பத்து மாதங்களில் மோடிஜியின் அரசு – ஒரு கருத்துக் கணிப்பு முடிவும், நம் கருத்துக்களும்……!!!

.

பதவியேற்ற முதல் பத்து மாதங்களில் -திரு.நரேந்திர மோடி
அவர்களின் அரசு – நிர்வாகம் குறித்து மக்கள்
என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து –

புகழ்பெற்ற இந்தியாடுடே நிறுவனத்தின் சார்பாக மார்ச் முதலிரண்டு
வாரங்களில் இந்தியா முழுவதிலுமாக ஒரு கருத்துக் கணிப்பு
நடத்தப்பட்டு, அண்மையின் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.
நண்பர்கள் நிறைய பேர் அவற்றைப் பார்த்திருப்பீர்கள்.
வேறு தலைப்புகளில் ஈடுபட்டமையால், நாம் அதை விரிவாகப்
பார்க்கவில்லை.

இப்போது அவற்றைப் பற்றி கொஞ்சம் நிதானமாகப் பார்க்கலாம்
என்று நினைக்கிறேன்.

விவரங்களுக்குள் போகும் முன்னர் – ஒரு விஷயம் –
மார்ச் மாத இறுதியில் – டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில்
நடந்த அமர்க்களங்களுக்கும், பிளவுகளுக்கும்
முன்னர் நடத்தப்பட்ட கணிப்பு என்பதால் –

திரு.அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய
இந்த கணிப்புகளை சீரியசாக கவனத்தில் கொள்ள
வேண்டியதில்லை.

பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகள் இருந்தாலும் –
ஒட்டுமொத்தமாக முக்கியத்துவம் பெறுகிற சில கருத்துகள் –

– கடந்த ஆகஸ்ட்டில் மோடிஜி பிரதமராக விரும்பியவர்களின்
சதவீதம் 57 ஆக இருந்தது – தற்போது 36 ஆக குறைந்திருக்கிறது.

-தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், பாஜக தன்
எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 27-ஐ இழக்கும்.(282 லிருந்து 255 க்கு )

அதாவது பாஜக தன் தனிப்பட்ட மெஜாரிட்டியை இழக்கும்.

s-1

s-2

s-3

s-4

s-5

s-6

s-7

s-8

கருத்துக் கணிப்பின் முடிவுகளை மேலே பார்த்தீர்கள்.

கருத்துக் கணிப்பில் இல்லாத சில விஷயங்களை இங்கு
என் கருத்துக்களாக குறிப்பிட விரும்புகிறேன்.

1) சாதனை என்று குறிப்பிட முடியா விட்டாலும்,
நாட்டின் வளர்ச்சி குறித்த, முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகள்
மோடிஜி அரசால் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை நல்ல முறையில் செயல்படுத்தப்படுமேயானால் – அவை எதிர்காலத்தில் மோடிஜிக்கு பெருமை தேடித்தரலாம்.

2) குஜராத்தைப் பொருத்த வரை –

– மோடிஜி பிரதமராக பொறுப்பேற்றவுடன் செய்த முதல் காரியம்
நர்மதா அணையின் உயரத்தை மேலும் 12 மீட்டர்கள் உயர்த்த
அனுமதி கொடுத்து, குஜராத் மேலும் நீர்வசதி பெற வழி வகுத்தார்.

– சீனப்பிரதமரை குஜராத் -தலைநகரத்திற்கு வரவழைத்து,
அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

– அகில உலக முதலீட்டாளர்கள் சங்கமத்தை குஜராத் தலைநகர்
அஹமதாபாதில் நிகழ்த்த பெரும் அக்கறை கொண்டு உதவினார்.

– சீன உதவி, முதலீட்டுடன் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாதை மும்பையுடன் இணைக்க “இந்தியாவின் முதல் புல்லட் ரயில்” திட்டம் நிறைவேற பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

– 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியை அஹமதாபாதில் நிகழ்த்த
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஒப்புதலைப்பெற முழுவேகத்தில்
முயன்று வருகிறார்.

ஆக – பெரும்பாலும், தன்னை “குஜராத்தின் பிரதமர்” என்கிற நினைப்பில் இருத்திக் கொண்டே செயல்படுகிறாரே தவிர –

“இந்தியப் பிரதமர்” என்கிற நினைப்பு பெரும்பாலும் அவருக்கு
அயல்நாடுகளில் பயணம் செய்யும்போதும், வெளிநாடுகளின்
தலைவர்கள் இந்தியா வரும்போதும் தான் வருகிறது.

தமிழ் நாட்டைப் பொருத்த வரை –

தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருப்பதாகவே
அவர் கருதுவதாகத் தெரியவில்லை. தனக்கும், தன் கட்சிக்கும்
ஓட்டுப்போடாத மாநிலம் – என்கிற வெறுப்புணர்வு நிரந்தரமாகவே
அவர் மனதில் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த 10 மாதங்களில் தமிழ்நாட்டிலிருந்து முன்வைக்கப்பட்ட
எந்த கோரிக்கைகளும் அவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை விடவும் –
உதாசீனப்படுத்தப்படுகிறது என்பது தான் சரியாக இருக்கும்.
வேண்டுகோளை அப்படியே ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லை…
குறைந்த பட்சம் – ஒரு பதில் –
இன்னின்ன காரணங்களில் ஏற்க முடியாத நிலையில்
இருக்கிறோம் என்று … ஊஹூம்.
எந்த கோரிக்கைக்கும், எந்த கடிதத்திற்கும் – பதிலே இல்லை.

————–

மற்றபடி – வழக்கம்போல், நண்பர்களின் கருத்துக்களை
பின்னூட்டங்களில் எதிர்பார்க்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

63 Responses to பத்து மாதங்களில் மோடிஜியின் அரசு – ஒரு கருத்துக் கணிப்பு முடிவும், நம் கருத்துக்களும்……!!!

 1. Killergee சொல்கிறார்:

  இன்னும் எவ்வளவு காலம் பார்ப்போம் எத்தனையே பிரதமர்களை பார்த்து விட்டோம் அதன் கணக்கில் இவரும் வரட்டுமே…. பார்க்கலாம்.
  – கில்லர்ஜி

 2. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  The great emperor is getting disrobed…

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப தாமோதரன் சுப்ரமணியன்,

   க்ரேட் எம்பரர் என்று மோடிஜியைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

   இன்னும் எம்பரரிஸம்தான் இந்தியாவில் இருக்கிறதா? அப்படித்தான் என்றால், எம்பரர்போல் எதிலும் (நடை-உடை-அலங்காரத்தைச் சொல்லவில்லை, பரிவாரங்களை அடக்கியாள்வதிலும், நாட்டை முன்னேற்றத்திற்கு நேராகக் கொண்டுசெல்வதிலும் பற்றிக் கேட்கிறேன்) ஏன் அவரால் செயல்படமுடியவில்லை.

   அதிலும்கூட மற்ற சக்திகளால் ஆட்டிவைக்கப்படும் பொம்மை எம்பரர்தானா?

   இந்தியா ஜனநாயக நாடு இல்லையா?

   இப்படித்தான் என்றால், ஐந்துவருடங்களுக்குப் பின் மோடிமகாராஜா மக்களைத் தேடி வந்துதான் ஆகவேண்டும். அப்போது தெரியும் மகாராஜாயார் என்பது.

   அதற்குள்ளாகவாவது இவர்கள் உண்மையி்லேயே திருந்தவேண்டுமே.

   பொய்யான-நடிப்பான-மாயையை உண்டுபண்ணி – மக்களுக்கெல்லாம் கூழைக்கும்பிடு போட்டு – பாராளுமன்றத்தில் நடிப்பாய் ஒரு கும்பிடுபோட்டு நுழைந்தவர்கள் இவர்கள்.

   100 நாள் தேனிலவுக்காலம், ஆறுமாத அவகாசம், 10மாத கெடு போன்ற மழைகளில் எல்லாம் நனைந்து ட்ரைகலர் சாயமெல்லாம் கலைந்தபின்பு காவிமட்டும் தங்கியிருக்க, மீண்டும் எந்த முகத்தோடு அரிதாரம் பூசுவார்கள்?

   • Ganpat சொல்கிறார்:

    toda.yand.me ji,
    இவர் நிச்சயமாக எம்பரர் இல்லை ..வேண்டுமென்றால் எம்பார் என்று சொல்லலாம்..நல்லா உபன்யாசம் செய்யறார்! 🙂

 3. Ganpat சொல்கிறார்:

  நிச்சயமாக இன்னும் அதிகம் செய்திருக்கலாம்; .

  இவர் ஒரு ஆழமான மற்றவர்களை ஆழம் பார்க்கும் ஆசாமி;

  இவருக்கு முந்தயவர் எதுவும் செய்ய மாட்டார் என்று தெரிந்தது
  இவர் என்ன செய்வார் என்பது தெரிவதில்லை (அதில் எதுவும் செய்யாதிருத்தலும் அடக்கம்)

  நிச்சயமாக இவர் ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு 40,50 மார்க் வாங்கும் ரகம் இல்லை ஒன்று 90 அல்லது 0 தான்

  • today.and.me சொல்கிறார்:

   கண்பத் ஜி,
   //நிச்சயமாக இவர் ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு 40,50 மார்க் வாங்கும் ரகம் இல்லை ஒன்று 90 அல்லது 0 தான்//
   நடக்கிற நாட்டுநடப்பைப் பார்க்கும்போது, ஓவர்கான்பிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது ஜி. 🙂 🙂

   மற்றபடி, இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறுவார் என்று எதிர்பார்ப்போம்.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  உங்களின் இடுகையில் இருந்தே பின்னூட்டங்கள்,

  கடந்த 12 ஆண்டுகளாக மோடி குஜராத்தில் ஆட்சி
  புரிந்துள்ள விதம் அவரை ஒரு நல்ல நிர்வாகி என்பதை
  உறுதிப்படுத்தும் விதத்திலேயே உள்ளது.
  /** இன்றும் குஜராத் மட்டுமே **/

  இதில் எந்த வித தயக்கமோ, சந்தேகமோ இல்லாமல்
  மோடியையும், பாஜக கூட்டணியையும் தேர்ந்தெடுப்பது
  தான் /**இந்த நாட்டிற்கும்**/ (இது வரை தமிழ் நாட்டிற்கு எதுவுமில்லை) , நமக்கும் நல்லது.

  இன்னும் உங்களது இடுகையிலேயே நிறைய உள்ளது…

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப புதுவசந்தம்,

   கா.மை. அப்படி நம்பியதாலேயே, நம்பி ஓட்டுப்போட்டதாலேயே, அவர்கள் திருந்தவேண்டுமே என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

   ஓட்டுப்போடாவிட்டாலும் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. அதை அவர்களாகவும் செய்வதில்லை. சொல்லியும் கேட்பதில்லை. மேலும் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற அகம்பாக மனோபாவம் இப்போதுதானே வெளிப்படுகிறது.

   இப்போதுகூட திருந்தினால் பரவாயில்லை, மாட்டேன் இன்னும் முறுக்குவேன் என்றால் ஐயோ பாவம் – தமிழகத்தில் பாஜக.

   மேலும்,

   இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் போல் மோடிஜி இருக்க கா.மைஜிக்கு சம்மதமில்லை என்று நினைக்கிறேன்.

   ஐயா மோடிஜி கொஞ்சம் இந்த விமரிசனம் பக்கம் பாருங்கள். இல்லையென்றால் தபாஜகவினரே கொஞ்சம் எடுத்துச்சொல்லுங்க உங்க தலைக்கு. அப்போத்தான் 2016ல் 2சீட்டாவது தனியா வரலாம்.

   • புது வசந்தம் சொல்கிறார்:

    நண்பரே, காமை அவர்களின் எண்ணமும் நமது எண்ணமும் பொது நலன் சார்ந்தது மட்டுமே. அவர் அன்று எழுதியது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில். இன்று அந்த நம்பிக்கையின் நிலை என்ன என்பது எல்லோரும் அறிந்ததே. நீங்கள் சொல்வது போல திரு. மோடிஜி அல்லது தாபாஜக இதனை எடுத்து சொல்ல வேண்டும். ஆனால், இங்கு சிலருக்கு விமர்சனம் என்றாலே ஒரு ஒவ்வாமை.

 5. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  // தனக்கும், தன் கட்சிக்கும் ஓட்டுப்போடாத மாநிலம் //
  தனியாகவும், கூட்டணிக் கட்சிகளுடனும் சேர்ந்து அவர்கள் பெற்ற மொத்த ஓட்டுகளை ஏற்கெனவே இருமுறை எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுதுகிறேன்.
  Alliance/Party Seats won Change Popular Vote Vote %
  NDA 2 +2 7,523,829 18.5%
  BJP 1 +1 2,222,090 5.5%
  PMK 1 +1 1,804,812 4.4%
  DMDK 0 – 2,079,392 5.1%
  MDMK 0 -1 1,417,535 3.5%

  தனக்கும் தன் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அல்லது ஜெயத்தைத் தராத மாநிலம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  ………………..

  //ஒரு பதில் – இன்னின்ன காரணங்களில் ஏற்க முடியாத நிலையில்
  இருக்கிறோம் என்று … ஊஹூம். எந்த கோரிக்கைக்கும், எந்த கடிதத்திற்கும் – பதிலே இல்லை.//
  தமிழ்நாட்டுக்கு என்று மட்டும் இல்லை, பாஜக ஆட்சியிலில்லாத எந்த மாநிலத்துக்கும், இவ்வளவு ஏன்? சொந்தக் கட்சியினரின் முட்டாள்தனமான கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து, அல்லது தான் சார்ந்த ஒரு அமைப்பின் அதன் தலைவகளின் கருத்துக்களுக்கு ஒரு கண்டனம், ஒரு கண்டிப்பு, இதைப்பற்றிப் பேசாதே என்கிற அறிவிப்பு, அட்லீஸ்ட் ரேடியோடிவியில் வானிலை அறிக்கை மாதிரி ஒரு மதில்மேல்பூனை மாதிரியான அறிவிப்பு –

  எதற்குமே எப்போதுமே கிடையாது.

  தேர்தலுக்கு முன் பேசியவர்கள் யாரும் இப்போது பேசுவதில்லை. தேர்தலுக்கு முன் பேசாதவர்கள் எல்லாரும் இப்போது பேசுகிறார்கள். பின்னர் எப்படி நாடு வளர்ச்சிப்பாதைக்குள் போய். ……… வல்லரசாகும்.

  அடுத்த தேர்தலில் அவர் ஆசைப்படியே குஜராத்தின் முதல்வராக இருங்கள் என்று மக்களே அனுப்பிவிடுவார்கள்.
  …………….
  //தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், பாஜக தன்
  எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 27-ஐ இழக்கும்.(282 லிருந்து 255 க்கு ) // 27தானா. பெருங்குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட கம்மியாக இருக்கிறதே. இருந்தாலும் இந்தியாடுடேக்கு ‘இப்போதைக்கு தேர்தல் வராது’ என்று எவ்வளவு நம்பிக்கை?

  …………….
  ம.மோ.சிங் அவர்களை பாராட்டக்கூடிய நாட்கள் வரும் என்று கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை நினைத்துப்பார்க்கவில்லை. மோடிஜிக்கு நன்றி. ஒரு ஆண்டுக்குள்ளாகவே ‘அவர் பரவாயில்லையே’ என்று சொல்லவைத்துவிட்டார்

 6. S.Selvarajan சொல்கிறார்:

  அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களில் — யார் பி.எம்.- ஆக வரலாம் என்பதற்கான புள்ளி விவரத்தை பார்த்தால் ….. ? ஆமா …. அமிதாப்பச்சன் அரசியலுக்கு அப்பாற்பட்டவரா ? கருத்துக்களுக்கு முடிந்தால் திரு. கா.மை. மறுமொழி கூறுவதுதான் — சிறப்பு —- வாசகர்களுக்குள் ” அறிவு ஜீவிகள் ” என்று காட்டிக்கொள்ள மறுமொழி என்கின்ற பெயரில் விவாதங்கள் — அதிகமாகி விட்டதால் — படிப்பதோடு நிறுத்திக்கொண்டு — இதுவே ” கடைசி ” பதிவாக — பதிந்து கொள்ளும் —- ஒரு வாசகன் . . தயவு செய்து யாரும் இதற்கு மறுமொழி இட்டு விடாதிர்கள் ….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் செல்வராஜன்,

   ஒரு இடுகையை எழுதும்போதே –
   நான் முதலில் என் கருத்துக்களைச் சொல்லித்தான்
   இடுகையைத் துவங்குகிறேன்.. அதற்கு மேல் நண்பர்களே –
   வாருங்கள் … உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் என்று
   அழைக்கிறேன். அவரவர் தங்கள் வழியில் கருத்துக்களை
   கூறுகிறார்கள்.

   நான் என் கருத்துக்களை யார் மீதும் திணிப்பதில்லை.
   அதை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டுமென்றும்
   எதிர்பார்ப்பதில்லை. மற்றவர்களும் அப்படியே. அவரவர் தங்கள்
   கருத்துக்களைக் கூறுகிறார்கள் -விவாதிக்கிறார்கள்.
   படிப்போர் அனைத்து கருத்துக்களையும் படிக்கிறார்கள்.
   அவரவர்க்கு ஏற்புடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.

   இந்த வலைத்தளமே – ஜனநாயக வழியில் நடத்தப்படும்
   ஒரு விவாத மேடை. ஆதரித்தோ, மறுத்தோ, எதிர்த்தோ –
   கருத்து சொல்ல இங்கு அனைவருக்குமே உரிமை உண்டு.
   அனைத்து கருத்துக்களுக்கும் நான் தான் பதிலெழுத வேண்டும்
   என்பதும் அவசியமில்லை. அது நடைமுறையில் சாத்தியமானதும் அல்ல.( நாகரிகமான முறையில் எழுதப்படும்….)
   அனைத்து பின்னூட்டங்களும் இங்கு இடம் பெறுகின்றன.
   மற்ற நண்பர்களை / பின்னூட்டங்களை கிண்டலோ, கேலியோ
   செய்யாமல் தன் கருத்துக்களை நாகரிகமாக தெரிவித்தால் –
   நண்பர் taru போன்றவர்களின் பின்னூட்டங்கள் கூட
   இங்கு இடம் பெறும்.

   சில நண்பர்கள் அனைத்தையும் படித்து விட்டு –
   வெறுமனே கடந்து செல்வதும் உண்டு. சிலர் ஆர்வத்துடன்
   விவாதங்களில் ஈடுபடுவதும் உண்டு. அது அவரவர்
   ஆர்வம் / வசதி / நேரம் / விருப்பத்தைப் பொருத்தது. நாகரிகமான
   முறையில் நடத்தப்படும் அனைத்து விவாதங்களையும்
   நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த ‘விமரிசனம்’
   வலைத்தளத்தின் அடிப்படைக் குறிக்கோள்களில் அதுவும் ஒன்று.

   உங்களுக்கு யார் மேல் – என்ன கோபம் என்று எனக்குத்
   தெரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் – விவாதங்களில்
   கலந்து கொள்வதோ – கருத்து சொல்லி பின்னூட்டங்கள்
   எழுதுவதோ அவரவர் விருப்பம் -இது உங்களுக்கும் பொருந்தும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Kauffman சொல்கிறார்:

   Selvarajan, don’t stop writing your opinions. Your opinions are valuable and highly appreciable in most of the stories. There will always be a difference in opinion. So do not get frustrated. It will be nice to tell your view and add strength to discussion.

   Coming to polls, I cannot give serious thought to this type of things. It is waste of time and energy. It is one way to implant the opinion among mass.

 7. taru சொல்கிறார்:

  Some quivk comments

  1. Modi improved India’s image 1000 times in globe. That itlself is worth another term
  2. In just few months, clean India, Jan Dan, make in India, state planning group, and manymore achievements
  3. Even if Gandhi rules, none can prevent some antiingumbency. Some reduction in opinion poll can be ignored
  4. Just like we ask Modi to think outside gujarat, tamilnadu also should think as Indian citizens and go smooth with Modi. Until that we don’t need to talk BIG on this.
  5. A govt that has no scam or violence or inaction is very pleasant surprise for us. What else we need from it. Way to go!

  Taru

  • taru சொல்கிறார்:

   More here

   6. Minorities also understood the greatness of India culture and appreciate Modi to make them aware of their heritage
   7. There is not a single bjp leader who quit against Modi. It shows his strength. Just look at aap, congress, etc
   8. Stock market alone increased 30% and benefit retail public. That shows improvement in economy
   9. Farmers suicide has come down
   10. He never takes leave and works round the clock. Have you seen similar pm?

   Many more are there. If I continue the list it will become bigger than your blog. So stopping here

   Taru

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Mr. Taru,

    Please note that – If you are putting up your points in a decent
    and reasonable way – you are defenitely welcome here.
    Let the people know both positive and negative sides of the issue / administration..
    But I will advise you to always maintain the decency in your replies.

    With all best wishes,
    Kavirimainthan

    • Kauffman சொல்கிறார்:

     I think that Taru has written her view point without any bad words. However, he is strong supporter of bjp agenda. So there is always a possibility that he will exaggerate the fact. So it is our responsibility to correct him if there is a obvious mistake in her fact/opinion.

   • yogeswaran சொல்கிறார்:

    sir,

    not globe universe,

    fans club is very dangerous to india and tamil naadu.

    yogi

  • Kauffman சொல்கிறார்:

   My questions to Taru. Point by point.
   1) how do you say that modi increased image 1000 times? Any evidence? Do you think India was under dark before him?

   2) these are plans just started. Not achievements. You need to show the positive result to claim as achievement. Just starting plans cannot be achievement

   3) I agree with you

   4) I totally disagree with you. Why you guys always think that Tamil nadu leaders or people are not thinking about India? It is irritating to see this kind of messages. In fact, you guys ONLY provoking Tamils to talk against indian set up! This is now slogan of Tamil nadu bjp leaders that Tamil nadu people should think about india. I ask a simple question ” are we thinking about to develop Pakistan/Bangladesh/Sri Lanka?” If we talk for our right, we will be anti-national, right? If any body will talk in future, we have to cut thier voice ( opinion) at budding level itself. We are going to do that.

   5) not surprise. It is what we expect.

  • Kauffman சொல்கிறார்:

   6) don’t mess up with religion and heritage. Don’t push ur toxic opinion on religious faith here. It will be good for ur party and India that if you guys keep away from religious faith. Better you guys shut all the orifices (opening in body) in religious matter.

   7) a silly point. How do u expect an internal conflict when u think about development for the nation?

   8-10) not correct. Again no evidence. Just an exaggerated fact. For leaders, there is no holiday or working day. All days are holiday and working days.

 8. Unmai Tamilan சொல்கிறார்:

  I agree with some of Taru comments

 9. அப்துல்லா சொல்கிறார்:

  மோடி நீண்ட நாள் PM தான்

 10. srinivasanmurugesan சொல்கிறார்:

  காங்கிரஸ் ஆட்சியிலும் சரி தற்போதைய பஜக ஆட்சியிலும் சரி தமிழகம் தோடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றது.இதனை மாற்ற என்னதான் செய்வது.மக்கள் மிகவும் சோர்வடைந்து வேறு பாதைகளை தேர்ந்தெடுக்கும் முன்னர் அரசுகள் முழித்துக்கொள்ள இறைவன் அருள்புரிய வேண்டும்.

 11. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  1. Modi improved India’s image 1000 times in globe. That itlself is worth another term
  அதுக்கும் முன்னாலே FATHER OF INDIAN ECONOMY என்று வர்ணிக்கப்பட்டவரால் இந்தியாவின் இமேஜ் உலக அரங்கில் ஜொலித்ததை நம்பி ஏமாந்தவங்கதான் நாங்க!

  2. In just few months, clean India, Jan Dan, make in India, state planning group, and manymore achievements
  அது போக காந்தி ஜெயந்தியன்று கக்கூஸ் க்ளீன் செய்வது, காந்தி ஜெயந்தியை விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து நீக்கியது(அது ஏதோ TYPING MISTAKE-ஆம்), க்ரிஸ்மஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது என்று அறிவித்தது மற்றும் குட் ஃப்ரைடே அன்று நீதியரசர்களுக்கு முக்கிய கான்ஃபரன்ஸ் வைத்தது என்பதையும் குறிப்பிட்டு சொல்லலாம்தானே!

  3. Even if Gandhi rules, none can prevent some antiingumbency. Some reduction in opinion poll can be ignored
  இது புரிந்துவிட்டால் பிறகு விவாதமே தேவையில்லையே நண்பரே!

  4. Just like we ask Modi to think outside gujarat, tamilnadu also should think as Indian citizens and go smooth with Modi. Until that we don’t need to talk BIG on this.
  நாங்க இப்போதும் இந்தியனாக இருப்பதாலேதான் இவ்வளவு அக்கப்போரும்.

  5. A govt that has no scam or violence or inaction is very pleasant surprise for us. What else we need from it. Way to go!
  அப்போ அதானியின் ஆஸ்திரேலிய சுரங்கம்?
  மந்திரி மேலேயே ஸ்காம் இருக்கு, அரெஸ்ட் வாரண்ட் இருக்கு, மந்திரி காணவில்லைன்னுல்லாம் சொல்றாங்களே அது என்ன கணக்கு?

  6. Minorities also understood the greatness of India culture and appreciate Modi to make them aware of their heritage
  ஆமாம்…., கர் வாபஸி பண்ணிட்டாலே போதுமே

  7. There is not a single bjp leader who quit against Modi. It shows his strength. Just look at aap, congress, etc
  அது சரி, இப்போ எதுக்கு அடுத்தவர் முதுகிலுள்ள அழுக்கை சுட்டிக்காட்டிக்கொண்டு?
  முதல்ல நம்ம முதுகை சுத்தம் செய்வோம். அத்வானியை கேளுங்க! இந்த மோடியை பற்றி வாஜ்பாய் என்ன கூறினார் என்பதை யாரும் மறந்துவிடவில்லை

  8. Stock market alone increased 30% and benefit retail public. That shows improvement in economy
  இதுக்கும் மன்மோகன் சிங்கின் அஸ்திவாரமே காரணம். அவர் போட்ட பாதையிலேயே சென்று வளர்ச்சி என்பது போங்காட்டம்.

  9. Farmers suicide has come down
  இது என்ன மு.க அறிக்கை மாதிரியில்லே இருக்கு.
  அமேரிக்காலே பாருங்க கரெண்ட்டுக்கு எவ்ளோ பில் கட்றாங்க?
  கர்னாடகாலே பாருங்க பஸ்ஸு டிக்கெட் எவ்ளோவிக்கிறாங்க? என்பது போல,
  தற்கொலைகள் குறைந்துள்ளனவாம்… மை ஹானர்… நோட் திஸ் பாய்ண்ட்!

  10. He never takes leave and works round the clock. Have you seen similar pm?
  வெளிநாட்டுக்கு போறததானே சொல்றீங்க, லீவே போடாமே. ஆமாமாம்… ரொம்ப பாவம்தான். கொஞ்சநாள் லீவ் போட்டு ஊரிலேயே இருக்கச்சொல்லுங்க, புண்ணியமா போகும்.

  Many more are there. If I continue the list it will become bigger than your blog. So stopping here
  அதே அதே
  நானும் நிப்பாட்டிக்கிறேன்

 12. Kauffman சொல்கிறார்:

  KM,
  Your assessment on modi’s gujarat model or gujarat achievement is wrong. It is exaggerated. It is the effect of media work to show as exaggerated achievement.

  Coming to polls and results, it is waste of time and energy. As well, it is media tactics to keep in limelight.

 13. LVISS சொல்கிறார்:

  If what is being revealed about the inner turmoils in AA_ now came just before the elections results would not have gone so much in favour of AAP Both BJP and Congress would have got more and benefited from the confusion in AAP –Reason why the two rebels did not raise the issues before the elections nobody knows –The AAP kept the simmering differences under wraps till the elections got over —
  Coming to the issues reg government – After a period of time the sheen wears off any new government -NDA cannot be an exception –
  The Chinese leader went to Gujarat because the PM , if I am not wrong was there for his birthday – -Vibrant Gujarat is a regular feature in the state -Until Mr Modi became the PM not much was heard of the event —Now UP also had one such event –The NDa;s Srilanka policy is baffling –Why so much leeway is given to that country to say and do what it likes about our fishermen in not understandable -The change of government in Srilanka has not improved the ground situation as regards fishermen -Some talk are going on between fishermen from both countries —

 14. Sharron சொல்கிறார்:

  TAARU you have to understand that no one here hates MODI but expecting more from him especially for Tamil Nadu.

 15. N.S.M. Shahul Hameed சொல்கிறார்:

  ஐயா! வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் பதிவு செய்யுங்கள். அப்போது தான் நீங்கள் கூறுவது என்ன என்று மற்றவர்களுக்கு புரியும்

 16. Ganpat சொல்கிறார்:

  இந்தியாவின் ஒரே பிரச்சினை ஊழல் ..தேர்தல்கள் என்ற ஒரு சம்பிரதாயம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் வரை ஊழலை ஒன்றும் செய்ய முடியாது.ஏனெனில் ஊழல் என்பது மேலேயிருந்து அழிக்கப்படவேண்டியதொன்று.
  தேர்தல் என்பது அந்த ஊழல் பேர்வழியை நேராக மேலே கொண்டு அமர்த்தி விடுமொன்று ..எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஊழல் பேர்வழியை யாராலும் அழிக்க முடியாது. period

 17. subbu சொல்கிறார்:

  the modi we are seeing now, that is after the elections is different from what he was
  during the election rallies. now his main agenda seems to be is to tour as much foreign countries as possible under the guise of FDI and help his supporters set up business in those countries.
  His party got a drubbing in Tamil nadu despite the “grand alliance”. So he is least bothered
  about this tamilnadu’s interests which emboldens the Cong CM in karantaka to build dams
  across kavery and deny even the flood waters to enter tamilnadu. long live india and
  its unity in diversities.

 18. சக்தி சொல்கிறார்:

  மோடிஜியின் ஆட்சிக் காலத்தில் குஜராத் வளர்ச்சி பற்றி சிலர் இங்கே பெருமிதம் கொண்டிருந்தனர். உண்மை என்ன?
  Has Modi fooled us with Gujarat’s success story? Indiatimes -Sonal Bhadoria 2013,பெப்.
  ……………
  Business Week -CMIE report ஐ ஆதாரமாகவைத்து எழுதுகிறது.
  Between 2006-7 and 2010-11, Gujarat had a growth of 9.3 per cent, which was behind Naveen Patnaik’s Orissa at 9.4 per cent. Nitish Kumar’s Bihar topped with 10.9 per cent while Chhattisgarh (10 per cent), Haryana (9.7 per cent) and Maharashtra (9.6 per cent) followed.
  ………………
  I travelled through Saurashtra, whose polluted and arid lands spoke of a hard grind for survival. In the towns, water, sewage, road and transport facilities were in a pathetic state; in the countryside, the scarcity of natural resources was apparent, as pastoralists walked miles and miles in search of stubble for their goats. Both hard numbers and on-the-ground soundings suggest that in terms of social and economic development, Gujarat is better than average, but not among the best. -இது Ramchandra Guha , the Hindu, 2013

  Real Growth Rate – GSDP percentage – statistics -சில……….
  sikkim -12.62 ; Uttarakhand -12.37 ; Delhi -11.43; Bihar -11.42;Gujarat -10.08 (8வது இடத்தில்)-
  growth rate GSDP in Industry sector -sikkim முதல் இடம்– 19.97 ; Gujarat- 9 வது இடத்தில் 10.90
  agriculture growth rate – Bihar முதல் இடம்-15.17 ; Gujarat – 6 வது இடத்தில் 6.47 .
  HDI parameters -Gujarat is 79.3 % 12 வது ;Kerala with 93.9 % முதல்
  இவை 2005-2012 மோடி ஆட்சிக் காலத்தில்.

  மேலதிக தகவல்களை CMIE report , Planning Commission report 2013 பார்க்கவும்.

  நல்ல வளர்ச்சி இருந்ததை மறுக்க முடியாது.ஆனால் அவரோ,பாஜகவோ,தேர்தல் காலத்தில் ஊடகங்களோ தெரிவித்தவை …..உங்களுக்கே தெரிந்தவை. மிகைப்படுத்தப்பட்டவை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சக்தி,

   நீங்கள் சொல்வது மிகச்சரி.
   அனைத்துமே மிகைப்படுத்தப்பட்டவை….
   நன்றாக ஏமாந்தோம்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 19. drkgp சொல்கிறார்:

  2G came to light after 6 years , Colgate took 9 years.
  Who knows what is in store for us?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dr.KGP,

   Excellent comments.

   Atleast in Congress Govt. – they were unable to hide
   the truth beyond certain stages.

   But these people are capable of burrying everything
   deep under the sea….
   We may not come to know at all about many things….
   Even presently many shady things are going on ….
   Certain things – come to light partly ….. causing
   lot of worries – will be very harmful to the society.

   People should wake up…

   -with all best wishes,
   Kavirimainthan

 20. Siva சொல்கிறார்:

  அன்புள்ள நண்பர்களுக்கு, இந்த பக்கங்களில் நல்ல கருத்துகளை ஆரோக்கியமான முறையில் விவாதிப்பதை கண்டு மகிழ்வாக இருக்கிறது. தொடர்ந்து செல்லுங்கள்.

  எங்கே நண்பர்/நண்பி தரு அவர்கள். நிறைய கேள்விக்கள்லுக்கு பதில் சொல்லாமல் என்ன செய்கிறார். தரு அவர்கள் தரு (போதை பொருள்) குடித்து விட்டு தூங்கி விட்டாரா? (just kidding! don’t be serious!)

  • அப்துல்லா சொல்கிறார்:

   Taru seems to be busy in Raman’s discusiion.
   He raised same points with Raman, and he gave fitting reply there. Here is that full postடாருடா என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு மோடி அபிமானி, மோடியை ஏன் மதிக்க வேண்டும் என்று பல பெரிய விளக்கங்கள் கொடுத்துள்ளார். பாஜக வகையறாக்களின் அதே அபத்தங்களைத்தான் அவர் சொல்லியுள்ளார்.

   நல்ல மனநல மருத்துவரிடம் உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் உள்ள அவரின் மோடி போதையை தெளிய வைக்க அவருக்கு சில பதில்கள்.

   Mr. Raman,

   You are lucky to be India under Modi rule. Other if you live somewhere like even US, you might have been arrested for disrespecting head of state.
   பாவம், தனது அறியாமையை இப்படி பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்க வேண்டாம். மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் பில் கிளிண்டனை அமெரிக்க மக்கள் கழுவி கழுவி ஊற்றியதையோ, ஆப்கான் படையெடுப்பில் ஜார்ஜ் புஷ்ஷை வசை பாடியதையோ வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு பாரக் ஒபாமாவை இப்போது திட்டிக் கொண்டிருப்பதையோ அவர் அறிய மாட்டார் போல.

   சொல்லப் போனால் எப்போது வேண்டுமானாலும் அரசின் தாக்குதல் பாயும் என்று தெரிந்துதான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றும் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்ற தமிழ் கருத்துரிமைப் பாரம்பரியத்தில் வந்த எனக்கு கைதாவது பற்றி கவலையே இல்லை. இந்திய அரசியல் சாசனம் எனக்கு கொடுத்துள்ள உரிமை அது. மோடியின் கருணை கிடையாது என்பதை புனைப்பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் டாருடா புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கொண்டு வந்த 66 A பிரிவு தொடர வேண்டும் என்றுதான் மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஆக இந்த “பெருந்தன்மை மோசடி” வசனமெல்லாம்   வேண்டாம்

   Coming bCk to why you should respect him and the government, I am giving quick list of reasons which I posted on KM block also

   1. Modi improved India’s image 1000 times in globe. That itlself is worth another term

   ஒபாமாவோடு ஒட்டி உறவாடி டீ எல்லாம் போட்டுக் கொடுத்தாலும் மற்ற மதங்களையும் மதித்து நடக்கச் சொல்லி அறிவுரை கொடுத்து விட்டுப் போனார். ஐரோப்பிய யூனியனில் பேச தலைகீழாக நின்றாலும் அனுமதி கிடைக்கவில்லை. இதுதானப்பா இவரது இமேஜ். ஒரு சிறந்த நடிகனை இந்தியா பிரதமராக பெற்றுள்ளது என்பதுதான் உலக நாடுகள் இவர் மீது கொண்டுள்ள மதிப்பீடு. ஓவரா கற்பனை செய்யாதீங்க டாருடா, உடம்புக்கு நல்லதில்லை.

   2. In just few months, clean India, Jan Dan, make in India, state planning group, and many more achievements

   காந்தியின் புகழை மங்க வைக்கும் முயற்சி தூய்மை இந்தியா. வாரம் இரண்டு மணி நேரம் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்று சொன்னவர் அக்டோபர் இரண்டிற்குப் பிறகு துடைப்பத்தை கையிலெடுக்கவில்லையே. கையில் காசில்லாதவர்களுக்கு வங்கியில் கணக்கு இருப்பதால் என்ன பலன் என்று சொல்லுங்கள் சார். மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை கபளீகரம் செய்தது. எஸ்.சி/எஸ்.டி துணைத்திட்டங்களுக்கு மூடுவிழா ஆகியவைதான் திட்ட ஆணையத்தை கலைத்ததன் பலன். மேக் இன் இந்தியா என்பது இந்தியாவை கொள்ளையடிப்பதற்கான சிவப்புக் கம்பள வரவேற்பு. மேக் இன் இந்தியா என்று சொல்லிக் கொண்டே அவரது நண்பர் அதானிக்கு மேக் இன் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அழகு என்ன? அதற்கு ஆறாயிரம் கோடி ரூபாய் இந்திய மக்கள் பணத்தை கடன் கொடுத்த வேகம் என்ன? புதுசா ஏதாவது சொல்லுங்க சார்!

   3. Even if Gandhi rules, none can prevent some antiingumbency. Some reduction in opinion poll can be ignored

   சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் “மரண பயத்தைக் காண்பிச்சுட்டாங்கடா பரமா” என்பது போல உங்களுக்கு பயம் வந்துடுச்சு போல இருக்கே. பத்து மாசம்தான் முடிஞ்சுருக்கு. அதுக்குள்ளேயே முழுசா சாயம் வெளுத்துப் போச்சு. ஆனாலும் திமிர் மட்டும் இன்னும் குறையவே இல்லயே!

   4. Just like we ask Modi to think outside gujarat, tamilnadu also should think as Indian citizens and go smooth with Modi. Until that we don’t need to talk BIG on this.

   மோடி குஜராத்தைப் பற்றியெல்லாம் கூட நினைப்பதில்லை சார். அவர் இதயத்துடிப்பெல்லாம் கார்ப்பரேட்டுகளாக மட்டுமே. குஜராத் வளர்ச்சி என்பது எப்படிப்பட்ட மாயை என்பதை நான் முன்பு எழுதியுள்ள குஜராத் கோயபல்ஸ் என்ற பதிவின் இணைப்பை  இங்கே அளித்துள்ளேன் . அதைப் படியுங்கள் மிஸ்டர் டாருடா.

   5. A govt that has no scam or violence or inaction is very pleasant surprise for us. What else we need from it.

   அடிமாட்டு விலைக்கு முதலாளிகளுக்கு நிலம் தருவதும் நிலக்கரி சுரங்கங்களை அளிப்பதற்கும் உங்கள் அகராதியில் வேறு பெயர் இருக்கிறதா? வன்முறை நடைபெறவில்லையா? டெல்லியிலும் மற்ற பகுதியிலும் சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் என்ன மலர் தூவும் விழாவா? விஷம் பரப்பும் பேச்சுக்களை அன்றாடம் மோடியின் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு மெய் மறந்து விட்டீர்களோ?

   6. Minorities also understood the greatness of India culture and appreciate Modi to make them aware of their heritage

   ராமரின் பிள்ளைகளா இல்லை முறை தவறிப் பிறந்தவர்களா என்று கேட்கும் மோசமான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளதுதான் மோடியின் சாதனை. சிறுபான்மை மக்களின் உணவுப் பழக்கத்தில் கூட கைவைத்து விட்டு இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?

   7. There is not a single bjp leader who quit against Modi. It shows his strength. Just look at aap, congress, etc

   அமித் ஷா போன்ற கிரிமினல்களை தலைவராக்கினால் கேள்வி கேட்க எங்கிருந்து தைரியம் வரும்? ஹிரேன் பாண்டியா என்ற கொல்லப்பட்ட குஜராத் பாஜக அமைச்சரை நினைவில் உள்ளதா? அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை வேண்டுமானால் கேட்டு பதில் சொல்லுங்களேன்.

   8. Stock market alone increased 30% and benefit retail public. That shows improvement in economy

   பங்குச்சந்தைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட்டம். எப்போது வேண்டுமானாலும் சந்தைக்கு வரும், எப்போது வேண்டுமானாலும் வெளியேறும். அப்படி வெளியேறும்போது உள்நாட்டு முதலீட்டாளர்களின் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிப் போகும். எங்கள் பொருளாதார ஆசான் தோழர் இ.எம்.ஜோசப் அவர்கள் எழுதிய கட்டுரையின் இணைப்பை    இங்கே தந்துள்ளேன். கொஞ்சம் பொருளாதார விஷயங்களை தெரிந்து கொண்டு பிறகு வாருங்கள்.

   9. Farmers suicide has come down

   விவசாயிகளின் தற்கொலை பற்றிய புள்ளி விபரங்கள் வருவது குறைந்திருக்கிறது. நில அபகரிப்புச் சட்டம் மூலமாக தற்கொலைகளை அதிகரிக்க மோடி ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியுமல்லவா?

   10. He never takes leave and works round the clock. Have you seen similar pm?

   ஆமாமாம், தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு கடுமையாக உழைக்கிறார். நாடாளுமன்றத்திற்குக் கூட வரமுடியாத அளவிற்கு ரொம்ப பிஸி. ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, வி.பி.சிங் போன்ற பிரதமர்கள் கடுமையாக உழைத்தவர்கள். ஆனால் பாவம் தாங்கள் வேலை செய்வது போல போட்டோ எடுத்துக் கொள்ள தெரியாத அப்பாவிகள். போட்டோஷாப் பொய்கள் மூலமாக ஆட்சிக்கு வராதவர்கள். ஆகவே அவர்களுக்கு விளம்பரம் என்பது தேவைப்படவில்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் செல்பி எடுத்துக் கொண்டு விளம்பரம் செய்து கொள்ளதவர்கள்.

   Many more are there. If I continue the list it will become bigger than your blog. So stopping here

   ஆயிரம் காரணங்களை நீங்கள் அடுக்கினாலும் அதற்கு எங்களால் பதில் சொல்ல முடியும். ஏனென்றால்

   மோடி ஆட்சியின் அடித்தளம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது. நேர்மைக்கு புறம்பானது. மோடிக்கு சப்பைக்கட்டு கட்டும் மிஸ்டர் டாருடா, நீங்களே ஒரு பொய் மனிதர்தான். உங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பொய்யான பெயரில் உலா வருகிறீர்கள். என்னுடைய Profile ஐப் பாருங்கள். என்னைப் பற்றிய அனைத்து விபரங்களும் எனது புகைப்படத்துடன் இருக்கும்.

   ஆனால் உங்கள் Profile?

   உங்கள் சொந்தப் பெயரோடு மோடியை ஆதரிக்க உங்கள் மனசாட்சியே உறுத்துகிறது போல. அதனால்தான் Fake Id யில் ஒளிந்து கொண்டுள்ளீர்கள்.

   இனி பின்னூட்டம் போட வருமுன் சொந்த அடையாளத்துடன் வரவும்.

   இல்லையென்றால் அந்த Fake Id யை “புருடா” என்றாவது மாற்றிக் கொள்ளுங்கள்.

   பொருத்தமாக இருக்கும்.

   • Kauffman சொல்கிறார்:

    Abdulla, thanks for your comments and re-posting from Mr. Raman’s reply. It was befitting reply to Dear Taru. He really needs some counseling and guidance for writing a true fact. He is writing most of the false statement.

   • சக்தி சொல்கிறார்:

    ஒருவர் நாகரீகமான வார்த்தைகளில் தனது கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. அவர் கருத்தை மறுக்கலாம், நிராகரிக்கலாம்,பதில் தரலாம். ஆனால் மன நலம் குன்றியவர் என்று சொல்வது அநாகரிமான வார்த்தைப் பிரயோகம் ஆகும்.

    அதே வார்த்தைகளை அவர் திருப்பிப் பிரயோகிக்க முடியும்.அப்போது நீங்களும் அந்த வியாதி உள்ளவராக கருதப்பட முடியும். அவர் பார்வையில் உங்கள் கருத்து அப்படி ஒரு உணர்வைத் தரலாமல்லவா?. அவர் உண்மையை உணரா விட்டால், பாதிக்கப்படுவது இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் அவரும் தான்.

    • Kauffman சொல்கிறார்:

     Sakthi,
     I agree with you. But I am confident that I will not write a false information repeatedly. I will write only the available correct information in my reply or comments. So I am not worried if he can re-write the same opinion

 21. LVISS சொல்கிறார்:

  Why worry ,after 5 years golden rule will be back or better still a platinum gov in the form of a coalition govt will be back —

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   என்ன எல்விஸ், அதுக்குள்ள ஒத்துக்கிட்டீங்க.
   20வருஷம் நாங்கதான்னு சொன்னது எல்லாம் சும்மாவா?

  • Kauffman சொல்கிறார்:

   LVISS,
   You are one of the innocent readers in this blog that you always praise the modi rule. Although many readers asked right questions about the credibility of modi govt, you never think about it. But you walk in ur own way by simply inserting the unbelievable comments like golden rule/platinum rule/ silver rule/aluminum rule/ thakara dubba rule etcetera …I am laughing out loud (lol) for you!

   • LVISS சொல்கிறார்:

    I do praise where it is due , sometimes analyse/criticise too -I am not a pessimist like many people , who expect things to happen within a short time -, because I am downright practical when it comes to gauging the work that goes into every decision making in a government –Each state tend to assess the central govt from their point of view ie what the govt is doing for them and we are no exception to it —
    I am a no hurry man and willing to wait for 5 years when all of us will get a chance to judge and change or retain the govt collectively —
    Thank you Mr Kauffman for dropping by —

    • Kauffman சொல்கிறார்:

     LVISS,
     I partially agree with you that we cannot expect quick development in short time. But starting point itself is problematic, how can you finish the run? Some of the important plans (example, land bill) have huge problem in the beginning itself. How can you expect positive development?

     • LVISS சொல்கிறார்:

      Amendments have been introduced as per discussions with opposition – More amendments will be incorporated if necessary This is what the govt says –Take it from me sir , if the bill does get passed the BJP govts will latch on to it immediately while others will be content to do it the present way —
      The govt already got many bills passed in parliament in consultation with the opposition in the two sittings – So where is the question of starting problem — This bill is only an improvement upon the bill already there –From what I could see the bill could have been pushed through after elaborate consultation –After getting this bill passed and pushing the GST through nothing more will be required to set the ball rolling as far as governance goes —

 22. visujjm சொல்கிறார்:

  ஜி ஜெய்ஹிந்த்…

  காரணம் பதிவுலகில் எழுத எவ்வளவு உழைப்பு வேண்டும் என்பதை நிதானமாக அனைத்து வலைபதிவுகளில் எனக்கு தெரிந்த ஒரு 100 தமிழ் வலைப்பதிவுகளை கண்ணெரிச்சலோடு வாசித்து இன்னும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன் ஜி…

  பின்னூட்டம் மட்டுமே வலைத்தளங்களுக்கு அச்சாணி அல்லவே…

  வாசிக்கணும் நிறைய இளைஞர் பட்டாளங்களும் வலைபதிவு எழுதுகின்றனர் தங்களை போல…

  இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ~ தங்கள் நண்பர்கள் ~ உறவினர்கள் ~ மாணவ பிரம்மாக்கள் …

  கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. …

  ஓம் நமசிவாய நம…

 23. karan சொல்கிறார்:

  மோடி என்ற தனிமனிதனை நிங்கள் வெறுத்து ஒதுக்குங்கள் ,ஆனால் குஜராத்தில் ஒன்றும் மோடியால் நடக்கவில்லை என்று கூறி உங்களை நிங்கலே ஏமாற்றிகொள்ளவேண்டாம் ,பொறுமை ,சகிப்புத்தன்மை , மனசாட்சி ,இருந்தால் இந்த லிங்கில் சென்று மொத்தமாக படித்து பின் தாங்கள் கருத்துகளை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்1) Some compared that Gujarat development is more like China’s. i.e. it is showcased atleast 10 times more then it really is?–http://www.quora.com/Is-Gujarat-really-developing-as-it-is-showcased

  • சக்தி சொல்கிறார்:

   நண்பர் கரன், நீங்கள் குறிப்பிடும் தளம் பற்றி முன்னரே தெரிந்ததுதான். அது கேள்வி பதிலுக்கு உரிய தளமாகும்.
   இந்தத் தளங்களில் சென்று பாருங்கள் உங்களுக்கு உண்மை தெரியும்.

   CMIE report from Centre for Monitoring Indian Economy, Planning Commission report 2013

  • சைதை அஜீஸ் சொல்கிறார்:

   கரன், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மோடியா லேடியா என்று எதுகை மோனையோடு பேசியதோடு சரி. அப்பவே எந்த ஆதாரங்களையும் காட்டி தமிழகத்தைவிட குஜராத் முன்னணியில் உள்ளது என்று கூற முடியவில்லை. நீங்கள் இப்போது வந்து
   //குஜராத்தில் ஒன்றும் மோடியால் நடக்கவில்லை என்று கூறி உங்களை நிங்கலே ஏமாற்றிகொள்ளவேண்டாம்// என்கிறீர்கள். சரிதான்!

   • karan சொல்கிறார்:

    மக்களுக்கு அடிப்படை தேவைகள் வீடு ,மின்சாரம் ,குடிநீர் ,தரமான சாலை ,இந்த தேவைகளை ,மதுவிலக்கு ,ஊழல் இன்மை மற்றும் இலவசங்கள் கொடுக்காமல் குஜராத் அரசால் செய்யமுடிந்து உள்ளது ,செய்துகொண்டுஉள்ளார்கள், ஆனால் தமிழகத்தின் நிலையை அனைவரும் அறிவோம் ,டாஸ்மாக்கில் மூழ்கி,தினமும் மின்சாரதட்டுப்பாடு ,இலவசங்கள் ,என தமிழனை முழு சோம்பேறி யாக்கி சிந்தனை இழந்து ,உணர்ச்சி அரசியல் நடத்திகொண்டு தரம்தாழ்ந்த்து போய் உள்ளது தமிழகம் ,அடுத்தவர்களை விமர்சிக்கும் முன் நமது நிலையை கொஞ்சம் சிந்திக்கவேண்டும் ,,மாநிலநலன் சம்பந்தமாக மத்திய அரசுடன் பேச கேரளாவில் ஊம்மன் சாண்டி ,அச்சுதனந்தன் ,கர்நாடகாவில் சித்தராமையா ,ஜெகதீஷ் சட்டர் ஒரு விமானத்தில் டெல்லி செல்கிறார்கள் ,தமிழகத்தில் அய்யாயும் ,அம்மாயும் இப்படி சென்று பார்ப்பார்களா ,முடியாது .மக்களை ஏமாற்ற ஒன்று சேர்வார்கள் ,

  • Kauffman சொல்கிறார்:

   Dear Karan,
   This is not supporting your arguement well. However, the real ground situation is dark about the publicized growth in gujarat. I did not refute that there was not development in gujarat. But the real output in all sectors is normal/or lower than publicized information

 24. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  http://www.thehindu.com/news/national/india-ranks-lower-than-even-nepal/article7082262.ece
  இதை பாருங்க என்று சொன்னால், இதுக்கெல்லாம் நேரம் எடுக்கும்…
  இதுக்கு முன்னால இருந்தவங்க செஞ்சத மாத்த எங்கிட்டே என்ன மந்திரக்கோலா இருக்கு?
  வெறும் பெப்ஸிகோலாவும் கோக்ககோலாவும்தான் உள்ளது என்பீர்கள்!
  ரை….ரை….ரைட்…

 25. drkgp சொல்கிறார்:

  Already Swamy has raised the red flag objecting to French Rafale fighter jet
  deal saying it is corrupt. He threatens going to court. Can India ever sign
  a defense deal without raising any doubts , be it a UPA or NDA govt.
  Dr Swamy’s a genuine one ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.