..?” என்று எனக்கு ஒரு மடல்
வந்திருக்கிறது….

இது பழைய விவகாரம் மட்டுமல்ல. நேற்றும்,
இன்றும், இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விவகாரம்
.
இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,
சில அயோக்கியர்களுக்கு மட்டும்
எப்போதும் செல்வாக்கு இருந்துகொண்டே இருக்கும்…..
எப்போதும் காரியம் நடந்துகொண்டே இருக்கும்.

“மகாநதி” சினிமா பார்த்திருக்கிறீர்களா …?
அதில் கமல் ( ரா.கி.ர…?) கூறும் வார்த்தைகள்
என் மனதில் மறக்க முடியாத வடுவாக, ஆழப்பதிந்திருக்கின்றன –
இந்த இடுகையின் அடிப்படைக்காரணம் இந்த வார்த்தைகள் தான்….

—-
” ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய
அத்தனை மரியாதையும்
இந்த சமூகத்தில் அயோக்கியர்களுக்கு கிடைக்கிறது.”

“நி்ன்னு கொல்லும் தெய்வமும் சும்மா இருக்கு…
அன்றே கொல்ர சட்டமும் (அரசும்…?) சும்மா இருக்கே….”

—-

இவர்கள் விஷயத்தில் தெய்வமும் கொல்லவில்லை –
சட்டமும் ஒன்றும் செய்யவில்லை
ஏனென்றால், இத்தகைய அயோக்கியர்களுக்கு –
எல்லா இடத்திலும் ஆட்கள் இருப்பார்கள்…
எல்லா கட்சியிலும் ஆட்கள் இருப்பார்கள்….

இவர்கள் கடைப்பிடிக்கும் பார்முலா தான்
அதற்கு முக்கிய காரணம்-
தான் “சம்பாதிப்பதை” – தான் மட்டும் வைத்துக்கொள்ளாமல் –
எல்லா “முக்கிய தலை”களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பது……!

இப்போது இதை நான் எழுதத் தூண்டிய உடனடி காரணம்
அண்மையில் நடந்த சில நிகழ்வுகள் –

நாடறிந்த இந்த கிரிமினலின் வாரிசுக்கு அஹமதாபாதில்
நிகழ்ந்த திருமண வைபவத்திற்கு, கொஞ்சம் கூட கூச்சமே
இல்லாமல் 3 மாநில முதல்வர்கள் வந்து சிறப்பித்தார்கள்….
குஜராத் முதல்வர், உ.பி.முதல்வர், ஆந்திரா முதல்வர் ….!!!
( எல்லாருக்கும் வேண்டப்பட்டவர் –
எல்லாருக்கும் “கொடுத்து” வைத்தவர்…! )

kethan desai daughter marriage-1

3 cms attending kethan desai wedding-1

World Medical Association தலைவராக இந்த ஆசாமி
தேர்ந்தெடுக்கப்பட தோதாக, இந்திய மெடிகல் கவுன்சிலிலிருந்து
பொய்க்கடிதம் கொடுத்திருக்கிறார்கள் – இவர் மீது எந்த வழக்கும்
நிலுவையில் இல்லையென்று.
( ஏகப்பட்ட வழக்குகளில்,
ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்கிறார்.. குறைந்த பட்சம் இரண்டு
வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன …)

இதனை சுட்டிக்காட்டிய, தட்டிக்கேட்ட –
இந்திய மெடிகல் கவுன்சிலின் – லஞ்ச ஊழல் விவகாரங்களை
விசாரிக்கும் பொறுப்பில் இருந்த, தலைமை கண்காணிப்பு
அதிகாரியை, அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்து
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் (பாஜக…! )
உத்தரவிட்டிருக்கிறார்.

நண்பர்கள் இதன் பின்னணியை சரியாகப் புரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக – இந்த ஆசாமியின் விவகாரங்களை
துவக்கத்திலிருந்தே சொல்கிறேன்.

—————–

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் –
துவக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகனாக,
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கேத்தன் தேசாய்.
மருத்துவம் படித்து, சிறுநீரகவியல் துறை
சிறப்பு மருத்துவராக தேர்ச்சிபெற்றார்.
டாக்டராக பணியாற்றிக்கொண்டே, அகமதாபாத்தில் உள்ள
மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணிக்குச்
சேர்ந்தார். அதன் பிறகு, அந்தத் துறையின் தலைவராக
பதவி உயர்வு பெற்றார்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முன்னாள் பிரதமர்
வி.பி.சிங் நிறைவேற்ற முற்பட்டபோது, சில மாணவ
இயக்கங்கள் அதை கடுமையாக எதிர்த்தன.
போராட்டத்தில் இறங்கிய மாணவர்களை ஒருங்கிணைத்த
கேத்தன் தேசாய் பிரபலமடைந்தார். அந்தப் பிரபலத்தைப்
பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர்,
முதலில் குஜராத் மாநில மருத்துவ கவுன்சில் தலைமைப்
பதவியையும், பின்னர் அகில இந்திய மருத்துவக் கவுன்சிலில்
இடம் பிடித்து, பின்பு அதன் தலைமைப் பொறுப்பையும்
கைப்பற்றினார்.

அகில இந்திய மெடிகல் கவுன்சில் தலைவராக பொறுப்பு
வகிக்கும்போது பிரச்சினை வெடிக்கிறது.

மருத்துவத் துறையைப் பொறுத்தவரையிலும் சரி,
மருத்துவக் கல்லூரிகள் மத்தியிலும் சரி, அகில இந்திய
மருத்துவக் கவுன்சில்தான் ஆட்சி பீடம். அந்த அமைப்பு
சொல்வதுதான் சட்டம். எந்தத் தனியார் மருத்துவக்
கல்லூரியையும் அரசு மருத்துவக் கல்லூரியையும்,
இந்த அமைப்பு நினைத்தால் முடக்கவும் முடியும்;
செயல்படவைக்கவும் முடியும். இத்தனை அதிகாரமிக்க
பதவிக்கு கேத்தன் தேசாய் பொறுப்புக்கு வந்த நேரத்தில்தான்,
இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரித் தொழில்
களைகட்டத் துவங்கியது.

எந்தக் கல்விப் பின்புலமும் இல்லாமல் பணத்தை
மட்டுமே முதலீடாகக் கொண்ட பல வியாபாரிகள்
மருத்துவக் கல்லூரிகள் கட்ட ஆரம்பித்தனர்.
அவர்களின் நோக்கம் லாபம் மட்டுமே. அதற்காக
அவசர கதியில் கட்டடங்களை மட்டும் கட்டிவிட்டு,
முறையான பேராசிரியர்களை நியமனம் செய்யாமல்,
ஆய்வுக்கூடங்கள் அமைக்காமல், கல்லூரி நடத்த அனுமதி
வேண்டுவார்கள். அவர்கள்தான் தேசாய்க்கு காமதேனு.

இந்த காலகட்டத்தில், 2000ஆவது ஆண்டிலேயே,
இவர் அகில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக
நியமிக்கப்பட்டது குறித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில்
ஒரு வழக்கு தொடரப்பட்டது.

மருத்துவ கல்லூரி ஒன்றில் இடம் தருவது தொடர்பாக –
65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற இவர் அகில இந்திய மருத்துவ
கவுன்சிலில் உறுப்பினராக நீடிக்கவே, தகுதியற்றவர் என்றும்,
இவர் தலைவராகச் செயல்பட தடை விதிக்க வேண்டும்
என்றும் இவர் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

Delhi High Court – (CWP No.7746/2000)
Union Of India vs Harish Bhalla And Ors.
( respondent No.3 – Dr.Ketan Desai )

மிக முக்கியமான இந்த வழக்கில் 23 November, 2001
அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பிலிருந்து சில முக்கியமான பகுதிகள் மட்டும் கீழே –

All major decisions regarding grant of affiliation to new medical
colleges, recognition or withdrawal of recognition to medical
colleges, regulation of number of seats in medical colleges,
appointment of examiners for conducting examinations, a
ppointment of teams of inspectors etc. are being kept
by respondent No.3 within his control.

He is said to be minting money running into crores of rupees by
manipulating decisions on all such important issues.

……..

The 15% NRI quota comes to about 1,200 students who are
admitted without pre-medical entrance test. This quota is never
adhered to and instead of 1,200, the figures of actual admissions
under this quota are more than double. The seats are allotted
on payment of huge amount running into several lacs and
the total money thus collected runs into crores of rupees.

…….

In the additional affidavit filed by respondent No.1 in the appeal
i.e., writ petitioner, the corruption allegedly indulged in
by Dr.Ketan Desai, respondent No.3 has been highlighted
by showing receipt of illegal donations by him.

It has been pointed out that there was an Income-tax raid
conducted at the business and residential premises of
Dr.Ketan Desai on 18th and 20th February, 2000.
The petitioner has placed on record specific information
regarding the bank drafts of the total value of Rs.65 lacs
received by Dr.Ketan Desai and members of his family.

…….

It will be seen from the above chart that the money was
received by way of bank drafts by Dr.Ketan Desai,
his wife Dr.Alka Desai and their children.

Dr.Ketan Desai, respondent No.3 is misusing his office
as President of the Medical Council and is minting money.
Such a person does not deserve to occupy the high
public office of President of Medical Council of India.

……..

If the medical education is on sale by such corrupt practices
as are imputed to respondent No.3 what will happen to the
medical profession and what type of medical aid will the
citizens of this country get?

……

Respondent No.3 has manipulated the Medical Council
of India affairs in a manner that he is having a complete hold
over all such powers.
………..

The allegations of petitioner against respondent No.3 regarding
minting money stands established.
With this it stands established that Dr.Ketan Desai,
respondent No.3 has misused his position as President of
the Medical Council of India. He is using the office
for making illegal monetary gains for himself and
his family members.

Prima facie a case for prosecution of Dr.Ketan Desai
on charges of corruption under the Prevention of Corruption
Act is clearly made out.

…………………….

We cannot allow an unscrupulous and corrupt person to
function as President of the Medical Council of India.
We are conscious of the fact that the Medical Council of
India Act does not contain any provision for disqualifying
a person from holding office in the Medical Council of India.
But there is no bar either in the Act against removal of
an elected office bearer before expiry of his term.

Therefore we direct that Dr.Ketan Desai, respondent No.3
shall cease to hold office of President of the Medical Council
of India with immediate effect.

…………….

சுருக்கமாகச் சொன்னால், இந்த ஆசாமி லஞ்ச ஊழலில்
மூழ்கித் திளைத்தது, டெல்லி உயர்நீதிமன்றத்தாலேயே
தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த ஆளின் முதல் அத்தியாயம் இதுவென்றால் –
அடுத்த அத்தியாயம் இன்னமும் திகிலூட்டும்.

இடைக்காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றி சரியான
ஆதாரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் – இதற்கு அடுத்து, இவர் பிடிபட்ட விவரங்கள் –

—————————————-
முதலில் செய்தி –
(-http://www.indianexpress.com/news/cbi-
desai-owns-10-houses/611648/) –

ஏப்ரல் 22, 2010 – சிபிஐ, இந்திய மருத்துவ கவுன்சில்
(MCI – Medical Council of India ) தலைவர், குஜராத்தைச்
சேர்ந்த டாக்டர் கேத்தன் தேசாயை கைது செய்கிறது.

காரணம் – பாட்டியாலாவைச் சேர்ந்த கியான் சாகர் மெடிகல்
காலேஜ் என்னும் மருத்துவக் கல்லூரிக்கு, அனுமதி
(recognition to function) கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கினார் !
கேத்தன் தேசாயிடமிருந்து ரூபாய் 2 கோடி ரொக்கமாக
கைப்பற்றப்பட்டது.

சிபிஐ கொடுத்த தகவலின்படி –
மருத்துவக் கல்லூரிக்கான விதிமுறைகளை சரிவரக்
கடைப்பிடிக்காத கியான் சாகர் மருத்துவக் கல்லூரிக்கு
அனுமதி கொடுப்பதற்காக மொத்தம் 8 கோடி ரூபாய் பேரம்
பேசப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட கல்லூரியின்
துணைத்தலைவர் டாக்டர் சுக்வீந்தர் சிங் முதல்
தவணையாக இந்த 2 கோடியை தர முற்பட்டிருக்கிறார்.

தேசாயைத்தவிர, இடைத்தரகராக செயல்பட்ட ஜே.பி.சிங்,
மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த
டாக்டர்கள் சுக்வீந்தர் சிங், கல்வன்ஜித் சிங்
ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

( இடுகை நீண்டு விட்டது –
அடுத்த பகுதியில் தொடர்கிறேன் …….)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ( பகுதி-2 -குஜராத்திலிருந்து கிளம்பிய …..) ஒரு அயோக்கியனுக்கு அத்தனை மரியாதைகளும் இங்கே கிடைக்கிறதே எப்படி …. ?

 1. ரிஷி சொல்கிறார்:

  படித்தவன் சூதும் வாதும் செய்தால் ‘போவான்.. போவான்.. அய்யோவென்று போவான்’

 2. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  எந்த ஆட்சி வந்தாலும் இந்த அசிங்கமான பிறவிகளை ஒன்றும் செய்து விட முடியாது.

 3. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இந்த ஆளுக்கு காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல,
  முலாயம் சிங்க் கட்சி, சந்திரபாபு நாயுடு கட்சி,
  குஜராத்தில் ஆண்ட, மத்தியில் ஆளும் பாஜகட்சி
  உட்பட அனைத்து கட்சிக்காரர்களும் சப்போர்ட்
  செய்கிறார்கள் என்றால்
  இந்தக்கயவர் அவர்கள் அனைவருக்கும் தேவைப்பட்டதை
  எல்லாம் செய்து கொடுத்திருக்கிறார் என்று தானே அர்த்தம் ?
  இவர்களை எல்லாம் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.
  இறைவனாகப் பார்த்து தண்டித்தால் தான் உண்டு.
  இவன் மாதிரி இந்தியாவில் இன்னும் எத்தனை
  அயோக்கியர்களோ ?

 4. Siva சொல்கிறார்:

  Medical profession is considered to be a sacred one because of its pain-relieving and life-saving natures. However, it has been changed to a money making business throughout the world. This fact is not a new one. Every one knows it well. But, on top of this problem, doctors-cum-administrators in Indian medical council and other governing bodies are smartly exploiting the situation to earn illegal money. This is a sin. Not only in medical council, this problem exists in other councils (eg, research council, agricultural council etc). A strong nexus between beaurocrates (government-selected administrators) AND politicians (people-elected policy-makers) is benefiting both of them. This also protects both of them from sinful act.

 5. ssk சொல்கிறார்:

  கட்டுரை அற்புதமாக உள்ளது. பெரிய இடங்களில் பலரின் வயிற்றில் அடித்து இப்படி இருக்கும் ஆட்களை என்று தான் கடவுள் தண்டிக்கும்…அரசு நிச்சயம் ஒன்றும் செய்து. ஆளும் கட்சி , எதிர் கட்சி எல்லா இடங்களிலும் இவர்கள் தப்பித்து விடுவார்கள். வேதனை.வேதனை.

 6. drkgp சொல்கிறார்:

  Dear KMji,
  Look at the similarities between this big fish and the other one, a yoga master.
  After initial reporting of tonnes of gold and thousand crore cash from this
  doctor, nothing came from any media about it till now. So also the
  same Express paper reported about a suspecious death in the
  yoga center and nothing followed after that. You see how these people
  with high connections can easily mug the media either with money
  or with power. This is the quality of our mighty media’s fearless reporting.
  There are several such misdeeds from high places go unreported even
  from oun front line media.

 7. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  முக்கியமா, வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவரை பற்றி கட்டுரையில் ஒன்றையும் காணோமே ஐயா? அவரும் இவரோட தோஸ்த்துதானே!

 8. bandhu சொல்கிறார்:

  எந்த அரசியல் கட்சி மேலும் நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது இந்த படங்களைப் பார்த்ததிலிருந்து. எல்லோருமே கூட்டுக் களவாணிகள். தெய்வம் தண்டிக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் இருக்கிறது. பார்க்கத்தானே போகிறோம்!

 9. yogeswaran சொல்கிறார்:

  dear sir,

  bribes are even mentioned by chanakyah in ardha sasthiram.

  what does it mean.

  once madam indira said corruption is universal.

  rgs

  yogi

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.