K.D.சகோதரர்களின் வழக்கு(கள்) பற்றி …….

.

.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு நண்பர் –
K.D.சகோதரர்களின் வழக்கு(கள்..!) பற்றி தமிழ் பத்திரிகைகளில்
சரியாக விவரங்கள் வரவில்லையே – நீங்கள் கொஞ்சம்
விளக்கமாக எழுதுங்களேன் – என்று எழுதி இருந்தார்.

அவர் குறை தீரும் வகையில், நேற்று வெளிவந்த ஜூ.வி.யில்
வழக்கு விவரங்கள் தெளிவாக வந்திருக்கின்றன. அவருக்காகவும்,
மற்ற நண்பர்களுக்காகவும் கீழே தந்திருக்கிறேன்.

ஒரு வேடிக்கை பாருங்கள் – கலைஞர் குடும்பத்தில்
உள்ளவர்களின் ஊழல் விவரங்களை விமரிசையாக பட்டியலிட்டு
விட்டு, கட்டுரையில், “அய்யோ பாவம் கலைஞர் – அவருக்குத்தான் எவ்வளவு கஷ்டங்கள்” என்று மிகவும் அனுதாபமும் காட்டி இருக்கிறார்கள்…. பிழைக்கத் தெரிந்த பத்திரிகையாளர்கள்….!!!

kd-1

kd-2

kd-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to K.D.சகோதரர்களின் வழக்கு(கள்) பற்றி …….

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  அதாவது திரு. தரு இந்த வலைத்தளத்திற்கு புதியவராம்
  அவர் சொல்லியதை காவிரி ஐயா புரிஞ்சிக்கிட்டாராம். ஸோ, நோ மோர் பயாஸ் / ஒன் ஸைடட் ரிப்ளைஸ்?

 2. சக்தி சொல்கிறார்:

  மேலே உள்ள பதிவை மறந்து,சில பொதுவான தகவல்………..
  பல வார்த்தைப் போர் நிகழும் சமயத்தில்……….சில வார்த்தைகள்.
  தமிழ் மணம் தெரிவு என்பது சிலரின் பரிந்துரைகளே தவிர வலைப்பதிவின் தரம் எனச் சொல்ல முடியாது.

  பதிவுகளுக்கான கருத்துகள் தனிப்பட்ட எவரையும் அவமதிக்காமல் சாதி-மத உணர்வுகளை தூண்டாமல்,ஆபாச பாலியல் உணர்வுகளை/வன்முறைகளைத் தூண்டாது, விதண்டாவாதமாக இருக்காது எழுதப்படும் கருத்துகள் கருத்துச் சுதந்திரமாகக் கருதப்படும். எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடுவது கருத்துகளை முன்வைப்பதாகாது.

  ஒருவர் தன் கருத்துகளை சொல்லும் போது ஒருவருக்கு அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாக யாருடைய மனதையும் புண்படுத்தாது எழுதும் போது அதைத் தடுப்பதும் கருத்துச் சுதந்திரமாகாது.

  மூளைச் சலவை செய்யப்பட்டது போல் ஒருவர் தான் சொல்வதே சரி என்ற நோக்குடன் கருத்துகள் எழுதும் போது அவரை நிராகரிப்பது ஊடக தர்மம் ஆகாது. போஸ்டர்களுக்கு பால் ஊற்றும் இரசிகர்களை மாற்ற முடியாது.அவர்கள் சிந்திக்காது திக்குளிக்கவே செய்வார்கள். அதுபோல அவர்களை உணரச் செய்வது அல்லது கண்டு கொள்ளாமல் பதில் தராமல் விடுவது சரியானதே தவிர முற்றாக நிராகரிப்பது கருத்துச் சுதந்திரமுமல்ல,ஊடக தர்மமும் அல்ல.

  எனவே மக்கள் நலன் கருதி செயல்பட விரும்புவோர் நடு நிலையுடன் சாதக பாதகங்களை முன் வைப்பதும் அதை மேலே கொண்டு செல்வதும் நாகரீகமாகும்.

  பதிவிடப்படும் பதிவுகள் எங்கும் எப்போதும் முற்றிலும் சரியாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. சரியும் தவறும் கலந்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு கருத்தை வைத்தால் அதற்கு தமிழ் நாட்டின்……………
  அரசியல்வாதியின் தொண்டர்கள், சாமியார்களின் பக்தர்கள்,சினிமாக்காரர்களின் இரசிகர்கள் போல் ஆகி விடும்.

  எனவே மற்றவர்களை புண்படுத்தாத கருத்துகளை அது மோடிஜிக்கு/பாஜகவிற்கு/அல்லது வேறு கட்சிகளுக்கு சார்பாக இருந்தாலும்,விதண்டாவாதமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அனுமதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கும் ஊடக தர்மத்திற்கும் நாம் மதிப்பளிப்பதாகும்.
  ………..
  தமிழில் எழுத முடியாது என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றும் செயலாகும். தமிழ் படிக்க புரிந்து கொள்ளக் கூடியவர்களால் சுலபமாக எழுதவும் முடியும்.சுலபமாக எழுத பல மென்பொருள்கள் இலவசமாக தாராளமாகக் கிடைக்கின்றன.ஒருமுறை முயற்சித்தால் இவ்வளவு சுலபமா என அவர்களே புரிந்து கொள்வார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சக்தி,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   தமிழ்மணம் ‘தரவரிசை’யை நான் என் தலையில்
   ஏற்றிக்கொள்ள மாட்டேனென்று அன்றைக்கே
   சொல்லி விட்டேன்.

   நண்பர் taru வின் பின்னூட்டம் பற்றிய உங்கள்
   கருத்துக்களுக்கு –

   கிட்டத்தட்ட இதே விதத்தில் நான் ஏற்கெனவே
   நண்பர் taru-வுக்கான என்னுடைய பின்னூட்டத்தில்
   குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லை என்று
   நினைக்கிறேன்.
   அதிலிருந்து சில பகுதிகள் கீழே –

   – /// நீங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதில்
   எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் அதை
   தெரிவிக்கும் முறையில் தான் – நீங்கள் பயன்படுத்தும்
   தரக்குறைவான வார்த்தைகளைத்தான் இந்த தளம்
   ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்
   மற்ற நண்பர்களைக் கோபமூட்டி, அவர்களையும் தவறான
   வார்த்தைகளை பயன்படுத்த தூண்டுகின்றன. ஒரு வேளை
   அது தான் உங்கள் நோக்கமோ …?

   எப்படி இருந்தாலும் சரி, இனி “நாகரிகமான” முறையில்
   உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதாக இருந்தால் இங்கு
   வாருங்கள். இல்லையெனில் நீங்கள் இங்கு பின்னூட்டம்
   இட வேண்டாம்.

   அதையும் மீறி பின்னூட்டம் இட்டால், அவை நீக்கப்படும்.

   எல்லா நண்பர்களுக்குமே ஒரு வேண்டுகோள்.
   ஒருவர் சேற்றில் விழுந்து விட்டார் ….
   மற்றவர்களையும் இழுக்க முயல்கிறார்….
   தயவு செய்து அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்…///–

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • yogeswaran சொல்கிறார்:

   Dear Sir,

   I am living in the middle east.

   Yes, I know there are tamil unicodes,earlier I was using Gopi,s unicode to write in tamil.

   with very little time to read articles and and respond i find it easy to write my comments in english.

   wi

 3. today.and.me சொல்கிறார்:

  சி.பி.சி.ஐ.டி.-கே.டி,-ப்ரச்சினையில்
  ஜெயையும் ஜெஜெயையும் இழுத்துவிட்டு
  புத்திசாலித்தனமாக சுசாவையும் விலக்கிவிட்டு
  முக என்னும் தனிமனிதனுக்கு வந்த கஷ்டத்தைப் பாருங்கள் என்று
  கண்ணீர்த் தலைப்பிட்டு (அட்டையில் முகவின் படம் இன்னும் படுஜோர்)
  அடுத்த முதல்வர் இவர்தான் என்ற பிராண்டிங்கில் இறங்கியிருக்கிறது ஜூவி என்றே நினைக்கிறேன்.

  செய்தியை உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டியதுதானே-நைஸாக இவர்கள் கருத்தை உள்ளே ஏன் திணிக்கவேண்டும். இதையேதான் பாஜகவும் லோக்சபாத் தேர்தலுக்குமுன் செய்தார்கள் – பிராண்டிங் + அனுதாபம். ஆனால் தமிழர்களிடம் விற்பார்கள், தமிழர்கள் காசில் பிழைப்பார்கள்.

  இதிலே இவர்கள் தமிழ்மக்களின் நாடித்துடிப்பாம்.
  கலைஞரின் நாடித்துடிப்பு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளட்டும்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  -அனைத்து நண்பர்களுக்கும்,

  இந்த வலைத்தளத்தின் போக்கைச் சிதைக்க ஒரு முயற்சி
  நடக்கிறது. நண்பர் taruவின் பின்னூட்டங்களைத் தவிர
  வேறு சில விதங்களிலும் அது எனக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.
  taruவின் பின்னணியில் ஒரு குழு இயங்குகிறது.
  இது ஒரு “நிழல் யுத்தம்” -( புரிந்து கொள்வீர்கள் என்று
  நினைக்கிறேன்.)

  முதல்கட்டமாக, இந்த வலைத்தளத்தின் விருவிருப்பை,
  உயிரோட்டத்தைக் குறைக்க, நான் பின்னூட்டங்களை
  filter–ல் போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

  நான் இதற்கு தயாராக இல்லை…
  நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் –
  taru விடமிருந்தோ, புதிதாக வேறு ஒரு பெயரிலோ
  எத்தகைய provating பின்னூட்டங்கள் வந்தாலும்
  தயவுசெய்து யாரும் அதை பொருட்படுத்தி பதிலளிக்க வேண்டாம்.
  வேண்டுமென்றே நாம் தூண்டப்படுகிறோம்…

  நான் online-ல் வரும்போதெல்லாம், அத்தகைய
  பின்னூட்டங்கள், அவர்கள் எவ்வளவு தடவை போட்டாலும் சரி, நீக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
  ஆனால் பின்னூட்டங்களை filter–ல் போட வேண்டும்
  என்கிற அவர்களது முதல்கட்ட விருப்பத்தை
  நான் நிறைவேற்றுவதாக இல்லை.
  பின்னணியைப் புரிந்து கொண்டு, நீங்கள் எனக்கு
  ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Kauffman சொல்கிறார்:

   KM,
   Do not change your stand. Do not put any filter for comments. Also, do not try to delete most of the comments posted by Taru and other people. Let them publish and get exposed to neutral world. I am very confident on readers of this blog and other blogs that they still maintain thier neutral and unbiased view on every news. So we do not care about Taru and other political party supporters. If you block them, we can not teach them lesson.

   This space will teach them lesson. We will not get polluted by thier toxic message. We will change thier toxic mind. So do not filter any thing. Let it go on its way. For how long they can fight with paper-knife?

 5. bandhu சொல்கிறார்:

  ஊடக தர்மம் என்பது ஒரு oxymoron என்பதை ஜு வி யில் வந்த இந்த கட்டுரை மறுபடியும் உறுதிப் படுத்தி இருக்கிறது.

  தரு போன்றவர்களின் தரக் குறைவான பின்னூட்டங்களை நீக்குவதே சரியான முடிவு. இவர்கள் போடும் குப்பைகளால் பதிவின் பாதை தவறிவிடும்.

  km சார்.. நீங்கள் செய்வது மிகப் பெரிய சேவை. தொடருங்கள்… பின் தொடர நாங்கள் இருக்கிறோம்!

 6. Siva சொல்கிறார்:

  KM ஐயா அவர்களுக்கு, முடிந்த வரை எந்த விவாத கருத்துகளையும் தடை செய்ய வேண்டாம். மிக கேவலமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் மட்டும் நீக்க வேண்டும். மாறுப்பட்ட கருத்தை சொல்லி இருந்தால் கண்டிப்பாக நீக்க கூடாது. பிறகு, நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

  அடுத்தவர் கருத்துக்கும் நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். தவறாக இருப்பின், அவர்களுக்கு விளக்க வேண்டுமே தவிர, அவர்கள் கருத்தை இருட்டடிப்பு செய்ய கூடாது. இதை தான் தின பத்திரிக்கைகள் செய்கின்றன.

  மாறுப்பட்ட கருத்துகள் மனிதனை பண்படுத்தும்!. மாற்று சிந்தனையாளர் கருத்து நம் கருத்துகளை மேம்படுத்தும்.

  மாற்று கருத்து இல்லை என்றால், நாம் நம்முடைய கருத்தின் உண்மை தன்மையை நிருபிக்க அல்லது சொல்ல முடியாது.

 7. yogeswaran சொல்கிறார்:

  KD brothers are KODI brothers today.

  what a shame

  yogi

 8. taru சொல்கிறார்:

  /// தரு போன்றவர்களின் தரக் குறைவான பின்னூட்டங்களை நீக்குவதே சரியான முடிவு. இவர்கள் போடும் குப்பைகளால் பதிவின் பாதை தவறிவிடும்.

  km சார்.. நீங்கள் செய்வது மிகப் பெரிய சேவை. தொடருங்கள்… பின் தொடர நாங்கள் இருக்கிறோம்!
  //////

  What else could great example than comments like above to show how one sided view only is allowed here by KM and his coterie.

  Meanwhile, I appreciate gentleman kind of thoughts from sakthi and Siva. Siva already responded to my questions on Sri Lanka. Though I differ on subject, I respect his listening approach to different opinions. I think today-and- also seems to be odd one out in the. Sycophant gang of KM.
  KM and compabny simpley doesn’t have the tolerance to face different opnions.
  It is sad that such autocratic one sided blog is getting top ranking.
  Shame on us the readers

  • Kauffman சொல்கிறார்:

   Taru,
   You misunderstood again on the comments of Today-and-me and other readers written on your comments.

   They are not blindly support any one. They do not want the comments supporting blindly either modi/jj/mu ka/ or any one. I have been following them for long periods. They are neutral readers with justified approach for equal growth.

   But your comments are clearly one sided (just simply supporting modi for any thing). That’s why they strongly opposed ur comments. Otherwise, there is no personal animosity against with you.

   I strongly oppose your comment that they are coteri (small group) of KM. It’s highly objectionable. No body here knows KM or readers themselves. Every body attracted here on a single reason. That is an UNBIASED view of the current affairs. So do not use harsh words. But participate in a healthy discussion.

   Put your opinion with correct data or information. Let it discussed in a neutral way. Do not attach a political string for your opinion. However, you have a right to say ur opinion. But it should be in a correct way.

   As another reader (Kaufman) told that every one likes one or other leader. But you cannot impose ur leaders opinion on others here. Also, try to move the discussion in forward direction for getting better ideas. Do not try to pollute the discussion with ur party agenda. This suggestion applies to every one.

   Whatever happens is forgettable. Be on the discussion in good manner. We like to have different opinions on a single issue. This will give better opportunity for every one to think twice before making conclusion on the issue.

  • Kauffman சொல்கிறார்:

   Dear Taru,
   I do not how long you have been following KM blog. But your understanding is totally wrong. There is no coteri (small group) or one-sided approach.

   Again, you have no moral value to judge why this blog is getting top rank among Tamil blogs. Because you are a strong supporter of bjp/rss. In contrast, this blog is written from neutral point to criticize every one. Not leaving any one to criticize, KM and readers will keep writing on bad fellows. Including the leaders and thier fans like you, KM and readers will criticize strongly. If you can withstand the hotness, you can continue to post here. But do not blame falsely that KM has no tolerance to allow Taru to roam around here in a bad intention of spreading bjp agenda.

 9. gopalasamy சொல்கிறார்:

  I saw my comments were removed; Might be containing highly objectionable statements; or indecent language; or highly provoking; or offensive ; or not upto the standard. Thanks.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் திரு கோபாலசாமி,

   இந்த தளத்தில் நீங்கள் இதுவரை குறைந்த பட்சம்
   50-60 பின்னூட்டங்களாவது போட்டிருப்பீர்கள் ..

   அதில் இன்று வரை விலக்கப்பட்டது நேற்றைய தேதியிட்ட
   கீழே உள்ள இரண்டே இரண்டு மட்டும் தான் ……
   ——————–
   gopalasamy
   2015/04/05

   My god! Where your blog is going?
   —————————-
   gopalasamy
   2015/04/05

   I dont know how to download tamil font. I am not an expert. My age and health conditions also prevent me to learn new things. If you dont allow , hereafter, I have to also stay away from your blog.

   If Getting No 1 rank in tamil manam is your goal, then nothing to say. I am afraid that a small group ( can I call coterie) hijacking your blog. A sorry state of affair.
   —————————-

   இந்த 2 பின்னூட்டங்கள் மட்டும் விலக்கப்பட்டது
   உங்களுக்கு மிகப்பெரிய குறையாகி விட்டது….அல்லவா ?

   நண்பர் taru போட்ட குப்பைகளை நேற்று அகற்றும்போது
   உங்களுடையதும் சேர்ந்து போய் விட்டது.
   இதை அவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக நீங்கள் கருதி
   குறைகூறும் அளவிற்கு போவீர்கள் என்று நான்
   எதிர்பார்க்கவில்லை.

   நான் பாஜக வை குறைகூறி எழுதினாலே – பலருக்கு
   என்னையும் இந்த தளத்தையும் பிடிக்காமல் போய் விடுகிறது.
   ஆனால் என்ன செய்வது, சார்பற்ற நிலையை மாற்றிக்கொண்டால்
   என்னை எனக்கே பிடிக்காமல் போய் விடுகிறதே…!

   நண்பர் taru கூறிய வசவு வார்த்தைகளுக்கும் நீங்கள் 2வது
   பின்னூட்டத்தில் கூறி இருக்கும்

   ” If Getting No 1 rank in tamil manam is your goal, then nothing to say. I am afraid that a small group ( can I call coterie) hijacking your blog. A sorry state of affair.”

   என்கிற வார்த்தைகளுக்கும் எதாவது வித்தியாசத்தை உணர முடிகிறதா ?
   இந்த தளத்தில் உங்களுக்கு பிடிக்காததை யாராவது எழுதினால்
   அவர்கள் small group – coterie ஆகி விடுவார்களா …?

   மன்னிக்கவும். உங்களிடமிருந்து இத்தகைய விஷயங்களை
   நான் எதிர்பார்க்கவில்லை.

   இந்த தளத்திற்கு வருவதும், வராமல் போவதும் –
   பின்னூட்டம் போடுவதும், போடாமலிருப்பதும் உங்கள் விருப்பம்.

   ஆனால், உங்கள் விருப்பத்தையொட்டியே இந்த வலைத்தளம்
   பாஜகவை ஆதரித்து நிற்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது
   சரி இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு கூறி விட விரும்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    //சார்பற்ற நிலையை மாற்றிக்கொண்டால்
    என்னை எனக்கே பிடிக்காமல் போய் விடுகிறதே…!//
    நான் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள். இதை உங்களிடமிருந்து கேட்க மிகவும் மகிழ்கிறேன். LOVELY.
    🙂 🙂

    • srinivasanmurugesan சொல்கிறார்:

     காமை அய்யா!!! எனக்கு தங்களின் பதிவுகள் கிடைக்க பெறவில்லை எதனால் என்றும் தெரியவில்லை

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ஸ்ரீநிவாச முருகேசன்,

      என்னாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
      எதற்கும் மீண்டும் ஒரு முறை நீங்கள்,
      இந்த வலைத்தளத்தின் கீழே – வலது பக்கத்தில்
      காணப்படும் follow வை click பண்ணிப் பாருங்களேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 10. gopalasamy சொல்கிறார்:

  Dear sri KM ji, thanks for replying me. This is your blog. But you can not come to a conclusion about anybody like this. ஆனால், உங்கள் விருப்பத்தையொட்டியே இந்த வலைத்தளம்
  பாஜகவை ஆதரித்து நிற்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது
  சரி இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு கூறி விட விரும்புகிறேன். Have I ever asked you to support BJP? I never said I am supporting BJP. The meaning of neutarality differs person to person. People like me simply have to believe what media says. Moreover in so many matters I have no knowledge like budjet or land acquisition bill. I dont want to jump to any conclusion, because of ignorance only. You are writing your opinion in YOUR blog. But when you stamp, this is the only neutral view, we differ. So far, in my comments i did not offend any readers.
  My questions were to you only. But when I see some readers using offensive language against each, sometimes i have a feeling that you are supporting one section only. Thanks for allowing me to write my opinion.

 11. Ganpat சொல்கிறார்:

  சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒருவருடைய வலைத்தளம் அவருடைய வீடு போல.ஒத்த கருத்துள்ள நண்பர்களுக்கே அங்கு இடம் உண்டு.மாறுபட்ட கருத்துடையோர் அவர்கள் அதை முன்வைக்கும் விதத்தை பொறுத்து அவர்களை இணைப்பதும் இல்லாததும் பற்றி இல்லத்தின் உரிமையாளர் முடிவெடுப்பார்.இதில் வருத்ததிற்கோ கோபத்திற்கோ இடமில்லை.(இது எனக்கும் பொருந்தும்)

 12. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அட ராமா. பதிவைப் படித்து, வெறும் கருத்திடாமல், குழாயடிச் சண்டையிட வாசகர்கள் ஆரம்பிக்கிறார்களே!!. பதிவாளர் அவரின் கருத்தை எழுதியிருக்கிறார். ‘நம்முடைய மைல்ட் எண்ணங்களை எழுதினால் போதுமானது. எதற்கு arguments? வாழ்க்கையை அனுபவிப்போம். எழுதுபவரின் அனுபவபூர்வமான எண்ணங்களை இலவசமாகப் படிக்கக் கிடைப்பதே நம் சந்தோஷத்திற்குரியது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.