மேக்கேதாட்டூ – சில நிஜங்கள் … கர்நாடகா ஏன் இப்படி..? நாம் என்ன செய்யலாம் ….!!!

megadhathu support

உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, சூட்டைக் கிளப்பி,
அதைவைத்து அரசியல் லாபம் காண்பது, ஓட்டு வேட்டையாடுவது –
இந்த நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும்
பிழைக்கும் வழியாகி விட்டது. இப்போது கர்நாடகா-வில்
மேக்கே தாட்டூ விஷயமாக நடப்பதும் அதுவே தான்.

இந்த அணை தொடர்பான சகல விவரங்களையும்
ஒரு பேட்டியில் தெளிவாகக் கூறுகிறார் –
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், திரு.பெ.மணியரசன்.

தற்போதைய பின்னணியை நமது விமரிசனம் தள நண்பர்கள்
சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக
அந்த பேட்டியின் விவரங்களைக் கீழே தந்திருக்கிறேன்.

அதற்குள்ளே போவதற்கு முன்னதாக,
நான் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன் –

காவிரி ஆற்றில் அணைகள் கட்டும் வழக்கம் துவங்கியது
20ஆம் ஆண்டின் துவக்கத்தில், மைசூரில் கிருஷ்ணராஜசாகர்
அணையும், தமிழகத்தில் மேட்டூர் அணையும் கட்டிய 1924-ம்
ஆண்டிற்கு பிறகு தான்.

அதற்கு முன்னர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,
காவிரி தோன்றிய காலம் முதல், தமிழ்நாடு அதன் பயனை
எந்தவித கட்டுப்பாடோ, தட்டுப்பாடோ இன்றி, ஆண்டு முழுவதும்
அனுபவித்து வந்தது. காவிரிக்கரையில் மூன்றுபோகங்கள்
விளைவிக்கப்பட்டு, “சோழநாடு சோறுடைத்து” என்கிற புகழுடன்,

தென்னாடு முழுவதற்கும் சோறு போட்ட பெருமை பெற்றது
காவிரியின் விளைநிலங்களான டெல்டா பிரதேசங்கள்.
“மாடு கட்டி போரடித்தால் மாளாதென்று
ஆனை கட்டி போரடித்த” பெருமை உண்டு நமக்கு.

எந்த மாநிலமானாலும், அரசியல்வாதிகள் – அநேகமாக
ஒரே மாதிரி தான். தங்களுக்கும், தங்கள் கட்சியின்
வளர்ச்சிக்கும் பயன்படும் விதத்தில் செயல்படுவார்களே தவிர,
மக்களின் ஒட்டுமொத்த நலன் என்பதெல்லாம் அவர்கள்
பார்வைக்குள் அவ்வளவு சுலபமாக வராது.

கர்நாடகா உத்தேசித்திருக்கும் மேக்கேதாட்டூ, ராசிமணல் அணைகள் விஷயமாக நான் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன் –

காவிரிநதிநீர் ஆணைய தீர்ப்பின் விதிகளை மீறி –

தமிழகத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டு,
நிலுவையில் இருக்கும் வழக்குகளையும் மீறி –

இன்னும் இதற்கான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்
அனுமதியைப் பெறவில்லை என்கிற அறிவிப்பையும் மீறி –

கர்நாடகா அரசு “அணைகளைக் கட்டப்போகிறோம்” என்று
கூறி வருவது “வெத்து அரசியல்” –
நடைமுறைப்படுத்தவே முடியாத அறிவிப்புகள். எனவே,
இதை நாம் மனதின் ஒரு மூலையில் இருத்திக்கொண்டு –
அதே வேளையில்,

கர்நாடகா வீம்புக்காகவே, உள்ளூர் அரசியல்
ஆதாயத்துக்காகவே – எதாவது “அட்வென்சர்”களில்
இறங்கினால் – அதை உடைத்தெறிய நாம் எப்போதும்
தயாராக இருக்க வேண்டும். துணிச்சல் இருந்தால் அவர்கள்
கட்டிப்பார்க்கட்டும்.

எப்போது வேண்டுமானாலும், ஒரு 50 பேரைத்திரட்ட
நம்மால் முடியாது…? கூடுவோம்… திட்டமிடுவோம்…
கூட்டமாகப் போனால் தானே தடுப்பார்கள் …?
தனித்தனியே போவோம்…. எல்லை தாண்டி கர்நாடகாவிற்குள்ளேயே –
சேர வேண்டிய இடத்தில் ஒன்று சேர்ந்து கொள்வோம்.

அவர்கள் கட்ட கட்ட – ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை
நாம் கூடி -உடைத்துக்கொண்டே இருப்போம்.
அரசியல் சட்டவிதிகளின்படி அனுமதி பெறாமல் அணையைக் கட்டும் அவர்களை இந்த நாட்டின் சட்டம் அனுமதித்தால்,
அனுமதி பெறாத அந்த கட்டிடங்களை இடிக்கும் நம்மை மட்டும்
அந்த சட்டம் என்ன செய்து விட முடியும்….?

அவசியம் நேருமானால், நாமே நேரடியாக செயலில் இறங்குவோம்- முதல் அணியில், முதல் வரிசையில் உங்களுடன் – காவிரிமைந்தனாகிய நானும் இருப்பேன்……(இன்ஷா அல்லா…! )

நமக்கு அரசியல் ஆதாயங்களெல்லாம் வேண்டாம் ….
காரியத்தை முடித்து விட்டு, காணாமல் போய் விடுவோம்…
நம் உரிமைகளைக் காப்பது மட்டுமே நமது நோக்கம்…!

– இனி இந்த விஷயம் குறித்து நாம் சிறிதும் அச்சப்படவே
தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையாக இருப்போம்…

இனி தரை நிலவரம் பற்றிய திரு.பெ.மணியரசன் பேட்டி …..

megadhathu-2

megadhathu-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to மேக்கேதாட்டூ – சில நிஜங்கள் … கர்நாடகா ஏன் இப்படி..? நாம் என்ன செய்யலாம் ….!!!

 1. சக்தி சொல்கிறார்:

  //அதற்கு முன்னர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,காவிரி தோன்றிய காலம் முதல், தமிழ்நாடு அதன் பயனை எந்தவித கட்டுப்பாடோ, தட்டுப்பாடோ இன்றி, ஆண்டு முழுவதும் அனுபவித்து வந்தது.//
  ஆனால்…………….

  இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. அதைத் தொடர்ந்து 1892-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆறு விதிகளைக் கொண்ட ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
  அதன்படி,
  1910இல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் அணைகட்ட முடிவு செய்து ஒப்புதல் கேட்டது. ஒப்புதல் சென்னை மாகாண அரசிடம் இருந்து கிடைக்காத நிலையில், நடுவண் அரசு 41.5 டி.எம்.சி. க்குப் பதிலாக11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது.

  ஆனாலும் பிரச்சனை தீராத நிலையில் எச்.டி.கிரிபின் தலைமையில் 1913 இல் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
  இப்படித் தொடர்ந்தது பிரச்சனை.

  ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக காலங்காலமாக தமிழர்கள் சண்டை போட்டு வந்துள்ளனர் என வரலாறு கூறுகிறது.

  1695 -ல் இராணி மங்கம்மாளிடம் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து,……….

  மைசூர் மன்னன் சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே ,தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில், அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது.
  இப்படி வரலாற்றில் பலமுறை காவிரிப் பிரச்சனையும் அதை தொடர்ந்து போரும் நடந்து வந்திருக்கின்றன.

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  எல்லாம் சரிதானையா!
  ஆனால் நாம நீராதாரம் செழிக்க எதையாவது செய்தோமா?
  ஆறுகளில் கழிவுநீரை கலக்கிறோம். ஏரி, குளம் மற்றும் குட்டைகளை ப்ளாட் போட்டு விற்றுவிட்டோம்!
  நிலத்தடி நீரையும் உறிஞ்சாச்சு
  இதெல்லாம் போக பூமிக்கடியிலுள்ள மீத்தேனையம் விட்டுவிட மனமில்லாத நம்மள கன்னடக்காரன் மட்டும் ஒண்ணும் செய்யக்கூடாதா

 3. S.Selvarajan சொல்கிறார்:

  இதில் தமிழகத்தின் துரதிர்ஷ்ட்டம் என்ன வென்றால் 1967 — க்கு பிறகு தேசியக்கட்சிகளின் ஆட்சி இங்கே அமையாமல் போனது —- அதனால் இங்குள்ள காங்கிரஸ்— கம்ம்யுனிஸ்ட் –தற்போது பா.ஜ.க. போன்றவைககள் தமிழகத்தின் உரிமையை ஓங்கி ஒலிக்க தயங்குவது —- கேரளாவில் —- கர்நாடகாவில் போன்ற மாநிலங்களில் அவர்களின் கட்சியின் ஆட்சியை — எதிர்கட்சியாகவாவது தக்க வைத்து கொள்ள அவர்கள் நமது உரிமையை கேட்க தயங்குகிறார்கள் ….. இதில் பிரதான மாநில கட்சியான தி.மு.க.. மத்தியில் கூட்டணியில் இருந்ததாலும் —- மத்திய அரசினால் தங்களின் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக — இங்கே வாலையும் –அங்கே தலையையும் காட்டி கடந்த காலங்களில் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்கியதால் சிக்கல் அதிகமானது —- அ.தி.மு.க விடாமல் உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்புகளை பெற்றும் —மத்திய காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. அரசுகள் கண்டுகொள்ளாமல் நடைமுறை படுத்த தயங்குகின்றன —- ஆனால் இதில் தமிழகத்தின் மக்களின் காதில் ” பூ சுற்ற ” அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் — பிரதமரை நேரில் சென்று அனைவரும் பார்த்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் —- ஒரு உப்பு- சப்பில்லாத வாதத்தை அவ்வப்போது வைத்து தங்களின் தமிழ் நாட்டு ” போலி” பற்றை பறை சாற்றுவது வாடிக்கையான —- நடைமுறை —- நீதிமன்ற உத்திரவையே மதிக்காத மத்திய மற்றும் அண்டை மாநில அரசுகள் — அனைத்து கட்சியினர் கொடுக்கும் காகிதத்திற்கு என்ன பயன் கிடைக்கும் என்பது இந்த வீணா போன தேசிய கட்சிகளுக்கு தெரிந்தும் வெத்து பாவ்லா காட்டுவதால் —- ஆடு தாண்டுகிறதோ இல்லையோ இவர்கள் — மாநிலத்திற்கு – மாநிலம் தாண்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் — இருப்பார்கள் — என்பதே நிதர்சனம் .

 4. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஐயா! இந்த அளவுக்குத் துணிச்சலான ஓர் அறிக்கையை வை.கோ-வோ, சீமானோ கூட இந்தப் பிரச்சினையில் இதுவரை வெளியிட்டதாகத் தெரியவில்லை. உங்கள் அறச்சீற்றத்துக்கும் செம்மாந்த துணிவுக்கும் தமிழ் உணர்வுக்கும் தலை வணங்குகிறேன் ஐயா!

 5. Ramachandran. R. சொல்கிறார்:

  கேஎம் சார்,

  அரசியல்வாதிகளின் பார்வையில் யோசிக்காமல்
  நிஜமான அக்கரையோடு யோசித்து எழுதி இருக்கிறீர்கள்.
  அரசியல்வாதிகள் ஒன்று மிகைப்படுத்துகிறார்கள் அல்லது
  நமக்கு இதில் என்ன லாபம் கிடைக்கும் என்று சுயநலத்தோடு பார்க்கிறார்கள். உண்மையான நிலையை பளிச்சென்று
  புரியும்படியும், நெஞ்சில் பதியும்படியும் எழுதி இருக்கிறீர்கள்.

  அந்த முதல் ஐம்பது பேரில், உங்கள் பக்கத்தில் எனக்கும் ஒரு
  இடம் இப்போதே ரிசர்வ் செய்து விடுகிறேன். மறுக்காமல் சரி
  என்று சொல்லி விடுங்கள். சரி தானே சார்.
  நன்றி.

 6. Kauffman சொல்கிறார்:

  If Karnataka builds any more dam on kaviri river and central government keeps silent on this issue, it will be considered as the first sign for forced disintegration if indian states. The affected people will not afraid to take the arms to break the dam and to break the silence of govt.

 7. சக்தி சொல்கிறார்:

  மன்னிக்கவும்.இது ஒரு உணர்ச்சியினால் ஏற்பட்ட கருத்தாக சொல்லலாமே தவிர ,செயற்பாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. நம் மானிலத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான சட்டமீறல்களுக்காக போராட்டம் நடத்த வேண்டிய நாம்,அதை எல்லாம் கண்டுகொள்ளாது கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டு இடிப்பதற்கு செல்வோம் என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்வது என்னவோ எனக்குச் சரியாகப் படவில்லை.

  வீட்டுக் குப்பைகளை சுத்தம் செய்யாது நாம் புனிதர்கள் என எண்ணிக் கொண்டு அராஜகத்திற்கு செல்வது சிந்திக்க வேண்டியதாகும். சாதி -மத, பெண்கள் மீதான வன் கொடுமை இப்படி சமூகத்தின் புண்கள் புரை ஓடிக் கொண்டே போகிறது.

  காடுகளை அழிக்கிறோம், தண்ணீர் நிலைகளை அழிக்கிறோம், கோவை ஈசா நிலையம் மரங்களை நடுவதாகக் கூறிக் கொண்டு காடுகளை அழிக்கிறது.யாரும் கண்டு கொள்ளவில்லை. போராட்டம் நடத்தவில்லை.மாறாக அவர்களுக்கு ஊக்கம் தருகிறோம்.

  உண்மைதான். பல இலட்சம் விவசாயிகள்,மக்களின் தண்ணீர்ப் பிரச்சனை, விவசாயம் அழிவினால் தற்கொலைகள். அதற்காக எந்த விதத்திலும் மற்றவனை அழிக்கும் அதிகாரம், நம் சமூகத்தின் அழுக்குகளை நாம் சுத்தம் செய்யாத வரை நமக்குக் கிடையாது.

  • Kauffman சொல்கிறார்:

   Sakthi,

   I highly appreciate your view and opinion. However, we are not going to damage the life of people ( in case the situation arise) in Karnataka. We will damage the dam ( man made structure against the law of nature). This will happen if both Karnataka and central governments do injustice to Tamil nadu. It is the one way of protest to get our right, as they do not respect the Supreme Court and other courts guidelines.

   I agree strongly that we have lot of dirt on our back. We have to clean it up. We have to work for it. However, you have to show ur fighting instinct in a justified manner when your rights for life and living are at danger.

   We cannot keep quite when our house is in fire set by opponent. We have to douse the fire and we have to teach a lesson to opponent.

   Taking up arms for justified fight is not wrong. To protect yourself, you have to do the most possible thing.

 8. புது வசந்தம் சொல்கிறார்:

  கவிஞர் பழனிபாரதியின் முகநூல் பதிவு

  மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு ஜனநாயக அமைப்பு மக்களுக்காகவே இருப்பதுதான் நீதி. இங்கே எதிலும் அநீதி. எல்லாமும் அநீதி.
  ”விவசாயிகளுக்கு நல்லது செய்வதற்காகத்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதா” என்கிறார் பிரதமர் மோடி.
  ”இல்லை…இல்லை… விவசாயிகளுக்கு அநீதியை விளைவிக்கிற மசோதா இது”என்று கடுமையாக எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள். விவசாயிகள் வேறு தொழில் செய்யவும் பழகிக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன வார்த்தைகள் என் மண்டையில் கொட்டுகின்றன.
  ”புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும்
  என்பதற்கு ஆதாரம் இல்லை” என்கிறார், புகையிலை சட்டங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் திலீப்குமார் காந்தி.
  ”அதெல்லாம் பொய்.புகையிலை வேறு; புற்றுநோய் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான்” என்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா.
  முதலாளிகளுக்காக அல்ல… முதலாளிகளுக்காக அல்ல…புகையிலை விவசாயிகளுக்காகவும் அதைச் சார்ந்த தொழிலாளர்களுக்காகவும்தான் வருத்தப்படுகிறார்கள் மோடியும் திலீப்குமார் காந்தியும்.
  எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது….
  மக்கள் யார்? அரசியல்வாதிகள் யார்? தொழிலாளர்கள் யார்?முதலாளிகள் யார்?
  ஜனநாயக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மக்களுக்காக அரசியல்வாதிகளா…அரசியல்வாதிகளுக்காக மக்களா? இது மாதிரியான நெருக்கடிகளில் உச்சநீதி மன்றம் ஏன் தானாக ஒரு வழக்கு பதிவு செய்து நீதி வழங்கக் கூடாது? அங்கேயும் இந்த ஜனநாயகத்தின் தலையீடு இருக்குமோ?
  ”ஜனநாயகம் என்னும் சந்தைக்கு நான் தந்த
  சரக்குகள் விற்கவில்லை
  பணநாயகம் என்னும் பெயரன்றி மற்றென்னைத்
  தழுவுவார் யாருமில்லை..
  நாற்பது வருடங்களுக்கு முன்னாள் கண்ணதாசன் பாடிய வரிகள் புதிய தேசிய கீதமாக என் காதுகளில் ஒலிக்கிறது…
  – பழநிபாரதி

 9. gopalasamy சொல்கிறார்:

  After 1956, the state boundaries were redefined. Hence a new agrrement shound should have been executed between karnataka and tamilnadu in 1974 itself. It was not done.
  If we want to take law into our hands, nobody can stop some miscreants join and damage the purpose. At that time God also can not help. I am delighted to see some words from KM ji.

 10. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  @சக்தி, @சைதை அஜீஸ், @kauffman ஆகியோருக்கு!

  நீங்களெல்லாம் என்னதான் கூற வருகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை!! நீங்கள் கூறுவது போன்ற குறைகளெல்லாம் உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான். கூவம் தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவீனத்துக்கான கண்ணெதிர்ச் சான்று என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இது போன்ற நதிகள் மற்ற நாடுகளிலும் உண்டு என்பது. சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க ஆட்சியில், வெளிநாடு ஒன்றில் இதே போல் ஒரு நதி கழிவு நீர் வடிகாலாக மக்களால் பயன்படுத்தப்பட்டு, பின்னாளில் அரசு அதைச் சீர்படுத்தியதாகக் கேள்வயுற்று, அது பற்றிய விவரங்களைச் சேகரித்து வர ஸ்டாலினை அன்றைய முதல்வர் கருணாநிதி அனுப்பி வைத்ததை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

  சுற்றுச்சூழல் பொறுப்பின்மை, சமூக அக்கறையின்மை, ஏற்றத்தாழ்வு கடைப்பிடித்தல் எனத் தமிழர்களிடம் நீங்கள் கூறும் அத்தனை குறைகளும் இந்தியாவின் மற்ற மாநில மக்ககளுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துவதே! அப்படியிருக்க, இதற்காகக் கருநாடக அரசு நமக்கான தண்ணீர் உரிமையை மறுப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எந்த வகையிலான ஏரணம் (logic) என்பது எனக்கு அணுவளவும் புரியவில்லை. அப்படி, இந்த உலகில் வாழ்வதற்குண்டான அடிப்படை நீர் உரிமை மறுக்கப்படும் அளவுக்கு அப்படியென்ன நாம் உலக மகாக் கொடூரர்கள்? விளக்க முடியுமா?

  • Kauffman சொல்கிறார்:

   Yes sir. I accept your view. Every state and every country has many internal problems. It is universal now. But still we have more problem like mis- management of water resources and rivers. I think leaders in Tamil Nadu are not thinking in broader view to improve water resources and water management. That’s why we are worried. However, we cannot accept what Karnataka and central govts are doing in kaviri water issue.

 11. NS RAMAN சொல்கிறார்:

  மழை காலத்தில் வீணாக போகும் நீரை சேமிக்க வழியில்லை !!! கர்நாடக அணை உடைப்பேன் என வாய் பேச்சு பேசும் வைகோ போட்டியாக மற்றும் ஒருவர் !!!

  • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

   //மழை காலத்தில் வீணாக போகும் நீரை சேமிக்க வழியில்லை !!!// – எந்த மாநிலத்தில் வந்து என்ன சொல்கிறீர்கள்! மழைநீரைச் சேமிக்க அரசே கட்டாயச் சட்டம் இயற்றி, அமல்படுத்தி, அது வெற்றியும் அடைந்து நிலத்தடி நீர்மட்டம் உயரப் பெற்ற ஒரு மாநிலத்தைப் பார்த்து இப்படியொரு குற்றச்சாட்டை வைப்பது என்றால், நீங்களெல்லாம் எந்த உலகத்திலிருந்து வருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

   • NS RAMAN சொல்கிறார்:

    கடந்த பருவ மழை காலத்தில் ஒரு நாள் மட்டும் 5 டீம்ஸீ வீண்? செய்தித்தாள் பார்ப்பது ILLAYA ???? ஏரிகள் தூர் வருவது கணக்கு காட்ட மட்டும் என சிறுவர் கூட அறிவார்
    stop dreaming !!!!

    • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

     அதனால்…? நமக்கான உரிமையைக் கேட்க நமக்குத் தகுதி இல்லை என ஆகிவிடுமா? என்னதான் சொல்ல வருகிறீர்கள்? அப்படிப் பார்த்தால் மேலை நாடுகளில் உணவு அளவுக்கு மீறி வீணடிகப்படுகிறதே, அவர்களுக்கெல்லாம் தானிய ஏற்றுமதியே செய்யக்கூடாது எனக் குரல் எழுப்ப முடியுமா உங்களால்? எத்தனையோ இந்திய மாநிலங்கள் நடுவணரசின் பல திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இன்னும் தங்கள் மக்களை வறுமையிலேயே வைத்திருக்கின்றனவே, அந்த மாநிலங்களுக்கெல்லாம் அடுத்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யக்கூடாது எனக் கண்டிக்க முடியுமா உங்களால்? ஆனால், தமிழர்கள் தண்ணீரை வீணடித்தால் மட்டும் தமிழர்களுக்குத் தண்ணீரே தரக்கூடாது என்கிறீர்கள்!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர் ராமன்,

     நீங்கள் அரைகுறையான விவரங்களைத் தெரிந்து கொண்டு
     (அநேகமாக தினமலர் போன்ற பத்திரிகைகளிலிருந்து )
     இப்படி எழுதுகிறீர்கள்.

     முன்னால் இந்த நிலை இருந்தது.
     இப்போது அப்படி இல்லை.

     காவிரியிலும், கொள்ளிடத்திலும் 11 இடங்களில் தடுப்பணைகள்
     கட்ட திட்டம் உருவாகி, இரண்டு இடங்களில்
     ஏற்கெனவே கட்டப்பட்டும் விட்டது.
     திருச்சி அருகே – கம்பரசம்பேட்டை – போய்ப்பார்க்க முடிந்தால்
     பாருங்கள்…. 35 கோடி ரூபாய் செலவில் – அற்புதமாக உருவாகி இருக்கிறது.
     மே மாதத்தில் கூட தண்ணீர் தங்குகிறது.
     இந்த வருடம் மழைக்காலம் வருவதற்குள்
     காவிரி /கொள்ளிடத்தில் இன்னும் 5 தடுப்பணைகள் உருவாகி விடும்.

     நம் உழவர்களின் உரிமையை காக்க வேண்டும் என்கிற அடிப்படை
     உணர்வு கூட இல்லாமல் நீங்கள் இப்படி எழுதுவது வருத்தமளிக்கிறது.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • N S RAMAN சொல்கிறார்:

      நீங்கள் மட்டும் உழவர் உரிமை காப்பவர் மாற்றுக் கருத்து எழுதினால் எதிர்பவர் என முத்திரை குத்த கூடாது. அணை உடைப்பது போன்திற வன்முறை உணர்ச்சி பொங்க சொல்வதிருக்கு முன் தமிழ் நாடு அரசு தூர்வரும் வேலை சொட்டு நீர் பற்றி என்ன செய்கிருது என சிந்திக்கவும். காமரசர்க்கு பின் தமிழ் நாட்டு அரசியல் வியாதிகள் !! தொலை நோக்கு இல்லை என்பதுதான் உண்மை

     • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

      ராமன் அவர்களே! நீங்கள் கூறுவது போல் நீர் மேலாண்மை விவகாரத்தில் நம் அரசியலாளர்களுக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் குடிநீர் இல்லாமல், வேளாண்மைக்கு நீர் இல்லாமல், சாக வேண்டும் என்பதுதான் உங்கள் தீர்ப்பா? மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் அந்தப் பகுதி மக்கள் நீர் மேலாண்மையிலோ பிறவற்றிலோ இதே போல் நடந்து கொண்டால் இதே தீர்ப்பை நீங்கள் அவர்களுக்குக் கூற முடியுமா என்பதே என் கேள்வி. அதற்கு எங்கே உங்கள் பதில்?

 12. Ganpat சொல்கிறார்:

  அருமையான பதிவிற்கு நன்றி.
  1)இந்தியா என்பது தெளிவான முப்பது தனி நாடுகளை கொண்ட ஒரு குழப்ப நாடு என்பதே யதார்த்தம்.
  2)தமிழ் நாடு மாநில நலனில் எந்த தேசீய கட்சிக்கும் எள்ளளவு அக்கறையும் கிடையாது.
  3)தி,மு,க, அ.தி,மு க இரண்டும் இந்த மாநில கான்சர் நோய்கள்.
  4) அணை கட்டினால் போய் உடைப்போம் என்பது கேட்க நன்றாக இருந்தாலும் நடை முறைக்கு ஒத்து வராது.
  5) உச்ச நீதி மன்றமும் தீர்ப்பு வழங்கி விட்டு வாளா இருந்து விடும்
  அப்படி ஒருவேளை அணை கட்ட தொடங்கினால்,
  நம் எதிர்ப்பை காட்ட நமக்கு இருக்கும் ஒரே வழி…
  தேர்தல் புறக்கணிப்பு..
  மாநில மத்திய தேர்தல்களை ஒரே சேர புறக்கணித்து நம் ஒற்றுமையை காட்ட வேண்டும்.
  நான் நோட்டா வை சொல்லவில்லை சாவடிக்கே யாரும் போக கூடாது.
  ஏற்கனவே நாற்பது சதவிகித வாக்காளர்கள் கடந்த அறுபது வருடங்களாக தொடர்ந்து செய்யும் இச்செயலை அனைவரும் செய்ய வேண்டும்.

  • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

   அதனால் பயன் இருக்கும் என நினைக்கிறீர்களா ஐயா? யாருமே வாக்களிக்காவிட்டால் என்ன செய்வார்கள்? அப்படிப்பட்ட நிலைமையில் என்ன செய்ய வேண்டும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் எப்படிப்பட்ட ஆட்சி நடத்தப்பட வேண்டும் எனச் சட்டத்தில் ஏதேனும் தெளிவான வழிகாட்டல் இருக்கிறதா? எதிர்வாதத்துக்காகக் கேட்கவில்லை, உண்மையிலேயே தெரிந்து கொள்வதற்காகத்தான்.

   • Ganpat சொல்கிறார்:

    நன்றி.எனக்கும் இதை பற்றி முழுமையாக தெரியாது.ஆனால் இம்மாதிரியான செயல் ஒன்றுதான் உச்ச நீதி மன்றத்திற்கு இன்னும் பலம் சேர்த்து மைய அரசை தங்கள் தீர்ப்பை செயல்படுத்த துரிதப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

    • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

     இல்லை ஐயா! உச்சநீதிமன்றத்துக்குச் சில சிறப்பு அதிகாரங்கள் இருப்பினும், அதற்கும் ஒரு வரம்பு இருக்கவே செய்கிறது. தேர்தல் புறகணிப்பு அரசியல் அரங்கில் நாடளாவிய ஒரு கிடுகிடுப்பை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய, மற்றபடி அதனால் பயன் ஏதும் இருக்காது.

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத் ஜி,
   //சாவடிக்கே யாரும் போக கூடாது.// நீங்க போனாலே எல்லாரையும் வெளிய ஓடுங்கடான்னு சொல்லி கதவைப்பூட்டிவிட்டு மெஷின்ல வேண்டிய சின்னத்தை குத்துகுத்துன்னு குத்துவாங்க. இதுலே நீங்கவேற …….. அவங்க ஈசியா ஜெயிக்கிற வழிய சொல்லிக்கொடுக்கிறீங்க.

   நம்ம ஓட்ட வேறயாரும் போட்டுறக்கூடாதுன்னா காலையில மொதஆளா போய் ஓட்டப் போட்டறதுதான் ஒரே வழி. அது நம்ம பிறப்புரிமைஜி.

 13. subbu சொல்கிறார்:

  EVEN OUR ENEMY COUNTRY PAKISTHAN GETS IT WATER SHARE FROM OUR RIVER
  PUNJAB. BUT KARNATAKA DENIES WATER DUE TO US AND BUILD MORE DAMS. JAYA
  ANTOGNISED THE POLITICIANS AND PRO KANNADA GROUPS BY GETTING GAZETTE
  NOTIFICATION. HER ARREST AND JAILING IN BANGALORE WAS REJOICED BY THE
  KANNADAPEOPLE. KAVERY WATER IS USED IN BANGALORE FOR TOILET PURPOSES
  WHERE HAS DELTA DISTRICTS OF TAMILNADU STARVE FOR WATER.. WE NEED WATER
  FOR OUR LIVELIHOOD BUT THEY USE IT FOR TOILETS IS IT NOT A SHAME?
  TAMIZHANA THALAIVER’S FAMILY HAS GOT BUSINEESS AND PROPERTIES IN KARNATKA
  THAT IS WHY THEY KEEP MUM AND THEY ARE BUSY WITH SAVING THEIR PROPERTIES.
  WILL ATLEAST NOW MODI WAKE UP AND BLOCK THE MEKADATU DAM. OR HE LIKE
  OTHER POLITICIAN SHRUGH HIS RESPONSIBILITY. SIDDARAMIAH SHOULD WATCH HIS
  MOUTH OTHERWISE CONG WILL NEVER COME BACK IN CENTRAL GOVT.
  IS IT FEDERALISM?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.