பாஜக எம்.பி.யின் கண்டுபிடிப்பு – பல கோடிகள் பெறும்…!!!

.

cigarette manufacturing

ஆஸ்திரேலிய அரசு, டிசம்பர் 1, 2012 முதல் அமுலுக்கு வரும்படியாக
ஒரு சட்டம் கொண்டு வந்தது (Plain Packaging Laws)அதன்படி –

1) சிகரெட்டு பாக்கெட்டுகளின் -மேல் பக்கத்தில்,
அதன் அளவில் 75 %-உம், பின் பக்கத்தில் 90 %
அளவிற்கும் பளிச்சென்று தெரியும்படியாக -புகைபிடிப்பதால்
வரக்கூடிய வியாதிகளின் அதிர்ச்சி தரும் புகைப்படங்களை
அச்சடிக்க வேண்டும்.( வாய் புற்று நோய், கண்களில் பாதிப்பு
போன்றவை -மாதிரி புகைப்படம் கீழே )

smoking-3

2) சிகரெட்டின் பிராண்டு பெயரை பளிச்சென்று தெரியும்
வண்ணங்களிலோ, பெரிய அளவிலோ தெரியும்படி
அச்சடிக்கக் கூடாது.

3) பிராண்டு பெயர், மற்றும் வகைகளை –
எந்த கம்பெனியும் அதன் விருப்பம் போல்
டிசைன் பண்ணவோ, அச்சடிக்கவோ கூடாது.
அரசாங்கத்தால் டிசைன் பண்ணி கொடுக்கப்பட்டுள்ள
(மாதிரி படம் கீழே )

smoking-2

– சிகரெட்டு பாக்கெட்டுகளின் அட்டையின் கீழே அதற்கென
ஒதுக்கப்பட்டுள்ள ஆலிவ் க்ரீன் வண்ணத்தில் உள்ள பட்டையான
இடத்தில், ஒரே மாதிரியாக, குறிப்பிட்ட அளவிலும்,
வண்ணத்திலும் தான் அச்சடிக்கப்பட வேண்டும்.

3) பிடிப்பது உயர்ரக சிகரெட்டா அல்லது மலிவான
சிகரெட்டா என்பதே வெளியே தெரியாதவாறு அனைத்து
சிகரெட்டுகளும் ஒரே தோற்றத்தில் இருக்க வேண்டும்.

4) கடைகளில், பளிச்சென்று கண்ணில் தென்படும்படி
சிகரெட்டு பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கக்கூடாது.

ஆஸ்திரேலியாவில் – தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும்,
பத்திரிகைகளிலும் – சிகரெட்டு விளம்பரங்களை
ஏற்கெனவே தடை செய்தாகி விட்டது.

பணி புரியும் இடங்களில் புகை பிடிப்பதையும்
தடை செய்தாகி விட்டது.

பொது இடங்களில் புகை பிடிப்பதையும்
தடை செய்தாகி விட்டது.

சிகரெட்டுகளின் மீது எக்கச்சக்கமாக
வரி போட்டு சிகரெட்டு பிடிப்பதை அதிகம் செலவு
பிடிக்கக்கூடிய ஒரு பழக்கமாகவும் ஆக்கி விட்டது அரசு.

ஆஸ்திரேலிய அரசின் இந்த Plain Packaging Laws
சட்டத்தை எதிர்த்து ஆக்ரோஷத்துடன் உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தன புகையிலை கம்பெனிகள்.

British American Tobacco,
Philip Morris International,
Imperial Tobacco,
Japan Tobacco International –
என்று -எல்லாம் பெரிய பெரிய பன்னாட்டு புகையிலை
கம்பெனிகள். கோடிக்கணக்கான டாலரை கொட்டி இரைத்து
எப்படியாவது இந்த சட்டத்தை செல்லுபடி ஆகாமல் செய்ய
வேண்டுமென்று துடித்தன.

ஒரு நாட்டில் ஆரம்பித்தால் – உலகம் பூராவும் பல நாடுகள்
இதே போல் செய்ய ஆரம்பித்து விடுமே – தங்கள் வியாபாரம்
என்ன ஆகும் என்கிற கவலை அவர்களுக்கு !

பிராண்டு பெயரை, ட்ரேட் மார்க்கை கவர்ச்சியாக,
தாங்கள் விரும்பும் விதத்திலும், அளவிலும் அச்சடிப்பது
தங்கள் உரிமை (Intellectual Property Rights)
என்றும் தங்கள் வியாபாரத்தில் கை வைக்க ஆஸ்திரேலிய
அரசுக்கு உரிமை இல்லை என்றும் வாதித்தனர்.

புகையிலையினால் ஏற்படும் கேடுகள் பற்றி அரசாங்கம்
தன் செலவில் தான் விளம்பரம் செய்ய வேண்டுமே தவிர
சிகரெட்டு கம்பெனிகளின் செலவில் அவற்றின்
பாக்கெட்டுகளின் மேல் செய்யும்படி வற்புறுத்துவது
சட்ட விரோதம் என்றும் வாதித்தனர்.

ஆனால் – அனைத்து விவாதங்களும் முடிவடைந்த பின்
ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அளித்த பரபரப்பான
தீர்ப்பில் – தங்கள் குடிமக்களின் ஆரோக்கியமான
வாழ்விற்காக, எத்தகைய சட்டத்தையும் கொண்டு வர
அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்து
விட்டது.

உலகம் பூராவும் உள்ள – புகையிலை எதிர்ப்பாளர்கள் இதை
மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார்கள்..
இது ஆஸ்திரேலியாவின் கதை….

நம்ம ஊர் எப்படி …?

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட
17% மக்கள் புகையிலை பழக்கம் உள்ளவர்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 27.5 கோடி மக்கள் ( அதாவது
வயது வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில்
ஒரு பகுதியினர் ) எதாவது ஒரு விதத்தில்
(பீடி, சிகரெட்டு, குட்கா, புகையிலை, பான் பராக் போன்றவை )
புகையிலை பழக்கம் உடையவர்களாக இருப்பதாக
ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவிலும்- தொலைக்காட்சிகளிலும்,வானொலியிலும்,
பத்திரிகைகளிலும் சிகரெட்டு விளம்பரம் ஏற்கெனவே
தடை செய்யப்பட்டு உள்ளது.

திரைப்படங்களிலும் ஓரளவு கட்டுப்பாடுகள் கொண்டு
வரப்பட்டுள்ளன. பணி இடங்களிலும், பொது இடங்களிலும்
புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைப் போல –
அட்டைப்பெட்டிகளின் மீது கொடூரமான வியாதிகளின்
புகைப்படங்களை அச்சடிப்பது போன்ற இன்னும் பல வித
நிர்பந்தங்களை கொண்டு வர, டாக்டர் அன்புமணி
மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது அவரால் இயன்ற வரை, மிகத்தீவிரமாக முயற்சி செய்தார்.

ஆனால், இந்தியாவின் புகையிலை கம்பெனிகளும், கேரளா,
மஹாராஷ்டிரா போன்ற சில மாநில அரசுகளும் இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு கடுமையான சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர முடியாதபடி – பல தடங்கல்களை ஏற்படுத்தின.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 75,000 முதல் 80,000 வரை புதிதாக வாய் புற்றுநோய் நோயாளிகள் உருவாகிக்கொண்டே
இருக்கின்றனர்.

புகையிலைப் பழக்கத்திற்கு எதிராக பல இயக்கங்களும் தொடர்ந்து
தீவிரமாக செயல்பட்டுக்கொண்டே இருந்ததன்
விளைவாகவும், அவற்றால் கொடுக்கப்பட்ட பலவித
அழுத்தங்கள் காரணமாகவும் -.

ஒருவழியாக – இறுதியாக, இந்திய அரசு – அரசாணை
ஒன்றினை (GSR 727-E dated October 15, 2014 ),
வெளியிட்டு, ஏப்ரல் 1, 2015 முதல் புகையிலை பொருட்கள்
பயன்படுத்தப்படும் பாக்கெட்டுகளில் உடல் நலம் பாதிப்பு தொடர்பான

விளம்பரம் 85 % அளவிற்கு இடம் பெற வேண்டும் என்றும்,
இதில் 60 % படமாகவும், 25 % எழுத்துருவிலும், புகையினால்
ஏற்படக்கூடிய தீமைகளை விளக்குவதாக இருக்க வேண்டுமென்றும்
வலியுறுத்தப்பட்டிருந்தது.

(புகையிலையை பயன்படுத்த எந்தவித தடையையும் கொண்டு
வரவில்லை. அதன் அட்டையில் விளம்பரம் செய்யும் விதங்களில்
மட்டுமே மாறுதல்கள் கொண்டு வரப்படவிருந்தன …)

இதற்கான காலக்கெடு ஏப்-1 ம் தேதி, 2015- உடன்
முடிவடைகிறது.. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான
அறிகுறிகள் ஏதும், இதுவரை கண்ணுக்குத் தெரியாத நிலையில்
தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி
( இவரும் காந்தியாம் -) அவர்களைத் தலைவராக கொண்ட
பாராளுமன்ற துணைக்குழு ( புகையிலை பயன்படுத்துதல் சட்டம்
தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து, பரிந்துரை செய்ய
அமைக்கப்பட்ட குழு ) –
தனது இடைக்கால அறிக்கையில் –

புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்று
சொல்வதான ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தும் வெளிநாடுகளைச்
சேர்ந்தவை.

இந்தியாவில் இன்றுவரை இது பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும்
மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

எனவே, இத்தகைய சூழ்நிலையில் மேற்குறித்த சட்டவிதிகளை
இப்போது அவசர அவசரமாக ( ? ) அமுல்படுத்தத்தேவை இல்லை.

தன் தலைமையிலான பாராளுமன்ற குழு நிதானமாக முழு
விஷயத்தையும் ஆராய்ந்து-தெளிந்து, தன் இறுதி அறிக்கையை
தரும்வரை –

மத்திய அரசு –
இந்த சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை
காலவரையின்றி ஒத்திப் போட வேண்டும் என்று மத்திய
அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது.

எனவே – மத்திய அரசின் புகையிலை பொருட்கள் மீதான
விளம்பரங்கள் குறித்த சட்டவிதிகள் இப்போதைக்கு நடைமுறைக்கு
வருவதாகத் தெரியவில்லை….!!!

புகையிலை கம்பெனிகள் ( tobacco lobby ) மிகப்பெரிய
அளவில் இயங்குபவை. ஒரு அரசாங்கத்தையே விலைக்கு
வாங்கும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவை.
லட்சக்கணக்கான கோடிகளில் வியாபாரம் செய்பவை –
கோடி கோடியாக கொள்ளை லாபம் சம்பாதிப்பவை.
தங்கள் வியாபாரத்தை, லாபத்தை – பாதிக்கும் செயல்களை
தவிர்ப்பதற்கு எந்த அளவிற்கும் செலவழிக்க – அவை
தயாராகவே இருக்கும் என்பது நமக்கு புரிகிறது.

பதவியில் இருக்கப்போவது எத்தனை நாளோ ?
இருக்கும்போது சம்பாதித்தால் தானே உண்டு.
( நான் பெயர், புகழ் பற்றித்தான் கூறுகிறேன்….! )
இதில் ஏகப்பட்ட பேருக்கு பங்கு வேறு ….
கட்சிக்கும், தலைமைக்கும் இதில் பங்கு உண்டோ என்னவோ –
நமக்குத் தெரியாது.

நாம் நாசமாகப் போனாலும் பரவாயில்லை….
நம் இளம் சந்ததிகள் புற்றுநோய் வந்து அகாலமரணம்
அடைந்தாலும் பரவாயில்லை….

ஆனால், இப்படிப்பட்டதொரு அற்புதமான முடிவை
கண்டுபிடித்து, தனக்கும், தன்கட்சிக்கும், ஆட்சிக்கும்
வளம் சேர்த்திருக்கும் –
நம் மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதி
அனைத்து வளங்களையும் பெற்று
வளமாங்கு வாழ வேண்டுவோம்….!!!

நமக்கு சரிவரத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேசுவதை
தவிர்த்து விட்டு, இறைவனின் புகழைப் பாடுவோம் …!!!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ….இறைவா…!!!
அந்த அத்தனை கோடியையும் எங்கள் பிரதிநிதிகளுக்கே
கொடுப்பாய் இறைவா….! இறைவா….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to பாஜக எம்.பி.யின் கண்டுபிடிப்பு – பல கோடிகள் பெறும்…!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //அந்த அத்தனை கோடியையும் எங்கள் பிரதிநிதிகளுக்கே
  கொடுப்பாய் இறைவா….! இறைவா….!!!//
  அத்தனை கோடியுமா?

 2. Killergee சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே சமுச நலனுக்கான நல்லதொரு பதிவுக்கு எமது நன்றிகள்.
  முதலில் அந்தநாடு சொன்னது, இந்தநாடு சொன்னது, நொந்தநாடு சொன்னது என்ற விடயத்தை தூக்கி குப்பையிலிடுவோம்.
  அரசாங்கமோ, தனியாரோ யார் வேண்டுமானாலும் தயார் செய்து விற்கட்டும் இந்த புகை பிடிப்பது தேவையா ? தேவையில்லையா ? என்று ஆறறிவு மனிதன் முடிவு செய்ய வேண்டும்.
  இந்தவகையான விரிவுரையான சிந்தனை இருந்தால் நாட்டை கொள்ளைக்காரர்களை ஆளவிட்டிருக்க மாட்டோமோ…. சாரி மறந்து விட்டேன்.

  – கில்லர்ஜி

  • Sharron சொல்கிறார்:

   Many people don’t have self control.So strict laws & advises are necessary.That’s why here the pictures are printed on the boxes & regular TV ads also are giving. After that the smokers rate has really come.Moreover they put more GST also for cigarettes. So it is very expensive too.So the printed pictures on the box, TV ads & high GST has some impact on the no of smokers & it is good for our hospitals because we have free treatment.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ஷரான்,

    நீங்கள் சொல்வது மிகச்சரி.
    அதே போன்ற நடவடிக்கைகள் தான் இந்தியாவிலும்
    எடுக்கப்பட வேண்டும்.

    விளையாட்டாக பழக்கத்தில் ஈடுபட்டு விடுகிறார்கள்.
    வெளிவருவது மிகக்கடினமாக இருக்கிறது.
    இத்தகைய முயற்சிகள், புதிதாக யாரும் இந்த பழக்கத்தை
    மேற்கொள்வதை தவிர்க்கவும் உதவும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     ஜி,
     புகையிலைப் பழக்கம் உள்ள (direct user)ஐ விட indirect consumers ஆக இருக்கும் புகை(யிலைப்)பழக்கம் இல்லாதோர் (ஆண், பெண்இருபாலரும்) புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் வீட்டில் உள்ள மற்ற அங்கத்தினர்கள், வயதானோர், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் நிலை இதைவிட மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இதை வீடுகளில் உள்ள மற்றவர்களும் உணருவதில்லை. இந்தப் பழக்கம் உள்ளவர்களும் உணருவதில்லை.

     இந்தியாவில் எங்காவது ஒரு பேருந்துநிலையத்தில், டீக்கடையில், பொதுஇடங்களில் புகையில்லாமல், பான் எச்சில் இல்லாமல் பார்க்கமுடிகிறதா?

     படித்தால், அறிவுவளரும். அறிவுவளர்ந்தால் கெட்டபழக்கங்கள் இருக்காது என்பது போய், படித்தால் எப்படி மற்றவர்களுக்குத் தெரியாமல் எந்தெந்த வழிகளில் புகையிலையை உபயோகிக்கலாம் என்று பிஹெச்டி செய்கிறார்கள், அல்லது தெரிந்தால் தான் என்ன அதுதான் ஹீரோயிஸம் என்று மாறுகிறார்கள்.

     அடிப்படையாக மனம் மாறினால் ஒழிய இவை மாறப்போவதில்லை. என்றாலும்
     அரசு மக்களுக்காக தான் செய்ய முயற்சிகளை,
     பெற்றோர் பிள்ளைகளுக்கு தாம் செய்யவேண்டிய முயற்சிகளை, குடும்பத்தினர் தம் சுற்றத்தினருக்குச் செய்யவேண்டிய முயற்சிகளை,
     நண்பர்கள் தம் நண்பர்களுக்குத் தாங்கள் செய்யவேண்டிய முயற்சிகளைச் செய்யவேண்டும்.

     நிச்சயமாகவே, முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்.
     இன்றில்லாவிட்டாலும் நாளையாவது.

 3. சக்தி சொல்கிறார்:

  மதுக்கடைகளை நோக்கியும் புகைத்தலை நோக்கியும் பெண்களும் போகும் இன்நாளில் மந்திரியின் கருத்து மக்களின் நலன் நோக்கியதாக இல்லை.
  புகைத்தலின் போதும் புகையிலையை வேறு வகையில் பாவிக்கும் போதும் 7000 வகையான வேதிப் பொருட்கள் உள் எடுக்கப்படுகின்றன. அவற்றில் மிக மோசமானவை…………..

  Acetone – found in nail polish remover
  Acetic Acid – an ingredient in hair dye
  Ammonia – a common household cleaner
  Arsenic – used in rat poison
  Benzene – found in rubber cement
  Butane – used in lighter fluid
  Cadmium – active component in battery acid
  Carbon Monoxide – released in car exhaust fumes
  Formaldehyde – embalming fluid
  Hexamine – found in barbecue lighter fluid
  Lead – used in batteries
  Naphthalene – an ingredient in moth balls
  Methanol – a main component in rocket fuel
  Nicotine – used as insecticide
  Tar – material for paving roads
  Toluene – used to manufacture paint

  இவர்களின் அராஜகத்தை ஐந்து ஆண்டுகள் பொறுத்துக் கொள்ள வேண்டி உள்ளதே!
  இன்னும் என்ன வரப் போகிறதோ!
  இதையும் பார்க்கலாம்………

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் சக்தி, புதுவசந்தம் அன்பு –
  நீங்கள் அனுப்பி இருக்கும் தொடர்புகளுக்காக மிக்க நன்றி.

  இன்று நாடு முழுவதும் இந்த விஷயம் தீவிரமாக
  விவாதிக்கப்பட்டு வருகிறது. மடத்தனமாக உளறும்
  இந்த திலீப் காந்தியைப் போன்றவர்கள் தான்
  பெரும்பாலான பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள்.
  ஏதோ காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பில்
  இவர்கள் எல்லாரும் “உள்ளே” வந்து விட்டார்கள்.

  இவர்களை எல்லாம் – சட்டவிதிகளைப் படித்து கருத்துரையும்,
  பரிந்துரையும் கூறுமாறு கேட்டுக்கொண்டிருக்கும்
  தலைமை எத்தகைய தலைமை ?

  இந்த கமிட்டிக்கு பரிந்துரை கூற மட்டுமே அதிகாரமுண்டு.
  முடிவெடுக்க அல்ல.
  முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் இருவரில் –
  சுகாதார அமைச்சர் வழ வழவென்று வழுக்கி மழுப்புகிறார்….
  பிரதமர் – ம.மோ.சிங்கை விடவும் மௌனியாக இருக்கிறார்….

  அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருக்கும் பிரதமர்,
  இந்த உளறுவாயர் திலீப் காந்தியின் கமிட்டிக்குப் பின்னால்
  ஒளிந்து கொள்ளாமல் – அரசு ஏற்கெனவே எடுத்த, அறிவித்த
  முடிவை நிச்சயமாகப் பின்பற்றும் என்று உடனடியாக அறிவிக்க வேண்டும்.

  இல்லையேல் – எதிர்காலம் இவர்களை மன்னிக்காது.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. taru சொல்கிறார்:

  There are many misunderstanding here.
  1. It was in fact modi govt that took steps to issue ultimatum to cigarette companies. Prev congress just slept
  2. It is the information by the committee, and not just dhilip. Committee is maddening of all party members. Where BJP comes here?
  3. Alcohol is worser than cigarette. Modi banned it in gujarat. Do you have the guts to fight / write against jaya govt for the bigger evil?
  4. West Bengal us biggest consumer of tobacco. Mamata and many non bjp states are requesting central to go slow on that. Should central bypass them? It takes facts to convince them. That’s what committee is doing
  5. Personally Modi and all nda leaders are non smokers, and follow hindhu dharma in life . They are tough against all evil

  So, I ask you not attack any party and to remove the party reference in your article title

  • இளந்திரையன் சொல்கிறார்:

   //புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்று
   சொல்வதான ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தும் வெளிநாடுகளைச்
   சேர்ந்தவை.
   இந்தியாவில் இன்றுவரை இது பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும்
   மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.//

   இதைச் சொல்பவர் ஒன்று வடிகட்டிய முட்டாள் திலீப்காந்தியாக
   இருக்க வேண்டும், அல்லது “டாரு” வாக இருக்க வேண்டும்.

   //அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருக்கும் பிரதமர்,
   இந்த உளறுவாயர் திலீப் காந்தியின் கமிட்டிக்குப் பின்னால்
   ஒளிந்து கொள்ளாமல் – அரசு ஏற்கெனவே எடுத்த, அறிவித்த
   முடிவை நிச்சயமாகப் பின்பற்றும் என்று உடனடியாக அறிவிக்க வேண்டும்.//

   முடிவெடுக்க வேண்டியவர் பிரதமரா அல்லது
   உளறுவாயன் திலீப்காந்தியா ? முக்கியமான சமயங்களில்
   எல்லாம் பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன் ?

   “டாரு” இதற்கு என்ன பதில் ?

   ஆட்சியில் இருப்பது பாஜகவா, காங்கிரசா ?
   முட்டாள்கள் கூட அறிவார்களே. “டாரு” அறியவில்லையா ?
   பின் பாஜக பெயரை ஏன் நீக்க வேண்டும் ?

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   திரு தரு
   அருமையாக புள்ளிகளை கொண்டு விளக்கியுள்ளீர்கள்.
   as per your first point, if that is right then why this minister said there is no evidence of cancer… smokers… research in india… bla… bla…
   in your second point, Where BJP comes here… because the minister who spoke this is blongs to BJP and this is the party WE INDIAN believed will change india
   in your third point, Alcohol… jaya… referred by you.
   why they comes here?
   in your fourth point, you discuss about the states who are requesting central to go slow…
   this what the previous government also told. once again WE INDIAN believed that this party comes to power it will act with GUTS.
   and finally the last point was talking about Modi is a non smoker and follow hindhu dharma in life
   ha hahhahah good joke. can you go and tell MRS MODI that Modi is following hindhu dharma (i very well understand that this is irrelevant to this post. since you pointed out this, thats why i have to ask this question. there is no personal)

  • Kauffman சொல்கிறார்:

   Dear Taru,

   Are you an educated fool or uneducated fool? Sorry for saying fool because most of your comments reflect that way. I ask this question to you on the basis of your writing. Any way, coming to your comments, I like to add something to your opinion point by point.
   1) I do not know officially which government ( congress or bjp) took initiative on this issue. If it is current BJP give (as per ur information), it is highly welcome. But we should not forget the efforts of Dr. Anbumani in this issues.
   2) don’t you think that committee members and committe chair should use thier brain before telling any thing to the people?
   3) alcohol is banned in gujarat even before naren Modi as CM. How can you claim a credit for him? Don’t u think it is unfair?
   4) I do not know whether mamta or other leaders trying to go slow on this issue. But central govt should act strongly on this issue
   5) do you know that use of alcohol and tobacco are prohibited in Islam teaching too? How can you link this habit to Hindu leaders? It will be appropriate to advocate good habits without linking to any religion.

   By the way, I have seen you more evasive (escaping) in replying to questions asked toward you. Try to be gentle man/women in this discussion forum

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   சர்க்கரை வியாதி ஏற்பட காரணமான சர்க்கரையை யாரும் தடை செய்ய கோருவார்களா என்று உங்களுக்கு ஆதரவாக மற்றொரு பஜக அறிவுக்கொழுந்து கேட்டிருக்கு தரு!!?!?

 6. divmee சொல்கிறார்:

  இதனால் ஏற்படும் விளைவுகளை பாடத்திட்டத்தில் விரிவான முறையில் சேர்க்க வேண்டும். மாணவ மாணவிகள் எழுத எழுத மனதில் பதியும். புதிய உறுப்பினர்களை குறைக்க உதவும்.

  வருடத்திற்கு ஒருமுறை வண்டிக்கான காப்பீட்டை புதுப்பிப்பது மற்றும் பயணம் செய்வதற்கு காப்பீடு அவசியம் என்று இருப்பது போல், புகையிலை பயன்படுத்துவருக்கும் இது போன்ற முறையை கொண்டு வரலாம். அரசு அதிகாரிகள்/காவல் துறை/தன்னார்வ தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் புகையிலை பயன்படுத்துபவரை பரிசோதிக்கலாம் என்ற முறை வரவேண்டும். வருடாந்திர பரிசோதனை பலரை மனமாற்றம் செய்யும்.

  மரத்தை வெட்டி காகிதமும் தீக்குச்சியும் செய்வது தவறில்லை. விற்பனைக்கும் தடையில்லை. வசதிக்காக இலையை மட்டும் தண்டிப்பது ஞாயமில்லை.

  பயன்படுத்தாத நிலத்தில் வளரும் முட்செடி அடர்ந்தே இருக்கும்
  விஷமாய் தெரியும் உயிர்களும் தானே வந்து அடைந்தே இருக்கும்
  அடர்ந்தது வளர வந்து அடைவதும் வளரும்.
  சுகாதார சீர்கேட்டிற்கு,
  காரணம் வளரும் முட்செடிகள் அதை தடுக்க வேண்டுமென ஒருபுறம்
  இல்லை விஷங்கள் தான் அதை ஒடுக்க வேண்டுமென மறுபுறம்
  நிலத்தை ப(ண்)யன் படுத்த வில்லை என்ற உண்மை உட்புறம்

  *பதவுரை எழுத வேண்டியிருக்குமோ?*
  **இப்படி உக்காந்து யோசிச்சு பத்தி பத்தியா அடிக்குறதுக்கு, அடிக்கிறது விட்டுடலாமோனு தோனுது சந்தோசமா கருத்து சொல்லலாம்**

 7. today.and.me சொல்கிறார்:

  1. //பாஜக பாராளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி ( இவரும் காந்தியாம் -) அவர்களைத் தலைவராக கொண்ட பாராளுமன்ற துணைக்குழு//

  2.//தன் தலைமையிலான பாராளுமன்ற குழு நிதானமாக முழு
  விஷயத்தையும் ஆராய்ந்து-தெளிந்து, தன் இறுதி அறிக்கையை
  தரும்வரை –
  மத்திய அரசு – இந்த சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை
  காலவரையின்றி ஒத்திப் போட வேண்டும் என்று மத்திய
  அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது.//

  3. Modi is not banned in Gujarat. limited in timings, places and people. Don’t color matters. If you have evidence provide here. Otherwise prove your guts in your own blog.
  4. If we stood as Indian, you split into west bengal / tamilnadu / mamata / jaya / bjp states / non bjp states? what a silly politics? All Indians aren’t human beings?

  5.Yes. As we know,personnaly Modi is non-smoker.
  But rain will show what are there. You, poor fanatics may unable to see or not willing to see now. But your generations definitely will undergo the effects of evil.

  I think,no need to remove bjp.

  but, KMji,
  to please taru, include congress, the benami of bjp, too.

  Stupid politics, the then and now.

 8. Kauffman சொல்கிறார்:

  If some research done in other side of earth show evidence for cancer caused by tobacco, it is highly likely applied to India or our side of earth. Because most of the human/animal physiology and pathology (disease processes) are common in earth-living creatures!

  Unfortunately, we do not need to kill our people and waste our money to find out whether tobacco can cause cancer in Indian people or not.

  Some of smartest (negative way) people in the committe found some stupid way ( i.e., no scientific link between tobacco and cancer) to slow this process.

  Come on guys, we have to work faster for good things! No need or waste time to discuss much in this issue.

 9. S.Selvarajan சொல்கிறார்:

  புகை பிடிப்பது —- மது { சரக்கு — தண்ணி } அடிக்காத காட்சிகள் உள்ள திரைப்படங்களோ —- தொலைக்காட்சி தொடர்களோ இன்று உண்டா ? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும் .! கதாநாயகன் மற்றும் நண்பர்கள் கூடினாலே பீர் பாட்டிலை நுரை பொங்க –பொங்க வாயில் வைத்து குடிப்பதும் —- தண்ணீர் கலக்காமல் மது வகைகளை அருந்துவதும் —- அவ்வாறு செய்தால் தான் எல்லா விஷயங்களிலும் முன்னிலை பெறலாம் என்பதை போலவும் காட்டுவதை பார்க்கும் — நம் இளைய தலைமுறையினரும் — மக்களும் அடுத்த நிமிடம் அதை செய்து பார்ப்பதும் நடைமுறையில் உள்ள செயல்கள் …!! ஏனென்றால் கட் -அவுட்டுக்கே பாலாபிஷேகம் செய்யும் நமது ரசிகர்கள் — தனது அபிமான ஹீரோ வை போல நடக்க முற்படுவது தான் — ஸ்டைல் என்று நினைக்கின்றான் … இது இந்த இரண்டு மீடியாக்களும் செய்யும் மாபெரும் தவறு …!!! டைட்டிலிலும் — தொடரிலும் கண்ணுக்கு தெரியாத சிறிய எழுத்துகளில் இவற்றின் தீமையை பற்றி போட்டுவிட்டு —- பின்பு படம் முழுக்க மதுவையும் — சிகரெட்டையும் ஆசையை தூண்டும் விதத்தில் காட்டுவதற்கு — முதலில் தடை விதிக்கட்டும் அரசுகள் —— சிகரெட்டை தூக்கி போடு வாயால் பிடிப்பதும் —- குடித்துவிட்டு கோர்ட்க்கு போனால் தான் நன்றாக வாதாட முடியும் என்று காட்டியே இரண்டு தலைமுறைகளை வீணாக்கிய உத்தமர்களும் இந்த நாட்டில் தான் உள்ளனர் ..? ஒரு சட்டத்தை போடவும் — அதைபற்றி அரை- குறைகளை விட்டு ஆய்வு செய்யவும் — அனுமதி கொடுத்த ” மகானுபாவர்களை ” பற்றி விவாதித்தவர்களுக்கு —- நன்றி …. அவர்கள் இன்றைய இளைய தலைமுறையினர் மனதில் ” பச்சக் ” என்று ஒட்டிக்கொள்ளும் இந்த இரண்டு மீடியாக்களின் செயலையும் குறிப்பிட்டு விவாதித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் இந்த இடுக்கை ….!!!!

  • divmee சொல்கிறார்:

   தாக்கங்களைப் பற்றாமல், தாங்கி வரும் ஊடகங்களை பற்றிய விவாதம் நன்றாக இருந்தது. துரதிருஷ்டவசமாக, பலர் இந்த கருத்தை தனி நபர் தாக்குதலுக்காக தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாலு புள்ளிகளைத் தொடரும் ஆச்சரியகுறிக்கு பின்னால் ஏதேனும் அர்த்தம்/தொடர்பு இருக்கா? புரியவில்லை. நன்றி.

  • today.and.me சொல்கிறார்:

   //இந்த இரண்டு மீடியாக்களின் செயலையும் குறிப்பிட்டு விவாதித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் இந்த இடுக்கை ….!!!!//
   We reserve the space for that to our friend ‘Selvarajan’ and other friends in feedback column.

   kalakkunga ji…

   • S.Selvarajan சொல்கிறார்:

    நன்றி ! நண்பர்களே !! இந்த இரண்டு மீடியாக்களும் ” மக்களுக்கு நன்மை செய்யாமல் இருந்தாலும் — ஒரு கலாசார சீரழிவிற்கு வழி காட்டாமல் இருந்தாலே ” மாபெரும் நன்மை — என்கின்ற ஆதங்கம் தான் — என்னை போன்றவர்களுக்கு —- நாலு புள்ளிகளைத் தொடரும் ஆச்சரியகுறிக்கு பின்னால் ஏதேனும் அர்த்தம்/தொடர்பு இருக்கா? என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார் —- இதற்கு பதில் : திரு .கா.மை. அவர்களின் ” இடுக்கைகள் —- இது ஒரு தொடர் கதை —- தினம்- தினம் – வளர்பிறை “

 10. drkgp சொல்கிறார்:

  Dr Harsvardhan , the first BJP health minister proposed strict tobacco control
  like banning retail sale of cigarettes . Unfortunately he was soon
  replaced by Mr Nadda. The proposals were dropped hastily siting
  the same reasons given by Mr Taru. Can it be for the welfare of
  the people of the nation or for the corporate welfare?

 11. சக்தி சொல்கிறார்:

  //புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்று
  சொல்வதான ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தும் வெளிநாடுகளைச்
  சேர்ந்தவை.

  இந்தியாவில் இன்றுவரை இது பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும்
  மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. //

  கீழே உள்ளவை இந்தியர்களால் இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள்…………..

  Dr Pankaj Chaturvedi, a leading cancer specialist at Tata Memorial Hospital stated: “Estimates from patients at our oral cancer ward indicate that 80%-90% of preventable cancers of the neck, head and throat are tobacco related. The burden of oral cancers caused by chewing tobacco, as well as lung and other cancers caused by smoking tobacco in bidis and cigarettes, is enormous. More than one million Indians die prematurely from tobacco related disease each year and the social and economic costs to our community are immense.”

  The use of tobacco causes 85 percent of all head and neck cancers.Common environmental factors include intake of tobacco in the form of smoking and chewing of tobacco .-The Regional Cancer Centre (RCC) at Thiruvananthapuram –

  The number of oral cancers was more than twice the number of lung cancers in individuals aged 30-69 years, indicating that the range of fatal cancers caused by tobacco in India differs substantially from that in high-income countries. The National Cancer Regsitry Programme (NCRP)
  India is the third-largest global producer of tobacco and has more than 200 million tobacco users. In India tobacco kills 800,000 people every year, while 2,200 persons die every day from tobacco-related diseases, according to the Indian Council of Medical Research (ICMR)

 12. today.and.me சொல்கிறார்:

  பாஜக பாராளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி, தலைவர், பாராளுமன்ற துணைக்குழு அவர்கள் கவனத்திற்கும், அவரது தீவிர ஆதரவாளர்கள் கவனத்திற்கும்,

  புகையிலை வேறு, புற்றுநோய் வேறல்ல: மருத்துவர் சாந்தா விளக்கம்
  http://www.dinamani.com/latest_news/2015/04/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/article2745290.ece

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பர் டுடேஅண்ட்மீ,

   அந்த செய்தியை நண்பர்கள் வசதிக்காக கீழேயே தந்து விட்டேன் –

   வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   ———————————–

   புகையிலை வேறு, புற்றுநோய் வேறல்ல: மருத்துவர் சாந்தா விளக்கம்

   First Published : 03 April 2015 11:29 AM IST

   புகையிலை குறித்த சட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு, புகையிலை பொருட்களால் புற்றுநோய் வருவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியிருந்ததை மருத்துவர் சாந்தா மறுத்துள்ளார்.

   சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சாந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், புகையிலையைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்ற கருத்து முழுக்க முழுக்க தவறானது.

   புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள்தான் என்பது தில்லியில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற நிறுவனத்துடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

   இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு புகையிலைப் பயன்படுத்தியதால் 10 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 55 ஆயிரம் பேரும் உயிரிழக்கிறார்கள். நுரையீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர்களுக்கே வருகிறது.

   எனவே தான் புகையிலை பொருட்கள் மீது புகையிலையை பயன்படுத்தாதீர்கள் என்ற வாசகம் எழுதினால், அதுவும் ஆங்கிலத்தில் எழுதினால், இதை படிக்காத பாமரர்கள் படித்துப் பார்க்காமல் பயன்படுத்துகிறார்கள். எனவே புற்றுநோய் பற்றிய படங்களை புகையிலை பொருட்களின் மீது சுற்றப்பட்ட கவரில் அச்சிட வேண்டும்.

   அதனை 40ல் இருந்து 85 சதவீதமாக உயர்த்த இருந்த திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. திலீப்குமார் சாந்தி கூறிய கருத்தால் நிறுத்தப்பட்டிருப்பது வேதனையைத் தான் தருகிறது.

   என்னைக் கேட்டால் புகையிலைவேறு புற்று நோய் வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்பேன் எனக் கூறியுள்ளார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.