இது “நிழல் யுத்தமா ?” – இத்தகைய மந்திரிகளோ – கட்சிகளோ இருப்பதால் யாருக்கு பயன் …….?

.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாக,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் இரண்டு புதிய
அணைகளை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. அதற்கான
திட்ட முன் ஒதுக்கீடாக 25 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதைக் கண்டித்தும், எதிர்த்தும் – ஏற்கெனவே டிசம்பர் 5,2014-ல்
தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக ஒரு தீர்மானம்
நிறைவேறியது. இரண்டு ஆண்டுகளாக, தமிழக அரசு தொடர்ந்து
மத்திய அரசுக்கு இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி
வலியுறுத்தி, மீண்டும் மீண்டும் கடிதங்கள் அனுப்புகிறது…

அரசியல் சட்டத்தின் விதிகளை கர்நாடகா அரசு அப்பட்டமாக
மீறுவதை மத்திய அரசு, தங்கள் கட்சியின் நலன் கருதி
மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னால் இருந்த காங்கிரஸ் அரசும் இதையே தான்
செய்து கொண்டிருந்தது.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் இணைந்து போராடும்போது –
இதை, தமிழ்நாட்டின் சார்பாக மத்திய அரசில் அங்கம்
வகிக்கும் ஒரே ஒரு மந்திரியும் ” தேவையே இல்லாத
போராட்டம் – இது ஒப்புக்காக செய்யப்படும் நிழல் யுத்தம் ”
என்கிறார்.

சில கேள்விகள் எழுகின்றன –

கர்நாடகா அரசு, வீம்பாக – நடுவர் மன்ற தீர்ப்புக்கு
விரோதமாக புதிய அணைகளை கட்டும் முயற்சியில்
ஈடுபடுவது சட்ட விரோதமா – இல்லையா…..?

ஒரு மாநில அரசு – அரசியல் சட்டத்திற்கு விரோதமாக
செயல்படும்போது அதை சுட்டிக்காட்டி தடுத்தி நிறுத்துவது
மத்திய அரசின் கடமையா இல்லையா …?

தன் கடமையைச் செய்யாமல் மத்திய அரசு –
மௌனமாக இரண்டு மாநிலங்களையும் மோத விட்டு
வேடிக்கை பார்ப்பது சரியா ?

எதையும் செய்யத்தான் இந்த மந்திரிக்கு வக்கில்லை.
குறைந்த பட்சம் தமிழக நலனுக்கு விரோதமாக
பேசாமலாவது இருக்கலாம் அல்லவா ?
தமிழகத்தின் நியாயத்தை பேசினால் மந்திரி பதவி
பறிபோய் விடுமே என்கிற பயமா ..?

தமிழ்நாடு – மத்திய அரசிடம் விசேஷ சலுகைகள் எதையும்
கேட்கவில்லை. தான தர்மமோ, பிச்சையோ கேட்கவில்லை.

அரசியல் சாசனப்படி மத்திய அரசு தன் கடமையைச்
செய்யவேண்டும் என்று தான் கேட்கிறது.

காவிரி நதி நீர் தீர்ப்பாயம் கொடுத்த இறுதித்தீர்ப்பை
முழுமையாகச் செயல்படுத்துங்கள் என்று தான் கேட்கிறது.
சட்டத்தை மீறுவதிலிருந்து கர்நாடகா அரசை தடுத்து
நிறுத்துங்கள் என்று தான் கேட்கிறது….

இதைச் செய்யாமல் மத்திய அரசு மௌனமாக
இருக்குமேயானால் – மக்களும் நிறைய யோசிக்க வேண்டி
இருக்கும். அரசியல் சாசனப்படியான கடமைகளை விட
தங்கள் கட்சியின் நலன் தான் முக்கியம் என்று கருதினால் –

எதிர்காலத்தில் – அகில இந்திய கட்சிகள் எதுவும் –
தமிழ் நாட்டில் ஓட்டுகேட்கக்கூட முடியாத நிலையில்
தான் இது கொண்டு போய் விடும்.

————————
புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று
சொன்னதற்காக, தமிழ்நாட்டுக்கு எதிராக –
கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரின்
உருவப்படங்கள் கொளுத்தப்படுகின்றன……

karnataka-youth-congress-pr

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to இது “நிழல் யுத்தமா ?” – இத்தகைய மந்திரிகளோ – கட்சிகளோ இருப்பதால் யாருக்கு பயன் …….?

 1. S.Selvarajan சொல்கிறார்:

  முழுஅடைப்பு தேவையற்றது: பொன்.ராதாகிருஷ்ணன் மார்ச் 28 ஆம் தேதி தமிழகத்தில் நடத்த இருக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்…… தமிழன் என்று சொல்லடா — தலை நிமிர்ந்து நில்லடா —- என்பதை பொய்யாக்கி வரும் பொன்னர் —- ரொம்ப நல்லவர் …? கடலில் வீணாக கலக்கும் நீரை எப்படி சேமிப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவிப்பது கர்நாடகா செய்கின்ற செயலை ஊக்குவிப்பது போல உள்ளது ..! சிந்தித்து செயல்படுவீர்கள் என்று நினைத்து உங்களை ஆட்சியில் அமர்த்தியது எங்களை சிந்திக்க சொல்வதற்கல்ல……. குமரி மாவட்டம் கேரளாவுக்கு சொந்தமானது என்று கூறியதைப்போல —- இவர் எதிலேயும் சேர்த்துக்கொள்ள முடியாத —- ஒரு தனிப்பிறவி —- ஆமா ….. இது வெயில் காலம் தானே ….? தமிழகத்தின் நலனை காக்க முடியவில்லை….. என்றாலும் துரோகமான செயலில் இவரும்—– இவர் சார்ந்த மத்திய அரசும் ஈடுபடாமல் இருந்தாலே தமிழகம் செய்த புண்ணியம் ….!! மோடி வாய் திறக்க மறுப்பதும் நாளை கர்நாடகாவில் ஓட்டுகளை பொறுக்கவும் — ஆட்சியை பிடிக்கவும் தானே ….? இதுவும் காங்கிரசின் பினாமி செயல் தானே….. !!! ஏப்ரல் 3 –ம் தேதி மோடி பெங்களூரில் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டமும் பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது அதன் பின்னால் ஏதாவது தெரியுமோ ?

 2. Siva சொல்கிறார்:

  What is happening in Kaveri and other river water issues are OBVIOUSLY discriminating the rights of Tamil Nadu.

  I repeatedly record this statement here that central government rulers will not do right things to Tamil nadu. It is the duty of Tamil nadu leaders and people to fight strongly to get the rights.

 3. சக்தி சொல்கிறார்:

  தமிழர்களைப் பொறுத்த வரையில் இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு………….. ஒற்றுமையின்மை,பிரிவு ,காட்டிக் கொடுத்தல், தங்களுக்கிடையில் அடிபட்டுக் கொள்வது என்பவைதான்.

  தமிழ்நாடு பிரிந்து துண்டானது,மொழி பிரிந்து மொழிகள் ஆனது எனத் தொடங்கி……….

  சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழர்களுடன் இணைய விரும்பி கன்னடர்களை எதிர்த்துப் போராடிய கூர்க்கர்களை ஓரம் கட்டியதால் காவிரியை இழந்தது , கன்னடர்கள் ஒற்றுமையுடன் போராடியதால் பெங்களூரு,கோலார் எனப் பல பகுதிகளை இழந்தது எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  எதை மறந்தாலும் இன்று நடப்பதை நினைவு படுத்தினாலே நம் பிரிவும் அதனால் நம் இழப்புகளும் புரிந்து விடும். பொதுவான பிரச்சனைகளில் கூட ஒற்றுமையின்மை, அதற்கான போராட்டங்கள் தனித்தனியாக,
  ஒரு தமிழன்-ஓராயிரம் கட்சிகள்-பிரிவுகள்-சாதிகள்.

  இரண்டாயிரம் ஆண்டுகளாக திருந்தாத மாறாத தமிழ்நாடு……………..
  நாளை திருந்துமா? சந்தேகம் தான். ஆனாலும் முயற்சி திருவினையாக்கும் என நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

 4. drkgp சொல்கிறார்:

  Kaviri mainthanji, Kaviri is the Waterloo for BJP and Congress in Tamilnadu .
  Both have no base here and both of them have a fairly strong one in
  Karnataka. Why then disturb it? One in hand is better than two in the bush.
  All electoral politics . No collective wisdom for the welfare of the nation
  as one Union . If national parties act this way, what can we expect from
  Regional ones? Hence a perpetual tension in Hosur even for the cardiac
  patients visiting Narayana Guru Hospital .

 5. taru சொல்கிறார்:

  KM,

  You have used strong words disrespectful of people representative s. While, I agree that some mediation should happen between two states by central, the Tamil nasi parties already have made this a political issue.
  Now, equally Karnataka also is retaliating in political way.
  Please remember that ponnar is minister of India and not tamilnadu. He has to speak neutrally.
  If you want certificate about him, please listen to what vaiko, tamizharuvi manian, etc has talked about ponnar’s golden character

  Taru

  • Kauffman சொல்கிறார்:

   Taru, how can you talk like this without a self conscious (mana saatchi) that TN leaders made the Kaveri issue as political issue? What do you mean by this? If they do not talk, who will talk about it? Are you going to talk about it? Are you going to bring Kaveri water to TN?

   Are you completely aware of what has been happening in Kaveri issue? Are you aware how central government and Karnataka government procrastinate (prolong) each and every orders/guidelines of Supreme Court? Are you respecting court orders or your party order? If you answer for these questions in honest way, I will consider you as a responsible person. Otherwise, you are also another useless person.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் தாரு,

   // You have used strong words disrespectful of people representative//
   முதலில் ஒரு விஷயம் – இன்னும் கடுமையான
   வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும் –
   பண்பாடு கருதி தவிர்த்து விட்டேன்.

   please remember – They are PUBLIC SERVANTS –
   and NOT masters.
   நாம் அடிமைகள் அல்ல என்பதை முதலில் உணர்ந்து
   கொள்ளுங்கள். இது ஜனநாயகம். நமது பிரதிநிதிகளைக் குறை கூற
   நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன….,

   ஆனால் – உங்களைப்போல், கட்சிக்கோ,
   கட்சித் தலைவர்களுக்கோ அடிமையானவர்களுக்கு இது
   ஒத்து வராது தான்…..

   //people representative// இதற்கு உண்மையான
   அர்த்தம் என்ன ?
   மக்கள் பிரதிநிதி – மக்கள் விரும்புவதைத்தான்
   அவர் செய்கிறாரா ?
   தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்மக்கள்
   அனைவரின் சார்பாகவும், அனைத்து கட்சியினராலும்
   நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தான் இவர்
   பேசி இருக்கிறாரா ? நடந்து கொண்டிருக்கிறாரா ?
   தன்னுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ள,
   தன் கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள – என்ன
   செய்யவேண்டுமோ அதைத்தானே செய்கிறார்…. ?

   கோர்ட் உத்திரவை மீறுகிறது கர்னாடகா அரசு.
   காவிரி ட்ரைபியூனல் உத்திரவுகளை மீறக்கூடாது
   என்று கண்டிப்புடன் கர்னாடகாவிற்கு உத்திரவு
   போட வேண்டிய மத்திய அரசு – அனந்தகுமார் அன்ட்
   கம்பெனியின் அட்வைஸ்படி -வாய்மூடி மௌனியாக
   இருக்கிறது.

   உண்மையில், மத்திய அரசே – அரசியல் சட்டப்படியான
   தன் கடமையை நிறைவேற்றாமல் -காலம் கடத்துகிறது.

   “நிழல் யுத்தம்” இரண்டு மாநில மக்களுக்கிடையேயான
   “நிஜ யுத்தமாக” மாறிவிடக்கூடாதே என்கிற கவலை
   யாருக்காவது இருக்கிறதா ? தங்கள் கட்சியின் வளர்ச்சி,
   ஓட்டு வங்கி – ஆகியவை தானே அவர்கள்
   கண்முன் நிற்கின்றன.

   ஒரு தமிழனாக இல்லாவிட்டாலும் கூட –
   மனசாட்சியுள்ள மனிதராக இருந்தால் – நீங்கள் இப்படி
   எழுதி இருக்க மாட்டீர்கள்.

   வெட்கப்படுகிறேன் – உங்களைப் போன்றவர்களும்
   தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறார்களே என்று….

   -தயவு செய்து தூங்கும் உங்கள்
   மனசாட்சியை முதலில் எழுப்பி விடுங்கள்.
   – காவிரிமைந்தன்

  • lala சொல்கிறார்:

   ## ponnar is minister of India and not tamilnadu.##

   பொன்னர் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருப்பது இதுவே கடைசித்தடவை.

   மக்களின் நலனை புறக்கணித்து தனது கட்சிநலனை மட்டும் வைத்து செயற்படுபவர்களை பேசுபவர்களை தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிப்பார்கள்.

  • lala சொல்கிறார்:

   ## Please remember that ponnar is minister of India and not tamilnadu. ## Taru

   காவிரி ஆற்றின் குறுக்காக மேகதாதுவில் இரு அணைகள் கட்டுவதென்பது இந்திய பிரச்சனை அல்ல .
   அது இரு மாநிலங்களுக்கிடைYயான பிரச்சனை . இதில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவான பொன்னர் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவராகவே இருக்க வேண்டும் . ஆனால் இவர் இந்திய , இந்து தேசியம் எனும் உப்பு சப்பில்லாத ஒன்றுக்காக தமிழ் மக்களின் நலன் களுக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்க முடியாது .
   அடுத்த தேர்தலில் பொன்னர் மக்களால் துரத்தியடிக்கப்படுவார்.
   பா.ஜ.காவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தொகுதியும் இனி இல்லாது போகும்.

 6. visujjm சொல்கிறார்:

  கோர் போட்ட மோடி போல் பொன் ஜி அவர்களும் கோர்ட் அணிந்து இலங்கை அரசை டெல்லியில் வரவேற்றது எதற்காம்…?

  நமோ மோடி ஜி தமிழகம் வந்த உடன் உச்ச நட்சத்திரத்தை சதித்தது எதற்காம் …?

  இந்த ஜால்ரா நிலை என்று களையப்படுமோ …?

  ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

  இன்று ராமஜென்மாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா…

  தாங்களும் தங்கள் குடும்பமும் நன்முறையில் இருக்கவும் வேண்டுகிறேன் ஐயா…

  ஓம் நமசிவாய நம…

 7. jksm raja சொல்கிறார்:

  KM sir,
  I am for the past 35 years out of tamil nadu and stayed all most all the states. We can find out fools only in tamil nadu saying that central minister are for india and need not worry about own state.The fools never see other state ministers lobbing for their state welfare and giving open statement for support of their state.They will not get vote next time if they not acted like that.

  • Kauffman சொல்கிறார்:

   A very small group of Tamil-speaking people (migrated from TN to Delhi/Mumbai/Bangalore) are the primary responsible for the most of the problems in Tamil nadu.

   Although majority of TN people think that they are part of India, and they want to get thier rights in a dignified/justified way, this small group of people is stoking the flame by only blaming on TN leaders and people for everything.

   In the name of india and its pseudo images, this group does many thing to damage the reputation of every struggles/protests taken by Tamil nadu people.

   Even, many North Indian brothers and sisters can understand our demands and problems. They want us to get our legitimate rights and demands fulfilled. BUT, it is criticized or blocked by this small Tamil-speaking group.

   The person like Taru is a mole in Tamil siciety. They can find everything good on other state leaders and central leaders. For them, Tamil nadu leaders are untouchable and unqualified.

   Friends, fight for our rights in justified way. Never give up. Also, intelligently fight with the persons who discriminate us and who deny our rights.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.