( 4-வது இறுதிப்பகுதி – குஜராத்திலிருந்து…. ) ஏழு ஏன் – ஒரே ஒரு வித்தியாசமாவது – கண்டுபிடிக்க முடியுமா…..???

.

மத்திய காங்கிரஸ் அரசு – மோசடி மன்னன் கேத்தனின்
பின்னால் பலமாக நின்றதன் விளைவு –

கேத்தன் – விதிமுறைகளை மீறி மருத்துவக் கல்லூரிக்கு
அனுமதி வழங்க 2 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரத்திலும் சரி,

வருமானத்திற்கு மீறி பணமும், சொத்துக்களும்
வைத்திருந்ததற்கான விவகாரத்திலும் சரி –
சிபிஐ – உல்டா பல்டி அடித்தது !

இரண்டு வருடங்களாக – ஹைதராபாத், புவனேஸ்வர்,
டெஹ்ராடூன், சென்னை ஆகிய பல ஊர்களிலும் மேற்கொண்ட
தீவிர விசாரணைகளுக்குப் பிறகும் –

கேத்தன் தேசாய்க்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லை
என்கிற முடிவிற்கு வந்துவிட்டதாக சிபிஐ கோர்ட்டில்
clean chit-உடன் closure report அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

துவக்கத்தில் இதே சிபிஐ தான் – (FIR ) முதல் தகவல்
அறிக்கையில்- கேத்தன் தன் வருமானத்தை விட 230 %
( இருநூற்று முப்பது சதவீதம் ) அதிக சொத்து வைத்திருந்ததாக
கூறி இருந்திருக்கிறது ..!

இறுதி அறிக்கையில் –
கேத்தனுடைய பெயரில் இல்லாத ஷேர்களையும்,
அவற்றின் பண மதிப்பையும் தவறாகச் சேர்த்து விட்டதாகவும்
சிபிஐ – கோர்ட்டில் கூறி விட்டது…!

சிபிஐ நினைத்தால், ( அதாவது, மத்தியில்
ஆளும் கட்சி நினைத்தால்…? )

எவரையும் கொடும் குற்றவாளியாகவும் ஆக்கலாம்…
ஒன்றும் தெரியாத அப்பாவியாகவும் ஆக்கலாம் என்பதற்கு
இதைவிடச் சான்று வேறென்ன வேண்டும்….?

அவர் சட்டப்படி சம்பாதித்த சில வருமானங்களை முதலில்
கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையாம் …!
இறுதி அறிக்கையில் – அவர் வைத்துள்ள பணம்,
சொத்துக்கள் – எல்லாமே சட்டத்திற்கு உட்பட்ட
வருமானங்களே என்று சிபிஐ கூறி விட்டது….!!!

சிபிஐ யால் கைப்பற்றப்பட்ட 3.5 கிலோ தங்கத்திற்கு
ஏற்கெனவே கேத்தன் வருமான வரி இலாகாவிற்கு
கணக்கு காட்டி விட்டாராம்…!
இதற்கிடையிலேயே, கேத்தன் தன் மீது தொடரப்பட்ட
17 வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தை அணுகி
ஜாமீன் பெற்று வெளியே வந்து விட்டார்.

இதற்குப் பிறகு இன்னமும் பல அதிசயங்கள் நிகழ்கின்றன !

சிபிஐ, கோர்ட்டில் ‘க்ளீன் சிட்’ சமர்ப்பித்த பிறகு –

வழக்குகளின் மீது கோர்ட்டில் இன்னும் இறுதி உத்திரவுகள்
பிறப்பிக்கப்படாத நிலையிலேயே –

கேத்தன் மருத்துவராக பணி புரிவதை தடை செய்து
ஏற்கெனவே அகில இந்திய மருத்துவ கவுன்சில்
பிறப்பித்த உத்திரவு விலக்கப்படாத நிலையிலேயே-

கைது செய்யப்படும் முன், தான் பணி புரிந்துவந்த அதே
அஹமதாபாத் B.J. Medical College-ல் (குஜராத் சர்க்காரின் –
மாநில அரசு ஆஸ்பத்திரி….)
மீண்டும் பணியில் சேர அனுமதிக்கப்படுகிறார்.
அதுவும் urology department-ன் Head of
Department-ஆக …!

Twin-Bros-1

இது ஒரு அரசுப்பணி. அரசு ஊழியர்களின்
நடத்தை விதிகளின்படி – ஒருவர் கைது செய்யப்பட்டு,
24 மணிநேரத்திற்கு மேலாக சிறையில் இருந்தால் –
அவர் ஆட்டோமேடிக்காக தற்காலிக
பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆகிறார்
( deemed to have been suspended ).

பிற்காலத்தில், அவர் மீது நிலுவையில் இருந்த வழக்கு
முற்றுப்பெற்று, அவர் நிரபராதி என்று விடுவிக்கப்படும் வரை
அவர் suspension-லேயே இருக்க வேண்டியது தான்.
அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் தான்-
பதவியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம்.
தீர்ப்பு அவருக்கு எதிராக இருக்குமேயானால், பதவியிலிருந்து
ஆட்டோமேடிக்காக “டிஸ்மிஸ்” செய்யப்பட்டவர் ஆவார்…

ஆனால், இந்த சட்டவிதிகளுக்கு முரணாக கேத்தனின்
suspension order விலக்கிக் கொள்ளப்பட்டு, அவர் மீண்டும்
அரசுப்பணியில் அமர்த்தப்படுகிறார். ( அப்போது குஜராத்தில்
இருந்தது திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான
பாஜக அரசு…!!! )

பகல் கொள்ளைக்காரர்களுக்கு –
எல்லா கட்சிகளும், எல்லா தலைவர்களும் –
வேண்டப்பட்டவர்கள் தான் என்பதைப் புரிந்துகொண்டால் –
இது வியப்பாக இருக்காது ….!!!

 

twin bros-2

விஷயம் இத்தோடு நிற்கவில்லை –

குஜராத் பல்கலைக்கழகத்தின் (செனட் ) ஆட்சி மன்ற
உறுப்பினராகவும் கேத்தன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

விஷயம் இத்தோடும் நிற்கவில்லை –

குஜராத் செனட்டின் சார்பாக – திருவாளர் கேத்தன் மீண்டும்
அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உறுப்பினராகவும்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்…!!!
குஜராத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின்
சார்பாகவும், கேத்தன் தேசாய் – அகில இந்திய மருத்துவ
கவுன்சிலுக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும்
இந்த நிகழ்வை –

செனட் கூடி பத்தே நிமிடத்தில் முடித்து தன் முடிவை
அகில இந்திய கவுன்சிலுக்கும் தெரிவித்து விடுகிறது.

இத்தோடும் நிற்கவில்லை விஷயம் –

இழந்துபோன தன்னுடைய செல்வாக்கை மீண்டும் பெற
முயற்சி எடுத்த கிரேட் கேத்தன், உலக மருத்துவ கூட்டமைப்பின்
(WMA -World Medical Association ) தலைவராக போட்டியிட்டு
வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த உலக மருத்துவ கூட்டமைப்பில் –
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா,
கனடா போன்ற 109 உலக நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
பிரேசில் நாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், இவரது பெயர்
ஜப்பான் பிரதிநிதியால் முன்மொழியப்பட்டு – அமெரிக்கா
மற்றும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகளால் வழிமொழியப்பட்டு –
போட்டியே இல்லாமல் WMA தலைவராக கேத்தன்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்..!!

இந்திய மருத்துவ கவுன்சிலால் –
மருத்துவராகப் பணியாற்றும் லைசென்சே பறிக்கப்பட்டு,
பதவி நீக்கம் செய்யப்பட்ட,
17 கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள,
திருவாளர் கேத்தன் தேசாய் – உலக மருத்துவ கூட்டமைப்பின்
தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்…!!!
எப்பேற்பட்ட விந்தையிது …

கேத்தனின் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்
விஷயம், அவரது எதிர்ப்பாளர்கள் சிலரால் WMAக்கு
தெரிவிக்கப்பட, விஷயத்தை WMA நிலுவையில் வைத்திருந்தது.

சென்ற மாதம், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பாக,
கேத்தன் மீதுள்ள வழக்குகள் எல்லாம் விலக்கிக்கொள்ளப்பட்டு
விட்டன என்றும், தற்போது அவர் மீது எந்த வழக்கும்
நிலுவையில் இல்லை என்றும் WMAக்கு ( பொய்யான தகவல் )
தெரிவிக்கப்பட, கேத்தன் பதவியேற்க அழைக்கப்படுகிறார்…. !!!

இவ்வாறு தவறான தகவலை எவ்வாறு தெரிவிக்கலாமென்று
இதனை சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்ட –
இந்திய மெடிகல் கவுன்சிலின் – லஞ்ச ஊழல் விவகாரங்களை
விசாரிக்கும் பொறுப்பில் இருந்த, தலைமை கண்காணிப்பு
அதிகாரியை, அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்து –
தற்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஹர்ஷ்வர்த்தன் (பாஜக…! ) உத்தரவிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் ஆண்டாலென்ன – பாஜக ஆண்டாலென்ன …
கேத்தனுக்கு எங்கும் godfathers இருக்கிறார்கள்….!

( அப்பாடா – ஒரு வழியாக கேத்தன் புராணம் முடிந்து,
மீண்டும் துவங்கிய இடத்திற்கு வந்து விட்டேன்……. )

2001ஆம் ஆண்டிலேயே,
டெல்லி உயர்நீதிமன்றத்தால் –
” லஞ்ச ஊழல் பேர்வழி – ஒருக்கணம் கூட அகில இந்திய
மருத்துவ கவுன்சில் தலைவராக நீடிக்கத் தகுதியற்றவர் ”
என்று அறிவிக்கப்பட்ட ஒரு ஆசாமி, அதற்குப் பிறகும்
இத்தனை ஆண்டுகள் பதவியில் நீடித்து, இத்தனை வழக்குகள்
நிலுவையில் இருக்கும்போதே, அரசுப்பணியிலும் தொடர்ந்து,
மூன்று முதலமைச்சர்களும், பாஜக தலைவரும்
வந்திருந்து வாழ்த்த – தன் வாரிசின் திருமணத்தை நடத்த
முடிகிறது என்றால் –

இந்த நாட்டில் அரசியல் கட்சிகளிடையே (கம்யூனிஸ்ட் கட்சியை
விட்டு விடுங்கள் ) எதாவது வித்தியாசம் தென்படுகிறதா ?
அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் -அத்தனையும் சொத்தை
என்பது போல் – அரசியல் கட்சிகளிடையே ஊழலில்
மூழ்கித்திளைப்பதில் எந்த வித்தியாசத்தையாவது காண
முடிகிறதா …?

வார இதழ்களில் கேட்பது போல் –
காங்கிரசுக்கும் – பாஜக வுக்கும் இடையே –
ஏழு என்ன ஒரேஒரு வித்தியாசத்தையாவது இங்கு
யாராவது காட்ட முடியுமா …?

நம் நாட்டில் – அரசியல் மட்டுமல்ல –
அனைத்து துறைகளுமே அழுகி புழுத்துப்போய் விட்டன.

நேர்மையாளர்களைக் காண்பது –
அரிதிலும் அரிதாகிக் கொண்டே போகிறது.

அழுகல் நாற்றம் சகிக்க முடியவில்லை…
யாராவது ஒருவர் இடையில் நேர்மையாளர்
என்கிற செண்ட்டை போட்டுக்கொண்டு வந்து விட,
( மே, 2014 -பாராளுமன்ற தேர்தல் போல …)
நாமும் அதை நிஜமென்று நம்பி ஏமாந்து போகிறோம்….

உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி –
இந்த அழுகல்களை எல்லாம் தூக்கியெறிந்து சுத்தப்படுத்த –

இயற்கையோ அல்லது இறை சக்தியோ
நிச்சயம் ஒரு வழியைக் காட்டும்.

இன்றில்லா விட்டாலும் நாளை
அது நிச்சயம் நடக்கத்தான் போகிறது.

அதில் – நம் பங்கும் எதாவது இருக்க வேண்டுமல்லவா…?
அதனைச் செய்ய முயற்சிப்போம்…!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to ( 4-வது இறுதிப்பகுதி – குஜராத்திலிருந்து…. ) ஏழு ஏன் – ஒரே ஒரு வித்தியாசமாவது – கண்டுபிடிக்க முடியுமா…..???

 1. Sridhar சொல்கிறார்:

  😦 really saddened by the happenings.

  Sridhar

 2. today.and.me சொல்கிறார்:

  KM ji,

  //துவக்கத்தில் இதே சிபிஐ தான் – FIR ல்- கேத்தன் தன் வருமானத்தை விட 230 %
  அதிக சொத்து வைத்திருந்ததாக கூறி இருந்திருக்கிறது ..!
  இறுதி அறிக்கையில் – கேத்தனுடைய பெயரில் இல்லாத ஷேர்களையும்,
  அவற்றின் பண மதிப்பையும் தவறாகச் சேர்த்து விட்டதாகவும் சிபிஐ – கோர்ட்டில் கூறி விட்டது…!//

  I just want to clear my doubt

  1. whether any defamation suit filed against CBI or CBI authorities by Mr. Desai or his well-wishers. Because if he can go to any level (from every pole to post) then they can. If it is not then why? Did CBI ask for apology?

  2. Kaliyug Kalki, ‘Dr. Su Sa’ is always silent in this matter. What does it mean? answer any SuSa’s followers please…..

  —————

 3. ssk சொல்கிறார்:

  உலக மருத்துவ கவுன்சில் வரை போக எவ்வளவு அரசு பணியாளர்கள் இவருக்காக தொண்டு செய்திருக்க வேண்டும். நினைத்தால் மலைப்பாக உள்ளது. நிச்சயம் இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றாவது . அப்படி பணம் பொருள் சேர்த்து என்ன செய்ய போகிறான் ? மருத்துவராக இருந்தும் உடலின் நிலையாமை தெரியவில்லையே . உப்பை தின்றவன் தண்ணி குடிப்பான் என்பது இயற்கை விதி. இயற்கை என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

 4. Siva சொல்கிறார்:

  KM sir, change the end paragraph like this, we will blow the whistle until we see changes! Change is the one cannot be changed in evolution. As such, it is hard to stop blowing whistle because thief will also change his style as per the change taking place at particular period.

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப சிவா. ஆம். நீங்கள் கூறுவது முற்றும் உண்மை.

   ஆனால் காமைஜி அவ்வப்போது எனக்கு வயசாயிட்டே வருது என்று ஃபீலிங்கை தனக்கும் வரவைத்து படிப்பவர்களுக்கும் வரவைத்துவிடுகிறார், ( 92வயதில் இளைஞர் போல சாதிக்கத்துடிப்பவரைப் பார்த்தும், 60வயதிற்குமேலும் இளைஞர்அணித்தலைவராக இருப்பவரைப் பார்த்தும் திருந்தாமல்).
   🙂 🙂

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் today.and.me மற்றும் சிவா,

    மன்னிக்கவும் நண்பர்களே,

    என்னுடன் இணைந்து –
    என்னையும் விட துடிப்புடன் செயலாற்ற
    நீங்கள் அனைவரும் துணை இருக்கையில் –
    நான் இயலாமை குறித்து பேசுவது தவறு தான்.
    இனி அது நிகழாது…..

    இடுகையின் கடைசி பத்தியை மாற்றி விட்டேன்…!
    சரி தானே …?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 5. S.Selvarajan சொல்கிறார்:

  வரும் முன் ஏமாற்றுவது —- வந்து ஏமாற்றுவது —- வந்த பின் ஏமாற்றுவது —– வந்தே .தே..தே ..தே ….. ஏமாற்றுறோம்…… ? எல்லா அரசியல் கட்சிகளின் ” தாரக மந்திரம் ” …… ! இந்தியா ஒரு வல்லரசு நாடாகுமாக்கும் ….!!

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு முகநூல் பகிர்வு நண்பர்களுக்காக,

  *****ரிலாக்ஸ் ப்ளீஸ்
  விவசாய நிலங்களுக்கு
  4 மடங்கு இழப்பீடு
  வழங்கப்படும் – மோடி

  #
  ஒருத்தரை
  ஏமாத்தணும்னா முதல்ல
  அவரோட ஆசையை
  தூண்டி விடணும்
  *
  சதுரங்க வேட்டை.

  • today.and.me சொல்கிறார்:

   //ஒருத்தரை ஏமாத்தணும்னா முதல்ல அவரோட ஆசையை தூண்டி விடணும்//
   ஆசையே துன்பங்களுக்குக் காரணம்-புத்தர்

 7. today.and.me சொல்கிறார்:

  //அரசியல் கட்சிகளிடையே ஊழலில் மூழ்கித்திளைப்பதில் எந்த வித்தியாசத்தையாவது காண முடிகிறதா …?//
  மோடி பக்தர்கள் யாராவது வந்து ஏழு வித்தியாசத்தைச் சொல்லி கொஞ்சம் மானத்தைக் காப்பாத்துங்களேன்.

 8. Taru சொல்கிறார்:

  It worries to see your sweeping statements. It is true that congress ruined and looted this country for decades.
  As you said, all this will change soon. We are seeing some hope with current government. We all need to support for full results.
  Some recent changes by PM Modi are
  – mandatory declaration of assets by ministers
  – digital drive in bureaucratic function to increase transparency
  – Strict monitoring of performance of higher officials
  – steps for more powerful lokpal
  – public transparent auction of natural reserves
  – Steps to provide skill and education for all
  – Lot of reformation on labor act to stop misusing
  – comprehensive social insurance for so medical looting is prevented

  There are many more. As you said if not today, we see some hope tomorrow

 9. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களே

  இணைய வசதி இல்லாத இடத்தில் உள்ளவர் படிக்கவேண்டுமானால் இங்கே தரவிறக்கி, பிரிண்ட் எடுத்துக் கொடுங்கள்..

  From Gujarat

  http://www.todayandme.wordpress.com

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   உங்கள் வேகமும், செயல்திறனும், ஆர்வமும்
   என்னை பிரமிக்க வைக்கின்றன.

   உண்மையிலேயே அசந்து போய் விட்டேன்.
   மிக அழகாக, கச்சிதமாக, அற்புதமாக
   பதிப்பித்து விட்டீர்கள். மிக்க நன்றி.

   நம் உழைப்பு வீண் போகாமல்,
   தகுந்த பலன் விளையுமாறு செயல்பட
   முடியும் என்கிற நம்பிக்கையை
   நீங்கள் தருகிறீர்கள்.

   யோசித்தால் – நீங்கள் சொன்னது போல்,
   இன்னும் சில தலைப்புகளில் கூட
   இது போல் செய்ய முடியுமோ என்று தோன்றுகிறது.
   ஆனால் – மீண்டும் ஒருமுறை ஆழமாகப்
   படித்துப் பார்த்து விட்டு
   அவசியமானால், சில மாற்றங்களையும்
   மேற்கொண்டு விட்டு (after editing certain portions …)
   அவற்றைக் கூடச் செய்யலாம்.

   எனக்கு யானை பலம் வந்தது போல்
   உணர்கிறேன். தொடர்ந்து இது குறித்து
   ஆலோசிக்கலாம்….

   நன்றியுடனும்,
   வாழ்த்துக்களுடனும்,

   காவிரிமைந்தன்

 10. S.Selvarajan சொல்கிறார்:

  ஒருத்தரை
  ஏமாத்தணும்னா முதல்ல
  அவரோட ஆசையை
  தூண்டி விடணும்……. ! இது எல்லோருக்கும் பொருந்துமா …… கா.மை. சார் .? உங்களின் அனுபவம் எப்படி விளக்குவிர்களா …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உங்கள் “பாணி”யிலேயே விளக்கம் அளிப்பது தானே
   பொருத்தமாக இருக்கும்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. S.Selvarajan சொல்கிறார்:

  நன்றி சார் ..! வாழ்க்கை எனும் ஓடம் — வழங்குகின்ற பாடம் …. !! போல …..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.