தேடினேன் – கிடைத்தது… ஒரு வெளிநாட்டு காலி சிகரெட் பாக்கெட்…!!!

.

சென்ற வாரம் பாஜக எம்.பி. திலீப் காந்தி – ” சிகரெட் பிடிப்பதால்
புற்று நோய் வரும் என்பதற்கு எந்தவித இந்திய ஆராய்ச்சி
ஆதாரமும் இல்லை” என்று சொல்லப்போய் –
பெரிய அளவில் மீடியாக்களில் விவாதங்கள் எல்லாம் நடந்தன.

பாஜக அரசு tobacco barons மற்றும் பீடி முதலாளிகளின்
கைப்பிள்ளையாக மாறி விட்டது என்று மீடியாக்களும்,
சமூக அமைப்புகளும் பெரும் அளவில் கண்டனத்தை
தெரிவித்தவுடன் –

மத்திய அரசு damage control melthods- களில் இறங்கி
இருக்கிறது. பீடி முதலாளி எம்.பி.க்களை சற்று ஒதுங்கி இருக்கச்
சொல்லியும்,

பீடி முதலாளிகளின் பகையும் வேண்டாம் –
மீடியாக்களின் எதிர்ப்பும் வேண்டாம் –
என்கிற வகையில் ஒரு cover up முடிவை அறிவித்திருக்கிறது.

புற்றுநோய் பற்றிய விளம்பரத்தை 40 % லிருந்து 85 % ஆக
01/04/2015 முதல் அதிகரிக்க வேண்டும் என்கிற உத்திரவை
சற்று மாற்றி 40 % லிருந்து 60 % வரை அதிகரிக்க வேண்டும்
என்று பிரதமர் உத்திரவு பிறப்பித்திருக்கிறாராம்..

போதுமா என்று கேட்டால் –
நம்மைப் பொருத்த வரை –
நாம் பிச்சைக்காரர்கள் தானே …!
கிடைத்த வரை சந்தோஷமே …!!!

சரி – தலைப்பிற்கு வருவோம். நான் வெளிநாட்டு சிகரெட்
பாக்கெட்டுகளைப் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
அவற்றில் இது சம்பந்தமாக விளம்பரங்கள் இருக்கின்றனவா ?
எந்த அளவில், எப்படி இருக்கின்றன என்று அறிய விரும்பினேன்.

நேற்று – ஞாயிற்றுக்கிழமை –
வெளிநாட்டு காலி சிகரெட் பாக்கெட்டைத் தேடி
அவை கிடைக்ககூடிய இடங்களில் கொஞ்சம் அலைந்தேன்…!

ஒரு ஸ்விஸ் தயாரிப்பு கிடைத்தது….
ஸ்பெஷல் American Blend –

அதை சில கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து கீழே
போட்டிருக்கிறேன். கைவிரல்களில் ரத்தக்கசிவு புகைப்படத்துடன்,
கேன்சர் உட்பட 25 வித நோய்கள் வரலாம் என்று பளிச்சென்று
அச்சடிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த விஷம் எத்தனை சதவீதம்
என்றும் பக்கவாட்டில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது…..

பீடி, சிகரெட்டுக்கு ஆதரவாகப் பேசும்
நமது முட்டாள் எம்.பி.க்கள் – இவற்றை எல்லாம் பார்ப்பார்களா ?

c-2

c-1

c-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to தேடினேன் – கிடைத்தது… ஒரு வெளிநாட்டு காலி சிகரெட் பாக்கெட்…!!!

 1. Thiruvengadam (@veluran) சொல்கிறார்:

  As of now the Omni Potent Modi ordered as we expect.

 2. Killergee சொல்கிறார்:

  சமூகப்பயனுள்ள பதிவு நண்பரே…

  • today.and.me சொல்கிறார்:

   (கில்லர்) ஜி, நீங்கள் இந்தியாவில் இல்லை என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் வாழும் நாட்டில் நிலவரம் எப்படி? ஏதேனும் இதுபோன்ற பாக்கெட் கிடைத்தால் புகைப்படம் இணையுங்களேன். மற்ற நாடுகளில் உள்ள நிலவரத்தை நண்பர்கள் அறிய உதவும்வகையில்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நல்ல யோசனை. இதை நான் வழிமொழிகிறேன்.

    “விமரிசனம்” தளத்தில் வரும் பின்னூட்டங்களின் மூலம்
    பல நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்து உற்சாகத்துடன்
    பங்கேற்பதைப் பார்க்கிறேன்.

    எனவே, நண்பர்கள் தங்கள் நாட்டில் புழங்கும்
    சிகரெட்டுகளில் இத்தகைய எச்சரிக்கை புகைப்படங்கள்
    இருந்தால், புகைப்படத்துடன் தகவல் தெரிவிக்குமாறு
    கேட்டுக் கொள்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

   • Killergee சொல்கிறார்:

    நண்பர் டுடே அன்ட் மீ அவர்களுக்கு எனக்கு இதுவரை புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை ஆகவே அதனைப்பற்றிய விபரங்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லாது போய் விட்டது தங்களுக்காக தேடி அனுப்புகிறேன்.
    – கில்லர்ஜி

    • today.and.me சொல்கிறார்:

     நன்றி ஜி. உங்களுக்கு (பழக்கம்) இல்லை, சரி.
     //தங்களுக்காகத்// தேடியா? 🙂 🙂
     எனக்கும்தான் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை. ஆனாலும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் சுவாசிக்கவைத்துவிடுகிறார்கள். என்னசெய்வது?

     நம் நண்பர்களுக்காக இல்லாவிட்டாலும் பகைப்பவர்களுக்காகத் (புகை நமக்குப் பகை என்றுகொண்டால் புகைப்பவர்களை பகைப்பவர்கள் என்று சொல்லலாம்தானே) தெரிந்துகொள்ளலாம். தவறில்லை.

     நன்றி.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      இரண்டு பேருக்குமே சேர்த்து – G R E A T People …!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 3. jksm raja சொல்கிறார்:

  ” பீடி, சிகரெட்டுக்கு ஆதரவாகப் பேசும்
  நமது முட்டாள் எம்.பி.க்கள் – இவற்றை எல்லாம் பார்ப்பார்களா ? ”

  படித்ததினால் தான் இந்தியாவில் என்று
  குறிப்பிட்டு எந்த வித ஆராய்ச்சியும் சைய்யவில்லை
  என்று அவர்களால் சொல்ல முடிகிறது

 4. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  //பிரதமர் உத்திரவு பிறப்பித்திருக்கிறாராம்..//

  எல்லா மீடியாக்களும் இவ்வாறுதான் சொல்லுகின்றன. ……..ராம் என்று.

  உத்தரவாக இடப்பட்டு செயல்வடிவம் பெறவேண்டிய முக்கியமானவற்றை …….இவ்வாறு ராம்…ராம்.. என்று வதந்தி வடிவத் தகவல்களாக மீடியாக்கள் ஏன் வெளியிடுகின்றன.

  உண்மையில் இது உறுதிசெய்யப்பட்ட தகவல்தானா?
  அட்லீஸ்ட் தெரிந்துகொண்டு சந்தோஷப்படலாமே என்றுதான்.
  ஏனென்றால் அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் அறிவிப்புகளில் இதைப்பற்றி ஒன்றும் காணோமே.

  இதுபற்றி அறிவிப்பு வெளியிடவேண்டியதும் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்றும் கவனிக்கவேண்டியதும் மினிஸ்ட்ரி ஆஃப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரீ மற்றும் இந்தியன் டொபோக்கோ போர்ட் தானே. அவை அமைதியாக இருக்கின்றனவே.

  //பீடி, சிகரெட்டுக்கு ஆதரவாகப் பேசும் நமது முட்டாள் எம்.பி.க்கள்//
  Objection my Lord. நமது புத்திசாலி எம்.பி.க்கள்.
  அவர்கள் தெரியாமல் பேசுகிறார்கள் என்றா நினைக்கிறீர்கள். அறிந்துகொண்டு-தெரிந்துகொண்டு-வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு-சாகவேண்டியவன் சாகட்டும் என்றே பேசுகிறார்கள். பின்னர் எப்படி முட்டாள் என்று சொல்லமுடியும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் todayandme,

   –// பின்னர் எப்படி முட்டாள் என்று சொல்லமுடியும்.//–

   ” தெரிந்தே செய்த – தவறுக்கு ” மன்னிக்க வேண்டுகிறேன்….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   அஜீஸ் ஜி,
   ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக உருகுவே, க்யூபா இதை முழுமையாக அமல்படுத்தியிருக்கிறார்ப்போலத் தெரிகிறது.
   இந்தப்பதிவின் மூலம் ஸ்விஸ்-அமெரிக்கன் ப்ளென்டில் இந்தடிசைனைப் பயன்படுத்துகிறது. ஆனால் எல்லா ப்ராண்டுகளுக்கும் அட்டை டிசைன் கட்டுப்பாடுகள் எப்படி என்று தெரியவில்லை.

   வணிகஉத்திகளில் ஒன்றான டிசைனர் கலெக்ஷன்ஸ் / லிமிட்டெட் எடிஷன்ஸ் போல இந்த டிசைன் அட்டை உள்ள சிகரெட்டுகளை limited ஆக புழக்கத்தில் விடுவார்களா? அல்லது எல்லாஅட்டைகளுமே எப்போதுமே இப்படித்தான் விற்பனைக்கு வருமா? என்பதும் குழப்பமே.

   எனவேதான் கில்லர்ஜியிடம் வேறுநாடுகளில் பயன்பாட்டில் உள்ள புகைப்படங்கள் (காமை இணைத்திருப்பதைப் போல) இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளக் கேட்டுள்ளேன்.

   இந்த லிங்க்கில் உள்ள புகைப்படங்களில் பெரும்பாலானவை ஆய்வுகளின்போது இவ்வாறு இருக்கலாம் என டிசைன் செய்யப்பட்டுள்ளவையே.

   தங்கள் இணைப்பிற்கு நன்றி.

 5. LVISS சொல்கிறார்:

  I lost two of my relatives ,,both women, to cancer — They were neither smokers drinkers or tobacco chewers —
  Even if the warning is 100% it wont deter tobacco chewers to give up –The warning will be read and only read –Look at a scene in a movie and now in serials where you find a character with a cigarette in one hand and a glass in another with the statutory warnings below —How does it help –Would it not be better not to allow such scenes at all than having it both ways -allowing and warning —

 6. bandhu சொல்கிறார்:

  அமெரிக்காவில் இதை வேறு விதமாக கையாளுகிறார்கள்.. பெட்டியில் வார்னிங் பெரிய அளவில் இருப்பது போல் தெரியவில்லை. இருந்தாலும், 1999 வருடம் சிகரெட் கம்பெனிகளுக்கும் மத்திய மற்றும் பல மாநில அரசுகளுக்கும் இடையே நடந்த வழக்கின் படி கம்பெனிகள் அடுத்த 25 வருடங்களுக்குள் 206 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் கிட்ட தட்ட 1236000 கோடி ரூபாய்கள்) செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு வந்தது. அதில் ஒரு பாகம் american legacy foundation என்ற nonprofit அமைப்பிற்கு போய் சேருகிறது அந்த அமைப்பு பல வருடங்களாக truth campaign என்ற பெயரில் ஸ்மோகிங்கை எதிர்த்து விளம்பரப் படங்கள் வெளியிட்டு வருகிறது. மிக மிகத் தரமான வகையில் வரும் இந்த விளம்பரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன..

  இவர்கள் எடுத்த விளம்பரப் படங்கள் you tube -இல் கிடைக்கிறது. பாருங்கள்..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.