மோடிஜி – பழ.நெடுமாறன் அவர்களை அழைத்தாரா….?

pazha.nedumaaran

இன்று ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது….
எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை….!

மோடிஜி பழ.நெடுமாரன் அவர்களுடன் பேச விரும்பி,
அவரைடெல்லிக்கு வருமாறு அழைத்திருப்பதாகவும்,
அழைப்பினை ஏற்று திரு.நெடுமாறன் டெல்லி
சென்றிருப்பதாகவும் தகவல்…..

இதன் பின்னணியாகச் சொல்லப்படும் தகவல் –

மோடிஜி அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது,
வட மாகாண முதல்வர் திரு விக்னேஸ்வரன் அவர்களுடன்
தனித்து உரையாடியபோது –

திரு விக்னேஸ்வரன் அவர்கள் –
13வது சட்ட திருத்தத்தை செயலுக்கு கொண்டு வருவது
பற்றியும், தமிழர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பது பற்றியும் இந்திய அரசு இலங்கை அரசின்
மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டதையொட்டி,

13வது சட்ட திருத்தம் இயற்றப்பட்டதன் பின்னணி,
இந்திய அரசுக்கு இதில் இருக்கும் தார்மீக உரிமைகள்,
கடமைகள் ஆகியவை பற்றி திரு பழ.நெடுமாறன்
அவர்களுடன் நேரிடையாகப் பேசி சில விவரங்களைத்
தெளிவுபடுத்திக் கொள்ள மோடிஜி விரும்பியதாகவும் –
அதனையொட்டியே பழ.நெடுமாறன் அவர்கள்
டெல்லிக்குச் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைக் பிரச்சினையில் பழ.நெடுமாறன் அவர்களின்
நிலை மற்றும் பின்னணி குறித்து பிரதமருக்கு –
அவரது உதவியாளர்களால் நன்றாகவே
தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். அப்படியிருந்தும் மோடிஜி
அழைத்திருப்பாரா என்பது கேள்விக்குரியதாகவே
இருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் – உடனடியாகத் தீர்வு
காணப்பட வேண்டிய விஷயங்களும் உண்டு. நீண்ட கால
தீர்வு குறித்த விஷயங்களும் உண்டு.

உடனடித் தீர்வு காண வேண்டிய சில விஷயங்களில்
இந்திய அரசு விரைந்து செயல்பட, இந்த சந்திப்பு உதவினால்
நல்லதே.

பார்ப்போம் – என்ன நடக்கிறதென்று.
இது குறித்து பழ.நெடுமாறன் அவர்களே சொன்னால் தான் உண்டு.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to மோடிஜி – பழ.நெடுமாறன் அவர்களை அழைத்தாரா….?

 1. Siva சொல்கிறார்:

  Is 13th amendment relevant today to solve the problems of Tamils in CEYLON ? If any body can share good thought about it?

 2. yogeswaran சொல்கிறார்:

  Dear Sirs,

  Why india is getting involved.

  Maindhan Sir,

  Your last sentence of the essay says some thing.

  rgs

  yogi

  • today.and.me சொல்கிறார்:

   Yogi sir,
   I understand from many of your feedbacks that you are there in Srilanka or are standing by the srilankan tamils.

   So, it is better to explain “Why India should not get involved in this matter?” than “Why india is getting involved?”

   If you know the answer, please explain to the readers.

   I think you take this in a good perspective.

   • yogeswaran சொல்கிறார்:

    dear sir,

    we are the victims of geopolitics.

    no one is really interested in settling the problems except for their own good.

    persons who had observed this issue from the beginning knows the facts.

    pitchai vendaam naayai kattu endru oru pazha mozhi undu sir.

    yogi

    • Siva சொல்கிறார்:

     Yogi,

     I completely agree with you. The problems of CEYLON Tamils have been complicated by the involvement of India. Indian leaders have done everything to complicate and aggravate their problems. As you told, the geopolitics of Indian subcontinents has victimized the CEYLON Tamils and put them in most slavery condition at this technological era.

     There seems to be any reasonable and viable solution for another 2-3 decades. Only things are moving towards the annihilation (destruction) of Tamil population there.

     If any Tamil leaders talk in support of them, they will be marked as Tamil racist in India. This is the situation right now. There is no real democracy any where in the world to save the rights of many ethnic groups, who are under threat of annihilation or marginalization from common stream.

 3. Taru சொல்கிறார்:

  Modiji is a leader with international vision. He will not engage a Tamil racist like nedumaran at all. Moreover, Sri Lanka itself is working amicable settlement on the advise of PM

 4. சக்தி சொல்கிறார்:

  1987 இல் ராஜிவ்காந்திக்கும் அப்போதய அரசுத்தலைவர் ஜெயவர்தனேக்கும் இடையில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது.இதன்படி இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

  அந்த ஒப்பந்தப்படி இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கி சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஆகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் செயல்பட இணக்கம் இரு தலைவர்களுக்குமிடையில் ஏற்பட்டது.
  தொடர்ந்து 42 மாகாண சபைகள் உருவாகின. அதைத் தவிர வேறெதுவும் நடைமுறையில் வரவில்லை.

  13 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அதில் இருந்த குறைந்தபட்ச அதிகாரங்களையும் இல்லாது செய்துவிட்டது.

  ராஜபக்சே அரசு இந்த 13 சட்டத்திருத்தத்தை முற்றாக நீக்க முயற்சி செய்தது.ஆனால் இரண்டு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் என்பதால் சிறிது தயக்கம் காட்டினார்கள்.

  இதற்கிடையில் 13 சட்டத்திற்கு அப்பால் சென்று 13+ ஓரளவு தற்போதய நிலையில் இருந்து தமிழர்களுக்கு சிறிய ஆரம்ப விடிவாகும் என சொல்லப்பட்டது.ஆனால்…
  13+ என்பது அரசியலமைப்பு ரீதியாக எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. ஏனெனில் உயர் நீதிமன்றம் 1987 ஆம் ஆண்டில் கொடுத்த தீர்ப்பில் ஒற்றையாட்சியின்படி குறிப்பிட்ட சில அதிகாரங்களை கொடுக்க முடியும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே மேல் அதிகாரங்களை வழங்குவதாய் இருந்தால் ஒற்றையாட்சி அல்லாத அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பும் சிங்கள மக்களின் நிலைப்பாட்டின்படியும் 13 மட்டுமன்றி அதற்கு மேல் 13+ கூட சட்டமாக்க முடியாத நிலை உருவானது.

  இந்த நிலையில் இந்தியாவை ஏமாற்ற 13 – ஐ நடைமுறைப்படுத்தி 13 நடைமுறைப்படுத்தி விட்டோம் என்று சொல்ல முயற்சிகள் நடந்து வருகின்றன.
  இதுதவிர வரப்போகும் தேர்தலில் ராஜபக்சே வருவது உறுதியான நிலையில்,பாராளமன்ற உறுப்பினர்கள் தொகையில் சிங்களவர்களே அதிகம் என்ற நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில், இவை எல்லாம் கனவாக இருக்க முடியுமே தவிர, நடைமுறையில் 13 அல்லது 13+ நடைமுறைப்படுத்தவோ ,தமிழர்களுக்கு தீர்வாகவோ அமையாது. தற்போதய சூழ்நிலையில் 13 – க்கே சாத்தியமாக உள்ளது. இது தற்போதய அதிகாரங்களையும் இல்லாது ஆக்கி விடும்.

  மொத்தமாக இந்தியா இலங்கைக்கு இடையே பிணக்குகள் ஏற்படாமல் இருக்கவும்,போர் குற்றங்களில் இருந்து தப்பவும் சிறிது காலத்திற்கு இலங்கை 13 ஐச் சொல்லி ஏமாற்றி வர முடியும். அவ்வளவுதான்.

  மோடிஜி அல்ல எந்த ஜீ வந்தாலும் சிங்களவர்களை மாற்ற முடியாது.தமிழர்களை அழிப்பதில் ஒடுக்குவதில் அவர்களிடம் ஒற்றுமை உண்டு. தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த கிழக்கு இன்று தமிழர்கள் சிறுபான்மை என்றாகியது போல் சில வருடங்களில் வடக்கும் முற்றாக தமிழர்கள் இல்லாத பகுதியாகி விடும்.

  • Siva சொல்கிறார்:

   Shakthi, I appreciate your details on 13th amendment. It looks like that not 13th, but even if you make 130000th amendment, there will not be any good things will happen for Tamils.

   Majoritarian leaders in indian subcontinents believe that procrastination (extend the time period) of problems without any resolution will end up in a solution (i.e,. Disappearance of demands and problems). This is a bad approach because the newer generation are more informed and most accessible to historical facts. This will backfire on those who complicates the problems.

   I do not know what kind of vision Modi (politician with international vision!) is going to execute to solve the problems in backyards of India.

 5. சக்தி சொல்கிறார்:

  நாம் ஈழத் தமிழர்கள் பற்றி எழுதினாலோ கருத்துத் தெரிவித்தாலோ அதுபற்றி சிலர் விமர்சனம் செய்கிறார்கள். தமிழர்கள் நமது உடன்பிறப்புகள் என்பதை மறந்து விடும் அவர்கள் இந்தக் காணொளியை பார்த்தாவது மனிதர்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய மனிதாபிமானத்தை கற்றுக் கொள்ளலாம்.

  கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு இடம்பெற்றது.

 6. drkgp சொல்கிறார்:

  Can anybody narrate the starting point of the Sinhala – Tamil conflict.
  I have read in history that was already there One Thousand years ago.
  Am I correct in saying so?

 7. gopalasamy சொல்கிறார்:

  In 1970s, tamil students were denid admission in universities; separate criteria for tamil and singala students were followed. I think, this was ignition point.

 8. gopalasamy சொல்கிறார்:

  I am happy to see that most of the tamilians are worrying about srilankan tamils because of their umbilical cord relqationship. Why it is not extended to Fiji, Malasian tamils? What is the staus of Fiji tamils? Can anybody enlighten here? Are they not umbilical cord relations?

  • yogeswaran சொல்கிறார்:

   sir,

   by the by all tamils are relations.

   in malaysia there was an issue.

   fiji i dont know any problem.

   there are so many other countries where tamils have forgotten tamil.

   there is a french colony where tamils follow all folklore,

   but do not know tamil.

   Rev,Fr.Thaninayagam had written an article on them.

   rgs

   yogi

  • BC சொல்கிறார்:

   இலங்கை தமிழர்களர்களுக்காக கவலைபடுகிறோம் தொப்புள் கொடி உறவு மனிதாபிமானம் என்று வசனங்கள் பேசும் போது இன்றைய செய்தியையும் கவனத்தில் எடுங்கள்.
   தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி மின்பிடித்து தங்கள் பகுதி மீன்வளத்தை அழிக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் வட பகுதி மீனவர்கள் விஷம் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வடமராட்சி மீனவ சமாசத் தலைவர் அருள்தாஸ் தெரிவித்தார்.

   • சக்தி சொல்கிறார்:

    இங்கு யாரும் வசனம் பேசவில்லை நண்பரே. உண்மையான உணர்வுடன் பலர் எழுதுவதை கொச்சைப்படுத்தாதீர்கள்.

    இலங்கை நிலைமையை நன்கு புரிந்து கொண்டால் இப்படி எழுத மாட்டீர்கள். அங்கு ராஜபக்சேயுடன் இணைந்து செயல்பட்ட டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகளும், இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் கையில் சில தலைமைகள் இருப்பதை நாம் மறந்து விடக் கூடாது. அவர்களில் ஒருசிலர் கருத்துச் சொல்வதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது.அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் சிங்கள மீனவர்களும் தொழில் செய்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    வட பகுதியில் சிங்கள மீனவர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களை வடக்கு தமிழ் மீனவர்கள் தாக்கியதாக செய்தி வந்ததை மறக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

    தமிழ் நாட்டில் எப்படி சிலரின் நாக்கு புரள்கிறதோ அப்படி அங்கேயும் இருக்கிறார்கள்.

    • BC சொல்கிறார்:

     //இலங்கை நிலைமையை நன்கு புரிந்து கொண்டால் இப்படி எழுத மாட்டீர்கள். //
     சக்தி அவர்களுக்கு ,
     தமிழ்நாட்டு மீனவர்கள் தரும் துன்பம் காரணமாக இலங்கை தமிழர்கள் மீன்படி தொழிலை செய்ய முடியாமல் இருக்கிறது அதன் காரணமாக தங்கள் குடும்பங்களை தங்களால் பாதுகாக்க முடியாமல் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளார்.இலங்கை தமிழர் தலைவர் சம்பந்தர் கூறியவை தமிழ் பிபிசியில் உள்ளது.
     http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/04/150402_fishermentalks_maithri_sampanthar

   • Kauffman சொல்கிறார்:

    Hello BC, don’t mix up the matters. Tamils problem in CEYLON is perennial, more than 60 years-old and monumental. We have to support this.

    The fisher man problem is again created by Sinhala rulers to divert the attention on real issues of Tamils. If you see any news blaming Tamil nadu fisherman, it is man-made news to divert attention. It is like the talk of unresponsible ranil vikaramasingu.

 9. drkgp சொல்கிறார்:

  Mr. Kauffman, is. It only sixty years old? Sure, it’s more.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.